வேலை முடிந்து வந்த ஜெகனோடு கிளம்பிய ஜானகி, வீட்டுக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தாள். வரும் வழியில் எதுவும் சொல்லவில்லை. வீட்டில் வைத்து பொறுமையாக பேசலாம் என்று வந்து விட்டாள்.
வீட்டில் மேனகா இல்லாது போக, அதுவே வசதியாகி விட்டது. தம்பியிடம் அனைத்தையும் ஒப்பித்தாள்.
“என்னகா? அப்ப அந்த ஃபேக்டரிய வாங்கலாம்னு சொல்லுறியா?”
“அதுல எனக்கு குழப்பம் தான்டா. ஆனா அப்பா உருவாக்குன ஒன்னு அழிய விடவும் மனசு வரல”
“ஜாக்ஷி ஏன்கா இத உன் கிட்ட சொல்லுச்சு? அவ்வளவு அக்கறையா நம்ம மேல?”
“அதுக்கு தான் கந்தசாமி கிட்ட கேட்டேன். அவன் என்னடானா அவள புகழ்ந்து தள்ளுறான். அவ கொடுக்கனும்னு நினைச்சா, கண்டிப்பா நல்லதா தான் இருக்கும்னு சொல்லுறான். எனக்கு ஒரே குழப்பமா இருக்கு”
“க்கா.. நாம வாங்கிட்டோம்னு வை… யாரு பார்ப்பா? உனக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. வாங்கி வச்சு எல்லாரும் நம்மல ஏமாத்துறதுக்கு நாமலே வழி பண்ணி கொடுக்குற மாதிரி ஆகிடும்”
ஜானகி இதையும் யோசித்தாள் தான். ஆனால் வாங்கி விட்டால், அவளால் முடிந்த வரை கற்றுக் கொண்டு வேலை பார்க்க முடியும். அந்த ஜாக்ஷி தானாகவே எல்லாம் தெரிந்து கொண்டாளாம். அவளுக்கு சொல்லிக் கொடுக்க யாரும் வரவில்லையாம்.
ஜகதீஸ்வரி பாட்டியிடம் படித்ததை விட, அவளாக படித்தது அதிகம் என்று சிற்றம்பலம் நிறைய சொல்லியிருக்கிறார். அவளால் முடியும் போது தன்னால் முடியாதா? அதுவும் அவள் ஏகப்பட்ட சொத்துக்களை ஒரே ஆளாக ஆளும் போது, ஒரு ஃபேக்டரியை கண்ணும் கருத்துமாக தன்னால் பார்க்க முடியாதா?
“இப்ப வாங்குறதா வேணாமானு தான் கேள்வி. வாங்கிட்டா பார்க்குறத பத்தி யோசிக்கலாம். வாங்கலனா விட்டுட்டு வேலைய பார்க்கலாம். நீ என்ன சொல்லுற?”
“எனக்கும் குழப்பம் தான்” என்றவனுக்கும் சரியாக புரியவில்லை.
பணக்காரனாக பிறந்து வாழ்ந்து விட்டு, திடீரென பணத்துக்கு போராடுவது அவனுக்கும் மட்டும் பிடித்திருக்கிறதா என்ன? ஆனாலும் எல்லா சுமையும் ஜானகியின் தலையில் போட மனம் வரவில்லை.
“சீட்டு குலுக்கி போடுவோமா? சாமி முன்னாடி போடுவோம். வந்தா மலை. போனா எதோ.. கடவுள் முடிவு பண்ணட்டும். என்ன சொல்லுற?” என்று கேட்க, ஜானகி தலையாட்டினாள்.
உடனே இரண்டு காகிதங்களில் வாங்கு, வேண்டாம் என்று எழுதி போட்டாள்.
‘கடவுளே எங்களுக்கு எது நல்லதோ அத மட்டும் கொடுபா’ என்று வேண்டிக் கொண்டு காகிதத்தை எடுத்தாள்.
அவளது நலம் அதை வாங்குவதில் என்ற பதிலைத்தந்தார் கடவுள். பிரித்து பார்த்து விட்டு அவள் அதிர்ந்து நிற்க, ஜெகன் எட்டிப் பார்த்து விட்டு புன்னகைத்தான்.
“க்கா.. அது நமக்கு தான்னு கடவுளே சொல்லிட்டாரு. பேசாம போய் வாங்கிடலாம்.”
ஜானகி ஒரு நொடி அமைதியாக இருந்து விட்டு, “இத பத்தி அம்மா கிட்ட இப்ப சொல்லாத. நான் ஜாக்ஷி கிட்ட பேசிட்டு சொல்லுறேன்” என்று விட்டாள்.
*.*.*.*.*.*.
கவிதாவை பார்க்க வந்திருந்தான் வீரா. அவளது தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்க, பேசி விட்டுச் செல்ல வந்தான்.
பொதுவாய் விசாரிப்புகளோடு, அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தான்.
“போதும்ணா. எனக்கு அப்பா பணம் கொடுத்துருக்காரு. அதுல வாங்கிக்கிறேன்”
“அத மத்த செலவுக்கு வச்சுக்க” என்றவன், எல்லாமே வாங்கிக் கொடுத்தான்.
“வீட்டுல ரொம்ப கஷ்டமா இருக்காம்ணா”
“ஏன்?”
“அம்மா இல்லாம அப்பா ஒழுங்கா சாப்பிடுறது இல்லையாம். அண்ணி வேலைக்கும் போய் வீட்டு வேலையும் பார்க்க முடியாம கஷ்டப்படுறாங்களாம். அருள் ரொம்ப புலம்புனான்”
“ம்ம்”
“நான் பக்கத்துல இருந்தா ஹெல்ப் பண்ணுவேன். இங்க இருந்துட்டு எதுவும் பண்ண முடியல”
“நீ உன்னை முதல்ல கவனி. அவங்கள அவங்களே பார்த்துப்பாங்க”
“என்னணா?”
“கவிதா பாசம் வைக்கலாம். அதுக்காக அவங்களயே நினைச்சுட்டு வாழ முடியாது. இதான் வாழ்க்கைனா இத வாழ்ந்து தான் ஆகனும். இப்ப உன் அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவன் தான் வீட்டுக்கு மூத்த புள்ள. அவங்க ரெண்டு பேரும் தான் பார்த்துக்கனும். பார்த்துக்கட்டும். நீ உன் படிப்ப மட்டும் பாரு”
“இருந்தாலும் அப்பா பாவம்ல?”
“அப்ப நீ பாவம் இல்லையா? உனக்கும் தான் அவங்க அம்மா.”
கவிதாவின் முகம் சோகமானது.
“இழப்ப தாண்டி வாழப்பழகனும் கவிதா. அவரும் வாழுவாரு. கொஞ்சம் டைம் எடுக்கும். பாவம் பார்த்து சோகத்துக்குள்ளயே மூழ்க வைக்காத”
“ம்ம்”
“காலேஜ் எப்படி போகுது? எக்ஸாம் எப்படி பண்ணுற?”
“நல்லா பண்ணிருக்கேன்”
“இனியும் நல்லா படி. அந்த வினய் வேற எதாவது செஞ்சானா?”
“இல்ல. அவன் கிட்ட நான் பேசுறதே இல்ல”
“குட் அப்படியே விட்டுரு. படிப்ப பாரு.”
கவிதா தலையாட்டி வைத்தாள்.
அவளை ஹாஸ்டலில் விட்டு விட்டு கிளம்பினான்.
“அண்ணிய கேட்டதா சொல்லுங்க”
“சொல்லுறேன்”
“நீங்களும் உடம்ப பார்த்துக்கோங்க”
வீரா தலையசைக்க, உள்ளே சென்று விட்டாள்.
காரில் திரும்பி வந்து கொண்டிருக்க, இன்றும் ஜானகி கண்ணில் விழுந்தாள். பேருந்துக்காக நின்றிருந்தாள்.
காரை பார்த்ததும் அவள் அடையாளம் தெரிந்து உள்ளே பார்க்க, வீரா அவளை பார்த்து தலையசைத்து விட்டுச் சென்றான்.
‘இவரு ஜாக்ஷிக்கு மாப்பிள்ளை… ரொம்ப நல்லவரா இருக்காரே.. அவள எப்படி சமாளிக்கிறாரு? அவ திமிரு புடிச்சவளாச்சே’ என்று நினைத்தபடி பேருந்து வரவும் ஏறினாள்.
வீட்டருகே சென்று இறங்க, அங்கு கந்தசாமி அவளுக்காக காத்திருந்தான்.
‘இவன் எங்க இங்க?’ என்று அதிர்ச்சியோடு பார்த்து வைத்தாள்.
“உங்கள பார்க்க தான் வந்தேன்”
“என்ன விசயம்?”
“ஜாக்ஷி மேடம் கிட்ட முடிவ சொல்லிட்டீங்களா?”
“ஏன்?”
“அவங்க என்னை அந்த ஃபேக்டரி விசயமா பேச கூப்பிட்டுருக்காங்க. போறதுக்கு முன்னாடி உங்க கிட்ட கேட்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”
“கால் பண்ணிருக்கலாமே?”
“நீங்க எடுக்கல”
அப்போது தான் கைபேசியை பார்த்தாள்.
“சாரி சைலண்ட்ல இருந்துருக்கு. இன்னும் நான் முடிவ சொல்லல. வாங்களேன் சேர்ந்தே சொல்லுவோம்”
“நான் பைக்ல வந்தேன்” என்றவன் யோசிக்க, “ஏன்? அதுல என்னை கூட்டிட்டு போக்கூடாதுனு எதாவது வேண்டுதலா?” என்று கேட்டு வைத்தாள்.
கந்தசாமி ஒரு நொடி விழித்து விட்டு, “வாங்க” என்று பைக்கை எடுத்தான்.
அவன் பின்னால் அமர்ந்து கிளம்பி விட்டாள்.
பத்து நிமிடங்களில் ஜாக்ஷியின் முன்னால் இருந்தனர்.
“ரெண்டு பேரும் ஒன்னா வந்துருக்கீங்க?”
“நான் அந்த ஃபேக்டரிய வாங்கிக்கிறேன்னு சொல்ல வந்தேன்”
“குட்”
“என்னை அந்த ஃபேக்டரி பத்தி பேசத்தானே கூப்பிட்டீங்க மேடம். அதான் இவங்கள கூட்டிட்டு வந்துட்டேன்”
“குட். இத பத்தி ரெண்டு பேரு கிட்டயும் பேசிடுறேன். இவ வந்து உன் கிட்ட எல்லாம் பேசினாளா?”
“ஆமா மேடம்”
“என்ன சொன்ன?”
“எல்லாத்தையும் சொன்னேன்”
“அப்ப உனக்கு கன்ஃபார்ம் ஆகிடுச்சு?”
ஜானகி தலையாட்டினாள்.
“வாங்கிக்கிற முடிவுல இருக்க? ஓகே.”
எழுந்து சென்று ஃபைல்களில் ஒன்றை எடுத்து வந்து வைத்தாள்.
“இது என் பாட்டி சைன் பண்ண காண்ட்ராக்ட் பேப்பர்ஸ். உங்களுக்கு கொடுக்கும் போது பாட்டியே வந்து சைன் பண்ணி கொடுப்பாங்க. உங்கப்பா இப்ப இல்லங்குறதால, பாட்டிக்கு இத யாருக்கு வேணா வித்துட உரிமை இருக்கு. இதெல்லாம் அதுல விளக்கமா இருக்கும். வச்சுக்கோ” என்று ஜானகியிடம் தள்ளி வைத்தாள்.
“அண்ட் நீ.. நீ சொல்லு.. இந்த ஃபேக்டரிய ஜானகி கிட்டயோ அவ தம்பி கிட்டயோ கொடுக்குறது சரியா?”
இருவருமே அதிர்ந்தனர்.
‘என்ன இவ மாத்தி மாத்தி பேசுறா?’ என்று ஜானகி புரியாமல் பார்க்க, “இல்ல மேடம்” என்று கந்தசாமியும் சொல்லி அவளை அதிர வைத்தான்.
“அதே தான். இப்ப தெரியுதா உன்னை ஏன் கூப்பிட்டேன்னு?”
“புரியுது ஆனா…”
“இவளுக்கு புரியல போல. சொல்லு” என்றாள்.
ஜானகி கந்தசாமியை முறைக்க முடியாமல் கஷ்டப்பட்டாள்.
‘நேத்து அப்படி பேசிட்டு.. இன்னைக்கு மாத்தி பேசுறான்?’ என்று நினைத்தவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
“சாரி டூ சே. உங்களுக்கு கொஞ்சம் கூட முன் அனுபவம் இல்ல. உங்க கையில முழு பொறுப்பும் கொடுக்குறது எனக்கு சரினு தோணல” என்றதும், அது வரை இருந்த கோபம் வடிந்தது அவளுக்கு.
அதை அவளும் தானே யோசித்தாள்.
“நானும் யோசிச்சேன் தான்”
“யோசிச்சு என்ன முடிவு பண்ண?” என்று ஜாக்ஷி கேட்க, “கத்துக்கலாம்னு நினைச்சேன்” என்றாள்.
திருப்தியாக தலையசைத்தாள் ஜாக்ஷி.
“உனக்கு சொல்லிக் கொடுக்க தான் இவன கூப்பிட்டேன். என்ன? சொல்லி கொடுக்குறியா கந்தசாமி?”
ஜானகியை பார்த்தான். அவளுக்கு சம்மதமா என்று தெரிந்து கொள்ள. அவள் ஆர்வமாக பார்க்க, சம்மதித்து விட்டான்.
“ஓகே. சிற்றம்பலத்தோட இடத்துக்கு ஜானகி வருவா. ஆனா அந்த சேர் ஜானகி ஜெகன் ரெண்டு பேருக்கும் தான் கொடுப்பேன். ஜெகன் பர்மிஸனோட ஜானகி அங்க முதலாளியா இருப்பா. நீ அவ கூட வொர்கிங் பார்ட்னரா இருப்ப”
“பார்ட்னரா? மேடம்!” என்று அதிர்ந்து போய் பார்த்தான்.
“எஸ் மேன். பாட்டியோட சேர்ஸ நாங்க முழுசா வித்ரா பண்ண முடியாது. நம்ம கம்பெனி சார்பா நீ அங்க வொர்கிங்ல இருப்ப. ஓகேவா?”
“ரொம்ப பெரிய…” என்று ஆரம்பித்தவன், ஜாக்ஷியின் பார்வையில் பெருமூச்சு விட்டான்.
“ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க. பேப்பர்ஸ் ரெடியானதும் கால் வரும். இங்க வந்து சைன் பண்ணிட்டு உங்க வேலைய ஆரம்பிக்கலாம்”
“ஓகே”
“நீ எங்கயோ வேலை பார்க்குறல? அத விட்டுட்டு இவன் கூட போய் ஃபேக்டரிய பாரு. மிச்சத்த இவனே சொல்லுவான். கத்துக்க.”
“ம்ம்” என்று தலையாட்டி விட்டு இருவரும் எழுந்து விட்டனர்.
“தாங்க்யூ மேடம்” என்று கந்தசாமி நன்றி சொல்ல, தலையாட்டி வைத்தாள்.
இருவரும் அதோடு கிளம்பி விட்டனர்.
தொடரும்.
ஜாக்ஷி ஒரு புரியாத புதிர் தானோ…!
😀😀😀
CRVS (or) CRVS 2797