96 views

கோபம், சந்தோஷம், பதட்டம், காதல் என்று பல கலவையான உணர்வலைகளுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

“நீ இப்போ என்ன மனநிலை ல இருக்க னு தெரியும். இதை கூட உன்கிட்ட சொல்லைல னு கோவமா இருப்ப…ஆனா….உன் கிட்ட என் லவ் வ சொன்னதும் தான் சொல்லனும் னு நினைச்சு இருந்தேன்…ஆனா அதுக்குள்ள  என்னென்னமோ நடந்து போச்சு.”

 

கனத்த அமைதி இருவரிடமும்…

 

“என்கிட்ட எல்லாமே இருந்தும்…எதோ ஒரு வெற்றிடம்….ஒரு ஏக்கம்…இப்பிடி எல்லாத்தையும் ஒன்னுமே இல்லை னு உடைச்சு எறிஞ்ச உன்னோட குரல் தான் என் மனசில அவ்ளோ தாக்கத்தை கொடுத்தது. ஒவ்வொரு லைவ் ஷோ…பண்ணும் போதும்…உன்னோட பட பட பேச்சு தான் என்னை இரசிக்க வச்சுது…முகம் பார்க்காமலே ஒரு ஈர்ப்பு…” என்று மென்மையாய் சிரித்தான்.

 

“ம்ம்….எத்தனையோ பேர் என்கிட்ட பேசி இருக்காங்க தான்…ஆனா ஏன் உன் பேச்சு மட்டும் ஸ்பெஷல் னு அப்போ இந்த மரமண்டைக்கு புரியல….ஆனா உன்னை நேர்ல பார்த்து பழகின அந்த ஒரு மாசம்…அழகா புரிய வச்சுது…” 

கன்சோல் ரூமில் அமர்ந்திருக்கின்றான் என்றும் பாராமல் முகத்தில் வழிந்த காதலோடு இருகைகளையும் கொண்டு முகத்தை மூடிக் கொண்டான்.

 

அவனோடு பழகிய இத்தனை நாட்களிலும் காதலை அவன் செயலில் உணர்ந்தாளே தவிர அவன் வாய்மொழியில் கேட்டதில்லை. முதன் முறை கேட்கையில் பெயர் தெரியா ஏதோ ஒரு உணர்வு அவளை தாக்கியது.

 

“லவ்வர்‌ ஒரு நாள் விட்டுட்டு போனா அவ்ளோ கஷ்டமா இருக்கும் னு பசங்க சொல்லும் போது ‘இது என்னடா பைத்தியக்கார தனமா இருக்கு’அப்பிடி தான்‌ நினைக்க தோணும்…ஆனா நீ என்னை விட்டு வந்த இந்த ஏழு நாளும்…அவங்களை எல்லாம் ஒரு தெய்வமா பாக்க வச்சிட்ட…என்னை என்ன செஞ்ச நீ?” என்றவனுக்கு வெட்கத்தோடு சேர்த்து அழகாய் ஒரு புன்னகை பூத்தது.

 

அவனை பார்க்க முடியாவிட்டாலும் அவனது மொழிகள் அவளின் அழுகையை நிறுத்தி ஒரு புது உலகில் சஞ்சரிக்க வைத்து விட்டது. அருகில் இருந்து தன்னை குறு குறு வென்று பார்க்கும் சைந்தவி தெரிய…அவள் பக்கம் ஒரு முறை கூட தலையை திருப்பவில்லை. 

 

‘இப்பிடி மானத்தை வாங்குறானே’ என்று உள்ளுக்குள் புலம்பினாலும் விடாமல் செவி சாய்த்தாள்.

 

லைவ்வாக நிகழ்ந்து கொண்டிருப்பதால் மெஸேஜுகளும் குவிந்த வண்ணம் இருந்தன. அதிலும் “தலை! உன் காதல் கதையை அவுத்து விடு” என்பதை வாசித்தவன், “தலைவா…என் லவ் ஸ்டோரி சொல்லனும் னா ஒரு நாள் புள்ளா சொல்லனும் பா” என்று சிரித்தான்.

 

“பிடிச்சிருக்கு னு சொல்ற ஃபீல்ல நெக்ஸ்ட் ஸ்டெப் எடுத்துட்டு போலாம் னு நினைக்க முன்னாடி ஒரு மாசம் ஓடிடுச்சு. எல்லாத்தையும் விட்டுட்டு இப்போ…லவ் பண்ணனும் னு தோணுது. என்ன மாருதி லவ் பண்ணலாமா?…. எல்லாம் புதுசா ஸ்டார்ட் பண்ணுவோம்….அந்த கசப்பான சம்பவம் எதுவும் வேண்டாம். உனக்கு தேவையான அளவு டைம் எடுத்துக்கோ….உனக்காக நான் காத்திட்டு இருப்பேன்.”

 

“ஃபைனலி உனக்கு தேவையானதை சொல்லிட்டேன் னு நினைக்கிறேன். ஷோவும் முடிய போகுது…நான் ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்றது கஷ்டம். சீக்கிரம் வந்துடு.” என்றதில் சிரித்து விட்டாள்.

 

“உன்னை லவ்வரா புரோமட் பண்ணி ஷோ லாஸ்ட் ல உனக்காக ஒரு சாங் டேடிகேட் பண்றேன். ‘எல்லாருக்கும் ஹேப்பி வெலன்டையின்ஸ் டே!’ மக்களே….ஸ்டே டியூன் அடுத்து நம்ம மேடி வரப்போறாரு. ” என்றவுடன்

 

“சுந்தரி…கண்ணால் ஒரு சேதி….சொல்லடி இந்நாள் நல்ல தேதி” பாடலை ஒலிக்க விட்டான்.

 

மாதவன் அவன் தோளில் கை வைக்க

“நான் உன்னை நீங்க மாட்டேன்….நீங்கினால் தூங்க மாட்டேன்…” என்று முணுமுணுத்தபடி அவனைப் பார்த்து ஒற்றைக் கண்ணடித்து விட்டு அறையை விட்டு வெளியில் வந்தான்.

 

பாடல் முடிந்தவுடன் மெதுவாக திரும்பி சைந்தவியை பார்க்க அவளோ “என்னை இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்க ல?”

 

“சைந்து குட்டி….அது வந்து….”

 

“வந்து போய் லாம் சொல்லாத. மாறன் தான் இளா வா?”

 

“ஆமா….ஆனா அது இன்னைக்கு தான் எனக்கே தெரியும்” முதலில் இழுத்து இறுதியில் அவசரமாக முடித்தாள்.

 

சிறிது நேரம் அவளை பதட்டத்தில் வைக்கும் அளவிற்கு பார்த்தவள் அடுத்த நிமிடம் “பை த வே…அத்தான் செம்ம. எனக்கு ரொம்ப பிடிச்சுது. ஆனா நீ என்கிட்ட எதுவுமே மறைச்சது இல்லை. இதை மட்டும் மறைச்சிட்ட இல்ல” 

 

“அது…..” என்று இழுத்தவளுக்கு குற்றவுணர்ச்சியாய் போனது.

 

“சரி விடு…இப்போயாச்சும் உன் கதையை சொல்லலாம் ல” என்றதும் மாருதி மறுபடியும் அமைதியை கடைபிடிக்க,

“இதோ பார். நான் கதை கேக்குற மூட் ல இருக்கேன்…மவளே கேட்காம விட மாட்டேன்” என்றபடி அவளை நெருங்கி உட்கார்ந்தாள். 

 

அவளின் பார்வையில் சிரித்தவள் நினைவுகளும் ஒரு மாதத்திற்கு முன்னால் நகரந்தது…

 

தொடரும்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  1 Comment

  1. Vino Malar

   சூப்பர்.. இளா செல்லம் அவன் காதல அழகா சொல்லிட்டான்.. கசப்பான‌ சம்பவம் வேற இருக்கா🙄
   நம்ம மாருதிக்கே இப்ப தான் இளாவும் மாறனும் ஒன்னு தானு தெரியும் போது மாருதி குட்டி என்ன‌ செய்வா பாவம்..தட் இன்னும் என்னைய பைத்தியகாரனாவே நினைக்கறல மொமென்ட்..🤣🤣
   அருமையான பதிவு..