Loading

மனம் – 1

அழகான இதமான ரசிக்க வைக்கும் மாலை நேரம் அது. காற்று கூட தென்றலாய் இருந்தது. இந்த நேரத்தில் ஒரு பாடல் இருந்தால் எப்படி இருக்கும். ம்ம்ம்….

மாலை மங்கும் நேரம்…

ஒரு மோகம் கண்ணின் ஓரம்…

அய்ய்யோ அப்படி வர கூடாது. இந்த பாடலை சேர்க்க இதமான சூழ்நிலை நம்ம கதாபாத்திரங்கள் இருக்கும் அந்த வீட்டில் இல்லை. மாலை மங்கும் நேரம் எல்லாம் சரி தான். ஆனா மோகம் இல்ல கோபம்… அதுவும் ஒருத்தர் கண்ணுல மட்டும் இல்ல, அந்த வீட்டுல இருந்த முக்கால்வாசி பேர் கண்ணுலயும் தான். அந்த கோபம் யாரு மேலனா நம்ம கதை நாயகன் முகில் நிலவன் மேல தான்.

“நீ பண்ணது எவ்வளவு பெரிய தப்புனு உனக்கு புரியுதா??. எல்லாம் முன்ன இருந்து நடத்திட்டு இப்படி ஒன்னும் தெரியாத மாறி எல்லார் கிட்டயும் இளிச்சிட்டு சுத்துட்டு இருந்து இருக்க??. கொஞ்சம் மாறி நடந்து இருந்தாலும் என்ன ஆகி இருக்கும்னு யோசிச்சயா??” என்று முகிலை திட்டி கொண்டிருந்தார் அவனின் தந்தை கண்ணதாசன்.

அவனது உதவிக்கு முகிலின் தாத்தா வெங்கட கணபதி வந்தார். “இவன் பண்ணதுல யாருக்கு என்ன கெடுதல் நடந்து போச்சி. சும்மா இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணறது?? இல்ல அப்படி ஆகி இருந்தா என்ன பண்ணறது??னு நடக்காத்த பத்தி பேசறத விட்டுட்டு நல்லத மட்டும் நினைச்சிக்கோ” என்று தன் பேரனுக்கு வாக்கலத்து வாங்கி மகனை வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார். நீ அவனுக்கு அப்பானா நான் உனக்கே அப்பாடா என்ற கெத்து மூமன்ட்.

என்னது!!?? யாருக்கும் கெடுதல் இல்லையா??? என்று அதிர்ச்சியாக மனதுக்குள் நினைத்து கொண்டே ஒரு ஜோடி தம்பதிகள் திரும்பி அவரை பார்த்தனர். ஆனால் நடக்கின்ற கலவரத்தில் யாரும் அவர்களை கண்டு கொள்ளவில்லை.

கண்ணதாசனுக்கு, வெங்கட கணபதியின் மேல் கோபம் வந்தாலும் அதை பொருத்து கொண்டு, “சரி அத விடுங்க” என்று அதை தட்டி கழித்தவர், அடுத்த பிரச்சனைய ஆரம்பித்தார்.

“இவன் பண்ணதுக்கு பேரு காதலா??? பல வருடமா ப்ளான் பண்ணி அந்த பொண்ண கார்னர் பண்ணி, வேற வழி இல்லாத மாறி பண்ணி இருக்கான். அதுக்கு மேல அவளை எவ்வளவு வருத்தப்படுத்தி இருக்கான். இதெல்லாம் எதுவும் தப்பே இல்லாத மாறி வேற பேசிட்டு இருக்கிறான்!!??. இதுக்கெல்லாம் என்ன சொல்ல போறீங்க??” என்று வெங்கட கணபதியை பார்த்து கேட்டார் கண்ணதாசன்.

மற்றவர்கள் எதும் பேசாமல் தான் இருந்தனர். எல்லோருக்குமே அவளை அவனுக்கு திருமணம் செய்து தருவதில் எந்த தடங்கலும் இல்லை. ஆனால் சின்ன தடுமாற்றம் தான், அவன் செயல்களிலினால்.

முகில் அப்படியே திரும்பி தன்னவளை பார்த்தான். அழுது கொண்டிருந்தாள். ஆனால் அழுவதற்கான காரணம் மற்றவர்கள் சொல்லும் செயல்களால் அல்ல. இது எல்லாம் இல்லாமல் அவளிடம் வேறு தனியாக ஒரண்டை இழுத்து வைத்திருந்தான் அந்த கள்வன்.

ஒன்றும் சொல்லாமல் அந்த நேரம் வீட்டை விட்டு போனவன் தான் போயே போய் விட்டான்.

——————————

மூன்று வருடங்களுக்கு பிறகு…

இரவு நேர இருளின் நிறமான கரு நிற காரில் முகம் முழுக்க புன்னகையுடன் , தன் கைபேசியில் இருந்த புகைபடத்தை பார்த்து பார்த்து ரசித்து சிரித்து கொண்டுருந்தவன் முகில் நிலவன். கடைசியாக அவள் அவனிடம் பேசிய வார்த்தைகள், கண்களில் கண்ணீருடனும் கோபத்தில் சிவந்த முகத்துடனும் “ஐ டோன்ட் வான்ட் டு சீ யூ எவர் எகென் இன் மை லைப் அஸ் மை லவ்” (உன்ன திரும்பவும் என் வாழ்க்கைல என்னோட காதலா திரும்ப பாக்கவே கூடாது). ஆனால் அது அவளால் முடியாது என்று அவன் யோசிக்கும் போதே அவளின் மற்றுமொரு கூற்று அவன் நினைவுக்கு வந்து அவனை சோர்வடைய செய்தது. “நாங்க எல்லாம் அர்ஜூன் பரம்பரையில் வந்தவங்க. ஒரு வில் ஒரு சொல். எப்பவும் மாறாது”.

அவள் எப்போதும் அப்படி தான். பத்து வார்த்தை பேசினால் அதில் ஒரு வார்த்தையாவது இந்த மாறி அமைந்து விடும்.

“நீ சொன்னா நான் அப்படியே விட்டுடுவேனா என்ன??!! என் செல்ல கடல் கொள்ளைகாரியே!!. குடும்பமா சேந்து துரத்தி விட்டீங்கல. இந்தா வரேன். இனி உன்ன விட்டு நகருரதா இல்ல” என்று வாய் விட்டே சொல்லி கொண்டு வந்தான் முகில்.

அது என்ன மாயமோ இல்ல என்ன மந்திரமோ தெரியவில்லை, அவளை நினைத்தாலே சிறு முறுவலாவது தோன்றி விடும் அவனுக்கு. புன்னகை முகம் என்று சொல்வார்களே அது தான் அவளுக்கு. அமைதியாய் அவள் இருந்தாலும் புன்னகைப்பது போலவே தோற்றமளிக்கும் அவள் முகம். ஆனால் அவள் முகமும் மாறி அழ வைத்த பெருமை தன்னையே சாரும் என்று எண்ணிய அவன் மனம் கவிழ்த்து போட்ட கரப்பான் பூச்சியை போல திண்டாடி திணறி போனது. அவள் முகம்… கடைசியாக பார்த்த அவளது அழுத முகம்… அவன் மன கண்ணை விட்டு மறைவேனா என்றிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கலைந்து அழகு சேர்த்திருந்த முடிகள் எல்லாம் தங்களது பணியை மாற்றி, அவளது கண்ணீரை அவனிடம் இருந்து மறைக்க முயன்று முடியாமல் அவள் மனதை போலவே அவனிடம் தோல்வியடைந்த நொடி அது. அது தான் அவளை இறுதியாக பார்த்த நினைவு அவனுக்கு. அதன் பிறகு மூன்று வருடங்கள் கடந்து இப்போது தான் பார்க்க போகிறான்.

அவனின் இத்தனை யோசனைகளின் நடுவேவும், அவனது காரானது எந்த தடங்கலும் இல்லாமல் வேகமான சென்று காலை 04:03 மணி அளவில் அவனவளின் வீட்டின் முன் நின்றது.

அது ஒரு அடுக்கு மாடி கட்டிடம். 6 தளங்களை உள்ளடக்கியது. அதில் மூன்றாவது தளத்தில் தான் அவர்கள் வீடு உள்ளது. அந்த கட்டிடத்தின் நுழைவாயில் கதவில் இருந்த காவலாளி, அவனது வாகனத்தை பார்த்து விட்டு எந்த வீடு யாரை பார்க்க வந்து இருக்கிறான் என்பதை எல்லாம் கேட்டு கொண்டு, அவனை ஒரு பதிவேட்டில் எழுதி கையெப்பிட சொன்னான். அதன் பின் தான் உள்ளவே அனுமதித்தான் அந்த காவலாளி. பாதுகாப்புக்கு குறைவில்லை தான் அந்த கட்டிடத்தில். மின்தூக்கியை பயன்படுத்தாமல் படி ஏறியே மூன்றாம் மாடியை அடைந்து விட்டான்.

மூன்று வருடங்களுக்கு முன் பார்க்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறது. ஆனால் இதில் இருப்பவர்களும் அதே போல் இருப்பார்களா?? என்பது தான் இப்போதைய அவனது மிக பெரிய சந்தேகமே!!. தன் அக்கா வீட்டினுள் செல்ல எவரும் அவனை தடுக்க போவதில்லை. ஏன் அவனால் பாதிக்கப்பட்ட அவன் மனம் கவர்ந்தவளே ஒன்றும் சொல்ல போவதில்லை எனினும் ஏனோ அவனால் தான் அன்றைய மாலை பொழுது நடந்தவைகளில் இருந்து வெளி வர முடியவில்லை. இப்போதும் கூட அழைப்பு மணியை அழுத்தி உள்ளே செல்ல அவன் மனம் ஒப்பவில்லை. அதற்கு காரணமும் உண்டு. அவ்வாறு சென்றால் அவனை வரவேற்று தனி அறையில் தங்க வைத்து விடுவார்கள். அவனால் இன்று தனியாக இருக்க முடியும் என்றும் தோன்றவில்லை. இப்போதே அவளை பார்க்க வேண்டும். தனது தேவதையின் அருகில் சிறிது நேரமாவது செலவளிக்க வேண்டும் என்றே தோன்றியது. அதுவும் தனியாக.

அவர்களின் வீட்டு சாவி ஒன்று அவனிடம் இருக்கிறது. அதை பயன்படுத்தி யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டான். அவனது அக்காவின் திருமண சமயத்தில் எதையே எடுத்து வர, அவனிடம் அந்த வீட்டு சாவியை கொடுத்து இருந்தனர். அதை அப்படியே அமுக்கி விட்டான் இவன். மேலும் அவன் அக்கா கணவருக்கு ஷிப்ட் முறைபடி தான் வேல. எனவே காலை மாலை இரவு என்று மாறி மாறி வரும். அதனால் கதவை சாவி கொண்டு மட்டுமே திறக்கும்படி தாள்பாள் போடாமல் தான் வைத்து இருப்பார்கள். அவனே போகும் போதும் வரும் போதும் திறந்து கொள்வான், உறங்குபவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க. அது முகிலுக்கு வசதியாக போய்விட கமுக்கமாக உள்ளே நுழைந்து விட்டான்.

இள நீல நிற மெத்தையின் மீது, அடர் நீல நிற மேல் சட்டை அணிந்து, தனது கைகளை தலையின் மேல் கட்டி கொண்டு உறங்கி கொண்டிருந்தாள். இவளை பார்க்கும் போதே அன்று அவள் கூறிய வார்த்தைகள் நினைவு வந்தது.

“எனக்கு நீ எவ்வளவு முக்கியங்கறது அவனுக்கு தெரிஞ்சி இருக்கு. அதே போல் எனக்கு அவன் எந்த எல்லை வரையும்னு அவனுக்கு தெரிஞ்சி இருக்கு. ஆனா உனக்கு நான் எவ்வளவு முக்கியங்கறது இப்போ தான் எனக்கு புரியுது. அதை எனக்கு புரிய வச்ச இந்த சூழ்நிலைக்கு நான் நன்றி சொல்லிக்கறேன்” என்று அவள் முகிலையும் வீராவையும் காட்டி கூறினாள்.

அதை அப்படியே தனது மனதுக்குள் அடக்கி விட்டு, அவளது மெத்தையிலேயே தானும் படுத்து கொண்டு அவளை சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தவன் அப்படியே உறங்கிட துவங்கினான்.

அவன் உறங்க தொடங்கிய அந்த நொடி அவளின் அறைக்குள் கதவை திறந்து கொண்டு நுழைந்தது மற்றொரு உருவம். அது முகிழ் நிலா. முகிலின் அக்கா மகள். முகிலை கண்டவுடன் அடையாளம் கண்டு கொண்டவள், “மாமா” என்று கத்தி கொண்டே போய் அவன் மேல் விழுந்தாள். ஒரு கணம் திடுக்கிட்டு பயந்த முகிலும், நிலாவை கண்டு அசுவாசமடைந்து, தன் மேலே விழுந்த அவளை அணைத்து கொண்டு “சூஊஊஊ…” என்று தன் இதழ்களின் மேல் ஆள் காட்டி விரலை வைத்து காட்டி அமைதியாக்கி விட்டு, “என்ன மயிலி தூக்கம் வரலையா??. இங்க வந்துட்ட??” என்று கேட்டான்.

“ஆமா மாமா. அதான் அத்த கிட்ட வந்தேன். ஆனா மாமா இருக்காங்க. சரப்ரைஸ்” என்று ஆச்சரியமாக சொல்லி விட்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவள் அத்தை மாதிரியே அவள் சத்தத்தையும் ஒரு அளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த சத்தத்தில் அவள் எழுந்து விட்டாளா??!! என திரும்பி பார்க்க அவள் நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்.

நிம்மதி மூச்சு விட்ட முகில், நிலாவை அணைத்து கொண்டு படுத்து கொண்டே பேசினார்கள்.

“மாமா… நான் சொன்ன அந்த டால் வாங்கினயா??”

“எனக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்தயா மாமா??. அம்மா தரவே மாட்டிங்கறா??”

“நேத்து ஆதிரா ஒரு பிங்க் பேக் வச்சி இருந்தா… அது மாறி எனக்கும் வேணும்”

முகிலும், முகிழும் பேசி கொண்டே உறங்கிவிட்டனர்.

இரண்டு பெண்களின் இடையே ஆன்ந்தமாக உறங்கி கொண்டிருந்தவன், அடிபட்டு தான் எழுந்தான் காலையில்…

மாறும்…

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே…

நன்றி!!!

இங்ஙனம்

திரா ஆனந்த்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    7 Comments

    1. ஆரம்பம் சூப்பர் அக்கா 🥰 எனக்கு முகில் கேரக்டர் புடிச்சு இருக்கு.. டேய் என்ன டா பண்ணி வச்ச.. வீட்ட விட்டு போனவன் மூணு வருஷம் கழிச்சி வர🤔 இதுல அந்த புல்லா கிட்ட என்ன டா வம்பு பண்ணி வச்சி இருக்க? அட பிராடு பயலே… கமுக்கமா அந்த புல்ல பக்கத்துல பாடுத்து கிடக்குற..😂 இந்த மா ஹீரோயின்… அவன் குறுக்குலே மிதிச்சி எழுப்பு…😂😂 உங்க எழுத்து நடை எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு அக்கா 😍 அடுத்த episodeக்கு வெயிட்டிங் 😍

      1. Author

        ரொம்ப நன்றி சிஸ்… 😍🥰
        அதான் பாருங்களேன் எவ்வளவு தைரியம் இவனுக்கு…

    2. Superb akka avangalukku enna pirachanai ❤️❤️veeta vittu poi three years kalichi varura alavukku enna panni vachi irukkan ❤️❤️ waiting for next epi akka ❤️❤️

      1. Author

        ரொம்ப நன்றி மீரா மா 🥰😍 🥰

    3. அடேய் குடும்பமா சேர்ந்து திட்டுற அளவுக்கு என்னடா பண்ணி வச்ச.
      மூணு வருஷம் கழிச்சு திரும்பி வந்து உன் சேட்டை அடங்கலையா இப்படி கமுக்கமா அந்த புள்ள பக்கத்துல படுத்துட்டு இருக்க.
      அவ என்ன ஒரு ஆளு பக்கத்துல வந்து படுக்கிறது கூட தெரியாது தூங்கிக்கொண்டு இருக்கா.
      நல்லா ஆரம்பம் சூப்பர்👌👌👌