Loading

நான் நினைத்தால் வருவாயோ அன்பே..!

 

 அத்தியாயம் 5.

 

 இருக்கும் இடத்தில் இருந்தால் தான் அனைவருக்கும் மதிப்பு என்பது விஐபிக்கு நன்றாகவே பொருந்தும்..

 

 

 சென்னையில் அவனை ஒரு முறை பார்க்க முடியாதா?. அவனுடன் ஒரு போட்டோ எடுக்க முடியாதா?. என ஏங்கும் அவன் ரசிகர்களுக்கு மத்தியில் இங்கே மதுரையில் அவன் மாஸ்க் அணியாமல் எவ்வளவு நேரம் அதே இடத்தில் இருக்கிறான்.. ஆனால் ஒரு மனிதர் கூட அவனிடம் வந்து பேசவில்லை..

 

 

 விஐபி பெரிதாக பேட்டிகள் போட்டோக்கள் எதுவும் போஸ் கொடுப்பதில்லை எப்போதாவது ஒரு முறை தான் கொடுப்பான்..

 

 

அதனால் அவனை இங்கே அடையாளம் தெரியவில்லை போல்..

 

 அத்தான் என்று உருகிய சீதா கூட இதுவரையும் ஒரு வார்த்தை அவனுடன் பேசவில்லை வந்ததற்கு..

 

 

 சீதாவிடம் அவளை நெருங்கி என்ன நடந்தது என்று கேட்க முத்து அனுமதிக்கவில்லை விஐபியை..

 

 

 மீரா மட்டும் இடை இடையே வந்து மகனுடன் பேசிவிட்டு அவனுக்கு மதிய உணவு மற்றும் டீ காபி ஜூஸ் என கொடுத்து கவனித்துக் கொண்டார்..

 

 

 துர்காவின் கணவனுக்கு குடும்பம் யாரும் இல்லாததால் அவன் அங்கேயே அந்த வீட்டிலேயே திருமணத்தின் பின் இருக்க முடிவெடுத்திருந்தார்கள்..

 

 

 திருமண மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வந்ததும் நடத்தும் சடங்குகளை பார்த்து முத்துவும் யசோதா மற்றும் மீராவை அழைத்து பேசினான்..

 

 

 அதன்படி முத்துவையும் சீதாவையும் முத்துவின் வீட்டிற்கு முறைப்படி அழைத்து சென்று சீதாவை அங்கே பூஜை அறையில் விளக்கேற்றி பால் பழம் கொடுத்து சடங்குகள் செய்து முடித்தார்கள்..

 

 

 அதோ இதோ என்று நேரம் விரைந்தோடி மாலை நேரமும் நெருங்கியது..

 

 

 விஐபி தாயை அழைத்து நாளை அவன் சென்னையில் இருக்க வேண்டும் ஒரு மீட்டிங் மற்றும் ரெக்கார்டிங்கும் இருக்கிறது திடீரென இங்கே வந்ததால் அதை நிறுத்த முடியாது என கூறினான்..

 

 

“ அம்மா நாளைக்கு மார்னிங் நான் சென்னையில் இருக்கணும்.. சீதா என்ன முடிவு எடுத்திருக்கா?. நீங்க எப்படி வருவீங்க?..” என்றான்..

 

 

அப்போது யசோதாவும் அங்கே வந்து சேர்ந்தார்..

 

 

தன் சொந்த அண்ணன் மகனை மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை என்பதை தவிர வேறு எந்த குறையும் இல்லை..

 

 

 யசோதாவிற்கு கணேசனும் அண்ணன் முறை தான்..

 

 

 இந்த கிராமம்தான் யசோதா மற்றும் கல்யாணராமன் கிருஷ்ணன் மூவருக்கும் சொந்த ஊர்..

 

 

 யசோதாவுக்கு தன் சொந்த ஊரிலேயே சொந்தங்கள் மத்தியில் மகள் சந்தோஷமாக வாழபோகிறாள் என்று அதுவே அவர் சந்தோஷமாக இருக்க போதுமானதாக இருந்தது..

 

 

 ஆனால் மகள் இங்கே வாழ முடியாது என்று கூறி மீண்டும் சென்னைக்கு வந்து விடுவாளோ என்று பயமும் இருந்தது..

 

 

 

“ என்ன அண்ணி..?. ” என்றார் யசோதா.

 

 

“ அத்தை இந்த கல்யாணத்தை நீங்க ஏற்றுக் கொள்றீங்களா?. ” என்றான் விஐபி..

 

 

“ முத்துவை மாப்பிள்ளையா ஏற்றுக் கொள்றதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை தம்பி.. ஏன்னா தங்கமான பையன்.. கணேஷ் அண்ணா பற்றி எனக்கு நல்லா தெரியும்.. அப்படி ஒரு குடும்பத்தில் என் பொண்ணு வாக்கப்பட்டிருக்கிறது. எனக்கு சந்தோசம் தான்.. நம்ம முடிவு முக்கியமில்லை.. சீதா என்ன முடிவு எடுக்கப் போறாளோ அது தான் இப்ப முக்கியமே.. நூத்துல ஒரு வீதமா சீதா ஏற்றுக் கொண்டு இங்க வாழப் போறேன்னு சொன்னா எனக்கு ரொம்ப சந்தோஷம்.. ” என்றார் யசோதா..

 

 

இங்கே மகள் இருந்தால் கட்டாயம் அவர் எதிர்பார்த்தது போல முத்து அவளைக் குடும்ப பாங்கான பெண்ணாக மாற்றி விடுவான் என்று அவருக்கு அதிக நம்பிக்கை இருந்தது..

 

 

 அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருப்பதை அவளுக்கு மருந்து போட்டு விட்டு அறையில் இருந்து வெளியே வந்த முத்து பார்த்தான்..

 

 

 

 அவர்களை நோக்கி வந்து அவனும் ஒரு சேர் எடுத்து அவர்கள் அருகில் போட்டு அதில் இருந்து கொண்டு

 

“ என்ன ம்மா ஏதாவது பிரச்சினையா?.. ” என்றான் மீராவை பார்த்து..

 

 

 தன் அம்மாவை புதிதாக அவன் அம்மா என்று கூறவும் சிறுபிள்ளையாக கோபம் கொண்டான் விஐபி..

 

“ இவங்க என்னோட அம்மா எனக்கு மட்டும்தான் அம்மா.. ” என்றான் மீராவை தோளோடு அணைத்துக் கொண்டு..

 

 

“ யாரு இப்ப இல்லன்னு சொன்னா?.. அவங்க உனக்கு அம்மா தான்.. இருந்தாலும் அவங்க இன்னிலிருந்து எனக்கும் அம்மா தான்.. சித்தியோ பெரியம்மாவோ ஒரு உறவு முறை வரப்போகுது.. அப்படி கூப்பிடாம நான் இனி அம்மான்னே கூப்பிட போறேன்.. உனக்கு அப்பா இல்ல நீ எங்க அப்பாவை அப்பானு கூப்பிடு நான் கோவிச்சுக்க மாட்டேன்.. எனக்கு அம்மா இல்லை இவங்களை நான் அம்மான்னு கூப்பிடுறேன் அதே மாதிரி நீயும் கோவிச்சிக்காத..” என்று 30 வயது தடிமாடுகள் இரண்டும் டீல் பேசியது..

 

 

“ சரி சரி அடிச்சுக்காதீங்க விடுங்க இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்க போறோம்.. அதுவும் சீதா என்ன முடிவு எடுக்கிறாளோ?.. அது தெரிகிற வரைக்கும் தான்.. அதுக்குள்ள ஏன் அடிச்சிக்கிறீங்க.. ” என்று மீரா அவர்களுக்கிடையே புகுந்து சமாதானம் செய்தார்..

 

 

“ நாளைக்கு விஜய் சென்னையில் கட்டாயம் இருக்கணும்.. அதனால இன்னைக்கு நைட்டு அவன் போக போறேன்னு சொல்றான்.. ஆனா எங்களால கார்ல அவ்வளவு தூரம் போக முடியாது.. அதனால தான் நாங்க பிளைட்ல வந்தோம்.. விஜய் போயிட்டா நாங்க இங்க இருந்து கார்ல போக முடியாது.. சீக்கிரமா சீதாவோட முடிவை தெரிஞ்சுக்கணும்.. ” என்றார் மீரா..

 

 

“ ஆமாம் தம்பி சீதா பிளைட்ல வரமாட்டா அவங்க அப்பாவும் மாமாவும் பிளைட் ஆக்சிடென்ட்ல தான் இறந்து போய்டாங்க.. அவளுக்கு பிளைட்ன்னா பயம் அந்த சத்தம் கேட்டா காத பொத்திகிட்டு கத்தி அழுவா.. அதனாலதான் தனியே இவ்வளவு தூரம் கல்யாணத்துக்கு கார்ல வந்தா.. ” என்றார் யாசோதா..

 

 

 

 

“ சரி அத்தை நான் போய் உங்க பொண்ணோட முடிவு என்னன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அவர்களிடம் இருந்து தனியே வந்தான்..

 

 

 

‘ அட தக்காளிக்கு இப்படி ஒரு வீக் பாயிண்ட் இருக்கா என்ன.. அப்ப கூடிய சீக்கிரமே நீ அப்பாவா ப்ரோமோஷன் ஆக போறது உறுதி.. இப்பவே தெரிஞ்சுதே.. இதை வச்சு பல எபிசோடு ஒட்டிடலாம். இப்ப போயி ஒரு அட்டனன்ஸ் போட்டுட்டு வருவோம்..’ என மனதில் நினைத்துக் கொண்டே அவள் இருந்த அறைக்கு சென்று மீண்டும் கதவை பூட்டி விட்டு போய் அவள் பக்கத்தில் அமர்ந்தான்..

 

 

அவள் கை எடுத்து அவன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டு பேசுவதற்கு வாய் அவன் திறக்கும் போது கையை உருவி எடுத்துக் கொண்டாள்..

 

 

“ இப்ப தானே சொன்னேன்.. தொட்டு பேசுற வேலை எல்லாம் வேணாம்னு.. தொடாம கொஞ்சம் தள்ளி இருந்து என்ன சொல்லனுமோ சொல்லிட்டு போங்க..” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி கத்தினாள்..

 

அவள் முகத்தில் அவ்வளவு கோபம் இருந்தது ஆனால் அதெல்லாம் நம்ம ஹீரோவுக்கு கணக்கே இல்லை ..

 

“ ப்ச்ச். என்னடி இப்ப?. உன்னை தொடக்கூடாது அவ்வளவு தானே.. சரி தொடல..” என்று கொஞ்சம் இடைவெளி விட்டு இருந்தான்..

 

 

“ நேத்து நான் ஆக்சிடென்ட் பண்ணதுக்கு பழி வாங்கிட்டு.. இப்ப நீங்க நல்லவர் மாதிரி நடிக்கிறீங்க என்ன?. “

 

 

 

“ என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது.. பழிவாங்கற ஆள் மாதிரியா தெரியுது. எனக்கு பழிவாங்குறதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.. எனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறதை நீ மனசுல வச்சிக்கிட்டு எதுவா இருந்தாலும் பேசு.. உண்மையா ஒரு தங்கச்சியை அம்மாவை நேசிக்கிறவன் எந்த பொண்ணையும் நோகடிக்க மாட்டான்.. அம்மா இல்ல ஆனா ஒரு பொண்ணு இடத்துல இருந்து எனக்கு எல்லாமே ஒரு நல்ல ஃப்ரெண்ட் தங்கச்சி அக்கா அம்மா யமுனா தான்.. இப்படி தங்கச்சியவே இவ்வளவு நேசிக்கிறேன்.. யமுனாக்கு பார்த்து பார்த்து எல்லாத்தையும் செய்ற நான் எனக்கு பொண்டாட்டியா வர போறவளை எப்படி நேசிக்க காத்திருப்பேன்..” என்றான்..

 

 

 அவன் பேசுவதை கை நீட்டி தடுத்தவள்.

 

“ அதுதான் நீங்க நேசிச்ச இலட்சணத்தை நானே பார்த்தேன்.. நீங்க லேசா சொல்லிட்டீங்க என்ன இப்படி அறை குறையா பார்த்ததால என்னை தவிர நீங்க யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்கன்னு சொல்லி..

 

என்கிட்ட ஒரு வார்த்தை இதுக்கு சம்மதமானு கேட்கவும் இல்லை.. ஆனா தாலி வாங்கி கட்டிட்டிங்க கழுத்துல.. சேர்ந்து வாழறதும்.. இல்ல உன் ஊருக்கு போறதும் உன்னோட விருப்பமுன்னு சொல்லி நீங்க ரொம்ப நல்லவர் ஆகிட்டிங்க..

 

ஆனா நீங்க இந்த தாலிய கட்டாம இருந்திருந்தா காலப்போக்கில் நான் இதை மறந்துட்டு எனக்கு ஏற்ற மாதிரி ஒரு வசதியான வாழ்க்கையை தேடி இருப்பேன்..

 

இப்ப நான் இந்த தாலியை இங்க வச்சே கழட்டி போட்டுட்டு அங்க எனக்கு ஏத்த மாதிரி ஒரு வாழ்க்கை அமைச்சிக்க முடியும்..

 

நீ எனக்கான கால அவகாசம் தந்தாலும் நான் மனசு மாறி வந்து உன்கூட சேர்ந்து வாழ்வேன்னு மட்டும் கனவிலயும் நினைக்காதீங்க..

 

 

முடிவு என்னன்னு எல்லாருக்கும் கேட்டு காத்திருக்கிறீங்க தானே..

 

 சொல்றேன் என்னோட முடிவை நல்லா கேட்டுக்கோங்க…

 

நீங்க டிவோஸ் தர மாட்டீங்க நான் இன்னொரு வாழ்க்கையை தேடி போக மாட்டேன்… நான் அங்க தான் இருப்பேன்.. நீங்க இங்க இருக்கிறதோ இல்ல வேற எங்கேயும் இருக்கிறதோ உங்க விருப்பம்…

 

 எனக்கு இங்க வந்து அஞ்சுக்கும் பத்துக்கும் டெய்லி நீ ஆட்டோ ஓட்டி உழைச்சு வந்து அதுல சாப்பிட்டு கஷ்டப்படுற வாழ்க்கை செட் ஆகாது.. ஒரு நைட் இங்க ஏசி இல்லாம தூங்க முடியாம தான்.. நான் வெளியே எழுப்பி போனேன்.. அதனால தான் இவ்வளவு பிரச்சினையும் எனக்கு வந்தது… இதுதான் என்னோட முடிவு போய் சொல்ல வேண்டியவங்ககிட்ட சொல்லுங்க.. எனக்கு இன்னும் மூணு மாத படிப்பு இருக்கு அதை முடிச்சுட்டு எங்க அப்பாவோட கம்பெனிய எடுத்து ரன் பண்ணனும்.. இதுதான் என்னோட ஒரே ஆசை..” என்றாள்..

 

 

 

 

 அவன் தான் அவளுக்கு சொன்னான் மனம் மாறும் வரையும் இருக்க விரும்பினால் இங்கு இரு.. இல்லை என்றால் அவளோட இடத்துக்கு போ என்று..

 

 

 

 அதையே அவளும் திரும்ப அவனுக்கு சொல்லும் போது அவன் மனம் மிகவும் ரணப்பட்டு போயிருந்தது..

 

 

 

“ நான் உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்… அந்த கேள்விக்கு நீ உன் மனசாட்சி தொட்டு உண்மையான பதில் சொல்லு.. “

 

 

 என்று அவன் கூறும் பொழுது திரும்பிப் பார்த்து புருவத்தை உயர்த்தினாள்.. என்னவென்று கூறும்படி..

 

 

“ நான் இன்னைக்கு உனக்கு தாலி கட்டி கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா உனக்கு புடிச்சவனோட நீ சந்தோசமா நடந்ததை மறந்துட்டு வாழ்ந்து இருப்பியா?.. ” என்றான்..

 

 

“ யா கட்டாயம் மறந்திருப்பேன்.. லைஃப்ல டெய்லி எவ்வளவோ நடக்குது எல்லாத்தையும் ஞாபகம் வைத்து இருக்க முடியுமா என்ன?.. எனக்கு இது ஒரு சின்ன ஆக்சிடென்ட் மாதிரி இங்க இருந்து போகும் போதே நான் மறந்து இருப்பேன்.. இந்த ஆக்சிடென்ட் என் லைஃபை பாதிக்க நான் விடமாட்டேன்.. ” என்று அவன் முகத்திற்கு நேராகவே கூறினாள்..

 

 

 

“ ஓஹோ..! அப்போ இங்க நடந்தது உனக்கு ஒரு ஆக்சிடென்ட் தானே.. நீ ஃபீல் பண்ண வேணாம்.. தாலியை கழட்டி தந்துட்டு நீ போகலாம்.. இங்க ஆரம்பிச்ச இந்த உறவு இங்கேயே இப்பவே முறி (டி) ஞ்சி போகட்டும்.. ” என்று தாலியை கழட்டும்படி கூறி கையை நீட்டினான்..

 

 

“ நான் நினைச்சா இந்த தாலி கழட்டி போட்டு இந்த கல்யாணம் இங்க நடந்தது அங்க யாருக்கும் தெரியாம அழிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்.. ஆனா நானும் ஒரு தமிழ் தாய் தகப்பனுக்கு பிறந்ததால இந்த மஞ்சள் கயிறோட புனிதம் கொஞ்சம் தெரியும்.. போனா போகுது இது என்னோட கழுத்துல கிடந்துட்டு போகட்டும்.. இன்னைக்கு ஈவினிங் நான் இங்கிருந்து கிளம்பணும்.. அதுக்கு ரெடி பண்ணனும்..நீங்க போய் ஆக வேண்டிய வேலையை பாருங்க.. ” என்று கூறிவிட்டு அவன் பதில் எதுக்கும் காத்திருக்காமல் உடைகளை எடுத்து பெட்டியில் அடுக்க ஆரம்பித்தாள் சீதா..

 

 

 

 

 

 பட்டணத்தில் அதிகம் பணத்தைப் பார்த்து தனியாக ஒற்றைப் பெண்ணாக வளர்ந்தவள்.. என்று கேள்விப்பட்டதும் அவனுக்கும் அவளை பார்த்ததும் பிடித்திருந்தது… அதனால் அவன் அன்பால் அவளை மாற்றி விடலாம் என நினைத்திருந்தான்..

 

 

 ஆனால் பிடிக்கவில்லை சேர்ந்து காலத்திற்கும் வாழ மாட்டேன்.. எனக் கூறுபவளை எவ்வாறு கட்டாயப்படுத்தி பிடித்து வைத்திருக்க முடியும்..

 

 

 அவளிடத்தில் அவன் யமுனாவை தான் வைத்துப் பார்த்தான்.. அவன் தங்கைக்கு யாரும் இவ்வாறு செய்திருந்தால் ஒரு அண்ணனாக அவன் என்ன முடிவு எடுத்திருப்பான்.. கொதித்து போய் இருப்பான்..

 

 

 

 அதனால் அவளது விருப்பதிற்கு விட்டுவிட்டான்..

 

 காலம்தான் அவர்களை சேர்த்து வைக்குமா? பிரித்து வைக்குமா? என தெரிந்து கொள்ள வேண்டும்..

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்