Loading

நேரம் காலை ஐந்து மணி…. என்று சொன்னதோடு மட்டும் அல்லாது

விநாயகனே வெல்வினையை
வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்

தன்மையினால் கண்ணில்
பணிமின் கணிந்து!

என்று கணீர் குரலில் விநாயகர் கோவிலில் இருந்து மணிக்கொரு தரம் பாடும் அந்த இயந்திரம் சீர்காழியின் குரலில் பாடலை ஒளிபரப்ப உறக்கத்தில் இருந்து எழுந்தாள் லத்திகா. அவள் மட்டும் அல்ல அந்த ஊரில் முக்கால்வாசி பேர் அந்த பாடலை கேட்டுத்தான் எழுவார்கள். அதுதான் அவர்களுக்கான அலாரம்…  கடிகாரத்தைப் பார்க்காமலே மணி ஐந்து என்று அவளுக்குத் தெரிந்து போனது. எப்போதும் அந்த நேரத்திற்கு எழுந்து பழக்கப்பட்டதால் அவள் வெளியே வந்தாள்.

 

அப்பாவின் அறையை எட்டிப்பார்க்க அவர் நன்றாக போர்வையைப் போர்த்தியபடி உறங்கியிருப்பது தெரிந்தது. உடனே அவள் முகத்தைக் கழுவிவிட்டு வாசலுக்கு வர பால்காரரின் வண்டிச் சத்தம் கேட்டது. வேகமாக செம்பினை எடுத்துக் கொண்டு பாலை வாங்க செல்ல பால்காரரோ… “என்னம்மா சின்ன செம்பை மட்டும் எடுத்துட்டு வர்ற… அப்பா இன்னைக்கு வீட்டுக்கு விருந்தாளிங்க வருவாங்க.. அதனால இரண்டு லிட்டர் ஊத்தச் சொன்னாருமா.. நீ மறந்துட்டயா என்ன” என்று கேட்க அதன் பின் தான் அவளுக்கு அந்த நினைவே வந்தது.

 

“இருங்க அண்ணா பாத்திரம் எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிட்டு அவள் உள்ளே சென்று வேறு பாத்திரத்தை எடுத்து வாங்கி வைத்தாள்.

 

அதன் பின் வாசலைத் தெளித்துவிட்டு மீண்டும் தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.

 

விடிந்து வெகுநேரம் ஆகியும் தனது மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முகம் கலவரத்தில் இருந்தது. நேரம் ஆக ஆக அது கலக்கமாக உருவெடுக்க அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் போனில் இருந்து அந்த நம்பருக்கு அழைப்பினை விடுத்தாள்.

 

அவள் கலக்கத்துக்கு மேலும் கவலையை சேர்ப்பது போல் அந்த எண் அணைத்து வைத்ததிருப்பதாக அவளுக்குத் தகவல் வந்தது. தனது கைப்பேசியைக் கட்டிலின் மேல் தூக்கிப் போட்டவள் எழுந்து வெளியே வந்தாள். வீடே அமைதியில் மூழ்கி இருந்தது.  அப்பா எழுந்துவிட்டார் என்றும் புரிந்தது. ஆனாலும் அவர் பேசாமல் அவர் வேலையை மட்டும் செய்து கொண்டிருந்தார். அதன் காரணம் அவளுக்குப் புரிந்தது. ஆனால் அவளால் தான் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அது வேண்டாம் என்று அவள் எத்தனையோ தடவை சொல்லிவிட்டாள். ஆனால் அவளின் அப்பாவோ பதிலுக்கு ஒன்றே ஒன்று தான் சொன்னார். அதனாலயே என்னவோ அவளால் அவருடன் பதிலுக்கு பதில் பேச முடியாமல் போய்விட்டது.

 

அந்த நேரத்தில் தான் வாசலில் யாரோ வரும் அரவம் கேட்க எட்டிப் பார்த்தவள் வந்துடுச்சு அடுத்த இம்சை என்று எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.

 

அறைக்குள் அமர்ந்திருந்தவளை நெருங்கி “என்னடி நான் வந்ததைப் பார்த்துட்டும் பேசாம உள்ள வந்துட்ட. வான்னு கூப்பிட்டா குறைஞ்சு போயிடுவயா என்ன” என்றாள் அர்ச்சனா.

 

“கூப்பிடாம வந்ததை சொல்லிக் காட்ட என்ன இருக்கு அக்கா. இது நீ பொறந்து வளர்ந்த வீடு. உன்னை நான் வேற தனியா வா அக்கான்னு கூப்பிடணுமா என்ன?” என்றாள் அவள்.

 

“ம்ம் நல்லா பேசுற.. அப்பறம் என்ன முகமே டல்லா இருக்கு”

 

“எல்லாம் நம்மளை பெத்த அப்பா உன்கிட்ட தெளிவா சொல்லியிருப்பாங்க தான. அப்பறம் என்ன?”

 

“அதுதான் உன் மாற்றத்துக்கு காரணமா”

 

“ஆமா. நான் உங்ககிட்ட கேட்டேனா கல்யாணம் பண்ணி என்னை அனுப்பிவிடுங்கன்னு”

 

“கேட்கலை தான் அதுக்குன்னு கல்யாணம் பண்ணாமலே இருந்திட முடியுமா”

 

“ஏன் இருந்தாத்தான் என்னவாம்”

 

“வாயிலே போட்டுடுவேன் லத்தி என்ன பேச்சு பேசுற”

 

“அக்கா இங்க பாரு. எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிடணும்னு ஆசையே இல்லை. இதெல்லாம் வேண்டாமே”

 

“இப்போ அநிருத்தன் இடத்துல அவன் இருந்தாக் கூட இப்படித்தான் சொல்லுவயா நீ”

 

“அதெப்படி சொல்லுவேன் வேகமாக சரின்னு சொல்லி கல்யாணம் பண்ணிட்டு போயிடுவேன்”

 

“அப்படின்னா அவனை வீட்டுல வந்து பொண்ணு கேக்க சொல்லுடி. அதைத்தான் அப்பாவும் சொல்லிட்டாருல்ல”

 

“நானும் தான் அவன்கிட்ட சொல்லிட்டேன்”

 

“என்ன சொன்னான்”

 

“வர்றேன்னு தான் சொன்னான். ஆனா இன்னமும் வரலை. போன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆஃப் னு வருது அக்கா” என்றாள் அவள் வேதனையுடன். அவள் நிலையை புரிந்து கொண்டு அர்ச்சனா அமைதியாக இருந்தாள்.

 

“மதியம் வரைக்கும் தான் அப்பா டைம் குடுத்துருக்காரு. அவன் வந்து என்கிட்ட பொண்ணு கேட்டா அவனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்குறேன்னு… ஆனா வரலைன்னா நீ அநிருத்தனைத் தான் கல்யாணம் பண்ணிக்கிடணும்னு சொல்லுறாரு. என்னால எப்படிக்கா அருவை கல்யாணம் பண்ணிக்க முடியும். எப்படியாவது அவன் வந்து பேசிடணும். ஒருவேளை அவன் வரலைன்னா கூட நான் இந்த கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திடுவேன். அவனைத் தவிர நான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று அவள் சொல்ல அர்ச்சனாவோ அவள் பேசுவதை சற்று அச்சத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

அந்த நேரத்தில் அவர்களின் அப்பா ராதாகிருஷ்ணன் வர அவர்களின் பேச்சு அதோடு தடைப்பட்டது.

 

“என்னம்மா உன் தங்கச்சி என்ன சொல்லுறா. கல்யாணத்தை தடுத்து நிறுத்திடுவேன்னு சொல்லுறாளா… நான் தான் அவகிட்ட தெளிவா சொல்லிட்டேனே… அவளுக்கு பிடிச்சவன் வந்து தைரியமா பொண்ணு கேட்கட்டும். நான் அவனுக்கே இவளைக் கட்டித் தர்றேன்னு. ஆனா இன்னும் அவன் வரலையே..சொல்லி ஒரு வாரம் வேற ஆகிடுச்சு. இதுல இருந்தே தெரிய வேண்டாமா. அவன் மனசுல இவ இல்லைன்னு”

 

“அது அப்பா…”என்று அவள் பேச வர “இன்னும் டைம் இருக்குன்னு சொல்லப் போறயா. உண்மைதான் மதியம் பன்னிரெண்டு வரைக்கும் டைம் இருக்கு. நானும் காத்துட்டு இருக்கேன். அவன் வந்து கேட்டுட்டா உடனே அநிருத்தன் கிட்ட சொல்லி பொண்ணு பாக்க வர வேண்டாம்னு சொல்லிட்டு அவனுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணித் தந்திடுறேன்.. ஆனால்  வரலைன்னா அடுத்து அநிருத்தன் கூட தான் உன்னோட கல்யாணம் என்ன சொல்லுற…” என்றார் அவர்.

 

“சரின்னு ஏற்கனவே சொல்லிட்டேன்ல ப்பா அப்பறம் என்ன” என்று லத்திகா குரல் கம்மச் சொல்ல “ஆனாலும் மனசுக்குள்ள வேற எண்ணம் இருக்கே… அதுக்குத்தான் இப்படி தெளிவா மறுபடியும் சொல்லுறேன். சீக்கிரமா அவனை வரச் சொல்லு. இல்லைன்னா நான் சொன்னதுதான்..” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

 

“அக்கா வெளிய போய்ட்டு வந்துடுறேன்” என்று அவள் சொல்ல “எங்கடி” என்று அர்ச்சனா கேட்கும் முன்பே அவள் அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.

 

இவனை லவ் பண்ண பாவத்துக்கு நான்தான் இவனைக் கூட்டிட்டு ஓடிப் போக வேண்டி இருக்கும் போலயே. ஒருவாரமா ஆளையே பார்க்க முடியலை இன்னைக்கு போனையும் ஆஃப் பண்ணிட்டு எங்கதான் போனானோ என்று நினைத்தபடி இரண்டு தெருக்கள் தாண்டி இருந்த அவனது வீட்டை நோக்கிச் சென்றாள்.

 

வெறுமனே சாத்தியிருந்த அந்த கதவினை லேசாகத் திறந்தவள் உள்ளே நுழைய கிச்சனுக்குள் இருந்து பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டது. உடனே அங்கு சென்று பார்க்க அவன் தான் அங்கே சமைத்துக் கொண்டிருந்தான். “விஜய் என்ன பண்ணுறீங்க” என்று கேட்க அவன் மெதுவாகத் திரும்பி “வாங்க மேடம் நீங்க என்ன இங்க” என்றான் அவன்.

 

“போனை ஆப் பண்ணி வச்சுட்டு நீங்க பாட்டுக்கு இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்களே. அப்பாகிட்ட பொண்ணு கேக்க எப்போ வரப் போறீங்க. நான் சொல்லி எத்தனை நாள் ஆகிடுச்சு”

 

“அதுக்குத்தான் கிளம்பிட்டு இருக்கேன்” என்றான் அவன் சாதாரணமாக.

 

“நல்லா கிளம்புனீங்க. லாஸ்ட் நேரத்துல வந்து டென்சன் பண்ணுறதே உங்களுக்கு வேலையா போச்சு” என்று அவனைப் பற்றித் தெரிந்ததால் அவள் பேச “அப்போத்தான் நல்லா இருக்கும் மேடம். சரி உக்காரு சாப்பிடு”என்று அவன் கூலாகவே சொல்ல “அதுசரி அத்தை இன்னுமா வரலை” என்றாள் அவள்.

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. வந்ததும் அம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்கு வர்றேன். நீ சாப்பிடுறயா” என்று அவன் சொல்ல “இல்லை இல்லை வேண்டாம் விஜய். வீட்டுக்குப் போறேன். நீங்க சீக்கிரமா வந்துடுங்க சரியா. பர்ஸ்ட் போனை ஆன் பண்ணி வைங்க. எனக்கு பயங்கரமா கடுப்பாகுது… நான் கிளம்புறேன் என்று திரும்பி நடந்தவள் “வந்ததுதான் வந்துட்ட அப்படியே…” என்ற அவனின் நீட்டி முழக்கும் குரலில் நின்றுவிட்டாள்.

 

உடனே அவன் புறம் திரும்பி நின்றவள் “இந்த இழுக்குற வேலையெல்லாம் இப்போ வேண்டாம். நீங்க வந்து பேசுனதுக்கு அப்பறமா பாத்துக்கலாம் வரட்டா” என்று சொல்லிவிட்டு அவள் சென்றுவிட அவனது கண்கள் ஒருநொடி சுருங்கி பின் இயல்பானது.

 

நேரம் பன்னிரண்டை நெருங்க நெருங்க அவளுக்கு வயிற்றுக்குள் ஏதோ உருளத் தொடங்கியது. விஜய் சீக்கிரமா வந்துடு என்று நினைத்துக் கொண்டே அவள் போன் பண்ண அந்த போன் அப்போதும் காலையில் இருந்தது போல் தான் இருந்தது. போனை ஆன் பண்ணவே இல்லை. இப்போ வர்றாங்களா என்னென்னு தெரியலையே…கடவுளே சீக்கிரமா அவன் வந்துடணும் என்று அவள் பரிதவித்துக் கொண்டிருக்கையில் அவளை அழுத்தமாகப் பார்த்தபடி அருகே இருந்த கடிகாரத்தை பார்த்துவிட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார் அப்பா.

 

இந்த அப்பா வேற ச்சே என்று சலித்துக் கொண்டவள் டேய் வந்துருடா என்று தனக்குள்ளயே சொல்லிக் கொண்டாள்.நேரம் தான் சென்று கொண்டே இருந்ததே தவிர அவன் வரும் வழியைத்தான் காணவில்லை.

 

அர்ச்சனாவிற்குமே அவள் மனம் படும் பாடு கண்டு வருத்தமாக தான் இருந்தது. ஆனாலும் அவன் வரவில்லை என்னும் போது யாரால் என்ன செய்ய முடியும். அதுவும் அப்பா சொன்னது போல் செய்துவிட்டால் அவர் சொன்னதை நிறைவேற்றி விடுவார். இல்லை என்றால் அவர் சொன்னதுதான் நடக்கும். அதற்கு சம்மதித்து தான் ஆக வேண்டும்… இனி இவளுக்கு கல்யாணம் அந்த அநிருத்தனுடன் தான் என்று நினைத்தவள் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

 

“அண்ணா அண்ணா” என்றபடி வேகமாக ஓடி வந்தான் ரகு.

 

“டேய் என்ன எதுக்கு இவ்வளவு அவசரமாக ஓடி வர்ற” என்று அநிருத்தன் கேட்க “அது அண்ணா நீ கிளம்பிட்டயான்னு தான் பாக்க வந்தேன்” என்றான் அவன்.

 

“கிளம்பிட்டே இருக்கேன்.ஆனா எந்த சட்டை போடுறதுன்னு தெரியலை.. “

 

“நேத்து புதுசா ஒரு சட்டை எடுத்து வந்தயே அண்ணா அதைப் போடு”

 

“அது போட்டுப் பார்த்தேன். ஆனா நல்லா இருக்குற மாதிரி தோணலை டா.. “

 

“அப்போ ஒன்னு பண்ணலாம். இன்னொரு புது சட்டை எடுக்கலாம்”

 

“நான் நினைச்சேன் நீ சொல்லிட்ட டா. வா போகலாம்” என்று அநிருத்தன் சொல்ல

 

“நீ இப்படிலாம் பண்ணுவன்னு தெரிஞ்சு தான் நான் உனக்கு ஒரு சட்டை எடுத்து வச்சேன் அண்ணா. இரு எடுத்துட்டு வர்றேன்” என்று சொன்னவன் தனது அலமாரியில் இருந்து அந்த சட்டையை எடுத்து வந்தான். நீல நிறத்தில் இருந்த அந்த பார்மல் உடை பார்த்த உடன் பிடித்துவிட்டது.

 

“ரகு செமையா இருக்கு டா”

 

“எனக்குத் தெரியும் அண்ணா. இது உனக்கு பிடிக்கும்னு” என்று அவன் சிரிப்புடன் சொல்ல “எப்படி” என்றான் அவன்.

 

“ஏன்னா இது அண்ணியோட பேவரிட் கலர் கரெக்டா” என்று கேட்க ம்ம் என்று சட்டையை வருடிக் கொண்டே மெல்லியதாய் முணங்கினான் அவன்.

 

“சரி கிளம்பு” என்று ரகு சொல்ல அதற்கு தோதாய் தன்னிடம் இருந்த நீல கரையிட்ட வேட்டியை எடுத்துக் கொண்டு அவன் சென்றுவிட்டான்.

 

செல்லும் அண்ணனைப் பார்த்தவன் உனக்காக என்னென்ன வேலை பார்க்க வேண்டி இருக்கு… உஃப் என பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

 

“அர்ச்சனா உன் தங்கச்சியை மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர்றதுக்கு முன்னாடி  கிளம்பி ரெடியா இருக்கச் சொல்லு” என்று சொல்ல லத்திகா வேகமாக அவரை நிமிர்ந்து பார்த்தாள். அந்த பார்வை மாட்டேன் என்பது போல் இருக்க “நான் சொன்னது மாதிரியே நியாயமாத்தான் நடந்துக்கிட்டேன். நீயும் நியாயமா நடந்துக்க பாரு லத்திகா. உன் மேல உண்மையிலே அவனுக்கு விருப்பம் இருந்திருந்தா அவன் எப்பவோ வந்து இருப்பான். ஆனால் கடைசி நிமிசம் வரைக்கும் அவன் வரல… அப்படின்னா அவனுக்கு உன்ன கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லைன்னு தான் எனக்குத் தோணுது. அதனால அவனை மறந்துட்டு அநிருத்தனை கல்யாணம் பண்ணிக்கும் வழியைப் பாரு” என்று தீர்மானமாய் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

 

எனக்கு அருவை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை. இவங்களால அப்படி என்ன பண்ணிட முடியும் என்று தன்னைத் தேற்றிக் கொண்டவளுக்கு இந்த விஜய் ஏன் வராம போனான் என்பதே உள்ளுக்குள் அரித்துக் கொண்டே இருந்தது. அப்பா சொல்லுற மாதிரி… ச்சே ச்சே அவன் அந்த மாதிரி கிடையாதே என்று அவள் நினைக்க அர்ச்சனா வந்து “லத்து உனக்கு புடவை எடுத்து வச்சுருக்கேன். நீ போய் கட்டிட்டு வா” என்று சொல்ல “அக்கான்னு கூடப் பார்க்க மாட்டேன் அடி பின்னிடுவேன். மரியாதையா ஓடிடு” என்று சொல்ல “இது நல்லா இருக்கே உன் ஆள் வரலைன்னா அதுக்கு நான் தான் கிடைச்சேனா.. அப்பா சொன்னது மாதிரி அவனுக்கு விருப்பமே இல்லை போல. போ போய் ஒழுங்கா ரெடியாகிட்டு வா. என் மேல அப்பறமா கோபப்படலாம்” என்று சொல்ல அவள் அமைதியாக கிளம்பி வந்தாள். 

 

அப்பா சாமியறையில் இருந்த பீரோவில் இருந்து அம்மாவின் நகையை எடுத்து வந்து அர்ச்சனாவிடம் நீட்ட அவள் அதை வாங்கி லத்திகாவின் கழுத்தில் போட்டுவிட்டாள்.

 

கழுத்தில் கிடந்த அணிகலன்களை பார்த்ததும் அவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. “லத்து அழாத அம்மா எங்கேயும் போகலை நம்ம கூட தான் இருக்காங்க” என்று அர்ச்சனா சொல்ல அவளோ “அம்மா இருந்திருந்தா எனக்கு பிடிக்காத விசயத்தைப் பண்ண விட்டுருக்க மாட்டாங்க தான” என்று  தேம்பிக் கொண்டே சொல்ல அர்ச்சனாவிற்கு கோபமே வந்துவிட்டது 

 

“லத்தி உனக்கு என்ன வேணும்னு உனக்கே சரியாத் தெரியலை அவ்வளவுதான் நான் சொல்லுவேன்” என்று சொல்ல

 

“ஆமா ஆமா நான் சந்தோஷ் சுப்ரமணியம் இவ அவங்க அப்பா சுப்ரமணியம் வந்துட்டா.. போடி”  என்றாள் லத்திகா.

 

“கிண்டலுக்கு எல்லாம் குறைச்சல் இல்லை உனக்கு. அத்தை வீட்டுல இருந்து வந்து பார்த்துட்டுப் போறவரைக்கும் உன் வாயை கொஞ்சம் குறைச்சு வை” என்று சொல்ல அவளோ எப்படியாவது அருகிட்ட பேசி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லிடணும் என்று மனதுக்குள் முடிவு எடுத்துக் கொண்டாள்.

 

“எல்லாத்தையும் எடுத்து வச்சாச்சா ரகு” என்று ரேணுகா வர “எடுத்து வச்சுட்டேன் அம்மா. உங்க மகனை மட்டும் தான் காருக்குள்ள இழுத்துப் போடணும். அதை நீங்க தான் பண்ணனும். ஏன்னா தலைவர் அப்போ இருந்து வெளியவே வரமாட்டுறார்” என்று தன் மொபைலை நோண்டிக் கொண்டு அவன் பேசினான்.

 

“இன்னுமா அவன் கிளம்புறான்” என்றபடி “அநி டேய்” என்று அம்மா கத்த “அம்மா இதோ வந்துட்டேன்” என்றவாறு கீழே இறங்கி வந்தான் அவன்.

 

ஒரு நிமிடம் ரேணுகாவே அசந்து போய் நின்றுவிட்டார். “என்னம்மா அப்படிப் பாக்குறீங்க ” என்று அநிருத்தன் கேட்க “நானே கண்ணு வச்சுட்டேன் டா. அவ்வளவு அழகா இருக்க” என்று நெட்டி முறிக்க “அப்போ ஓகேவா ம்மா” என்றான் அவன்.

 

“சூப்பரா இருக்க டா.. ஒரு நிமிசம் அப்பா ஞாபகம் வந்துடுச்சு எனக்கு.. நீ அவரை மாதிரியே இருக்க… சரி சரி வா போகலாம்” என்று சொல்ல அவனும் அடுத்து எதையும் பேசாமல் வண்டியில் சென்று அமர்ந்தான்.

 

“அண்ணா நீ அம்மா பக்கத்துல போய் உக்காரு. நான் வண்டியை ஓட்டுறேன்” என்று ரகு சொல்ல “இல்லை பரவாயில்லை நானே ஓட்டுறேன்” என்று வண்டியை எடுத்தான் அநிருத்தன்.

 

முழுதாய் இரண்டு வருடங்கள் கழித்து இன்றுதான் அவளைக் காண வருகிறான்.  அவளைக் காணவேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் சாகரம் போல் விரிந்து கிடக்க அவளோ வேறு ஒருவன் மேல் விருப்பம் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தால் அவன் மனம் தாங்குமா என்ன?….

 

துணையாய் வருவாயா…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    9 Comments

    1. Janu Croos

      இந்தாமா லத்திகா…என்ன பிரச்சினை உனக்கு….உங்க அப்பா ஒண்ணும் நான் சொல்ற பையனா தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு கட்டாயப்படுத்தலயே….நீ லவ் பண்ற பையன வந்து பொண்ணு கேக்க தானே சொல்றாரு….அவன் வரலனா அதுக்கு அவரு என்ன பண்ணுவாரு….
      உன்ன உண்மையாவேலவ் பண்றவனா இருந்தா இந்நேரம் அவன் வந்து உங்கப்பா கிட்ட பேசி இருக்கனும்ல….அவன் வந்து பேசல….அப்போ நீ உங்க அப்பா கிட்ட சொன்ன மாதிரி அநிய கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே….நீ என்னடானா முடியாதுனு சொலீலிட்டு இருக்க….
      அநிவேற ரொம்ப ஆசையா வாரான்…நீ இன்னொருத்தன லவ் பண்ற விஷயம் தெரிஞ்சா எப்படி தாங்கிப்பானோ…..

    2. Nancy Mary

      அருமையான சுவாரஸ்யமான ஆரம்பம் சகி சூப்பர்🤗
      லத்தியோட அப்பா சரியா நடந்துக்குறாரு ஆனா ரகு தப்பா நடந்துக்குறானே அவனோட பேச்சும் செயலும் சுத்தமா சரியில்ல கோழையா இருக்கானோனு யோசிச்சா கேவலமானவனா இருப்பான் போல இது புரியாம பிடிவாதம் பிடிக்குறவளோட வாழ்க்கை பிடிச்சவனால மீட்கபடுமானு பார்க்க ஆவலா இருக்கேன்😍😍😍😍❤️❤️❤️❤️

      1. பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்
        Author

        மிக்க நன்றி சகி. ரகு என்ன பண்ணான்… பாவம் அவன்… அண்ணனுக்காக சட்டை எடுத்துவந்து குடுத்தது ஒரு குத்தமா மா… இப்படி அவனைப் போய் கெட்டவன்னு சொல்லிட்டீங்களே…😂😂😂😂😂

    3. Sangusakkara vedi

      Lathikka yen ipdi pannura…. Idiot fellow…. Antha vijay varen nu dialogue la vittan….. Aala kanom… Piduchuruntha vanthurukanume…. Yen varala…. Lathiyum avana nambi iruntha paru… Ivvalu irresponsible aana aala epdi thn love panralo… Innum love panra…. Muttal…. Rahu ani ponding super …. Aniyoda love um super…. Ani Yoda character rmba rmba piduchuruku….. Solla maranthutten…. Oru appa va lathi appa correct ah sollirukaru…. Ipo ve ivalavu irresponsible ah irukura paiyanuku entha appa ponna katti kuduparu…. Intha lathi loose vela pakurathuku munnadi chattu puttinu anikum lathi kum kalyanam panni vachurunga sis….

    4. Oosi Pattaasu

      ‘நினைவாய் அல்ல துணையாய் வருவேன்’ ரெண்டு பேரோட தனித்தனி வன் சைட் லவ் ஸ்டோரிய சொல்ற, அழகான கதை.
      இதோட பாசிட்டிவ்ஸ்,
      1.லத்திகா, விஜய் வருவானான்னு தவிக்கிற சீன்ஸ்ல நமக்கே இந்த பையன் வந்துரணும்னு பதட்டமா இருக்கு. அந்த ரைட்டிங் ஸ்டைல் சூப்பர்.
      2.லத்திகா குடுக்குற கவுண்டர்லாம் செம காமெடியா இருக்கு.
      3. லத்திகாவோட அப்பா கண்டிஷனா பேசுறது, அப்டியே ரியலா இருக்கு.
      நெகட்டிவ்ஸ்னா,
      1.ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் கொஞ்சம் தெரியுது.
      2.நிறைய இடத்துல, நிறுத்தற்குறிகள் சரியா யூஸ் பண்ணல.
      3. பேரக்ராஃப் கொஞ்சம் பிரிச்சு, பிரிச்சு எழுதுனா நல்லாருக்கும். இந்த மிஸ்டேக்ஸ் மட்டும் கரெக்ட் பண்ணிக்கிடா ஸ்டோரி படிக்கும்போது இன்னும் நல்லாருக்கும்னு நெனைக்கிறேன்.
      ஓவர் ஆலா, ஸ்டோரி ரொம்ப நல்லாருக்கு. ஹீரோ யாருன்னு ஆர்வத்தக் கிளப்புற விதத்துல இருக்கு.

    5. Sangusakkara vedi

      1. அநிருத்தனோட ஆழமான காதல் ரொம்ப பிடிச்சிருக்கு.

      2. ஒரு காதலியா லத்திகாவோட ஏக்கங்களும் ஒரு தந்தையா லத்தி அப்பாவோட முடிவும் ரொம்ப ரசிக்க வைத்தது.

      3. தன்னோட அண்ணனோட முழு குணத்தையும் அவனோட ஆழமான காதலையும் ரகு புருஞ்சுக்குட்ட விதமே அவங்களோட பாசத்தையும் அழகா எடுத்து காட்டுது.

      1.குறைன்னு சொல்ல முடியாட்டியும் கதையை பெருசா குடுக்காம குட்டி குட்டி பாராவா குடுத்தா நல்லா இருக்கும்…

      2.அங்க அங்க ஸ்பெல்லிங் எரர்ஸ்… அவ்ளோ தான்…

      3. யூடிய காணோம்… ரெகுலர் ரா யூடி கொடுத்தா நல்லா இருக்கும்…

    6. Oosi Pattaasu

      லத்திகாக்கு விஜய் மேல லவ்வு, அநிருத்துக்கு லத்தி மேல லவ்வு, யாரு யாரோட சேரப் போறாங்க நவ்வு (Now uh)?

    7. kanmani raj

      லத்திகாவுக்கு விஜய் மேல காதல், அதுல அப்பாவோட மோதல், விஜய் வராத கேப்ல கிடா வெட்ட போறான் அநி…