Loading

         ‘சூசைடல் ஸ்குவாட் ஆபரேசன்’ ஆயுட்காலம் நம் பூமியின் கணக்குப்படி இரண்டு மாதக்காலப் பயணம். நிலவில் இரு முழு நாட்கள் மற்றும் சில மணித்துளிகள். இதற்குள் நமது நாயகன் சந்திரவதன் தனக்கு இட்ட பணியைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். அதேசமயம் தான் எண்ணிச் செல்லும் பணியையும் முடிக்க வேண்டும்.

    ச்சா செல்லும் விண்கலத்தில் அதற்கேற்ப மூலப் பொருட்கள் நிரப்பப்பட்டது. நிலவில் இந்தியா நிறுவியுள்ள ஆராய்ச்சிக் கூடம் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. அதன் பொருட்டு ச்சா செல்லும் விண்கலத்திலேயே ‘ஸ்லீபிங் ராக்’ மற்றும் இதர தேவையான பொருட்களும் இடம்பெற்றது. பொதுவாக மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலம் அதன் கட்டளை தொகுப்பானில் (command module) மூன்று நபர்களைக் கொண்டு இயக்கப்படும்.  ஆனால் இம்முறை ச்சா மட்டுமே செல்லவிருக்கிறார். ஆதலால் தான் இதன் பெயர் ‘சூசைடல் ஸ்குவாட் ஆபரேசன்’ என வைக்கப்பட்டுள்ளது. நிலவின் சுற்றுப்பாதையில் கட்டளைக்கூறு சுற்றிக் கொண்டிருக்கும் அதனிலிருந்து சந்திரக்கூறு (lunar module) பிரிந்து நிலவில் தரையிறங்கும். இதில் ச்சா சந்திரக்கூறு விமானியாகச் செயல்பட உள்ளார். ச்சு கட்டளை அலுவராகச் செயல்படும். கட்டளைக்கூறு தானியங்கி வகையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

     ச்சா மற்றும் ச்சு தங்கள் விண்வெளி பயணத்தை இனிதே தொடங்கினர். முதற்கட்டம், மற்றும் இரண்டாம் கட்டம் தாண்டி மூன்றாம் கட்டத்தில் ‘திராவிட’ கட்டளைக் கூறு பிரிந்து நிலவின் சுற்றுப் பாதையில் வலம் வரத் தொடங்கியது. நிலவு சுற்றுப் பாதையில் முன்று நாட்களுக்கு பின் சிவசக்தி புள்ளியில் ‘மதி’ சந்திரக்கூறு தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

   ச்சா மற்றும் ச்சு விண்வெளியில், “டேய் ச்சு இந்தக் காதல பத்தி என்ன நினைக்கிற?”

“மிஸ்டர் ச்சா காதல் ஒரு உணர்வு”

“ஹ்ம்ம்….. உணர்வு…. ஆன நமக்கு மட்டும் ஏன் அது செட்டாக மாட்டேங்குது… இப்போ பாரு எனக்கு முப்பது வயசு. இந்த வயசுல ஜோடியா நிலாவுல டூயட் பாடுறதுக்கு வழி இல்லாம உன்னோட சூசைடல் மிஷன்ல மெதந்துகிட்டு இருக்கேன். என்ன வாழ்கைடா!!”

“மிஸ்டர் ச்சா ஒரு திருத்தம் நீங்க மட்டும் தான் சிங்கள் ஐம் மிங்கிள் யூ க்நொவ்?”

“மிங்கிளா…. எப்புட்ரா…. எனக்குத் தெரியாம”

“சீ மிஸ்டர் ச்சா லாஸ்ட் மிஷன்ல உங்க ஃபரெண்ட் மிஸ்டர் விநாயகம் அவர் கூட இருந்தாங்களே ஏஞ்சல். நானும் அவளும் கமிட்டட்”

“எது சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுமே அந்த ஏன்ஜலா…. வேணாம் டா ச்சு அதுலாம் வாழ்க்கைக்கு செட்டாகாது…. போரிங் லைஃப்… நீ வேற டாவ்வ உஷார் பண்ணு… என்ன!…. அதுவரைக்கும் நீயும் என்ன மாதிரி சிங்கள் தான்…”

“மிஸ்டர் ச்சா பொறாமையில பொங்காதீங்க. நல்லா போயிட்டு இருக்குற எங்க காதல் வாழ்க்கையில ரோடு ரோலர விட்டு ஏத்தாதீங்க…. நீங்க என்னதான் என்ன அப்கிரேட் பண்ணாலும் இந்தக் காதல் அழியாது. ரொம்ப பத்திரமா டீப் ஸ்டோரேஜ்ல இருக்கு…”

“எவ்ளோ டீப்?”

“வேர்சன் 2.௦ ஃபைல் 568 பேஜ் 89”

“ஹ்ம்ம் இதே போல ஏஞ்சல்ட்ட பேசு அதுவே தெறிச்சு ஓடிரும்”

“மிஸ்டர் ச்சா நா… கோவமா இருக்கேன். டோன்ட் ஸ்பிக் வித் மீ”

ஹ… ஹ… ஹா…. ச்சா சத்தமாகச் சிரித்து, “க்யூட் டா ச்சு தெய்வீக காதல் தான் போல” என்று கூறினான்.

“ஆமா! மனிதர் உணர்ந்துக் கொள்ள இது மனித காதல் அல்ல…. அதையும் தாண்டி புனிதமானது…. புனிதமானது…. புனிதமானது….  iஇது ரோபோ காதல்…. மிஸ்டர் ச்சா இந்த மிங்கிள் பையன் உங்கள ஆசிர்வதிக்கிறேன் நீங்களும் சீக்கிரம் மிங்கிளாக வாழ்த்துக்கள். இந்த நிலாவுல உங்க ஜோடி காத்துட்டு இருக்கு சீக்கிரம் போய்க் கட்டிகோங்க.”

“சரிங்க…. ச்சு ஆனந்தா….. ஜெய் ச்சு…. ச்சு வாக்கு பலிக்கட்டும்”

“அப்படியே ஆகட்டும் குழந்தாய்!!!” என்று ச்சு வாழ்த்தியது.

இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு தங்களுக்கான ஸ்லீபிங் ராக்கினுள் உறங்கச் சென்றனர்.

ச்சா தனது உறக்கப் பையினுள் கண்களை மூடிக் கொண்டு ச்சுவின் வார்த்தைகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தான். “நிலாவுல என் நிலா பொண்ணு இருப்பாளா?” பெருமூச்சொன்றை விட்டு உறக்கத்திற்குச் சென்றான்.

இன்னும் இரண்டு தினங்கள் இவர்கள் இந்த விண்வெளியில் மிதந்துக் கொண்டிருக்க வேண்டும்.  

கைக்கடிகாரத்தின் எச்சரிக்கை ஒலியில் ச்சா கண் விழித்தான். விழித்ததும் அவன் கண்டது, ச்சு கண்ணாடி வழியாகப் பூமியைப் பார்த்துக் கொண்டிருந்ததைத் தான். ச்சுவிடம் சென்று அவன், “ என்ன இங்க… என்ன தெரியுது…?” என்று கேட்டான்.

“மை ஏஞ்சல்…” என்றது ச்சு.

“ஏஞ்சல் தெரியுராலா…. எனக்கு ஏதும் தெரியலையே…”

“மிஸ்டர் ச்சா இது மானுடர்களுக்கு தெரியாது…”

“ஓஹ்… உன்ன போல ஞானிகளுக்குத் தான் தெரியுமோ?”

“நோ மிஸ்டர் ச்சா என்னைப் போலக் காதல் வெள்ளத்துல நீந்திட்டு இருக்குறவங்களுக்கு தான் தெரியும்… என்ன சுகம்… என்ன இன்பம்…. கண்ண மூடுனா கனவுல என் ஏஞ்சல் தான் வர்றா….”

“அடேய் போதும்டா…. முடியல….. சிங்கள் சாபம் சும்மா விடாது… கடுப்பேத்தாம அப்படி போயிரு… காதல் வெள்ளமாம்ல வெள்ளம் …. யாரு கிட்ட… இங்க நீந்தித் தான் போகனும் … பயபுள்ளைக்கு ஏதோ ஆகிருச்சு…” என்று தனக்குள் கூறிக்கொண்டு தன் காலைப் பணிகளை மேற்கொண்டான்.

பின்பு சிறுக் குறிப்புகள் எடுத்தனர்.. பூமியைப் படமெடுத்தனர்… இவ்வாறு தங்கள் பொழுதைப் போக்கினார்கள். மீதமுள்ள இரு தினங்களும் தங்கள் அன்றாட பணியைச் செய்து முடித்துவிட்டு ஒருவர் மாற்றி ஒருவர் தங்களுக்குள் சீண்டிக்கொண்டு நேரத்தை ஓட்டினர்.

 நிலவில் தரையிறங்கும் நேரத்திற்கு ச்சா மற்றும் ச்சு முனைப்புடன் காத்திருந்தனர். திராவிட கட்டளைத் தொகுபானிலிருந்துப் பிரிந்து தாங்கள் இருக்கும் தொகுப்பானை நிலவில் சேஃப் லேன்டிங் செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றிக் கொண்டிருந்தனர்.

  அச்சமயத்தில் ச்சா, “டேய் சுப்ரமணி சேஃப் லேன்டிங் பன்னிருவோமா?”

“மிஸ்டர் ச்சா இப்போ நா… சுப்ரமணியா பதில் சொல்லனுமா இல்ல ச்சுவா பதில் சொல்லனுமா?” என்றது ரோபோ.

“ஹ்ம்ம் சுப்ரமணியா சொல்லு…” என்றான் ச்சா

“ஓகே! டிகிரேட் டு வெர்……” “ஹே….. ஸ்டாப் ஸ்டாப் … ச்சுவாவே சொல்லு டிகிரேட்லாம் ஆகாத அப்புறம் அவ்ளோதான் நாம நிலால கால் வைக்க முடியாது…. இப்படியே இந்த விண்வெளிலையே சுத்திட்டு இருக்க வேண்டியதுதான். உன்கிட்ட கொஞ்சம் ஜாக்ரதையா தான் பேசணும். ஒரு செகண்ட்ல பி.பி ஏத்திவிட்டுட்ட…. அப்கிரேட்கு சாப்ட்வேர்லாம் இங்க எடுத்துட்டு வரல…”

“ஓகே! மிஸ்டர் ச்சா இன்ஃபர்மேசன் லோடட்…. டிகிரேட் ஆப்சன் டெலி….”

“நோ ஃபிரீஸ் ஆக்ஷன்… டோன்ட் டச் சாப்ட்வேர் மாடிஃபிகேஷன். மேக் இட் ப்ரோடெக்டட்… பாஸ்வேர்ட் சந்து… ச்சு மேக் இட் கிளியர்… நோ சாப்ட்வேர் மாடிஃபிகேஷன் வித்அவுட் பாஸ்வேர்ட்”

“ஓகே! மிஸ்டர் ச்சா… சேஞ்சஸ் ஸ்டோர்ட்”

“ஊப்ஸ்…. அடேய் ச்சு … ஒரு கேள்விக் கேட்டது குத்தமாடா… இப்படி என்ன சீட் எட்ஜ்ல உட்காரவிட்டுடியே…. ஓஹ் மை கடவுளே!!!”

“இட்ஸ் யுவர் ஃபால்ட் மிஸ்டர் ச்சா…”

“ஆமா என் தப்பு தான்… ஒத்துக்கிறேன்.. பி ரெடி … டைம் டு லேன்ட்”

“எஸ் மிஸ்டர் ச்சா வீ கேன் டிடாச்” என்றது ச்சு.

“ச்சு ஃசேப் லேன்டிங் தான?”

“மிஸ்டர் ச்சா… எல்லாம் சரிப்பார்த்தாச்சு வீ ஆர் பாசிடிவ்.. என் ஏஞ்சல விட்டு எங்கயும் போயிற மாட்டேன் … உங்களையும் விட்டு. ஐ வில் ப்ரோடக்ட் யூ…” என்று ச்சு நம்பிக்கையளித்தது.

“ச்சு என் தேவதை நிலாவுல இருப்பாளா?”

“கண்டிப்பா மிஸ்டர் ச்சா….” என்றது ச்சு…

“நீ இப்படி தான் பதில் சொல்லுவ ஏன்னா நா உன்ன அப்படி ப்ரோக்ராம் பண்ணிருக்கேன்…” என்று சிரித்துக்கொண்டே…. “ச்சு டிடாச்…” என்று கட்டளையிட்டான்.

இவர்கள் இருவரைக் கொண்ட தொகுதி நிலவினை நோக்கிச் சென்றது. அதில் உள்ள ராக்கெட் தனது வேகத்தைக் குறைத்து நிலவின் மேற்பரப்பில் மெதுவாகத் தரையிறங்கி, நிலவின் தரைப் பகுதியில் தனது கால்களை ஊன்றியது. இவ்வதிர்வில் நிலவின் மேற்பரப்பில் உள்ள துகள்கள் களைந்துக் காணப்படும். ஆதலால் அவை அடங்கும் வரை இருவரும் காத்திருக்க வேண்டும். அதுக்கு சுமார் ஆறு மணி நேரம் ஆகலாம்.

ச்சு தனது இருக்கையிலிருந்து இறங்கி தொகுப்பானின் கண்ணாடி வழியாக வெளியே பார்த்து, “மிஸ்டர் ச்சா என் கண்ணுக்கு எந்த ஆராய்ச்சிக் கூடமும் தெரியல…”

அவனைத் தொடர்ந்து வந்த ச்சா, “ஹ்ம்ம் ஆமா…பட் இங்க தான் இருக்கு போட்டோஸ் பார்த்திருக்கேன்… கொஞ்சம் டஸ்ட் செட்டில் ஆகட்டும்…. ரேடியோ சிக்னல் குடுத்துப் பார்போம்…” என்றான்.

இருவரும் தங்கள் இடத்திற்கு வந்து ரேடியோ சிக்னல் கொடுத்துப்பார்த்தனர். பதிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். இப்போது இங்கே என்ன நிலைமை என்று தெரியவில்லை. தாங்கள் இருவரும் வெளியே செல்லும் முன் எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வழித் தேடிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது அவர்களின் சிக்னலிற்கு பதில் சிக்னல் வந்தது. உடனே மைக்கைத் திருப்பி “ஹலோ!!!” என்றான் ச்சா.

இனி…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்