Loading

டீசர் 2…

“டேய் ரகு லத்திகாவுக்கு குடிக்க ஏதாவது வாங்கிக் கொண்டு வந்து குடுடா”

“அண்ணி மேல உனக்கு கடலளவு காதல் இருக்குதான் அது எங்க எல்லாருக்குமே தெரியும். அதுக்காக இதெல்லாம் ஓவர் டா அண்ணா”

“டேய் ரகு ப்ளீஸ்டா போ… அவ முகமே ரொம்ப களைப்பா இருக்குடா. சாப்பிடவே இல்லை போல”

“நான் வேணும்னா போய் சாப்பாடு எடுத்துட்டு வர்றேன் இங்கயே உக்காந்து அண்ணிக்கு ஊட்டிவிடுறயா”

“ஓ யெஸ். இதுல எனக்கொன்னும் இல்லையே”

“உனக்கு ஒன்னுமே இல்லைப்பா சாமி. ஆனா அதைப் பாக்குற கொடுமையெல்லாம் எங்களுக்கு வேண்டாம். நான் போய் கூல்டிரிங்க்ஸ் ஏதாவது வாங்கிட்டு வர்றேன்” என்று அவன் கிளம்பினான்.

அவன் தன்னை உயிராய் நினைப்பதை புரிந்து கொள்ளாமல் நடக்கும் நிச்சயத்தினை தடுக்கும் வழியறியாது கலக்கத்துடன் இருந்தாள் லத்திகா. அருகில் இருந்த அநிருத்தனோ அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான். மாலையின் மறைவில் அவன் பிடித்தது யாருக்கும் தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் யார் என்ன சொல்லப் போகிறார்கள். ஆனால் லத்திகாவிற்கு நடுக்கம் வந்துவிட்டது.

“லத்து ரிலாக்சஸ் நாந்தான். எதுக்கு இப்படி நடுங்குற”

“ஒன்னும் இல்லை அரு கையை விடுங்க”

“ஏன் நான் கையை பிடிச்சதே இல்லையா லத்து”

“ப்ளீஸ் கையை விடுங்க” என்று வலுக்கட்டாயமாக அவள் உருவிக் கொள்ள அப்போது அவள் முகத்தில் தெரிந்த சுளிப்பில் அவன் காதல் கொண்ட அகம் அங்கேயே அடி வாங்கியது. ஆனாலும் இந்த இடத்தில் அவளுக்கு கையைப் பிடித்தது பிடிக்கவில்லை போல என்று நினைத்தபடி மீண்டும் அவன் திரும்பிப் பார்க்க அவள் உதட்டில் சின்னதாய் புன்னகை இழையோடிக் கொண்டிருந்தது.

சற்று முன் கண்டது கனவா இல்லை இப்போது கண்டது கனவா என்று அவனே குழம்பிப் போய்விட்டான்.

அந்த நேரத்தில் வந்த ரகு “அண்ணா இந்தா” என்று குளிர்பானத்தை நீட்ட அதை வாங்கியவன் “லத்துமா இதைக் குடி” என்றான்.

அவளுக்கு உண்மையிலே அதுதான் தேவையாய் இருந்தது. “தாங்க்ஸ் அரு” என்று சொன்னவள் வாங்கி மடமடவென குடிக்க ஆரம்பித்தாள்.

நிச்சயம் சிறப்பாக நடந்து முடிக்க சாப்பிட்டு விட்டு அனைவரும் அவரவர் அறையில் முடங்கியிருந்தார்கள். அந்த நேரத்தில் தான் ரகுவின் செல்லுக்கு புதிதாய் ஒரு நம்பரில் இருந்து கால் வந்தது. “ஹலோ” என்று அவன் அழைக்க எதிர்முனை என்ன சொல்லியதோ ரகுவின் முகம் பதட்டத்துக்கு உள்ளானது.

“இல்லை இல்லை நான் வந்துடுறேன். வெயிட் பண்ணுங்க” என்று அவன் கிளம்ப  மண்டபமே இருளில் மூழ்கியிருந்தது. வெளியே சென்றவன் சிறிது நேரம் கழித்தே மண்டபத்துக்கு வந்தான்…

வந்தவனை அநிருத்தன் பார்த்துவிட என்னவென்று அந்த இரவில் விசாரிக்கத் தொடங்கினான்.

“ஒன்னும் இல்லை அண்ணா மண்டபத்துக்கு நாளைக்கு சமையலுக்கு வர வேண்டிய திங்க்ஸ் கொஞ்சம் இருந்தது. அதை கலெக்ட பண்ணிட்டு குடுத்துட்டு வந்தேன். அது சரி நீ என்ன இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க” என ரகு கேட்க “அது அண்ணிகிட்ட பேசலாம்னு வெளிய வந்தேன். வந்து பார்த்தா எல்லாரும் நல்லா தூங்கிட்டு இருக்காங்க. இந்த நேரத்துல நாங்க பேசுறது நல்லா இருக்காதுன்னு யோசிச்சுட்டே இங்கேயே நின்னுட்டேன்” என்றான் அவன்.

“நாளைக்கு காலையில இருந்து இனி நீ பேசுறதை யாராலும் தடுக்க முடியாது அண்ணா. நீங்க போங்க” என்று அனுப்பி வைக்க அந்த நேரத்தில் மண்டபத்தின் வாசலில் இருந்து இருளோடு இருளாய் யாரோ மறைந்து போனதை பற்றி வேறு யாவரும் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

துணையாய் வருவாயா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
2
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  1 Comment

  1. சில்வியா மனோகரன்

   என்ன எல்லாமோ நடக்குதே 🙄🙄
   லத்தி 🤔🤔🤔
   அடேய் ஃபோன் ல என்னடா சொன்னாங்க 🙄🤔🤔🤔

   சூப்பர் டீசர் …

   வெற்றி பெற வாழ்த்துக்கள்…