Loading

நினைவெல்லாம் நீயே-9

ரூபாவின் போன் காலை கட் செய்த பிரபு உடனே தன்ராஜ்க்கு அழைத்து ரூபா பேசியதை சொல்ல..அவரும் “சரி..பா..இத்தினி நாளு  கஷ்டப்பட்டாலும் பரவால்லனு.. நம்மள அலைய விட்டால்ல..
கொஞ்சம் நாமளும் அவங்களை மாதிரியே போக்கு காட்டுவோம்..நீ என்ன பண்ற..நாளை மறுநாளு தான் என்னை பாக்க முடியும்னு சொல்லு..என்ன பண்றானு பாப்போம்..”என தீர்மானமாக சொன்னார்.

“சரி சார்..அப்டியே சொல்லிடறேன்..” என பதில் சொல்லி ரூபாவை அழைத்து சொன்னார்..

பக்கத்தில் இருந்த அவளின் அம்மா விலாசினி போனை வாங்கி  “என்ன தம்பி..நம்ம அவசரத்தை சொல்லலையா..”என்க

பிரபும் மனதுக்குள் அவரை திட்டியபடி வெளியே மரியாதையாக “சொல்லிட்டேன்..மேடம்..
நான் சொல்லாம இருப்பேனா..உங்க கஷ்டம் எனக்கு தெரியாதா..
சொல்லுங்க..ஆனா பாருங்க…சார்க்கு தான் ஏதோ முக்கியமான வேலை இருக்காம்..”என பதில் சொன்னார்.

“சரி தம்பி…நீங்க சாரோட நம்பர் குடுங்க..நான் வேணுமானா பேசி பாக்கறேன்..”

“இப்பவே உங்களுக்கு வாட்ஸ்அப் பண்றேன் மேடம்”

வாட்ஸ்அப் நோட்டிபிகேஷனை பார்த்த விலாசினி அந்த நம்பரை போனில் சேமித்து கொண்டு அழைக்க..

மறுமுனையில் போன் கட் ஆக போகும் நேரம் போன் எடுத்து.”ஹலோ..யாருங்க..” என குரல் வர..

அதில் கோவம் அதிகமாக, சட்டென்று தன்னை சுதாரித்தவள் “வணக்கம்ங்க..தன்ராஜ் சார் நம்பர் தானே..நான் ரூபாவோட அம்மா பேசறேன் சார் இருக்காங்களா..அவர் கிட்ட பேச முடியுமா..” என பணிவாக கேட்க

“வணக்கம் மேடம்..நான் சாரோட பி.ஏ பேசறேன்..சார் சாப்பிட்டு இருக்காங்க..அவர் சாப்பிட்டு வந்ததும் நீங்க போன் பண்ண தகவலை சொல்லிடறேன்..மேடம்..” என சொல்லி போனை வைத்தார்

அடுத்த நிமிடமே வர்மாவின் போன் வர..விலாசினி எடுத்ததும் “என்ன மேடம்..எல்லாம் ரெடியா..நீங்க இந்த வாரம் ப்ரைடே..ப்ரீயா இருந்தா அக்ரிமெண்ட் போட்டுடலாம்னு பெரிய சாப் சொல்றாரு..”

“ஏற்கனவே ஹீரோயின் தேடினதுல அதிக நாள் ஆகிடவே..அடுத்த மண்டேலேந்து ஷீட்டிங் ஸ்டார்ட் பண்ணா தான் ப்ளாக் பண்ண டேட்ல படம் ரிலீஸ் பண்ண முடியும்னு அவங்க முடிவு எடுத்திருக்காங்க..”

“உங்க சைட் அப்ரூவல் கிடைச்சா தான் நான் ஃபர்தரா மூவ் பண்ண முடியும்..” என நிறுத்தாமல் பேசி முடித்தார்

“தம்பி…உங்களுக்கு தெரியாதது இல்ல..ஏற்கனவே ரூபா இங்க ஒரு படம் பாதி நடிச்சிருக்கா..” என இழுக்க..

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும் மேடம்..இன்னிக்கு புதன்கிழமை..இன்னிக்கு ஈவ்னிங் வரைக்கும் உங்களுக்கு டைம் தரேன்..எஸ் ஆர் நோனு க்ளீனா சொல்லிடுங்க..”

“நாங்க அப்ப தான் அடுத்த ஹீரோயின் தேட வசதியா இருக்கு..எங்களுக்கு ஏற்கனவே டைமே இல்ல..நிறைய டென்ஷன் இருக்கோம்..ஈவ்னிங் பதில் சொல்லிடுங்க..”என சொல்லி அவரின் பதிலை கூட எதிர்பார்க்காமல் கட் செய்தார்.

திக்பிரமை அடைந்த விலாசினி சில நிமிடங்கள் யோசித்து விட்டு ரூபாவை அழைத்து “அந்த வர்மா பேசினான்..
ஹீரோயின் அம்மானு கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம..அந்த ஹிந்தி படத்துல நடிக்கறது பத்தி இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள பதில் சொல்ல சொல்லி மிரட்டுறான்..எல்லாம் நம்ம தலையெழுத்து..”

“சரி..தன்ராஜ் எத்தனை மணிக்கு வீட்டுக்கு போவார்னு தெரியுமா..” என கேட்க

“ஆறு மணிக்கு ஸ்பாட்லேந்து கிளம்பிடுவார் மா..”

“சரி…நாமளும் அதே நேரத்துல கிளம்பி நேரா அவர் வீட்டுக்கு போயிடுவோம்..நேரா அவர் கிட்ட பேசி முடிவு எடுக்கலாம்..”

“அவர் வீட்டுக்கு போறதால நீ நல்லதா ஒரு காட்டன் சல்வார் போட்டுக்க..தலையை பின்னிக்க..நெத்தில பளிச்சுனு தெரியற மாதிரி ஒரு பொட்டு வெச்சுக்க..”

“அப்ப தான் நாம நல்ல குடும்பத்து ஆளுங்கனு அவரோட வீட்டம்மாக்கு நம்பிக்கை வந்து அவங்க நம்மளுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க..” என சொல்லி மாலை ஆறு மணி எப்போது ஆகும் என எதிர்பார்க்க ஆரம்பித்தார்.

சரியாக ஐந்து மணி ஆனதுமே குளித்து கனமான நூல் சரிகையில் மெரூன் நிற காட்டன் புடவை, அதற்கு தோதாக கழுத்து நெருக்கமாக தைக்கப்பட்ட நீள ப்ளவுஸ், இரு கைகளிலும் கனமான ஒரு வளையல், கழுத்தில் நீண்ட சங்கிலி, காதில் சின்ன தங்க கம்மல், மூக்குத்தி, என எல்லாம் ஒரே டிசைனில் வருவதை போல ஆனால் கண்களை உறுத்தாத வகையில் அணிந்து, தலை வாரி கொண்டை போட்டு கொண்டு தயாராகி உட்கார்ந்த விலாசினி பெண்ணுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில் கிளிப்பச்சை நிற சல்வார் அணிந்து அதற்கு மேட்சாக ஆழ்ந்த பச்சையில் நூல் வேலைப்பாடு செய்த காது தோடு, கழுத்தணி, வளையல் என எளிமையாக ஆனால் தேவதையாய் தயாராகி மாடியில் இருந்து இறங்கி “போகலாமா மா..”என கேட்டபடி வந்த ரூபாவை பார்த்து மலைத்து போனார்.

“போகலாம் வா..”

அம்மா சொன்னது போல காரில் ஏறியதுமே பிரபுவுக்கு போன் செய்த ரூபா தன்ராஜ் கிளம்பி விட்டாரா என கேட்க..அவரும் கிளம்பி விட்டார் என பதில் சொன்னதை அம்மாவிடம் சொல்லி விட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

பிரபுவும் கனகச்சிதமாக ரூபா போன் செய்ததை தன்ராஜ்க்கு சொல்ல..அவர் “ஓஹோ..ஓஹோ..
கதை அப்டி போகுதா..”என வாய் விட்டு சிரித்து விட்டு போனை வைத்தார்.

அவர் வீட்டுக்கு போய் சேர்ந்து குளித்து விட்டு காஃபி குடித்தபடி இருந்த போது கேட்டில் இருந்த செக்யூரிட்டி போன் செய்து ரூபாவும் அவளுடைய அம்மாவும் தன்ராஜை சந்திக்க வந்திருப்பதாக சொல்ல..அவருக்கு அவர்களை வீட்டில் வராண்டாவில் உட்கார வைக்க சொல்லி தன் மனைவியை அழைத்து அவர்கள் வந்திருப்பதை சொல்லி தன்னோடு அவரையும் அழைத்து கொண்டு வராண்டாவுக்கு வந்தார்.

அங்கு உட்கார்ந்து இருந்த ரூபாவையும் அவள் அம்மாவையும் பார்த்து தன்ராஜ் “அடடே..வாங்க மா..என்ன அதிசயம்..வீடு தேடி வந்திருக்கீங்க..” என எதுவும் தெரியாததை போல கேட்டு அவர்களை தன் மனைவி ரமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அவர்கள் குடிக்க ஜுஸ் கொண்டு வந்து தந்த தன்ராஜ் மருமகளையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

ஜுஸ் குடித்தபடி சில நிமிடங்கள் அமைதியாக கழிய..அதன் பின் ரூபாவின் அம்மா நிதானமாக ரூபாவை பற்றியும், தற்போது அவளுக்கு கிடைத்துள்ள ஹிந்தி பட வாய்ப்பு பற்றியும் அது அவளுடைய நெடு நாள் ஆசை என எடுத்து சொல்லி..கொஞ்சமும் மனமில்லாமல் தான் வாங்கி மொத்த பேமண்ட்டையும் திருப்பி தருவதாக சொல்லி, அவருடைய படத்தில் இருந்து அவளை விலக்கி, அவளுடைய ஆசையை நிறைவேற்றி வைக்குமாறு பணிவாக கேட்டார்.

அனைத்தையும் கேட்டு..”திடீர்னு சொன்னா எப்டி மா..நானும் ரிலீஸ் டேட் புக் பண்ணி இருக்கேனே..” என சொல்ல..

“ப்ளீஸ் சார்..நீங்க தான் பெரிய மனசு பண்ணணும்..” என ரூபாவும் கேட்டாள்.

அவர்களுக்கு ஒத்து கொள்ளாத மாதிரியே பேசி கொண்டு இருந்த தன்ராஜிடம் அவர் மனைவி “என்னங்க..பாவம்ங்க..
போனா போகட்டும்..சின்ன பொண்ணு ஆசைப்படறா..நாம தான் விட்டு குடுப்போமே..” என அவரிடம் சமாதானம் பேச..

அவரும் மனமே இல்லாதது போல “சரி..ரமா..நீ சொன்னதால நான் இதுக்கு ஒத்துக்கறேன்..நாளைக்கு எனக்கு வேற முக்கியமான வேலை இருக்கு..அதை ஒதுக்கி வெச்சிட்டு..உங்க பிரச்சினையை சரி பண்ணிடலாம்…”

“நீங்க நாளைக்கு காலைல பத்து மணிக்கு ஆஃபீஸ் வந்து முழு மனசோட தான் அக்ரிமெண்ட் கான்சல் பண்றேன்..வாங்கின பணத்தையும் திருப்பி குடுக்கறேன்னு…எழுதி குடுத்திடு மா..அது தான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது..” என பேச்சை முடிக்க..”ரொம்ப தேங்க்ஸ் சார்..நீங்க பண்ண இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேன்..நாளைக்கு ஆஃபீஸ் வந்து நீங்க சொன்ன மாதிரி செய்யறேன்..” என்று ரூபாவும் அவள் அம்மாவும் அவரிடம் இருந்து விடை பெற்று காரில் வரும் போது “நல்ல வேளை..நீ நான் சொன்ன மாதிரி பாக்க டீசண்டா ட்ரெஸ் பண்ணிட்டு வரவே..அவரோட ஒய்ப்பும் நான் எதிர்பார்த்த மாதிரி, சரியான நேரத்துல நமக்கு சப்போர்ட் பண்ணி நாம நெனச்சதை முடிச்சு வெச்சிட்டாங்க..”என சந்தோஷமாக சொல்லி சிரித்தார்.

அவர்கள் கிளம்பியதும் தன் மனைவியை பார்த்து “வர வர..என் பொண்டாட்டியும் நல்லா நடிக்க ஆரம்பிச்சுட்டா
டோய்..” என சொல்லி மகிழ்ந்து சிரித்தவர் உடனே பிரபுவை அழைத்து ரூபா வந்தது மேலும் அங்கு நடந்ததை என எல்லாவற்றையும் சொல்லி அவரையும் மறுநாள் காலை பத்து மணிக்கு தன்னுடைய ஆஃபீஸ்க்கு வர சொல்லி போனை வைத்து விட்டு தன் வீட்டினரோடு எப்போதும் போல பேசி, சிரித்து, நேரத்தோடு சாப்பிட்டு படுக்க போனார். (தொடரும்)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்