197 views

அத்தியாயம் – 3

மாயோன் பொழில் இயற்கை வளங்களை கண்டு மெய்சிலிர்த்து வாயிலை விட்டு ஓரடி கூட நகராது அந்நகரத்தை ரசித்துக் கொண்டிருந்தவனின் முன் ஆளுமையின் மறுபதிப்பாக வந்து நின்றான் துரியோதனன்.

அவனின் தோற்றத்தை கண்ட புதியவன் தான் ஒர் ஆண்மகன் என்பதை மறந்து அவனை கண் எடுக்காமல் பார்த்தான். அவனை துச்சமாக பார்த்தவன், “மாயோன் பொழில் உங்களை அன்புடன் வரவேற்கிறது. நான் துரியோதனன் மாயோன் பொழிலின் உரிமையாளர்” என்று அழுத்தமாக கூறியவனை விட்டு பார்வையை விலக்காது அவனையே பார்த்திருந்தான் வந்தவன்.

அவனை ஆழ்ந்து பார்த்த துரியோதனன், “இங்க நீங்க இருக்கிற வரை எல்லாரையும் போல தான் நடந்துக்கணும். இங்கே எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ் தான். உங்களுக்கு நான் சொன்னது புரியுது தானே” என்று புரியுதில் ஒரு அழுத்தத்தை கொடுத்தான்.

அவனையே பார்த்திருந்தவனுக்கு என்ன விளங்கியதோ தலையை அசைத்து அவன் சொல்லுக்கு மகுடிக்கு ஆடும் பாம்பு போல செவி சாய்க்க ஆரம்பித்தான்.

“நான் சித்தார்த். எவ்வளவு நாள் இருக்க போறேன்னு தெரியல ஆனால் இங்க நடக்க போற போட்டியை பக்கத்தில் இருந்து பார்க்க தான் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கேன்.

எல்லாரையும் போலவே நீங்க என்னை ட்ரீட் பண்ணலாம் ஆனால் அடிக்கடி எனக்கு இப்படி ஞாபகப்படுத்த வேண்டாம். என்னோட ரூம் எங்க இருக்கு” என்று ஆர்வமாய் கேட்டான்.

முகத்தில் இதுவரை எதையும் காட்டிக்காத துரியோதனன், அவனை விருந்தாளியாக உபசரிக்காமல் கைதிகளோடு கைதியாக தங்க வைக்க ஏற்பாடு செய்திருந்தான். வந்தவனும் எந்தவித மறுப்புமின்றி அதை ஏற்றுக்கொள்ள உள்ளே வியந்தாலும் வெளியே எதையும் காமிக்காமல் அமைதியாக சித்தார்த்தை அழைத்துக்கொண்டு பிரிவு ஐந்திற்குள் நுழைந்தான்.

அப்பிரிவின் தலைவருக்கு ஏற்கனவே கட்டளை இட்டிருக்க, சித்தார்த்திற்கு தேவையான அனைத்தையும் ரெடியாக வைத்திருந்தார். துரியோதனனிடன் சிறு தலையசைப்பில் உள்ளே செல்பவனிடன் மாயோன் பொழில் வழிமுறை பட்டியலை கொடுத்தார் பிரிவின் தலைவர்.

இதுவரை இப்படி ஒரு சூழ்நிலையை கண்டிராதவனுக்கு புதுமையாக தெரிய ஒவ்வொன்றையும் அதிசயமாக பார்த்தவாறு அவனுக்கு அளிக்கப்பட்ட அறைக்கு சென்றான்.

தனியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சென்றவனுக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் ஏற்கனவே இன்னொருவனும் அவனுக்கு அளித்த அறையில் தங்கியிருந்தான்.

ஆர்வமாக உள்ளே வந்தவனை குழப்பமாக பார்த்திருந்தான் அங்கே இருந்தவன்.
“ஹாய் நான் சித்தார்த்” என்று கூறியவனை இருந்துட்டு போ என்பது போல பார்த்து மதியத்திற்கான டாஸ்கை செய்ய கிளம்பினான் விஷ்ணு.

“நீங்க ஊமையா? சாரி!”
“யாரு ஊமை?”

“அப்போ ஊமை இல்லையா? நான் கூட…..” என்று ஆரம்பித்தவனை கை நீட்டி தடுத்தவன், “இப்பவே பேசி முடிச்சிறாதே. அப்பறம் டாஸ்க் செய்யணும். இன்ஸ்ட்ரக்ஷன் சீட்டில் இருக்கும் ரூல்ஸ் எல்லாம் படி. அப்போ தான் உனக்கு இங்க இருக்க சிச்சுவேஷன் புரியும்” என்றவன் அங்கே வைக்கப்பட்டிருந்த மானிட்டருக்கு முன் சென்று நின்றான்.

உடனே பதிவுசெய்யப்பட்ட குரலில், “வணக்கம் MP5AJ, உங்களுக்கான இன்றைய டாஸ்க் இன்னும் சில நிமிடங்களில் நடைபெறவுள்ளது.  அறை என் MP521யில் காத்திருக்கவும்.” என்று அந்த பதிவு நிறைவடைந்து அவனது அறைக்கதவு தன்னெச்சியாக திறக்க அதை ஆச்சர்யமாக பார்த்தான் சித்தார்த்.

அவன் சென்ற சிறிது நேரத்தில் அந்த கதவு மீண்டும் பூட்டப்பட்டது. கப்பலில் பயணித்து வந்த அலுப்பு அவனை வாட்ட, குளியல் அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவனுக்காக அவனுடைய மாயோன் பொழில் உடைகள் வைக்கப்பட்டிருந்தது.

பூட்டப்பட்ட அறைக்குள் எப்படி இதெல்லாம் வந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்தது பதிவு செய்யப்பட்ட குரல்.

“வணக்கம் சித்தார்த், இன்று முதல் தங்களது மாயோன் பொழில் குறிப்பு MP5GN. மாலை நான்கு மணிக்குள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட விதிமுறைகளை படித்து தெரிந்துக்கொள்ளவும். மாலை முதல் உங்களுக்கான டாஸ்க் மானிட்டரில் கூறப்படும். அறையை விட்டு வெளியேறும் முன் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆடையை அணிந்துக்கொள்ளவும். நன்றி” என்று நிறைவுப்பெற்றது.

‘ஜட்ஜ் அங்கிள் சொன்னப்பக் கூட நம்பள, இவங்க சிஸ்டம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தான் போல. சரி கொஞ்சம் நாள் என்ஜோய் பண்ணுவோம். நம்ப இங்க வந்ததுக்கான ரீசன் தெரிஞ்சும் எப்படி இந்த துரியோதனன் நம்பள உள்ள விட்டான். ஒரு வேளை வைச்சு செய்வானோ? இப்போவே யோசிச்சு பயப்படறதுக்கு அதை அப்போ பார்த்துக்கலாம். கொஞ்ச நேரம் தூங்கி எழுந்துக்கலாம்.

இந்த ரூல்ஸ் பேப்பரை படிச்சு எல்லாமே மனப்பாடம் ஆகிருச்சு. சோ நம்மளும் கொஞ்சம் ரூல்ஸ் எல்லாத்தையும் ஃபாலோ பண்ணுவோம்’ என்று அலுப்பை துரத்த நித்ராதேவியை துணைக்கு அழைத்தான் சித்தார்த்.

அதே சமயம் பலத்த பாதுகாப்பு மத்தியில் இருந்த மூன்று பிரிவில் டாஸ்க் என்று அனைவரையும் ஒரே அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மிகவும் ஆபத்தான இருநூற்றி எழுபது நபர்களை தெரிவுச் செய்யப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பில் வைத்திருந்தான் துரியோதனன்.

ஐந்நூறு நபர்கள் ஒரே நேரத்தில் கூடும் விதம் அமைக்கப்பட்ட திடல் போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருந்தது அந்த மெய்நிகர் அறை.

அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட குறிப்பு எண்ணின் படி அவர்களை அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தனர் அங்கிருந்த காப்பாளர்கள்.
சரியாக அவர்களை நிற்க வைக்கவே அரைமணி நேரம் முடிந்திருக்க அங்கிருந்த பெரிய ஸ்கிரீனில் துரியோதனன் காட்சியளித்தான்.

“இந்த போட்டியில் வெற்றிபெறும் நபர்களை மட்டுமே விடுதலை போட்டிக்கு தேர்வு செய்யப்படும். ஏனையோர் நம் நாட்டிற்கு அனுப்பட்டு அவரவர் தண்டனை அளிக்கப்படும். வாய்ப்பு ஒருமுறை மட்டுமே அளிக்கப்படும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுங்கள்.

விதிமுறைகளை நினைவில் வைத்து தத்தம் டாஸ்க்குகளை நிறைவேற்றுங்கள். தங்கள் தனித்திறமையால் மட்டுமே வெற்றி வாய்ப்பை நீங்கள் அடையமுடியும். அனைவரும் சிறப்பாக விளையாட வாழ்த்துகள்” என்று அவன் முடித்ததும்.

அந்த பெரிய மானிட்டரில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட எண்ணுக்கு நேராக அவர்களுக்கான சிஸ்டம் எண் அறிவிக்கப்பட்டிருந்தது. சற்றும் தாமதிக்காமல் அவர்கள் முன் மெய்நிகர் கணினி தோன்றியது.

நாற்காலியின் கைப்பிடியில் ஊடலை மாட்டியிருக்க, அதை எடுத்து காதில் அணிந்து அனைவரும் டாஸ்க் ஆரம்பிக்க காத்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முடிவில் டாஸ்க் முடிந்து வெளியே வந்தது என்னவோ இருநூற்றி மூன்று நபர்களே.

மற்றவர்கள் அங்கேயே நிற்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தான் முன்பே தெரியும் இது ஒரு நரகக்குழி வாழ்வா சாவா என்ற நிலையில் இன்று சாவை தேர்ந்தெடுத்து எமனுக்காக காத்திருக்கின்றனர் என்று.

அங்கே வைக்கப்பட்டிருந்த கணினி மீண்டும் உயிர்பெற்று அவர்களுக்கான அடுத்த டாஸ்க் வர அனைவரும் வேகமாக அதை பயன்படுத்திக்க வேகமாக அதை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது  அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அந்த மானிட்டரில் வந்த காணொளியை பார்த்தவர்களுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை தாங்கள் என்ன செய்கிறோம் எங்கே இருக்கின்றோம் என்ற நினைவு கூட இல்லாத நிலைக்கு அவர்களது மூளை அவர்களை எடுத்து சென்றது.

ஏற்கனவே அவர்களுக்காக ஆயத்தம் செய்திருந்தா வாகனத்தில் யாரும் அறியாத வண்ணம் பாதுகாப்பாக அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினான் துரியோதனன். கடைசியாக நடந்த பதிவுகளை சேகரித்து ஹெலிகாப்டரில் பறந்தான்.

அவன் எங்கே செல்கிறான் இங்கு என்ன நடக்கிறது, என்ன என்ன போட்டி எப்போ எப்போ நடக்கவேண்டும் யார் யார் உயிருடன் இருக்க வேண்டும் என்ற அனைத்தையும் முடிவெடுக்க உரிமையுள்ளவன் தற்போது மாயோன் பொழிலில் இல்லை என்பது கூட அங்கிருப்பவர்களுக்கு தெரியாதவாறு, அவனது இடத்தை இன்னோரு மர்ம மனிதன் நிறைவு செய்திருந்தான் யாரும் அறியாவண்ணம்.

மாலை நேரம் ஐந்தை கடந்திருக்க, ஈவினிங் டாஸ்க் என்று அழைக்கப்படும் மாலை நேர டாஸ்க்கிற்கு மூன்றாம் பிரிவில் இருந்த அனைவரும் திடலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

முகமூடி அணிந்திருத்தவன் மெய்நிகர் ஸ்கிரீன் மூலம் அவர்களோடு பேசினான்.
“அனைவருக்கும் மாலை வணக்கம். இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவரே மாயோன் பொழில் விடுதலை போட்டிக்கு தகுதி பெறுவார்.

வாய்ப்பு ஒருமுறை தான் கிடைக்கும் வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளவும். பங்குபெறுவர்கள் அனைவருக்கும் துரியோதனனின் வாழ்த்துகள்” என்று கூறி திரையில் இருந்து மறைய அவர்களுக்கான பிஸிக்கல் டாஸ்க் அங்கு வைக்க பட்டிருந்தது.

மூன்றாவது பிரிவில் இருந்த விஜயும் செழியனும் அர்த்தம் பொதிந்த பார்வையை பார்த்து உள்ளே சென்றனர். காரணம் காலையில் விஜய் செய்த டாஸ்க் செழியனுக்கும், செழியன் செய்த டாஸ்க் விஜய்க்கும் வந்திருந்தது.
கண்களால் உன்னால் முடியும் என்று கண்ணசைத்து டாஸ்கை செய்ய ஆரம்பித்தனர்.

                       *******

“நிரு என்ன டா விளையாடுறியா?”
“இல்லை வித்யுத் சீரியசாவே நம்ப இந்த வொகேஷன் மாயோன் பொழிலுக்கு தான் போக போகிறோம்”

“நான் வரல டா நீங்க நாலு மூனு பேர் மட்டும் போங்க”
“அதெல்லாம் இல்லை எல்லாரும் தான் போக போறோம். விசா கூட அப்ளை பண்ணிட்டேன். “
“கூகுளையிலேயே அந்த இடத்தை கண்டு பிடிக்க முடியல, அந்த இடத்துக்கு போய் தான் ஆகணுமா?

“கண்டிப்பா போகணும் டா. நீ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது அவனுங்க ரெண்டு பேரையும் சம்மதிக்க வைச்சு கூட்டிட்டு வர. இல்லை உனக்கு மட்டும் விசா போட்டு தனியாக போய் சாவுன்னு விட்ருவேன்”
“டேய் ஏன் டா என்ன கோர்த்து விடுற. எங்குட்டு போனாலும் சாவுன்னு முடிவாகிருச்சு. தனியா எதுக்கு போய் செத்துக்கிட்டு வாங்க ஒன்னா போய் சாகலாம்.”

“விது நம்ப ஜஸ்ட் வொகேஷன் தான் போறோம். நீ என்னமோ கிரைம் பண்ணிட்டு போகுற மாதிரி இப்படி ரியாக்ட் பண்ணுற?”
“நிரு அவ்வளவு ஈஸி இல்லை. அண்ட் அந்த பிளேஸ் ரொம்ப டேஞ்சர். அங்க என்ன நடக்குதுன்னு யாருக்கும் தெரியாது. அங்க நமக்கு ஏதாவது ஆனால் அதுக்கு முழு பொறுப்பும் நம்ப மட்டும் தான் டா”

“இதெல்லாம் எனக்கு புரியாமல் இல்லை. நான் பார்த்துகிறேன். என்னை நம்பி வா. முதல அவனுங்களை கூட்டிட்டு வர வேண்டியது உன் பொறுப்பு” என்று கூறி நிற்காமல் அவ்விடத்தை விட்டு அகன்றான் நிரூபன் என்கிற நிரு.

‘சரியான ஆளு டா நீ! எப்படி அந்த எருமைங்கக்கிட்ட என்னை நேக்கா கோர்த்து விட்டு எஸ்கேப் ஆகிட்ட’ என்று நினைத்தவன் சென்றது என்னவோ சர்வேஷின் அலுவலகத்தில் தான்.
எப்படியும் தான் கூறப்போவதற்கு  அவன் ஒற்றுக்கொள்ள மாட்டான் என்பதை அறிந்தும் அவனிடம் பேச சென்றான் வித்யுத்.

அவன் காண சென்ற சர்வேஷோ  காலையில் இருந்து மூன்று மீட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த மீட்டிங்கிற்கான ப்ரெசென்டேசனை கண்ணால் பார்த்துக்கொண்டு குழம்பியை அருந்திக் கொண்டிருந்தான்.

தொடரும்…….. 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  2 Comments

  1. Janu Croos

   ஏன்பா சித்தார்த்து..நீ ஏன்பா வாண்டட்டா வந்து மாட்டிக்குற…அவன் அவன் இங்க வந்து என்ன அவஸ்த்தை படுறானுங்க…நீ என்னடானா மாமியார் வீட்டுக்கு மறுவிருந்து வந்திருக்க மாதிரி என்ஞாய் பண்ணிட்டு இருக்க…லூச்சாப்பா நீ….
   இது போதாதுனு இன்னும் நாலஞ்சு பீஸு…நேக்கா வந்து சிக்க போகுதுங்த போலயே…இன்னும் என்னென்ன நடக்த போகுதோ….