Loading

நெஞ்சம் -12

 

நேத்ரன் பிரசன்னலெக்ஷ்மியுடன் வந்திறங்க கனகம் அதிர்ச்சியுடன் தனது மாமனாரை அழைத்தார்.

அத்தை எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள  போய் பேசிக்கலாம் என்றவன் வா பிரசன்னா என உள்ளே செல்ல முற்பட அரங்கநாதன் சத்தமிட்டார்.

தம்பி நீங்க மட்டும் உள்ள வாங்க இவ வரக் கூடாது என்று கத்த தாத்தா நான் சொல்றதை கேளுங்க…  அப்பா அவருக்கு பேசி புரிய வைங்க… பிரசன்னா உன்னை உள்ள வா னு கூப்பிட்டேன் என இழுத்து சென்றான்.

வெளியே நேத்ரனின் பெற்றோரும் இருக்க அவர்களும் அமைதியாக உள்ளே நுழைந்தனர்.

இங்க எங்க வந்த… ஏன் வந்த என கண்டபடி திட்ட பிரசன்னலெக்ஷ்மி தன் தாத்தாவின் காலில் விழுந்து கதறினாள்.

நான் தப்பு செஞ்சுட்டேன் தாத்தா மன்னிச்சிடுங்க தாத்தா உங்க பேச்சை மீறி போனது என்னுடைய தப்பு தான்…  என கதறியவளை சமாதானம் செய்யாமல் அமைதியாக பார்த்து இருக்க கனகம் வாய் மூடி கதறி அழுதார்.

தாத்தா அவ என்ன நிலைமையில் வந்திருக்காளோ தெரியலை…  ப்ளீஸ் அவளை எழுந்திருக்க சொல்லுங்க என பரிதி கெஞ்சினான்.

ஆரு தீரு இருவரும் கண்ணீருடன் பார்த்து இருந்தனர். 

தாத்தா அவ பாவம் ப்ளீஸ் ரொம்ப நொந்து போயிருக்கா….  என்ற நேத்ரன் பிரசன்னாவை தூக்கி நிறுத்தினான்.

நேத்ரா அவளை இங்க கொண்டு விட்டுட்ட இல்ல வா கிளம்பலாம்…  என அவனது தாய் சந்திரா சொல்ல அவரை முறைத்தவன்  அம்மா பேசாமல் இருங்க என்றான். 

தாத்தா பிரசன்னா செஞ்சது தப்பு தான்….  ஆனால் அதுக்காக அவ ரொம்ப அனுபவிச்சுட்டா….  ப்ளீஸ் அவளை மீண்டும் காயப் படுத்தாதீங்க என்ற நேத்ரனின் மீது முதன் முதலாக தீர்த்தன்யாவிற்கு நல்ல அபிப்பிராயம் பிறந்தது.  அவனை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள்.

நாங்க பட்ட அவமானம் காயத்தை விடவா தம்பி இவ பட்டிருக்க போறா…  இவ ஒருத்தி செஞ்ச தப்புக்கு இதோ இந்த ரெண்டு பேரையும் கட்டுபாடோட வளர்த்துக்கிட்டு அதுக ஆசைப்பட்டதை கூட செய்ய விடாமல் பார்த்துக் கொண்டு இருக்கோம்….  ஏன் தம்பி நாங்க தானே இவளை வளர்த்தோம் அப்ப எங்களுக்கு தெரியாதா என்ன செய்வது னு அப்படியா இவளை பாழுங் கிணத்தில் தள்ளிடுவோம்….  ஏன் எங்க நம்பிக்கையை பொய்யாக்கிட்டு எவனோ ஒருத்தன் கூட ஓடிப் போய் எங்க மானத்தை வாங்கனும்….  இப்ப இப்படி வந்து தலை குனிந்து நிற்கனும்…. 

எங்க நீங்க அவளோட காதலை ஏற்றுக் கொள்ள மாட்டிங்களோங்கிற பயம் தான் காரணம் தாத்தா….  மனசுல ஒருத்தரை வச்சுகிட்டு இன்னொருத்தன் கையால தாலி வாங்குறது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா….  அதே தான் பசங்களுக்கும்…. நம்மளை பெத்தவங்க வருத்தப்படுவாங்கன்னு தான்  பொண்ணுங்க பசங்களை பிடிச்சிருந்தா கூட அவாய்ட் பண்ணிட்டு போறாங்க…. அதையும் மீறி அவங்க மனதில் காதல் வருவதற்கு என்ன தான் செய்வாங்க…  நம்முடைய மனசை என்னைக்காவது ஒரு நாள் கண்டிப்பாக அப்பா அம்மா புரிஞ்சுப்பாங்கன்ற தைரியம் தான் அவங்களை வெளியே போக வைக்குது…… ஆனால் காதல் கை விட்டு போய் விட்டால் …. திரும்ப கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லையே….  அது கிடைக்காதுங்கிற பயத்தில் தானே ஓடி போயிடனும் னு முடிவு எடுத்திடுறாங்க….சில பொண்ணுங்க தைரியமா வீட்டில் தன் காதலுக்காக போராடி சம்மதம் வாங்கிடுறாங்க சிலருக்கு அந்த தைரியம் இருப்பதில்லை….  பிரசன்னா மேல தவறு இருக்கு தான் அதுக்காக அவளை இப்படி ஒதுக்கி வைத்து தண்டிக்கனுமா …. நேத்ரன் பிரசன்னாவிற்கு ஆதரவாக பேசினான்.

தம்பி நீங்க இந்த வீட்டுக்கு வரப் போற மாப்பிள்ளையா இருக்கலாம் அதுக்காக இவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதீங்க என்றார் அரங்கநாதன் கராறாக

இல்லை தாத்தா…. நான் தான் பேசி ஆகனும்….  நான் தானே அவளை அழைச்சுட்டு வந்தேன் என்று பதிலுக்கு அவன் பேச….  பிரசன்னா தான் சென்று விடுவதாக அழுதாள்.

தீர்த்தன்யா தைரியமாக முன் வந்து  தாத்தா….  எங்களுக்காக அவளை மன்னிக்க கூடாதா….  நாங்க தான் உங்க சொல் படி கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிட்டோமே பிறகு என்ன….. இப்ப அவளை போக சொன்னா எங்க போவா…  ஏதோ பிரச்சினை ஆகி தானே இங்க வந்திருக்கா….

தீரு புரியாம பேசாத….  இன்னும் மூணு நாள் ல கல்யாணம்…  சொந்த பந்தங்கள் எல்லாம் வந்திடுவாங்க….  நேத்ரன் தம்பிக்கு  இவளை பத்தி தெரிஞ்சுடுச்சு பரவாயில்லை னு அவங்க ஏத்துக்கலாம்… ஆனால் தஞ்சாவூர் காரங்களுக்கு என்ன சொல்றது… எல்லோருக்கும் வெறும் வாய்க்கு அவல் கொடுத்த மாதிரி ஆகிடாதா….  ஒண்ணுக்கு ரெண்டு கல்யாணத்தையும் நல்லபடியா நடத்தி முடித்து அடுத்து உங்க கல்யாணத்தையும் நடத்தனும்… என்றவர்  தயவு செஞ்சு இங்கிருந்து போயிடு….  நீ எங்க குடும்ப மானத்தை வாங்கினது வாங்கியதாகவே இருக்கட்டும் …. என்றார் சற்றும் அசராமல்.

நேத்ரன் மீண்டும் ஆரம்பித்தான்….  அவளுக்கு என்ன ஆச்சுன்னு கூட கேட்க மாட்டிங்களா….  பாவம் தாத்தா அவ ப்ளீஸ்….  என்றிட அவரோ என்ன ஆயிருக்கும் …..கூட்டிட்டு ஓடியவன் நட்டாத்துல விட்டுட்டு போயிருப்பான்….  அதான் நடந்திருக்கும்… என ஏளனமாக சொல்ல பிரசன்னா அழுதபடியே ஆமா விட்டு போயிட்டார்… கடைசி வரையில் உன் கூடவே இருக்கேன் னு சொன்னவர் கல்யாணம் ஆகறதுக்குள்ளவே  இந்த உலகத்தை விட்டு என்னை தனியா தவிக்க விட்டு போயிட்டார்…. இப்படி நடக்கும் னு நாங்க கனவுலையும் நினைக்கலை…  என கதறி அழுதாள்.

எல்லோருக்கும் திக்கென்று இருந்தது. 

கனகம் அதற்கு மேலும் பொறுக்க இயலாமல் என்னடி சொல்ற….  அப்புறம் ஏன் டி இத்தனை நாளா எங்க கிட்ட வரலை….  என தன் மகளின் நிலை கண்டு வேதனையுடன் கதற எல்லோரும் கண் கலங்கியபடி நின்றிருந்தனர்.

பிரசன்னா கண்களை துடைத்து கொண்டு….  அவர் வீட்டிலும் எங்களை ஏத்துக்கலை மா….   முதல்ல நல்லா பேசி ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா சொல்லி கூட்டிட்டு போனவங்க….  எங்களை நம்ப வச்சு ஏமாத்தி  அவரை  ஏதேதோ பேசி மனசை மாத்த முயற்சி செய்யும் போது மனசொடிஞ்சு தற்கொலை பண்ணிக்கிட்டாரு….  அவர் முகத்தை கூட பார்க்க விடாமல் என்னை அடிச்சு துரத்தி விட்டுட்டாங்க….  என்னை என் நண்பர்கள் காப்பாத்தி அவங்களோட பெங்களூரு கூட்டிட்டு போனாங்க இங்க வரலாம் னு நினைச்சா ஏற்கனவே ஓடிப் போய் உங்களை அவமானப்படுத்திட்டேன் மறுபடியும் திரும்பி வந்தா….  ஆரண்யா தீர்த்தன்யா ரெண்டு பேரையும் என்னை வச்சு தப்பா பேசினா அவங்க வாழ்க்கையும் கெட்டு போயிடும் னு தான் வரலை மா….  ஆனால் நேத்ரன் மாமா என்னை ஆபிஸ்ல பார்த்துட்டு பிடிவாதமா அழைச்சுட்டு வந்தாங்க நான்  இங்கிருந்து காலையில கிளம்பிடுறேன் மா….  இந்த ஒரு நாள் மட்டும் இங்க தங்க இடம் கொடுங்க மா….  கடைசி வரையில் இந்த ஒரு நாள் ராத்திரியை நினைச்சுகிட்டே நான் வாழ்ந்திடுறேன் என கதறினாள்.

நீ எங்கேயும் போக வேண்டாம் டா பெத்தவங்க நாங்க இருக்கையில் நீ ஏன் போகனும்….  ஊர்ல உலகத்தில் யார் தான் தப்பு செய்யலை….  என கனகம் அழ அரங்கநாதன் அதட்டினார்.

கனகம் என்ன பேசுற நீ….  கல்யாணத்தை வச்சுகிட்டு….  இவ எப்படி இங்கே தங்க முடியும்….  எதுவா இருந்தாலும் இந்த கல்யாணம் முடியட்டும் என்க அது வரைக்கும் அவ எங்க மாமா போவா….  என முதன் முறையாக தன் மகளுக்காக பரிந்து பேசினார் கனகம்.

இல்ல தாத்தா நான் நிஜமா காலையிலேயே கிளம்பிடுவேன் சத்தியமா போயிடுறேன் இந்த ஒரு நாள் மட்டும் தங்க அனுமதி தாங்க உரிமைபட்டவள் ஒரு நாள் தங்க இடம் கேட்டு கெஞ்சினாள்.

வரதராஜன் தன் தந்தையை பாவமாக பார்க்க அரங்கநாதன் சற்று மனமிறங்கி ஒப்பு கொண்டார்.

நேத்ரனின் தாயோ  சரி அவளை தான் கொண்டு வந்து விட்டாச்சு இல்ல….  வா நாம போகலாம் என சொல்ல கனகம் இந்த ராத்திரி நேரத்தில் வேண்டாம் என்று சொல்லி  மறுக்க கேட்காமல் கிளம்பி விட்டார்.

அன்றிரவு தன் மூத்த மகளை மடியில் போட்டபடி கண்ணீர் வடித்து கொண்டிருந்தார்.

அம்மா ஏன் இப்ப அழற அக்காவை இனி இங்கிருந்து அனுப்ப வேண்டாம்….  தாத்தா கிட்ட நான் பேசுறேன் நீங்க வருத்தப் படாதீங்க….  அக்கா எங்கேயும் போக மாட்டா …என தீர்த்தன்யா சமாதானம் செய்ய கனகம் சற்று அமைதியானார். சகோதரிகள் மூவரும் விடிய விடிய பேசிக் கொண்டிருக்க இளம்பரிதி அமைதியாக அவளை பார்த்து கொண்டிருந்தான்.

ஏன் டா பரிதி என் கிட்ட பேச மாட்டியா…  நான் செஞ்சது தப்பு தான் டா  மன்னிச்சிடு டா

ப்ப்ச்  அக்கா விடு அதை எல்லாம் பேசாத… நான் பேசுறேன்…  என்க உடன் பிறந்தவர்கள் ஒன்றாகி போயினர்.

மறுநாள் காலையில் கிளம்புவதாக சொன்ன பிரசன்னாவை நீ அமைதியா இரு டி நாங்க எதுக்கு இருக்கோம் பேசிக்கிறோம் என சமாதானம் செய்து ஆரண்யா தான் தன் தாத்தாவிடம் பேசி சம்மதிக்க வைத்தாள்.  ராகவ் குடும்பத்தில் தான் பேசிக் கொள்வதாக கூறி  விட்டனர் வரதராஜனும் கனகமும் .

இளம்பரிதி கார்த்திகா திருமண நாளும் வந்து விட்டது… பிரசன்னா தான் மண்டபத்திற்கு வரவில்லை என்று கூறி வீட்டிலேயே இருந்து கொள்ள மண்டபத்திற்கு பெண் அழைத்து வந்து விட்டனர். திருமண மண்டபம் உறவினர்களால் நிரம்பி வழிய ராகவ் ஆரண்யாவை தேடி கொண்டிருந்தான். அவளிடம் பேசிட வேண்டும் என்று…  தீர்த்தன்யா தான் கண்ணில் தென்பட்டாள்.

மீண்டும் தவறாக நினைத்து கொண்டு தீர்த்தன்யாவை தன்னோடு அழைத்து வந்தான்.

இப்ப எதுக்கு தனியா கூட்டிட்டு வந்தீங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க …

ஆரண்யா உங்க கிட்ட பேசனும் என்றிட அவளோ சிரிப்புடன் அதுக்கு நீங்க ஆருவை அழைச்சுட்டு வரனும் நீங்க அழைச்சுட்டு வந்தது தீருவை  என்க அவனோ தலையை சொறிந்து கொண்டான்.

பரவாயில்லை என்னை நீங்க அழைச்சுட்டு வந்ததும் நல்லதுக்கு தான்…  உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்…..  எப்போ ஃப்ரியாகுவிங்க … 

கல்யாணம் முடிஞ்சதும் ஃப்ரீ தான்…  சொல்லுங்க…

சரி நீங்க  ஃப்ரி ஆகிட்டு கூப்பிடுங்க என்றவள் சென்று விட்டாள்.

ராகவிற்கு தான் என்ன விஷயம் என்று தெரியாமல் குழம்பிப் போனான்.

இளம்பரிதி மனதில் ஆயிரம் குழப்பங்கள் சூழ்ந்திருந்தாலும் கார்த்தியை அவளின் மனதுக்காகவே நன்றாக வைத்து கொள்ள வேண்டும் என முழு மனதுடன்  நிறைந்த சுப முகூர்த்த நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ  தன் வாழ்வின் இறுதி வரை  அவளுக்கு நல்ல துணையாக இருக்க வேண்டும் என்று எண்ணி பொன் தாலி பூட்டி தனது மனையாளாக ஏற்றுக் கொண்டான்.

ராகவிற்கு மனம் நிறைந்து போனது எவ்வளவு பிரச்சனையை சமாளித்து இந்த திருமணத்தை செய்தான் என்று அவன் மட்டுமே அறிவான்…  தன் தந்தைக்கு தனியாக பணம் கொடுத்து திருமணத்தன்று எந்த பிரச்சினையும் செய்து விட கூடாது என உலகில் உள்ள அனைத்து கடவுளையும் வேண்டி கொண்டான்.  இதில் தனது அக்காவிற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து அவன் பாடு அத்தனை திண்டாட்டம் ஆகிப் போனது.

திருமணம் உறுதி செய்து விட்டாலும்  ஏனோ நேத்ரன் தீர்த்தன்யாவிடம் இன்று வரை பேசவே இல்லை….  அவளும் கண்டு கொள்ளவில்லை.  திருவிழாவில் சுற்றி சுற்றி சகோதரிகள் இருவரையும் வளைத்து வளைத்து பார்த்து கொண்டிருந்தவன் ஏனோ இன்று வரை அவர்களை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

 

பெண் வீட்டிற்கு மறு வீடு அழைத்து செல்ல தீர்த்தன்யா தானும் செல்வதாக கூறி காரில் ஏறினாள்.

“அண்ணா பேசலாமா… “”என சைகை செய்ய  அவனோ வேண்டாம் என்று மறுக்க அதை காதில் வாங்காமல்.,” ஏன் ராகவ் நீங்க சென்னையில் எந்த பிராஞ்சில் வேலை பார்த்திங்க….  ஆரு சொன்னா கொடைக்கானலில் மீட்டிங் நீங்களும் முகில் சாரும் ஆர்கனைஸ் பண்ணதா… அதான் கேட்டேன் என்று சொல்லவும்…. ஆமாம்…  அதை மறந்துட்டேன் பாரு….  முகிலும் நானும் ஒரே ரூம் மேட் தான்  என் பெஸ்ட் ப்ரெண்டு…  எனக்கு மலேசியாவில் வேலை ஏற்பாடு பண்ணது கூட அவன் தான்…  சாரி சாரி இப்ப அவன் இவன் னு கூட சொல்ல முடியாது…  ஓனர் வேற “என சிரித்தான்.

கார்த்தியும் தன் பங்கிற்கு “அந்த அண்ணா ரொம்ப நல்ல அண்ணா….  அவங்க மட்டும் இல்லைனா எங்க வீட்டு கடன் எல்லாம் அடைச்சிருக்கவே முடியாது… ” என்க கண்டிப்பாக தான் நினைத்தது நடந்திடும் என்று நினைத்தாள் தீரா.

அதற்குள் வீடு வந்து விட…  எல்லோரும் வாயிலில் நின்று இருந்தனர்.

மணமக்கள் இருவரும் இணைந்து நிற்க ஆரத்தி எடுத்து கொண்டிருக்க அங்கிருந்த பெண்மணியோ…  “ஏன்  ராகவா நீயும் உன் வருங்கால பொண்டாட்டியை கையோட கூட்டிட்டு வந்துட்டியா….” என கிண்டல் செய்ய ராகவ் அவசரமாக மறுத்தான்.

“அத்தை இது….  அவங்களோட தங்கச்சி ரெண்டு பேரும் ரெட்டை பிள்ளைக அதான் ஒரு மாதிரியே இருக்காங்க… “என்றான்.

“அப்படியா….  பார்த்துடா கல்யாணத்தன்னைக்கு பொண்ணை மாத்தி தாலி கட்டிட போற…  குடும்பத்தில் குழப்பம் உண்டாகிற போகுது” என குபீர் சிரிப்பு சிரித்தார்.

“அட பாவி  மனுசி என்ன பேச்சு பேசுது… “என முணுமுணுத்துக் கொண்டு வெளியே சிரித்துக் கொண்டாள்.

 

பால் பழம் கொடுத்து விட்டு மணமக்களை உட்கார வைத்து இருக்க ராகவை தனியே வரும் படி அழைத்தாள்.

 

முகில் ஆரண்யாவை பற்றி அனைத்தையும் கூறி முடித்து விட்டு அவனது பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள் தீரு.

இப்போது அதிர்வது ராகவின் முறையாகிப் போனது.

“அவன் இது வரை என் கிட்ட இதை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை தீரு…  சத்தியமாக எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணத்திற்கு சம்மதிச்சு இருக்க மாட்டேன்…  அவனை மீட் பண்ண கூட முடியலை… ஃபோன்  வேற ஸ்விட்ச் ஆஃப் னு வருது இப்ப என்ன செய்யலாம்…. ??”

“நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்காதீங்க… உங்களுக்கு ஆரு மேல ஏதாவது”  என்றிட அவசரமாக மறுத்தான்.

“இதை பத்தி பேச வேண்டாம் தீரு இப்ப அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க என்ற வழியோ அதை மட்டும் பேசுவோம்…. இந்த கல்யாணத்தை நிறுத்த என்ன பண்ணலாம்…  அதை யோசி” என்றான்.

“எனக்கும் தெரியலை ராகவ் ஆனா கண்டிப்பாக இந்த கல்யாணம் நடந்தா ஆரு சந்தோஷமாக இருக்க மாட்டா… என்ன இந்த விஷயத்தில் உங்களை கஷ்டப்படுத்துறது தான் வருத்தமா இருக்கு” என்க

 

அவனோ தன் வருத்தத்தை மறைத்து கொண்டு .,”வேணுன்னா நீ என்னை கல்யாணம் பண்ணிக்க “என்க

 

தீரு சிரித்துக் கொண்டே .,”ஏன் உங்களுக்கு….  எனக்கு மூணு மாசம் கழிச்சு கல்யாணம்  இதை என்னை கட்டிக்க போற லூசு கேட்டுச்சு அவ்வளவு தான்…” 

“அது என்ன மா லூசுங்கிற…  பாவம் அந்த பையன் ஆமா யார் மாப்ள..  ” என இருவரும் இயல்பாக பேசிக் கொண்டனர். 

“பேரு நேத்ரன் என் மாமா பையன் தான்…” என சொல்ல ஓஓஓ என கேட்டு கொண்டான்.

“தீரு கிளம்பலாம்…” என பரிதி சொல்ல இருவரும் உள்ளே வந்தனர். 

கார்த்தி கண் கலங்கியபடி எல்லோரிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு தன் புகுந்த வீட்டிற்கு கிளம்பினாள்.

அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு ராகவ் முகிலை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று மண்டையை பிய்த்து கொண்டிருந்தான்.

…… தொடரும்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்