நான் நினைத்தால் வருவாயோ அன்பே..1
சென்னையில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் காற்றைக் கிழித்துக்கொண்டு பி எம் டபிள்யூ கருப்பு நிற கார் ஒன்று வேகமாக வந்தது..
அவள் கைக்கு இந்த கார் கிடைத்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது..
இன்று வரை இந்த கார் ஓட்ட எந்த ஒரு ஆணையும் டிரைவராக அவள் வைத்தது இல்லை..
எங்கு வேண்டுமானாலும் அவளே காரை ஓட்டி சென்று வந்து விடுவாள்..
அதேபோன்று அவளது வாழ்க்கை இலட்சியத்தில் ஒன்று அவளது அத்தான் விஐபி- யை திருமணம் செய்து கொள்வது..
இவள் தாய் யசோதாவும் விஐபி-யின் தந்தை கிருஷ்ணாவும் சகோதரர்கள்..
யசோதா கல்யாணராமனின் ஒரே தவப்புதல்வி தான் இந்த சீதாலட்சுமி..
அனைவரையும் போன்று இவர்களும் குழந்தைகள் பிறந்ததும் ஒருவருக்கு ஒருவர் ஜோடி என்று கூறி அவளது மனதில் ஆசையை வளர்த்து விட்டார்கள்..
கல்யாணராமனும் விஐபி-யின் தந்தை கிருஷ்ணாவும் தொழில் விஷயமாக லண்டன் சென்ற போது விமான விபத்தில் எதிர்பாராத சமயம் இருவரும் இறந்து விட்டார்கள்..
இரண்டு குடும்பமும் ஒரே நேரம் ஏற்பட்ட இழப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மீட்டெடுத்து தங்களின் வாழ்க்கை பாதையை பிள்ளைகளுக்காக வாழ ஆரம்பித்தார்கள்..
தாய் மீரா அத்தை யசோதா அத்தை மகள் சீதாலட்சுமி இவர்கள் மூவரையும் ஒரே ஆணாக நின்று அனைத்தையும் அவர்களுக்காக பார்த்து பார்த்து செய்து அவர்களை இந்த அளவுக்கு மீட்டெடுத்து கொண்டு வந்தது விஐபி தான்..
யசோதா கல்யாணராமன் தம்பதி வசதி வாய்ப்பில் சற்றும் குறைவில்லாதவர்கள் என்பதால் திருமணம் செய்து 5 வருடங்களுக்கு கழித்து தவமிருந்து பெற்ற பெண் குழந்தை என்பதாலும் அவளுக்கு கல்யாணராமன் அனைத்து விதத்திலும் செல்லங்களை கொடுத்து அவள் கேட்டது அடுத்த நிமிடமே கையில் இருப்பது போன்று அவர் வளர்த்துவிட்டார்.
தான் நினைத்தால் நடக்கும். கேட்டால் கிடைக்கும். என்ற அந்த ஓர் எண்ணம் அவளது மனதில் ஆழமாக பதிந்ததாலும் யார் எவர் என்று பாராமல் கேட்டது கிடைக்க வேண்டும் நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய துணிந்து விட்டாள்..
அவள் பருவம் அடைந்த காலத்தின் பின்பு விஐபியின் மேல் அவளுக்கு ஏற்பட்ட காதலை வைத்து அவளை அனைத்து விதத்திலும் அவர் ஆட்டி வைப்பதற்கு கையில் எடுத்த மந்திரமே விஐபி..
சீதா வளர்ந்து 21 வயது மங்கையான பின்பு கூட யசோதா அவளிடம் ஏதாவது கேட்கவோ சொல்லவோ பயப்பட ஆரம்பித்துவிட்டார்..
அவனை வைத்துத்தான் அவளது தாய் அவளை ஒவ்வொரு விஷயங்களையும் செய்ய வைப்பார்..
சீதாலட்சுமி தான் பெயரே தவிர ஆனால் அவள் மாடல் மங்கை..
அந்தப் பெயருக்கும் அவளுக்கும் துளியும் சம்பந்தம் இருக்காது..
நாகரிக ஆடைகள் அணிந்து அவள் கையில் இருக்கும் பணமும் அவளை பிறரை மதிக்க வைக்காமல் திமிரோடும் அகங்காரத்தோடும் செயற்பட வைத்து..
” சீதா கெட் அப் ஆறு மணி ஆயிடுச்சு. தினமும் காலை 6:00 மணிக்கு எழுந்து பழகு அது தான் விஐபிக்கு பிடிக்கும்.. “
“ம்ம்ம்..”
” சாரி கட்டி பழகு அதுதான் விஐபிக்கு பிடிக்கும்.. “
“ம்ம்ம்..”
” சீதா தலையில பூ வச்சுக்கோ..
சீதா இந்த மெருன் கலர் பொட்டு எடுத்து வச்சுக்கோ. அழகா இருக்கும் அது தான் அவனுக்கு பிடிக்கும்..”
“—-“
” கார் அதிக வேகமா ஓட்டாத.”
“—–” கார் வேகமாக ஓட்டுவது அவளுக்கு பிடிக்கும்.. அதை நேரில் வி ஐ பி-யே சொன்னாலும் அவள் அதை கேட்டுக் கொள்ள மாட்டாள்..
” சீதா வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போவோம் வா..”
” ம்ம்ம்.. “
” சீதா விஐபிக்கு புடிச்ச மாதிரி சமையல் பழகிக்கோ..”
” ம்ம். “
அன்று கணவன் பணத்தினால் மகளுக்கு கொடுத்த செல்லத்தை. அதனால் அவளின் எதிர்கால வாழ்க்கை என்னவாகுமோ என்கிற பயத்தையும் யசோதா மனதில் வைத்துக் கொண்டே விஐபி என்னும் மந்திரத்தை வைத்து ஓர் குடும்பப் பெண்ணாக மகளை மாற்றுவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்..
விஐபிக்கும் யசோதாவின் இந்த திட்டம் தெரியும். ஆனால் அவனும் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டான். அவனுக்கு சீதாலட்சுமி மீது எந்தவித விருப்பமும் இல்லை. அதனால் இப்படி செய்ய வேண்டாம் என்று ஆனால் அவர் கேட்டுக் கொள்ளவில்லை..
அவளுக்கு தந்தையை பிடிக்கும் அதனால் சில விடயங்களில் கல்யாண ராமன் சொன்னால் அவள் கேட்டுக் கொள்வாள்..
தந்தைக்கு நிகராக விஐபி-யை பிடிக்கும் அதை வைத்து தான் யசோதா மகளை ஓரளவுக்கு மாற்ற நினைத்திருந்தார்.
எங்கே அது இல்லாமல் போய் முதலுக்கே மோசமாகுமோ?. என்ற பயத்தில் தான் விஐபி அவளை காதலிக்கவில்லை. என்பதையும் அவளிடம் கூறாமல் மறைத்து வைத்தார்..
எதிர்வரும் காலத்தில் விஐபி சீதாலட்சுமி யை காதலிக்கவில்லை என்பது அவளுக்கு தெரிந்தால் அவளின் நிலை என்னவாகுமோ?..
இதோ வழமை போன்று இன்றும் மதுரையில் கல்யாண ராமனின் சொந்தத்தில் ஒரு திருமண விழா என்பதால் விஐபியின் பேரையும் கல்யாணராமனின் பெயரை அங்கு காப்பாற்றுவதற்காகவும் யசோதா தூரம் பயணம் போக முடியாத காரணத்தால் கெஞ்சி கூத்தாடி சீதாலட்சுமியை மதுரை திருமணத்திற்கு அனுப்பி வைத்தார்..
மகளின் குணத்தைப் பற்றி நன்கு தெரிந்திருந்த யசாதாவே இவ்வளவு நெடுந்தூரப் பயணத்திற்கு அவளை தனியாக அனுப்பியது ஏன் என்று வருந்தும் காலம் தூரத்தில் இல்லை..
அதிவேக கார் பயணத்தாலும் மதுரைக்கு அவள் செல்ல இருப்பதாலும் அவள் வாழ்க்கையில் ஏற்பட போகும் பிரளயத்தை முன்பே அறியும் சக்தி யசோதாவிற்கு இருந்திருந்தால் அவர் அங்கு மகளை அனுப்பி இருக்க மாட்டாரோ என்னவோ..
அடுத்த நிமிடம் என்ன நடக்கும் நாளை என்ன நடக்கும் என்று எந்த விதமான சிந்தனையும் கவலையும் இல்லாமல் இதோ இன்று அவளது இந்த பயணம் அவளுக்கு அழகாக தெரிந்தது..
அவளுக்கு அந்த திருமணத்திற்கு மதுரை வரை செல்ல விருப்பம் இல்லாமல் தாயின் கட்டாயத்தில் செல்வதாக இருந்தாலும் இதோ காரில் அவளது மனம் கவர்ந்த மன்னவனின் மெல்லிசை பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதை கேட்டு ரசித்தபடி அவளுக்கு பிடித்த நெடுந்தூர பயணம் செய்தாள்..
இதோ இந்த தூர பயணம் போன்று அவள் வாழ்க்கை பயணமும் திசை மாற போவதற்கான முதல் ஆரம்பம்.
மதுரையை நெருங்க இருக்கும் சற்று நேரத்தில் திடீரென ஏற்பட்ட வானிலை மற்றம் காரணமாக சிறிதாக ஆரம்பித்த மழை துளி சிறிது நேரத்தில் வேகம் எடுத்தது..
அவளுக்கு கார் ஓட்டுவதும் அந்த காரை வேகமாக ஓட்டுவதும் அதிகமாக பிடித்தவையில் ஒன்று.
அவளுக்கு மிகவும் பிடித்த ஒருவனே வந்து அதை பலமுறை கூறியும் அவள் அந்த வேகமாக கார் ஓட்டும் பழக்கத்தை மட்டும் தவிர்க்க விரும்பவில்லை.
நேரம் வேறு இரவு எட்டு மணி ஆகிவிட்டது திடீரென பெய்த மழையால் எதிரில் வரும் வாகனங்கள் கொஞ்சமும் அவளுக்கு தெரியவில்லை.. ஆனாலும் இந்த நடுவீதியில் காரை நிறுத்தி விட்டு மழை விட்டதும் செல்லும் அளவிற்கு அவளுக்கு பொறுமையும் இல்லை..
விருப்பமில்லாத அவளின் இந்த பயணத்திற்கு இந்த மழையும் இடைஞ்சலாக இருந்ததால் கடும் கோபத்தில் இருந்தவள் வேகத்தை சற்றும் குறைக்காமல் அந்த காரில் பயணித்தாள்..
அந்தோ பரிதாபம்..
வீதியில் இருந்து சற்று ஓரமாக ஆட்டோ ஒன்று மழை காரணமாக ஒதுங்கி நின்றது..
வேகத்தை கட்டுப்படுத்தாமல் அவள் கோபமும் சேர்ந்து அந்த ஆட்டோ மேல்
அவளது கார் மோதியது..
ஆட்டோவும் காரும் மோதியதால் ஆட்டோ டிரைவரும் ஆட்டோவில் இருந்த பயணியும் ஆட்டோவுடன் சேர்ந்து சரிந்து வீதியில் சற்று உருண்டோடி அருகில் இருந்த ஒரு மரத்தில் மோதி நின்றது..
இந்த விபத்தை சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை..
இந்த விபத்து அவளால் நடந்தது என்பதற்கான அதிர்ச்சி மற்றும் எந்த உணர்வும் அவளது முகத்தில் சிறிதளவும் இல்லை..
ஆட்டோவை இடித்து தள்ளிவிட்டு கார் நின்றதும் அவள் காரில் இருந்து இறங்கி கூட அவர்களைப் பார்க்கவில்லை..
ஆட்டோ டிரைவருக்கு அதிகமாக காயம் இல்லை கையில் மற்றும் தலையிலும் சிறிய அளவு அடி மற்றும் சிராய்ப்பு காயம்..
பயணியும் பெரிய அளவில் அடிபடவில்லை .. அவருக்கும் தலையில் சிறிய அளவு காயத்தினால் ரத்தம் மட்டும் கசிந்தது..
இதோ யார் செய்த புண்ணியமோ நல்ல நேரத்தில் உயிர் ஆபத்து எதுவும் இல்லை..
தன்னை நம்பி வந்தவரை காக்கும் பொருட்டு லட்சுமி அதிகமாக அனைத்து அடிகளையும் தாங்கியது..
அவன் அவனது தந்தை மற்றும் தங்கையை எவ்வளவு பாசமாக பார்த்துக் கொள்வானோ அதை விட ஒரு படி மேலாகவே ஆட்டோவை அதாவது லட்சுமியை பார்த்துக் கொள்வான்..
ஆட்டோவை நிமிர்த்தி விட்டு அவரையும் கை கொடுத்து இறக்கி வெளியே விட்டுட்டு அந்த மழையில் நனைந்தபடியே கார் கண்ணாடியை வந்து தட்டினான்..
தொடர்ந்து அந்த மழையில் செல்ல முடியாது என்பதால் அங்கேயே காரில் கண்களை மூடி தலையை சாய்த்து அவளுக்கு பிடித்த விஐபியின் பாடலைக் கேட்டபடி அமர்ந்திருந்தாள்..
காதில் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்ப்பதால் அவளுக்கு கண்ணாடி தட்டும் சத்தம் கேட்கவில்லை..
இவ்வளவு நடந்த பின்பும் பொறுமையாக இருக்க விரும்பாமல் அருகே கிடந்த கல்லை எடுத்து கார் கண்ணாடியை நோக்கி அடிக்க அந்த கண்ணாடி உடையும் சத்தத்தில் தான் அவள் சுயநினைவுக்கு வந்து கார் கதவை திறந்து வெளியே இறங்கினாள்..
” ஏய் இடியட் அறிவில்ல.. முட்டாளா? மேன் நீ. உள்ள ஆள் இருக்கு கார் கண்ணாடிய உடைக்கிற கண்ணாடி பீஸ் என் மேல பட்டால் பிளட் வரும் பெயின் வரும்.. ” என்று இன்னும் அவள் வாயில் வந்த நல்ல ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி அவனை திட்டிக் கொண்டிருந்தாள்..
அவனோ அவளது இந்த திமிர் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச விரும்பவில்லை.. தவறு என்று பட்டால் அதிகம் அவன் வாய் பேச மாட்டான்.. கை தான் அதிகம் பேசும். இதுவே எதிரில் இருப்பது பெண் மட்டுமல்லாமல் ஒரு ஆணாக இருந்தால் இந்த பேச்சு செய்கை அனைத்திற்கும் அவன் உயிருக்கு உத்திரவாதம் இருந்து இருக்காது..
அவள் திட்டியது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவன் சற்று அவள் வாயை மூடியதும் இடையில் கட்டி இருந்த அவனது வாலட்டில் இருந்து கார் கண்ணாடியை உடைத்ததற்காகவும் புது கண்ணாடி மாற்றுவதற்கான பணத்தை அவள் கையில் வைத்தான்..
அந்த வாலட்டையும் மீறி மழை நீரில் நனைந்த அந்த 100 ரூபா தாள்களை அவள் கையில் இருந்ததை அவன் முகத்திற்கு நேராக தூக்கி வீசி விட்டு..
” ஏய் யாருகிட்ட உன் பிச்சை காசு தூக்கி போடுற.. 100 ருபி நோட் எல்லாம் நான் லைஃப்ல பார்த்ததே இல்லை மேன்.. நீ அழுக்கான உன் கையால பயன்படுத்தின அந்த பணத்தை நான் பயன்படுத்தணுமா?.. யாருக்கு மேன் வேணும் உன் பிச்ச காசு.. உனக்கும் உன் ஆட்டோக்கும் சேர்த்து நான் தரேன்.. புது ஆட்டோ வாங்கிக்கோ. என் புண்ணியத்துல.. இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடா மழை வந்தால் ஒதுங்கி நிற்காமல் ரோட்டுல ஆட்டோ நிறுத்தி வச்சிருக்க.. நீ ராங் சைட் நிறுத்தி வச்சிருந்ததற்காக நான் உனக்கு பணம் தரக்கூடாது.. ஆனா உன்ன பார்த்தாலும் எனக்கு பாவமா இருக்கு.. நீயே ஆப்ட்ரால் ஒரு ஆட்டோ டிரைவர் உன்கிட்ட புது ஆட்டோ வாங்க பணம் இருக்கா? மேன். முதல் இது உன்னோட ஆட்டோவா?.. இல்லை டிரண்டுக்கு எடுத்து ஓட்டுறியா?.. உன்ன பாத்தா புது ஆட்டோ வாங்குவதை பற்றி யோசிக்க முன் இந்த ஆட்டோவை பழுது பார்க்க கைல பணம் இருக்கா மேன்.. 100 ரூபாய் கேஸ் வச்சிருக்க உன்கிட்ட எப்படி 10,000 இருக்கும்..?” என்று இன்னும் அவனை மட்டம் தட்டி பேசிவிட்டு அவளிடம் தற்பொழுது பணம் இல்லாத காரணத்தால் யசோதா அவள் கையில் போட்டு விட்ட வைர கல் பதித்தி தங்க வளையகள் இரண்டையும் கழட்டி அவனது காலின் கீழ் போட்டுவிட்டு வேகமாக காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..
‘ அம்மா சீதா தேவி நீ ரொம்ப பெரிய கொடை வள்ளல்தான்.. நாங்க ஒத்துக்கிறோம்.. முட்டையிடும் கோழிக்கு தான் —- எரியுமாம். உங்க அப்பா சம்பாதிச்சு வச்சது. இப்ப விஐபி அதை காப்பாத்திட்டு வரான்.. ஆனால் நீ பல லட்சம் மதிப்புள்ள அந்த வளைலை காலுக்கு கிழ வீசிட்டு போற.. ‘
அவள் பேசியது அவள் நடந்து கொண்டது என அனைத்தையும் அவனும் அந்த பயணியும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்..
அந்த பயணியோ அவளை அவனுக்கும் சேர்த்து திட்டிவிட்டு அவனிடமும் அதிகமாக கேள்வி கேட்டு கோபப்பட்டார். ” நம்ம மேல தப்பே இல்லை.. நாம ஓரமா ஆட்டோவை நிறுத்தி இருக்கோம்.. அந்த பொண்ணு நம்ம மேல தான் தப்புன்னு திமிரா பேசுது. அப்புறம் ஏன் நீ இவ்வளவு பொறுமையாக இருக்கிற தம்பி?.” என்றார்..
” அட விடுங்க சார்.. அது ஏதோ பணப் பைத்தியம் போல அப்படித்தான் பண்ணும்.. நாம ஏன் அதுக்கெல்லாம் கவலைப்படணும்.. ” என்று கூறிக்கொண்டு கீழே கிடந்த அவளது வளையல் எடுத்து அவன் சட்டை பைக்குள் வைத்து விட்டு.. எதிரில் வந்த இன்னும் ஒரு ஆட்டோவை மறித்து அவரை அதில் ஏற்றி அனுப்பி வைத்துவிட்டு மெக்கானிக்கிற்கு கைபேசியில் அழைத்தான்..
வரும் வழி அனைத்தும் அவனைத் திட்டிக்கொண்டே ஒரு வழியாக மதுரை மாநகரத்திற்கு வந்து சேர்ந்தாள்..
கூகிள் உதவியோடு அங்கே மிகவும் பிரசித்தி பெற்ற மெக்கானிக் ஷாப் ஒன்றை கண்டுபிடித்து அவளது காரை அங்கே நிறுத்தி ஆட்டோவுடன் மோதியதால் காருக்கு ஏற்பட்ட சில அடிகளையும் கண்ணாடியையும் மாற்றுமாறு கூறிவிட்டு காத்திருந்தாள்..
ஒரு பத்து நிமிடம் வரை காத்திருந்த அவளுக்கு பசி வந்து தொல்லை செய்யவும் அருகே எங்காவது நல்ல தரமான உணவகம் இருக்கிறதா என்று அதையும் கூகுள் உதவியோடு கண்டுபிடித்து நடந்து அந்த உணவகத்தை அடைந்து அவளுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து உணவு வந்ததும் வயிறு நிறைய பசியாறி விட்டு பில் மற்றும் டிப்ஸ் பணத்தை கிரெடிட் கார்ட் மூலம் எடுக்குமாறு கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி மீண்டும் மெக்கானிக் ஷாப் வந்து சேர்ந்தாள்.
அப்போது தான் வேறு கார் பார்த்துவிட்டு இவளது கார் அருகே வந்த ஓனர் காரை சுற்றி பார்த்து விட்டு
“ கார் சரி பண்ண இன்னும் ஒரு மணி நேரமாவது தேவைப்படும் மேடம்.. ” என்று மெக்கானிக் ஷாப் ஓனர் கூறவும் சரி என்று கூறி அங்கேயே காத்திருந்தாள்..
அவனும் அந்த பயணியை ஏற்றி அனுப்பிவிட்டு மெதுமெதுவாக அந்த ஆட்டோவை செலுத்தி அவனது பட்ஜெட்டுக்கு தகுந்த மெக்கானிக் ஷாப்பில் ஆட்டோவை கொண்டு வந்து சேர்த்தான்..
அவளோ அந்த ஒரு மணி நேரம் வரை கைபேசியில் கேம் விளையாடி நேரத்தை போக்கினாள்
அடுத்த அடுத்த தெருக்களில் உள்ள இருவேறு மெக்கானிக் ஷாப்களில் இருவரும் ஒன்றாகவே அவர்களது ஆட்டோ மற்றும் காரை பழுது பார்த்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்..
ஒரு வழியாக இரவு 11 மணிக்கு அவள் வர வேண்டிய ஊருக்கு வந்து சேர்ந்து விட்டாள்..
அப்போது தான் அவள் லக்கேஜ் எடுக்கும் பொழுது கைபேசியை பார்த்தாள்..
தாய் அத்தை மற்றும் அத்தான் விஐபி மூவரிடம் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருந்தது..
திருமணத்திற்கு மகள் மட்டுமே வருவதை அங்கிருந்து அவர் உறவுமுறை பெரியப்பாவிடம் யசோதா நேரத்தோடு கூறியிருந்தார்..
திருமண வீட்டின் கலையோடு கூடிய அனைத்து அம்சங்களும் பெற்று இருந்தது அந்த வீடு..
திருமணம் என்றால் கேட்கவும் வேண்டுமோ சொந்தங்களுக்கு பஞ்சமே இல்லாமல் வீடு நிறைந்து கலகலப்பாக இருந்தது..
ஆனால் அவளுக்கோ அவளையும் காரையும் சுற்றி வந்த குழந்தைகள் மற்றும் ஆட்களையும் பார்த்து முகம் சுழித்தாள்..
ஒருவழியாக அந்த பெரியவர் குடும்பத்தோட வந்து அவளை வீட்டிற்குள் அழைத்து சென்றார்..
உள்ளே சென்று அவளுக்கு கொடுத்த அறையில் சென்று அவளது பெட்டியை வைத்து விட்டு அறையோடு இருக்கும் குளியலறையை தேடினாள்..
வேண்டுமே அங்கே குளியல் அறை..
பொதுவாக ஒரு கிணறு அதை சுற்றி திருமணத்திற்கு என்றே புது பனை ஓலையால் அடைக்கப்பட்டு இருந்தது..
கிணற்றில் நீர் அள்ளி அங்கிருந்த பக்கெட்டில் ஊற்றி குளிக்க வேண்டும்..
இதை யமுனா மூலம் அறிந்து கொண்டவள் ஆஆஆஆ என காதை பொத்திக்கொண்டு கத்தியப்படியே தாய்க்கு கைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தாள்..
நடு ஜாமம் ஆகியும் மகளிடமிருந்து இன்னும் அழைப்பு வரவில்லை என்பதால் மாத்திரை குடித்து உறங்க செல்லாமல் மகள் அழைப்பிற்காகவே யசோதா காத்திருந்தார்..
அவர் சிந்தனை முழுவதும் விஐபி வந்து அவரிடம் பேசிவிட்டு சென்றதில்லையே இருந்தது..
ஆகஸ்ட் மாதத்திற்கான தந்தையின் ஆபீஸில் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மீரா அழைத்து சீதா மதுரைக்கு சென்றிருப்பதை கூறினார்..
பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே மூடி வைத்துவிட்டு நேரடியாக சீதாவின் வீட்டிற்கு வந்தான்..
வந்தவன் பூஜை அறையில் விளக்கேற்றி மகள் நல்லபடியாக போய் சேர்ந்து திரும்பி வரவேண்டும் என்று கடவுளிடம் வணங்கியபடி இருந்த யசோதாவை பார்த்துவிட்டு அவர் வர காத்திருந்தான்..
அவனது காலடி சத்தத்தை வைத்து அவனை மதித்த யசோதா கண் திறந்து இறைவனை மனம் உருக வேண்டி விட்டு எழுந்து வந்தார்..
அவர் பூஜை அறையை விட்டு வந்ததுதான் தாமதம் “ ஐயோ அத்தை அந்த கல்யாணத்துக்கு அப்படி இங்க இருந்து ஆள் போய் ஆக வேண்டிய கட்டாயம் என்ன?.. உங்களுக்கு அவளோட குணம் தெரிஞ்சு இவ்ளோ நெடுந்தூர பயணத்துக்கு அவளை தனிய அனுப்பி இருக்கீங்களே?. சென்னையிலிருந்து மதுரைக்கு பிளைட்ல போய் அங்க இருந்து ஒரு கேப் புடிச்சு அந்த ஊருக்கு போய் சேர்ந்து இருக்கலாம்.. இப்ப கார்ல போறேன்னு போய் இவ்ளோ டைம் ஆயிடுச்சு இன்னும் அவ கிட்ட இருந்து ஒரு அழைப்பு கூட வரல.. அம்மா விஷயம் சொன்ன உடனே நானும் வர வழி நெடுக கைபேசியில் அழைச்சிட்டு தான் வரேன்.. அழைப்பு போகுது ஆனா அவ எடுக்க மாட்டேங்குற..” என்று பதட்டத்தில் சத்தம் போட்டான்..
அவனது பதட்டத்தைப் பார்த்து யசோதாவும் மகளுக்கு எதுவும் நடந்து விட்டதோ என்று கொஞ்சம் பயந்துவிட்டார்..
“ உனக்கு தெரியாததா பா.. எப்ப அந்த விமானத்தில் போய் அவங்க அப்பாவும் மாமாவும் இறந்தாங்கன்னு தெரிஞ்சதோ அப்போயிருந்து அந்த விமான சத்தத்தை கேட்டாலே அவளுக்கு உடம்பு எல்லாம் நடுங்குது. காத பொத்தி கத்துறா.. அப்படி இருக்கும்போது காலேஜ் படிப்பை நீ படிச்ச அமெரிக்கா யுனிவர்சிட்டிக்கு போய் படிக்கிறியா ன்னு கேட்டதுக்கு கூட எனக்கு எவ்வளவு சத்தம் போட்டா.. அவளோட அப்பாவை கொன்ன அந்த பிளைட்ல ஏறி போய் தான் ஆகணும் என்றால் அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அதை செய்யணும் என்று அவசியம் அவளுக்கு எப்பவுமே இல்லைன்னு சொல்லி இருக்காளே.. “
“ ப்பச் அது நூற்றுல பத்து வீதம் எப்பயோ ஒன்னு நடக்கிறது தான்.. நான் எத்தனை தடவை போய் வந்து இருக்கேன்.. அது அவளோட மனநிலை அப்படி இருக்கு. சரி அதை விடுவோம்.. அவளோட அடங்காப்பிடாரி குணம் தெரிஞ்சும் நீங்க ஏன் அவளை தனியே விட்டீங்க..? உங்க பொண்ணோட வாய்க்கு அவளுக்கு யாராலயும் பிரச்சினை வராது.. ஆனால் அவளால் தான் வேற யாருக்காவது பிரச்சனை வரும்.. நீங்க ஒரு வார்த்தை நேரத்தோடு சொல்லி இருந்தா நான் என்னோட பிஏ லதாவை கூட அனுப்பி இருப்பனே.. “
“ அதையும் நான் பண்ணாம இருப்பேனா?.. நம்ம வீட்டுல வேலை செய்ற கங்காவோட தங்கச்சி காலேஜ் படிக்கிற பொண்ணு தானே நீ தனியா போகாம அவளை அழைச்சிட்டு போ சீதா உனக்கு உதவியா இருப்பானு சொன்னேன்.. எனக்கு யாரும் தேவையில்லை.. நான் தனியா போறதா இருந்தா கல்யாணத்துக்கு போறேன்.. இல்லன்னா போக மாட்டேன்னு சொல்லிட்டாளே பாவி மக.”
என்று மகளை நினைத்து கண்ணீர் வடித்தார் யசோதா..
அவர் அழுவதை தாங்காமல் அத்தையின் அருகே சென்று தோளோடு அணைத்து ஆறுதல் படுத்தினான் வி ஐ பி..
“ சரி சரி விடுங்க அவளுக்கு எதுவும் ஆகாது.. நானும் விசாரிக்கிறேன்.. அங்க இருக்கிற வேறு யாருக்காவது எடுத்து விசாரிச்சீங்களா?.. ஒருவேளை போன் மிஸ் பண்ணிட்டாளோ தெரியல.. சீதா இங்கிருந்து புறப்பட்ட நேரத்துக்கு இந்நேரம் மதுரைக்கு போய் சேர்ந்து இருக்கணும்.. அப்படி என்ன அத்தை இந்த கல்யாணத்துக்கு கட்டாயம் போய் ஆகணும் என்ற அவசியம்..” என்றான்..
“ அதுவா உங்க மாமாவோட தாய் மாமா தான்.. அவர் பேத்திக்கு தான் நாளைக்கு கல்யாணம்.. வாழ்க்கையில ஒரு சில உறவுகள் ரொம்ப முக்கியம்.. அதுல அவர்தான் முதலிடம்.. எனக்கும் என் அண்ணனுக்கும் அதாவது உங்க அப்பாவுக்கும் அவர் ரொம்ப முக்கியமானவர்.. உங்களுக்கு சில விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தம்பி.. வாழ்க்கையில் ரொம்ப கஷ்டமான பக்கம்.. எங்க கஷ்டம் எங்களோடவே போகட்டும்னு விட்டுடோம்.. அதை எங்க பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்கணும்னு நாங்க நினைக்கல.. நானும் உங்க அப்பாவும் ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவங்க.. உங்க மாமா ரொம்ப அந்த ஊரிலேயே பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்.. எப்படியோ ஒரே பள்ளியில் படித்ததால உங்க அப்பாவும் மாமாவும் நண்பர்கள் ஆகிட்டாங்க.. அப்படி நண்பர்கள் ஆகி பழகி உங்க மாமா வீட்டுக்கு வரும்போது தான் எனக்கும் உங்க மாமாவுக்கும் காதல் ஏற்பட்டுச்சு.. உங்க மாமா வீட்டில பணம் வசதி ஜாதி எல்லாம் பாப்பாங்க. அதால என்னோட காதலுக்கு எதிர்ப்பு வந்த போது நானும் உங்க மாமாவும் கல்யாணம் பண்ண முடிவெடுத்தோம்.. அப்போது அவர்தான் எங்களுக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணி எங்க கல்யாணத்தை நடத்தி வைத்து எனக்கும் அண்ணாக்கும் அவர் தான் 30 வருஷத்துக்கு முன்ன அவரால்
முடிந்த அளவு பண உதவி செய்து அங்க போய் ஒரு தொழில் தொடங்கி சந்தோசமா வாழுங்கனு சென்னைக்கு அனுப்பி வைத்தார்.. அப்ப இருந்து அவர் தான் எங்களுக்கு எல்லா உறவுக்கும் ஒரு படி மேல.. அப்படிப்பட்ட அவரோட பேத்தி கல்யாணத்துக்கு உங்க மாமா இல்லாத காரணத்தால நானே முன்ன போய் நிற்கனும்.. ஆனா காரில் இருந்து அவ்வளவு தூரம் பேக் பெயின் காரணமா போக முடியாது.. அதனால சீதாவை கட்டாய படுத்தி உன்னையும் அவங்க அப்பாவோட பேரையும் சொல்லி அனுப்பினேன்.. அங்க அந்த பெரியப்பாக்கும் கால் பண்ணி பேசிட்டேன்.. பக்கத்துல இருக்கிற என்னோட ஒன்னு விட்ட அண்ணன் கணேசனுக்கும் கால் பண்ணி பேசிட்டேன்.. கணேஷ் அண்ணா ஃபோனுக்கு சீதாவோட போட்டோ அனுப்பி தான் இருக்கேன்.. அதைப் பார்த்துட்டு வரலன்னு தான் சொன்னாங்க.. என்றார்..”
யசோதா பேசிய அனைத்தையும் கேட்டிருந்த விஐபி “ உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரிய மாட்டேங்குது அத்தை.. எனக்கு சீதாவை பார்த்தா ஒரு தங்கச்சி அல்லது என்னோட பொண்ணு மாதிரி தான் எனக்கு பீல் ஆகுது.. அவளுக்கு என் மேல் ஒரு விருப்பம்னு தெரிஞ்ச போதே உங்ககிட்ட நான் சொல்லிட்டேன்.. ஆனா இன்னமும் நீங்க என் பெயரை வைத்து தான் சீதாவை எல்லாம் செய்ய வைக்கிறீங்கன்னு என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.. போதிய அளவு உங்களுக்கு டைம் தந்துட்டேன்.. ஆனா நான் சீதாவை விருப்பம் இல்லைன்னு சொன்னதை நீங்க சொல்ல போறது மாதிரி தெரியல.. இந்த கல்யாணம் முடிச்சிட்டு சீதா வரட்டும் நானே முடிவா சீதா கிட்ட என்னோட விருப்பமின்மையை சொல்லிடுறேன்.. அவளுக்கு இப்பவே 21 வயசு ஆயிடுச்சு காலேஜ் பைனல் இயர் படிக்கிறா ஓரளவுக்கு பக்குவபட்ட பொண்ணு தான்.. அவளுக்கு புரியும் படியா எல்லாத்தையும் சொல்லிக்கிறேன்.. நீங்க கவலைப்படாம இருங்க சாப்பிட்டு மாத்திரை எடுத்துக்கோங்க.. நானும் விசாரிச்சுட்டு உங்களுக்கு கால் பண்ணுறேன்.. ” என்று அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான் விஐபி..
ஆனால் அவர்களுக்கு அப்பொழுது தெரியவில்லை விஐபி அவளுடன் பேசும் காலத்தை கடந்து விட்டான் என்றும் அதை பற்றி இனி பேசுவது எப்பொழுதும் நடக்கப்போவதில்லை என்பதும்..
இவ்வளவு நேரம் கடந்தும் மகளிடம் இருந்து இன்னும் அழைப்பு வரவில்லை என்ற கவலையில் கைபேசியை பார்த்துக் கொண்டிருந்த யசோதாவிற்கு விஐபி பேசி விட்டு போன பேச்சின் சிந்தனை சிதறும் படி.கைபேசி அழைத்தது..
கைபேசியை பார்த்த பின் தான் அவருக்கு உயிரே வந்தது போன்றிருந்தது.. அவரது சரவெடி மகள் சீதா அழைத்திருந்தாள்..
அழைபேசியை காதில் வைத்தது தான் தாமதம்.. இங்கு யசோதாவை பேசவிடாமல் அங்கு சீதா கத்தி தீர்த்து விட்டாள்..
யசோதா சீதாவை ஒரு குடும்பப் பாங்கான பெண்ணாக மாற்றுவதற்கு எவ்வளவு முயன்றாலும்..
அது இறுதி வரை மகளிடம் நடக்க வாய்ப்பில்லை என்பது அவருக்கு தெரியாமலேயே போய்விட்டது..
யசோதா மற்றும் வி ஐ பி ஏன் சீதாவே கூட எதிர்பாராத சம்பவத்தை சிறப்பாக செய்து விட்டு அனைவரையும் கலங்கடிக்க போகிறாள்..
அழைப்பிற்காக தொடர்ந்து காத்திருப்போம்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
+1