Loading

ஜான்சி ராணியின் வீர தீர சாகாசம் அன்று அதி காலையில் நடந்தது..

 

 

 

 

 

 அறையை விட்டு வெளியே 

வந்தவள். யமுனா முன்பு அழைத்துச் சென்ற அந்த அறைக்கு சென்று அறை கதவை திறந்து பார்த்தாள். பாட்டியும் அந்த பெண்ணும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்..

 

 

 ஓசை இல்லாமல் மெதுவாக கதவை அடைத்து விட்டு வெளியே வந்தாள்..

 

 

 சரியான நேரத்துக்கு வந்த அந்த கடத்தல் காரர்கள் இருவரும் இவள் அறை கதவை திறப்பதை அறிந்து யன்னலின் சுவர் அருகே ஒட்டி நின்று கொண்டார்கள்..

 

 

 அந்த வீட்டுக்கு பின்பக்கம் வாசல் இருப்பது அவள் அறிந்திருக்கவில்லை..

 

 

 அவளே இரவு தாமதமாகத்தான் அங்கே வந்து சேர்ந்தாள்..

 

 

வந்ததும் குளித்து உணவு உண்டு பயணக்களைப்பில் உறங்குவதற்கு வந்ததால் வீட்டை சுற்றி பார்க்க அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை..

 

 

 முன் வாசல் திறந்து இருந்தது. உள்ளே வெளியே என ஆட்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள்..

 

 

 அந்த இரவில் யாரையும் மிதித்து விடாமல் பார்த்து மெது மெதுவாக அடி வைத்து வெளியே வந்தாள்..

 

 

சீதா வெளியே வந்ததை அறிந்து கொண்டவர்கள் கல்லை எடுத்து அந்த பெண் துர்கா மீது எறிந்தார்கள்..

 

 

 மூன்றாவது முறை கல் அவள் மீது சரியாக படவும் வலி காரணமாக கண் முழித்து எழுந்து அமர்ந்தாள்..

 

 

 அவள் வெளியே வரவேண்டும் என்று மெதுவான குரலில் இருவரும் பேசிக் கொண்டார்கள்..

 

 

 யாரோ திருடர்கள் என நினைத்தவள் எழுந்து பின் வாசல் வழியாக வெளியே வந்தாள்..

 

 

 இங்கு சீதா அறையில் அந்த பெண் நன்றாக தூங்குகிறாள் என்று நினைத்து வெளியே கயவர்களை அடித்து துவசம் செய்வதற்காக கட்டையுடன் அவர்கள் முன்பு பேசிய அந்த மரத்தின் அருகே காத்திருந்தாள்..

 

 

 கல்யாணப் பெண் துர்கா பின் வாசல் வழியாக வந்தவள் என்னவென்று உணரும் முன்பே அவளது முகத்திற்கு நேராக மயக்க மருந்து அடித்து அவளை தோளில் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்..

 

 

 

 ஏதோ சத்தம் கேட்டதால் என்னவென்று சற்று தள்ளி வந்து பார்த்த சீதா அதிர்ச்சி அடைந்து விட்டாள்..

 

 

எது நடக்க கூடாது என பாடுபட்டாளோ அதுவே நடந்து விட்டது.. எப்படியோ அவளை தூக்கி விட்டார்களே என்று கவலையுடன் அவர்களை நோக்கி கட்டையுடன் வேகமாக வந்தாள்..

 

 

 பின் தொடர்ந்து அவள் வந்ததை உணரும் முன் ஒருவனை கட்டையால் மண்டையில் அடித்து கீழே தள்ளிவிட்டு.

 

 

 துர்காவை தூக்கி வைத்திருந்தவன் கால்களை நோக்கி அந்த கட்டையை வீசினாள்..

 

 

 காலில் அடிபட்டதால் அப்படியே அவளை கீழே போட்டு விட்டு அவனும் அமர்ந்து கொண்டான்..

 

 

 அடிபட்டவன் ஓரளவுக்கு எழுந்து நின்று சமாளித்து சீதாவை நோக்கி ஓடிவந்தான்..

 

 

இங்கு நடப்பது பற்றி அறிந்து அந்த முத்து வருவதற்கு முன்பு ஓரளவுக்கு சமாளிக்க வேண்டும்.. அவன் வந்து விட்டால் இனி கவலை இல்லை என்று நினைத்தவள் “ வாடா வா உன்னோட எமன் முத்துக்கிட்ட தகவல் சொல்லியாச்சு அவன் வந்துட்டு இருக்கான். நீ இன்னைக்கு உசுரோட இங்க இருந்து போக முடியாது. அப்புறம் எப்படி கல்யாணம் பொண்ணை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ண முடியும்..” தனியாக அவன் முன் நின்று போராடுகிறோம் என்று பயம் இருந்தும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நக்கலாக சிரித்து அவனுக்கு பயத்தை வர வைத்தாள் பாவை..

 

 

 கூட வந்த நண்பனும் துர்காவும் மயங்கி கிடக்கவும் இவன் தனியாக இருவரையும் தூக்கிச் செல்ல முடியாது என்பதால் அவளுடன் சற்று பேசி அவளுக்கு அவன் பயத்தை கொடுத்தான்..

 

 

“ ஹா ஹா ஹா பட்டணத்து காரங்க அறிவாளின்னு கேள்விப்பட்டிருக்கேன்.. ஆனா நீ வெள்ளை தக்காளி கணக்க இருக்க. அறிவை வாடகைக்கு விட்டுட்டியா என்ன?.. அவன் இருந்தா இவ்வளவு தைரியமா நான் இங்க வந்து இவளை தூக்கிட்டு போக நினைப்பேனா?.. இந்த அளவுக்கு யோசிச்சு அவன இங்க இருந்து அனுப்பாம வருவேனா?.. நல்லா கேட்டுக்கோ முத்து முத்து ன்னு சொல்றியே அவன் இன்னைக்கு இவளை தூக்கிட்டு போற வரைக்கும் இந்த பக்கமே வரமாட்டான்.. இன்னைக்கு காலைல மதுரையில அவன பெட்ரோல் செட்டில் பார்த்தேன்.. ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டான்.. எப்படியும் கல்யாணத்துக்கு அவன் வேலை செய்வான்னு தெரியும்.. அதனால அவனுக்கு சந்தேகம் வரக்கூடாதுன்னு இங்கிருந்து போற அளவுக்கு கொஞ்சம் பெட்ரோல் வச்சிட்டு திரும்பி வர முடியாத அளவுக்கு பெட்ரோல் எல்லாம் எடுத்துட்டோம்..

 

 

 மதுரையில இருந்து கொஞ்சம் தூரம் வர பெட்ரோல் இருக்கும் இடையில அவனால நினைச்சாலும் பெட்ரோல் அடிக்க முடியாது.. ஆட்டோவை தள்ளிக்கிட்டு வந்து அவன் பெட்ரோல் அடிச்சு இங்கே வர நல்லா விடிஞ்சிடும் அதுக்குள்ள நாங்க இவளை தூக்கிட்டு போயி இருப்போம்.. நீ என்னதான் குட்டிக்கரணம் அடிச்சாலும் இவளை காப்பாற்றி இன்னைக்கு இந்த கல்யாணம் நடக்காது. அவளுக்கு கல்யாணம் என்னோட தான் நடக்கும்.. ” என்று கூறி அருகே இருந்த தண்ணீரை எடுத்து நண்பன் மீது தெளித்து அவனை கண் முழிக்க வைத்தான்..

 

 

 கல்யாண வீடு என்பதால் கல்யாணத்துக்கு முன் பின் என சொந்தங்கள் தெரிந்தவர்கள் வந்து போய்க் கொண்டே இருப்பார்கள்..

 

 

காய்கறி வகைகள் அதிகம் வாங்கி வைத்தாலும் கெட்டுப் போய்விடும்..

 

 

 தாத்தா முத்துவை அழைத்து நாளை இரவு மற்றும் அடுத்த இரண்டு நாட்கள் சமையலுக்கு தேவையான காய்கறி வகைகள் மற்றும் இன்னும் இதர பொருட்களையும் வாங்கி வருமாறு லிஸ்டும் பணமும் கொடுத்தார்..

 

 

 போய் வருவதற்காக ஆட்டோவிற்கும் பணம் கொடுத்தார்.. ஆனால் அதை அவன் வாங்காமல் பொருட்களுக்கான பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான்..

 

 

 அவர்கள் வழமையாக வாங்கும் அந்த கடையில் பொருட்கள் லிஸ்ட் கொடுத்தான்.

 

அப்போது அவனுக்கானவள் அவனை அழைப்பது கேட்டதோ என்னவோ?.. மனதில் ஒருவித சஞ்சலம் ஏற்பட்டது..

 

 

 ஏதோ தவறாக நடக்கப்போவது போல் மனம் அவனுக்கு ஒரு நிலையில் இல்லாமல் தவிப்பாக இருக்கவும் நேரம் பார்த்தான் அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பார்கள் யாருக்கும் அழைத்து கேட்க முடியாது என்பதால் நண்பன் பிரபுவிடம் பணத்தையும் பொருட்கள் வாங்குவதற்கான லிஸ்டையும் கொடுத்து வாங்கி வருமாறு கூறிவிட்டு நண்பனின் பைக்கில் அங்கிருந்து ஊரை நோக்கி புறப்பட்டு விட்டான்..

 

 

 

எவ்வளவு தான் வேகமாக வந்தாலும் ஒரு கட்டத்தில் அவனால் குளிர் காற்று எதிரில் அவன் முகத்தில் அடிக்கவும் வேகத்தை சற்று குறைத்து ஊருக்கு வருவதற்குள் அசம்பாவிதம் நடந்து விட்டது..

 

 

 

 அவள் கடவுளையும் அழைக்கவில்லை யாரையும் அழைக்கவில்லை யாரென்று முகம் அறியாத முத்துவை தான் “ சீக்கிரமா வந்துடுடா. ” என்று அதையே மனதுக்குள் உரு போட்டு நினைத்து கொண்டிருந்தாள்..

 

 

 

 தண்ணீர் தெளித்ததால் கண் விழித்தவன் தலையில் ஏற்பட்ட வலியால் மெதுவாக எழுந்து அமர்ந்தான்..

 

 

“ டேய் என்னடா வேடிக்கை பாத்துட்டு இருக்க.. இவ எல்லாம் ஒரு ஆளுன்னு இவளை பார்த்துட்டு இருக்க அந்த கட்டயை எடுத்து ஓங்கி மண்டையில் போட்டுட்டு துர்காவை இழுத்துட்டு போகாம என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்க.. ” நண்பன் பேசிக்கொண்டு சீதா மீது கட்டையை தூக்கி வீசினான்..

 

 

 கட்டை வருவதை அறிந்து சீதா விலகினாள் தான்.. ஆனாலும் அவளது இடது பக்க மார்பின் மீது கட்டை ஓங்கிப் பட்டதால் வலி தாங்காமல் அப்படியே மடிந்து கீழே அமர்ந்து விட்டாள்..

 

 

 

 இனி அவளால் பிரச்சினை இல்லை என்று மீண்டும் துர்காவை தூக்கிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட அதை பார்த்தவள் மெதுவாக வலியையும் பொறுத்துக் கொண்டு எழுந்து அவர்கள் நோக்கி ஓடினாள்..

 

 

 மீண்டும் இரக்கமற்ற அரக்கர்கள் போல் கட்டையை எடுத்து அவள் மறுபக்க மார்பில் அடித்தார்கள்..

 

 

அப்போதும் வலியுடன் கண்ணில் கண்ணீர் வழிய அவள் வந்தாள்..

 

இன்னும் நேரம் கடத்த முடியாது என உணர்ந்து அவளை பிடித்து தள்ளி விட்டார்கள்..

 

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவள் முன் பக்க உடை அவர்கள் பிடித்த தள்ளிய வேகத்தில் கழிந்து கையோடு வந்தது..

 

 

 அவளை அடித்தாலும் அந்நிய சொந்தமற்ற பெண்ணை இந்த நேரத்தில் இவ்வாறு பார்க்க விரும்பாமல் திரும்பியும் பார்க்காமல் அவள் மீது அந்த கிழிந்த துணியை போட்டுவிட்டு துர்காவை தூக்கிக்கொண்டு வெளி வாயில் வரை வந்தார்கள்..

 

 

 

 அப்பொழுது புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தான் முத்துராமன்..

 

 

 அவன் வீட்டைக் கடந்து வரும்போது தூரத்தில் வாகனம் மற்றும் ஆட்கள் நிற்பதை பார்த்து விட்டான்..

 

 

 இவ்வளவு நேரமும் உடன் வந்தவர்கள் துர்காவை தூக்கிக் கொண்டு வருவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தவர்கள் முத்துவை கண்டதும் வண்டியை விட்டு விட்டு ஓடி விட்டார்கள்..

 

 

 

 ஓடியவர்கள் யார் என்று முத்து அறிந்து கொண்டான்.. ஆனால் இப்பொழுது அவர்களை பார்க்க நேரமில்லை உள்ளே என்னானது என்று பார்க்க வேகமாக அவனும் வாயிலுக்கு வரும் பொழுது இவர்களும் துர்காவை தோளில் தூக்கிக்கொண்டு வந்தார்கள்..

 

 

 முத்து வரமாட்டான் என்று தைரியமாக இறங்கியவர்கள் எதிரே அவனை கண்டதும் சற்று நடுங்கி தான் போனார்கள்..

 

ஏனென்றால் அவன் அடி அப்படி விழும். முன்பு வாங்கிய அனுபவம் உண்டு அவர்கள் இருவருக்கும்..

 

 

“ அந்த பொண்ண கீழ இறக்கி விடு கவின்..” என்றான் முத்து.

 

 

 அவன் பேச்சைக் கேட்டு உடனே துர்க்காவை கிழே கிடத்தியதும் ஓங்கி அவன் நெஞ்சிலையே மிதித்தான் முத்து..

 

 

அவர்கள் ஒரு மிதி வாங்கியதும் ஓடிவிட்டார்கள்..

 

முத்தும் இனி மற்றதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு அங்கிருந்த தண்ணீரை அள்ளி துர்கா மீது தெளிக்கவும் மயக்கம் தெளிந்து அவள் எழுந்ததும் என்ன நடந்தது என்று அவளுக்கு தெரியாததால் முத்துவை பார்த்ததும் விழித்துக் கொண்டே கீழிருந்து எழுந்து நின்றாள்..

 

 

“ ஒரு பொண்ணு இப்படித்தான் பொறுப்பில்லாமல் அசால்டா இருக்கிறதா?.. கடத்திட்டு போற அளவுக்கு நீ என்ன பிராக்கு பார்த்துட்டு இருந்த?.. ” என்றான் கோபத்துடன்..

 

 

“ என்ன என்னை கடத்திட்டு போக பார்த்தாங்களா?.. ” என்றாள்.. அவன் சற்று கோபமாக அதட்டியதும் அவள் கண்ணில் கண்ணீர் வடிந்தது..

 

 

“ சுத்தம் உனக்கு இது கூட தெரியாதா என்ன?.. சரி சரி இனி கொஞ்ச நேரத்துல ஆட்கள் எல்லாம் எழும்பி வந்துருவாங்க. ஒன்னும் நடக்காத மாதிரி போய் படுத்து தூங்கு. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத ஒன்னும் விபரீதமா நடக்கல.. கல்யாண பொண்ணா லட்சணமா சிரிச்சு சந்தோஷமா கல்யாணத்துக்கு தயாரா இரு. யார் கண்ணுலையும் பட முதல் உன்னோட ரூமுக்கு போ..” என்று அனுப்பி வைத்துவிட்டு முகம் கழுவ கிணற்று பக்கம் சென்றான்..

 

 

 

 அப்பொழுது முனு முனு என ஒரு சத்தம் அவனது காதில் கேட்டது..

 

 

துர்கா பாதுகாப்பாக வீட்டுக்குள் சென்றாளா?. என்று பார்த்துவிட்டு சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தான்..

 

 

 அங்கு அவன் கண்ட காட்சி ஒரு கணம் அவனை சற்று உறைய வைத்தது..

 

 

அவளை பார்க்காமலே அவர்கள் வீசி விட்டு போன அவள் கிழிந்த துணி சரியாக இரண்டு மார் அழகை மட்டுமே மறைத்தது..

 

இரவு என உள்ளாடை அணியவில்லை அவள்.. 

 

அவள் இடை மற்றும் வயிறு தெரிய வலியில் துடித்துக் கொண்டு “ முத்து முத்து வா வா.. ” என வாயில் முனு முனுத்து கொண்டு அவன் வரவிற்காக காத்துக் கிடந்தாள் சீதா..

 

 

 

 அங்கே ஓடியவன் சற்று அருகே போனதும் தான் அவள் யாரென்று கண்டு கொண்டான்..

 

 

 ஒரு கணம் நேற்று அவள் நடந்து கொண்டது அவன் கண்ணெதிரே வந்து போனது..

 

 

அவள் ஒரு பெண் என்றாலும் அவசர ஆபத்துக்கு தவறில்லை என்று நினைத்து அவன் அணிந்திருந்த சட்டையை அவளுக்கு அணிவித்து இரு கைகளாலும் தூக்கிக்கொண்டு யாரும் பார்க்கும் முன் வேகமாக அவன் வீட்டிற்கு கொண்டு சென்றான்..

 

 

 இங்கே வெளியே உறங்குபவர்களை மெதுவாக கடந்து அங்கு ஒரு தனி அறை தேடி செல்ல அவனுக்கு நேரமில்லை..

 

 

 அங்கு அவன் வீட்டில் தந்தை கணேசன் மட்டும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்..

 

 

அவள் நன்றாக கண் மூடும் முன் அவனை ஒரு முறை பார்த்து “ ஏய் நீயா?. முத்து எங்கடா?.” என்றாள் ஈனஸ்வரத்தில்..

 

 

 அப்பொழுதும் அவள் மரியாதை இல்லாத பேச்சை பார்த்து அவனுக்கு கோபம் இருந்தாலும் தற்போது இருக்கும் நிலையில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவனது அறைக்குள் அவளை தூக்கி சென்று படுக்கையில் கிடத்தினான்..

 

 அவன் அவளது கண்ணை மூடிக்கொண்டே மேல் துணியை எடுத்து அவனது சட்டையை முதல் இரண்டு பட்டன் போடும் பொழுது கண் திறந்து பார்த்தான்..

 

 

 கட்டையால் பலமாக அடித்ததால் அவள் மார்பு அவள் நிறத்தையும் தாண்டி செக்கச்சிவேல் என்று கன்றி சிவந்து போய் இருந்தது..

 

 

 அவனுக்கு தற்பொழுது இதற்கு என்ன மருந்து செய்ய வேண்டும் என்று தெரியவில்லை..

 

 

 வருவது வரட்டும் ஆபத்துக்கு பாவம் இல்லை என்று நினைத்து அவளை போர்த்தி விட்டு அவன் அறையை விட்டு வெளியே வந்து சுடு தண்ணீர் வைத்தான்..

 

 

 சுடு தண்ணீர் நன்றாக கொதித்ததும் எடுத்துச் சென்று சற்று ஆறவைத்து துணியில் நனைத்து கன்றி சிவந்து இருந்த இடத்தில் சூடு நீரால் ஒத்தடணம் கொடுத்தான்..

 

 

 வலியோடு மயங்கி இருந்தவள் அவன் ஒத்தனம் கொடுக்க மீண்டும் அந்த வலியோடு கண்களை திறந்தாள்..

 

 

ஆனாலும் அவளால் அசைய முடியவில்லை.. முன் இரவு கடையில் சாப்பிட்டது. அதன் பின் பயண களைப்பு பசி தூக்கமின்மை அனைத்தும் அவளை படாய் படுத்தியது.. ஆனாலும் தலையை தூக்கி பார்க்க அவன் அவளுக்கு கண்களை மூடிக்கொண்டு ஒத்தடம் கொடுப்பதை பார்த்து அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது..

 

 

அவனும் ஒரு தங்கைக்கு அண்ணன் தானே ஒரு பெண்ணை பார்க்க கூடாத கோணத்தில் பார்த்து விட்டான். ஆனாலும் கடந்து செல்ல முடியவில்லை..

 

 

 

 வலிக்கு தைலம் தேய்த்து சுடுநீரால் ஒத்தனம் கொடுக்க ஓரளவுக்கு வலி குறைந்து இருந்தது..

 

 

 அவன் கையை அவள் பிடிக்கவும் அவள் விழித்துக் கொண்டால் என்று தெரிந்து கடலில் இருந்து எழுந்து நின்றான்..

 

 

“ சாரி தவறா எடுத்துக்க வேண்டாம்.. என்ன செய்றதுன்னு எனக்கு தெரியல.. இது ஒரு மருந்தா தான் நான் செஞ்சேன்.. ” என்றான்.

 பார்வையை வேறு பக்கம் திருப்பி..

 

 

“ நீங்க எப்படி இங்க.?. ” என்றாள்.

 

“ இது எங்க வீடு தான்.. இப்படியே நீங்க அவ்ளோ தூரம் போறது சரியில்ல என்னோட தங்கச்சியோட உடுப்பு இருக்கு எடுத்து தாரேன் மாத்திட்டு அங்க வேகமா யாரும் பார்க்க முன்னாடி போயிடுங்க..” என்றான்..

 

“ அப்போ அந்த பொண்ணு துர்காவுக்கு என்னாச்சி.. அந்த தாடிமாடு இரண்டும் தூக்கிட்டு போனதை பார்த்தேன்.. ” என்றாள்..

 

 

“ அந்த பொண்ணுக்கு ஒன்னும் இல்லை பாதுகாப்பாக இருக்கா.. ” என்றான் முத்து..

 

 

 

 

 அடுத்து பேசி நேரத்தை கடத்தாமல் அவன் கொடுத்த உடையை மாற்றிக் கொண்டு வெளியேறி அவள் வீட்டுக்கு சென்று விட்டாள்..

 

மீண்டும் வந்து துர்காவின் அறையை திறந்து பார்த்தாள்..

 

துர்கா உறங்குவது தெரிந்து நிம்மதியாக அவள் அறையில் சென்று படுத்தாள்..

 

ஆனால் பயம் தவிப்பு வலி போன்ற கலவை உணர்வால் அவளால் தூங்க முடியாமல் போனில் பாடல் கேட்க ஆரம்பித்தாள்..

 

 

 நன்கு விடிந்ததும் பரபரப்பாக திருமண வேலைகள் ஏற்பாடாகி கொண்டு இருந்தது..

 

 

 வலி இருந்தாலும் உள்ளாடைகள் உடுத்தி சாரி கட்ட வேண்டியது கட்டாயம் என்பதால்..

 

 

 கொஞ்சம் இலகுவாகவே சாரி பிளவுஸ் அணிந்து சாரி கட்டினாள் சீதா..

 

 

 அவளைப் இருந்த விதமும்.. வலியிலும் முத்து முத்து என தான் யார் என்று தெரியாமலே தன்னையே அழைத்ததையும் நினைத்தவன்..

 

 

ஒரு தீர்மானம் எடுத்துக் கொண்டான்..

 

 

அவள் வேண்டுமானாலும் பட்டணத்து பிள்ளையாக இருக்கலாம்..

 

ஒரு பெண்ணை பார்க்க கூடாத கோணத்தில் பார்த்துவிட்டு இனி அவளை தவிர வேற ஒருத்தியை திருமணம் செய்வது என்பது அவனுக்கு நடக்காத ஒன்று..

 

 

 

 காலையில் திருமண மண்டபத்தில் அவனை பார்த்ததும் தெரியாதது போலவே கடந்து சென்றாள்..

 

 

 நடந்ததை மறந்து விட்டாளோ என்று நினைத்தான்.. ஆனாலும் அவனால் மறக்க முடியவில்லை..

 

 

 சேர்ந்து வாழ்வதும் அவள் வாழாமல் போவதும் அவள் விருப்பம்..

 

 

இந்த ஜென்மத்தில் அவனுக்கு திருமணம் நடந்து அவன் மனைவி என்றால் அது அவள் மட்டுமே என்று நினைத்தவன்..

 

 

 துர்காவுக்கு திருமணம் நடக்க ஐயர் மந்திரம் ஓதி அனைவரிடமும் தாலியை ஆசீர்வாதம் வாங்கி மணமகனிடம் கொடுக்கும் நேரம் இந்த முடிவு எடுத்ததுமே அருகே இருந்த நகைக்கடையில் சென்று அவனும் ஒரு தாலியை வாங்கி வைத்திருந்தான்..

 

 

பெயவர்கள் அனைவரும் கூடி நல்ல நேரம் நல்ல நாள் என பார்த்த அந்த முகுர்த்த நாளில் அவன் அருகே யமுனா நின்றாள்.. தங்கையின் அருகே நின்ற சீதாவை பார்த்தவன். தாலி கட்டுவது என்றும் கட்டிய பின் நடப்பதை அதன் பின் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து யமுனாவை அவன் மறுபக்கம் கையைப் பிடித்து இழுத்து விட்டு சீதாவின் பக்கம் வந்தான்..

 

 

 யாரும் எதிர்பாராத நேரத்தில் துர்கா கழுத்தில் மணமகன் தாலி கட்டும் பொழுது அவனும் சீதா கழுத்தில் தாலியை கட்டினான்..

 

 

 

 அவளுக்கு அப்போதும் மார்பு வலித்தாலும் அவள் முகத்தில் ஓர் சந்தோசம் தெரிந்தது.. பல கஷ்டப்பட்டு முயற்சி செய்து துர்காவின் வாழ்க்கையை காப்பாற்றி விட்டாள். என்று சந்தோசம் அவள் முகத்தில் இருந்தது..

 

 

அந்த சந்தோசத்தை சற்றும் அனுபவிக்க விடாமல் ராம் செய்த செயலை பார்த்து சீதா திகைத்து விட்டாள்..

 

 

 அனைவரிடமும் நல்ல பிள்ளை என பேரெடுத்த ராம் திடீரென சீதா கழுத்தில் தாலி கட்டவும் அவனை நேசிப்பவர் மனதிலும் சஞ்சலத்தை உருவாக்கினான்..

 

 

 அப்பா யமுனா அந்த பெரியவர் என அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்..

 

 

 இலகுவாக இரவு நடந்ததை கூறி அவன் மீது தவறில்லை என நிரூபிக்கலாம்…

 

 ஆனால் இரண்டு பெண்களின் வாழ்க்கை என்பதால் யார் கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதியாகவே தலை குனிந்து நின்றான்..

 

 

 அவரை நம்பி அனுப்பி வைத்த பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்ற வேதனையில் உடனடியாக யசோதாவுக்கு அழைத்து விஷயத்தை கூறி வரும்படி கூறினார் தாத்தா..

 

 

 

அவள் தாய் தான் என்றாலும் நடந்தது அனைத்தையும் முழுதாக கூறாமல் அவளை அரை குறை ஆடையுடன் அவன் பார்த்ததையும் கூறவில்லை.. தவறுதலாக இருவரும் இரவு ஒன்றாக இருக்க நேர்ந்ததால் அவள் பெயர் கெட்டுவிடும் என்பதற்காகவும் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டேன் என்று கூறினான்..

 

 

 நடந்தது சீதா மற்றும் ராமிற்கு தான் தெரியும் ஏன் துர்காவுக்கு கூட தெரியாது..

 

 

“ இதுதான் அத்தை நடந்துச்சு.. இந்த ஜென்மத்துல எனக்கு உங்க பொண்ணு தான் பொண்டாட்டி.. என்னோட சேர்ந்து வாழுறதும் இல்ல இங்க இருந்து போறதும் அவளோட விருப்பம்.. ஆனா விவாகரத்து கொடுக்க மாட்டேன்.. இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள அவளுக்கு எவ்வளவு வருட காலம் தேவையோ அவ எடுத்துக்கட்டும்.. அதுகுள்ள உங்க மகளுக்கு ஏற்ற அளவு வசதியை ஏற்படுத்திக்க நான் முயற்சி செய்றேன்..” என்று அவர்களிடம் பேசிவிட்டு தாயும் மகளும் தனியாக பேசி முடிவெடுக்கட்டும் என்று நினைத்து வெளியே வந்தான்..

 

 

 அவன் கதவை திறந்து வெளியே வரவும் அவனை விஐபி மறைத்தால் போல் நின்றான்..

 

 

 விஐபி பெரிய செலிபிரிட்டியாக இருந்தாலும் ராம் கண்ணுக்கு வில்லனாகவே தெரிந்தான்..

 

 

 சீதா மீரா யசோதா முவரும் என்ன பேசினார்கள் என்று தெரியாது சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் வெளியே வரவும்

 

 அதை பார்த்த ராம் சீதா இருந்த அறைக்குள் சென்றான்..

 

 

 கதவை பூட்டியவன் அவள் அருகே வந்து “ வலி இருக்கும்போது ஏண்டி சாரி கட்டின?.. ரொம்ப வலிக்குமே.. இப்ப வலி குறைஞ்சிருக்கா?.. திரும்பவும் மருந்து போடணுமே.. நேத்து தான் உன்கிட்ட தப்பா பேசக்கூடாது.. இப்ப நீ என்னோட பொண்டாட்டி பேசினா தப்பில்லைன்னு நினைக்கிறேன்.. ஆள் பார்க்கத்தான் பல்லி மாதிரி ஒல்லியா இருக்க.. ஆனா உன் முழு எடையும் சேர்த்து இது எடுத்து வச்சிருக்கு போல.. ” என்று அவள் மார் அழகை கண்ணில் குறும்புடன் தொட்டு காட்டினான்…

 

 

 சற்று நேரத்தில் அவன் கேட்டது போல யமுனா சுடுநீரும் தைலமும் துணியும் எடுத்து வந்தாள்..

 

 

“ புடவை கழட்டு டி மருந்து போடணும் இல்லன்னா திரும்பவும் சிவந்து வீங்கிடும்..” என்றான்..

 

“ என்னடா பேசுற?.. போடா என்னால முடியாது. நானே போட்டுக்குவேன்.. நீ வெளியே போ.. எனக்கு விவரம் தெரிஞ்ச பின்னாடி என் அம்மாவே என்ன தொட்டதில்லை.. நேத்து ஏதோ அவசரத்துக்கு உதவி செஞ்ச ஆனா இன்னைக்கு உன்னோட பேச்சு சரியில்ல.. நீ இங்கிருந்து போயிடு இல்லன்னா கத்தி சத்தம் போடுவேன்..” என்றாள்..

 

 

“ தாராளமா சத்தம் போடு வெள்ள எலி.. யாரும் வர மாட்டாங்க. நீயே கழட்டினால் மருந்து மட்டும் போடுவேன்.. இல்லன்னா நானே கழட்டி அப்புறம் புது பொண்டாட்டி வேற நீயும் அம்சமா இருக்கியா சம்பவம் நடந்தால் நான் பொறுப்பில்லை..” என்றான்..

 

  திமிர திமிர அவளை தூக்கி கட்டிலில் போட்டு புடவை கழட்டி அவன் ஆள் விட்டு வாங்கிய மருந்தை போட்டுவிட்டு தான் அவளை விட்டான்..

 

 

 அவனது அடாவடியை பார்த்து சீதாவே சற்று பயந்து தான் போனாள்..

 

 

 சீதா என்ன முடிவெடுப்பாள்?..

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்