அந்த இருட்டு அறையில் முகமூடி அணிந்த நபர், இரு கணினி திரைகள் முன் அமர்ந்து தீவிரமாக எதையோ கோட் செய்துக் கொண்டிருந்தார். அவரின் விரல்கள் அதிவேகமாக முன்னும் பின்னும் சென்று தட்டச்சு செய்தது. அவரின் கண்கள் கணினியின் திரையிலிருந்து ஒரு நொடி கூட நகரவில்லை. அழுத்தமாக என்டரைத் தட்டினார். கணினியின் திரையில் லோடிங் என்று வந்தது… 5..10…50…67… எனச் செயல்பாட்டின் அளவைக் காண்பித்தது… சரியாக 87…92…97…98… என்று வரவும் முகமூடி மனிதன் தனது கைகளைப் பர பரவெனத் தேய்த்து தன் இருக்கையின் நுனியிலிருந்து திரையினைக் கூர்ந்துப் பார்த்துக்கொண்டிருக்கையில் ஃபெயில்ட் என வந்தது. “ஷிட்” எனக் கோபத்துடன் மேஜையைத் தட்டினான் அந்த முகமறியா ஆடவன்.
இங்கே இவன் இதைச் செய்துக் கொண்டிருந்த வேளையில், அங்கே ச்சா ச்சுவை அணைத்து சார்ஜில் போட்டான்.
“புல்ஷிட்!! இவ்ளோ வேகமா வந்தும் ஒரு யூஸும் இல்லை…” வேகமாகத் தன் இருக்கையிலிருந்து எழுந்து அங்கும் இங்கும் நடந்தான் முகமூடி மனிதன்… அவனது கோபம் எல்லைகளை கடந்தது… தான் அமர்ந்திருந்த இருக்கையை “ஷிட்…. ஷிட்…” எனக் கத்திக் கொண்டே ஓங்கி குத்தினான்.
நிலாவின் அருகில் சென்று ச்சா, “ஏன் நிலா உங்களுக்கும் எங்கள போலப் பசிக்குமா?” என்று கேட்டான். “ஆமாம் மிஸ்டர் ச்சா… எங்களுக்கும் உங்கள போலப் பசிக்கும்…மனிதர்கள்போல தான் நாங்களும்… இயற்கை விதிகள் எங்களுக்கும் பொருந்தும்” என்றுரைத்தாள் நிலா. பிறகு, “மிஸ்டர் ச்சா வா… வோய்??” “நீங்க மிஸ்டர் ச்சா தான, ச்சு உங்கள அப்படி தான கூப்பிட்டுச்சு” “ஓஹ் நீ அப்படி சொல்றியா… ச்சா வேணாம் நீ மட்டும் என்ன சந்துனு கூப்பிடு” “ஓகே மிஸ்டர் சந்து.” “அய்யோ… அந்த மிஸ்டர அங்குட்டு கடாசு… சந்து போதும் எங்க ஒரு முறை சொல்லு” என்றான். நிலா அவனை முறைத்துவிட்டு “ஓகே சந்து” என்றாள். “இன்னொரு தபா சொல்லு” என்றான் ச்சா தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு. “ஓகே சந்து” என்று வேண்டாவெறுப்பாய் கூறினாள் நிலா.
தன் கண்களைச் சிமிட்டி “குட்” என்றான் அதைத் தொடர்ந்து, “அப்பறம் ஏன் நீ லூனா 145?, அந்த நம்பர் என்ன?” என்று அதிமுக்கிய கேள்வியைக் கேட்டான். அவனைப் பொறுத்தவரை நேரத்தைக் கடத்த வேண்டும், அவன் இயல்பாய் தான் கேட்டான். ஆனால் அவளைப் பொறுத்தவரை இது மிகவும் முக்கியமான கேள்வி ஆதலால் மிகவும் ஈடுபாட்டோடு விளக்கம் அளிக்க ஆரம்பித்தாள், “நா 145 ஆவது க்ளோன்… இதோ இவ 144, அவ 153” என அங்கு இருந்தவர்களைச் சுட்டிக் காட்டிவிட்டு, “எங்களுக்கு முன்ன உருவாக்குனவங்க சரியாய் செயல்படல…சோ, அவங்கள டிஸ்கார்ட் பண்ணிட்டாங்க, இப்போ நாங்க ஒரு பத்து பேரு தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஐம்பது க்ளோன் ஸ்லீப் மோட்ல இருக்கு மெயின் ஸ்டேஷன்ல அவங்கள ப்ரிசர்வ் பண்ணிருக்காங்க” என்று தன்னைப் பற்றித் தெளிவாய் கூறினாள்.
அனைத்தையும் சின்னத் தலையசைப்புகளுடன் கேட்டுக் கொண்டான் ச்சா. “ஹ்ம்ம் ஓகே… இங்க நடந்த விபத்த பத்தி உனக்குத் தெரியுமா?” என்றான். “அன்னைக்குத் தான் நான் ஸ்லீப் மோட்ல இருந்து முழிச்சேன்… ஏதோ ஒன்னு என்னுடைய ஸ்லீப் பாட்ட மோதி ஓபன் ஆகிருச்சு… நானும் வெளிய வந்தேன். சுற்றிலும் ஒரே இருட்டு ஒன்னும் புரியல… லிப்ட் கண்ணுக்குத் தெரிஞ்சது. அதுல ஏறி மேலே வந்தேன். அங்கேயும் யாரும் இல்லை… அதனால வெளிய போக ட்ரை பன்னேன். ஆனா வெளில என்னால மூச்சு விட முடியல. அப்போ யாரோ என்ன ஸ்டேஷன் உள்ள இழுத்தாங்க. அவ்ளோ தான் ஞாபகமிருக்கு. அப்புறம் நான் கண் முழிச்சப்பப் பார்த்தது வசுவைத் தான்.” என்றாள் அன்றைய நினைவுகளை மனதில் நிறுத்தி.
“நீ க்ளோன் தான… ஆனா உன்ன ஏன் நிலவோட சூழ்நிலைக்கு ஏற்ப உருவாக்கல… ஏன் எங்கள மாறி ஆக்ஸ்சிஜன் டிபென்டன்டா உருவாக்கிருக்காங்க?” என்ற கேள்வியோடு அவளை நோக்கினான்.
“தெரியல சந்து, இங்க இருக்குற நாங்க எல்லாருமே ஆக்ஸ்சிஜன் டிபென்டன்ட்ஸ் தான்… எங்க வேலையே நிலவுல உள்ள கனிமங்களை வகைப்படுத்தி சுவாசத்திற்கான ஆக்ஸ்சிஜனையும், குடிப்பதற்கான தண்ணீரையும் சேகரித்து வைக்கிறது தான். இங்க சுழற்ச்சி முறையில ஆக்ஸ்சிஜன் ரன் ஆகிட்டு இருக்கு” என்றாள்.
ச்சா தன் உதடுகளில் சிரிப்புடன் “சரி , கண்டுப்புடுச்சுறலாம்” என்று கண்களைச் சுருக்கி தலையாட்டலுடன் கூறினான்.
இவன் ஏன் இவ்வாறு பாவனைகள் காட்டுகிறானென யோசித்தபோது தான் நிலாவுக்கு தான் செய்த தவறு புரிந்தது, தன் கண்களை மூடிப் பற்களால் நாக்கைக் கடித்தாள், சற்றென்று தன் முகத்தைக் காண்பிக்காது திரும்பி நின்றாள்.
அவளது செய்கைகளை ரசித்துக் கொண்டே “யூ எக்ஜாக்ட்லி பீஹேவ் லைக் ஹேர்” என்று தன் தலையைக்கோதி முணுமுணுத்துவிட்டு, “ச்சு ரெடி ஆகிருப்பான் அவன கூட்டிட்டு வரேன் மெயின் ஸ்டேஷன் போலாம்” என்று சத்தமாகக் கூறினான்.
அச்செய்தி சென்றடைய வேண்டியவர்களின் செவிகளில் சேர்ந்தது. அதில் ஒருவன் இருட்டறையில் முகமூடி அணிந்து அமர்ந்திருந்தவன். இந்தச் செய்தியைக் கேட்டதும் தன் கணினி திரையில் பார்வையைச் செலுத்தி தான் விட்ட இடத்திலிருந்து இயக்க ஆரம்பித்தான்.
ச்சா, உள்ளறையில் ச்சுவைச் சுற்றி ஆராய்ந்தான். ச்சுவின் கைகள் விரிந்து எதையோ வாங்கும் பாவனையிலிருந்தது ச்சா தன் மேக்னிஃபயிங் லென்ஸை வைத்து அதன் கைகளை உற்றுப் பார்த்தான். அதன் கை விரலுக்கிடையே நானோ சிப் ஒன்று இருந்தது. ‘ஹ்ம்ம் கல்ப்ரிட் ஃபௌண்டட் எங்க வச்சுருக்கான் பாரு… அடேய் நீ கில்லாடினா நான் அதுக்கும் மேல யாருகிட்ட’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டே அந்தச் சிப்பை சற்று தளர்த்திவிட்டு ச்சுவை ஆன் செய்தான்.
ச்சு பூட் ஆகி வரும்பொழுது கணினியில் கவனத்தை வைத்திருந்த அந்த ஆடவனுக்கு சிறிய தொய்வு , ச்சு பூட் ஆகையில் அதன் செக்யூரிட்டி சிஸ்டம் வேறொரு ஃபயர்வால் செட் செய்து திரும்பப் புது பாஸ்வேர்ட் ப்ரோடேக்ஷன் செய்தது. அதனால் அவன் முதலிருந்து தன் வேலையைச் செய்ய வேண்டும். தனது கைகளை வேகமாக செயலாற்ற செய்தான். அவன் தன் பணிகளை முடிப்பதற்குள் ச்சு உயிர் பெற்றதும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது, அதன் வெப்பத்தால் அந்தச் சிப் கருகியது. அந்த முகமூடி மனிதனின் முயற்சியும் தோற்றது. அவன் ஆத்திரத்தில் “ப்ளடி!!” எனக் கத்தி கிபோர்ட்டை விட்டெறிந்தான்.
***
ச்சு தன் இயக்கத்தைத் தொடங்கியதும், “மிஸ்டர் ச்சா ஐ அம் சேவ்ட்” என்றது. “எஸ் அப்சொல்யூட்டிலி” என்று சிரித்தான் ச்சா. இருவரும் நிலாவிடம் வந்தனர். ச்சுவிடம், “மீட் மை கேர்ள் ஃபிரண்ட்” என்றான் ச்சா. “மிஸ்டர் ச்சா அதுக்குள்ள இவ்ளோ தூரம் வந்துடீங்களா பிரமாதம்” என்றது. தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு “மெயின் ஸ்டேஷன் போலாமா?” என்று கேட்டாள் நிலா.
“யா சூர்! ஷால் வீ ?” என்று தன் கைகளைக் முன்னே காட்டி, போக அனுமதிக் கோரினான் ச்சா. மூவரும் மெயின் ஸ்டேஷன் நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.
இவர்கள் சம்பாஷனைகளைக் கேட்டுக் கொண்டிருந்த இருவரில் ஒருவனான முகமூடி மனிதன் அந்த இருட்டு அறையிலிருந்து வெளியேறினான்.
மெயின் ஸ்டேஷனில் நுழைந்த மூவரும், லிப்டினுள் ஏறிக் கீழே 5 ஆம் தளத்திற்குச் சென்றார்கள். நிலா தன் கைரேகையைப் பதித்து கதவினைத் திறந்தாள். ச்சா அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றான். அவர்களை வரவேற்றது என்னமோ வெறும் கணினிகள் தான்.
யாரும் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை. தனக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான் ச்சா. ச்சுவிற்கு செய்கைக் காட்டினான். ச்சு அங்கே இருந்த கணினியில் ஒரு நானோ யூஸ்பி டிரைவ்வை பொருத்தியது. அதன் வேலையைச் செய்தது.
கதவு திறக்கும் ஓசை கேட்டதும் ச்சா ச்சுவை பார்த்தான். ச்சு தன் தலையை தன் வேலை முடியவில்லை என்று உலுக்கியது.
கதவுத் திறந்ததும் உள்ளே நுழைந்தது ஹர்ஷா, அவனைப் பார்த்ததும் ச்சா, “அட வாங்க ஹர்ஷா என்ன விஷயமா வந்துருக்கீங்க எனக் கேட்டான்.” ஹர்ஷா சற்று தடுமாற்றத்துடன், “இல்ல வசு சார் தான் வரச் சொன்னாங்க.” என்றான். “ஓஹ்! ஆனா அவனே இங்க இல்லையே எங்க போனான்.” என்று ச்சா கூறிக்கொண்டிருக்கும்போது வசு பின்னால் உள்ள கதவு வழியாக வந்தான். வசு, ச்சுவை பார்த்தப்படி வந்தான். ச்சாவிற்கு சற்று பதட்டமாகிவிட்டது. ச்சுவை ஓரக் கண்ணால் பார்த்தான். ச்சு அப்பாவிபோல நின்றது, ச்சாவின் பார்வையை உணர்ந்து அதன் கண்களில் உள்ள எல் இ டி டிஸ்ப்ளேயில் ஒரு ஸ்மைலி பொம்மையை ஒரு நொடிபோழுது காட்டி நிறுத்தியது. ச்சா ஆசுவாசத்துடன் வசுவிடம், “என்ன இந்தப் பக்கம் வர்ற. அங்கே என்ன இருக்கு?” என்று கேட்டான்.
“ம்ச் அது ஒன்னும் இல்ல சும்மா ஸ்டோர் ரூம் மாறி அவ்ளோ தான். ஒரு விசிட் பார்த்தேன்” என்று மழுப்பலாகப் பதிலளித்தான். ச்சா அங்கே தன் பார்வையைச் செலுத்தினான்.
“டேய் சந்திரா என்ன பிளான் வச்சுருக்க? இப்போ நீ எவ்ளோ நாள் மிஷன்ல வந்துருக்க?” என்று ச்சாவின் தோள்களில் கைப்போட்டு அவனைத் திசைதிருப்ப முயற்சி எடுத்தான் வசு. “என்ன ச்சானு அட்ரஸ் பண்ணு வசு தட் சௌண்ட்ஸ் ரைட்… வீ ஆர் ஆன் ட்யூட்டி… லெட்ஸ் கீப் அர் ஃப்ரண்ட்ஷிப் அசைட்” என்று ச்சா சற்று அழுத்தத்துடன் கூறினான்.
“ஓகே டன்… லெட்ஸ் கோ பை ப்ரோடோகால்… அடுத்து நாம என்ன பண்ண போறோம்?” என்ற கேள்வியுடன் ச்சாவைப் பார்த்தான் வசு.
ச்சா தன் வருகைக்கான காரணத்தை விளக்கினான். “வசு, ஹர்ஷா என்னோட இந்தப் பயணம் உங்கள சேஃப் பண்ணி எர்த்க்கு கூட்டிட்டு போறது தான். எங்களுக்குக் கிடைத்த தகவல் இங்க இருந்து வந்துருக்க வாய்ப்பில்லை. உங்க கூற்றுப்படி இங்கேருந்து எந்தக் கம்யூனிக்கேஷனுக்கும் வாய்ப்பு இல்லை. சோ, அத இக்னோர் பண்ணிடுவோம். இப்போ லேண்டர்க்கு போவோம் ஆய்வகத்தைத் தொடர்புக்கொள்வோம்” என்று ச்சா தன் திட்டத்தைக் கூறினான்.
ஹர்ஷா ச்சாவிடம், “பெட்டெர் ஐடியா” என்று ஆமோதித்தான். ஆனால் வசு, “அது எப்படி முடியும்?” என்றான் கேள்வியாக. “ஏன் முடியாது?” என்றான் பதில் கேள்வியாக ச்சா. “ம்ப்ச்ச்… நங்கை அவள கண்டுப்புடிக்கனும்ல அவ இல்லாம நாம போக முடியாது.” என்று தன் வாதத்தை முன் வைத்தான் வசு. “உப்ஹ்… நங்கைய எப்படி கண்டுபிடிக்க முடியும்? இவ்ளோ நாளா அவ எங்கனு தெரியல , உயிரோட இருக்காளா இல்லையானும் தெரியல… அவ ஒருத்திக்காக நாம மூணு பேரும் பலியாக முடியாது. உள்ளத உள்ளபடி சொல்லுவோம் ஆய்வகத்தோட தீர்ப்பைப் பின்பற்றுவோம்” என்று எதிர் வாதம் புரிந்தான் ச்சா.
“இல்ல ச்சா இதுல எனக்கு உடன்படிக்கை இல்லை. நாம நங்கைய கண்டுபிடிக்கணும். அவ உயிரோட தான் இருப்பா… அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்க வாய்ப்பில்லை… ஒரு வேளை உங்களுக்கு வந்த தகவல் அவ குடுத்ததாக்கூட இருக்கலாம்ல… ஏலியன் கிட்ட அவ மாட்டியிருந்து …ஏதோ ஒரு வாய்ப்பப் பயன்படுத்தி செய்தி அனுபிருக்கலாம்ல… சோ, இப்போ அவள தேடுறது தான் முக்கியம். உன் மிஷனும் அது தான” என்று வசு கடமையை உணர்த்தினான்.
“ஆமா ச்சா வசு சொல்றதும் கரெக்ட் தான். நாம நங்கையைத் தேடுவோம்” என்று ஹர்ஷா வசுவிற்கு ஆதரவாகக் கூறினான்.
ஹர்ஷாவைப் பார்த்து ச்சா தன் மனதிற்குள் ‘டேய் யாருடா நீ… நான் சொன்னதுக்கும் ஆமா சாமி போட்ட இப்போ அவன் சொல்றதுக்கும் ஆமா சாமி போடுற… உன்னையெல்லாம் எப்படி இந்த மிஷனுக்கு தேர்ந்தெடுத்தாங்க?’ என்று நினைத்துக்கொண்டே தன் தாடையைத் தடவினான். பின்பு வசுவிடம்,
“நீ சொல்றது சரி தான் வசு, பட் நாம ஒரு முறை நம்ம ஆய்வகத்துக்கு தகவல் சொல்லிருவோம். அவங்க என்ன சொல்றாங்களோ அத செய்வோம்” என்று விடாபிடியாகத் தன் கூற்றில் உறுதியாய் நின்றான் ச்சா.
“சொல்லலாம் ச்சா, ஆனா உனக்கே தெரியும் நம்ம ஆய்வகம் எப்படி செயல்படும்னு இருந்தாலும் உன் மிஷன் இங்க இருக்குற உண்மையை ஆராய்வதற்காகத் தான். சோ, நான் சொன்னதத்தான் சொல்லுவாங்கனு நம்புறேன்.” என்றான்.
“ஓகே ஜெட் பாக் எடுத்துக்கலாம். டைம் சேவ்வாகும். லேட் அஸ் ஹர்ரி அப்” ச்சா மூவரையும் துரிதப்படுத்தினான்.
“ஹர்ஷா, நீயும் 145யும் போய்த் தேவையானத எடுத்துத்துட்டு வந்துருங்க. ச்சா நீ வா என் கூட நாம இங்க எதாச்சும் சரி பண்ண முடியுதானு பார்போம். ஸ்டேஷன் ஓட ப்ளூபிரிண்ட் காட்டுறேன் ஏழாவது தளத்திற்கு போக வேற வழியைக் கண்டுப்பிடிக்க முடியுதானு பாரு. வீ நீட் டூ பிளான் க்குவிக்லி . ஆய்வகத்துக்கு சொல்லனும்னா…. யூ பெட்டெர் ஃநோவ் தேன் மீ… அதுனால பிளானோட அவங்கக்கிட்ட பேசுறது நல்லது.” என்று ச்சாவிடம் கூறினான் வசு.
“யா! … ச்சு நீயும் அவங்கள ஜாயின் பண்ணிக்கோ எக்ஸ்ட்ரா ரெண்டு ஜெட் பாக் இருக்குல , ஹி வில் பி ஹெல்ப்புல்… யூ கயிஸ் ப்ரொசீட்… வசு வா…” என்றான் ச்சா.
அவர்கள் மூவரும் தங்களுக்கு இட்ட பணியைச் செய்ய விடைபெற்றனர். ச்சா வசுவை பின்பற்றிச் சென்றான்.
வசு தான் வந்த மற்றறொரு கதவினைத் திறந்து, அங்கே இருந்த ஸ்டேஷனின் ப்ளுப்ரின்ட்டை ஒரு டிராவிலிருந்து தேடி எடுத்தான். ச்சா அந்த அறையைச் சுற்றிப் பார்த்தான். சந்தேகம் கொள்ளும்படி எதுவும் இல்லை.
பின் இருவரும் வெளியே வந்து ஒரு மேஜையின் மீது வரைப்படத்தை வைத்து அதனை உள்வாங்கத் தொடங்கினர். ச்சா வசுவிடம், “வசு, ப்ரொவைட் அக்செஸ் டு மீ ஃபார் எவ்ரிதிங்” என்றான் வரைப்படத்தை உற்று நோக்கியவாரே. வசு தன் தலையை உயர்த்திப் பார்த்தான். ச்சாவும் அவன் கண்களைச் சந்தித்து என்ன என கேள்வியாய் தன் புருவங்களை உயர்த்தினான். ஒன்றும் இல்லை என்பதாக வசு தன் தலையை ஆட்டிவிட்டு படத்தைப் பார்க்கத் தொடங்கினான். “டூ இட் நவ்” என்று ச்சா அதிகாரமாய் சொன்னான். வசு குழப்பத்துடன் செய்வதா வேண்டாமா என்று யோசித்து பின் அருகில் உள்ள கணினியில் அதனை செய்யத் தொடங்கினான். ச்சா அவன் பின்னே நின்று அதைக் கவனித்தான். ச்சாவின் கைரேகைகள் மற்றும் கண் கருவிழிகள் பதியப்பட்டு அவனைப் புதிய நபராகச் சேர்த்துக்கொண்டான் வசு.
மீண்டும் அவ்வரைப்படத்தை சுட்டி காண்பித்து தங்கள் திட்டங்களைக் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்கள். லேப்பிற்கு சென்ற மூவரும் திரும்பினர் அப்பொழுது. இந்த ஐவரும் வரைப்படத்தைச் சுற்றி நின்றனர்.
“லூனா யூ கேன் லீவ்” என்றுக் கூறினான் ஹர்ஷா. அவனைத்திரும்பிப் பார்த்த ச்சா, “வொய்?” என்றான் கேள்வியாக. அதற்கு வசு, “ஷி இஸ் அ க்ளோன். அவ நமக்குத் தேவை இல்லை. நாம மூணு பேரும் இத பாத்துக்கலாம்” என்றான்.
ச்சா ஒப்புக்கொள்ளவில்லை, தன் தலையை இட வலமாக அசைத்து, “வசு, ஷி இஸ் அ க்ளோன். ஐ அக்ரீ. ஆனா என்ன யோசிக்க வைக்கிறது எதுனா, நங்கை போலவே இவளை ஏன் உருவாக்கணும். தேர் மஸ்ட் பி அ ரீசன்… அவளும் இங்க இருக்கட்டும், சப்போஸ் நங்கை இருந்தா எப்படி இருக்குமோ அதே போல இவ செயல்பட்டா? அவளோட பெர்ஃபார்மன்சையும் பார்ப்போமே…” என்றான் ச்சா.
நாம் ஏதாவது சொன்னால் திரும்பவும் விவாதம் பிறக்குமோ என்ற பயத்துடன் வசு சரி என்று ஒப்புக்கொண்டான். ஹர்ஷாவும் வசுவை தொடர்ந்து சரி என்றான்.
ச்சா திட்டத்தை விளக்க ஆரம்பித்தான். வரைப்படத்தின் ஒரு பகுதியைக் காண்பித்து, “நாம இங்க இருக்கோம், இங்கயிருந்து ஆறு, ஏழு தளங்களுக்குச் செல்ல வாய்ப்பில்லை. இது சவுத் சைடு, நாம ரெண்டு குழுவா பிரிஞ்சு திட்டத்தைச் செயல்படுத்த போறோம்… வசுவோட கூற்றுப்படி இந்த ஏரியா முழுசா ஆராய்ந்தாச்சு. மேப்ல நார்த்ல வழியில்லை , கிழக்கு, மேற்கு பகுதிகள் தான் நாம சோதனைப் பண்ணனும். ஆனா எனக்கு வடக்கு பகுதியையும் ஒரு முறை பார்க்குறது நல்லதுன்னு படுது” எனத் தன் அபிப்ராயத்துடன் மற்றவர்களை நோக்கினான். வசு என்ன சொல்வதென்று யோசிக்கையில், ஹர்ஷா “நானும் அது கரெக்ட்னு யோசிக்கிறேன்.” என்று வழிமொழிந்தான். வசுவும் வேறு வழி இல்லாமல் இதற்கு ஒப்புக்கொண்டான்.
ச்சா அடுத்தக் கட்டத்தை விவரிக்கலானான், “வடக்கு பகுதிக்கு ச்சுவ மட்டும் அனுப்புவோம் அங்க ஆக்ஸ்சிஜன் சப்ளை இல்ல சோ அவன் தான் பெஸ்ட் சாய்ஸ், அவன் எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணிருவான். கிழக்கு பகுதி பெருசா இருக்கு ஒன்னா ரெண்டு பேரு போனா இன்னைக்கு இரவுக்குள்ள எல்லா இடத்தையும் சோதிக்க முடியாது. அதுனால வசு , ஹர்ஷா நீங்க ரெண்டு பேரும் கிழக்கு பகுதிக்குப் போங்க. நீங்க ரெண்டு பேரும் பேசி உங்களுக்குள்ள ஒரு முடிவெடுத்துக்கோங்க அப்பறம் ஸ்பிளிட்டாகி தேடுங்க. மேற்கு பகுதிக்கு நானும் லூனாவும் போறோம். நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருந்ததுனால உங்களுக்கு இங்க எல்லாம் பரிச்சயமே…. நான் புதுசு அதுனால எனக்குத் துணைக்கு லூனாவ கூட்டிட்டுப்போறேன். எனக்கு எங்கயாச்சும் அக்செஸ் இல்லாம போச்சுனா இவ இருந்தா எந்தத் தடையும் இல்லாம நான் செயல்படலாம்.” என்று முழுத் திட்டத்தையும் கூறிவிட்டு அவர்களின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
வசு ஹர்ஷாவைப் பார்த்தான், ஹர்ஷா வசுவைப் பார்த்தான். இவர்கள் இருவரையும் ச்சா, ச்சு மற்றும் நிலா மூவரும் நோக்கினார்கள். இவர்களின் பார்வையை உணர்ந்து வசுவிற்கு கண்களைக் காட்டினான் ஹர்ஷா. பின்பு வசுவும் ஹர்ஷாவும் இதற்குச் சம்மதித்தார்கள்.
தன் திட்டத்தின் முதல்படியை வெற்றிகரமாக செயலாற்ற காத்துக்கொண்டிருந்தான் ச்சா.
ச்சாவிற்கு இன்னும் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். அதற்காகவே நிலாவுடன் சிறிது நேரத்தைச் செலவிட நினைத்தான். அதே போல் இங்கே உள்ள தொடர்புநிலை பிரச்சனையை சரி செய்ய வேண்டும். இந்த மூவரும் ஏதோ ஒன்றை தன்னிடம் மறைப்பதாக எண்ணினான். அது என்னவென்றும் கண்டுபிடிக்க வேண்டும் எனக் குறித்துக்கொண்டான்
‘ஷப்பா!!! பெரிய இடியாப்ப சிக்கலா இருக்கும் போல, யார நம்புறதுன்னு ஒன்னும் புரியல!!’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். அவனது சிந்தனையை தன் கேள்வியால் களைத்தான் வசு, “ச்சா நானும் நீயும் வேணும்னா மேற்கு பகுதிக்குப் போலாமா? லூனாவ கிழக்கு பகுதிக்கு ஹர்ஷாவோட அனுப்புவோம் ?” என்று ச்சாவிற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் கேள்விக் கேட்டான். ச்சா சற்றே திகைப்புற்று அவனை எப்படி சமாளிப்பது என்று யோசனை செய்தான் நொடிகளில். பின் அவனிடம், “வசு நீ சொல்றதும் பாயிண்ட் தான் பட் ப்ளூபிரிண்ட்படி பார்த்தா கிழக்குப் பகுதி முக்கியமான பகுதிபோல இருக்கு அங்க இந்த ஸ்டேஷன்ன பத்தி தெரிஞ்ச நீங்க ரெண்டு பேரும் போறது தான் சரின்னு தோணுது எனக்கு, என்னால தனியா போக முடியாது என் துணைக்கு யாராவது இருந்தா எனக்கு வசதி. என் ஹெல்ப்புக்கு இந்த லூனா போதும். உங்கள்ள ஒருத்தர் வந்தா ஒரு பகுதியைத் திருப்தியில்லாமல் பார்த்த மாறி இருக்கும் அங்க நாம ஏதாவது மிஸ் செய்திட்டா. நீங்க லூனாவ அவ்ளோ நம்பலையே ஃபர்ஸ்ட். அவள தனியாவிட்டு அப்பறம் அவ சரியா செய்யலேனா? எதுக்கு ரிஸ்க் இப்படியே இருக்கட்டும் பிளான்” என்றான்.
என்ன சொன்னாலும் ஏதோ ஒரு பதிலை அளிக்கிறான் என்று வசுவும் ஹர்ஷாவும் எண்ணினார்கள். நடப்பவை நடக்கட்டும் என்று அதன் போக்கில் விட்டார்கள் இருவரும்.
சற்று நேரத்தில் ஐவரும் லேண்டேரை நோக்கி ஜெட் பாக்கில் பயணித்தனர். அங்கே அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருப்பதை அறியாமல்!!
இனி…..