142 views

மாலை நேரம் அது…. அந்த பூங்காவில் சிறு சிறு குழந்தைகள் அங்கும் இங்கும் திரிந்து கொண்டும் தனது மழலை மொழியால் கதைத்துக் கொண்டு இருந்தனர்.

தனது உடையில் இருக்கும் பாக்கட்டில் தனது கரங்களை நுழைத்து கொண்டு எதையோ ஒன்றை வெறித்து கொண்டு இருந்தாள்  அந்த பதினைந்து வயது சிறுமி.       

அவளின் பின்னே ஒரு உருவம் வந்து நின்று கொண்டு இருப்பதைக் கூட கவனியாமல் அந்த மரத்தினாலான மேசையில் அமர்ந்து இருந்தாள்.

அந்த உருவம் பே….. வ்வ்வ்வ் என்று கத்தியதில் திடுகிட்டு ஷீட் என்று அலறியவளை தன் கரத்தை கொண்டு அடைத்தது அந்த பெண்ணின் கரம்

“ஹேய்! நான் தான் டி யுவி எதுக்கு இப்டி கத்துற”என்று கூறியவளை அப்போது தான் கவனித்த யுவி

“இப்டி தான் வந்து பயம் காட்டுவியா? ஒரு நிமிஷம் எனக்கு அப்டியே தூக்கி வாரி போட்டுருச்சி”என்று வேர்வை துளிகளை துடைத்து கொண்டே யுவிஷா கூற 

“அச்சோ ஐ அம் சாரி பேபி.. நான் இப்போ தான் உங்க வீட்டுக்கு போனேன்.. அங்க உங்க மம்மி இருந்தாங்க அவங்க தான் சொன்னாங்க நீ பார்க்க்கு வந்து இருக்கனு” என்று ஜெசி கூற

“ஓகே ஓகே” என்று கூறிய யுவியுடம் எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை

ஜெசியும் யுவிஷாவும் ஒரே பள்ளியில் பயிலும் மாணவர்கள். இரண்டு பேரும் ஆறாம் வகுப்பில் இருந்து நெருங்கிய சிநேகிதிகள்.

“யுவி எதுக்கு இவ்ளோ சோகமா முகத்த வைத்துட்டு இருக்க? வீட்ல எதுவும் ப்ரோப்லேமா?”என்று ஜெசி கேள்விகளை அடுக்கினாள்.

“நத்திங்”என்ற ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து விட்டு மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

“யுவி நீ நத்திங்னு சொல்லும் போதே எனக்கு உன் நிலைமை புரியுது இன்னிக்கும் அது நடந்துதா?” என்று ஜெசி கண் சிமிட்டி கேள்வி எழுப்பினாள்

பச் என்று முகத்தை கோணலாக வைத்து கொண்டு “நான் வீட்டுக்கு கிளம்புறேன்”… கூறி விட்டு விறுவிறுவென்று நடந்து செல்பவளை ஜெசி சுருங்கிய முகத்துடன் அவளின் கையில் இருந்த லெட்டர்ரை தன் விரலை கொண்டு தடவி கொடுத்தாள்.

அதே வேளையில்….

தட்ஸ் இட், தேங்க்ஸ்  ஃபோர் யுவர் பேஷியேன்ஸ் என்று  ஃபைல்ஸை மூடி விட்டு அங்கு இருந்த நாற்காலியில் அவன் அமர்ந்துக் கொண்டான்.

“ரியலி! யூ டன் அ கிரேட் ஜாப் மிஸ்டர் விராட்”என்று மனதை திறந்து அந்த கான்ஃப்ரண்ட்ஸ் ஹாலில் இவ்வளவு நேரமும் விராட்டின் ப்ராஜெக்ட் எக்ஸ்பிளானேஷேனை கவனித்துவிட்டு பாராட்டினார் அந்த கம்பெனியின் ஹெட்.

“தேங்க் யூ சோ மச் சார்”என்று மென்னகை புரிந்தவன் சீட்டில் அமர்ந்து கொண்டான்.

சில பல கலந்துரையாடலில்  மீட்டிங் முடிந்தது.

“மச்சான் வேற லெவல் ப்ரெசென்டேஷேன் டா… ட்ரீட் எங்க?? ” என்று விதுர் கேட்க

அவனின் சிநேகிதனை ஒரு பார்வை பார்த்த விராட், மச்சான் இது நல்லப்படிய சக்ஸஸ் ஆகட்டும் அப்றம் உனக்கு ட்ரீட் என்ன விருந்தே வைக்குறேன் என்று விராட் புன்னகை முகம் மாறாமல் கூற

கண்களை உருட்டி கொண்டே விதுர் “அவ்ளோ நாள்லாம் வெயிட் பண்ண முடியாது.. இப்போவே குடு டா” என்று கூற

“பச்ச் என்ன டா கண்டிப்பா இன்னிக்கே கொடுக்கணுமா?நானே பாப்பாவோட ஸ்கூல் பீஸ் கட்டணும்னு மணி சேவ் பண்ணிட்டு இருக்கேன்” என்று கூறியவன் நீண்ட மூச்சை இழுத்து விட்டான்.

“டேய் மச்சி சாரி டா நான் விளையாட்டுக்கு தான் கேட்டேன் நீ எதுவும் சீரியசா எடுத்துக்காத”… விதுர்

“இட்ஸ் ஓகே டா “என்று விராட் கூறிவிட்டு எதையோ யோசிக்க ஆரம்பித்தான்.

“சரி மச்சி கேட்கணும்னு இருந்தேன் இன்னுமா அனி சிஸ்டர் அந்த மாறி நடந்துட்டு இருக்காங்க?”என்ற விதுரின் கேள்விக்கு முகம் சுருங்கியவன் “ஆமா டா, என்னிக்கு என்னோட பேச்சை கேட்ருக்கா எப்போவும் தலை கணத்தோட தானே எல்லாமே செய்றா” என்று சலிப்புடன் விராட் பேசுவதை கண்ட விதுர் நண்பனின் நிலைமையை மாற்றுவதற்கு “சரி சரி எல்லாமே சரி ஆகிடும் அங்க பாரு அவ உன்னையே தான் வைத்த கண் வாங்காமல் பார்க்குறா”என்று திசை திருப்பினான்.

“ஓஓ இது பேரு தான் டிஸ்ட்ரேக் பண்றதா மச்சி?? இடுப்பில் கை வைத்த வண்ணம் நக்கலாக விராட் கேட்க

அதற்கு அசடு வழிந்து கொண்டே “ஈஈஈ ஆமா,பட் இப்போ உண்மையாவே உன்ன அவள் பார்க்குறா” என்று வலது புற கேபினை கை காண்பித்தான்.

எதார்த்தாமாக திரும்பிய விராட்டும் அதை கவனித்து கொண்டு,” ஐ திங்க் ஷி இஸ் மேட்… கடவுளே எனக்கு மேரேஜ் ஆகி பதினைந்து வயசுல ஒரு பொண்ணு இருக்குறா அது கூட தெரியாமல் பாம்பு முட்டைய விழுங்குற மாதிரி பார்க்குறா “என்று தலையில் அடித்து கொண்டவனை 

வாயை பொத்தி சிரித்த விதுர் நண்பனை கலாய்க்க ஆரம்பித்தான்..”விடு மச்சான், சன்தூர் மம்மி மாதிரி நீ சன்தூர் டாடி மாதிரி இருக்க அதான் அவளும் சைட் அடிக்குறா… ரசிக்குறதுல எதுவும் தப்பு இல்லையே “என்று கைகளை விரித்து கூறுவனை விழி இடுங்க பார்த்தவன்

“போதும் விளையாடுனது,நீ சொல்றதும் சரி தான் என்ன பண்றது லவ் பண்ணி ரொம்ப சீக்கிரமா மேரேஜ் பண்ணிக்கிட்டா இப்டி யங்கா தான் தெரிவேன் “

மேலும்… “இந்த பொண்ணுங்க பார்த்து என்ன பிரயோஜனம் பார்க்க வேண்டியவள் பார்க்க மாட்டிக்குறா அதானே பிரச்சனையே” என்று நொந்து கொண்டவனை

“எல்லாமே சீக்கிரமா மாறும் நம்பிக்கைய மட்டும் இழந்துடாத மச்சி,வா நம்ம ப்ராஜெக்ட் பத்தின பிளான் பண்ணலாம்”என்று விதுர் தன் நண்பனை அழைத்து கொண்டு சென்றான்

அதே சமயம்…..

பூங்காவில் இருந்து வீடு திரும்பிய யுவிஷா ஹாலில் இருக்கும் சோபாவில் அமர்ந்து கொண்டு ஹாலிவுட் ஹாரரர் மூவியை சுவரசியமாக பார்த்து கொண்டு இருந்தாள்.

தனக்கு தனிமையில் இருப்பது ஒன்றும் கடினம் அல்ல என்பது போல் இருந்தது அவளின் பொழிவில்லா முகம்..

சரியாக தூங்காமல் இருக்கிறாள் என்பதை அவளின் கண்களில் கீழ் இருந்த கருவளையம் காட்டிக் கொடுத்தது…

திடிரென்று அந்த படத்தில் ஹீரோயின்னை நோக்கி வந்த அந்த அகோரமானா பேய் நொடி பொழுதில் அவளின் கழுத்தை அழுத்தி கொடூரமாக சிரிப்பதை சீட்டின் நுனியில் அமர்ந்து ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்க சோபாவை விட்டு எழுந்தவள் வேகமாக அடிகளை எடுத்து வைத்து கதவை திறந்தாள்.

அவளின் எதிரே நின்றவரை பார்த்தவளின் கண்கள் தானாக சிவக்க ஆரம்பித்தது… கடும் எரிச்சலுடன் முறைத்து கொண்டே நின்று இருந்தாள்….

தொடரும்…. ❤️

Hi frds, unga comments ku eagerly waiting pls support me… இந்த தளத்தில் இது என் முதல் தொடர் கதை படித்து விட்டு உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் கொடுங்கள் 🥰❤️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    3 Comments

    1. அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.