Loading

ஆண்டு 2௦23:

சந்திராயன் விண்கலம் தரையிறங்கி ஒரு வாரக் காலம்.

         வானத்தில் வெள்ளி நிலவு தன் வெண்ணொளியை பூமியின் மீது பிரகாசமாக  ஒளிரவிட்டு சிரித்துக் கொண்டிருந்தது. அன்று பௌர்ணமி, வானில் எந்த இடரும் இல்லாமல் முழுநிலவு தன்னை அழகாகக்  காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது. இரவின் நிசப்தத்தில், அந்த  வானுயர்ந்தக் கட்டிடத்தின் இருபதாவது தளத்தில் இருந்த கண்ணாடி பால்கனி  வழியாக ஒரு சிறுமி நிலவை ரசித்துக்கொண்டிருந்தாள்.

           நிலவை ரசித்துக் கொண்டிருந்தவள், அருகில் இருந்த அவளது புத்தகத்தில் நிலவை வரைந்து வர்ணம் தீட்டீக் கொண்டிருந்தாள். அன்று ப்ளு மூன் என்று செய்தியில் கூறிக்கொண்டிருந்ததைக் கவனித்துத்திருந்தாள். அவளுக்கோ மிகப் பெரிய சந்தேகம் இத்தனை நாள் வெள்ளை நிறத்திலிருந்த நிலவு எவ்வாறு இன்று மட்டும் நீல நிறத்தில் தெரியுமென்று? தன் சந்தேகத்தை அவளது தந்தையிடம் விவரித்து பதில்களைப் பெற்றிருந்தால்.  அவள் தந்தைக் கூறியது யாதெனில் நிலவு பூமிக்கு மிக அருகில் வரும்போது அது நீல நிறத்தைப் பிரதிப்பலிகின்றது, அந்த ஞாபகங்களுடன் அவள் வரைந்த நிலவை நீல நிறத்தில் வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தால். “நங்கை, பால் டேபிள்ல வச்சுருக்கேன் எடுத்துக்கோ” என்ற விளிப்பைப் பொருட்படுத்தாது தன் வேலையில் கவனமாக இருந்தாள்.

           நங்கையென அழைக்கப்பட்ட இவள் நிலாநங்கை, ஐந்து வயது சிறுமி. தன் அப்பாவின் மறுபின்பம். எதையும் ஆராய்ந்து அறிந்துக்கொள்பவள். தான் வரைந்த ஓவியம் சரியாக உள்ளதா என்று சரி பார்ப்பதற்கு தன் தலையை உயர்த்தி வானில் உள்ள வெள்ளி நிலவைப் பார்த்தாள். அச்சமயம் நிலவை ஏதோ ஒரு பொருள் கடந்துச் சென்றது. அது என்னவென்று உற்றுப் பார்ப்பதற்குள்  அவளது கவனத்தை தன் புறம் திருப்பினாள் அவளது அன்னை, “இந்தா நங்கை புடி, பால் ஆரிப் போச்சு. சீக்கிரம் குடிச்சுட்டு தூங்க போ.” என்றாள்.

         நங்கை நற்பிள்ளையாக அதனை வாங்கி பருகினாள். அவளை வாயைத் துடைத்துவிட்டு படுக்கச் சொன்னாள் அவளது அன்னை. நங்கை அவளது வரைப்படத்தை கையில் எடுத்துக் கொண்டு தன் அன்னையிடம், “ம்மா அப்பா எங்க?” என்று கேட்டாள்.

          “அப்பா வேலையா இருக்காங்க ஆஃபீஸ் ரூம்ல….” அன்னை முடிப்பதற்குள் வேகமாக ஓடினாள் தன் அப்பாவின் அறைக்கு. அறையின் வாயிலில் நின்று தன் அப்பாவின் செயல்களை பார்த்துக்கொண்டிருந்தாள். நங்கையின் வரவை உணர்ந்த ஆடவன், “தங்கப் பொண்ணுக்கு என்ன வேணும் உள்ள வாங்க” என்று உரைத்தான்.

          நங்கை விரைந்துச் சென்று ஆடவனின் மடியில் அமர்ந்தாள். அவனோ ஒரு கையால் அவளை அணைத்து மறுக் கையால் கணினியை இயற்றிக்கொண்டிருந்தான். நங்கை கணினியில் தெரிந்த புகைப்படங்களைப் பார்த்து, “ப்பா… ப்பா… இது என்ன?” என்று கேட்டாள். “நிலாடா தங்கப் பொண்ணு…” “நிலா ஒயிட்டா தான இருக்கும் இது க்ரே வா இருக்கு?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள். 

     “ஹ்ம்ம்… இது நிலா வோட சர்ஃபேஸ்”

      “சர்ஃபேஸ்னா…?”

      “நிலாவோடத் தரை” என்றான் அவளுக்குப் புரியும் வகையில். “நீ அங்க போயிருக்கியா ப்பா? என்று ஆர்வமாகக் கேட்டாள் பெண்.

       “வது அவள தூங்க வச்சுரு, எனக்கு ஒரு ஸ்டாடிஸ்டிக்ஸ் அனுப்ப வேண்டி இருக்கு, முடிச்சுட்டு வரேன்” என்று அவனவள் சொல்லிச் சென்றாள். அவளிடம் தலை அசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.

         “தங்கப் பொண்ணு தூங்குற டைம் வந்துருச்சே.. தூங்க போலாமா? கையில என்ன  வச்சுருக்கீங்க? அழகா இருக்கே நீங்களே வரைஞ்சீங்களா… வெரி குட்” என்றுக் கூறிக்கொண்டு அவளைத் தோளில் சுமந்து  படுக்கை அறைக்குச் சென்றான்.

         அவளைப் படுக்கையில் அமர வைத்து, “பாப்பா நீங்க ப்ரஷ் பண்ணிட்டு வாங்க, அப்பா டிரஸ் மாத்திட்டு வந்துறேன் ஓகே?” என்றான். தனது கட்டை விரலை உயர்த்தி காண்பித்து செயலில் இறங்கினால் சிறுமி. அறையிலிருந்து வெளியே வந்து தன் சரிபாதியிடம், “கவிமா ஹாட் வாட்டர் கெட்டில்ல இருக்கா?” என்று வினவியபடி கெட்டிலைத் திறந்து பார்த்துக் குவளையை நிரப்பினான். தன் கேள்விக்குப் பதில் உரைக்காமல் தனது வேலையில் கவனிப்பாக இருந்த மனையாளிடம் சென்று பின்னிருந்து அணைத்து “கவிமா சீக்கிரம் முடிச்சுட்டு வா, லேட் நைட் ஆக்காத… நாளையோட லீவ் முடிஞ்சது, காலையில சீக்கிரம் போகனும் அம்மா அப்பாவ பிக்அப் பண்ண” என்று அவள் முகத்தைத்  தன்னை நோக்கித் திருப்பி நெற்றியில் முத்தமிட்டுக் கூறினான்.

       அவனவளோ “வில் ட்ரை டியர்” என்று கண்ணடித்தால். “சேட்டை… ஒழுங்கா வந்திருடி திரும்பப் பிஸி ஆகிருவேன்… ப்ளீஸ் டி என் செல்லக் குட்டில…” “சீக்கிரம் வரனும்னா வேலைய முடிக்கணும் டியர் அதுக்கு நீங்க என்ன விடனும்.” பெருமூச்சொன்றை வெளியிட்டுத்  தன் அணைப்பிலிருந்து அவளை விடுவித்துப்  படுக்கை அறை நோக்கிச்  சென்றான்.

       அவனின் தங்கப் பெண்ணோ, அவன் சொல்லிச் சென்ற வேலையை முடித்துச் சமர்த்துப்  பெண்ணாகப் படுக்கையில் அமர்ந்து அவளின் நிலாப் படத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். “அடேய் குட்டிமா… ரொம்ப குட் கேர்ளா இருக்கீங்களே…. வெயிட் பண்ணுங்க… அப்பா இப்போ வந்துடறேன்” என்று கூறித்  தன் இரவு உடையை மாற்றச் சென்றான்.

         “குட்டிமா அத குடுங்க டேபிள்ல வச்சுருவோம்.” அப்படத்தை வாங்கி மேசைமீது வைத்துப்  படுக்கையில் அவளுடன் அமர்ந்தான். தலையணையைச் சரி செய்து அவளைப்  படுக்க வைத்து, அவனும் அருகில் படுத்தான்.

     “அப்பா… நிலாவோட தரை ஏன் க்ரே கலர்ல இருக்கு?”

     “நிலால நிறைய டஸ்ட் இருக்கு , அது நம்ம எர்த் மேல நிறைய பிளானெட்ஸ் மோதுனபோது வந்த டஸ்ட்  பார்டிக்கல்ஸால உருவானது. அதான் அது க்ரே கலர்ல இருக்கு.”

        “ஓஹ்!! ஆனா நமக்கு ஏன் ஒய்ட் கலர்ல தெரியுது?”

        “நிலாவால லைட் உருவாக்க முடியாது, அது சன் ஓட லைட்ட தான் வாங்கி நமக்கு வெளிப்படுத்துது . நாம எர்த்ல இருந்துப்  பாக்குறதுனால ஒய்ட்டா தெரியுது. இதே நிலாவ டெலெஸ்கோப் வழியா பார்த்த க்ரேவா தெரியும். உன்னைய ஒரு நாள் கூட்டிட்டுப்  போய்க்  காட்டறேன்.”

    “ஹ்ம்ம்…” என்று நங்கை தன் தலை அசைத்துக் கொண்டாள். சிறிது நொடிகளில், “ப்பா… நிலா ரவுண்டு ஷேப் தான ஆனா உன் போட்டோல வேற மாறி இருந்துச்சே”

      “நிலா ரவுண்டு ஷேப் இல்லடா ஓவல்… நம்ம பூமில இருந்து வெறும் பாதி தூரம் தான் தெரியும் ஃபுல்லா பாக்க முடியாது. அந்த பாதி தூரம் நமக்கு ரவுண்டு ஷேப்ல தெரியுது. அப்பா வச்சிருக்கிற போட்டோ நிலால  இருந்து எடுத்தது அதுல நிறைய குழி இருக்கும் பாத்தீங்களா?”

       “ஆமா ப்பா ஏன் அப்படி இருக்கு?”

       “அது கிரேட்டர், நிறைய விண் கற்கள் மோதினதுனால நிலாவோட தரைல குழி விழுந்துருச்சு”

       “விண் கற்கள்னா என்னப்பா”

         வது தன் நாக்கைக் கடித்து “நானே வாய குடுத்து மாட்டிகிட்டேனே..” என்று முணுமுணுத்து விட்டு “அதுவா தங்கம் ஸ்பேஸ்ல நிறைய மீட்டியார்ஸ் இருக்கும். அதாவது ராக் போல நிறைய அது வேகமா விழறதுனால அப்படி குழி வந்துருச்சு.”

         “ஓஹ்!! எர்த்தும் ஸ்பேஸ்ல தான் இருக்காப்பா?”

         “ஆமாடா…”

         “அப்போ எர்த்ல ஏன் குழி விழல?”

         “ம்ம்.. எர்த்த சுத்தி ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கு அதுல இந்த ராக் மோதுனதும் பர்ன்னாகி டிஸ்ஸப்பியர் ஆகிரும்”

        “ஓ!!! நாம நிலாவுக்கும் அந்தப் பாதுகாப்பு வளையத்தப் போடலாமாப்பா?  பாவம் நிலா…”

         “அதுசரி போடுவோம் பாப்பா , அப்பா ரிசர்ச் பண்ணி கண்டுபுடிச்சதும் நாம ரெண்டு பேரும் நிலாவுக்கு போய் அத போட்டு விட்ருவோம் ஓகே வா?”

        “எப்போ ப்பா கண்டுபிடிப்ப?”

          “ம்கும்… நீ பிக் கேர்ள் ஆனதும் அப்பா கண்டுபிடிச்சுருவேன்… நாம அஸ்ட்ரோநாட் டிரஸ் போட்டு ஸ்பேஸ்க்குப் போவோம்”

         “ம்ம்… நா எப்போ ப்பா பிக் கேர்ள் ஆவேன்?”

       “ஹ்ம்ம் நீங்க இப்போ தூங்கி காலைல எழுந்து அம்மா சொல்ற பேச்சக் கேட்டு ஒழுங்கா ஸ்கூல் போயிட்டு வரனும், நல்லாச  சாப்பிடணும், நிறையப்  படிக்கணும், இன்னும் புது புது விஷயங்கள தெரிஞ்சுக்கணும், பாப்பாக்கு எய்ட்டீன் இயர்ஸ் ஆனதும் பிக் கேர்ள் ஆகிருவீங்க அப்போ அஸ்ட்ரோநாட்டாகப்  படிங்க ஓகே வா?” என்று பெரிய விளக்கத்தைக் கூறிவிட்டு, “ஃபர்ஸ்ட் தூங்கணும்… கண்ண மூடிப் படுங்க” என்றான் விது.

       “தூக்கம் வரலையேப்பா… ஸ்டோரி சொல்லு தூங்குறேன். ஆ!! எனக்கு ஸ்பேஸ் பிரின்சஸ் ஸ்டோரி சொல்லு. உனக்கு ஒரு ஸ்பேஸ் பிரின்சஸ் தெரியும்னு சொன்னல அந்த ஸ்டோரி சொல்லு” என்றாள் அவனின் தங்கப் பெண்.

        “நிலா பொண்ணு  ஸ்டோரி வேணுமா என்  தங்கப்  பொண்ணுக்கு? சரி சொல்றேன் கேளுங்க….” என்று கதையைக் கூற ஆரம்பித்தார் நங்கையின் தந்தை.

           **********

இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டு,

        தமிழக ஆராய்ச்சி தலைமையகத்தில், கணினிகள் திரையிலிருந்து வந்த செய்திகளை வரிசைப்  படுத்திக்கொண்டிருந்தது செயற்கை நுண்ணறிவாற்றல் பொருத்தப் பெற்ற ரோபோக்கள். அனைத்து டேட்டாக்களையும் ஒருங்கிணைத்து அதிலிருக்கும் நம்பகத்தன்மையை ஆராய்ந்து, அச்செய்தியின் உட்கருத்தை விவரித்து, அதற்கான சாதகப்  பாதகங்களை மேற்கோளிட்டு, அதன் தீர்வுகளை வரிசைப் படுத்தி, பிரச்சனைகளுக்குப் போதியத்  திட்டங்களை வகுத்து, அதை அங்குப் பணிப்புரியும் அனைத்து விஞ்ஞானிகளுக்கு அனுப்பி வைத்தது.

    அச்செய்தி ஒரு ரெட் அலெர்ட்.

    அச்செய்தியை அறிந்ததும் அனைத்து விஞ்ஞானிகளும் நாளை தலைமையகத்தில் ஒன்று கூட கட்டளை இடப்பட்டது. இதை அறிந்துக்கொண்ட ஜெயவர்தன், வயது 65, புகழ் பெற்ற மரபணு விஞ்ஞானி, ஒரு திட்டம் வகுத்தார். இவர் இப்பொழுது ஆய்வகத்தில் பணிப்புரியவில்லை, சில சொந்தப்  பிரச்சனைகளின் காரணமாகப்  பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

    ஜெய் தனது ஆஸ்தான சிஷ்யனை தன் செயற்கைக்கோள் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் புதியவன் அவரை அவரது இல்லத்தில் யாரும் அறியா வண்ணம் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது..

    ஜெய் வீட்டுச்சிறையில் அடைக்கப்பற்றிந்தார். வீட்டைச் சுற்றி ரோபோக்கள் காவலுக்கு இருந்தன. வீட்டு  வாயிலில் செக்யூரிட்டி சிஸ்டம் பொறுத்தப்பற்றிருந்தது. வீட்டிற்க்கு வருபவர்கள் போபவர்கள் கண்காணிக்கப்  பட்டனர். ஜெய்யை சந்திப்பதற்கும், பேசுவதற்கும் எந்தத் தடையும் இல்லை. அவர் வீட்டை விட்டு வெளியே வரத் தடை உத்தரவு போடப்பற்றிருந்தது. அவரைச் சந்திப்பவர்கள் பட்டியல் உடனுக்குடன் தலைமையகத்திற்குச் சென்று விடும். அவரின் ப்ரைவசி கருதி வீட்டினுள் கண்காணிப்பு காமெராக்கள் பொருத்தப்படவில்லை. அவரும் அவரது மனைவியும் வீட்டில் அடைப்பட்டு கிடந்தனர்.

     ஜெய் வேலையில் இருந்த சமயம் ஸ்டார்லிங்க் நிறுவனத்திடம் தனக்கான பிரத்யேக செயற்கைக்கோள் வாங்கி இருந்தார். இந்த விவரம் தலைமையகத்திற்குத்  தெரியாமல் பார்த்துக்கொண்டார். இப்போது அதன் வழியாகத் தான் தனது சிஷ்யனை தொடர்புக்கொண்டார்.

      தங்களின் திட்டப்படி அந்த புதியவன் டாக்டர் ஜெய்யைக் காண ஆயத்தம் ஆனான். தன்னுடைய  நீண்ட கருப்புக் கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டான். தலையினில் முககவசத்தை மாட்டிக்கொண்டு தனது பறக்கும் ஷுவை கால்களில் பொருத்தினான். அவனின் ரகசிய வழிக்காட்டியில் டாக்டர் வீட்டின் தோட்டத்தை ஆராய்ந்தான். தோட்டத்தைச் சுற்றிலும் கண்காணிப்பு காமெராக்கள் இருந்தன, வீட்டின் மையப் பகுதியில் ஒற்றை ஜன்னல் மட்டும் கண்காணிப்பு காமெராவின் பார்வையிலிருந்து விலகி இருந்தது. டாக்டர் குறிப்பிட்டது போல அங்கு பெரிய நெடு மரம் ஒன்று ஜன்னலிலிருந்து பத்து சென்டி மீட்டர் தொலைவில் இருந்தது. அவன் தரை இறங்க அதுதான் சரியான இடமெனக் குறித்துக்கொண்டான். யாருக்கும் சந்தேகம் வராமல் சட்டென அவன் தரையிறங்க வேண்டும். டாக்டரின் ரகசிய தொலைபேசிக்கு தான் தரையிறங்க இருக்கும் இடத்தை அனுப்பிவைத்து, தன் இலக்கை நோக்கிப் புறப்பட்டான்.

      ஜெய் அப்புதியவனின் வரவை எதிர்நோக்கி அதற்க்குத் தேவையானவற்றை செய்துக்கொண்டிருந்தார். அந்தக் குறிப்பிட்ட ஜன்னல் கதவைத் திறந்து வைத்தார். அவன் தரையிறங்கியதும் இரு வினாடிகளுக்குள் வீட்டினுள் நுழைய வேண்டும், அல்லது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கவனிக்கும் ரோபோவின் பார்வையில் விழுந்துவிடுவான். முன்னேற்பாடாக ரோபோவின் கவனத்தைத் திசைத்திருப்ப வேண்டி தன் வளர்ப்பு பிராணியுடன் ஜன்னலின் அருகில் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அவையாவும் திக் திக் நிமிடங்கள்.

      ஜெய்யிற்கு இது புதிது. அவர் மிகவும் நேர்மையான மனிதர். சட்டங்களை மதிப்பவர். ஆனால், அவையனைத்தையும் மாற்றியது அவ்விரண்டாண்டுக்காலம். அவர் என்று தலைமையகத்தில் நடக்கும் முறைகேடுகளைச் சுட்டிக்காண்ப்பிக்க ஆரம்பித்தாரோ, அன்றிலிருந்து அவர் பட்டத் துன்பங்கள் ஏராளம்.  அதன் பலனாய் தற்போது வீட்டுச் சிறையில் உள்ளார். இனியும் தன் நேர்மையைக் கடைப்பிடித்தால் தன் ஒற்றை மகளை இழக்க நேரிடுமென்று துணிந்து இச்செயலில் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டார்.

      அவர் கையில் அணிந்திருந்த எண் கடிகை எச்சரிக்கை ஒலியை எழுப்பியது. ஜெய் பரபரப்புடன் ஜன்னலின் திரையை விலக்கினார், சரியாக அந்நேரம் அந்தப் புதியவன் வேகமாக மேலிருந்து ஒரே நேர்கோட்டில் தரையிறங்கி, சட்டென ஜன்னல் வழியே உள்ளே நுழைந்தான். அவன் தரையிறங்கிய வேகத்தில் மரத்தில் சற்றுச் சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தன் வளர்ப்பு பிராணி ஏற்படுத்தியவாறு காட்சிப்படுத்தினார் ஜெய். பின் பாதுகாப்பு ரோபோக்கள் கவனத்தை அதிகம் கவராதவாறுத் தன் செல்லப் பிராணியைக் கடிந்துக்கொண்டு ஜன்னலைச் சாத்தினார்.

     அப்புதியவனை அவரது மனைவி ஜெய்யின் ஆய்வு அறையில் காத்திருக்கச் சொல்லிச் சென்றார். அவன் அந்த அறையைச் சுற்றி தன் பார்வையைச் செலுத்தினான். அறை முழுவதும் நிலவின் புகைப்படங்கள், அதனின் கோப்புகள் நிறைந்திருந்தது. அவனுக்கு இது ஒரு ஊகத்தை ஏற்படுத்தியது. தன் ஊகம் சரியா என அறிந்துக்கொள்ள ஜெய்யின் வரவிற்காகக் காத்துக்கொண்டிருந்தான்.

      ஜெய் இருவருக்கும் காப்பிக் கோப்பைகளுடன் உள்நுழைந்தார். “டாக்டர், ஹவ் ஆர் யூ?” என்று கேட்டுத் தனக்குக் கொடுத்தக் காப்பிக் கோப்பையை பெற்றுக்கொண்டான்.

    “ஐம் ஃபைன். ஐ டெஸ்பெரேட்லி நீட் யுவர் ஹெல்ப்” என்றார் அவர்.

    “டாக்டர் ஐ அம் அட் யுவர் சர்வீஸ். எனிதிங் ஃபார் யூ.” என்று மரியாதையுடன் கூறினான் அப்புதியவன்.

   அவன் தோல்களை தட்டிக்கொடுத்து “ஐ நோ மை பாய்” என்று சிலாகித்தார்.

      அவனிடம் தன் தேவைகளைத் தெளிவுப்படுத்தினார். அதற்கானத் திட்டங்களை விவரித்தார். அவனின் பங்கு அலாதியானது என்று புரியவைத்தார். அதில் உள்ள சிக்கல்களை மேற்கோளிட்டார். சூழ்நிலைக்கேற்ப்ப அவற்றை மதிநுட்பத்துடன் கையாள வேண்டும் என்று எடுத்துரைத்தார். இதனை யாருக்கும் கடுகளவு கூட சந்தேகம் ஏற்படாது செயலாற்ற வேண்டும் என்றும் கூறிப்பிட்டார்.

     பின்பு அவனிடம் சில புகைப்படங்கள், சில முக்கியக் கோப்புகளைக் கொடுத்து, “இதுல ரொம்ப மைனியூட் டிடேய்ல்ஸ்லாம் இருக்கு உனக்கு யூஸ்புல்லா இருக்கும். ஆல் தி பெஸ்ட் மை பாய். ஐ அம் ரூட்டிங் ஃபார் யு” என்று கூறிக் கைக்குலுக்கினார்.

     “ஸுர் டாக்டர். ஐ வில் டூ மை பெஸ்ட்” என்று நம்பிக்கையாகக் கூறிக்கொண்டு புறப்பட்டான். எவ்வாறு வந்தானோ அதே போல வந்த சுவடு இல்லாமல் விடைப்பெற்றான்…

இனி….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்