98 views

ஒரு மாதத்திற்கு பிறகு…

 

‘மாருதம் எஃபெம்’

வெலன்டயின்ஸ் டே கொண்டாட்டத்தில் திளைத்திருந்தது.

 

எங்கு பார்த்தாலும் காதல் சின்னங்கள், காதல் பாடல்கள், பலவித கற்பனைகள், ஆசைகளோடு இளைஞர் பட்டாளம்… வயது எண்ணிக்கையில் பல மைல் கடந்திருந்தாலும் ‘இது வாலிப வயசு’ என்று மனதில் இன்றும் அவதாரம் எடுத்து தமது காதல் கதைகளையும் மனைவியிடம் ‘செல்லமா தட்டா’ என்று வீட்டுக்குள் உள்குத்து வெளிக்குத்து வாங்கிய கதைகளையும் சில பல லவ் டிப்ஸ்களையும் வருங்கால காதல் மன்னர்களுக்கு அள்ளித் தெளித்துக் கொண்டிருந்த பெரியவர்கள்..

என்று அந்த இடமே களைகட்டியிருந்தது. 

 

இதைப் பார்த்தால் வேலை செய்யும் இடம் என்று யாராலும் சொல்ல முடியாது… ஏனெனில் அத்தனை ஆர்ப்பாட்டங்களும் வஞ்சகம் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.

 

இன்னும் சிறப்பாக இன்றைய நாளுக்கென்றே திட்டமிட்டபடி பல நிகழ்ச்சிகள் ஸ்டார் 

ஆர்ஜேக்களால் தொகுத்து வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன.

 

பயணங்களின் போதோ…அல்லது அன்றாட வேலைகின் போதோ…வானொலியை தன்பால் இயக்கவிடும் போது வேலையின் களைப்பு இருக்கும் தெரியாமல் போக தன்னாலே ஒரு புது இரத்தம் பாய்ந்துவிடும். 

 

அதுவும் பயணங்களில் சொல்லவே வேண்டாம்…அத்தனை அழகாய் மாற்றும் எமது நிமிடங்களை…பேசவும் துணையில்லை, அக்கறை காட்டவும் ஒருவரும் இல்லை என்று தனிமையில் தவிக்கும் நெஞ்சங்களை மடிசாய வைக்கும் இந்த வானொலி..

 

உருவமோ வெறும் ஒரு பெட்டி தான் ஆனால் எத்தனையோ நெஞ்சங்களுக்கு காதின் வழியே விருந்தளித்து அவர்களை கட்டி வைத்திருக்கும். கூடவே..கிரீச்சிடும் ஒலிகளோடு டியூன் செய்து சரியான வானொலி அலைவரிசையின் எண்ணைக் கண்டுபிடிப்பதே தனி கலை…நைன்டிஸ் கிட்களின் மாமன் மச்சான் என்றாலும் மிகையாகாது. 

 

அப்படியிருக்கையில் காற்றிலே பலருக்குள் உள் நுழைந்து வானொலி கேட்காதவரை கூட கேட்க வைத்து முன்னனி அலைவரிசைகளில் இருக்கும் ‘மாருதம்’ மட்டும் சாதாரணமா???

 

மாருதம்மின் ஸ்டார் ஆர்ஜேக்களுக்கு மட்டும் உலகம் முழுவதும் அத்தனை ரசிகர்கள் உண்டு. அதிலும் “மாறன்” என்றால் விரல் விட்டு எண்ண முடியாதளவிருக்கும் பெண்களுக்கு ‘மாயக்கண்ணன்’…பல இளைஞர் பட்டாளங்களுக்கு மாஸ் ‘அண்ணன்’

 

இன்னும் அரை மணி நேரத்தில் ‘எப்போதும் உந்தன் ஞாபகம்’ என்ற அவனுடைய நிகழ்ச்சி அதுவும் ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் நிகழவுள்ளது. ஆனால் அவனோ ஜெயதேவ்வின் அறைக்கு முன்னால் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்…

முதல் முறை அவனுள் ஒரு மெல்லிய படபடப்பு…

 

‘மேடி…மேடி…ஒ..ஓ…மேடி’ என்று தன்னைத்தானே மேடி என்று கற்பனை செய்ததோடு மட்டும்மில்லாமல் மாறன் முன்னால் அந்த பாட்டைப் பாடி கடுப்பேற்றும் படலத்தை செவ்வனே செய்து கொண்டிருந்தான் மாதவன்…

அதுவும் காற்றில் பைக் போல் பிடித்துக்கொண்டு…

 

பொறுத்துப் பொறுத்து பார்த்திருந்தவன் ஓங்கி அவன் தலையில் குட்டவும் தான் அவனுக்கு பைத்தியம் தெளிந்தது…

 

வலித்த தலையை தேய்த்துக் கொண்டு “ஏண்ணே கொட்டுன?”

 

“உன்னை கொட்டி இருக்க கூடாதுடா கொன்னுருக்கனும்” என்று கோபத்தில் அவனை உறுத்து விழித்தபடி நின்று கொண்டிருந்தான்.

 

“சும்மா லாம் கொட்டாதண்ணே. நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை…” என்று சிலிர்த்து நின்றவனைப் பார்த்து சிரிப்பு வந்தாலும் அதை முகத்தில் பிரதிபலிக்காது நின்றிருந்தான்.

 

“ஓ…பெரியவன் பண்ற வேலையா டா இது?”

 

“நான் என்ன அப்பிடி பண்ணிட்டேன். நம்ம தள நீ லவ் பண்றியா னு கேட்டாரு. நான் ஆமான்னு சொன்னேன்” என்று இயல்பாய் தோளைக் குலுக்கிக் கொண்டான். 

 

“நான் உன்கிட்ட கூட சொல்லவே இல்லையே…”என்று முறைக்க

 

“ஹ..இதை நீ சொல்லி தான் தெரியனுமா? ஹாலிடே முடிஞ்சு வந்ததில இருந்து தனியா உட்கார்ந்து பல்லை பல்லை காட்டும் போது தெரியாது” என்று அவன் நக்கலாய் பார்த்தான்.

 

“உன்னைய…” என்று திட்ட வந்தவனுக்கோ மெல்லமாய் ஒரு வெட்கம் குடி கொண்டிருந்தது…

 

மாதவன் அதை பார்க்கும் முன் தன்னை மறைத்துக்கொண்டு ஜெயதேவ்வின் அறைக்கதவை படாரென்று திறந்தான். 

ஏதோ ஒரு வேகத்தில் திறந்து விட்டான் ஆனால் அவரின் கூர் பார்வையை எதிர் கொண்டதும் உள்ளுக்குள் லேசாக நடுக்கம் கண்டது. 

 

“வாங்க…என்ன இந்த பக்கம்?..” என்று ஒரு தோரணயாய் அமர்ந்து கேட்டவரை நிமிர்ந்து பார்க்கவே அவனுக்கு ஒரு நிமிடம் எடுத்தது.

 

“அது…”

 

” பெரிய வேலை எல்லாம் பாத்துருக்கீங்க போல…அதுவும் என்கிட்ட சொல்லாம…” 

 

“உங்…உங்க கிட்ட முன்னாடியே சொல்லனும் தா நினைச்சேன்…ஆனா…நான் இன்னும்..அந்த..அந்தப் பொண்ணுக்கிட்டயே இன்னும் சொல்லல”

 

“ஓ…”என்று அமைதியானவரை பார்க்கவே தயக்கமாய் இருந்தது. இத்தனை வருடத்தில் அவரிடம் எதுவும் மறைத்ததில்லை. முதல் முறை காதலை மறைக்கவும் மனமோ குற்றவுணர்ச்சியில் தவித்தது..கூடவே அவளை ஏற்றுக் கொள்வாரா என்பதே ஒரு பயமாய் உருவெடுத்தது.

 

“சரி..” என்று அமைதியை உடைத்தவர்..”பொண்ணு வீட்ல நான் பேசவா…இல்லை…நீங்க பேசினது க்கு பிறகு பேசட்டுமா” என்றவரை ஆனந்த அதிர்ச்சியில் நிமிர்ந்து பார்த்தான்.

 

“அப்பா?” என்று கேள்வியாய் தயங்கியவனை நெருங்கி அணைத்து ” உங்க சாய்ஸ் என்னைக்குமே தப்பாகாது சேம்ப். அதனால உங்களுக்கான பொண்ணையும் சரியா தேர்ந்தெடுத்திருப்பீங்க னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு” என்று தட்டிக் கொடுத்தார்.

 

“அப்பறம்…எப்போ என் மருமகளை காட்ட போறீங்க?”

 

“கூடிய சீக்கிரமே…” என்று அழகாய் புன்னகைத்தான்.

 

அவனை விட்டு விலகியவர் அதே மகிழ்ச்சியுடன் “சரி ஷோ க்கு லேட் ஆகலையா ? கிளம்புங்க” என்று அனுப்ப

 

அவனோ “யெஸ் சர்” என்று சல்யூட் அடித்து விட்டு திரும்பிச் சென்றான். தேவ்வோ “வாலு பையன்” என்று தலையாட்டிக் கொண்டார். 

 

அவரது இருக்கையில் அமரும் முன் மீண்டும் கதவைத் திறந்து உள்ளே வந்தவனை கேள்வியாகப் பார்த்தார்.

 

“ஒரு உதவி….”

 

“நன்றி சொல்லனுமா?”

 

“இல்லை…பிரபோஸ் பண்ணனும்” 

 

“எத??”

 

“நான் உங்க அப்பா சேம்ப்…?”

 

“ம்கும்” என்று உள்ளே போன குரலை இறுமி சரி செய்தவன் ” ஓன் ஏயார் ல பண்ணனும்” என்க அவர் கண்களோ அவனை விட்டு இம்மியளவும் அசையவில்லை. 

 

அவரின் அசையாத நிலை கண்டு மனதிற்குள் சிரித்தவன் “மௌனம் சம்மதம் னு எடுத்துக்கிறேன்” என்று வெளியேற “டேய் டேய்” என்று அழைத்தவரின் குரல் காற்றில் வீணாய் கரைந்தது தான் மிச்சம்.

 

வெளியே வந்தவனின் முகத்தில் தெரிந்த ஒளிவட்டத்தை கண்ட மாதவனுக்கு சற்றே ஏமாற்றமாய் போனது. 

 

“அண்ணே…உள்ள என்ன நடந்துச்சு…முகத்தில அத்தனை லைட்டும் எரியுது…” என்று மாறனின் தோளில் இடிக்க..அவனோ தாடையை விட்டு சற்று கீழிறங்கிய தன் சுருளான சிகையை ஸ்டைலாக கோதி விட்ட படி “எல்லாம் நல்ல விஷயம் தான் டா தம்பி” என்று வெறுப்பேற்றிவிட்டு கன்சோல் ரூமை நோக்கி தன் துள்ளல் நடையை தொடர்ந்தான்.

 

கன்சோல் ரூமை திறந்து உள்ளே சென்று ஒரு பெரும் மூச்சை இழுத்து விட்டான். 

பின் ஹெட்ஃபோன்ஸை எடுத்து மாட்டியவுடன் நிகழ்ச்சியின் இயக்குனர்.. “3……2……1…..” என்று கண்ணாடி தடுப்புக்கு வெளியே எண்ணி முடிக்க “எப்போதும் உந்தன் ஞாபகம்” என்ற டைட்டில் ஒரு பதினைந்து செக்கன் கொண்ட பாடலாக அழகான பெண் குரலில் முடிய..முதல் பாடலாக ஏர்.ரஹ்மான் இசையில் டூயட் படத்திலிருந்து “என் காதலே” பாடலை காற்றில் ஒலிக்க விடப்பட்டது.

 

என் காதலே என் காதலே

என்னை என்ன செய்ய போகிறாய்

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ

ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

 

சிலுவைகள் சிறகுகள்

ரெண்டில் என்ன தர போகிறாய்

கிள்ளுவதை கிள்ளி விட்டு

ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

 

என் காதலே என் காதலே

என்னை என்ன செய்ய போகிறாய்

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ

ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

 

காதலே நீ பூ எறிந்தால்

எந்த மலையும் கொஞ்சம் குழையும்

காதலே நீ கல் எறிந்தால்

எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

 

இனி மீள்வதா ஆ..

இல்லை வீழ்வதா..

உயிர் வாழ்வதா ஆ…

இல்லை போவதா..

அமுதென்பதா விஷம் என்பதா..

இல்லை அமுதவிஷமென்பதா…

 

என்று எஸ் . பி. பி.. உருகிக் கொண்டிருந்தார்…

 

—————————————————————————-

 

கையில் இருந்த “பெஸ்ட் ஃபோட்டோகிராஃபர் ஓஃப் தி இயர்….மிஸ்.மாருதி பிரியதர்ஷன் ” என்று பதிக்கப்பட்டிருந்த  சான்றிதழ்களையும் புகைப்படங்களையும் ஆனந்த கண்ணீரோடு அவற்றை வருடிக் கொண்டே பார்த்திருந்தார்…பிரியதர்ஷன்…

 

“அப்பா…”என்று ஏக்கமாய் அழைத்தது மாருதியின் குரல்.

 

அவரின் கண்கள் மெதூவாய் அவளை வருடியது. ” என்னை மன்னிச்சிடு மா. உன்னை புரிஞ்சிக்காம போய்ட்டேன்” என்றவரை இறுகி அணைத்துக் கொண்டார்.

 

“அப்பிடி எல்லாம் நினைக்காதீங்க பா… என்ன தான் கோபப்பட்டு பிரிஞ்சு இருந்தாலும் என்னைப் பத்தி நினைக்காம இருந்திருக்க மாட்டீங்க. நீங்க அப்பிடி பண்ணலன்னா எனக்கும் ஒரு வேகம் வந்திருக்காது பா. இப்போ நீங்க என்னை புரிஞ்சிக்கிட்டீங்க ல….அது போதும்.. எனக்கு”

 

அவளை சற்று விலக்கி உச்சியில் முத்தமிட்டவர் ” இனி உனக்கு என்ன படிக்கனும் னு ஆசை படுறியோ. தயங்காம சொல்லு உனக்காக நிக்க நான் இருக்கேன். சொல்லு மா..” என்று அவள் முகத்தை ஆசையாக வருடிக் கேட்டார்.

 

“போட்டோ ஜேர்னலிசம் பா” என்று மகிழ்ச்சியாய் சொல்ல ” படி…அந்த படிப்பு எங்க போய் எப்பிடி படிக்கனும் னு ஆசை படுறியோ போய் தாராளமா படி”

 

“தேங்க்ஸ் பா” என்றவள் ஓடிச்சென்று தங்கையையும் அன்னையையும் இறுக்கி அணைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். 

 

பின் தாத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்க “ஏன் டி மா… ஊரெல்லாம் போய் எடுக்குற இந்த தாத்தாவ ஒரு போட்டோ புடிக்க மாட்டியா?”

 

“ஒரு ஃபோட்டோ என்ன? ஒரு ஃபோட்டோ ஷூட்டே நடத்திடலாம்” என்று மகிழ்வாய் அவரை அழைத்துச் சென்று அவர் ஆசையை நிறைவேற்றினாள். கூடவே அவளின் தங்கை சைந்தவியும் கூட்டு சேர அந்த இடமே அழகாய் மாறியது. 

 

அவரை ஷாருக்கான், ரஜினிகாந்த் ஸ்டைல்கள் என்று ஒரு சிலதை அவருக்கு செய்து காட்டி அவரையும் செய்ய சொல்லி படுத்தி எடுத்தனர். “என்னை எப்பிடியாச்சும் காப்பாத்துப்பா…” என்று அவர் ஆண்டவனிடம் வேண்டுகோள் வைக்கும் வரையும் விடவில்லை…

 

சைந்தவி அவர்களின் அறையில் இருக்கும் தந்தையின் கோட் சூட்டை எடுத்து வருகிறேன் என்று உள்ளே சென்றவள் கொஞ்ச நேரத்தில்…” அக்கா!!!! உன் ஆளு மாறனோட ஷோ ஒரு மாசத்துக்கு பிறகு லைவ்வா போகுது கா!!!” என்று கத்தவும் தாத்தாவாது மண்ணாவது என்று அவரை அம்போ என்று விட்டு உள்ளே ஓடி விட்டாள்.

 

தொடர்ந்து ஒலித்த காதல் பாடல்களுக்கு பின்பு

‘ஒரு மாசம் இடைவெளிக்கு பிறகு உங்களோடு பேச ஓடோடி வந்திருக்கும் உங்கள் மாறனின் பணிவான வணக்கங்கள்…’ என்று அவனது குரல் துள்ளளாய் ஆரம்பித்தவுடன் மாருதி இந்த உலகத்திலேயே இல்லை…. ஒரு மாதத்திற்கு பிறகு இந்த குரல் மேலும் நெருக்கமாகியது போன்றொரு உணர்வு…

 

“இன்னைக்கு வெலன்டெயின்ஸ் டே அதுவுமா ‘எப்போதும் உந்தன் ஞாபகம்’ பல காதல் கதைகளை உங்க கிட்ட கறக்கலாம் னு வந்திருக்கேன்…

 

லவ் னாலே ஒரு மேஜிக் தான்…இந்த மேஜிக் எப்போ வரும் எப்பிடி வரும் னு யாருக்கும் தெரியாது…ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வரும். அப்பிடி என் லைஃலயும் இருக்க ஒரு அழகான காதல் கதை இன்னைக்கு முதல் முறையா சொல்லப் போறேன் ஷோ முடியும் போது…”என்க 

 

எஃப் பி லைவ் வில் 

“ஓ….ஹோ…” என்ற சந்தோஷ கூச்சல்களும் “நம்ம சிங்கமும் காதல் வலைல சிக்கிடுச்சு டா” என்று கலாய்களும் 

“என்னை ஏமாத்திட்டீங்களே…” என்று பல பெண்களின் ஏக்கங்களும் மெஸேஜ்களாய் குவிந்த வண்ணம் இருந்தன…

 

அதைத் தொடர்ந்து பல காதல் கதைகளும் பகிரப்பட்டுக் கொண்டிருக்க மாருதியும் மனமும் மன்னவனை நினைத்து ஏங்கியது…அவனின் பிரிவு மனதை வாட்ட அந்த பிரிவிற்கு காரணமாய் அமைந்த தன்னையும் மனதில் திட்டிக்கொண்டிருக்க ஒரு கண்ணீர் துளி மெதுவாய் இறங்கி அவள் கன்னத்தை நனைத்தது…

 

முழுதாய் ஒன்றரை மணி நேரம் முடியும் தருவாயில் மாறனின் குரல் ஒலிக்க தொடங்கியது… ஆனால் அவளோ மனதின் அழுத்தம் தாங்காமல் எழுந்து செல்ல முற்பட சைந்தவியோ குழப்பமாய் அவளை ஏறிட்டாள்.

 

“எல்லாரோட ஆர்வமும் புரியுது… இன்னைக்கு இந்த ஷோ…வெலன்டயின்ஸ் டேக்காக மட்டும் இல்லை… என்னோட குட்டி ரவுடி செல்லா க்காக பிளான் பண்ண சர்ப்ரைஸ்….அதனால…டப்புனு போட்டு உடைக்க முடியாதில்லையா??” என்றான்.

 

அவன் ‘செல்லா’ எனும் போதே மாருதியின் நடை அதிர்ச்சியில் நின்றது…கூடவே அழுத்தமாய் ஆழமாய் அவன் பெயரை உச்சரித்ததில் “இளா??”என்று சந்தேகமாய் திரும்பி நடந்து வந்து வானொலியின் அருகே நெருங்கி வந்து அமர்ந்து கொண்டாள்.

 

“செல்லா…திஸ் ஃபோர் யூ….உன்கிட்ட உன் கண்ணைப் பார்த்து சொல்லனும் னு நினைச்சது எல்லாம் சொல்ல விடாம தடுத்துடுச்சு. ஆனா இன்னைக்கு கிடைச்ச வாய்ப்ப தவற விடக்கூடாது னு நினைச்சேன். நீயும் நான் பேசுறதை கண்டிப்பா கேட்டுட்டு இருப்ப னு ஒரு பெரிய நம்பிக்கை”  என்று அழகாய் சிரித்தான். அவனோடு வேலைப்பார்ப்பவர்கள், நேயர்கள் , நண்பர்கள் என்று அத்தனை பேரின் காதுகளும் இவன் மொழிகளை உள்வாங்கியபடி காத்திருந்தது…

 

 

” கிட்டத்தட்ட கண்டுபிடிச்சிருப்ப ஆனா உன் குட்டி மூளை அதை ஒத்துக்க விடாம சதி செய்ய குழம்பி…எனக்கு பிடிக்காத உன் டியர்ஸோட கேட்டுட்டு இருப்ப”

 

அவள் முழுதாய் அவனை உணர்ந்தாலும் அறிவும் மனதும் அவளை படுத்தி எடுக்க படபடத்த இதயத்தோடு அவன் சொன்னதை பொய்யாக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

“மாருதி…” என்று காதலாய் ஒலித்தது அவன் குரல்.

 

“நான் தான் உன்னோட இளா….காற்றுக்கு இளமாறன்…ஆனா உனக்கு உன்னோட லைட் ஹவுஸ் இளம்பரிதி…” என்க மாருதி அழுகையில் வெடித்து விட்டாள்.

 

தொடரும்… 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  2 Comments

  1. Vino Malar

   ஐஐஐ.. இளமாறனும் இளம்பரிதி இரண்டு பேரும் ஒரே ஆளு தான்.. நம்ம கதாநாயகி பெஸ்ட் போடாகிராஃபர் அவார்ட் வாங்கிட்டா.. சூப்பர்.. பாவம் தாத்தா.. எவ்ளோ நேரம் அப்படியே காத்திருப்பாரோ தெரியல.. நம்ம இளா காதல சொல்லிட்டாரு.. நீங்க சீக்கிரமாகவே அவங்க காதல் கதையை சொல்லிடுங்க சகி.. அருமையான பதிவு..