Loading

சில்லென்ற வாடைக்காற்று இதமாய் வீச, ஆதவன் மெல்ல மெல்ல பூமித்தாயை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த இளங்காலைப் பொழுது.

வீட்டின் பின்புறம் உள்ள தொழுவத்தில், மாட்டுச் சாணம் அள்ளும் கூடையை தலையில் சும்மாடு சுற்றி அதில் கூடையை வைத்து அதனை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அருகில் இருந்த சாணம் போடும் குழிக்குள் கொட்டச் சென்றுக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.

இதனை இதழ்களில் புன்னகை உறைய சற்று தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் மலர்விழி. மாட்டுச் சாணத்தைக் கொட்டியவன், அவள் புன்னகைப்பதைக் கண்டு முறைத்து, “காலைலயே என்னை சாணி வாற வச்சுட்டில்ல! உன் கூட நான் டூஎன சாணம் அப்பியிருந்த விரல்களில் காய் விட்டுக்கொண்டிருந்தான் ஹரிஹரன்.

சிரித்துக் கொண்டே அவன் அருகில் வந்து, நெட்டி எடுத்தவள்கரிச்சட்டி, இந்தக் கோலத்துல செம ஹேண்ட்சம்மா இருக்கத் தெரியுமா!” எனக் கண்ணடித்தாள் மலர்விழி.

எது, இந்தக் கோலத்துல!” என்றவாறே தன்னைக் காட்டிக் கேட்டான். உள்பனியனுடன், லுங்கியை மடித்துக் கட்டியவாறு கைகளில் சாணமும் தலையில் சும்மாடும் சுற்றப்பட்டு இருக்க, மீண்டும் அவனைத் தலைமுதல் கால்வரை ஒருதரம் பார்த்தவள், “எஸ்!” என்றாள் அவள்.

அவளை முறைத்தவன், “ஃபிளவர், இந்தக் கைலி இடுப்புலயே நிக்க மாட்டேங்கிது டி!” என அவன் அழுகாதக் குறையாய் உதட்டைப் பிதுக்க, “இவ்ளோ பெரிய ஆம்பளையா வளர்ந்திருக்க, ஒரு வேஷ்டி கட்டத் தெரியல. வெட்கமா இல்ல!” என அவள் திட்டினாள்.

இல்ல!” எனப் பட்டென பதில் வந்தது. தலையில் அடித்துக் கொண்டு, “ஒரு நிமிஷம் இரு!” என்றவள், சுற்றிமுற்றிப் பார்த்து அங்கு வேலை செய்யும் முத்துவைக் கண்டவள், “முத்தண்ணா! கொஞ்சம் இங்க வாங்களேன்என்றாள் மலர்விழி.

சொல்லு மா மலர்என்றவாறே அவர் அருகில் வர, “இவனுக்கு இந்த கைலிய கொஞ்சம் ஒழுங்கா எப்டி கட்றதுனு சொல்லிக் கொடுங்க ண்ணாஎன்க, அவரோசரி மாஎன்றவாறே அவனுக்கு லுங்கியைக் கட்ட சொல்லிக் கொடுக்க அதனைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான் ஹரிஹரன்.

அவனைக் கண்டு தலையில் அடித்தவாறே, வீட்டிற்குள் செல்ல அங்கு குணவதி, “ஏம்மா டவுன்ல வளர்ந்த புள்ளைய போய் சாணி அள்ளச் சொல்றியே! நல்லாவா இருக்கு, பாவம் புள்ள. ஏதோ ஊரு சுத்திப் பார்க்கலாம்னு வந்தப் புள்ளய போய் இப்படி படுத்தி எடுத்தா நாளைக்கு நம்ம வீட்டுப்பக்கம் இன்னொரு தடவை அந்தப் புள்ள வருமா?” என அங்கலாய்த்தார்.

அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள், “கரிச்சட்டி இதுக்கெல்லாம் அசர்ர ஆளே இல்ல! அவனுக்குப் பிடிச்சு தான் இந்த வேலைய பண்ணான் ம்மா. அவனுக்குப் பிடிக்காத எந்தவொரு விசயத்தையும் யாருக்காகவும் பண்ண மாட்டான் ம்மா, அழுத்தக்காரன். அதேநேரம், தனக்குப் பிடிச்சவங்களுக்காக எந்த எல்லைக்கும் போவான்எனத் தன் நண்பனின் புகழ்பாடினாள் மலர்விழி.

லுங்கியை இப்பொழுது ஒழுங்காகக் கட்டியவன், “இப்போ சரியா கட்டி இருக்கனா அண்ணா?” என்றான் முத்துவிடம்.

நீ என்கூட இல்லாத குறைய தீர்த்து வச்சவன் இவன் தான் ம்மா. எனக்கு ஒரு நல்ல நண்பன் அப்படிங்கிற விட எல்லாமுமா இருந்தான்என்றாள் உணர்ச்சி வசப்பட்டு.

அதுனால தான் இந்த ஊர் பக்கமே நீ எட்டிப் பார்க்காம இருந்தியா?” என்றார் குணவதி. “அதுக்கான காரணத்தை நான் சொல்லணும்னு அவசியமில்லனு நினைக்கிறேன்என்றவாறே தன் தாயிடமிருந்து விலகியவள், ஹரிஹரனிடம் சென்றாள்.

இருவரும் சேர்ந்தே மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்ய, அப்பொழுது தான் கறந்த பாலில் தயாரித்த டீயோடு குணவதி வர, பின்னர் மூவரும் பேசிக் கொண்டே டீ அருந்தினர்.

மலர்விழியின் அலைப்பேசி ஒலிக்க, அதனை எடுத்துப் பார்த்தவள்அவங்க வந்துட்டாங்க போல!” என்றவாறே, அழைப்பை ஏற்றாள்.

வந்துட்டீங்களா டி?” என்றாள் மலர்விழி. மறுமுனையில், “ஷப்பா, முடியல டா சாமி! ஏன்டி என்னை இதுங்க கூடக் கோர்த்து விட்டீங்க? ஒரே லவ்ஸ் தான் போஎன நொந்து நூடுல்ஸ் ஆகி கூறினாள் இந்திரா.

அடி ரொம்ப பலமோ!” என மலர்விழி நக்கலடிக்க, “உன்னை நேர்ல வந்து வச்சுக்கிறேன் டிஎன்றவள், “இன்னும் பதினைந்து நிமிஷத்துல ஸ்டேஷன் வந்துருவோம் டிஎன அவள் கேட்ட கேள்விக்கு இப்போதுதான் பதில் அளித்தாள்.

.கே, நீங்க வர்றதுக்குள்ள நாங்க அங்க இருப்போம், பார்த்து வாங்கஎன்றவாறே எழுந்தவள், “டே கரிச்சட்டி, கார் சாவிய எடுத்துட்டு கெளம்பு. அவங்க வர்றதுக்குள்ள நம்ம ஸ்டேஷன் போய்றலாம்என்றவள், தன் தாயிடம்ம்மா, நாங்க போய் அந்தப் பக்கிங்க மூணு பேரையும் கூட்டிட்டு வரோம்எனக் கிளம்பினாள்.

அடுத்த சில நொடிகளில் இருவரும் தயாராகி, திண்டுக்கல் ரயில் நிலையத்திற்குப் புறப்பட்டனர்.

தற்போது தான் ஐவருமே மருத்துவப்படிப்பு முடித்துள்ளதால், கிராமத்தில் சேவை செய்ய விரும்பி மலர்விழியின் ஊருக்குப் பக்கத்து ஊரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இன்னும் இருநாட்களில் தங்களது பணியைத் தொடர இருந்தனர் இந்த ஐந்து நட்சத்திர குழுவினர்.

முதலில் ஐவருக்குமே வேறுவேறு இடங்களில் பணி நியமனம் செய்யப்பட்டிருக்க, நண்பர்களுக்கோ பிரிய மனமில்லாதது ஒரு காரணம் என்றாலும் மற்ற நால்வரும் நகரத்து வாழ்க்கையை அனுபவித்தவர்கள் என்பதால் கிராமத்து வாழ்க்கையை நுகரவே இந்தப் பயணத்தைத் திட்டமிட்டனர்.

ஹரிஹரனின் தந்தை அரசியல் செல்வாக்கு உள்ள ஆள் என்பதால், அவரின் உதவியோடு ஐவரும் ஒரே இடத்தில் ஆறுமாதங்கள் பணிபுரிய ஒப்புதல் வாங்கினர்.

பொதுவாகவே மருத்துவப்படிப்பு முடிந்தவுடன், இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே அதற்கடுத்து மேற்படிப்பு படிக்க இயலும். அதனால் இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு கிராமங்களுக்குச் சேவை செய்ய விரும்பி, முதலில் மலர்விழியின் ஊரைத் தேர்வு செய்தனர்.

பணியும் நட்பும் ஒருசேரத் தொடரவே இந்தத் திட்டம். இதோ இன்று நண்பர்கள் குழுவின் மற்ற மூவரும் கரிசல்பட்டிக்கு வந்தாயிற்று. இந்த ஐவரின் வாழ்வையும் இந்த கரிசல்பட்டி மாற்றுமா? இதே நட்பு தொடருமா எனக் காத்திருந்துப் பார்ப்போம்.

காரின் கண்ணாடியைக் கீழிறக்கி, இயற்கை காற்றை சுவாசித்த இந்திரா, “செமயா இருக்கு மலர்என்றவாறே இயற்கையை தன் கண்களால் மேய்ந்துக் கொண்டிருந்தாள்.

இதமான காற்று உடலுக்குக் கதகதப்பைக் கொடுக்க, செந்திலோ சிலம்புவின் கைகளை எடுத்து பரபரவெனத் தேய்த்து தன் கன்னத்தில் ஒற்றிக் கொள்ள, முன்பக்கம் அமர்ந்திருந்த மலர்விழி கையில் சிக்கிய பொருளை எடுத்து அவன்மேல் வீசினாள்.

நீ கிராமத்துக்குச் சேவை செய்ய வந்த மாதிரி தெரியல, ஹனிமூன்க்கு வந்தமாதிரி இருக்குஎன முறைத்தாள். இதனை எல்லாம் காதில் வாங்காமல் அங்கொருத்தி இயற்கையை ரசித்துக் கொண்டிருக்க, “எங்க ஹனிமூன் இங்க தான்னு நான் பிக்ஸ் ஆகிட்டேன் மலர்என செந்தில் பட்டெனக் கூறினான்.

ஏன் டா உனக்கு இந்த வெ, மா, சூ, சொ லாம் கிடையவே கிடையாதா?” என்றாள் மலர்விழி. அவனின் பேச்சால் அவன் அருகில் அமர்ந்திருந்த சிலம்புச்செல்வியின் கன்னங்கள் சிவப்பேற, அவனோ அந்தக் கன்னச்சிவப்பை ரசித்தவாறே, “ச்சே, ச்சேகாத்துல மல்லிகை வாசனை வீச, சில்லுனு கிளைமேட்ல ஹனிமூன் கொண்டாடறது கூட செம ஃபீல் தான மலர்! அதான் எங்க ஹனிமூன்க்கு உங்க வீட்டுக்கே வந்தறோம்னு சொன்னேன்எனக் கூறினான் செந்தில்.

டே கரிச்சட்டி, வண்டிய நிறுத்து டா. இவன!” என அவள் தன்பக்கக் கதவைத் திறக்க, ஹரிஹரன் காரை நிறுத்தினான் இதழ்களில் புன்னகை உறைய.

கீழே இறங்கியவள் ரோட்டோரத்தில் கிடந்த கட்டை ஒன்றை எடுக்க, செந்திலோ அவளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க காரிலிருந்து இறங்கி ஓடத் துவங்கினான்.

எங்கப் போனாலும் உன்னை விடமாட்டேன் டாஎன்றவாறே அவனைத் துரத்த ஆரம்பித்தாள் மலர்விழி. மற்றவர்களோ இதனைக் கண்டு புன்னகைத்துக் கொண்டிருக்க, செந்திலை பிடிக்கத் துரத்திக் கொண்டிருந்தவள் எதிரே வந்த வண்டியைக் கவனிக்கத் தவறினாள்.

பக்கத்து ஊருக்கு வேலை விசயமாகச் சென்று கொண்டிருந்த பாரிவேந்தன் செந்தில் ஓடிவருவதைக் கண்டு, ‘ஏன், இந்தப் பையன் இப்படி தலதெறிக்க ஓடி வரான்என்ற சிந்தனையில் வண்டியின் வேகத்தைக் குறைத்தவன் அப்பொழுது தான் பார்த்தான் மலர்விழியை.

கையில் மரக்கட்டையுடன் காற்றில் பறந்த துப்பட்டாவை ஒரு கையில் இழுத்துப் பிடித்துக் கொண்டு, “டே, ஒழுங்கா நின்னுரு டாநீயே சிக்குனா ரெண்டு அடி தான், நானே பிடிச்சா நாலு அடி சேர்த்து கெடைக்கும்எனக் கத்திக் கொண்டே வந்தாள்.

இவன் ஏதும் மலரு கிட்ட வம்பு பண்ணானோ, அதான் புள்ள இவ்ளோ வேகமா துரத்துகிறாளா!’ என அவன் யோசிக்கும்போதே, மலர் அவன் அருகில் வந்திருந்தாள்.

அந்நேரம் பார்த்துக் காற்று சற்று வேகமெடுக்க, அவளின் துப்பட்டா அவள் முகத்தில் படர்ந்தது. அதனை விலக்கியவாறே ஓடியவள், பாரியின் வண்டியில் மோதினாள். செந்திலை தவறாக நினைத்தவன், அவனைப் பிடிக்கயெண்ணி வண்டியை நிறுத்திவிட்டு அவன் கீழிறங்கிய சமயம் தான் மலர்விழி வண்டியில் மோதிக் கீழே விழச் சென்றாள்.

அவள் கீழே விழாமல், தன் கரத்தால் தாங்கியிருந்தான் பாரிவேந்தன். வீசிய இளந்தென்றலின் உபயத்தால் அவள் முகத்தை மறைத்திருந்த துப்பட்டா விலக, அவளின் முகம் அவன் நெஞ்சுக் கூட்டின் அருகே இருந்தது.

 

தன் கரத்தில் இருந்தவளை இமைக்க மறந்து அவன் ரசிக்க, அவனின் அருகாமையால் அவளின் மூளை வேலைநிறுத்தம் செய்திருந்தது.

பலநாள் கனவு, தன் கைச்சேர்ந்திருக்க அத்தருணத்தை வீணாக்க விரும்பவில்லை பாரிவேந்தன். “புள்ள!” என்ற அவனின் அழைப்பில் தன்னிலைப் பெற்றவள், துள்ளிக் குதித்து விலகினாள்.

தன்னை அடிக்கத் துரத்தி வந்துக் கொண்டிருந்தவளைக் காணாமல் செந்தில் எதிர்திசையில் மீண்டும் வந்திருக்க, அவளின் நண்பர்கள் நால்வருமே பாரி, மலரின் நொடிநேரப் பொழுதில் கடத்தப்பட்ட காதலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தேங்க்ஸ்என்றவள் திரும்பிச் சென்று அமைதியாகக் காரில் ஏறிக் கொண்டாள். செந்திலும் அதே காரில் ஏறிக்கொள்ள, அப்பொழுது தான் மற்ற நண்பர்களைக் கவனித்தான் பாரிவேந்தன்.

மலரின் உணர்வைப் புரிந்துக்கொண்ட ஹரி, காரை எடுக்க அவனைக் கடந்துசென்ற கார் தன் கண்பார்வையிலிருந்து மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தான் பாரிவேந்தன்.

மலரின் வீட்டின் முன் கார் நிற்க, இயந்திரகதியாய் இறங்கியவள் உள்ளே செல்ல நான்கு அடி எடுத்து வைத்தவள், பின் தன் நண்பர்கள் முதல்முறையாய் தன் இல்லத்திற்கு வந்திருப்பதை உணர்ந்து தன்னை சமன்படுத்திக் கொண்டவள்,

உள்ள வாங்க!” எனப் போலிப் புன்னகையைப் பூசிக் கொண்டு வரவேற்றாள் மலர்விழி. கார் சத்தம் கேட்டு குணவதியும் வாசலுக்கு வந்திருக்க, நண்பர்கள் மூவரையும் வரவேற்றார்.

வீட்டினுள் ஐவரும் நுழைய, அங்கு நிலவிய அமைதியை கலைக்க எண்ணிய இந்திரா, “அம்மா நீங்க கோழிக் குழம்பு நல்லா வைப்பீங்கனு மலர் சொல்லி இருக்கிறா. எனக்காக ஒருதடவை செஞ்சு தர முடியுமா?” எனக் கேட்டு வைக்க, மற்ற நால்வரும் அவளை ஏகத்துக்கும் முறைத்து வைத்தனர்.

ஹேய், என்ன பா எல்லாரும் என்னை இப்படி பாக்குறீங்க? விட்டா நெற்றிக்கண்ணை திறந்து என்னை எரிச்சுருவீங்கப் போல!” என்றாள்.

இந்த குட்டி யானைய கூட்டிட்டு வர வேண்டாம்னு சொன்னேன், கேட்டீங்களா நீங்க. இதுக்கு தீனி போடவே நாம நாலு பேர் சம்பாதிக்கணும் போல, இதுல வீட்டுக்குள்ள வந்ததும் வராததுமா கோழிக்குழம்பு கேட்கறா! இரு, நான் உன்னை சூப் போடறேன்என ஹரிஹரன் இந்திராவைத் துரத்த, மற்றவர்களோ சிரித்துக் கொண்டே அவர்களின் சண்டையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர்.

என்னை குட்டி யானைனு சொன்னா உன்னை கடிச்சு வச்சுருவேன் டாஎன்றவாறே அவள் அவன் கைகளில் சிக்காமல் ஓட, “அப்படி தான் டி சொல்லுவேன் குட்டியானைஎன்றவன்,

குட்டி யானை, குட்டி யானை…” எனக் கூறிக் கொண்டே இருக்க, ஒருக் கட்டத்தில் நின்றவள் அழுவது போல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் இந்திரா.

நம்மள டாக்டர்ஸ்னு சொன்னா எவனும் நம்ப மாட்டானுங்க டா. வெளிய போயும் இப்படி அடிச்சுக்கிட்டா நம்மக்கிட்ட பேஷன்ட்ஸ் வந்த மாதிரி தான்என சிலம்பு நக்கலடித்தாள்.

நம்மளக் கூட நம்பிருவாங்க, ஆனா இவள நம்பவே மாட்டாங்க, பாரு குட்டியானை சைஸ்ல இருக்குதுஎன்றான் ஹரிஹரன்.

நான் அவ்ளோ வெயிட் லாம் இல்லஎன இந்திரா உதட்டைப் பிதுக்க, “அப்டியா மா! எவ்ளோ வெயிட்னு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்என நக்கல் தொனியில் வினவினான் ஹரிஹரன்.

ஜஸ்ட் நையன்டி நையன் ஒன்லிஎன்க, அவள் கூறிய தோரணையைக் கண்டு மற்றவர்கள் சிரிக்க, குணவதியும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “புள்ளைய ரொம்ப படுத்தாதீங்க பா, பாவம் இந்து. நீ வா டா இந்து, அம்மா நான் உனக்குப் பிடிச்ச எல்லாத்தையும் செஞ்சு தரேன்என்றார்.

ஆன்ட்டி, இவ ஏற்கெனவே சென்சுரி அடிக்கப் போறா. இதுல, நீங்கவேற ஏத்தி விடாதீங்க, அப்புறம் ரோடு ரோலர் மாதிரி இங்க இருந்து கோயம்பத்தூருக்கு இவள உருட்டிக்கிட்டுத் தான் போகணும்என்றான் ஹரிஹரன்.

போ டா மூஞ்சுருஎன நாக்கைத் துருத்தியவள், குணவதியுடன் சமையலறைக்குள் ஐக்கியமானாள் இந்திராகாந்தி.

அவர்கள் மூவரும் பயணக் களைப்பு நீங்க சற்று நேரம் ஓய்வெடுக்க, வீட்டின் பின்பக்கம் இருந்த மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்தாள் மலர்விழி.

அவளைத் தேடிய ஹரிஹரன், அவன் மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு அங்குச் சென்றான்.

ஃபிளவர்என்றவாறே அவள் அருகில் செல்ல, “வா டா கரிச்சட்டி! டார்லிங் ஃபோன் பண்ணாங்களா டா? நான் ஃபோன் பண்ணா நாட் ரீச்சபிள்லயே இருக்குஎன்றாள் மலர்விழி.

அம்மா தான் லைன்ல இருக்காங்க, உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க?” எனத் தன் அலைப்பேசியை அவளிடம் நீட்டினான் ஹரிஹரன்.

ஹலோ டார்லிங்!” என்றாள் மலர்விழி அவனிடமிருந்து அலைப்பேசியை வாங்கி.

மலர் எப்படி மா இருக்க?” என ஹரிஹரனின் அன்னை பத்மா வினவ, “நான் நல்லாவே இல்ல டார்லிங், ஏன் என்கிட்ட ரெண்டு நாளா பேசவே இல்ல!” என்க,

சாரி டா, ராஜ்க்கு வர்ற எலெக்ஷன்ல சீட் கிடைச்சுருக்கு, அது விசயமா கொஞ்சம் ஃபிஸி ஆகிட்டோம் டா, அதான் பேச முடியலஎன விளக்கமளித்தார் பத்மா.

வாவ், அங்கிளுக்கு சீட் கன்பார்மா! வாழ்த்துகள், அங்கிள் கிட்ட சொல்லிரு டார்லிங்எனப் பேச ஆரம்பித்தவள், அரைமணி நேரம் கழித்து தான் அலைப்பேசியை வைத்தாள்.

அதுவரை தன் தோழி, தன் அன்னையிடம் கதைத்துக் கொண்டிருந்ததை காதில் பஞ்சு வைத்து அடைக்காத குறையாய் கேட்டுச் சலித்துக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.

மலரிடம் பேசிவிட்டு அலைப்பேசியை வைக்க, அதுவரை தன் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜன், “என்ன பத்து, உன் மருமக கிட்ட சீக்கிரம் பேசிட்டு வச்சுட்ட?” என நக்கலடித்தார்.

அவரைச் செல்லமாக முறைத்த பத்மா, “எனக்கும் என் மருமகளுக்கும் பேச ஆயிரம் இருக்கும், உங்களுக்கென்னவாம் இப்போ!” என்றார்.

தன் மனைவியின் அருகில் வந்தவர், “நீ எல்லாத்தையும் பேசுனாலும் உன் மனசுல உள்ள ஆசைய மட்டும் மலர் கிட்ட சொல்லாம இருக்கிறது எனக்குச் சரியாப்படல பத்து, அவங்க ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ், அவ்ளோ தான். ஆனா உன் ஆசை நிறைவேறணும்னா அத மலர்கிட்ட பர்ஸ்ட் கன்வே பண்ணுஎன்றார் ராஜன்.

இல்ல ராஜ், அவங்க ரெண்டு பேருமே இப்ப தான் ஸ்டடிஸ் முடிச்சுருக்காங்க. இப்பவே அவங்க கிட்ட போய்க் கல்யாணத்தப் பத்தியோ இல்ல என் ஆசைகள பத்தியோ சொல்றது சரியா இருக்காது, கொஞ்சம் நாள் இந்த லைப்ப என்ஜாய் பண்ணட்டும். ஹரிக்கு மலர் தான் அப்படிங்கிறது என் மூணு வருஷ கனவு, நம்ம வீட்டுக்கு மலர் தான் மருமகனு நான் முடிவு பண்ணிட்டேன். இன்னும் ஒருவருஷம் போகட்டும், மலர் வீட்ல நாமளே போய் பொண்ணு கேட்போம். மலருக்கும் உடனே கல்யாணம் பண்ண மாட்டாங்க, அவ இப்போதான படிப்ப முடிச்சுருக்காஎனும் தன் மனைவியைப் பார்த்தவர்

ஆண்டவா, இவ ஆசைய நீ தான் நிறைவேத்தணும்என ஆண்டவனிடம் ஒரு அப்ளிகேஷனைப் போட்டார் ராஜன். ஹரிஹரனின் தோழியாய் மலர்விழி, அவர்கள் குடும்பத்தில் அறிமுகமாகி இருந்தாலும், இன்று அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாய் உருமாறி இருந்தாள்

மலர்விழி என்றால் பத்மாவிற்கு கொள்ளைப்பிரியம். ஹரிஹரன் ஒரே மகன் என்பதால் பெண்பிள்ளைக்கு அவர் மனம் ஏங்கியிருக்க, அந்த ஏக்கத்தைத் தீர்க்க வந்தவளாகவே மலரை எண்ணினார் பத்மா. அவர்கள் இருவரும் நட்பாய் இருந்தாலும், மலர்விழியை தன் மருமகளாக்க வேண்டும் என்ற எண்ணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே அவருக்குத் தோன்றி இருந்தது. அதனைத் தன் கணவனிடமும் பகிர்ந்துக் கொண்டார்.

ராஜனும் சம்மதம் தெரிவிக்க, அன்றுமுதல் மலர்விழியை தன் மருமகளாகவே பாவித்திருந்தார் பத்மா. அவரின் ஆசை நிறைவேறுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.               

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
10
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மலர் இந்து செழியன் சிலம்பு ஹரி நட்பு செம ❤️❤️❤️.பாரி புள்ள கூப்பிடுகிறவிதம் சூப்பர்.

    2. என்ன இது . ஹரியும் மலரும் நல்ல நன்பர்கள் தானே