Loading

  டீசர் :      

       “ஹலோ! நான் ச்சா, இவங்க மை ப்ரெண்ட் ச்சு, நீங்க?” என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அவளை வினவினான். அதற்கு அவள் “நா லூனா” என்று உரைத்துவிட்டு  திரும்பி பாராமல் சென்றாள்.  அவள் செயலில் சற்றே கோபமுற்றுத் தன் நண்பனிடம், “என்ன டா ரெஸ்பான்ஸ் சரி இல்லையே!! அவள… ஹே லூனா” என்று சத்தமாக உரைத்தான்.

          இவனுடைய சத்தம் கேட்டு அங்கே இருந்த அனைவரும் திரும்பி “எந்த லூனா” என ஒரு சேர கேட்டனர். அனைவரையும் சுற்றிப் பார்த்தவன் திகைத்து நின்றான். லூனா எனத் தன்னை அறிமுகப் படுத்தியவள் அவனிடம் நெருங்கி நின்று, “இங்க எல்லாரும் லூனா தான், கால் மீ யூசிங் மை ஐடென்டிட்டி, லூனா 145, ஃபாலோ மீ ”  என்றாள்.

       “என்னது லூனா 145 ஆஹ், அப்படிக் கூப்புட்டு முடிக்கிறதுக்குள்ள நீ நாலு ஸ்டேஷன்  தாண்டி போயிருவ, சோ, இனிமேல் நீ எனக்கு நிலா பொண்ணு. சரியா நிலா பொண்ணு, இப்போ வா போலாம். ச்சு ஃபாலோ மீ.”  எனக் கூறிக்கொண்டு முன் சென்றான்.  

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்