Loading

மனம் – 2

காலை ஆறு மணியளவில் எழுந்த நிவேதிதா, தனது காலை கடன்களை முடித்து விட்டு, சமையல் அறைக்கு சென்று தனக்கு ஒரு தேனீரை போட்டு குடித்து விட்டு காலை உணவுக்கு தேவையான வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். அப்போது உதவிக்கு அவளது மாமியார் சுமதியும் வந்து விட்டார்.

நிவேதிதா, ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியில் ப்ளானிங் பிரிவில் வேலை செய்பவள். வாரத்தில் 6 நாட்கள் வேலை இவளுக்கு. சனி அன்று மட்டும் அரை நாள் தான் வேலை. அதுவும் முதல் மற்றம் மூன்றாம் சனி கிழமை மட்டும் தான். இன்று ஞாயிற்று கிழமை தான். தினந்தோறும் நேரமே எழுந்து பழகி விட்டதாலும், இன்று விடுமுறை நாள் தான் மற்ற வேலைகளை எல்லாம் செய்ய முடியும் என்பதாலும் தான், சோம்பல் நாளான ஞாயிறும் சுறுசுறுப்பாய் எழுந்து விட்டாள்.

சரியாக அந்த நேரம் வாக்கிங் சென்று இருந்த, நிவேதிதாவின் மாமனார் சசிதரன், கோழி கறி வாங்கி கொண்டு வந்தவர், அதை சுத்தம் செய்து சமைக்க ஏதுவாக அவளிடம் நீட்டினார். அந்த இடைவெளியில், அவருக்கு ஒரு தேனீரை சுமதி போட்டு கொடுக்க, அதை குடித்து கொண்டே தனது அலைபேசியில் வந்த செய்திகளை பார்த்து கொண்டு இருந்தார்.

சசிதரன் – பணி ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். சுமதி இல்லதரசி. இவர்களுக்கு இரு மக்கள் செல்வங்கள். ஆண் ஒன்று. பெண் ஒன்று. மகனுக்கு திருமனம் முடிந்து விட்டது. ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டிருக்கின்றான். அவனது மனைவி தான் நிவேதிதா. சொந்த ஊரில் இருந்த சசியும், சுமதியும் தங்களது பேத்தி பிறக்கும் போது தான் இங்கே சென்னை வந்தார்கள். அங்கே அவர்கள் மட்டும் தனியாக ஏன் இருக்க வேண்டும்!!??. இங்கே இருப்பது நிவேதாவுக்கும் உதவியாக இருக்கும் என்று இங்கே இருக்க சம்மதித்து விட்டார்கள்.

அதற்குள் சமையலை முடித்து விட்டு, இட்லி செய்ய இட்லி பானையையும் அடுப்பில் ஏற்றி விட்டார்கள் நிவேதிதாவும், சுமதியும். அப்போது மணி 7.30 ஆகி இருந்தது.

அதே நேரம் நிவேதா, “அத்த… நான் போய் துணி காய போட்டு வரேன். நீங்க இட்லி மட்டும் இறக்கி வச்சிடுங்க. நான் அதுக்குள்ள வந்துடுவேன்” என்று வாசிங் மெஷினில் இருந்த துணியை ஒரு வாளியில் அள்ளி போட்டு கொண்டிருந்தாள்.

“சரி மா…” என்று சொன்னவர் சோபாவில் உக்காந்து விட்டார்.

நிவேதிதாவும் மின்தூக்கியில் மொட்டை மாடிக்கு சென்று துணிகளை காய போட்டு கொண்டு இருக்கும் போதே, அந்த அடுக்கு மாடி கட்டிடத்தின் காவலாளி மேல வந்தார். மேல ஏதோ சத்தம் கேட்டதா ஆறாவது தளத்தில் இருப்பவர் புகார் அளித்து இருக்க, அதை பார்க்க தான் வந்து இருந்தார் அவர். சும்மா ஒரு சுற்று பார்த்து விட்டு அவர் கிளம்பும் போது தான் நிவேதாவை பார்த்தார்.

“என்னமா இன்னிக்கு வீட்டுல விருந்தா??” என்று பேச்சுக்காக கேட்டார் அவளிடம்.

“எப்பவும் போல தான்ணா. இன்னிக்கு எதுக்கு விருந்து” – என்று யோசனையாக கேட்டாள் நிவேதா.

“என்னமா ரொம்ப நாள் கழிச்சி தம்பி வெளிநாட்டில் இருந்து வந்து இருக்காப்ல… எதுக்குனு கேக்கறீங்க??” – என்று எதார்த்தமாக சொன்னார் காவலாளி.

இதற்கிடையில் ஆறாவது தளத்தில் இருந்து புகார் கொடுத்தவர் வந்து, “என்ன அண்ணா அது?? பாத்தீங்களா??” என்று காவலாளிடம் கேட்க, நிவேதாவிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்று, “அது ஒன்னும் இல்லங்க… பசங்க யாரோ விளையாட்டு சாமான்ஆ மாடி திட்டுல வச்சிட்டு மறந்துட்டு போய்ட்டாங்க போல. அது காத்துக்கு….” என்று சொல்லி கொண்டு இருந்தார். அதற்குள் காற்றின் வேகத்தை விட வேகமாய் கீழே இறங்கி, பாதி படிகளை கடந்திருந்தாள் நிவேதா.

“அந்த திருட்டு நாய் கண்டிப்பா அவ ரூம்க்கு தான் போய் இருப்பான். யாருக்கும் தெரியாம அவ ரூம்க்கு போய் இருக்கானா???. ஏற்கனவே அப்பா அவன் மேல காண்டுல இருக்காரு. இது தெரிஞ்சா அவ்வளவு தான். திரும்ப ஒரு பஞ்சாயத்து. அதுக்கு அப்பறம் எனக்கென்னனு இவன் பாட்டுக்கு எங்கயாவது ஓடி போய்டுவான். அப்பறம் அவ தான் பாவம்” என்று படியில் இறங்க இறங்க திட்டி கொண்டு தான் வந்தாள்.

புலம்பி கொண்டே வீட்டிற்கு வந்தவளை பார்த்த சுமதி, “என்ன நிவேதா??? இப்படி அரக்க பரக்க வர??” என்று கேட்டார்.

ஒரு நிமிடம் திருதிருனு முழித்த நிவேதா, “அதெல்லாம் ஒன்னும் இல்லத்த…” என்றவள், “இட்லி வச்சி ரொம்ப நேரம் ஆக போகுதுல… அதான் வேக வேகமா வந்தேன்” என்று சொல்லி சமாளித்து சமையல் அறைக்குள் சென்று விட்டாள்.

“அத நானே பண்ணிட்டேன்” என்ற சுமதியின் பதிலை கேட்க அவள் இல்லை.

உள்ளே போனவள் பெருமூச்சை விட்டு தன்னை நிதானபடுத்தி கொண்டு வெளியே வந்து, “நீங்களே பண்ணிட்டீங்களா!! நான் மறந்தே போய்ட்டேன் அத்த” என்று தன் தலையில் அடித்து கொண்டாள்.

“சரி அத்த… நான் நிலாவ எழும்பி கூட்டிட்டு வரேன். நீங்களும் மாமாவும் குளிச்சிட்டு வந்துடுங்க… சாப்பிடலாம்” என்று சொல்லி விட்டு தன் நாத்தனாரின் அறைக்குள் நுழைந்தாள் நிவேதா.

அறையை திறந்து உள்ளே சென்ற நிவேதா அங்க இருந்த நிலைமையை பார்த்து அதிர்ந்து விட்டாள். முகில் நடுவில் படுத்து இருக்க ஒரு பக்கம் குட்டி பெண்ணும், மறு பக்கம் பெரிய பெண்ணும் படுத்து இருந்தார்கள். தன் கணவன் இதை பார்த்தால் என்ன நடக்கும் என்று பயந்த நிவேதிதா, அதிர்ச்சியில் இருந்தது சில வினாடிகள் தான். உடனே தன்னுணர்வு வந்து, ‘ஐயோ யாரு பார்த்தாலும் பிரச்சனை தான்’ என்று புரிந்து, வேகமாக சென்று முகிலை அடித்து எழுப்பினாள்.

“டேய்… தடி மாட்டு பயலே எந்திரிடா!!” என்று பல்லை கடித்து அவனை திட்டி கொண்டே மேலும் ஒரு அடி போட்டாள்.

அவனும் உருண்டு புரண்டு முனகி ஒரு வழியாக எழ நேரம் காலை 8 மணி 13 நிமிடம். நிவேதிதாவை பார்த்த முகில், “ஹாய் அக்கா” என்று மகிழ்ச்சியாக அழைக்க, அவனின் அக்காவோ அதற்கு எதிர் குணமான கோபத்தால் அவனை பாசமாக பார்த்து வைத்தாள். அவனோ என்ன நடந்தது என்று புரியாமல் அவன் அக்காவை கேள்வியாக நோக்கினான்.

“இங்க என்னடா பண்ணிட்டு இருக்க தடிபயலே??. எப்ப இந்தியாவுக்கு வந்த??. முத இங்க எதுக்கு வந்த” என்று தன் இனிய குரலில் மிரட்டலாக கேட்டாள் நிவி.

அங்கே அணைத்து கொண்டு படுத்திருக்கும் இரு பெண்களையும் பார்த்து விட்டு, “நான் என் செல்ல குட்டிகளை பார்க்க வந்தேன்” என்றவன், “இன்னிக்கு காலைல தான் வந்தேன்” என்றான் சாதாரணமாக. அதுமட்டுமில்லாமல், “இத்தனை வருடம் கழித்து வந்த தம்பியை இப்படி ஏன்டா வந்த?? அப்படிங்கற மாறி கேப்பயா நீ??” என்று சிறிது கிண்டலுடன் கேட்டான் முகில்.

“நீ பண்ணி வச்சி இருக்க காரியத்துக்கு வரவேற்பு ஒன்னு தான் கேடு. வாயை மூடிகிட்டு நீ இங்க வந்தது யாருக்கும் தெரியாத மாறி கிளம்பற” என்றாள் கண்டிப்பான குரலில்.

அதுக்கு எல்லாம் அசராத முகில், “ஏன் நான் இங்க வர கூடாது. இவ என் பொண்டாட்டி” .

“மண்ணாங்கட்டி. கல்யாணமே பண்ணலயாம். பேசி தான் வச்சிருக்கு. இன்னும் அப்பாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரில. அதுக்குள்ள வந்துட்டான் பொண்டாட்டி குண்டா சட்டினு” என்று திட்டி விட்டு, “இங்க வந்தது யாருக்கும் தெரியாத மாறி போயிடுடற” என்று அவனை இழுத்து கொண்டு வெளியே வந்தாள்.

“திரும்ப திரும்ப அதையே ஏன் சொல்லிட்டு இருக்க” என்று கேட்டு கொண்டே அவள் இழுவைக்கு உடன்பட்டு அவனும் போக, அவர்கள் நல்ல நேரத்துக்கு சுமதியும், சசிதரனுதம் முன்னறையில் இல்லை. அவனை தரதரவென வெளியே இழுத்து வந்தவள் அவனை வெளியே தள்ளி, “ஒழுங்கா நம்ம வீட்டுக்கு போற” என்று மிரட்டி விட்டு கதவை சாத்தி விட்டாள்.

கீழே இறங்கி பார்க்கிங் வந்த முகில், அங்கே இருந்த காவலாளியிடம் சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தான். அடுத்து தன் நண்பன் விஷாலுக்கு அழைத்து பேசினான். அவன் தான் இவனுக்கு கார் எல்லாம் ரெடி பண்ணி வைத்தவன்.

“என்னடா ஆல் செட் ஆ??. என்ன சொன்னா உன் ஆளு? ” என்று விஷால் ஆர்வமாக கேட்டான்.

“நீ வேற ஏன்டா??. நான் அவளுக்கு ஒரு ஹாய் கூட சொல்லல” என்று வருத்தமாக முகில் சொல்ல, “என்னடா சொல்லற?? அப்ப இவ்வளவு நேரமா என்ன பண்ணிட்டு இருந்த??” என்று விஷால் அவசரமாக கேட்டான்.

‘இந்த தண்டம் என்ன பண்ண சொன்னா, என்ன பண்ணி வச்சி இருக்கு. எது சொன்னாலும் அது விருப்பத்துக்கு எதுனா பண்ணிட்டு அப்பறம் ஒப்பாரி வைக்க வேண்டியது’ என்று மனதுக்குள் எண்ணிய விஷால், மீண்டும் அவனிடம் கேட்க, “தூங்கிட்டேன்” என்று சாதாரணமாக சொன்னான் முகில்.

விஷால் அவனை மானாவாரியாக திட்ட, “சரி டா நான் அப்பறம் கூப்பிடறேன்” என்று அவனை ஆசை தீர முழுதாய் திட்ட கூட விடாமல் வைத்து விட்டான் முகில்.

அடுத்து தன் அன்னை ருக்மணிக்கு அழைத்து, “அம்மா… நான் இந்தியா வந்துட்டேன். அக்கா வீட்டுல இருக்கேன்” என்று மட்டும் சொல்லி விட்டு பதிலை எதிர்பார்க்காமல் வைத்து விட்டான்.

அவனது அம்மா தான், “அய்யோ!!! சொல்லாம கொள்ளாம வந்து இருக்கான். அதுவும் அங்க போய் இருக்கான் கிறுக்கு பயன். அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவாறோ” என்று பயந்து கொண்டு இருந்தார்.

அங்கே அவரை புலம்ப விட்டு விட்டு இங்கே இவனோ, ‘இவங்க சொன்னா நான் எதுக்கு கேக்கனும்’ என்று எண்ணி யூ டர்ன் போட்டு மீண்டும் தன் அக்கா வீட்டுக்கே சென்றான்.

அங்கோ ருக்மணி, கண்ணதாசன் மற்றும் வெங்கட கணபதியும் நிவேதிதாவின் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மாறும்…

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே…

நன்றி!!!

இங்ஙனம்

திரா ஆனந்த்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Hero rombave தைரியமான ஆளு தான் aama அவன் அப்படி என்ன பண்ணிட்டு வெளிநாட்டுக்கு போனான் ❤️❤️super akka ❤️❤️waiting next epi

      1. Author

        நன்றி மீரா மா… 🥰😍🥰
        இன்னும் 2 அத்தியாயம்ல ப்ளாஷ்பேக் ஆரம்பிச்சிடலாம்…

    2. அடேய் மொத்த குடும்பத்தையே கதற விடுற அளவுக்கு என்னடா பண்ணி தொலச்ச???

      1. Author

        நன்றி சாந்தி கா 🥰😍🥰
        அவன் என்ன பண்ணானு இன்னும் 2 அத்தியாத்துல தெரிஞ்சிக்கலாம் கா… ப்ளாஷ் பேக் ஆரம்பிச்சிடலாம்.