Loading

ண்முகம் சென்ற சில நிமிடங்களுக்கு பின்னும் இந்திரா அவன் சென்ற திசையையே மலர்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, மூச்சிறைக்க ஓடிவந்த சிலம்பு அவள் முன் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க எதிரே நின்றாள்.

ஏன் டி இப்படி மூச்சிறைக்க ஓடி வர்ற?” என அவள் சாதாரணமாய் வினவ, அவளோ முறைத்தவாறே, “என்னனு சொல்லிட்டு ஓடி வரக் கூடாதா, என்னையும் சேர்த்து பதற வச்சுட்டியே!” என்க, அவளோ என உதட்டை காது வரை இழுத்து வைக்க, “சிரிச்சு தொலையாத டி, பக்குனு ஆகிருச்சு. சண்முகம் அண்ணாகிட்ட பேசத் தான் அவ்ளோ அவசரமா ஓடி வந்தியாக்கும்என்றாள் சிலும்புசெல்வி.

அவனிடம் பேசியதை அவளிடம் கூற, “நல்ல விசயம் தான்எனும்போதே மலரும் செந்திலும் அங்கு வந்திருந்தனர். மதியத்திற்கு மேல் யாரும் மருத்துவ முகாமிற்கு வராமல் இருக்க, “சரி, நான் கிளம்புறேன் டி. நீங்க பார்த்துக்கோங்க, காலைலயே அத்தை சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்கனு சொல்லிட்டு இருந்தாங்க. நீங்க சமாளிச்சுக்குவீங்கள்ளஎன ஒருமுறைக்கு இருமுறை அவர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து அவள் புறப்பட, அதேநேரம் பாரிவேந்தனும் தனது புல்லட்டில் வந்து நின்றான்.

நம்ம ஃபோன் பண்ணவே இல்லயே, கரெக்ட்டா வந்து நிக்கிறாருஎன யோசித்தவள், திரும்பி இந்திராவை பார்க்க அவளோ அவளைக் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. சிலம்புவிடம் அதிதீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருக்க, “எல்லாம் கூட்டுக் களவாணிங்களா இருக்குதுங்கஎன அவள் காதுபடவே சப்தமாக உரைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

வண்டியை கிளப்பும்போது பாரிவேந்தன் இந்திராவிடம் பார்வையிலேயே நன்றியை தெரிவிக்க, இந்திராவின் முகம் மலர்ந்தது. மலர் கிளம்புவதாக கூறுவதற்கு முன்பே பாரிவேந்தனுக்கு தகவல் அளித்திருந்தாள் இந்திரா. வேலை அதிகம் இல்லை என்பதால் வந்து மலரை அழைத்துப் போக சொல்லி குறுஞ்செய்தி அனுப்பிருக்க, அதனைக் கண்டு தான் பாரியும் அங்கு வந்திருந்தான்.

இவ எப்போ தான் பாரி அண்ணாவ புரிஞ்சுக்கப் போறாளோ!” என சிலம்பு கவலைப்பட, “அதெல்லாம் அண்ணா பார்த்துக்குவாரு சிலம்பு, நம்ம ஹரி பையன் என்னானான்! ஃபோனே பண்ணக் காணோம்என்றவாறே அவனது எண்ணிற்கு அழைப்பு விடுத்து காத்திருந்தாள் இந்திராகாந்தி.

இந்திராவின் எண்ணிலிருந்து அழைப்பு வருவதைப் பார்த்தவன் அழைப்பை ஏற்று, “இப்பவாச்சும் என் நினைப்பு வந்துச்சே!” என்க, “அத நாங்க கேட்கணும் டா, நீங்க தான் புது மாப்பிள்ளை ஆச்சே. எங்கள எல்லாம் ஞாபகம் இருக்கா?” என்றாள் நக்கலாய்.

கடுப்படிக்காத டி குட்டியான, ஏன் டா கல்யாணம் பண்ணோம்னு இருக்குஎன அவன் புலம்ப, அலைப்பேசியை ஸ்பீக்கரில் போட்டிருந்ததால், மூவருமே அதிர்ந்தனர்.

என்னடா மச்சான் கல்யாணம் ஆன மறுநாளே இப்படி புலம்புற? ஏன் உன் வொய்ப் ஏதும் பிரச்சினை பண்றாங்களா?” என்றான் செந்தில்.

ப்ச், அவளலாம் நான் சமாளிச்சுருவேன் டா. அம்மா வேற மூஞ்ச தூக்கி வச்சுட்டே சுத்தறாங்க, ஃபிளவர் என்னடான்னா ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டேங்கிறா. அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன், எல்லாம் நல்லபடியா இருக்கணும்னு தான நானே ஒரு முடிவு எடுத்தேன். அதக் கூட புரிஞ்சுக்காம என்னை போட்டு வாட்டி வதைக்குதுங்க ரெண்டும்என்றான் ஹரிஹரன்.

ஃபிளவர் இன்னும் அவ கல்யாணத்துல இருந்தே வெளிய வரல டா, கொஞ்சம் நாள் போகட்டும் அவள விட்டுப் பிடிப்போம். ஆன்ட்டி ஏன் டா பேச மாட்றாங்க, இன்னும் கோபமா அவங்களுக்கு?” என இந்திரா வினவ, நேற்று இரவு தன் அன்னையுடன் பேசியவற்றை முழுவதுமாக தனது நண்பர்களிடம் கூறி முடித்தான் ஹரிஹரன்.

என்னடா சொல்ற!” என மூவரும் அதிர, “எனக்குமே அதிர்ச்சியா தான் இருந்துச்சு டா. அம்மா மனசுல இப்படி ஒரு ஆசை இருக்கும்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல. ஆனா, இன்னமும் அவங்க முடிவுல அவங்க மாறாமலே இருக்காங்க. அதான், இன்னும் கடுப்பாகுதுஎன்க, அவனின் உணர்வுகளையும் அவர்களால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

சிலம்புவும் செந்திலும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியவர்கள் தான். ஆனால், ஹரிஹரன், மலர்விழியின் நட்பில் காதல் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் இருந்தது. அவர்களை இணைத்துப் பார்க்கக் கூட கனவிலும் எண்ணிராதவர்கள்

அவங்க ஆசைய தப்புன்னும் சொல்ல முடியாது டா, விடு ஆன்ட்டி சீக்கிரம் புரிஞ்சுக்குவாங்கஎன இந்திரா ஆறுதல் கூற, “சரி, அத விடுங்க டா, நான் பார்த்துக்கிறேன். அங்க நிலவரம் எப்படி இருக்கு? பாரி பிரதர் கூட பேசறாளா இல்லயா?” என்றான் ஹரிஹரன்.

அப்படியே அவ பேசிட்டாலும், இந்த உலகம் ரெண்டாகிறாதுஎன இந்திரா நொடிக்க, “அப்புறம் எதுக்கு டி நீங்க அங்க இருக்கீங்க! ஒழுங்கு மரியாதையா அடுத்த முறை நான் ஊருக்கு வரும்போது அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கணும். அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாதுஎன கட்டளையிட, “இப்போ எங்கள என்ன வேலை பார்க்க சொல்றனு தெரியுமா?” என்றாள் இந்திரா.

நட்புக்காக இதெல்லாம் பார்க்க கூடாது இந்து, என் செல்ல குட்டி யானை தான நீ!” என அவன் கொஞ்ச, “மாமா வேல பார்க்க சொல்லிட்டு கொஞ்சல்ஸ் வேறஎன தலையிலேயே அடித்துக் கொண்டவள், “எங்கனால முடிஞ்ச அளவு முயற்சி பண்றோம் டா. நீயும் யாழுவ கரெக்ட் பண்ற வழிய பாருஎன்க, “அத நான் பார்த்துக்கிறேன், சொன்ன வேலைய ஒழுங்கா முடிங்கஎன்றவன், சிறிது நேரம் பேசிவிட்டு அலைப்பேசியை வைத்தான்.

இருவரும் வீடுவந்து சேர்ந்திருக்க, திருமணத்திற்கு வர முடியாத சில உறவுகளும், நெருங்கிய உறவுகளும் மணமக்களை பார்க்க வந்திருந்தனர். அவள் உள்ளே நுழையும் போதே, “இதோ மலரே வந்துட்டாஎன புன்னகையுடன் கூறியவாறே வந்த ரேவதி, “போய் முகம், கைகால் கழுவிட்டு வா மா மலரு. ஊர்ல இருந்து சித்தி, பெரியம்மாலாம் வந்துருக்காங்கஎன்க, வந்திருப்பவர்களைப் பார்த்து வரவேற்கும் விதமாய் புன்னகை சிந்தியவள், தங்கள் அறைக்குச் செல்ல பாரிவேந்தன் வந்திருப்பவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திலேயே மலரும் அங்கு வந்துவிட, அனைவரும் நலம் விசாரித்தனர். தங்கையை நிச்சயித்து அக்காவை மணந்துள்ளான் என்ற பேச்சும் அடிபட்டாலும், அதனை வீட்டார் முன் பேசுவதை தவிர்த்தனர். அவர்கள் என்னதான் வெளிப்படையாக கூறாவிட்டாலும், அவர்கள் மனதில் ஓடுவதை படம்பிடித்துக் காட்டியது முகம்.

மதிய உணவிற்கு பிறகு அனைவரும் வாழ்த்துக் கூறி விடைபெற, நெருப்புமேல் நிற்பது போல் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்பொழுது தான் மனம் தண்மையை உணர்ந்தது.

பெருமூச்சொன்றை வெளியிட்டவாறே திண்னையில் அமர, அவளருகில் வந்து அமர்ந்த ரேவதி, “அவங்க ஏதாவது மனசு சங்கடப்படற மாதிரி பேசி இருந்தா அத பெருசா எடுத்துக்காத மலருஎன்றார் இதமாய்.

இல்ல அத்தை, அவங்க பேசறது எதுவும் பொய் இல்லையே. உண்மைய தான சொல்றாங்க, சில நேரம் பொய்கள் தர்ற வலிய விட உண்மைகள் தர்ற வலி குறைவு தான் அத்தைஎன்றவளின் கண்களில் தெரிந்த வலியைக் கண்டவருக்கு அதற்குமேல் பேச இயலவில்லை.

நிலைமையை சரிசெய்யும் பொருட்டு ராமாயி பாட்டி, அவளிடம் அவளின் வேலையை பற்றி விசாரிக்க, அவளும் அவரிடம் ஆர்வமாக கூறத் தொடங்கினாள்.

சமையலறையில் ஏதோ வேலை எனக்கூறி ரேவதி பாதியிலேயே எழுந்து உள்ளே சென்றிருக்க, அம்மாச்சியும் பேத்தியும் கதையளந்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் பேசுவதை வாசலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவாறே பாரிவேந்தன் கவனித்துக் கொண்டிருக்க, அவனின் பார்வை தன்மேல் படர்வதை உணர்ந்தவளுக்கு படபடப்பானது.

ஆனாலும் ராமாயி பாட்டியின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்க, அப்பொழுது தான் சுந்தரபாண்டியன் அங்கு வந்தார். அவர் வாசலில் வரும்போதே, “உள்ள போறேன் அம்மாச்சி, அப்புறம் பேசலாம்என அவள் படக்கென எழுந்து செல்ல, அதனைக் கண்டவரின் முகம் வாடியது.

மலரின் செயல் பாரிவேந்தனுக்கு சற்றே கோபத்தை உண்டாக்கியது. அவன் வேகமாக எழுந்து உள்ளே செல்ல முயன்றவனை, “மாப்பிள்ளைஎன்ற சுந்தரபாண்டியனின் அழைப்புத் தடுத்தது.

சொல்லுங்க மாமாஎன்க, “நீங்க சாமிகிட்ட எதுவும் கேட்க வேண்டாம் மாப்பிள்ளை. அவளுக்கா எப்போ என்கிட்ட பேச விருப்பம் இருக்கோ அப்போ பேசட்டும்என்றவாறே, திரும்பி தன் வீட்டிற்குச் செல்ல முயன்றவரை, தடுத்தான் பாரிவேந்தன்.

இன்னும் எத்தனை வருஷம் மாமா இப்படியே சாமி சாமினு அவ அன்புக்காக ஏங்குவீங்க! ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்லையே. பதினாலு வருஷம் மாமா, இப்படியே பேசாம பேசாம நீங்க ஒதுங்கிறதால தான் அவ இன்னும் மேல ஏறிக்கிட்டே போறாஎன்றான் கோபமாய்.

இல்ல மாப்பிள்ளை, அவ கோபத்துக்கான காரணம் நியாயமானது. தப்பு பண்ணவன் நான், அதுக்கான தண்டனையும் நான் அனுபவிச்சுத் தான் ஆகணும்என்றவர் விறுவிறுவென தன் வீட்டிற்குள் நுழைய கையாலாகாத தனமாய் நின்றிருந்தான் பாரிவேந்தன்.

ஒரு முடிவோடு அவன் உள்ளே நுழைய, “பேராண்டி அவசரப்பட்டு வார்த்தைய விட்றாத டா, இது அப்பன் மவ சண்டை. மூணாம் மனுஷன் புருஷனாவே இருந்தாலும் தலையிடறது நல்லா இருக்காதுஎன்க, “இல்ல அப்பாயி, நான் பார்த்துக்கிறேன்என அவன் உள்ளே சென்றான்.

தங்கள் அறையில் கட்டிலில் அவள் அமர்ந்திருக்க, உள்ளே நுழைந்தவன் கதவை சாற்றினான். அவள்முன் வந்து நின்றவன், “நீ பண்றது உனக்கே நியாயமா படுதா புள்ள? இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் அந்த மனுஷன படுத்தி எடுப்ப, ஏற்கெனவே பாதி செத்துட்டாரு புள்ள. மேலும் மேலும் அவர கொன்னுட்டு இருக்கனு உனக்குப் புரியுதா இல்லையா?” என கோபத்தில் ஆரம்பித்து இறுதியில் ஆற்றாமையுடன் முடித்தான் பாரிவேந்தன்.

அவரு சாகறது தான உங்க கண்ணுக்கெல்லாம் தெரியுது, நான் பதினாலு வருஷமா உள்ளுக்குள்ள செத்து செத்துப் பொழைச்சுட்டு இருக்கேன். அது உங்க யாருக்கும் தெரியாதுல்லஎன்றவளின் கண்களில் கண்ணீர் அரும்பியது.

அவன் அதிர்வில் நிற்க, “எந்த ஒரு பொண்ணுக்கும் தன்னோட முதல் ஹீரோ அவ அப்பா தான். அப்படி தான் எனக்கும் ஒருகாலத்துல, உலகத்தில உள்ள ஒட்டுமொத்த பாசத்தையும் எனக்கே எனக்குனு வாரி இறைச்சவரு என் அப்பா. ஆனா…” என்றவளால் மேலும் பேச முடியாமல் கரங்கள் நடுங்க, அவளின் நிலையை உணர்ந்தவன் அருகில் செல்ல முனைய, கைநீட்டி தடுத்தவள், “அப்படிப்பட்டவரு ரெண்டு பொண்ணுங்களுக்கு துரோகம் பண்ணத என்னால மறக்க முடியலங்க. விவரம் தெரியாத வயசுல, ஊர்ல என்ன பேசறாங்க, ஏது பேசறாங்கனு புரியாம இருந்துச்சு. ஆனா, புரிய ஆரம்பிச்சுதுக்கு அப்புறம் நான் நேசிச்ச என் அப்பாவ முழுசா வெறுக்க வச்சது. இன்னமும் ஊர்ல என் கோபத்தை கூட சரியா புரிஞ்சுக்கல, ஏன் நீங்களும் கூட தான் புரிஞ்சுக்கல. புரிஞ்சு இருந்தா இந்நேரம் இப்படி என்னை கேள்வி கேட்டு இருக்க மாட்டீங்கஎன்றவள், கண்களை இறுக மூடி அமர்ந்திருக்க, அவனால் அவளை புரிந்துக் கொள்ள முடியவில்லை.

சில நொடிகள் கழித்து அவளே தொடர்ந்தாள். “என் அம்மாவ ஏமாத்துனதால தான் அவர்மேல கோபமா இருக்கேனு நினைக்கிறீங்க. அது இல்ல உண்மை, என் அப்பா ரெண்டு பேர ஏமாத்திருக்காருங்கிறத தான் என்னால ஏத்துக்க முடியல. என் அம்மா எப்படி ஏமாந்து நிக்கிறாங்களோ அதே மாதிரி தான் யாழு அம்மாவும் ஏமாந்து நிக்கிறாங்க. யாழு அம்மா அப்பா கூட சந்தோசமா வாழ்ந்ததன் அடையாளம் தான சண்முகம் அண்ணாவும், யாழுவும். ஆனா, அவங்கள ஏமாத்தி, காதல்ங்கிற பேர்ல என் அம்மாவ ஏமாத்திஎத்தனை ஏமாற்றங்கள்

என் அப்பாவ ஒரு ஏமாற்றுக்காரரா என்னால பார்க்க முடியலங்க. அவரு கையால எனக்கு ஊட்டி விடணும், அவரு மடில படுத்து தூங்கணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா, அவர பார்க்கும் போதெல்லாம் அவர் பண்ண துரோகம் தான் கண்ணு முன்னாடி வந்து நிக்குது. என் பாசத்த அவர் பண்ண துரோகம் வீழ்த்தும்போது என்னாலயே என்னை கண்ட்ரோல் பண்ண முடியல மாமுஎன்றவள் தளர்ந்துப் போக, அவளை நெருங்கி தன்னுள் புதைத்துக் கொண்டான் பாரிவேந்தன்.

அவன் நெஞ்சில் ஈரம் படர, அணைப்பு இன்னும் இறுக ஆரம்பித்தது. “ஒன்னும் இல்ல மா, ஒன்னும் இல்லஎன்றவாறே அவள் தலையை வருடிவிட, சிறிது நேரம் கழித்து அவனிடத்தில் இருந்து அவளே விலக, அவளின் விலகல் அவனுக்கு வலித்தது.

அத்தைக்கு இதே மாதிரி ஒரு துரோகத்த மாமா பண்ணிருந்தா மாமாவ நீங்க மன்னிருச்சுப்பீங்களா மாமு?” என்றவளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறினான் பாரிவேந்தன்.

அவளோ அவனின் பதிலை எதிர்பாராமல், “அவரு என்னை ஒவ்வொரு தடவையும் சாமினு கூப்பிடும்போது ஓடிப்போய் அப்பானு கட்டிக்க மாட்டமானு இருக்கும். ஆனா, அந்த நேரத்துல அவரோட தவறுகள் என் கண்ணு முன்னாடி வரும்போது ரொம்ப பலவீனமாகிறேன்என்றவளை இடைமறித்து, “நீ சொல்றது நியாயம் தான் புள்ள. ஆனா, அவர் பண்ணத் தப்புக்காக பதினாலு வருஷமா ஆயுள் தண்டனைய அனுபவிச்சுட்டாரு, இதுக்கும்மேல அவர தண்டிக்கிறது சரியில்ல புள்ளஎன்றவனை வெற்றுப் பார்வைப் பார்த்தாள் மலர்விழி.

தான் பண்ற தவறுகளுக்கு என்னிக்கு மன்னிப்பு கிடைக்கும்னு ஒருத்தன் நினைக்கிறானோ அந்த இடத்துல இருந்து தான் பல தவறுகள் ஆரம்பமாகுது, அதே மன்னிப்புனு ஒன்னு இல்லாம இருந்தா எவனும் தப்பு பண்ண யோசிப்பான். மன்னிப்புங்கிற வார்த்தை இப்போ சர்வசாதாரணமான வார்த்தையா மாறிருச்சுல்ல, அதுக்கான தகுதியே இல்லாதவங்க கூட மன்னிப்பு வாங்கறாங்கல்ல!” என்றவளுக்குப் பதிலளிக்க முடியாமல் நின்றிருந்தான் பாரிவேந்தன்.

இங்க யாருமே யாருக்கும் உண்மையான மன்னிப்ப கொடுத்திட முடியாதுங்க. அப்படி ஒருத்தன் உண்மையான மன்னிப்ப கொடுக்கணும்னா அவன் மனம் பிறந்த நிலைல மட்டும் தான் இருக்கணும். இங்க யாரும் இந்த உலகத்த பிறந்த மனதோட பார்க்கிறது இல்ல. நானும் அதுல விதிவிலக்கு இல்ல. உறவு, சொந்தபந்தம், பாசம், காதல் இப்படினு ஏதோ ஒரு கயிறால தான் இணைக்கப்பட்டு இருக்கோம். என்னிக்கு என்னால பிறந்த மனதா அவர மன்னிக்க முடியுதோ அன்னிக்கு அவர்கிட்ட நான் பேச முயற்சி பண்றேன். அதுவரைக்கும் அப்பா, மகள் என்ற உறவு இப்படியே தான் தொடரும்என்றவள் அத்தோடு தனது பேச்சு முடிந்ததாய் எழுந்து வெளியே செல்ல, பேச்சற்றவனாய் நின்றிருந்தான் பாரிவேந்தன்

அப்போ தான் செய்த தவறுக்கும் இதே தண்டனை தொடருமா?’ என்ற பயமும் உள்ளுக்குள் பரவியது

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
4
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்