Loading

அத்தியாயம் – 2

வெயில் கொளுத்தியது. அதை விட பெண்ணவளின் விழிநீர் அனலாக வெளி

வந்தது. மறுத்து பேச முடியாத தன்னிலையை எண்ணி மருகினாள். எனக்கென்று யாருமில்லையா.? தன்னிடம்

அன்பு காட்ட ஒரு ஜீவனும் இல்லையா.? என்று தான் பல வித எண்ணங்கள்.

அவளின் அழுகையை நிறுத்தவே அவள் வளர்க்கும் நாய் விடாமல் குறைத்து அதன் பாஷையில் அவளின் எண்ணத்தை தன்புறம்

திரும்ப வைத்தது. உடனே அழுகையை நிறுத்தி எழுந்து ஓடியவள் கட்டி வைத்திருந்த கயிறை அவிழ்த்து விட்டவள் “அச்சோ சாரிடா பட்டு.. உனக்கு உணவு வைக்கவும் மறந்து விட்டேன்.. பசியோடு இருக்கீயா.?

கொஞ்ச நேரம் பொறுத்துக்கடா தங்கம்..

வேலையை முடிச்சுட்டு உனக்கு சாப்பாடு

வெக்கறேன்.. இப்பவே உள்ள போனா பெரியம்மா திட்டுவாங்க” என்று அதனுடன் உரையாடியவள் வேகமாக துணிகளை

துவைக்க தொடங்கினாள்.

அந்த வீட்டில் இவளுக்கென்று இருக்கும் ஒரு ஜீவன். இவள் சோகமாக ‘தனக்கு யாருமில்லையா.?’ என்று நினைக்கும் போதெல்லாம் ‘உனக்கு நான் இருக்கிறேன்’

என்று அதன் பாஷையில் உணர்த்தும்

வாயில்லா ஜீவன்.

அவள் பெரியம்மா சரோஜா வெளியில் வந்து எட்டி பார்த்து விட்டு மீண்டும் உள்ளே சென்று கணவரிடம் “இன்னும் இதைய எத்தனை நாளைக்கு நம்ம வீட்டுல வெச்சுருக்க

முடியும்.? ஊருக்குள்ள என்ன பேச்சு பேசுவாங்க.? எவனாவது கிடைச்சா அவன்கிட்ட தள்ளி விட்டற வேண்டியது தான்.. அதற்கான வேலையை பாருங்க” என்றார் வெறுப்பாக.

“இப்பவே பேசிட்டு தான் இருக்காங்க.. முதல்ல நம்ம பொண்ணு மறுவீட்டுக்கு

வந்துட்டு போகட்டும்.. அப்பறம் மத்ததை

பேசிக்கலாம்.. இதுக்கு வேற தனியா செலவு செஞ்சு கல்யாணம் பண்ணி வெக்கணுமா.? வர்றவன் நகைநட்டு கேட்டா என்ன பண்றது.?” என்று பாஸ்கரும் அவரின் எண்ணத்தில் எழுந்ததையும் கேள்வியாக

கேட்டார்.

சற்று கடுகடுப்புடன் “அதெல்லாம் ஒன்னும் செய்ய முடியாதுனு ஆரம்பத்துலயே

சொல்லிரணும்.. இவ இருக்க லட்சணத்துக்கு ஏதோ வத்தல்தொத்தலா ஒரு பையன் கிடைச்சா போதும்.. தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வெய்யுங்க.. இதைய இங்கயே ஒரு

வேலைக்காரியா வெச்சுருக்கலாம்னு தான்

நினைச்சேன்.. ஆனா நேத்து வீட்டுக்கு வந்த

பக்கத்து வீட்டுக்காரி லீலாவோட சொத்துல

வாழ்ந்துட்டு அவளுக்கு கல்யாணம் பண்ணாம உன் பொண்ணுக்கு ஆடம்பரமா

கல்யாணம் பண்ணி வெச்சுருக்கீயானு முகத்துக்கு நேராவே கேட்டுட்டு போறா..

எனக்கு எவ்ளோ அவமானமா போய்ருச்சு தெரியுமா.? என் முன்னாடியே இப்படி

பேசறவ நமக்கு தெரியாம என்ன என்னவெல்லாம் பேசிட்டு இருப்பா.?” என்று

தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பாஸ்கரும் இதை ஆமோதித்து “சரி ஏதாவது பண்ண முடியுதானு பார்க்கறேன்.. இந்த ஊருக்காருகிட்ட மாப்பிள்ளை பார்க்க

சொன்னா அதுக்கும் ஏதாவது குறை பேசிட்டு திரிவாங்க.. வேற ஊருல ஒரு பையனை

பிடிச்சு அங்கயே கல்யாணத்தையும் முடிச்சு

அவளை விட்டுட்டு வந்தரலாம்.. 

நம்ம வேலையும் முடிஞ்சுச்சு.. போனது தான் போனாங்க இதைய கூடவே கூட்டிட்டு

போய்ருக்க வேண்டியது தானே.? நம்ம தலைல கட்டி விட்டுட்டு போய்

தொலைஞ்சுட்டாங்க” என்று வெறுப்பாக சுவற்றில் மாட்டப்பட்டிருந்த இவரின்

தமையனையும் அவரின் மனைவியையும்

வெறுப்போடு பார்த்தார்.

ஆம் லீலா இவரின் தம்பி மகள் தான். குடும்பமாக கோவிலுக்கு சென்று விட்டு

திரும்பிய சமயம் குடித்து விட்டு லாரி ஓட்டிய ஒருவன் இவர்கள் வந்த காரை

இடித்திட, கணவனும் மனைவியும் எப்படியோ தங்கள் மகளை மட்டும்

காப்பாற்றி விட்டு இருவரும் அவ்விடத்திலே உயிர் நீத்தனர்.

அப்போது பாஸ்கரும் வேறு ஊரில் மனைவி, மகளுடன் இருந்தார். இவருக்கும் ஒரு மகள் தான். தம்பியின் இறப்பை கேள்விப்பட்டு வந்தவர்கள் அவரின் சொத்துக்களின் மதிப்பை அறிந்து தன்வசப்படுத்தியும்

கொண்டார்.

இருந்த பணத்தை அனைத்தும் குடித்து குடித்தே அழித்திருந்தவருக்கு தம்பி சேர்த்து வைத்திருந்த சொத்தின் மதிப்புகளை அறிந்ததும் பேரதிர்ச்சி. லீலாவின் அன்னை

பிறப்பிலே வசதியான குடும்பத்து பெண். மகளுக்கு திருமணம் செய்து வைத்ததுமே அவளின் அன்னையும் தந்தையும் பேத்தியை கூட பார்க்காமல் ஒருவரின் பின் ஒருவராக

இறைவனடி அடைந்திருந்தனர்.

‘ஆத்தாடி இத்தனையும் இனி தனக்கா.? வேலைக்கே போகாமல் வீட்டில் இருந்து கூட வாழ்நாள் முழுவதும் சாப்பிடலாமே.?’ என்று

பேராசை எண்ணம் தான் எழுந்தது.

இதற்காகவே நல்லவர் போல் தம்பியின் மகளை தானே பார்த்து கொள்வதாக கூறி

தீட்டுக்கு வந்திருந்த அனைவரையும் நம்ப

வைத்தார். அவரின் மனைவி கடுகடுத்த போது ரகசியமாக இதை கூறிட, வாயை பிளந்த அவரும் ஓரத்தில் அழுதிருந்த

லீலாவை நன்றாக பார்த்து கொள்வது போல் நடிக்க தொடங்கினார்.

அவர்களின் நடிப்பை உண்மையென்று நம்பிய பத்து வயது பெண்ணிற்கு ஆறுதலாக மடி சாய பெரியன்னை கிடைத்து

விட்டார் என்ற நிம்மதி. உறவுகள் அனைத்தும் சென்று விட்ட பின்னர் தான்

அவர்களின் சுயரூபமே அந்த அவலை பெண்ணிற்கு விளங்கியது.

இரவில் தனியாக படுக்க பயந்து அவர்களிடம் சொன்னால் அதற்கும் அடி

விழும். அவரின் அடிக்கு பயந்து பயந்து அமைதியாக இருந்து கொள்வாள். நாளாக

நாளாக இது தான் தன் வாழ்வு என்று மனதை தேற்றி கொண்டு தனிமையில்

நிமிடங்களை செலவிட்டாள்.

அப்போதெல்லாம் மனதினுள் அவளின் அன்னையிடம் பேசி கொள்வதுண்டு.

இவளை பக்கத்து வீட்டு பெண்மணியிடம் கூட பேச விட மாட்டார் சரோஜா. அப்படி

பேசினால் வீட்டில் நடப்பதை கூறி விட்டால்.? அதனாலே அவளை வீட்டினுள் அடைத்து

வைக்க தொடங்கினார்.

பள்ளி செல்வாள். வீட்டிற்கு வருவாள். வந்ததும் வேலைகள் அனைத்தும் இவள் தான் செய்ய வேண்டும். மீண்டும் அறையினுள் அடைந்து விடுவாள். இது தான்

அவளின் தினசரி வழக்கம்.

நன்றாக படித்து வெளியுலகம் அறிந்தால் எங்கு தங்களை வெளியில் துரத்தில்

விடுவாளோ.? என்று பயந்து அவளின் படிப்பை பன்னிரெண்டாவது

வகுப்புடன் நிறுத்தினார். அதன் பின்பு இப்போது வரை சிறைவாசம் தான். ஆனால்

சரோஜாவின் மகளை பணத்தை தண்ணீராக

இறைத்து படிக்க வைத்தனர்.

இருவருக்கும் அனைத்திலும் பாராபட்சம் தான். இவர்கள் இருப்பது தன் தந்தையின்

பணத்தில் தான் என்று பேதை பெண்ணும் உணர்ந்தாலும் தனியாக எப்படி போராட முடியும்.? என்ற அச்சம். அதனாலே என்ன நடந்தாலும் அமைதியாக இருக்க பழகி

கொண்டாள்.

விரைவாக வேலையை முடித்து அவள் வளர்க்கும் வாயில்லா ஜீவனுக்கு

உணவிட்டவள் “இவங்க பண்றது எல்லாம் தப்புனு எனக்கும் புரியுது பட்டு.. ஆனா

என்னால என்ன பண்ண முடியும்.? ஒத்த ஆளா இருக்கேன்.. ஏதாவது பேச போய் வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டா.? அப்பறம் நான் எங்க போவேன்.? படிச்சுருந்தா கூட ஏதாவது வேலை தேடலாம்.. அதுக்கும்

வழியில்லையே.?  நான் படிக்க மாட்டேனு

சொன்னனா.? 

இவங்களே தான் நீ படிச்சு கிழிச்சது போதும்னு வீட்டோட இருக்க வெச்சுட்டாங்க.. இவங்க பணத்துலயா என்னைய படிக்க வெக்க சொன்னேன்.? என் அப்பா எனக்காக

சம்பாதிச்சு வெச்ச பணத்துல தான் படிக்க வெக்க சொல்றேன்.. அதுக்கும் முடியாதுனு சொல்றாங்க.? என்னைய இந்த சிறைல

இருந்து வெளில கூட்டிட்டு போறதுக்கு யாராவது வருவாங்களா.? அப்படி வந்தா

நான் உன்னையும் சேர்த்து தான் கூட்டிட்டு போவேன்.. நீயும் என் கூட வந்தரணும்..

பாரு எனக்கு இப்ப எல்லாம பேராசை வருது.. இது பேராசைடினு நீ சொல்ல மாட்டியா.?” என்று மன விருப்பத்தை வெளிப்படுத்தியவளுக்கு கண்ணீரும் வந்தது.

இப்போதெல்லாம் இவளின் ஆசை என்றால் இது மட்டும் தான். இந்த சிறைவாசத்தை

விடுத்து வெளியில் சென்று வெளியுலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவல். 

கோவிலுக்கு செல்கிறேன் என்றால் கூட

சரோஜா விட மாட்டார். ‘எவன் கூட ஊரு சுத்த போற.?’என்று வார்த்தையை கடித்து துப்பி

இவளின் நிம்மதியைத் தான் பறித்து

கொள்வார். அதற்காகவே எதுவும் கேட்பதில்லை. விட்டு விட்டாள். 

காலம் இப்படிதான் நடக்கும் என்று முதலிலே கணக்கு போட்டு வைத்திருந்தால் அதை எங்ஙனம் என்னால் மாற்ற இயலும்.?

நினைத்தது நடந்து விட்டது என்ற மகிழ்வில் மாயா வீட்டிற்கு வர, அவளை எதிர் கொள்ள திரணியின்றி பதட்டத்துடன் மீரா நிற்க, அவளை வித்தியாசமாக ஏறிட்ட மாயா வீட்டினுள் கண்களை துழவ விட்டாள்.

அதிலே ஏதோ புரிந்ததில் “தியா எங்க.?” என்று கேட்டவளின் வார்த்தையிலே அத்தனை கோவம். எச்சிலை விழுங்கி “அவளை.. அவளை..அவங்க வந்து..” என்று முழுவதும் கூற முடியாமல் திணறி போனாள்.

விசயம் என்னவென்று உணர்ந்ததில் இவளை திட்டுவதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து விறுவிறுவென

வெளியேறினாள்.

அடுத்து அவள் சென்று நின்ற இடம் வருணின் வீட்டில் தான். சினத்தில்

பெண்ணவளின் விழிகள் கோவைப்பழமென சிவந்து போயிருக்க,

யாரையும் மதிக்காமல் வீட்டினுள் நுழைந்தவள் தன் மகள் எங்குவென்று தேடினாள்.

மகளை காணாமல்

இவளின் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறிட, எள்ளல் நகையுடன் தன் முன்னே வந்த வருணின் தங்கையை ஓங்கி

அறைந்திருந்தாள் மாயா.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்