“இந்தக் கருப்பு வெள்ளை நிலா
இத்தனை நிறங்களைத் தன்னுள் மறைத்து வைத்து உள்ளது
என்று அறியேன், அறிந்த நொடி
ஆசை பிறந்தது
அந்த நிறங்களில் நினையவேண்டி
மோகம் பிறந்தது
அந்த நிறங்களை அள்ளிக்கொள்ள
காமம் பிறந்தது
அந்த நிறங்களைச் சூடிக்கொள்ள”
என்று ச்சா உணர்ந்துக் கூறினான். “இது என் டேடாபேஸ்ல இல்லையே. ஃபீட் பண்ணிக்கிறேன்” என்றாள் நிலா என்று அழைக்கப்பட்ட லூனா. “ஹ்ம்ம் , ஃபீட் பண்ணும்போது கவிதை முடிஞ்சதும் ஒரு குட்டி ஹைஃபன் போட்டுக் கவிஞர் ச்சானு சேவ் பண்ணு” என்றான் கடுப்புடன் அந்த விஞ்ஞானி. “ஓகே சேஞ்சஸ் டன் அண்ட் சேவ்ட்” என்றாள். அவளை முறைத்து விட்டுத் தன் தலையில் அடித்துக் கொண்டான் அவன். “இங்க பாரு நிலா பொண்ணு கவிதை சொன்ன ஃபீல் பண்ணனும் அத விட்டுட்டு ஃபீட் பண்றேன் அனலைஸ் பண்றேன்னு ஒரே மிசினா இருக்காத புரிஞ்சதா?” உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு ஒரு என்டர்டைன்மென்ட் இருக்கா. இதுக்கு ச்சுவே பரவலா என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டுச் சென்றான்.