185 views

11.2

பார்ட்டி டிரஸ் கோட் பிங்க் என்பதால், வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் எந்த வேலைப்பாடும் இல்லாமல் முட்டி வரை இருக்கும் கவுனை உடுத்தி கண்ணாடியில் பார்த்தாள் ஆதிரை. அந்த உடை அத்தனை பாந்தமாக அவளை தழுவியிருந்தது.

‘ஆள் பாதி! ஆடை பாதி!ன்னு சொல்லுவாங்களே ஆளை கொஞ்சம் மெருகேத்துனா சரியா இருக்கும்’ என்று நினைத்தவள் வேகமாக என்றோ வாங்கிவைத்த அழகுசாதனை பொருட்களை தேடி எடுத்தாள்.
கண்களுக்கு மையிட்டு மிதமாக ஒப்பனை செய்து வெளியே வர அவளை அழைத்துச் செல்ல அங்கு சர்வேஷ் காத்திருந்தான்.

“சர்வா! வந்து ரொம்ப நேரம் ஆகுதா? அம்மா சாப்பிட ஏதாவது தந்தங்களா?” என்று அடிக்கியவளை,
“இப்போ தான் வந்தேன். அம்மா கேட்டாங்க நான் தான் பார்ட்டிக்கு போறதால எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டேன்.”

“ஓ! சரி டா. நான் போய் அம்மாகிட்ட சொல்லிட்டு வறேன்” என்று அவள் உள்ளே சென்றாள். சொன்னது போல அவளன்னையிடம் விடைபெற்று வெளியே வர இருவரும் பார்ட்டி நடக்கவிருக்கும் ஆதித்யனின் வீட்டிற்கு சென்றனர்.

அவள் வருகைக்காக அனைவரும் காத்திருக்க, அதிகம் சோதிக்காமல் சர்வேஷுடன் வந்திறங்கினாள். வந்தவளை கண்ட ரியா, “ஹே டார்லி! மிஸ்ட் யூ!” என்று அணைத்து முத்தமிட்டாள்.
அவள் தோளில் வாகாக சாய்ந்தவள், “லட்டு இந்த விதுக்கு அப்பாகிட்ட சொல்லி சோறு போடவேண்டாம்னு சொல்லு!” என்றால் முகத்தை தூக்கி வைத்து.

அவள் எதை நினைத்து சொல்கிறாள் என்றுணர்ந்த வித்யுத், “சரியான இம்சை டி நீ! எவனாச்சும் காய்ச்சலுக்கு ஹாஸ்பிடல் வந்துட்டு ஐஸ்கிரீம் கேட்பாங்களா? அதுவும் ஒரு டாக்டர்கிட்ட?”
என்னவென்று தெரியவில்லை என்றாலும் அவளது சிறுபிள்ளைத் தனத்தை அறிந்தவர்கள் சுவாரசியமாக அவர்களை பார்த்தார்கள்.

“ம்ச் ஐஸ்கிரீம் கேட்டா ஒன்னு வாங்கி தறேன்னு சொல்லணும் இல்லை தரமாட்டேன்னு சொல்லணும் நீ என்ன பண்ண?” என்று கண்ணை சுருக்கி முறைத்தாள்.
“என்ன பண்ணேன்?”
“எது? ரெண்டு ஊசி போட்டியே டா! இப்போ ஒன்னும் தெரியாத போல முழிக்கிற?” என்று அவள் பேசிக்கொண்டிருக்க மற்றவர்களால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் நின்றிருந்தனர்.

“உனக்கெல்லாம் ரெண்டு ஊசி இல்லை நாலு ஊசி போட்டிருக்கனும் இம்சை. ஆளை பாரு இவ ஒரு ஆளு இவள் சொன்னதும் எங்கப்பா சோறு போடாம இருக்க போறாராம்.” என்று அவள் தலையில் கொட்டினான்.
“விது!” என்று அழுத்தமாக வந்த வார்த்தையில் அனைவரும் திரும்பிப்பார்க்க மடைதிறந்த வெள்ளமாக அவனிடம் ஓடினாள் ஆதிரை.

ஜெனியை தவிர மற்றவர்களுக்கு அரசல்புரசலாக தெரிந்திருக்க செல்லும் ஆதிரையை யோசனையாக பார்த்தாள்.
“ஜெனி துரு உன்கிட்ட பேசணும்னு சொன்னான்.” என்று அவளை திசைதிருப்ப, ‘ம்ம்’ என்று சொன்னாளே தவிர எதுவும் சொல்லவில்லை அவள்.
மனதிற்குள் ஒரு பிரளயமே நடந்தது ஜெனிக்கு சிறுபிள்ளையாக நினைத்தவள் தடம்மாறி தடுமாறுவாளோ என்று நெஞ்சம் பதறியது.

“ஓய்! என்னை பார்க்காமல் ஒரு சரவுண்டு குறைஞ்சிருக்க?”
“ஹலோ ரொம்ப கற்பனை பண்ணாதே! நான் ஜீரோ சைஸ்க்கு ட்ரை பண்ணேன்.” என்றாள் மிதப்பாய்.
“உன்கிட்ட வந்து பேசுறேன். ஜெனிக்கூட இம்போர்ட்டண்ட் மேட்டர் பேசணும்!” என்று நகர்ந்தவனிடம்,
“நானும் உன்கிட்ட பேசணும் கொஞ்சம் இரு” என்று கையைப்  பிடித்தாள்.

இதை பார்த்த ஜெனிக்கு சொல்லாமலே எல்லாம் புரிந்துவிட சற்று தாமதிக்காமல் அவ்விடத்தை விட்டு செல்ல,
ஜெனியின் மனநிலை புரிந்த நிரூபன் அவள் பின்னே சென்றான்.
மற்றவர்கள் கண்டும் காணாமல் அங்கிருந்து நகர்ந்து விட இருவர் மட்டும் தனித்து விடப் பட்டிருந்தார்கள்.

“என்ன டி பேசணும்?”
“ம்ம் எனக்கு ஓகே!” என்று எங்கோ பார்த்து சொல்ல அவன் கண்கள் அவளை ரசிக்க ஆரம்பித்தது.
“என்கூட வா!” என்று அவளை வேகமாக பார்க்கிங்கிற்கு அழைத்து சென்றான்.
‘நம்ப சொன்னது இவன் காதுல விழுந்துச்சா இல்லையா?’ என்று யோசித்து கொண்டிருந்தவளை இழுத்து அணைத்தான்.

கொஞ்சமும் எதிர்பாராதவள் விலக முயல, அனைத்தும் அவனிடம் வீணாய் போனது. 
“டேய் விடுடா!” என்று அவள் கத்தியது எல்லாம் மறந்து போனது அவளுடலில் அவன் விரல் பதித்தத் தடத்தில்.

“கூசுது டா கையை எடு!” என்று மெதுவாக அவள் கூற இருக்கும் இடம் கருதி விலகினான்.
‘ஐயோ ஆதி! என்ன டி இது. கடவுளே இவன்கிட்ட எப்படி பேசப்போறேனோ?’ என்று நிமிர்ந்து பார்த்தாள்.

“இப்போ சொல்லு டி என்ன ஓகே?” என்று அவன் இதழை வருட,
“கல்யாணம் பண்ண ஓகே. உன்னை இப்போ ரொம்ப லவ் பண்றேன்” என்று அவன் கண்களை பார்த்து சொன்னாள்.

‘எதை நீ சொல்ல கூடாதுன்னு தள்ளி இருந்தேனோ இப்போ என்னாலயே அதை சொல்லிட்ட! உன்னை கொஞ்ச நாள் தள்ளி வைச்சா தான் என்னால் வேலையை செய்யவே முடியாது.’ என்று நினைத்தவன்.

“ஓய்! முதல் படிக்கணும் அப்பறம் உனக்கு பிடிச்சதை செய்யணும் அப்பறம் காதலிக்கனும் கடைசியா தான் கல்யாணம்.”
“டேய் நீ தான டா கேட்ட இப்போ இப்படி சொல்ற!”
“இப்போ காதல் கல்யாணம் எதை பத்தியும் பேச வேண்டாம் செல்லக்குட்டி. முதல் படி அப்பறம் பார்த்துக்கலாம்.”

“என் பீலிங் வைச்சு ஏன் டா இப்படி விளையாடுற. பொய் தான சொல்ற?”
“இப்போ உனக்கு என்ன டி வயசு இருபது தானே. இன்னும் உனக்கு மெச்சூரிட்டி தேவை அதுக்கு படிப்பு மட்டும் இல்லை வெளி அனுபவம் தேவை. அதையெல்லாம் வளர்த்துக்கோ”
“நான் பாட்டுக்கு சும்மா தானே இருந்தேன். என் மனசுல ஆசையை வளர்த்துட்டு இப்போ அதை கத்துக்கோ இதை கத்துக்கோன்னு சொல்ற?”

“என் வாழ்கையில் கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்தா அது உன்கூட தான் இப்போ போய் பார்ட்டியை என்ஜோய் பண்ணலாம்!” என்று அவன் கூறி செல்ல அவளுக்கு தான் சொல்லமுடியாத வலி இதயத்தில் கூடியது.
‘நானா இவன்கிட்ட கேட்டேன்!’ என்று சிலையாக சமைந்தாள்.

காத்திருப்பது சுகம் என்று நினைத்தவளுக்கு தெரியவில்லை அதில் இருக்கும் வலிகளை. காதலின் பரிணாமத்தை பற்றி அறியாமல் பருவத்தின் சீண்டலில் பலிக்கடா ஆகப்போவதை அறியாமல் மனதை தேற்றி மனம் கொய்தவனின் பின் சென்றாள் ஆதிரை.

பின் நடந்த சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவிற்கு வர தன் இயலாமையை காட்டமுடியாமல் நடந்ததை  நினைத்துக்கொண்டே எப்போதும் கண்ணயர்ந்தான் என்று தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான் துரியோதனன்.

                        *********

இளமஞ்சள் கதிர்களுடன் கார்முகிலுக்கு நடுவே கண்ணாமூச்சி விளையாடிய ஆதவன் மொத்தமாக தன்னை வெளிப்படுத்தாமல் ஆகாயத்தில் விளையாடி கொண்டிருந்தான். இது இயற்கையா செயற்கையா என்ற ஆராய்ச்சியில் இருந்த ஆதிரையை பின்னால் இருந்து அணைத்த துரியோதனன், “மேடம் அப்படி என்ன ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க கலங்காத்தாலயே?”
“இது என் ஆளோட கைவண்ணமா இல்லை நிஜமாவே இது சூரியன் தானானு ஒரு டவுட்!”

“இன்னும் உன் ஆளு அந்த அளவுக்கு வளரல டி. சரி நேத்து நைட் ஏன் டி அப்படி நடந்துக்கிட்ட?  யாரு வந்தாலும் நான் உன்னை விட்டு போகவே மாட்டேன். உனக்காக தான டி எல்லாத்தையும் விட்டுட்டு இங்க இருக்கேன். உன்னையும் தனியா விட முடியாமல் தானே முக்கால் வாசி நாள் இங்க வைச்சிருக்கேன்!”
“சாரி டா! கொஞ்சம் பயந்துட்டேன். அன்னைக்கு வாங்கின அடி அப்படி நான் என்ன செய்ய. போக போக சரி ஆகிரும். ஆமாம் அந்த வீடியோவை எடுத்துட்டு வா. பார்க்கணும்”

“இரு டி இன்னைக்கு ஒரு மாஸ் சீன் நடக்க போகுது சேர்த்து பார்த்துக்கெல்லாம். இப்போ போய் அந்த எல்லோ லிஸ்ட்டை வெரிஃபிகேஷன் பண்ணிட்டு, அப்ரூவலுக்கு அனுப்பிட்டு வரலாம்.”
“சரி டா. நீ இதை பண்ணு. நான் போய் விக்ரமை எழுப்பி ரெடியாகி வர சொல்லுறேன். ரெட் லிஸ்ட்கான வேலையை பார்க்கணும் அப்போ தான் அந்த லிஸ்ட்டை நாளைக்குள்ள அப்ரூவலுக்கு அனுப்ப முடியும்.”

“அதெல்லாம் சரி! நெக்ஸ்ட் மந்த் நம்ப ஹனிமூன் போகலாமா?”
அதில் அவனை ஆழ்ந்து பார்த்தவள், “ஏன் டா ஏதாவது பிரச்சனையா?” என்று சரியாக கணித்தாள்.
“இல்லை டி. இந்த எக்ஸ்ப்ரிமென்ட், ரத்தம், மனுசனோட மூளை, மனசுனு பார்த்து பார்த்து ரொம்ப போர் அடிச்சுருச்சு. அதனால் நம்ப கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள் ஹாப்பியா இருக்கலாம்.”

“எனக்கு ஓகே தான் டா! எப்போ இந்த ப்ராஜெக்ட் முடியும்னு இருக்கு. உன்னை எப்படி நான் நார்மல் லைப்புக்கு கொண்டு போக போறேனோ தெரியல!” என்று வருந்தினாள்.
“ஆல்ரெடி விக்ரம் கொடுத்த பில்ஸ் எடுத்துட்டு தான் இருக்கேன். இந்த ப்ராஜெக்ட் அப்பறம் நான் என் வேலையில் இருந்து வேற டிபார்ட்மென்ட்டுக்கு ஷிப்ட் ஆக கேட்டுருக்கேன். ப்ரெசிடெண்ட் அப்பொய்ன்மெண்ட் ஆர்டர் ஹான்டோவேர் பண்றதுக்கு நேரில் வர சொல்லிருக்கார்… ” என்று அதோடு நிறுத்தினான் மீதியை சொன்னால் எங்கு பயந்துவிடுவாளோ என்று.

“சூப்பர் டா. எனக்கு இப்போ தான் ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கு. நான் போய் விக்ரமை பார்க்கிறேன். நீ உன் வேலையை பாரு!” என்று அவனிடம் சென்றாள்.

தொடரும்……..

புரியாத புதிராக நடந்த நடக்கும் சம்பவங்களுடன் இனி உங்கள் மாயோன் பொழில்……..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment