Loading

நினைவெல்லாம் நீயே-6

அடுத்த அரை மணி நேரத்தில் வந்த அவளுடைய அண்ணன் அண்ணியை பார்த்து அதிர்ந்த ஆராதனா இவர்கள் எப்படி வந்திருப்பார்கள் என யோசிக்க ஆரம்பித்தாள்.

வந்தவன் நேராக ஆராதனாவிடம் போய் “என்ன ஆராதனா..நான் கேள்விப்பட்டது உண்மையா” என ஆச்சர்யத்தோடு கேட்டான்

அவனை அலட்சியமாக பார்த்த ஆராதனா “நீ என்ன கேள்விபட்ட..” என கேட்க

“அதான்..மா..உனக்கு சினிமாவுல ஹீரோயினா நடிக்க சான்ஸ் வந்திருக்காமே..” என அவளுடைய அண்ணி அண்ணனை முந்தி கொண்டு பதில் சொல்ல..

“உங்களுக்கு யார் சொன்னா..” என பிடி கொடுக்காமல் பேசிய ஆராதனாவை நெருங்கிய அவளுடைய அண்ணி “சொன்னவங்களை விடு..அந்த நியூஸ் உண்மை தானே..”

“அவர் பெரிய டைரக்டராச்சே… நீ தினமும் ஷீட்டிங் போனா..உனக்கு கூட ஒரு ஆள் உன்னோட கால்ஷீட் பாத்துக்க, உன்னை பத்திரமா பாத்துக்க ஆள் வேணுமே..இனி உனக்கு அந்த கவலையே வேணாம்..”

உங்கண்ணா அவரோட வேலையை கூட விட்டுட்டு உன் கூடவே வந்து உன்னை பத்திரமா பாத்துப்பாரு.. மொதல்ல இங்கே இருந்து நாம காலி பண்ணிட்டு பெரிய அபார்ட்மெண்ட்க்கு போயிடணும்..அப்ப தான் உனக்கு மதிப்பு இருக்கும்..”

“வர்ற பணத்தை பாதுகாத்து அதை இன்வெஸ்ட் பண்ண நானும் என் வேலையை விட்டுட்டு வந்துடறேன்…நீ யாரை பத்தியும் யோசிக்காம..நடிச்சா போதும்..மீதி எல்லாம் எங்க பொறுப்பு..” என நிறுத்தாமல் பேசியவளை வெறுப்பாக பார்த்த ஆராதனா கை நீட்டி நிறுத்தி …

“கொஞ்சம் நீங்க பேசறதை நிறுத்தறீங்களா..இவர் எதுக்கு எனக்கு துணை வரணும்..அங்க வந்து என்ன பண்ண போறாரு..”

“நீங்க நல்லவங்களா இருந்திருந்தா..
என்னையும் எங்கம்மாவையும் இப்டி தனியா விட்டுட்டு போயிருக்க மாட்டீங்க..
அது கூட போகட்டும்..இப்ப கூட வந்த நீங்க எங்கம்மா இருக்காங்களா இல்லையானு கூட ஒரே ஒரு கேள்வி உங்க கிட்டே இருந்து வரல..”

“ஆனா..உங்களுக்கு யார் என்ன சொன்னாங்களோ….இத்தனை நாள் நாங்க இருக்கோமானு கூட தெரியாம இருந்தவங்களுக்கு எனக்கு சினிமாவில ஹீரோயின் சான்ஸ் வந்திருக்குனு தெரிஞ்சதும், உடனே ஓடி வந்து நான் ஓயாம நடிக்கறத்துக்கும், யார் கிட்டயும் பழக விடாமயும் பணத்தை பத்திரமா நீங்க எடுத்துக்கவும் ஓடி வந்துட்டீங்க..”

“இன்னிக்கு நாங்க உயிரோட இருக்கறத்துக்கும் மானமா வாழறத்துக்கும் காரணம்..இந்த தாத்தாவும், பாட்டியும் தான்.
நான் ஒரு வருஷமா தாத்தாவோட கடையை பாத்துக்கறேன்..அவர் குடுக்கற சம்பளத்துல தான் இதுவரைக்கும் எங்க வண்டி ஓடுது..”

“உங்களுக்கு அது எல்லாம் தெரியாது..
அவசியமும் இல்ல..ஆனா பணம் வருதுனு சொன்னதும்..இதுவரைக்கும் எங்களை திரும்பி கூட பாக்காதவங்க ஓடி வரீங்க..”

“இதுவரைக்கும் என் பிரச்சனைகளை நான் பாத்துக்கிட்டா மாதிரி..இனியும் நானே பாத்துப்பேன்..அதனால தயவு செய்து இனி எந்த காலத்துலயும் எங்களை வந்து பாக்க கூட முயற்சி பண்ணாதீங்க..” என அவர்களை கேவலமாக திட்டினாள்.

அதை கேட்டதும் அவளுடைய அண்ணி அங்கு நடப்பதை நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த ராகினியை பார்த்து “இவ எங்களை மதிக்க மாட்டானு தெரிஞ்சும்..நீங்க போன் பண்ணவே தான் நாங்க வந்தோம்..இப்ப இப்டி பேசறாளே..இதுக்கு நீங்க என்ன பதில் சொல்ல போறீங்க..” என கோபமாக கேட்க..

அதை கேட்டதும் பதறி போய் பதில் சொல்ல முடியாமல் பேந்த பேந்த முழித்த ராகினியை பார்த்த மணி “ஓஹோ..இதுவரைக்கும் வராத பெரிய மனுஷங்க…இப்ப வர..இந்தம்மா தான் நீங்க இங்க வர காரணமா…”

“உனக்கு ஏன் இந்த ஈன பிழைப்பு..அவ இஷ்டப்படி முடிவு எடுக்கட்டும்னு நாங்க.. பேசிட்டு இருக்கும் போது..நீ எதுக்கு இவனுக்கு போன் பண்ண..அப்ப இத்தனை நாளா இங்க நடக்கறது எல்லாம் நீ தான் அவனுக்கு சொல்றீயா..”

“நான் எதுக்கு சொல்லணும்.. அதான் இங்கிருக்கறவங்க எல்லாம் சொல்வாங்களே…இந்தம்மாவோட லட்சணத்தை..”

“இந்த குடும்பத்துல எல்லாத்துலயும் இவ தான் முன்னால நிப்பா..எல்லாத்துக்கும் இவளுக்கு தான் முக்கியமா செய்வீங்கனு சொல்வாங்களே..அப்படி உங்களுக்கும் இவளுக்கும் என்ன தொடர்புனு தான் எனக்கு தெரியல..” என ராகினி தான் இதுவரை சேர்த்து வைத்து இருந்த விஷத்தை வார்த்தைகளாக மாற்றி கொட்டினாள்.

அதை கேட்டதும் அதிர்ந்த மணி “உன் மனசாட்சியை தொட்டு சொல்லு..
இதுவரைக்கும் இவளோ, அக்காவோ..மாமா இருந்தவரைக்கும் சரி..இப்பவும் சரி…நம்ம வீட்டுக்கு தேவையில்லாம
வந்திருக்காங்களா..யோசி..”

“ஆராதனா வந்தா கூட தெரு வாசல்ல உக்காந்து பேசிட்டு போயிடுவா..அதை தாண்டி இந்த கூடத்துக்கு கூட வந்தது இல்ல..அப்பறம் எதை வெச்சு..நீ அவங்க தான் இங்க முக்கியம்னு நீ சொன்னேனு எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்..” என கோபமாக கத்த…

“அதான்..இன்னிக்கு பாத்தேனே..
கோயில்ல…இவளுக்கு அர்ச்சனை அபிஷேகம்னு..மொத நாள் ஷீட்டிங் வேடிக்கை பாக்க போனதுக்கு இங்க நடந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்து தான் நான் பேசினேன்..” என அவளும் பதிலுக்கு கத்த..

“ஏய்..இங்க பாரு டி..உனக்கு தான் அறிவிருக்கா மாதிரி பேசாத…
சரியா..இன்னிக்கு மாமாவோட நட்சத்திர பொறந்த நாள்.. அக்கா நல்லா இருந்தவரைக்கும் கோயில்ல அபிஷேகத்துக்கு குடுப்பாங்க..”

“மாமா ஏற்கனவே பேங்க்ல அதுக்காக பணம் போட்டு வெச்சிருக்காரு..அது தான் இன்னிக்கு கோயில்ல செஞ்சாங்களோ தவிர.. நீ பேசற மாதிரி எதுவும் இல்ல..” என அவளுக்கு பதில் சொன்னான்.

“இங்க பாருங்க.. நீங்க என்ன வேணுமானா பண்ணுங்க..எங்களுக்கு தெரியாது.. எங்க வீட்டு பொண்ணை நீங்க வெச்சு பாத்துக்கறேன்னு சொல்லி அவ பணத்தை எல்லாம் எடுத்துக்க ப்ளான் பண்ணுறீங்களா..”  என தான் வந்த நோக்கத்தை மறக்காமல் ஆராதனாவின் அண்ணி பேச..

ஆராதனா “ஏன் இன்னும் இங்க இருக்கீங்க..நான் தான் உங்களை கிளம்ப…சொல்லி ரொம்ப நேரமாச்சே..” என வெட்டுவதை போல பேச..

“உனக்கு உலகம் தெரியாது..
ஆராதனா..நாங்க உன்னை பத்திரமா பாத்துப்போம்..” என அவள் அண்ணியும் விடாமல் பேச..

“அப்பா ஒரு கவலை விட்டது..எங்களை பாத்துக்க நீங்க வந்துட்டீங்க..நானும்..
எங்கம்மாவும் நாளைக்கே..உங்க வீட்டுக்கு வந்திடறோம்…நான் வேலைக்கு கூட போக வேணாம்..நிம்மதியா இருக்க ஒரு இடம் ஆச்சு..” என ஆராதனா சந்தோஷம் பொங்க பேச…

“நீ தாராளமா வரலாம்..எங்க கூட இருக்கலாம்.. நீ எந்த கவலையும் இல்லாம சினிமால நடிக்கலாம்..நாங்க ஏற்கனவே ரொம்ப பிசியான ஆட்கள்..காலைல ஆஃபீஸ் போனா..நைட் தான் திரும்ப வருவோம்..அந்த காலனி ஆட்கள் எல்லாரும் ரொம்ப வசதியானவங்க..”

“ஆனா அங்கே எல்லாம் உங்கம்மா வந்து இருக்க முடியாது.. அது நான் சொன்ன மாதிரி பெரிய மனுஷங்க இருக்கற இடம்..அவங்களை மாதிரி லோக்கல் ஆட்கள் எல்லாம் அங்க வந்தா எங்க மதிப்பு என்னாகறது..”

“அதனால நீ வர்றத்துக்கு முன்னால ஏதாவது ஒரு ஹோம்ல அவங்களை தள்ளிட்டு வந்துடு..” என இரக்கமே இல்லாமல் அண்ணி பேசியதை கேட்டு ஆராதனா..

“வந்தீங்க..பேசினீங்க..இனி நீங்க வந்த வழி பாத்துட்டு கெளம்புங்க..நீங்க பேசினதை பாத்ததுமே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..”

“இப்பவே இப்படி..நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்தா..இன்னும் என்னென்ன பேசுவீங்க..அப்பா..அதை நினைச்சாலே பயமா இருக்கு..”

“நான் சினிமால நடிக்க போறது இல்ல..
எப்பவும் போல தாத்தா கடையை மட்டும் பாத்துக்க போறேன்..”என தீர்மானமாக சொல்ல..

“ஒரு வேளை உன் முடிவு மாறினா..
உடனே..உங்கம்மாவை கொண்டு போய் நல்ல ஹோம்ல விட்டுடு..பணத்தை பத்தி கவலைபடாத..அங்க அவங்க பேஷண்டை எல்லாம் நல்லா பாத்துப்பாங்க.. நீ நேரா நம்ம வீட்டுக்கு வந்துடு…அப்ப தான் கண்டவங்க உன்னை டாமினேட் பண்ண முடியாது..” என பராங்குசத்தை குறிப்பாக பார்த்து மறுபடியும் தன் நிலையை மாறாமல் பேசி விட்டு அங்கிருந்து தன் கணவனை அழைத்து கொண்டு கிளம்பினாள்.(தொடரும்)

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்