ஊடலும். மோதலும்
உடைந்து போனது அவன்
காதலில்.
யாழினி தாயாகி இன்றோடு மூன்று மாதம் ஆகிறது.மதி அவளை சேய்போல தாங்கினான் அவனால் முடிந்த போதெல்லாம் அலுவலக இடைவேளையில் வந்து பார்த்தான்.அவளை மடியில் வைத்து சீராட்டினான்.மசக்கை கான அத்தனையும் அவளிடம் இருந்ததினால் அவளை பூவாய் தென்றலென வருடிக்கொடுத்தான்.அன்று அவள் ஸ்கேனுக்கு செல்ல வேண்டும் புது ஜீவனின் அறிமுகத்தை காண ஆவலில் மதிக்காக காத்திருந்தாள்.காத்திருப்பு நீண்டதே தவிர மதி வரவில்லை .கடைசியில் அவள் அத்தை ஏதேதோ சொல்லி அவளை ஸ்கேனுக்கு அழைத்துச்சென்றாள்.அவர்கள் வீடு வந்து சேரவே பண்ணிரெண்டானது .அதுவரையில் மதி வராதது சிறிது வெறுப்பும் வேதனையும் தர அதை தொடரகூட முடியாத அளவு சோர்வு அவளை அழுத்த தூங்கிப்போனாள் .கிருஷ்ணவேனிதான் சிறிது வருத்தம் கொண்டாள் மதி வராததையும் யாழினி கோபம் கொண்டதும் நினைத்து .அவள் வாசற்கதவை பூட்ட போகவும் மதி வரவும் சரியாக இருந்தது களைத்து வந்த மகனை கண்டு கலங்கித்தான் போனாள்.”என்னம்மா யழினிகூட பேய்ட்டு வந்தியா, இன்னைக்கு பயங்கர வேலமா நகரகூட முடியல அவளுக்கு போன் செய்ய கூட நேரம் இல்ல.கவலை படர்ந்த தாய் முகத்தை கண்டு “இன்னமா டாக்டர் எதாவது சொன்னாரா”? என்று சிறிது பதற்றதோடு கேட்க,” சே, சே ,அதெல்லாம் ஒன்னும் இல்ல கண்ணா அவள் நல்லா இருக்கா இன்னும் சொல்ல போனா மசக்க வலியெல்லாம் நல்லாவே குறஞ்சிருக்கு நல்ல சத்தா சாப்பாடு சாப்ட போதும்னாரே”.”அப்பா நாகூட என்வோனு பயந்துட்டேன்”,.”அதெல்லாம் ஒன்னும் இல்ல ராஜா ,”வா சாப்பிட”,”.இல்லமா வழியிலயே பசினு ,சாப்ட்டு வந்துட்டேன் ,நீ போய் தூங்கு”.”சரிபா, அப்புறம் ,”சொல்லுமா”,”யாழினி கோபத்தில எடுத்தெரிஞ்சு பேசினாலும் நீ கொஞ்சம் பக்குவமா பேசுபா வயித்துப் புள்ளக்காரி”.”எதுவோ சொல்ல நினைத்தாலும் ,”அதெல்லாம் நா பாத்துக்கறேன் ,”நீ போய் நிம்மதியா தூங்கு”. ,என்றவாறு சென்றான்.ஆழ்ந்து தூங்கும் மனைவியின் கண்ணத்தில் ஆசை முத்தம் வைத்து அவளை அணைத்தவாறு தூங்கிபோனான்.காலையில் கண்விழித்தவள் அணைத்தபடி அவன் படுத்து இருப்பதை உணர்ந்து சிறிது தயங்கினாளும் மறுகணம் கையை தூக்கி விசிறியவாறு எழுந்தாள் .மதிக்கு சட்டென முழிப்புடன் கோபம் வந்தாளும் அதைஅடக்கியவாறே மீண்டும் கண் துயின்றான் .மேலும் சில மணித்துளிகள் தூங்கிபோனான்.பின்பு ஏதோ சத்தம் கேட்க விழித்துக்கொண்டான் .காலை கடன்களை அவன் முடித்துவரவும் கையில் காஃபி கோப்பையுடன் அவள் வரவும் சரியாய் இருந்தது.”ஹாய் டார்லிங் “,என்றவாறு அவன் அழைக்க, கண்டு கொள்ளாது சென்றாள்.”யாழினி”, என்று அத்தை அழைப்பதை கேட்டு” தோ வரேன்தே”, என்றவாரு நகர்தாள்.”இந்தாடா, மதி குரல் கேடுச்சா அதான் காஃபி கலந்தேன் கொண்டு குடு ,எழுந்தட்டான்தானே??,.”ஆச்சு அத்த தாங்க”, என்றவாறு எடுத்துச்சென்றாள்.கையில் தர.சென்றவள் என்னவோ தோன, தட். என்று மேசை மீது வைத்தாள்..”காஃபி கப்பை விட்டு, “தனக்கும் கோபம் வரும்”, என்றுரைப்பது போல சிறிது கிழே சிந்தி விழுந்தது.மதிக்கு சுள்ளென்று இருந்தாளும் அடக்கியவாரு,”நம்ம குட்டிய பாத்தியா தங்கம்,”ஓ அது நினைவில் கூட இருக்கா ?என்றவாருரைக்க .,என்ன யாழுமா என்ன கேள்வி இது அக்கற இல்லாமலா?,”அதுவேற இருக்கா பரவால்லயே”?, எனகூற அவனால் மேலும் பேச முடியாமல் கப்பை கீழே வைத்தவாறு “நான் குளிசிட்டு வரேன் “,என்றவாறு நகர்தான்.அதன் மூலம் தன் கோபத்தை தலைமுழுகிவிட்டு வரலாம் என அவன் நினைத்தும் ஒரு காரணம்.திரும்பி நடக்க எத்தனித்தவள் அவன் தொலைபேசி ஸ்கீரின் ஏதே வினோதமாய் தெரிய தன்னை அரியாமல் அதை எடுக்கப்போக ஏதோ கால் வர அதைகைத்தவரி அடன் செய்துவிட்டாள்.”மச்சான் நேத்து நடந்த கைகலப்பு பத்திலாம் நினச்சு பீல் பண்ணாத அத வேற மாதிரி டீல் பண்ணலாம் அப்புறம நாம ஒன்னு செய்ய அப்புறம் நம்மலயே குத்தம் சொல்வாங்க வேலைகே ஒல வெச்சாலும் வப்பாங்க”, மேலும் தொடர வழி இல்லாமல் ஏதோ அந்த பக்கம் சத்தம் கேட்க ,”இரு மச்சான்”,. என்றவாறு தொடர்பு அறுந்தது.சிறிது நேரம் அவள் ஸ்தம்பித்துப்போனாலும் அடுத்தகணமே அவன் நிலை அறிந்து கலங்கி போனாள் தன் மேலேயே கோபம் கொண்டாள்.நேற்று இந்நேரம் அவனை பற்றி அவள் நினைத்தது நினைவு வர தான் ஏன் சிறு விஷயதுக்காக இப்படி மாறினோம் என நினைத்து வெட்கினாள், இனி இது நடக்க கூடாது, அவனை கோபிக்ககூடாது “வெளி சென்று வரும் கணவனுக்கு ஆயிரம் டென்சன் ,அவனை நாம் மேலும் தொல்லை படுத்துவது தவரு, என்று அவள் நினைக்கவும்,. பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.பரபர வென கப்போர்ட் திறந்தவள் வழக்கம் போல அவனுக்கு சேவை செய்ய தொடங்கினாள்.ஒருகணம் அதை கண்டு திகைத்தவன் பேசுவது அரியாது “யாழினி ,என்றான்,’மம் ,’.மேலும் அதிசயித்தவன் என்ன கேட்க என்று தெரியாது “சாப்டியா?”,. என உரைக்க அவன் தயக்கம் அறிந்தவள் அவன் துண்டின் நுனியை பிடித்தபடி,’என் ஆச மச்சான், இல்லாம எப்ப சாப்டிருகேன்”, என்றுரைக்க அவ்வளவுதான்அவளை இழுத்து அணைத்து அவள் நெற்றியில் இதழ்பதித்தான்.”என்னங்க காலைலயே”, என பொய்யாய் சினுங்க,”அப்படியா, சரி தள்ளி போ”, என அவன் கூற, ம்ஹூம் மாட்டேன்,” என்றவாறு இருக்கி அணைத்துக்கொண்டாள்.உண்மையான புரிதல் இருக்கும் இடத்தில் புயல்காற்று கூட பூந்தென்றல் ஆகிவிடும்.