152 views

அத்தியாயம் – 4

‘எஸ்.வி கன்சல்டன்சி’ என்று பேர் பொறிக்கப்பட்டிருக்கும் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தாலும் மனதில் ஒரு தடுமாற்றம் இருக்க தான் செய்தது வித்யுதிற்கு. பின்  அத்தனை எளிதாக அப்பாய்ன்மெண்ட் இல்லாமல் சர்வேஷை சந்திங்க முடியாது என்று அவனுக்கும் தெரியும் அல்லவா? எனினும் நிரூபனின் சொல்லை தட்டமுடியவில்லை அவனால்.

எதிரே இருப்பவர் தான் சொல்வதை செய்யவில்லை என்றால், அவரை எப்பாடுப்பட்டாவது செய்ய வைக்கும் பிடிவாதக்காரனல்லவா அவன்.
எப்படியும் தான், தான் இதை செய்யப்போவது என்று அறிந்ததாலோ என்னவோ நேராக கிளம்பி வந்துவிட்டான்.

கிட்டத்தட்ட சர்வேஷின் மீட்டிங் முடிய முழுதாக மூன்று மணிநேரம் ஆகிவிட்டது. அலைபேசியில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு நேரம் போனது தெரியவில்லை.

அழுத்தமான காலடிட் தடத்துடன் உள்ளே வந்த சர்வேஷை பார்த்து மெலிதாக சிரித்து, “டூ மினிட்ஸ் எஸ்.வி” என்று மீண்டும் அலைபேசியில் தலையை விட, ‘கொஞ்சம் கூட இவன் மாறவே மாட்டான் போல’ என்று நினைத்து அலைபேசியை எடுத்து இன்றைக்கான ஷேர் ஹோல்டிங்கின் ஏற்ற இறக்கத்தை பார்வையிட ஆரம்பித்தான்.

சில நொடியில் தனது வெற்றியை சிக்கன் டின்னர் மூலம் உறுதி செய்து நிமிர, அவன் பார்த்தது என்னவோ பங்கீட்டை ஆராய்ந்துக் கொண்டிருந்த எஸ்.வியை தான்.

“எஸ்.வி கொஞ்சம் உன் மூளைக்கு ரெஸ்ட் தாடா. பாவம் அது வாய் இருந்தா இன்னேரம் கதறிருக்கும்.” என்ற வித்யுத்தை பார்த்த சர்வேஸ்வரன்,
“ஏன் டா சொல்ல மாட்ட? உனக்கு என்ன! அங்கிள் சம்பாரிச்சு வைச்சதை செலவு பண்ண உன் பேரன் வர வரைக்கும் கவலையில்லாமல் ஜாலியா இருக்கலாம். செலரி டே அன்னைக்கு போய் செக்ல சைன் போட்டு வந்தா போதும்.

மேனேஜ்மென்ட் எல்லாம் அப்படி பக்கவா அங்கிள் மெயிண்டைன் பன்றாரு. நீ எப்போ வேணாலும் போய் டேக்ஓவர் பண்ணிக்கலாம், நான் அப்படியா?” என்று கேளிப்போல சற்று உண்மையை நறுக்கென்று அவனுக்கு உணர்த்தினான்.

“டேய் கேப்ல என்னை வெட்டிப்பையனு சொல்லிட்ட? நான் பேமஸ் சைக்காடிஸ்ட் அப்ப்டிங்கிறதே மறந்துட்டியா டா நீ?”
“நான் மறக்கல! நீ தான் மறந்துட்டு சுத்திட்டு இருக்க!”

“அடப்பாவி ரொம்ப டம்ப்பா இருக்குனு ஒரு வாரம் தான்டா ஹாஸ்பிடல் போகல. அதுவும் மார்னிங் போய் விசிட் பண்ணிட்டு தான் அடுத்த வேலை பார்க்கிறேன்.”
“மனநல மருத்துவருக்கு மனநிலை சரியில்லன்னு சொன்னா என்னை மாதிரி பிசினஸ்மேன் எல்லாம் என்ன சொல்ல?”

“அதுக்கு தான் ஒரு பிளானோட வந்திருக்கேன்.”
“உன் மாடுலேஷனே சரியில்லையே! என்னத்தை வில்லங்கமா யோசிச்சு வைச்சுருக்க?”

“நான் இல்லை, பிளான் நிருவோடாது!”
“வாட்! அவனுக்கு சேனலில் வேலையில்லையா?”
“ஒன் வீக் வொகேஷன் லீவ். ஜெனியை அதுவரை ஆக்ட்டிங் எம்.டியா இருக்க சொல்லியிருக்கான்.”
“அப்போ நீ வெறும் அம்பு தான். அவன் தான் வில்லு! அப்படி தானே”

“அதுதான் தெரியுதுல, அப்பறம் என்ன கேள்வி? நெக்ஸ்ட் வீக் போறோம் அதுக்கு ஏத்த மாதிரி உன் ஒர்க் எல்லாத்தையும் செட்யூல் பண்ணிக்கோ”
“வாட் என்ன விளையாடுறியா?  எனக்கு மீட்டிங் இருக்கு கண்டிப்பா ஒன் வீக்லாம் சான்ஸ் இல்லை. நிறைய அப்பாய்ன்மெண்ட் இருக்கு கேன்சல் பண்ணா நிறைய லாஸ் ஆகிரும். நீங்கள் மூனு பேர் போயிட்டு வாங்க.”

“டேய் கொஞ்சம் கன்சிடெர் பண்ணு டா!”
“விது ஆர் யூ கிரேசி? 2020இல் நான் எங்க இருந்து இந்த கம்பெனியை ஸ்டார்ட் பண்ணேன்னு உனக்கு தெரியும் தானே? இந்த ஏழு வருசத்தில் இவ்வளவு வளர்ந்து இருக்குன்னா அதுக்கு ரீசன், நான் எதையும் கன்சிடெர் பண்ணாமல் வேலை செஞ்சனால் தான்.” என்று கோபமாக பேசிவனை தடை செய்தது அவனது அலைபேசி.

“எஸ் சர்வேஸ்வரன் ஸ்பீகிங்”
“….”
“யா! வில் ஜாயின் டுநைட்”
“….”
“வித் ப்ளசர்” என்று அழைப்பை துண்டித்து வித்யுத்தை பார்த்தான்.

“எனக்கு நைட் ஒரு இம்போர்ட்டண்ட் மீட்டிங் இருக்கு டா அதுக்கு கொஞ்சம் ப்ரெசென்டேசன் ரெடி பண்ணனும். ஐ ஹவ் டு லீவ். பிரீ ஆகிட்டு கால் பண்ணுறேன். இப்பவே சொல்லுறேன் கண்டிப்பா என்னால் வர முடியாது. அவன்கிட்ட நீயே சொல்லிரு எனக்கு கால் பண்ணாலும் எடுக்கமாட்டேன் அவனை நீயே சமாளிச்சுரு.” என்று கூறியவன்.

“டேய்….. டேய்…. இருடா…. ” என்று கத்தியதை கூட கவனிக்காது அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிட்டான்.
‘போயிட்டானா? சரி ஆதிக்கிட்ட பேசிட்டு இவன்கிட்ட வருவோம்’ என்று அடுத்த நண்பனை பார்க்க சென்றான்.

                         ********

பணத்தின் செழுமை அங்கிருந்த ஒவ்வொரு பொருளிலும் தெரிந்தது, பார்த்து பார்த்து கலைநயமாக கட்டப்பட்டதாலோ என்னவோ வருபவர்களை கட்டியிழுக்கும் அழகோடு நின்றிருந்தது. மீடியாவின் ஒளி எப்பொழுதும் படித்திருக்கும் வீடு என்பதால் கூடுதல் மினுமினுப்போடு காட்சியளித்தது.

மூன்று தலைமுறையாக சினிமாத்துறையில் காலூன்றி நிற்கும் குடும்பம் என்பதை பறைசாற்றும் விதமாக இருந்தது அங்கிருந்து வரவேற்பறை. அவனை பார்த்ததும் அந்த அறையில் இருந்த அந்த வீட்டின் காரியதரிசி, ஆதித்யா சந்திரசேகருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

தான் வர பத்து நிமிடம் தாமதமாகும் என்றதை கூறியவன், வித்யுதின் விருப்ப உணவு சிலவற்றை வரிசையிட்டு அவனுக்கு கொடுக்குமாறு கூறி அழைப்பை துண்டித்தான்.

தன்னை அதிகம் காக்க வைக்காமல் வந்துவிடுவான் என்பதை அறிந்தவன், நிரூபனுக்கு அழைத்தான்.

“நிரு!” என்று அடுத்து பேசாமல் அமைதியாக இருந்தான் வித்யுத்.
“விது எஸ்.வி நோ சொன்னானா?”

“ஆமாம் டா. பேசாமல் பிளானை ட்ரோப் பண்ணிரலாமா?”
“நோ வே! எப்படியும் நான் கால் பண்ணா எடுக்கமாட்டான். ஒழுங்கா அவனை ஓகே பண்ணுற. காட் இட்.”

“டேய் ரொம்ப படுத்துற டா!”
“பிரண்டுக்காக இதைக்கூட செய்ய மாட்டியா டா?”
“ஏதோ பெருசா பிளான் பண்ணிருக்க, கேட்டாலும் சொல்ல போறது இல்லை. என்ன தான் டா நினைக்கிற, உன் சேனலை டெவெலப் பண்ண ஏதாவது பெருசா சிக்கிருக்கா என்ன?”

“அதெல்லாம் எதுக்கு கேட்கிற? வொகேஷன் போறோம் அவ்வளவு தான்”
“எஸ்.வியோட மூளை என்னோட பொறுமை ஆதியோட வேகம் இதெல்லாம் உனக்கு தேவைப்படுதோ?”

“தேவை இருந்தாலும் சொல்ல முடியாது. உன்னால் வர முடியுமா முடியாதா?”
“முடியாதுன்னு சொன்னா மட்டும் விடவா போகிற? சரி ஆதிக்கிட்ட பேசிட்டு வீட்டுக்கு வறேன்”

“ஹாஸ்பிடல் போகலையா அப்போ?”
“மார்னிங்கே போயிட்டேன். நைட் ஒரு பிசினஸ் மீட் போகணும். வந்து டீடெயில்ஸ் சொல்லுறேன்” என்று போனை வைக்கவும் ஆதி வரவும் சரியாக இருந்தது.

“ஹாய் ஆதி!”
“ஹாய் விது” என்று அவனை அணைத்து அமர, வித்யுத்கான உணவு வந்தது.

“மச்சி சாப்பிடு அப்பறம் பேசலாம்” என்று ஆதி கூற,
“இல்லை டா முதல் பேசலாம்” என்றதும் தோளைக்குலுக்கி அவன் என்ன பேசப்போகிறான் என்று பார்த்தான்.

“நிரு ட்ரிப் ஒண்ணு பிளான் பண்ணியிருக்கான்”
“ஓ! எப்போ அண்ட் எங்க?”
“நெக்ஸ்ட் வீக் டா”
“ஷூட்டிங் இருக்கானு தெரியல டா நான் செக் பண்ணனும். எங்க போறோம்?”
“சயின்டிஸ்ட் துரியோதனனோட மாயோன் பொழில்”

அவ்வளவு தான் அதுவரை யோசனையாக இருந்த ஆதி, “வாவ் மச்சி செம பிளான் டா. எனக்கும் படத்துக்கு நிறையா கன்டென்ட் கிடைக்கும். புதுசா எழுதி டைரக்ட் பண்ணா படம் பிச்சுக்கிட்டு போகும். நீ அதுல ஒரு ரோலில் நடிக்கணும்.

எங்கேயும் போயிறாதே நான் போய் மாம் கிட்ட சொல்லிட்டு அப்படியே ஷூட்டிங் போகலாம். அங்க போய் மத்ததை பேசலாம்.

மச்சி சாப்பிட்டு இரு. மாம்கிட்ட பேசிட்டு வறேன்” என்று வேற எதையும் கேட்காமல் சென்று விட்டான்.

இது தான் ஆதித்யா பிடிக்காத விசயத்தை அவனிடம் வற்புறுத்தி செய்ய வைக்கமுடியாது. அதே போல் சுவாரசியமான இடங்களை எஸ்பிலோர் செய்வது அவனுக்கு பிடித்தமான செயல். என்ன எது என்று முழுதாக கேட்காமல் அதற்கான வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவான்.

அவனை பற்றி நன்கு அறிந்ததால் என்னவோ பெரிதாக யோசிக்காமல் அவனையும் தனது ட்ரிப்பில் இணைத்திருந்தான் நிரூபன்.
நால்வரும் பள்ளிக்காலம் முதல் நண்பர்கள். சர்வேஷ்வரன் மட்டும் இவர்களை விட செல்வச்செழுப்பில் குறைந்திருந்தான். எல்லாம் ஏழு வருடத்திற்கு முன்பு வரை மட்டுமே.

தற்போது வெளியே சொல்லும் அளவிற்கு தனக்கென ஒரு அடையாளத்தை சுயமாக உருவாக்கியிருந்தான். அதனாலோ என்னவோ மற்றவர்களை காட்டிலும் சற்று அழுத்தம் அதிகமாக அவனிடம் தென்படுகிறது.

மேலே சென்ற ஆதித்யா சிரித்த முகத்துடன் தம்ப்சப் காட்ட, அதுவே கூறியது அவன் சென்ற விசயம் அதிகம் சிரமப்படாமல் ஓகே ஆகிவிட்டது என்று.

“ஆதி எனக்கு நைட் ஒரு மீட்டிங் இருக்கு மத்த டீடெயில்ஸ் எல்லாம் நிரு சொல்லுவான். நான் கிளம்பிறேன், இவ்வளவு ஈஸியா முடியும்னு தெரிஞ்சுருந்தா கால் மட்டும் பண்ணியிருப்பேன்”

“நீ மாயோன் பொழில்ன்னு பேரை மட்டும் சொல்லியிருந்தா போதும் என்ன எதுன்னு கேட்காமல் வந்திருப்பேன். மூணு வருசமா விசா அப்ளை பண்ணேன்.

எனக்கு கிடைக்கவே இல்லை, இத்தனைக்கும் எல்லா ரெகமெண்டஷனும் கொடுத்தும் கிடைக்கல நிருக்கு எப்படி கிடைச்சது. எனி வே எப்படி கிடைச்சா என்ன? இந்த ட்ரிப் மூலம் எனக்கு கன்டென்ட் கிடைச்சா போதும்” என்றான் உற்சாகமாக.

“சரி டா! நானும் கிளம்புறேன்” என்று கிளம்பியவன் நேராக வந்தது என்னவோ நிரூபனிடம் தான். என்னதான் எதுவும் கேட்காமல் மற்ற இருவரிடம் பேசினாலும் தனிப்பட்ட முறையில் நிரூபனிடம் கேட்கவேண்டிய சில கேள்விகள் இருக்க அதை தெளிவுப் படுத்திக்கொள்ள நினைத்தான்.

                    *********

அதேவேளையில் மாயோன் பொழில்,

விஜயும் செழியனும் தங்களுடைய டாஸ்க்களை முடித்து மருத்துவ பரிசோதனைகளை செய்துவிட்டு கைதிகளுக்காக போடப்பட்டிருந்த ஓய்வு நாற்காலியில் அமர, புதிதாக வந்தவனை பற்றி அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

அவன் யார் எந்த பிரிவில் இருக்கின்றான் என்று எதுவும் தெரியாமல் போக அமைதியாக மற்றவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தனர்.

சற்று தெம்பு கிடைத்ததும் வழக்கம் போல தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான் விஜய்.

“மச்சி முதல் போட்டி நடக்கும் முன்னாடி இளவரசி இங்கே வருவங்களாம்”
“டேய் நீ ஒரு கைதி அதை மறந்திறாதே!”

“அது இருக்கட்டும் கழுதை!”
“டேய் நீ சாகப்போறது இல்லாமல் என்னையும் ஏன் டா மாட்டிவிட பார்க்கிற?”
“எல்லாம் ஒரு ஜாலிக்கு தான்!”
“எது செத்து போறது உனக்கு ஜாலியா. இரு டி உனக்கு நெக்ஸ்ட் டைம் டபுள் டாஸ்க் தர சொல்லி ரெகமெண்ட் பண்ணுறேன்”

“நீயெல்லாம் ஒரு உயிர் நண்பனா மச்சி?”
“அதை தான் டா நானும் கேட்கிறேன்! நீயெல்லாம் ஒரு உயிர் நண்பனா? நீ என் உயிரை எடுக்கும் நண்பன்.”

“எனக்கு புகழ்ச்சி புடிக்காது மச்சி”
“வேணாம் டா எனக்கு நல்லா வாயில பச்சை பச்சையா வருது. இதுக்கு மேல டாஸ்க் செய்ய உடம்பில் தெம்பில்ல என்னை விட்டுரு”
“நீ வேணா பார்த்துட்டே இரு, இந்த டாஸ்கில் ஜெயிச்சு நான் வெளியே போறதுக்குள்ள அந்த இளவரசியை உன்னை பழி கொடுத்தாச்சு கரெக்ட் பண்ணுறேன் டா இல்லை இங்கயே உன்னை விட்டுட்டு போயிடுறேன்.”

“உன் சபதம் கூட எப்படி டா என் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத மாதிரியே வருது”
“அதெல்லாம் நீ ஏன் நோட் பண்ணுற? அதெல்லாம் நீ நோட் பண்ண கூடாது தப்பு… தப்பு… தப்பு!”

“சரி ஓகே ஈவினிங் வார்த்தை அளவு முடிய போது! இன்னைக்கு டாஸ்க் செய்யும் போது உன் மனசு அண்ட் உடம்பு என்ன மாதிரி பீல் ஆச்சு”
“செய்யும் போது மார்னிங் செய்த டாஸ்க் விட கொஞ்சமே கொஞ்சம் ஈஸியா இருந்த போல இருந்துச்சு. ஆனால் செய்ததுக்கு அப்பறம் அதுவே பரவாயில்லைன்னு பீல் பண்ற அளவுக்கு உள்ள இருக்க பார்ட்ஸ் எல்லாத்துலயும் உண்டியல் சத்தம் கேட்குது.”

“இன்னும் கொஞ்ச நாள் தான் எல்லாம் சரியாகிரும். டின்னர் வரை ரெஸ்ட் எடு”
“ஓகே செழியா நான் ரூமுக்கு போறேன். நீயும் கொஞ்ச நேரத்தில் ரெஸ்ட் எடு அப்போ தான் நைட் சைக்கோலாஜி டாஸ்க்கில் பார்ட்டிசிபேட் பண்ண முடியும். இல்லை எக்ஸ்ட்ரா டாஸ்க் வரும்” என்று செழியன் கூறும் அறிவுரையை அவனுக்கே கூறி ஓய்வெடுக்க அறைக்கு சென்றான் விஜய்.

தொடரும்…….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  1 Comment

  1. Janu Croos

   இந்த நிரூ ஏன் மாயோன் பொழில் போயே ஆகனும்னு கங்கணம் கட்டிட்டு திரியுறான்….உண்மையாவே நல்ல எண்ணமா இல்ல ஏதாவது எக்குத்தப்பா பண்ண போறானா?
   இந்த விஜய் எவ்வளவு பட்டும் திருந்தாம இன்னும் இளவரசிய கரெக்ட் பண்றேன்னே சுத்துறானே!!!