Loading

அவன் தந்த முத்தம் முத்தாக
முயல்யென துள்ளி விளையாடியது என் வீட்டு முற்றத்தில்.

யாழினி பயங்கர சந்தோக்ஷத்தில் இருந்தாள்.அம்மா என்றால் சும்மாவா வானத்தில் பறப்பதுபோல உணர்ந்தாள்.மதியின் அம்மா பற்றி சொல்ல வேண்டுமா ?.இன்னும் யதிக்குதான் தெரியாது யாழினி அந்த பொருப்பு ஏற்றதால் அவள் அத்தையும் கம்மென்று விட்டுவிட்டாள்.அழைப்பு மணி ஓசை கேட்க யாழினிதான் சென்று திறந்தாள்.ஹாய் டார்லிங் என்ன இன்னிக்கு உன் முகத்துல எக்ஸ்ரா சிவப்பு .உள்ளுக்குள் ஆச்சிரியபட்டாலும்”அப்படிலாம் ஒன்னும் இல்லயே அப்படியே இருந்தாலும் இப்ப இப்படியே வாசல்ல வச்சு பேசனுமா என் ஆச புருஷனே”,.”அடடா என்னவோ இருக்கு இல்லன்னா யாழுகுட்டி இப்படிலாம் கொஞ்ச மாட்டாளே”,.”ம் ,ரொம்பதான் உள்ள வாங்க, என்றவாறு, முன் செல்ல அவன் தொடர்ந்தான்.அதற்குள் கிருஷ்ணவேணி காஃபி மற்றும் ஸ்வீட்டடோடு வந்துவிட்டாள்.”என்னம்மா சுவீட் எல்லாம் செஞ்சிருக்க”.”அதலாம் யாழினிகிட்ட பேசிக்க “,எனக்கு உள்ள கொஞ்சம் வேல இருக்கு ,என்றவாறு சென்றுவிட்டாள் .”என்னடா இது யாழு என்ன விஷயம் நீ சொல்றி என் செல்ல குட்டி”,.”என் மக்கு புருக்ஷா,என் கண்ண சிவப்பு கண்டுபிடிச்ச என் காளைக்கு தெரியலயா நமக்கு கன்னுகுட்டி வரபோகுதுன்னு ..,”என்னடி காள கன்னுன்னு ,என்று முடிபதற்குள் புரிந்துவிட.கண் அடித்து விசில் அடிக்க,” ஏய் ஷ்ஷ்…,என்றாள் யாழினி ,”அதெல்லாம் முடியாது முதல்ல உள்ள வா தூக்கிட்டு போயிடுவேன் ஆனா பயமா இருக்கு சோ கம் கம்”, என்றவாறு ரூமிற்கு போக கட்டி அணைத்து முத்த மழைபொழிந்தான்,, .அது கன்று வரை பாய்ந்தது.மறுநாளே யாழினியின் அன்னையும் வந்து விட வீடே களைகட்டியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்