Loading

டீசர் :-

“நான்  சொல்லிட்டே இருக்கேன் இந்த கல்யாணம் வேண்டாம்னு… யாருமே கேட்கலைன்னா என்ன அர்த்தம்” என்று கத்திக் கொண்டிருந்த லத்திகாவை அங்கிருந்த யாவரும் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அதில் இன்னும் எரிமலையானவள் சரவெடி போல் பட் பட்டென்று வெடிக்கத் தொடங்கினாள்.

“இங்க பாருங்க கல்யாணத்துக்கு நீங்க நாள் பாருங்க… என்ன வேணும்னாலும் ஏற்பாடு பண்ணுங்க. ஆனா கல்யாணம் பண்ண நான் இருக்க மாட்டேன்” என்று அவள் சொல்ல “ஏய் வாயை மூடு டி” என்று அர்ச்சனா அவளைத் திட்டினாள்.

“அக்கா உன் வேலையை மட்டும் பாரு என்ன திட்டுற வேலை எல்லாம் வேண்டாம்” என்று அவளிடம் லத்திகா எகிற அர்ச்சனாவோ “அப்படி வேண்டாம்னு நினைக்குறவ உன்னைக் கட்டிக்கிடணும்னு வந்து காத்துட்டு இருக்க அந்த மகராசன் கிட்டயே பேச வேண்டியதுதான” என்று சொன்னதும் இதுவரை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தவள் எரிந்து முடிந்த புஸ்வானம் போல் அமைதியாகிவிட்டாள்…. அவளுக்குள் அவனின் முகம் மின்னலென வந்து போனது.

***************

நிச்சயம் நடந்து கொண்டிருந்த அந்த இடத்தில் அவளின் தமக்கை அர்ச்சனா “ஏய் லத்து என்னதிது இப்படியா இருப்ப.. கொஞ்சம் சிரிச்ச மாதிரிதான் முகத்தை வச்சுக்கோயேன்” என்று சொல்ல அவளோ “இதைப் பாக்க கஷ்டமா இருந்தா சொல்லு. நான் இங்க இருந்து கிளம்புறேன். அதைவிட்டு வராத சந்தோசத்தை… இல்லாத சிரிப்பை இருக்குற மாதிரி காட்டிக்க என்னால முடியாது” என்றாள் லத்திகா…

“அம்மாடி நான் எதுவும் சொல்லலை நீ பாட்டுக்கு கிளம்பிடாதே… எப்படியாவது நில்லு” என்று சொல்ல அருகே நின்றிருந்த மணமகனோ அவளைப் போல் இல்லாமல் உண்மையான சந்தோசத்துடன் இருந்தான்.

அவனருகே இருந்த அவனது தம்பி அவனை கலாய்த்துக் கொண்டிருக்க அதில் வெட்கப்பட்டவன் வேகமாக பக்கத்தில் இருந்தவளை ஏறெடுத்துப் பார்த்தான். அவள் முகத்தில் வெளிப்படையாக தெரிந்த அந்த விருப்பமின்மையை உணர்ந்தவன் “லத்துமா என்னடா” என்றான்.

“ம்ம் ஒன்னும் இல்லை அரு… சும்மாதான்” என்று அவள் இதழ்களில் போலிப் புன்னகையை தவழ விட அதன்பிறகுதான் அர்ச்சனாவிற்கு உயிர் வந்தது போல் இருந்தது.

எப்படியும் அநிருத்தனுக்காகவாது இவ தன்னை மாத்திக்கிட்டு வாழ்ந்தா நல்லா இருக்கும் என்று நினைத்தும் கொண்டாள். ஆனால் தான் நினைப்பதை விட தங்கையவள் நினைப்பது தானே முக்கியம். அது ஏனோ அர்ச்சனாவிற்கு மட்டும் அல்ல மற்ற யாவருக்கும் புரியவே இல்லை.

துணையாய் வருவாயா???

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    13 Comments

    1. Nancy Mary

      பற்பல விருப்பங்களுக்கு மத்தியிலே சிற்சில ஆசைகள் நிறைவேறுமா..!!!😃😃😃

    2. டீசர் ரொம்ப சிறியது ஆனால் கதையோட்டம் அருமை.

      போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்💐💐💐💐

    3. Archana

      வாவ் ஏன் பேர்ல ஒரு கேரக்டரா🤣🤣🤣🤣 அவங்க வில்லியா இல்ல தங்கச்சிக்கு நல்லது நினைக்கிறே அக்காவா.

    4. hani hani

      பிடிக்கும் பிடிக்காது… அவன பிடிக்குது கல்யாணம் பிடிக்காது.. மஞ்சள் கயிறு மேஜிக் வேலை செய்யலாம் … வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

    5. சில்வியா மனோகரன்

      லத்தி நீ சரவெடி னு நிரூபிக்கணும்… கமான் கமான் 😜😜😃😃
      அய்யோ புஸ்வானம் ஆகிட்டாளே…
      🤭🤭🤭🤭

      சூப்பர் டீசர்