137 views

அத்தியாயம் – 5

ஒவ்வொரு பிரிவிலும் நேராநேரத்திற்கு அவர்களுக்கான டாஸ்க்கள் எந்த தடையும் இல்லாமல் நடைபெற்றது. துரியோதனன் அங்கு இல்லை என்பதை கூட அறியாமல் அங்கு பேசுபவன் தான் துரியோதனன் என்று நினைத்து தங்களுக்கு அளிக்கப்பட்ட கமெண்ட்களை அச்சுபிசகாமல் அப்படியே செய்தனர்.

அனைவருக்கும் மாலை இடைவேளை விட்டிருக்க, பிரிவு வாரியாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மைதானத்தில் வாக்கிங் ரன்னிங் ஜாகிங் என்று அவர்களுக்கு தோன்றியதை செய்துக் கொண்டிருந்தனர். அதை எல்லாம் ஒரு வித சுவாரசியமாக பார்த்துக்கொண்டு வந்த சித்தார்த், ஒரு கல் பெஞ்சில் கண்ணைமூடி அமர்ந்திருந்த விஷ்ணுவை பார்த்தான்.

‘அட நம்ப ரூம்மேட். இவன் மட்டும் ஏன் தனியா இருக்கான். சரி நம்ப போய் கம்பெனி கொடுக்கலாம்’ என்று நினைத்து அவனிடம் சென்றான்.
“ஹாய்!”
“என்ன வேணும்?”
“ம்ச் இப்போ எதுக்கு மிலிட்டரி ஆஃபீஸர் போல பேசுற. பார்த்தா என்ன விட ஒன்னு ரெண்டு வயசு பெரியவனா இருப்பன்னு தோணுது. என் பேரை சொல்லியே கூப்பிடலாம்”

“சரி ஓகே.” என்று முகத்தை திருப்பியவனிடன், “உன் பேர் என்ன?” என்றான் சித்தார்த்.
“விஷ்ணு. வயசு முப்பது. எங்க வீட்டுக்கு ஒரே பையன். அப்பா அம்மா இல்லை. ஒரு கொலை பண்ணிட்டு தான் இங்க வந்திருக்கேன். நான் ஒரு ஆயுள் கைதி. போதுமா” என்று வேகமாக எழுந்தவனின் பின்னாலே சென்ற சித்தார்த்,
“சூப்பர். விஷ்ணு பேரு நல்லா இல்லை உன்னை நான் ஆயுள்ன்னு கூப்பிடுறேன்.” என்றவனை முறைத்து ஓட ஆரம்பிக்க அவன் பின்னாடி சித்தார்த்தும் ஓடினான்.

கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஓடியவன் வந்து அமர பின்னால் அவனுக்கு ஈடுக்கொடுத்து ஓடி வந்து அமர்ந்தான் சித்தார்த்.
“ஹே ஆயுள்! செம ஸ்டாமினா உனக்கு… இங்க ஜிம் இருக்கா?” என்று முறுக்கேறிய அவன் உடலைப் பார்த்துக் கேட்டான்.
“இல்லை…” என்று அவன் பேசும் முன் அவன் கையில் இருந்த வாட்ச் ரெட் அலெர்ட் காமிக்க அவனது வார்த்தை அளவு முடிந்து விட்டது என்றதை உணர்ந்து அமைதியானான்.

இதை கவனிக்காத சித்தார்த்தோ, “ஓவரா தான் போற ஆயுள். என்கிட்ட பேசுனா நீ என்ன குறைஞ்சா போக போற? ரொம்ப பிகு பண்ணாமல் பேசு” என்று பேசிக்கொண்டே போனவனின் கைக்கடிகாரமும் ரெட் அலெர்ட் கொடுக்க அதை கவனிக்காது பேசிக்கொண்டே இருந்தான்.

அவனுக்கான டாஸ்க்கள் பட்டியலில் இடப்பட்டிருக்க அதை அறியாது விஷ்ணுவிடம் கதை அளந்துக்கொண்டிருத்தான். மூன்று அலெர்ட் முடிந்தும் அவன் பேசுவதை நிறுத்தாமல் இருக்க, அவனை ஒலிபெருக்கி மூலம் டாஸ்க் நடக்கும் இடத்திற்கு வருமாறு கூறி முடிந்தது அந்த அறிவிப்பு.

“என்னாச்சு!” என்று விஷ்ணுவிடம் கேட்க,
கழுத்தை அறுப்பது போல செய்து நாக்கை வெளியே தள்ள அப்போது தான் விதிமுறை பட்டியல் அவன் நினைவிற்கு வந்தது.

‘ஐயோ! வந்த முதல் நாளே டாஸ்க்கா? உடம்பை இறும்பாக்கிக்கோ சித்து’ என்று பல தைரியம் கூறி அவ்விடத்திற்கு சென்றான்.

அது ஒரு மூடப்பட்ட அறை, யோசனையாக அவன் உள்ளே நுழைய, அவன் முன் ஒரு கணினி வைக்கப்பட்டிருந்தது. என்ன என்று அவன் கணிக்கும் முன் அறிவிப்பு ஒலிக்க ஆரம்பித்தது.

“உங்களுக்கான பேச்சுரிமை விதியை நீங்கள் மீறிய காரணத்திற்காக உங்களுக்காக இரண்டு டாஸ்க் அளிக்கப்படுகிறது. பக்கவாட்டில் இருக்கு ஊடலையை காதில் பொருத்தி ஆயத்தமாகவும்” என்றதும் அதை சரியாக செய்தான் சித்தார்த்.

அந்த காணொளி ஆரம்பித்தது மட்டுமே அவன் அறிவான் அது முடியும் போது அவன் இருந்தது என்னவோ அரைமயக்கத்தில் தான். வழமையாக வரும் மருத்துவக்குழு அவனை முழுவதுமாக சோதித்து அவன் அறைக்கு கொண்டு சென்றது.

அவனை கொண்டு வந்து படுக்க வைக்க அதை பார்வையாளராக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. அவன் தான் புதியவன் அவனுக்கு தான் நினைவூட்டி இருக்கலாமோ என்று யோசித்தான். பின் முடிந்ததை நினைத்து எந்த பலனுமில்லை என்றுணர்ந்து இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று உறுதி பூண்டான்.

இரவுணவை கூட உண்ணாமல் படுத்திருந்தவனை வந்து எழுப்பினான் விஷ்ணு.
“சித்தார்த் எழுந்திரி, நைட் டாஸ்க்கு கிளம்பனும் லேட்டான எக்ஸ்ட்ரா டாஸ்க் செய்யணும்” என்றதும் கண்களை மெதுவாக திறந்து எழுந்தமர்ந்தான் சித்தார்த்.

“இன்னும் டின்னர் டைம் முடியல. சீக்கிரம் போய் சாப்பிடு. அப்போ தான் டாஸ்க் செய்ய முடியும். இப்போ மே பி பிஸிக்கல் டாஸ்க்கா இருக்கலாம்” என்றதும் மறுபேச்சு பேசாமல் சாப்பிட சென்றான்.

அவன் மனம் முழுவதும் இது என்ன மாதிரியான இடம் என்பது மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. அவனை அதிகம் யோசிக்க விடாமல் இரவிற்கான டாஸ்க் டைம் ஒலிபெருக்கி மூலம் பகிரப்பட்டது.

சாப்பிட்டு அவன் அறைக்கு செல்ல கையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்தான் விஷ்ணு.
குனிந்து கடிகாரத்தை பார்க்க அது பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது, இது தான் சரியான நேரம் என்று பேச ஆரம்பித்தான். மாலை அவன் கண்ட காணொளி அவனை உந்த விஷ்ணுவிடம் பேச முடிவு செய்தான்.

அந்த காணொளியின் எத்தனை அவனை பாதித்தது என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது. சற்று அதிகம் ஆகிருந்தால் கூட அவன் மூளை குழம்பியிருக்கும். இத்தனை தெளிவான தனக்கே இந்த நிலை என்றால் அங்கேயே இருப்பவர்களின் நிலையை தெரிந்துக் கொள்ள அவன் மனம் துடித்தது.

“இது என்ன இடம் டா? ஏதோ தண்டனை இல்லாமல் பண்ண முடியும்! அங்க வருசா வருசம் போட்டி நடக்கும் அதில் ஜெயிச்சா விடுதலை தருவாங்கனு சொன்னதை நம்பி வந்துட்டேன். அதுக்கு அந்த மரண தண்டனையே பரவாயில்லை போல!” என்று கதறினான் சித்தார்த்.

தன்னை சமாளித்து தன்னை பாவமாக பார்த்த விஷ்ணுவை பார்த்து, “ஆமாம் நீ எந்த தண்டனையை குறைக்க இங்க வந்த?”

“அட அதைவேற ஏன் ஞாபகப்படுத்தற? ஒழுங்கா அங்கேயே இருந்திருந்தா கூட பரவாயில்லை நன்னடத்தை அப்படி இப்படின்னு சலுகை கிடைச்சு ஒரு இருபது வருசத்தில் உயிரோடாவது இருந்திருப்பேன் போல. இவனுங்க கொடுக்கிற டாஸ்கில் உசுரு போய் உசுரு வருது”

“அப்போ என்னை மாதிரியே நீயும் தெரியாமல் தான் வந்திருக்கியா?”

“ஆமாம்”

“ஐயோ பாவம் டா நீயும்!”

“சரி சரி போதும் வார்த்தை அளவு முடிஞ்சு திரும்பி டாஸ்க் கொடுக்க போறாங்க! புக் செல்ப் அங்க இருக்கு ஏதாவது படிக்கிறன்னா படி” என்று மீண்டும் புத்தகத்தில் கண்ணை பதித்தான் விஷ்ணு.

ஏதோ சிஸ்டமடிக் வாழ்கையை இவர்கள் வாழ்வது போல தோன்றியது. இங்கே இருக்கும் வரை எதிலும் மாட்டிக் கொள்ளாமல் முழுதாக வீட்டிற்கு செல்ல வேண்டும் நினைத்து இரவு டாஸ்க்கிற்கு மனதை தயார் செய்தான்.

அவன் மனமோ இப்பொழுது மற்ற பிரிவு கைதிகள் நிலையறிய அவனை அரித்தது. இது தக்க சமயம் இல்லை சற்று சறுக்கினாலும் உடம்பில் உயிர் இருக்காது என்று அவனுக்கு நன்றாக தெரியும். அதனால் தனது சேட்டைகளை மூட்டைக்கட்டி வைக்க முடிவு செய்தான்.

பாவம் அவன் அறிந்திருக்கவில்லை நாளையே அவன் முடிவு ஆட்டம் காணவிருக்கிறது என்பதை. இவன் இங்கு இப்படி இருக்க இவனை போலவே மற்றுமொரு ஜீவன் அங்கு கனவுலகத்தில் மிதந்துக் கொண்டிருந்தது.

‘மை டியர் இளவரசி!
நீ என் இதயத்தின் பசி!
உன்னை பார்த்தாலே ஒரே குஷி!
நினைக்க நேரம் இல்லாம நான் ரொம்ப பிசி!
உன் கையோ ஒரு குச்சி!
அதுல ஒரு முத்தம் வைச்சி!’
என்று பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தவன் இடுப்பில் ஒரு உதை விட்டான் செழியன்.

“ஏன் டா நாயே! என்ன கருமம் டா இது?”
“கருமம் இல்லடா இது கவுதை”

“என்னது கழுதையா?”
“கழுதை இல்லடா கவுதை” என்று மீண்டும் சொன்ன விஜயை அசிங்கமாக பார்த்து,
“பரதேசி நாயே அது கவுதை இல்லை கவிதை. நாயிக்கு கவிதை சொல்ல வரல கவிதை ஒரு கேடு உன் மூஞ்சிக்கு. ச்சை வந்து தொலை டாஸ்க் பெல் அடிச்சிருச்சு!”

“உனக்கு பொறாமை டா. நான் அந்த இளவரசியை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணியிருவேன்னு”
“முதல் நீ அதுக்கு உயிரோட இருக்கியான்னு பார்க்கலாம். இந்த மொகரைக்கட்டை மேல எனக்கு பொறாமையாம். பைத்தியம் பிடிச்ச மலக்குரங்கே மரியாதையா வந்திரு இல்லை இங்கயே உன்னை கொன்னுப்போட்டிருவேன்”

“இப்படி டீசென்ட்டா கூப்பிட்டா வர மாட்டேனா சொல்ல போறேன் மச்சி” என்று வேகமாக எழுந்தவனை கேவலமாக பார்த்து முன்னே சென்றான் செழியன்.

“மச்சி!” என்ற விஜயின் அழைப்பில்,
“டேய் கேமரா ஆன் ஆகிருச்சு! எதுவும் பேசாதே.”
மண்டையை மட்டும் உருட்டி வெளியே வந்தவன் அப்பொழுது தான் கவனித்தான் இன்று அவன் பிரிவு கைதிகளுக்கு சைக்காலஜி டாஸ்க்கிற்கு அழைத்து செல்லாமல் பிஸிக்கல் டாஸ்க் நடக்கும் திடலுக்கு அழைத்து செல்லப்படுவதை.

அதிர்ந்து செழியனை பார்க்க அவனும் யோசனையாக நடப்பதை பார்த்தான்.
எப்படி என்று கண்களால் கேட்க, உதட்டை பிதுக்கி தனக்கும் தெரியாது என்பதை குறிப்பில் காட்டி கூட்டத்தோடு ஒன்றினான்.

பெருமூச்சோன்றை விட்ட விஜய் நடப்பது எல்லாம் விதி என்று அதன்மேல் பழியை போட்டு திடலுக்கு சென்றான். வெகு சொற்பமே அவர்களது கணிப்பு இப்படி தவறுவது.

எப்பொழுது எல்லாம் இப்படி நடக்கிறதோ அன்று உயிர் ஊசலாடும் நிலையில் இருவரில் ஒருவர் அறைக்கு திரும்புவார்கள். இதை நினைத்து தான் அவன் அதிர்ந்தான். இருவரில் இன்று யாருக்கு என்ன ஆகப்போகுது என்பதை விட இன்று ஏற்கனவே இரண்டு டாஸ்க் செய்து சோர்ந்து இருப்பவர்களால் மூன்றாவது டாஸ்கை செய்ய முடியுமோ என்று ஐயம் ஏற்பட அவனுக்கு படபடப்பாக வந்தது.

இப்படியான மனநிலையில் தான் அவன் இருப்பான் என்பதை தெரிந்த செழியன், “மச்சி எதுவும் ஆகாது உன் மனசையும் உடம்பையும் ரெடி பண்ணு பார்த்துக்கலாம். எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ணமாட்டோமோ. நண்பேன்டா!” என்று அவனுக்கு தெம்பூட்டினான்.
“அதானே பார்த்துக்கலாம்” என்று உள்ளே சென்றான்.
குறுநகையுடன் அவனை தொடர்ந்து உள்ளே சென்றான் செழியன்.

ஏற்கனவே அங்கு பிரிவு ஐந்தை அமர வைத்திருந்தனர் அந்த பிரிவின் கண்காணிப்பாளர். எல்லாத்தையும் பார்த்தவாறு நடந்தவனை ஒருமாதிரி பார்த்தான் சித்தார்த்.
‘இவன் எதுக்கு ஒரு மாதிரி பார்க்கிறான், ஒருவேளை அவனா இருப்பானோ?’ என்று மூஞ்சியை திருப்பிக் கொள்ள, சித்தார்த்திற்கு அவனின் பாவனையே கூறியது அவனது எண்ணத்தை.

‘அட ச்சை! வேடிக்கை கூட பார்க்க முடியல இங்க. எல்லாம் ஒரு மாதிரி நினைச்சுக்கிறானுங்க!’ என்று முகத்தை திருப்ப ஒலிபெருக்கி ஒலிக்க ஆரம்பித்தது.

தொடரும்……

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்