நான் நினைத்தால் வருவாயோ அன்பே..! 03
அந்த நள்ளிரவு வேலையிலும் அவள் அவனுக்கு செய்து விட்டு சென்ற தொல்லையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவனை நம்பி வந்த பயணியை வேறு ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு மெது மெதுவாக ஆட்டோவை மெக்கானிக் ஷாப்பிற்கு கொண்டு வந்து சேர்த்தான் முத்துராமன்..
அவன் சாதாரண ஆண்களைப் போன்றவன்.
கருப்பு நிறம் என்று கூற முடியாது பொதுநிற வகையை சேர்ந்தவன்..
ஆறடி உயரம்.. 29 வயதை நெருங்கிய கட்டிளம் காளை..
இவனுக்கு 13 வயது இருக்கும் போது அவனது தங்கை யமுனாவை ஈன்றெடுத்த ஒரே வருடத்தில் அவனது தாய் நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டார்..
முத்துராமன் தந்தை கணேசன் தாய் மூவரும் தினமும் அவர்களது அன்றாட உழைப்பை பார்த்துக் கொண்டு மூன்று வேளை உணவு உண்பதே மிகவும் கடினமாக காலம் தள்ளினார்கள்..
கணேசன் செய்யாத கூலி வேலைகளே இல்லை எனலாம்..
யமுனா பிறந்தது அவர்களுக்கு மிகவும் ஒரு நல்ல நேரம்..
யமுனா வயிற்றில் உதித்த பொழுதே அந்த ஊர் பெரியவர் உதவி கிடைத்து மற்றும் வங்கி கடன் பெற்று கணேசன் சொந்தமாக இந்த ஆட்டோவை வாங்கினார்..
அப்போது இருந்த கஷ்டம் தாண்டி ஓரளவுக்கு அவர்களால் குடும்பத்தை கொண்டு செல்ல முடிந்தது..
வருமான பிரச்சனை இல்லாமல் செல்லும் நேரத்தில் தான் முத்துராமனின் தாய் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்..
அப்பொழுது அவனுக்கு 13 வயது யமுனாவுக்கு ஒரு வயது நெருங்கிய நேரம்..
கைக்குழந்தை வைத்துக் கொண்டு கணேசன் மிகவும் தவித்து தான் போனார்..
அவரது சொந்தம் ஊர் மக்கள் என எவ்வளவு கூறியும் அடுத்த திருமணத்திற்கு அவர் துளியும் சம்பாதிக்கவில்லை..
அவர் பிள்ளைகளின் வயிற்றுப் பசி போக்க ஆட்டோ ஓட்ட சென்றபோதெல்லாம் முத்துராமன் தான் தங்கையை பார்த்து வளர்த்தது..
யமுனாவிற்கு முத்துராமன் அண்ணன் போன்று இல்லாமல் தந்தையாகவே மாறிவிட்டான்..
இதோ தங்கையையும் பார்த்துகொண்டு அவனும் ஓரளவுக்கு பிளஸ் டூ வரைக்கும் படித்தான்..
அதன் மேல் படிப்பில் நாட்டம் இல்லாமல்..
தந்தையின் உதவியோடு அவரது ஆட்டோ வைத்தே டிரைவிங் பழகி.
இருபதாவது வயதில் லைசென்ஸ் பெற்றுக் கொண்டான்..
தந்தைக்கு பாரமாக இருக்க விரும்பாமல்..
அவனும் மெக்கானிக் ஷாப் ஒன்றிற்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தான்..
அந்த முதலாளி மிகவும் கடுமையாக நடந்து கொண்டதால் தாக்கு பிடிக்க முடிந்த அளவுக்கு தாக்குப்பிடித்து இனி முடியாது எனும் கட்டத்தில் வேலையை விட்டு நின்று விட்டான்..
அதன் பின்பு தந்தைக்கு ஓரளவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு அவனே அந்த ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்தான்..
போகப்போக கணேசனுக்கு கண் பார்வையும் மங்கி போக ஆட்டோ அவனது கைவசம் ஆனது..
இந்த ஆட்டோ ஓட்டுவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் வேறு வேலை என எதுவும் தேடிச் செல்லாமல் இதையே தொடர்ந்தான்..
அவனுக்கு சொந்த ஆட்டோ ஒன்று வாங்கி அதை வைத்து அடுத்தடுத்த கட்டம் முன்னேற வேண்டும் என்பது ஆசை.
அதற்காக ஆட்டோ ஓட்டும் பணத்தில் ஒரு பகுதியை சேமிப்பாக வைத்து வந்தான்..
தாய் இறந்து இரண்டு வருடங்களில் தட்டு தடுமாறி பதினைந்தாவது வயதில் சமையல் கற்க பழகினான்..
அதிகாலை நேரத்தோடு எழுந்து வீட்டு வேலை சமையல் வேலை அனைத்தையும் செய்து வைத்து விட்டு காலை நேரத்தில் பள்ளி சிறுவர்களுக்கான சவாரியை ஆரம்பித்தால் எந்நேரம் வீடு வந்து சேர்வான் என்பது அவனுக்கே தெரியாது..
பதினாறு வயதேயான யமுனாவிற்கு எந்த ஒரு கஷ்டத்தையும் அவன் கொடுக்க மாட்டான்..
யமுனா அவனுக்கு தங்கை அல்ல ஒரு குழந்தை.
எந்த தந்தை குழந்தை கஷ்டப்பட விரும்புவான்..
யமுனா பிறந்ததிலிருந்து இன்று வரை தாய் அருகில் இல்லை என்ற கவலையை தவிர அவளுக்கு எதுவும் அருகே வரவிட்டது இல்லை முத்துராமன்..
அவனுக்கென்று இளம் வயது ஆசைகள் புதிய வகை ஆடை அணிகலன்கள் சினிமா பார்ப்பது என எந்த விதமான ஆசைகளையும் ஏற்படுத்திக் கொண்டதில்லை..
ஆனால் யமுனாவுக்கு தேவையான புதிய வகை உடைகள் அவள் படிப்பிற்கான செலவு மற்றும் அவள் விரும்பிய உணவு மற்றவர்களை விட குறைவு என்றாலும் காது தோடு கழுத்து ஆரம் கை வளையல் கொலுசு போன்ற முக்கிய ஆபரணங்கள் எதிலும் அவன் குறை வைத்ததில்லை..
அவனது தனிப்பட்ட பாசம் தந்தை பாசம் என அனைத்தும் கிடைத்து யமுனா இளவரசியாகவே அந்த வீட்டில் வளர்ந்தாள்..
இது வரை காலமும் பாப்பா என்றால் வேறு பேச்சே முத்துராமனிடம் இல்லை.. கண்டிப்பு இதுவரை இருந்ததில்லை கண்டிக்கும் அளவிற்கு யமுனா நடந்து கொண்டதில்லை..
இதோ மெதுமெதுவாக அந்த ஆட்டோவை செலுத்தி அவனது பட்ஜெட்டுக்கு தகுந்த மெக்கானிக் ஷாப்பில் ஆட்டோவை கொண்டு வந்து சேர்த்தான்..
இப்பொழுதுதான் மாதம் தொடங்கி மூன்று நாட்கள் கடந்து இருக்கும் நிலையில்.. இன்னும் இந்த மாதம் முடிவதற்குள் அவனுக்கு இருக்கும் செலவுகள் அனைத்தையும் கணக்கிட்டவன்.. ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். அவன் சிறுக சேமித்து வைத்த சேமிப்பில் இருந்த பணத்தை ஏடிஎம் கார்டு மூலம் எடுத்து அவனது லட்சுமியை பழுது பார்ப்பதற்கு கொடுத்தான்..
தங்கையின் படிப்பு. தந்தையின் மருத்துவ செலவு.. மூவருக்குமான அந்த மாதத்திற்கான உணவு செலவு.. அவனது சொந்த ஆட்டோ வாங்கும் கனவிற்காக சேமிப்பு என அனைத்தையும் நினைத்து இன்றே பிரம்மித்து விட்டான்..
இதோ இந்த ஆட்டோ அவனது தந்தையின் ஆட்டோ.. அவருக்கு கண்பார்வை பிரச்சினை இருப்பதன் காரணமாக அவரது லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டதுடன்.. கடந்த ஐந்து வருடங்களாக அந்த ஆட்டோவை அவன் ஓட்டி அந்த குடும்பத்தை காப்பாற்றி வருகிறான்..
நாளை காலை நேரத்துடன் ஸ்கூல் மாணவர்களுக்கான சவாரி இருப்பதால் உடனடியாக ஆட்டோவை தயார் செய்யும் கட்டாயத்தினால் பல ஆயிரங்களை செலவழித்து ஆட்டோவை தயார் செய்தான்..
அந்த ஸ்கூல் சவாரியும் நேரம் காலம் இல்லாமல் அவன் மேல் நம்பிக்கை வைத்து அழைக்கும் பயணிகளுக்கு மறுக்காமல் செல்வதாலும் அவனுக்கு ஒரு அளவுக்கு வாடிக்கையாளர் அதிகமாகவே உள்ளார்கள்..
அதனால் பழுது என்று வந்து அவனது பட்ஜெட்டில் துண்டு விழும் நேரம் தவிர மற்ற மாதங்களில் கையும் கணக்குமாக சிறுசேமிப்புடன் அவனது பிழைப்பு ஓடுகிறது..
அடுத்த அடுத்த தெருக்களில் உள்ள இருவேறு மெக்கானிக் ஷாப்களில் இருவரும் ஒன்றாகவே அவர்களது ஆட்டோ மற்றும் காரை பழுது பார்த்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்..
காலையில் சென்ற மகன் இரவு எந்நேரம் வீட்டிற்கு வருவான் என்று தெரியாமல் வழமை போன்று இன்றும் கணேசன் வாசலில் மகனை பார்த்து காத்திருந்தார்..
யமுனாவும் கணேசனும் அருகே அவர்கள் சொந்தத்தில் அந்த பெரியவர் பேத்தியின் கல்யாண விருந்துக்கு சென்று அங்கே இரவு உணவை முடித்துவிட்டு வந்ததும் கணேசன் கண்ணுக்கு மருந்தை விட்டுவிட்டு யமுனா மீண்டும் திருமண வீட்டிற்கு சென்று விட்டாள்..
மருந்து விட்டிருந்ததால் கண்களை மூடி காதை சற்று கூர்மையாக்கி மகன் வரும் ஆட்டோ சத்தத்திற்காக காத்திருந்தார்..
அவனும் சரியாக 11:30 மணி அளவில் வீட்டை வந்து சேர்ந்தான்..
ஆட்டோவை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே வந்தவன் தந்தை வாசலில் காத்திருப்பதை பார்த்தான்..
ஆட்டோ விபத்தாகி அதை பழுதுபார்த்த விஷயம் அவருக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்தான்..
இதுவரை காலமும் கணேசன் தானாக தோன்றிய பழுதை சரி செய்திருக்கிறார்.. இவ்வாறு விபத்துக்குள்ளாகியதெல்லாம் இல்லை..
அந்த ஆட்டோ தான் அவர்கள் குடும்பத்தின் ஒரே சொத்து..
ஆட்டோ கையில் கிடைத்த கொஞ்ச காலத்திலேயே மனைவி இறந்து விட்டதால் மனைவியின் நினைவாகவே லட்சுமி என்று பெயர் வைத்தார் ஆட்டோவிற்கு அதனால்
தெரிந்தால் மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டு போவார்கள் கணேசன்..
மகன் வந்ததும் எழுந்து அமர்ந்த கணேசன் “ என்ன பா ராம் நீ வர வர வீட்டுக்கு வர தாமதமாகுது.. வயசு பையன் நீ. கொஞ்சம் நேர காலத்துக்கு சாப்பிட்டு ஓய்வு எடுக்க வேண்டாமா?. இப்பவே இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கணுமா என்ன?.. குடும்பத்தை பார்த்துக்கனும் என்ற பொறுப்பு இருக்கத்தான் வேணும் அதுக்காக உன்னோட உடல் நலனையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளனும் தம்பி.. பெரியப்பா இன்னைக்கு உன்ன ரெண்டு மூணு தரம் கேட்டுவிட்டார்.. நம்ம வீட்டுக்கு அடுத்த வீட்டில கல்யாணம் நடக்குது.. அந்தக் குடும்பத்துக்கும் சரி நமக்கும் சரி நீ தான் ஒரே ஒரு ஆம்பள புள்ள.. நீ கூட மாட நின்னு வேலை செஞ்சு கொடுக்காம இன்னைக்கும் ஆட்டோ எடுத்துட்டு போயிட்டு இவ்வளவு லேட்டா வர்றது எனக்கு என்னமோ சரியா படல தம்பி.. போ குளிச்சுட்டு வந்து அந்த விட்டுக்கு போய் பார்த்துட்டு தலையை காட்டிட்டு சாப்பிட்டு வா.. ” என்றார்..
இதுவரைக்கும் கணேசன் அவனை எந்த ஒரு விதத்திலும் குற்றம் சொன்னதே இல்லை.. அந்த அளவிற்கு அவன் நடந்து கொண்டதும் இல்லை.. ஆனால் இந்த திருமண விஷயத்தில் அவன் சற்றும் நாட்டம் இல்லாமல் இருப்பது அவர் மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.. கணேசன் நன்றி மறப்பதில்லை.. என்னதான் சொந்தமாக இருந்தாலும் அவர்தான் இன்று இவர்கள் ஒரு சொந்த ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்துவதற்கு மூல காரணம்..
“ என்னப்பா எல்லாம் தெரிஞ்ச நீங்களே என்னை அங்க போக சொல்றது சரி வருமா?.. நானா ஒரு பொறுப்பை தட்டி கழிக்கிற ஆள்.. அந்த வீட்டு கல்யாணம் அதனால தானே நான் அங்க போகாம ஆட்டோ எடுத்துட்டு வெளியே போனேன்.. அது உங்களுக்கு புரியலையா?..” எங்கே தந்தையே தன்னை புரிந்து கொள்ளவில்லையோ என்று ஆற்றாமையில் பேசினான்..
“ இதுல யோசிக்கிறதுக்கு என்ன ராம் இருக்கு?.. அந்தப் பொண்ணு உன்ன விரும்புறேன்னு உன்கிட்ட வந்து விருப்பம் கேட்டுச்சு. நீ முடியாதுன்னு முகத்துக்கு நேர சொல்லிட்ட.. ஆனா அந்த புள்ள தற்கொலை பண்ணிக்க கிணத்துல கொதிச்சது.. ஒத்த பேத்தி தற்கொலை பண்ணிக்க இருந்ததை பார்த்து பயந்து பெரியப்பாவே உன் கிட்ட வந்து கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டார்.. நீ அவர்கிட்டயும் முடியாதுன்னு சொன்ன.. நீ சொன்ன காரணம் ரெண்டு பேரும் சின்னப்பிள்ளைல இருந்து விளையாடி இருக்கோம்.. எனக்கு அவளும் யமுனா போல தான்.. கல்யாணம் பண்ணும் கண்ணோட்டத்தில் பார்க்க முடியலன்னு நீ சொன்ன.. யார் எவ்வளவு கேட்டாலும் விருப்பம் இருந்தால் தானே கல்யாணம் கட்ட முடியும்னு நாங்களும் விட்டுட்டோம்.. அப்புறம் பெரியவர் அந்த பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணமும் நல்லபடியா நாளைக்கு காலைல முடிய போகுது.. நீ ஏன் இன்னும் அதை மனசுல வச்சுட்டு இருக்குற?. நீ அங்க போகாம இருக்கிறதுனால ஏதோ உன் மேல தான் தவறு இருக்குன்னு ஊருக்குள்ள நாளைக்கு பேச்சு அடிபடும்.. இதெல்லாம் நமக்கு தேவையா? நீ விருப்பம் இல்லைன்னு சொன்னது உண்மை தானே.. அபோ நீதானே போயி அந்த கல்யாணத்தை எடுத்து நடத்தி கொடுக்கணும்.. இதுக்கு மேல நான் உனக்கு சொல்லனும்ற தேவை இல்லை.. நீயே புரிஞ்சு நடந்துகோ.. ” என்று பேச்சை முடித்து விட்டார் கணேசன்..
அவனுக்கு தந்தை சொல்வதும் ஒரு வகையில் சரி என்று பட்டது.. ஒரு பெண்ணுக்கு அண்ணன் என்பதால்.. எல்லா வழியிலும் யோசித்தான்..
அந்தப் பெண் அவனை விரும்பியதை தவிர இருவர் மீதும் வேறு எந்த தவறும் இல்லாத காரணத்தால் ஊரே அந்த திருமணத்திற்கென மூன்று நாட்களுக்கு முன்பே வீட்டில் சமையல் செய்யாமல் அங்கே உணவு உண்டு வேலையில் ஈடுபட்டு என திருமணத்தை கோளாகலமாக கொண்டாடுகின்ற நேரத்தில் தான் மட்டும் அங்கே செல்லாமல் இருந்தால் அது நாள பின்ன பேச்சு ஒன்றுக்கு இரண்டு கதையாக திரிக்கப்பட்டு அந்த பெண்ணின் வாழ்க்கை கேள்வி குறியாகிவிடும் என்பதை உணர்ந்து குளித்துவிட்டு தந்தையிடம் கூறிவிட்டு அங்கே சென்று விட்டான்..
ஒரு வழியாக ஊருக்கு வந்து சேர்ந்தாள் சீதாலட்சுமி..
கிராமத்து மக்களையும் அவர்களது அணுகுமுறையையும் பார்த்து அவளுக்கு ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் போன்று தெரிந்தது..
பெரியவரே வெளியே வந்து சந்தோஷமாக குடும்பத்தோடு அவளை வீட்டுக்குள் அழைத்து வந்தார்.. அவளுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் அவளது பெட்டியை வேலையால் எடுத்து வைக்க உள்ளே சென்றாள்..
பழைய கால வீடு என்பதால் இப்பொழுது போல் அட்டாச் பாத்ரூம் அறையோடு இணைக்கப்படவில்லை..
பெரியவர் யமுனாவை அவளுக்கு அனைத்துக்கும் உதவியாக இருக்கும் படி கூறி சீதாவிடம் அனுப்பி வைத்தார்..
உடனடியாக குளித்தே ஆக வேண்டும் என்பதால் யமுனா வந்து தன்னை அறிமுகப்படுத்தி பேசவும் குளிப்பது எப்படி என்று அவளிடம் கேட்க அவள் வெளியே அழைத்து சென்று பனை ஓலையால் புதிதாக கட்டி வைக்கப்பட்டிருந்த தடுப்பை காட்டினாள்..
அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தான் இங்கே குளிக்க வேண்டுமா?. என கோவத்தோடு யமுனாவிடம் கத்திவிட்டு வேகமாக அறைக்குள் வந்து கைபேசி மூலம் தாய்க்கு அழைத்தாள்..
இப்பொழுது தான் விஐபி பேசி விட்டு சென்றதை நினைத்துக் கொண்டிருந்த யசோதா அவளது அழைப்பை பார்த்த பின் தான் சற்று நிம்மதியாக மூச்சு விட்டார் எனலாம்..
மகள் அழைக்க காத்திருந்தவர் ஏண்டா அழைத்தால் என்னும் அளவிற்கு தாயின் காதில் கத்தினாள்..
“ மா என்னமா இது ரொம்ப பட்டிக்காட்டுத்தனமா இருக்கு?. நாலு பக்கம் ஓலை கட்டி இருக்கு அதுக்குள்ள நான் குளிக்கனுமா?.. அங்க என்னோட ரூம்ல ஷவர் பாத்டப் எல்லாம் எவ்வளவு வசதி இருக்கு.. அட்லீஸ்ட் பொதுவா ஒரு பாத்ரூம் ஆவது கட்டி வச்சிருக்கலாம்… நான் இங்கே அந்த ஓலை அடைப்புக்குள்ள கிணத்துல தண்ணி அள்ளி குளிக்கணும்.. எவ்வளவு பெரிய கொடுமையான விஷயம் இது.. இது முதல் அடுத்து அந்த ரூம்ல ஏசி இல்ல.. என்னமா நீ நெனச்சிட்டு இருக்குற?.. ரொம்ப கஷ்டமா இருக்குமா நான் வந்துரட்டுமா?.. ” என்றாள்..
“ இல்லம்மா சீதா. நீ கல்யாணத்தை நல்ல படியா முடிச்சிட்டு வாம்மா.. இதெல்லாம் பார்த்து நீ வந்தா அப்பாவோட பேரு அங்க கெட்டு போயிடும்.. கிராமத்தில் எல்லா வீட்டிலயும் ஏசி வச்சிருக்க மாட்டாங்க. யன்னலை திறந்தால் சிலுசிலுன்னு இயற்கை காத்து வரும்.. ஆம்பளையாளுங்க எல்லாம் வெளிய படுப்பாங்க பொண்ணுங்க எல்லாம் உள்ளுக்கு யன்னலை திறந்துட்டு அந்த காத்துல பயமில்லாம நிம்மதியா உறங்குவாங்க.. அப்பாவுக்காக ரெண்டு நாள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு வந்துடு சீதாம்மா பிளீஸ்..” என்றார்..
தாய் அதிகாரமாக இருந்து தான் ஆக வேண்டும் என்று கூறினால் இருக்க முடியாது என்று சென்று விடுவாள்.. மகளது குணம் தெரிந்த தாய் இருந்துவிட்டு வா என்ன கெஞ்சி கேட்ட போது அவளால் அதை மறுத்து கூற முடியவில்லை..
“ சரிம்மா இங்க எனக்கு ஒரு குட்டி பொண்ணு பிரெண்ட் கிடைச்சிருக்கு.. நைட்டுக்கு நான் கார்ல ஏசி போட்டு தூங்குறேன்.. அந்த தாத்தா கிட்ட சொல்லி ஆள் வச்சி கிணத்துல தண்ணி எடுத்து குளிச்சுகிறேன்.. ” என்றாள்..
இந்த அளவுக்கு மகள் இறங்கி வந்ததே போதும் என்று நினைத்த யசோதா
“ அங்க போய் நீ கார்ல தூங்குறது சரியா வராது.. பாதுகாப்பும் இருக்காது சீதா மா.. எல்லாரையும் மாதிரி யன்னல் திறந்து வைத்து அவங்க உனக்கு தந்த ரூம்லேயே அந்த பொண்ணோட நீ தூங்கு.. ஒரு நாள் இயற்கை காத்துல தூங்கி பாரு அது எவ்வளவு புத்துணர்ச்சியா இருக்கணும் உனக்கே புரியும்.. இந்த வாழ்க்கை எல்லாம் நம்முடைய நரக நகரத்து வாழ்க்கையில கிடைக்காது சீதா.. நீ சாப்பிட்டியா?.. சரிமா ரொம்ப லேட்டா ஆயிடுச்சு நீ போய் குளிச்சிட்டு சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு.. காலையில நானே உனக்கு கூப்பிடுறேன்.. ” என்று கூறி விட்டு வைத்து விட்டார்..
அவர் வைக்கவில்லை என்றால் மகள் இன்னும் அது குறை இது குறை என ஒரு லிஸ்ட் கூறுவாள் என்று அவருக்கு தெரியும்..
சீதாவும் அப்பாவுக்காக அம்மாவுக்காக என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு யமுனாவின் கையைப் பற்றி தாத்தாவை சந்திக்க சென்றாள்..
அப்போதுதான் முத்துராமனும் அவரை சந்தித்து விட்டு வேலையாக நண்பனுடன் வெளியே சென்றான்..
அருகருகே இருந்தாலும் அந்த விபத்துக்கு பின் இருவரும் இன்னும் சந்திக்கவில்லை..
ஆண்கள் பெண்கள் என அனைவரும் எதுக்காகவோ ஒன்றுக்காகத்தான் ஓடுகிறார்கள்..
அவனும் குடும்பத்துக்காக தங்கைக்காக அப்பாவுக்காக சமூகத்துக்காக என உழைக்கிறான்..
இதோ விருப்பம் இல்லாட்டிலும் அவன் தந்தை சொன்னதற்காக அந்த திருமணத்தில் வந்து வேலை செய்கிறான்..
அவளும் விருப்பமில்லை என்றாலும் அப்பாவின் பெயரை இங்கு காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிடிக்காத இடத்தில் வந்து இருக்கிறாள்..
யமுனா அவளை தாத்தாவிடம் அழைத்து சென்ற போது அவர் பேத்தியின் தலையை வருடியவாறு அவளுடன் பேசிக் கொண்டிருந்தார்..
அப்பொழுது யமுனா அவரை அழைக்க
திரும்பி பார்த்தவர் சீதாவை பார்த்து அவளை அருகே வரும்படி அழைத்தார்..
“ வாம்மா. இவ்வளவு வருஷம் கழிச்சு இப்பதான் உன்ன என் கண்ணிலேயே காட்டி இருக்காங்க..
இங்கிருந்து நான் தான் உங்க அப்பா அம்மாக்கு கல்யாணம் பண்ணி அவங்கள சென்னைக்கு அனுப்பி வைச்சேன்.. உங்க அப்பனும் மாமனும் அல்பாய்ஸ்ல போய் சேர்ந்துட்டாங்க.. யசோதாவால இங்க வர முடியலன்னு ரொம்ப வருந்தி பேசுச்சு.. சரிம்மா பயணம் எல்லாம் சௌகரியமா இருந்துச்சா?.. என்னம்மா இன்னும் குளிக்காம இருக்க?.. போ போய் சீக்கிரம் குளிச்சிட்டு வந்து உனக்கு என்ன பிடிக்குமோ சொன்னா செஞ்சு தருவாங்க சுடசுட சாப்பிட்டு கொஞ்ச நேரம் நீயும் தூங்கி எழு.. அப்புறம் தனியே பயணம் பண்ணி வந்தது முகம் எல்லாம் சோர்ந்து தெரியுது.. ” என்று சீதாவின் தலையை வருடி அன்பாக பேசினார்..
“ தாத்தா இந்த அக்காவுக்கு கிணத்துல தண்ணி அள்ளி குளிக்க தெரியாதாம்.. ” என்றாள் யமுனா.
“ ஓ அதை நான் மறந்தே போயிட்டேன் பார்த்தியா?.. நீங்க குழாய் பைப்ல குளிச்சு வந்த ஆட்கள்.. யமுனா நீ போய் முத்துவ நான் சொன்னேன்னு அழைச்சிட்டு வா இப்பதான் இங்க வந்துட்டு வெளிய போனான்.. ” யமுனாவை அனுப்பி வைத்துவிட்டு சீதாவின் பக்கம் திரும்பி “ இதுதாம்மா என் பேத்தி அதாவது கல்யாண பொண்ணு.. இவளுக்கு தான் நாளைக்கு காலைல கல்யாணம்.. ” என்றார்..
அவர் சொன்னதைக் கேட்டு சீதா சற்று அதிர்ச்சி அடைந்து விட்டாள்..
அவர் கல்யாணப் பெண் என்று சொன்னவளை பார்த்தால் ஒரு 15 அல்லது 16 வயது என மதிக்கலாம்.. யமுனாவுக்கும் அவளுக்கும் வித்தியாசம் இல்லை..
அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல் “ இவங்களுக்கா தாத்தா கல்யாணம்.. ரொம்ப சின்ன பொண்ணா இருக்காங்களே.. ” என்று மனதில் தோன்றியதை மறைக்காமல் கேட்டுவிட்டாள்..
“ அட என்னம்மா நீ கிராமத்து பக்கவெல்லாம் 15 16 வயதிலேயே கல்யாணம் பண்ணி கொடுத்துடுவாங்க.. இப்பதான் ஏதோ கல்யாணத்துக்கு வயசுன்னு ஒரு சட்டம் வந்து இருக்கே. 18 வயசு தொடங்கி இப்பதான் மூணு நாள் ஆகுது.. இதைவிட என்ன வயசு வேணும் கல்யாணத்துக்கு.. ” என்றார்..
கிராமங்களில் இன்னும் இந்த நடைமுறை வழக்கத்தில் இருப்பது அவளுக்கு தெரியாது.. 21 வயதில் அவளுக்கே இன்னும் திருமணம் மற்றும் வாழ்க்கை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.. அதனால் அந்த பெண்ணை ஆச்சரியமாக பார்த்துவிட்டு யமுனா வந்ததும் அங்கிருந்து சென்று விட்டாள்..
தாத்தா அழைப்பதாக கூறி அண்ணனிடம் சொன்னாள் யமுனா..
அவனும் அங்கே சென்று என்னவென்று கேட்டதும் அவனை கிணற்றில் தண்ணீர் இறைத்து பக்கெட்டில் வைக்கும் படி கூறினார்..
அவருக்கு தான் என்று நினைத்து வேறு யாருக்கும் இருக்குமோ என்று கேட்காமல் அவர் சொன்னதை செய்தான்..
அவளும் அறைக்கு சென்று குளித்துவிட்டு அங்கே போடுவதற்கு நைட்டி மாதிரி ஒரு ஆடை எடுத்துக்கொண்டு டவல் சோப்பினை அனைத்தையும் எடுத்துக் கொண்டு யமுனாவுடன் அங்கே சென்றாள்..
அவளது சத்தமும் தங்கையின் சத்தமும் அருகில் கேட்கவும் அவன் பெண்கள் வருகிறார்கள் என்று நினைத்து வேகமாக தண்ணீர் நிறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்..
அவளும் குளித்துவிட்டு கை இல்லாத ஒரு நைட்டியை அணிந்து கொண்டு அறைக்குள் வந்தாள்..
அதை மாற்றி டாப் ஒன்றை போட்டு விட்டு யமுனாவுடன் சமையல் அறை எங்கே என்று தெரிந்து கொண்டு சென்றாள்..
பசிப்பது போலவும் இருந்தது ஆனால் தற்பொழுது உணவு வேண்டாம் என்றும் தோன்றியதால் சாப்பாடு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு பால் மட்டும் எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தாள்..
பாலை குடித்து விட்டு யமுனா அவளுடன் பேசிக்கொண்டு இருந்தாள். திடீரென்று சத்தம் இல்லை என்று திரும்பி பார்க்க அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்..
நேரத்தை பார்த்தால் நல்லிரவு ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது..
புது இடம் உறக்கம் வராமல் சற்று நேரம் கைபேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்..
ஒரு கட்டத்தில் அதுவும் அழுத்த போக எழுந்து வெளியே ஒரு சுற்றி சுற்றி வரலாம் என்று நினைத்து வந்தாள்..
கல்யாண வீடு என்று பறைசாற்றும் விதமாகவே ஆண் பெண் பேதமின்றி கிடைத்த இடங்களில் அனைவரும் சொற்ப நேரமாவது உறங்கி களைப்பை தீர்க்க வேண்டும் என்பதால் ஆளுக்கு ஒரு மூளையில் சுருண்டு ஆங்காங்கு படுத்திருந்தனர்..
அதை பார்த்து முகம் சுழித்தவள் யார் மீதும் மிதி படாமல் மெதுவாக பூனை போல் அடி எடுத்து வைத்து நடந்து வெளியே வந்தாள்..
சீரியல் பல்புகள் போட்டிருந்தப்படியால் இரவு என்பதை மறந்தது பகல் போன்று வெளிச்சமாக இருந்தது..
சிலு சிலுவென இயற்கை காற்று முகத்தில் பட்டு அவள் முடியை கலைக்க அதை ஒதுக்கி விட்ட படி வீட்டின் மறுபக்கத்திற்கு நடந்து வந்தாள்..
சற்று தூரம் நடந்து போயிருப்பாள் சீதா பேச்சு குரல் கேட்டதும் அங்கிருந்த மற்றொரு மாமரத்தின் பின் மறைந்து கொண்டு அவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ந்து போனாள்..
அவர்கள் பேசுவது நன்கு கேட்கும் தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் பின்பு இரண்டு ஆண்கள் மறைந்து நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்..
“ டேய் மச்சான் இது தான் நல்ல சந்தர்ப்பம் அவளை விட்டு விடவே கூடாது.. எட்டாம் வகுப்பு படிக்கும் போது இருந்து அவ பின்னுக்கு நான் சுத்திகிட்டு இருக்கேன். அவளுக்கு முத்துவ பிடிச்சிருக்கு அவனை தான் கல்யாணம் கட்டிக்கனும்னு சொல்லி என்ன ஒதுக்கி வச்சிட்டா.. சரி அப்பவே அவன் உயரமா இருப்பான். அவன் அடிச்சா நான் தாங்க மாட்டேன். நமக்கு ஏன் வம்புன்னு நான் ஒதுங்கி போயிட்டேன்.. அப்புறம் பார்த்த அவனுக்கே அவளை பிடிக்கலன்னு என்று சொல்லிடான் போல. அதை கேட்டதும் அவ கிணத்துக்குள்ள குதிச்சிட்டா.. இப்ப இந்த கிழவன் நானும் இல்லை முத்துவும் இல்லாமல் வேறொரு மாப்பிள்ளை பார்க்குது.. அவன்கிட்ட அடி வாங்கினதனால அவனை பத்தி தெரிஞ்சு ஒதுங்கிட்டேன்.. ஆனா எல்லா நேரமும் அப்படி இருக்க மாட்டேன்.. முத்துக்கு விருப்பம் இல்லன்னு சொன்னதுமே நான் திரும்பவும் அவ கிட்ட ப்ரபோஸ் பண்ணி அவளை சம்மதிக்க வைச்சிருக்கணும்.. அதை பண்ணாம தப்பு பண்ணிட்டேன்.. சரி போ ஒன்னும் கெட்டுப் போகல அவளுக்கு தான் இன்னும் கல்யாணம் நடக்கல தானே.. தூக்குறோம் கோயில்ல கொண்டு தாலி கட்டுறேன். நாளைக்கு காலைல ஊருக்குள்ள அவளை கூட்டிட்டு வரேன்.. மச்சான் உன்னை நம்பித்தான் இறங்குறேன்.. வண்டி எல்லாம் ரெடி தானே. நம்ம பசங்க எல்லாம் வந்து இருக்காங்க தானே..” என்றான் கடத்த வந்தவன் சற்று சந்தேகம் ஏற்படவும்..
அவனுடன் இருந்தவனோ “ டேய் மச்சான் என்ன அவசரம் கொஞ்சம் பொறுடா. இப்பதானே எல்லாரும் போய் படுத்திருக்காங்க.. கொஞ்சம் அசந்து எல்லாரும் தூங்கட்டும்.. இல்லன்னா சின்ன சத்தம் கேட்டாலும் முழிச்சிடுவாங்க.. அப்புறம் அந்த முத்து மட்டும் இல்ல எல்லாரும் சேர்ந்து நம்மள பெண்டு கழட்டிடுவாங்க.. பக்காவா பிளான் பண்ணி பண்ணனும்.. இப்ப நம்ம நோட்டம் பார்க்க வந்திருக்கோம்.. எல்லாத்தையும் பாத்துட்டு அவ எந்த ரூம்ல இருக்கான்னு தெரிஞ்சுகிட்டு .. இப்ப போயிட்டு சரியா மூனரை மணிக்கு வருவோம்.. அப்ப சரியான நேரமா இருக்கும்.. அப்ப வந்து பொண்ண தூக்குறோம். வெளிய நம்ம ஆளுங்க வண்டியோட ரெடியா இருப்பாங்க அதுல போட்டுட்டு போயிட்டே இருக்கோம்.. அந்த முத்து இங்க ஆளையே காணல. அவங்க வீட்டுல இருப்பான் போல. சத்தமே இல்லாம வந்து போய்டுவோம். சரி வா யார் கண்ணுலயும் படாம வந்த மாதிரி இப்ப போயிடலாம்.. ” என்று கல்யாண பெண்ணை தூக்குவது பற்றி பேசிவிட்டு சென்று விட்டார்கள் இருவரும்..
அவர்கள் பேசியதை கேட்டவள் சற்று நேரம் தான் அதிர்ச்சி அடைந்தாள். அதன் பின் அவளுக்குள் இருக்கும் ஜான்சி ராணி விழித்துக் கொண்டாள்..
“ அடப்பாவிகளா..! அதுவே ரொம்ப சின்ன பொண்ணு. அதுக்கு போய் கல்யாணம் பண்றாங்கன்னு நானே ரொம்ப கோவப்பட்டு போய் இருக்கேன்.. அதையும் கெடுத்து நீ தூக்கிட்டு போய் அந்த பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ண நான் இருக்கும் வரைக்கும் விட்டுடுவேனா என்ன? .. மூனரை மணிக்கு தானே நீங்க வாரிங்க வாங்க நான் உங்களுக்கு முன்னாடி அந்த டைமுக்கு இங்கே இருக்கேன்.. உங்க ரெண்டு பேரையும் இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன் டா.. யாருப்பா அந்த சண்டியர் முத்து.. எங்கடா இருக்க சீக்கிரம் வந்து சேரு.. அவனுகளுக்கு நான் ஒருத்தியே போதும். ஆனாலும் கொஞ்சம் நீ கூட இருந்தா சமாளிக்க ஈஸியா இருக்கும்..” என்று முத்து என்றால் யார் என்று தெரியாமலே அவனை உதவிக்கு அழைத்தாள் பாவை..
அவள் செய்தியை காற்று அவன் காதில் கொண்டு செலுத்தியதோ தெரியாது. அவன் வீட்டுக்கு செல்லாமல் கல்யாண வேலையாக தான் டவுன் வரைக்கும் சென்று இருந்தவன் அதை நண்பனிடம் கொடுத்துவிட்டு சீக்கிரம் முடித்துவிட்டு வரும்படி கூறிவிட்டு அங்கிருந்து அவன் புறப்பட்டு விட்டான்..
ஜான்சி ராணியின் அடாவடி சாகாசத்தால் அவள் அனுபவிக்கப் போகும் துன்பம் தெரிந்திருந்தால் அவள் இதில் இறங்கி இருக்கவே மாட்டாள்..
அவள் பூனை என்று நினைத்து கடந்து வந்தவன் புலியாக அவள் மீது பாய இருக்கிறான் என்பது அப்பொழுது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை..
அவள் நினைவின் நாயகன் அவளை காக்க வருகிறானா?
இல்லை வேடிக்கை பார்க்க வருகிறானா?..
என்று நாம் காத்திருந்து பார்ப்போம்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
+1