வினய் பெற்றோரிடம் பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அசோக் வந்து சேர்ந்ததும், எப்படி பேசுவது என்று யோசித்ததை செயல்படுத்த ஆரம்பித்தான்.
“ப்பா..”
“என்னடா?”
“நான் ஹாஸ்டல்ல சேர்ந்துக்கவாபா?”
“ஏன்?”
“இங்க இருந்து காலேஜ் போய் திரும்பி வர ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுது. ஹாஸ்டல் ரொம்ப பக்கம். காலேஜ் முடிச்சதும் நேரா ஹாஸ்டல் போயிடுவேன்ல?”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஹாஸ்டலுக்கு பணம் கட்டிட்டு இருக்க முடியாது. ஒழுங்கா பஸ்ல போயிட்டுவா. இல்லனா கார்ல போயிட்டுவா” என்று காதம்பரி கோபமாக பேசினார்.
“ப்பா.. நான் அங்கயும் இங்கயும் அலையாம காலேஜ் ஹாஸ்டல்னு இருப்பேன்பா. ப்ளீஸ்பா”
“ஹாஸ்டல்ல இருந்தா உன்னை நீயே பார்த்துக்கனும். முடியுமா?”
“இங்கயும் நான் அப்படித்தான இருக்கேன். நீங்க ரெண்டு பேருமே வேலைய பார்க்க போயிடுறீங்க. நான் தனியா தான் என்னை பார்த்துக்கிறேன்”
“அதுக்காக உள்ளூர் ஹாஸ்டலுக்கு பணம் கட்டி சேரனுமா? இங்கயும் பொறுப்பா இருந்தா இருக்கலாம். அங்க பிரண்ட்ஸ்ங்களோட சேர்ந்து தம்மு தண்ணினு கூத்தடிக்க தான கேட்குற? முடியாது. போய் படிக்கிற வேலைய பாரு”
“மாட்டேன். என்னை ஹாஸ்டல்ல சேர்த்து விடுங்க”
“எதுக்குடா இப்படி அடம் பிடிக்கிற?” என்று அசோக் அதட்ட, “நான் ஹாஸ்டல் தான் போவேன். இல்லனா சாப்பிட மாட்டேன்” என்றவன், அப்படியே சென்று அறைக்குள் அடைந்து கொண்டான்.
“திமிர பார்த்தீங்களா? பட்டினி கிடந்தா கிடக்கட்டும். நாலு நாள்ல தன்னால வழிக்கு வருவான்” என்று விட்டு காதம்பரி சென்று விட்டார்.
*.*.*.*.*.*.
சுபத்ரா வீராவை பாவமாக பார்த்து விட்டு, தலையை தொங்க போட்டுக் கொண்டாள்.
“ஏன்மா எல்லாத்துக்கும் பயப்படுற? ஒரு தடவ துணிஞ்சு தான் பாரேன். நல்லது நடந்தா சந்தோசம் தான? அதுவும் டாக்டர் அவ்வளவு சொன்னப்புறம் பயந்தா என்ன சொல்லுறது?” என்று வீரா கேட்க, சுபத்ரா ஒரு நொடி யோசித்தாள்.
பிறகு கைபேசியை எடுத்து எழுதிக் காட்டினாள்.
“எனக்கு பயம் தான். ஆனா இந்த ஆப்ரேஷன்க்கு நிறைய செலவாகும். எனக்காக நீங்க ஏன் செலவு பண்ணனும்? வேணாமே.. நான் இங்க இருக்கதே எனக்கு போதும்”
அதை படித்து விட்டு ஜாக்ஷி முறைக்க, வீரா அவளை அமைதியாக இருக்கும் படி சைகை காட்டினான்.
“உனக்கு ஒன்னு தெரியுமா? ஜக்கம்மாவுக்கு எக்கச்சக்கமா சொத்திருக்கு. நாள் பூராம் உட்கார்ந்து எண்ணுற அளவுக்கு. அதே போல, ஊர்ல எனக்கும் நிறைய சொத்துங்க இருக்கு. இங்க கம்பெனியா இருக்கது, அங்க வீடு, கடைங்கனு இருக்கு. அவ்வளவு தான் வித்தியாசம். ரெண்டு பேரோட தாத்தாவும், நிறைய சம்பாதிச்சு வச்சுட்டு தான் போயிருக்காங்க. அதுல கொஞ்சத்த எடுத்து எங்களுக்கு பிடிச்ச சுபத்ராவுக்காக செலவு பண்ணா, அவங்க கோச்சுக்க போறது இல்ல. சொத்து குறைய போறதும் இல்ல”
அவன் சொன்ன விதத்தில் சுபத்ராவுக்கு புன்னகை தான் வந்தது.
“ஆனா வீண் செலவு தான? ஒரு வேளை குரல் வரலனா?”
“வரும்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அப்படினா கண்டிப்பா வரும். வீண் செலவு ஆகாது. உனக்கு எங்க பணத்த யூஸ் பண்ண கூச்சமா இருக்கு அதான?”
தலையை ஆட்டி வைத்தாள்.
“சரி.. இப்ப இத வச்சு ஆப்ரேஷன முடிப்போம். அப்புறம் கொஞ்ச பணத்த வச்சு காலேஜ் படி. படிச்சு முடிச்சதும் காலம் பூராம் ஃப்ரியா நம்ம கம்பெனில வேலை பாரு. ஜக்கம்மா உனக்கு ஃப்ரி எம்ப்ளாயி கிடைச்சா சந்தோசம் தான?”
“டபுள் ஓகே. காலம் பூராம் ஒருத்தி கிடைச்சா போதாதா?” என்று ஜாக்ஷியும் ஆர்வமாக சொல்ல, சுபத்ரா யோசித்தாள்.
“இதுக்கு மேல யோசிச்சுட்டே இருந்தனு வை.. நேரா கூட்டிட்டு போய் மயக்க ஊசி போட்டு ஆப்ரேஷன் பண்ணுங்கனு சொல்லிடுவேன். என்ன சொல்லுற?”
“சரி பண்ணிக்கிறேன். ஆனா பண்ணும் போது நீங்க என் கூட இருக்கனும்”
“நாங்க ரெண்டு பேரும் டாக்டர் இல்ல. இருந்தாலும் வெளிய நின்னு, போற வர்ர எல்லா கடவுளையும் கூப்பிட்டு உனக்காக வேண்டிக்கிறோம். ஓகே?”
சம்மதமாக தலையாட்ட, ஜாக்ஷி நிம்மதி பெரூமூச்சு விட்டாள்.
*.*.*.*.*.*.
லட்சுமி தாமரையிடம் அமர்ந்திருந்தார்.
அவரை திட்டிக் கொண்டு தான்.
“உடம்ப பார்க்குறத விட என்ன வேலை உனக்கு? வயசு திரும்புதுனு நினைப்பா? அருள் பதறிப்போய் போன் பண்ணுறான். கல்யாணத்துக்கு தனியாளா அலைவியா? ஏன் உன் நாத்தனாருங்க எல்லாம் எங்க போனாளுங்க? வந்து கூடமாட இருக்க மாட்டாளுங்களா?” என்று கேட்டு ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தார்.
எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் தாமரை.
“வாயத்திறந்து பேசு. இப்படியே பிடிச்சு வச்ச பிள்ளையாரு மாதிரி உட்கார்ந்துருக்க?” என்று கொதிக்க, “கொஞ்சம் அசதி தான் அத்த. நம்மல விட்டா யாரு பார்ப்பா? என் நாத்தனாருங்க யாரும் வர மாட்டாங்க. சண்டைனா தான் வருவாங்க. வேலைக்கு வர மாட்டாங்க” என்றார்.
நாத்தனார்களுக்கு காதில் ரத்தம் வரும் வரை திட்டு விழுந்தது லட்சுமியிடமிருந்து.
“இனியாவது உடம்ப பார்த்துக்க. நான் ஊருக்கு போகலாம்னு தான் இருந்தேன். உன்னை இப்படி விட்டு போக மனசு வரல. கல்யாணம் முடியுற வரை சேர்ந்து வேலை பார்ப்போம். அப்புறமா போய்க்கிறேன்”
“எதுக்கு அத்த? அங்க வீரா உங்களுக்காக காத்திட்டு இருப்பான். நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்”
“அதெல்லாம் பண்ண மாட்டான். சரி உனக்கு விசயம் தெரியாதுல? உன் புருஷன் புள்ளை கிட்ட உளறி வைக்க மாட்டனா ஒன்னு சொல்லுறேன்”
“சொல்லல.. என்னனு சொல்லுங்க”
வீரா ஜாக்ஷியின் ஒன்றாக வாழும் திட்டத்தை எல்லாம் விளக்கிச் சொன்னார்.
“இப்ப இருக்க புள்ளைங்க என்னென்ன யோசிக்குதுங்க பாரு”
“அவங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சா சரி தான். அவங்க வாழ்க்கைய அவங்களுக்கு பிடிச்ச மாதிரி வாழட்டும். நாம தான் ஊருக்காக ஒரு வாழ்க்கை, சொந்தபந்தத்துக்காக ஒரு வாழ்க்கை, குடும்பம் புள்ளை குட்டிக்காக ஒரு வாழ்க்கைனு கடைசி வரை நமக்காக வாழாமலே போறோம். அவங்களாச்சும் சந்தோசமா வாழட்டும்”
“அதான் நானும் சரினுட்டேன். இனிமேலும் அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனே பிள்ளைங்க வாழுவாங்கனு எதிர்பார்க்க முடியாதுல? இத உன் புருஷன் புள்ளைங்க முன்னாடி சொல்லி வச்சுடாத.. அப்புறம் நல்லா இருக்காது”
“சொல்ல மாட்டேன் அத்த” என்று விட்டார்.
ஊருக்கு கிளம்புவதை தள்ளி போட்டு விட்டு தாமரைக்காக லட்சுமி அங்கயே இருக்க, ஜகதீஸ்வரியும் அங்கயே இருந்தார்.
“நீ வேணா ஊருக்கு போயேன்”
“எதுக்கு? அங்க எனக்கு ஒரு வேலையும் கிடையாது. எதுவா இருந்தாலும் ஜாக்ஷி பார்த்துப்பா. கூட வீரா வேற இருக்கான். நான் பாட்டு இங்க நல்லா சாப்பிட்டு நல்லா தூங்குறேன். என் பிரஸ்ஸர் கூட குறைஞ்சுருக்கு. இன்னும் ஒரு மாசம் இங்கயே இருப்போம்.” என்று விட, அதை ஜாக்ஷி வீராவுக்கும் தெரியப்படுத்தினர்.
“சோ?” – வீரா
“என்ன சோ?”
“அப்ப ஒரு மாசத்துக்கு நீ என் கையில தான். நடுவுல பாட்டிக்காக பார்க்க வேணாம்” என்றவன் அவளை அள்ளி அணைத்து முத்தமிட, “இல்லனா மட்டும் தள்ளியா நிக்கிற?” என்று கேட்டு அவன் வயிற்றில் இடித்தாள்.
“பாட்டி இருந்தா கொஞ்சமாச்சும் டிஸ்டன்ஸ் இருக்கும்ல?” என்றவன் அவள் காதுகளில் முத்தமிட்டான்.
அவர்கள் வருவது தாமதமானாலும், சுபத்ராவின் சிகிச்சைக்கான வேலைகள் அப்போதே ஆரம்பித்தது.
மருத்துவரின் பரிந்துரைகள் சோதனைகள் என்று நாட்கள் பறந்தது.
வீரா ஜாக்ஷிக்கு இடையே நெருக்கமும் கூடியது.
*.*.*.*.*.
இரண்டு நாட்களாக வினய் வீட்டில் சாப்பிடவே இல்லை என்று வேலைக்கார பெண் சொல்ல, காதம்பரிக்கு கோபம் வந்தது.
வினய்யை திட்டிப் பார்த்தார். கோபத்தில் கை ஓங்கினார். எதற்கும் அவன் அசரவில்லை. பிடிவாதமாக நின்றான்.
“எப்படியோ போய் தொலை” என்று விட, அடுத்த நாளே ஹாஸ்டல் வாசலில் அசோக்கோடு நின்று இருந்தான்.
பெற்றோர்களை பிரியும் கவலை கொஞ்சம் கூட இல்லாமல், சந்தோசமாக ஹாஸ்டலுக்குள் சென்று விட்டான்.
அசோக் அவனை விட்டு வெளியே வர, அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.
பூகம்பத்தை கிளப்பி இருந்தாள் ஜாக்ஷி. அதுவும் கோடி கணக்கில் நட்டம் வரும் அளவு செய்து வைத்திருந்தாள்.
ஒரே நேரத்தில் அடுத்தடுத்த பிரச்சனைகள் வர ஆரம்பித்தன. எதை சமாளிப்பது என்று தெரியாமல் அசோக்கும் காதம்பரியும் திணற, அந்த செய்தி ஜாக்ஷியின் காதில் விழுந்தது.
“ஓகே” என்று சிரித்தபடி அழைப்பை துண்டித்தாள்.
“என்ன சிரிப்பு?” – வீரா
“மிஸ்டர் அசோக்கோட கோடி ரூபாய் பிராஜக்ட் கோவிந்தா” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“முடிச்சு விட்டுட்டியா?”
“செஞ்சு முடிச்ச எதையும் அனுப்ப முடியாம திணறிட்டு இருக்காங்க. இது பத்தாது.. அடுத்து இன்வஸ்மெண்ட்ல கை வச்சுருக்கேன்.”
“உன் கோபத்துக்கு அவங்க என்னாக போறாங்களோ?”
“என் பாட்டி மேல கேஸ் போடுற அளவு அந்த காதம்பரிக்கு திமிர் இருக்குல? இத சமாளிக்கட்டும் பார்க்கலாம்” என்று விட்டாள்.
“அதுக்கு இது அதிகமா தெரியலயா?”
“அதிகம் தான். ஆனா என் கிட்ட வர கூடாதுனா இதான் செய்யனும். சரி நீ வக்கீல் ஆஃபிஸ்க்கு. நம்ம கேஸ பார்ப்போம். நாளைக்கு கோர்ட்ல கேஸ் வருது. பணத்த எடுத்தவங்க தர்ரேன் தர்ரேன்னு சொல்லிட்டு தான் இருக்காங்க. கோர்ட்ல வந்து நிக்க வச்சா தான் சரி வரும்” என்றவள் அடுத்ததை பேச ஆரம்பித்தாள்.
வீராவும் பேச்சில் இணைந்தபடி காரை ஓட்டினான்.
தொடரும்.
கொலையும் செய்வாள் பத்தினிங்கறதுக்கு காதம்பரி தான் நல்ல உதாரணம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
வினய் எஸ்கேப். ஜாக்ஷி வீரா கியூட். தாமரை பாட்டிஸ் சூப்பர்