Epilogue :
5 வருடங்களுக்குப் பிறகு …
” அஸ்வின் தங்கச்சி பாப்பா வ பாத்துக்கோ டா … அம்மா 2 மினிட்ஸ் ல வந்துடுறேன் ” என்று தன் மூத்த மகனாம் 8 வயது நிறை அஸ்வினிடம் கூறிக் கொண்டிருந்தாள் நீது .
” ஏய் பொண்டாட்டி எவ்வளவு நேரம் டி ” பிரபஞ்சன் .
” இருங்க வர்றேன் . இந்த முந்தானை வேற.. ” நீது .
” ஹ்ம்ம் ” பிரபஞ்சன் .
” அப்டி என்ன ப்ராப்ளம் னு கோர்ட் க்கு போகணும் . கோயிலுக்குப் போக போடுற பட்டு சேலையக் கோர்ட்டிற்கு கட்ட வைக்குறீங்க . பாக்குறவங்க கேவலமா பாப்பாங்க ” நீது .
” நீ ஒண்ணும் அரையும் குறையுமாக எதோ ஒண்ண போடலியே . லட்சணமா பட்டுச்சேலை தானே கட்டி இருக்க . பேசாம வா .. ” பிரபஞ்சன்
அதற்குள் 5 மாத கைக்குழந்தையான கயல் தன் அழகிய குரல் ரீங்காரமாய் ஓவென அழ அஸ்வின் , ” அம்மு அம்மு … தங்கச்சி ரொம்ப அழுறாமா … நீங்க வாங்க அம்மா . இல்ல அப்பாவயாச்சும் வர சொல்லுங்க. நௌ அ டேஸ் டேடி இஸ் டூடூடூ பேட் . ஹ்ம்ம் ” என்று வழக்கம் போல் சிறுவன் கூற நீது , ” அஸ்ஸூக்குக் கூட தெரியுது . போங்க போய் பாப்பாவ எடுங்க . இல்ல கயல் கத்தி ஆர்பாட்டம் பண்ணிடுவா . ”
கயலைத் தூக்கி வைத்துக் கொஞ்சவும் அழுது கொண்டே இருந்தவள் சிரிக்க ஆரம்பித்தாள் .
அந்த நேரத்தில் கீர்த்திகா மற்றும் ஆதிரன் ஜோடியும் அவர்களின் அழகி மதியரசியும் வர அஸ்வினுக்குக் கொண்டாட்டம் . அடுத்தது நிரஞ்சன் தமிழினி மற்றும் அவர்கள் வழித்தோன்றல்களான தியாவும் அதிரனும் வந்தனர் . அவர்களைத் தொடர்ந்து மித்ராவும் அவள் மகள் சித்ராவும் வர வீடு நிறைந்து வழிந்தது . எல்லாரையும் அவரவர் காரில் ஏற்றிக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் நோக்கி விரைந்தான் பிரபஞ்சன் . வழி முழுவதும் சிறுவர்களின் அதகளி .
எல்லாரிடமும் ஒரே ஒரு கேள்வி . எதற்காக கோர்ட்டிற்கு செல்ல வேண்டும் . ஆனால் அடிக்கடி ஆண்களில் நிரஞ்சன் தவிர மற்றோரிடம் அர்த்த புன்னகை . ஆனால் யாரும் இதைக் கவனிக்கும் நிலையில் இல்லை . நான்கு கார்களும் ஒரே நேர்க்கோடாக ரோட்டில் சீறிப்பாய்ந்து . கூடவே ஒரு புது கார் வந்து ஒட்டிக் கொள்ள எல்லாரும் யோசனையாகப் பார்க்க அதில் பெரியோர்கள் இருந்தனர் . கல்யாணி பிரபஞ்சனுக்கு எதோ சிக்னல் கொடுக்க , ” ஹோ…. ” என்று கத்தினான் . மற்றவர்களுள்ளும் இந்த உற்சாகம் பரவ மற்றைய ஆண்களும் கத்தினர்.
” என்னங்க என்னங்க … நேத்து தான் நம்ம குடும்ப வக்கில் பேசும்போது சொன்னாங்க நிரஞ்சன் அண்ணா சொத்து மேல யாரோ கேஸ் போட்டிருக்காங்களாமே . யாருங்க அது … ” நீது
” அது உனக்கு எதுக்கு புஜ்ஜி . நீ நல்லா என்ஜாய் பண்ணி லைஃப் அ வாழு . இதையெல்லாம் யோசித்துக் கஷ்டப்படாமல் இரு . ஓகே ” பிரபஞ்சன் .
” கரெக்டா சொன்னீங்க டாடி . இந்த மாம் இத கேட்ட நேரத்தில் இருந்து சரி இல்ல . எப்பயும் அங்கிளோட ஃபோட்டோ அ எடுத்து வச்சுட்டு பாத்துட்டே இருக்காங்க . அய்யோ நேத்து பூரா அங்கிள இருக்க விடாம ஃபோன் போட்டு ஃபுல்லா பேசிட்டே இருந்தாங்க . பாவம் அங்கிள் . நைட் தான் இவங்க கதை முடிஞ்சுனா பாத்துக்கோங்களேன் . ” அஸ்வின் .
” அஸ்ஸூ … அஸ்ஸூ … நோ நோ ” என்ற நீதுவின் வார்த்தைகள் காற்றிலே கரைந்கரைந்தது .
” இவ்வளவு பண்ணுனியா . ஹய்யோ … அதுல நாங்க ஜெயிச்சுட்டோம் . அதுக்குத் தான் கோர்ட்டுக்குப் போறோம் . நிரஞ்சனுக்கு இது தெரியாது . ” பிரபஞ்சன் .
” அது ஓகே . ஆனா எதுக்காக நாங்க எல்லாம் கோர்ட்டிற்கு வரணும். புதுசு புதசா என்ன எல்லாமோ சொல்லுறீங்க . போதாக்குறைக்கு அம்மா அப்பா மாமா அத்தை லாம் வந்துருக்காங்க . ” நீது .
‘ ஆண்டவா இவ இம்புட்டு பிரில்லியண்டா இருக்குறாளே … . சரி சமாளிப்போம் ‘ என்று நினைத்தபடி திரும்பி பக்கத்தில் வந்துகொண்டிருந்த காரைப் பார்க்க அவர்களும் மாறி மாறி இதேபோல் சமாளித்துக் கொண்டே வந்தனர் . ஆனால் மித்ரா மற்றும் பெரியோர் வந்த கார்களில் மட்டும் குசுகுசு என்று நையாண்டி சிரிப்போடு பேசியபடி வந்துகொண்டே இருந்தனர் .
கோர்ட்டை நெருங்க அனைவரும் ஆர்வமாக இருந்தனர் . அவர்களின் வக்கீலின் ஜூனியர்கள் வந்து அடுத்த தீர்ப்பு அவர்களுக்குத் தான் என்றிட அனைவரும் கிளம்பி கோர்ட்டில் நுழைந்து கும்பலாக ஒரு இடத்தில் இருந்தனர் .
வழக்கை விசாரித்த நீதிபதி , ” இந்த சொத்துகள் அனைத்தும் நிரஞ்சன் மற்றும் நீது கிருஷ்ணா எனும் நீதுவினுடையது என்பது நமக்குக் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் ஊர்ஜிதம் ஆகிறது .
மேலும் அடுத்தவருடைய சொத்தை தன்னுடைய சொத்து என்று வாதாடிய மிஸ் சந்திரா அவர்களை இந்த நீதிமன்றம் எச்சரிக்கிறது . நீது மற்றும் நிரஞ்சன் ஆகிய இருவருக்கும் மான நஷ்ட ஈடாக 1 கோடி ரூபாய் வழங்கும்படியும் கோர்ட்டிற்கு அபராதமாக 50,000 ரூபாய் செலுத்தும்படியும் தீர்ப்பு வழங்குகிறேன் .
மேலும் பெற்றோரைப் பிரிந்து கஷ்டப்படும் குழந்தைகளின் நிலை எண்ணிலா கஷ்டம் நிறைந்தது . அதிலும் பெண் குழந்தைகளின் நிலை சொல்ல முடியாதது . விபத்து நடந்த இடங்களில் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவிக்குக் கூட வராதவர்கள் மத்தியில் நீதுவின் உயிரைக் காத்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஒரு சிறந்த மகளாய் வளர்ததோடு மட்டும் அல்லாமல் அவரது உறவினர்களையும் கண்டறிந்து அங்கேயே சேர்த்த திருமதி கல்யாணி அவர்களின் உயர்ந்த தனன்லமற்ற சேவையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது .
இதுபோல் மக்கள் பயத்தைத் தூக்கி எறிந்து விட்டுக் ஏதிலிகளாக நிற்கும் குழந்தைகளை ஏற்று வளர்க்க முன்வர வேண்டும் என்றும் இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது . ” என்று சொல்லி கேஸை முடித்தார் .
நீது சற்றும் மாறாமல் அதிர்ந்த நிலையிலே இருந்தாள் . அனைவரும் வெளியே வர நீது மயங்கி வழியில் வந்த நீதிபதியின் மேலேயே விழுந்திட , ” நீது மா … ” என்று அழைத்தபடி தாங்தினார் நீதிபதி சதாசிவம் .
குடீம்பத்தின் மற்றோர் குழம்ப , ” மாமா பயப்படாதீங்க . சாதாரண மயக்கம் தான் இது ” என்று முன்னே வந்தான் பிரபஞ்சன் .
” அண்ணா இது சாதாரணம் . பயப்படாதீங்க . ” என்றபடி வந்தார் கல்யாணி .
இளையோர் குழம்பி நின்றாலும் அவர்களுக்கு என்ன செய்ய இருக்கிறது . அங்கே ஒரு பாசப்போர் நடைபெறுகையில் . நீதிபதி சதாசிவம் அவர்களின் மனைவி ரத்தினா நிரஞ்சனிடம் மற்றொரு பாசப்போரை நடத்திக் கொண்டிருந்தார் . நிரஞ்சனுக்கு ரத்தினைவை நன்கே தெரிந்தது . காரணம் கடைசி நொடியில் தன்னை காப்பாற்றி நீக்கி விட்டது ரத்தினம் தானே . அவனும் பேசிக் கொண்டே இருந்தனர் . அனைவரும் காருக்குச் சென்று கிளம்பி கல்யாணியின் வீட்டிற்கு வந்தனர் . வீடு நிறைந்து இருந்தது . சற்றே நேரத்தில் நீதுவும் பிரபஞ்சனின் தோளிலிருந்து விழித்து கொண்டு எழுந்தாள் .
எதிரே சதாசிவத்தைக் கண்டவள் திரும்பி யாரையோ தேட கண்ணில் பிடிபடாமல் போக எழுந்து சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சமையலறை நோக்கிச் சென்றாள் . அங்கே ரத்தினமும் கல்யாணியும் ஒரே கதையாக இருந்தது . அவர்களைப் பார்க்க அவர்கள் பல நாள் உறவு போல பேசிக் கொண்டே வேலை செய்தனர் . எதேச்சையாக ரத்தினம் திரும்பி பார்க்க நீதுவைக் கண்டவர் கல்யாணியிடம் ” கருவேப்பிலை எடுத்துட்டு வர்றேன் மா ” என்றபடி கழன்று கொண்டார் .
” அம்மா ” என்று ஓடிச் சென்று கல்யாணியை அணைத்துக் கொண்டாள் நீது . நீதுவின் மனநிலை புரிந்தவராய் ” நீது அவங்க உன்னோட அம்மா அப்பா . அதுக்கு ஏன் தயக்கம் . நீ தாராளமா பேசலாம் . என் வளர்ப்பு எண்ணைக்கும் தப்பாகாது . நீ பணம் பாத்து எதும் மாறுறவ கிடையாது . நீ எண்ணைக்கும் எங்களோட செல்லப் பொண்ணு . ஆதிரன் அம்மாவ எனக்கு ஏற்கனவே தெரியும் . அவங்க கிட்ட பேசி ஏற்கனவே ஒரு பங்கு ஒதுக்கி வச்சோம் . ஆனா நிரஞ்சனே ஒதுக்கினான் . அப்புறம் இவங்க ஏன் உன்ன பாக்க வரல னு யோசிக்கலாம் . அவங்களுக்கு பலத்த அடி . அந்த நேரத்தில் ஒரு குழந்தை நரபலி கொடுத்த கேஸ் ல எதிர்த்து தீர்ப்பு வழங்கியது ல வந்த பிரச்சனை . நீங்க அவங்க கூட இருந்தா கண்டிப்பா உங்களுக்கும் பிரச்சனை வரும் . அதனால விலகி இருந்தாங்க . உன்னோட ஒவ்வொரு விஷயமும் அவங்களுக்குத் தெரியும் . ஐயா வ ஆதிரன் அம்மாவும் அப்பாவும் பாத்துக்கிட்டாங்க . அம்மாவ நாங்க பாத்துக்கிட்டோம் . கொஞ்சம் எழுந்து நடக்கத் தொடங்கியதும் அவங்க தனி வீட்டுக்குக் குடி போனாங்க . ரிட்டயர்டு ஆகும்போது உங்களைப் பாக்கலாம் உங்க கூடவே வாழலாம் னு சொன்னாங்க . எங்களால் மறுக்க முடியல . இந்த வாரம் ஐயாவுக்கு ரிட்டயர்டு ஆகும் . இண்ணைக்கு உங்களுக்கு தீர்ப்பு வழங்கினாங்க . உன்னையும் நிரஞ்சனையும் பாக்க ஆசப்பட்டாங்க . சோ நாங்க ஏற்பாடு பண்ணுனோம் . ” கல்யாணி
” அவருக்கு ( பிரபஞ்சன் ) எப்படி தெரிஞ்சுது ” நீது
” நாங்க பெரியவங்க அடிக்கடி வெளியே போறது பத்தி ஆதிரனுக்கு சந்தேகம் . அதுல மாட்டிக்கிட்டோம் ” கல்யாணி .
அந்த நேரத்தில் சதாசிவமும் ரத்தினமும் அவர்களை எட்டிப் பார்க்க கல்யாணி நீதுவிற்குக் கண் காட்ட அவள் கீழ்க்கண்ணால் பார்த்தாள் . அவர்கள் கண்களில் அவ்வளவு ஆசை . தன் மகள் தன்னோடு பேச மாட்டாளா என்ற சராசரி பெற்றோருக்கான ஏக்கம் . புரிந்தவளாய் சமையலறையில் இருந்த எதோ ஒன்றைத் தேட ஆரம்பித்தாள் . கடைசியாக ஒரு மிகவும் சிறிய தட்டில் கொஞ்சம் சோறும் ஒரு மிக மிகச் சிறிய விளையாட்டுக் குவளையில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு சென்று அவர்களிடம் குழந்தை போல , ” ம்மா … அ.. ப்ப்பா அஅ ” என்றபடி நிற்க நிரஞ்சன் வந்து சேர்ந்தான் . அவனிடமும் , ” உவா ணும்மா ” என்று கேட்க குடும்பமே சந்தோஷமாக மாறிப்போனது .
அன்றோடு அனைவரும் நீதிபதி சதாசிவத்தின் பரம்பரை வீட்டிற்குக் குடிபெயர்ந்தனர் . அது சற்று சிறிய வீடாயினும் சகல வசதிகளும் உள்ள வீடு . அந்த வீட்டில் யாருக்கும் டிப்ரஷனிற்கு இடம் இன்றி போனது . சிறுவர்களுக்கு பெரியோரின் நீதிக்கதைகள் , அறிவுரைகளால் நிரம்பினாலும் சந்தோஷம் குறையவில்லை . இளைஞருக்கு சதாசிவத்தின் சிறு சிறு அறிவுரை , அனுபவங்கள் அவர்களது கம்பெனியை முன்னேற்றிட வழி வகை செய்தது . வீட்டில் உள்ள பெண்களும் தங்கள் பங்கிற்கு வீட்டைச் சுற்றி மல்லிகை , பிச்சி மற்றும் சாமந்தித் தோட்டம் அமைத்து அதன் வழியாக செல்வம் ஈட்டினார்கள் . ஆனால் அவர்கள் ஈட்டும் பணம் அநாதைகள் ஆசிரமங்களுக்கு அனுப்பப்பட்டது . ஆண்களும் தங்களின் வரவில் ஒரு பங்கை அநாதை ஆசிரமங்களுக்கே அனுப்பினர் . இவ்வாறு அநாதையாக யாரும் இல்லாமல் இருக்க அந்த குடும்பம் வழிகளை ஏற்படுத்தியது ….
இவர்களின் இந்த நற்செயல்கள் ஓங்கும் …
முற்றும் …