Loading

சாலையில் கடந்து செல்லும் வாகனங்களைப் பயத்தோடும், அலட்சியத்தோடும் இரு ஜோடி கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன.

“என்ன பண்ணணும்னு சொல்றீங்க இப்ப?”, அவள் தொலைபேசியில் தொல்லை செய்பவரால் எரிச்சல் பட்டுக் கேட்டாள்.

மறுபக்கம் ஏதோ பதில் வர, ” முடியாது ஐயப்பன்… அந்த ஆளால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கட்டும். இனிமேலும் அவன நான் சும்மா விடமாட்டேன்”, எனக் காட்டமாகப் பேசிவிட்டு அலைபேசியை அணைத்துப் பைக்குள் திணித்தாள்.

பயந்தபடி நோக்கிய விழிகள் அவளிடம் நெருங்கி, “அக்கா…. அந்த அங்கிள் மறுபடியும் என்னை இங்க இங்க கடிப்பாரா?”, என கழுத்திழும் உதட்டையும் காட்டி கேட்ட பிஞ்சைக் கண்டு அவள் உள்ளம் கொதித்தது.

“இல்லடா செல்லம்… இனி யாரும் உன் பக்கம் வரமாட்டாங்க… அப்படி யாராவது வந்தா உன்னை நீயே காப்பாத்திக்க கத்து குடுக்கறேன்.. யாரையும் எப்பவும் நம்பாத… ஒரு பர்சண்ட் சந்தேகம் எப்பவும் எல்லார் மேலையும் இருக்கணும்.. அதுக்கு பேர் விழிப்புணர்வு…. வா டாக்டர்கிட்ட போய் மருந்து வாங்கிட்டு போலாம்”, என அந்த ஏழு வயது குழந்தையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு நடந்தாள்.

அந்த பிஞ்சு அவளின் தோளில் முகம் வைத்தபடி, அவள் தலையில் ஏற்பட்டிருந்தக் காயத்தைத் தொட்டது.

“ஸ்ஸ்ஸ்…..”, என அவள் வலியில் முனங்கினாள்.

“வலிக்குதாக்கா…. அந்த அங்கிள் ரொம்ப பலமா அடிச்சிட்டாரா?”, என அவள் காயத்தையும் அவளது முகச்சுழிப்பையும் கண்டுக் கேட்டது.

“இல்லடா செல்லம்… இந்த மாதிரி நாம நம்ம நியாயத்துக்காக போராடுறப்ப ஏற்பட்ற காயம் தான் நம்மல பலபடுத்தும்… இந்த வலிக்கு பயந்து நாம நம்ம நியாயத்தை விடக்கூடாது…. நீயும் பெரியவளாகி தைரியமா நியாயத்த கேக்கணும்.. சரியா?”, என அருகில் மருத்துவமனை இருக்கிறதா என விசாரித்தபடி நடந்தாள்.

“நியாயம்னா என்னக்கா?”, அந்த குழந்தை அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டது.

“ம்ம்ம் …. உனக்கு ப்ரெண்ட்ஸ் இருக்காங்களா ?”

“ம்ம்…. சுமதியும் சுப்புவும் தான் என் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் “, என கண்கள் விரியக் கூறியது.

“உன் ஃபிரண்ட்ஸ் உன்னோட பென்சில் உனக்கு தெரியாம எடுத்துகிட்டாங்க .. இப்ப நீ என்ன பண்ணுவ ?”

“அவங்க கிட்ட ஏன் என் பென்சில் எடுத்தீங்க னு சண்டை போடுவேன் ..”

“ஹான் .. அப்படி கேக்கறத்துக்கு பேரு தான் “ என வார்த்தை முடிக்காமல் குழந்தையைப் பார்த்தாள்.

“நியாயம்…..”, ஹாஹாஹா என குழந்தை சிரித்துவிட்டு ,” நான் கரெக்டா சொல்லிட்டேன்ல க்கா?”, என ஆர்வமாக கேட்டது குழந்தை.

“ரொம்ப கரெக்ட் டா பட்டு… அதே போல உன் ஃபிரண்ட்ஸ் தப்பு பண்றப்ப , அது தப்பு னு அவங்களுக்கு புரிய வைக்கணும் ..”

“அது எப்டி பண்றதுக்கா ?”

“இப்ப உன் பென்சில் எடுத்தா அதுக்கு சண்டை போட்ட ல .. உன் பொருள் உன்னை கேக்காம எடுக்க கூடாது னு அவங்க கிட்ட தெளிவா சொல்லணும் .. அப்போ தான் அவங்க மறுபடியும் அந்த தப்பு பண்ணமாட்டாங்க ..”

“இப்போ நீங்க அடிச்ச அங்கிள் இனிமே யாரையும் கடிக்க மாட்டாரா? “ என்று குழந்தை கேட்ட கேள்வியில் அவளின் மனம் பட்ட ரணம் தான் சொல்ல முடியவில்லை .

“அந்த அங்கிள் இனிமே அப்படி பண்ணாத அளவுக்கு நான் தெளிவா சொல்ல போறேன் டா செல்லம் .. “ என மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தவளாக குழந்தையை மாரோடு அணைத்தபடி நடந்தாள் .

எதிரில் தெரிந்த ஒரு மருத்துவமனையைக் கண்டு விட்டு ,“வாங்க ஆஸ்பிட்டல் வந்துட்டோம் குட்டியா ஊசி போட்டுட்டு ஹோம் போலாம்”, என மருத்துவரிடம் விவரம் கூறி அந்த குழந்தையின் உடல்நிலையை முழுதாகச் சோதிக்கக் கூறினாள்.
“ச்செ .. என்ன மனுஷங்களோ இவங்க எல்லாம் ? எப்படிங்க குழந்தைய அந்த ஆள் கிட்ட அனுபறீங்க ? ஒரு ஆள பாத்தா தெரிஞ்சிக்கணும்ல .. “ டாக்டர் அவளுக்கும் மருந்து போட சொல்லி விட்டு குழந்தையை சோதனை செய்ய சென்றார் .

“ஊருக்குள்ள பெரிய மனுஷன் டாக்டர் .. கோர்ட் ஆர்டர் ஓட வரப்போ நாங்க அனுப்பி தான் ஆகணும்.. “

“என்ன பெரிய மனுஷனோ ? இன்னிக்கி அந்த வார்த்தைக்கு அர்த்தம் இல்லாம போய்கிட்டு இருக்கு ..”

சில நிமிட சோதனைக்கு பிறகு திரை மறைவில் இருந்து வந்தவரிடம் , “ டாக்டர் “ என்று அழைத்துவிட்டு அடுத்த வார்த்தை கேட்க முடியாமல் தயங்கி நின்றாள் .

“வகினா ல எந்த தடயமும் இல்ல .. நல்ல வேலை அந்த அளவுக்கு போறதுக்கு முன்ன குழந்தை தப்பிச்சிட்டா .. இன்ஃபெக்ஷன் ஆகாம இருக்க ஊசி போடறேன் .. “

“ஊசி வேணாம் கா .. “ என குழந்தை ஆழ ஆரம்பித்தாள் .

“ ஏதாவது பூச்சி கடிச்சா ஊசி போடுவோம் ல செல்லம் அப்டி தான் டா இதுவும்.. அக்காவ பிடிச்சிக்கோ “ என்று ஏதேதோ பேசியபடி ஊசி போடும் வரை அவளை பிடித்துக் கொண்டாள் .

“அந்த ஆள ஏதாவது செய்வீங்களா இல்லயா ?” டாக்டர் அவளிடம் கேட்டார் .

“கண்டிப்பா டாக்டர் “

“இந்தாங்க இந்த ரிப்போர்ட் ல தேவையானது இருக்கு .. அந்த ஆளோட DNA கெடைச்சா கேஸ் கொஞ்சம் நமக்கு சதாகமா இருக்கும் .. “

“இந்தாங்க இது அந்த ஆளோட முடி .. அடிக்கறப்போ வந்துச்சி இது போதும் ல?”

“சூப்பர் .. இதுபோதும் .. ” என கூறி விட்டு அடுத்து தேவையான ஆவணங்களை தயார் செய்து தருவதாக கூறி விட்டு நாளை அவளை வருமாறு கூறி அனுப்பினார் .
அந்த மனிதமற்ற ஜென்மத்தின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்குத் ஓரளவு தேவையான ஆவணங்களை மருத்துவரிடம் பெற்றுக்கொண்டு அம்மையப்பன் இல்லம் சென்றாள்.

எந்த மிருகமும் வன்புணர்வு செய்வதில்லை. அதுவும் பால் மணம் மாறாத பிஞ்சிடம் காமத்தை நோக்கும் ஜென்மம் இன்று மனிதன் மட்டுமே.

“மதர்…. ஷாலு குட்டிய இனிமே நீங்க யார்கூடவும் அனுப்பாதீங்க…. “, என குழந்தையை அங்கிருந்த ஆயாவிடம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்படிக் கொடுத்தாள்.

“என்னாச்சி நேத்ரா? “, மதர் அவள் முகத்தில் இருந்தக் காயத்தைப் பார்த்து அருகில் வந்துக் கேட்டார்.

“அந்த அயோக்கியன் குழந்தைய பாடா படுத்தி இருக்கான் மதர்… பாவம் குழந்தை இரண்டு வாரமா அங்க போயிட்டு வந்துட்டு சோகமா இருக்காளேன்னு பாத்தா விஷயம் இன்னிக்கு தான் தெரியுது”,

“என்ன சொல்ற நேத்ரா…. அய்யோ ஆண்டவா… “, பதற்றத்துடன் என்ன நடந்தது என்றுக் கேட்டார்.

“நான் இன்னிக்கி கார் வந்ததும் தனியா அனுப்பி வைக்காம நானும் கூடவே போனேன் . கார் வீட்டுக்கு போகாம ஆபீஸ் போச்சி.. ஏன்னு கேட்டா வீட்ல அம்மா இல்ல .. ஐய்யா மட்டும் தான் இருக்காரு அவர் தான் அங்க வர சொன்னாருனு டிரைவர் சொன்னான் ..”

அங்கே அலுவலகம் சென்றதும் குழந்தையை நன்றாகவே கவனித்தனர் .

“நீ கெளம்பு மா “ ஐயப்பன் வந்து கூறினார் .

“இல்ல ஐயப்பன்.. இது ஆஸ்ரமம் க்ராஸ் –செக்கிங் விசிட் .. ஃபுல் டே நான் இங்க தான் இருக்கணும்.. குழந்தைய எப்டி நடத்தறாங்க-னு ரிப்போர்ட் தரணும் …. “ என சிரித்தபடி பதில் கூறினாள் .

“இதுக்கும் ரிப்போர்ட் ஆ? “ என வியந்தவர் பின் சரி என தன் வேலையை பார்க்கக் கிளம்பி விட்டார் .

சிறிது நேரத்தில் குழந்தையை அழைத்துக் கொண்டு அந்த நாற்பத்தி ஐந்து வயதைக் கடந்த பெரிய மனிதர், அதே கட்டிடத்தில் மேலே இருந்தக் குழந்தைகள் விளையாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றார் .

இவளும் அவர் பின்னோடு சென்று , குழந்தையைத் தன் பார்வையிலேயே வைத்துக் கொண்டாள் .

முதலில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிணுங்க ஆரம்பித்தாள் .

இவள் பார்க்கும் போது “கிச்சு கிச்சு” மூட்டுவது போல கைகளை வைத்து இருந்தார் .

பின் குழந்தை சகஜமாக விளையாட ஆரம்பித்ததும் இவளும் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தாள் .

பிறகு இன்னொரு விளையாட்டு பகுதியில் குழந்தையும் இவரும் உள்ளே சென்றனர் . நிறைய பந்துகள் அங்கே குவித்து வைக்கப் பட்டிருந்தது .

முதலில் பந்துக்களைக் கண்ட உற்சாகத்தில் குழந்தை எதுவும் கவனிக்காமல் விளையாடி உருண்டு புரண்டு அவர் மேல் விழுந்து எழுந்தாள் .

சிறிது நேரத்தில் அந்த கயவனின் விளையாட்டு தொடர்ந்தது . குழந்தை சத்தம் போட்டு அழுக ஆரம்பிக்கவும் அவள் ஓடி சென்றுக் குழந்தையைத் தூக்கி வந்து ஆராய்ந்தாள் .

உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் லேசாக கசிந்து இருந்தது .

அவளுக்கு வந்த ஆத்திரத்தில் அந்த பெரிய மனிதனை கிழித்து தொங்கவிட்டு விட்டு அங்கிருந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு பொது மக்கள் அதிகம் நடமாடும் இடத்திற்கு வந்து விட்டாள்.

“ஏய் நீ எங்க போனாலும் என்கிட்ட இருந்து தப்ப முடியாது “ என்கிற வார்த்தை அவளது காதுகளை வந்தடைவதற்கு முன் அவள் கிளம்பி விட்டாள். ஒரு வேலைக் கேட்டிருந்தால் ..

“ஆண்டவா .. இது என்ன காலமோ ? ஒரு குழந்தைய்க்கு கூடவா பாதுகாப்பு இல்ல இங்க .. அவனா அப்டி பண்ணான் ? ஊருக்குள்ள பெரிய அந்தஸ்த்துல இருக்கானே.. “ என மதர் மனம் நொந்தார்.

“ஆமா மதர்…. அந்த ஐம்பது வயசு கம்முநாட்டிக்கு ஏழு வயசு குழந்தைகிட்ட சுகம் கேக்குது…. இன்னிக்கு நானே குழந்தைய கூட்டிட்டு போனதால பரவால்ல .. இல்லைன்னா நினைக்கவே பயமா இருக்கு . அங்கயே ஒளிஞ்சிருந்து கவனிச்சப்ப தான் தெரிஞ்சது… அடிச்சு மண்டைய உடைச்சிட்டு குழந்தைய தூக்கிட்டு வந்துட்டேன். இனிமே எவனும் சொந்தம் பந்தம்னுட்டு வரக்கூடாது ன்னு சொல்லிட்டேன்”, ஆத்திரம் அடங்கவில்லை.

“ஆண்டவா…. அவனுக்கு இவ பேத்தி வயசுன்னு தானே நம்பி அனுப்பினோம்… இப்படி பண்றானே… அவனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது பாப்பா”, என ஆயா ஆதங்கமாக பேசியபடி வந்து அவளை ஆராய்ந்தார்.

“விடு கங்கம்மா…. அவன் மேல கேஸ் போட்டு இனிமே அவன் எங்கயும் தலைய காட்ட முடியாதபடி செய்யப்போறேன்…. “.

“ஏன்மா உனக்கு பிரச்சினை இழுத்துக்கற?”, மதர் .

“அந்த ஜென்மத்த அப்படியே விட சொல்றீங்களா மதர்?”

“உனக்கு எதுவும் ஆகிட கூடாதே நேத்ரா”.

“எனக்கு ஒன்னும் ஆகாது மதர்… இனிமே ஷாலுவ யார்கூடவும் அனுப்பாதீங்க…. நான் கிளம்பறேன்… கங்கம்மா குழந்தைய பாத்துக்கோ… “, எனக் கூறிவிட்டு அங்கிருந்துப் புறப்பட்டாள்.

பேருந்து பிடித்து ஏறி , அரை மணி நேர பயணத்தில் தன் நிறுத்தம் வர இறங்கி நடந்தாள்.

இடர்பாடுகள் நிறைந்த தெருவிற்குள் புகுந்தவள், குறுக்கு சந்தில் புகுந்து தன் மாளிகையை வந்தடைந்தாள்.

ஐநூறு சதுர அடிகள் கொண்ட அவளது மாளிகையில் அவளும், அவளது தாயும் தான் வசிக்கின்றனர்.

அவள் தாயார் வைதேகி சமையல் வேலை செய்து அவளை வளர்த்து ஆளாக்கினார்.

சோதனைக்காக சமைத்து கொடுத்ததை சாப்பிட்டுவிட்டு, இன்றுவரை அவரது கைம்மணத்தில் மயங்கி கிடக்கின்றார் விசாலாட்சி, விசாலாட்சி கேட்டரிங் முதலாளி.

அந்த கேட்டரிங்கில் பணிக்கு சேர்ந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

நான்கு வயது குழந்தையுடன் நின்ற வைதேகியை, விசாலாட்சி தன் கூரைக்குள் அரவணைத்துக் கொண்டார்..

இத்தனை கால ஊதியத்தில் சொந்தமாக வீடு வாங்க முடியவில்லை தான். ஆனாலும் கையிருப்பு வைத்திருந்தார் பெண்ணின் திருமணத்திற்கு.

அந்த இருப்பை வைத்து தங்களுக்கென சொந்த வீட்டை ஏற்படுத்திக் கொள்ள நேர்த்தியும் பிரயத்தனப்படுகிறாள்.

வைதேகி கண்டிப்புடன் அதில் கைவைக்கவிடாமல் இவளை விரட்டிக் கொண்டிருக்கிறார்.

இவளும் அவரிடம் சவால் விட்டு இருக்கிறாள் சொந்த வீட்டை வாங்கியபின் தான் திருமணம் என்று..

இப்படியாக இவர்களது சராசரி வாழ்வானது நகர்ந்துக்கொண்டிருக்கிறது.

“என்னடி காயம்… யார்கிட்ட இன்னிக்கு வம்பிலுத்துட்டு வந்த?”, என அவள் தாய் பதறியபடிக் கேட்டார்.

“அந்த பெரிய மனுஷன நம்பி குழந்தைய குடுக்க வேணாம்னு எவ்ளோ சொல்லியும் கேக்காம அனுப்பி வச்சதுக்கு நல்லா பண்ணிட்டான்மா… நல்லா நாலு குடுத்துட்டு வந்தேன்… ராஸ்கல்…. “, என கோபத்தை தாயிடம் கொட்டினாள்.

“என்னடி சொல்ற? ”

நடந்ததைக் கேட்டவர் “அவன சும்மாவா விட்டுட்டு வந்த? கொன்னு போட்டு இருக்கணும்ல…. சும்மா விட்டுட்டு வரதுக்காடி உனக்கு அத்தனையும் சொல்லிகுடுத்தேன்?”, என அவள் தாயார் அவளைத் திட்டினார்.

“அந்த அசிஸ்டண்ட் ஐயப்பன் ஆளுங்களோட வந்துட்டான்ம்மா…. மண்டைய உடைச்சிட்டு தான் வந்தேன்….. ஆனாலும் அவன சும்மா விட்றதா இல்ல” .

“என்னடி பண்ணப்போற?”

“விதுரன் சார பாத்துட்டு வரேன்”

“கேஸு கேஸுன்னு எத்தனை தான் போடுவ? ஏற்கனவே போட்ட நாலு கேஸ் இன்னும் இழுவைல இருக்கு”

“அதுக்கு ஆதாரம் தேடிட்டு இருக்கோம்மா….”

“உன் வச்சி அந்த வக்கீல் நல்லா வேலை வாங்கிக்கறான்…. கம்முனு நீ வக்கீலுக்கு படிச்சிருந்தா கேஸுக்கு குடுக்கற காசாவது மிச்சமாகும்”

“யம்மோவ் … அத்தனை செக்க்ஷன் என் மண்டைல நிக்காது… நான் என்ன ஆகறது? என் மூளை என்ன ஆகறது? படிச்சதுக்கே வேலை கிடைக்காம ஏதேதோ பண்ணிட்டு இருக்கேன்… இதுல வக்கீலு ஒன்னு தான் குறைச்சல்”

“இப்படி பேசற நேரத்துல உருப்படியா வச்சிருக்கற அரியர்ஸ் முடிச்சி இருக்கலாம்…. அடுப்படில கிடந்து உனக்கு காசு கட்டி படிக்கவச்சா முழுசா பாஸ் பண்ணாம சுத்திட்டு திரியற நீ…”

“நான் என்ன பண்ணட்டும் அன்னிக்கு நான் ஒழுங்கா தான் காலேஜ் போனேன். அங்க அந்த திமிரு பிடிச்சவளுங்க பண்ண வேலைல நான் பரிட்சை எழுத முடியாம போச்சி”, என உள்ளறையில் உடை மாற்றியபடி சத்தமாக பேசினாள்.

“உன்ன எவன் எக்கேடோ போகட்டும் னு இருக்க சொல்லல டி…. உன் வேலையும் நிக்காம செஞ்சி கத்துக்கன்னு தானே சொல்றேன்… அது உனக்கு மண்டைல ஏறுதா?”.

“இந்த மாசத்துல முடிச்சிடுவேன்ம்மா…. நீ சாப்பாடு எடுத்து வை… பசிக்குது.. காலைல இருந்து சாப்டல”, என கைகால் கழுவ வெளியே சென்றாள்.

“திங்காம திங்காம சுத்தி ஒரு நாள் ரோட்ல விழுந்து கிடக்க போற நீ… குடிச்சிட்டு உளுந்திருக்கன்னு அத்தனை பயலுகளும் நினைச்சிட்டு திட்டப் போறாங்க பாரு”, என அர்ச்சித்தபடி சாப்பாடு போட்டுக் கொண்டு வந்தார்.

“ம்ம். …ஆஹா…. என்ன சொல்லு வைதேகி உன் கைமணத்துக்கு நான் அடிமை”, என அந்த கருவாட்டு குழம்பை சாதத்தில் பிசைந்து , பொறித்த மீனை அதில் வைத்து சாப்பிட்டாள்.

டாக்டரிம் வாங்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு, ” நான் வக்கீல் சார பாத்துட்டு வரேன் மா”, எனக் கூறியபடி தயாரானாள்.

“அந்தாள என்ன பண்ண போற?”

“அவன தலைநிமிராம செஞ்சிட்டு வரேன்…. கதவ பூட்டிக்கோ….”, தன் ஸ்கூட்டியில் வெளியே கிளம்பினாள்.

அவள் சென்றது பிரபல வக்கீல் விதுரனின் அலுவலகம்.

“வக்கீல் சார்…. ஒருத்தன சாவடிக்கணும்”, எனக் கத்தியபடி உள்ளே அவள் செல்லும்போது விதுரன் முறைப்புடன் வெளியே வந்தான், “நான் என்ன ரௌடியா ?”, எனக் கேட்டபடி. ண

“நியாயத்த கேக்கறவங்க ரௌடியா இருக்கறதுல தப்பில்ல வக்கீல் சார்…. இந்தாங்க நீங்க கேட்ட எவிடென்ஸ்…. எனக்கு பணம் குடுக்கறதுக்கு பதில் இந்த கேஸ் நீங்க நடத்துங்க”, என ஷாலுக்குட்டியின் கேஸை தந்தாள்.

“விடு பண்ணிடறேன்… உனக்கு மாப்ள தேட்றாங்களாமே… ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல …. ? இந்தா இதை அம்மாகிட்ட கொண்டு போய் குடு”, என ஒரு கவரில் பணம் கொடுத்தான்.

“அட ஏன் சார் நீங்க வேற…. நான் கல்யாணமே வேணாம்னு இருக்கேன். அம்மா தான் இம்சை பண்றாங்க”, என சலிப்புடன் கூறினாள்.

“ஏன் வேணாம்? இப்படியே நீ எத்தனை நாளைக்கு சுத்தலாம்னு இருக்க? போய் ஒழுங்கா கல்யாணம் பண்ணி நல்ல குடும்பத்த உருவாக்கு… சமூகத்துல குற்றம் நடக்காம தடுக்க ஒரே வழி குடும்ப அமைப்பு தான். அங்க என்ன சொல்லி வளக்கறாங்களோ அதுதான் சமூகத்துல நடக்கும்…. “, என விதுரன் கண்டிப்புடன் கூறினான்..

“அப்பறம் ஏன் சார் என் அம்மா மாதிரி ஏமாந்து போறவங்களும் இருக்காங்க… ஏமாறவும் குடும்பத்துல தான் சொல்லி தராங்களா?”, எனக் கேட்டவள் குரலும் முகமும் யூகிக்கமுடியாததாக இருந்தது.

“ஏமாந்து போறது சகஜம் நேர்த்தி…. இன்னொரு முறை ஏமாறாம விழிப்புணர்வோட இருக்க கத்துக்கணும். தப்புல தான் எல்லாத்தையும் கத்துக்க முடியும்… தப்பே பண்ணலன்னா நீ எதுவும் கத்துக்கலன்னு அர்த்தம்….”

“அட போங்க சார்… நிறைய இப்படி வாட்ஸ்அப்ல வருது”, என சலிப்புடன் எழுந்தாள்.

“அதுல நிஜமும் இருக்குன்னு உனக்கு தெரியும் நேர்த்தி… பாத்து போ….மேனேஜர் ஆளுங்க உன்னை தேட்றதா தகவல் வந்தது”, என அவளை அனுப்பிவைத்துவிட்டு தன் வேலையை ஆரம்பித்தான்.

அவள் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்கும் போது அவளிடம் அடி வங்கியவனின் கைக்கூலி பின்னால் வந்து இடித்ததில் வண்டியை விட்டு விட்டு கீழே தனியாக உருண்டாள் .

“ஹேய் .. கண்ணு எங்க வச்சி ஓட்ரா நீ ? “ கை கால்கலில் இருந்த மணலை தட்டி விட்டபடி கேட்டாள் .

“உனக்கு தான் கண்ணும் தெரியாம இடமும் தெரியாம மோதர போல .. அதான் நல்லா புத்தி சொல்லி குடுக்க அனுப்பி வச்சாங்க .. “ அவளை தள்ளி விட்டவன் பேசினான் .

“எனக்கு தெரியறது இருக்கட்டும் நீ எதுக்கு வேலை செய்யற னு உனக்கு மொதல்ல தெரியுமா ?” வண்டியில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட சீராய்ப்பு எரிச்சல் கொடுத்து அவளது முகத்தை சுணங்க வைத்தது..

“பெரிய ஆள் கிட்ட எதுக்கு நீ வம்பு பண்ற பாப்பா ?
அமைதியா போயிடு .. “

“அவன் எவ்ளோ பெரிய புடுங்கியா இருந்தாலும் ஏழு வயசு பொண்ண அனுப்புவியா டா ?”

அவள் கேட்ட கேள்வியில் ஒரு நொடி தயங்கியவன் ,” உன் மேல கை வைக்கறமாறி நீ பண்ணிக்காத பாப்பா “.
“சரி சரி .. நீ அவனுக்கு வெளக்கு பிடிக்கற ஆள் போல .. உனக்கு எதுவும் புரியாது .. இப்போ என்ன மெராட்டனும் அவ்ளோ தானா .. உனக்கு அதுக்கு வாய்ப்பு இல்ல நே கெளம்பு .. “

“சொன்னா கேக்க மட்ட நீ? “ என அவன் கத்தியை எடுக்கும் முன் இவள் அங்கிருந்து மீண்டும் வக்கீல் வீடு இருக்கும் பக்கம் ஓடினாள் .

“ஹேய் .. நில்லு ..” என்று சத்தம் போட்ட படி அவனும் தொரத்திக் கொண்டு ஓடினான் .

விதுரன் எதிரில் வருவது கண்டு அவன் கார் ஐ நிறுத்தி ஏறிக் கொண்டாள் .

“ஏன் ஓடி வர?” விதுரன் .

“அங்க பாருங்க சார் “

இவனைக் கண்டதும் ரௌடி ஓடி விட்டான் .

“நீங்க நிஜமாவே பெரிய ரௌடி தான் போலவே வக்கீல் சார் .. உங்கள பாத்ததும் இப்டி ஓடறான்” நேர்த்தி அவனை கிண்டல் செய்தாள் .

“இந்தா உன் ஃபோன் .. இத குடுக்க வந்தது நல்லதா போச்சி .. உன் வண்டி எங்க ?” அவளை முறைத்தபடி கேட்டான் .

“ரோட் ல தான் இருக்கும் சார் .. “ என அவனுக்கு வழி கூறியபடி வண்டி இருக்கும் இடம் வந்ததும் இறங்கி கொண்டாள் .

“முன்னாடி போ “ என அவளை முன்னே விட்டு பின்னால் அவள் வீடு வரை சென்று விட்டு விட்டு அந்த பெரிய மனிதன் மேல் ஒரு கம்ப்ளைண்ட் ஃபைல் செய்து விட்டு தான் அலுவலகம் சென்று அடுத்த வேலையை கவனித்தான் .

நேர்த்தி அடுத்த நாள் அந்த டாக்டர் ஐ சந்தித்து பலமான ஆதாரத்துடன் கேஸ் ஃபைல் செய்தாள் .

நடுவில் குழந்தையைக் கடத்த நடந்த முயற்சியும் இந்த கேஸ் உடன் இணைக்கப்பட்டது . அவளையும் சில முறை கொள்ள முயற்சித்துத் தோற்றனர்.

அவளுக்கு ஏதாவது ஆனால் அந்த பெரிய மனிதன் மீது சந்தேகம் வந்து கைது செய்வார்கள் என்று அறிந்த பின் அவர்களும் ஏதும் செய்ய முடியாமல் உள்ளுக்குள் வன்மத்துடன் காத்து இருந்தனர் .

இரண்டு மாதங்களுக்கு பிறகு , சில பல போராட்டங்களைக் கடந்து அந்த கேஸ் இன்று தீர்ப்புக்கு வருகிறது .

நேர்த்தி விதுரன் மூலமாக அந்த பெரிய மனிதரை சட்டத்தின் முன்னால் நிற்கவைத்து தண்டனையும் பெற்றுக் கொடுத்துவிட்டாள்.
அவனும் இவளை உறுத்து விழித்து பார்த்து விட்டு , “ நீ எங்கயும் நிம்மதியா இருக்க முடியாம பண்றேன் இரு “.

“நீயே நிம்மதியா இருக்க முடியும்னு நம்பறப்போ நான் இன்னும் செமயா இருப்பேன் டா .. போலீஸ் அண்ணே இவன இழுத்துட்டு போங்க .. “என திமிராக கூறிவிட்டு இல்லம் வந்தாள் .

மூன்று மாதங்கள் கழித்து,” இந்தாடி இது நான் கஷ்டப்பட்டு போராடி வாங்கி குடுத்திருக்கற வேலை… இங்கயும் எதாவது வம்பு பண்ணிட்டு வந்து நின்னா சோறு போடமாட்டேன்… ஒழுங்கா போய்ட்டு வா”, என தாயின் ஆசிர்வாதத்துடன் தனது இருபத்தி ஐந்தாம் பணியினை நோக்கி நடந்தாள் நேர்த்தி……

நேர்த்தியின் பயணம் ……..

சுபம் .
உங்கள் ,
ஆலோன் மகரி .

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

13 Comments

  1. நேர்த்தி செமப்பா.சின்ன பசங்களையும் விட்டு வைக்க மாட்டேங்கிறாங்க இவனுங்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் இது போல் நடக்க வாய்ப்பு இல்லை.

  2. Kadha soooooper ah iruku sis. Nerthi Ku oru salute! Ipdi oruthavunga thatti ketadhaala sari. Illana Andha kozhandhayoda nilamaiya nenaika romba kashtama iruku. Finally a good story sis. All the best 💖

  3. கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  4. கதையின் போக்கு மிகவும் அழகாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  5. நேர்த்தி ரோல் அல்டிமேட்..ஷாலுகிட்ட அவ பேசுனது அருமை சிஸ்..ஏழு வயது குழந்தையையும் விட்டு வைக்கவில்லை🙂🙂🙂🙂🙂….‌.வைதேகி கேட்டாங்க பாரு கொலை பண்ணாம சும்மாவா விட்டுட்டு வந்த இதுக்குத் தான் எல்லாம் கத்துக்கொடுத்தனானு👌👌👌👌👌👌👌…..விதுரன் ரோல் நைஸ்…அழகான பயணம்.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐💐💐