அவனும் கை நீட்டினான்.. ஆனால் அவள் தாலியை கழட்ட முன் வரவில்லை..
“ நீ செய்த வேலைக்கு இது உனக்கு தண்டனைனு நீ நினைச்சுக்கோ..
தாலி என் கழுத்துல தான் இருக்கும் நீதான் இதை கட்டின ஆனா அதை தவிர வேற நமக்கு இடையில் எதுவும் இல்லை..
கல்யாணம் பண்ணி நான் அங்க இருக்கணும்.. நீ இங்க இருக்கணும்.. ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்து வாழ விடாமல் பண்ணிட்டேன்னு நீ பீல் பண்ணனும்.. உன் தங்கச்சியை பற்றி நீ சொன்னதால நான் ஒன்னு மட்டும் புரிஞ்சுகிட்டேன்.. என் விருப்பம் இல்லாமல் நீ கட்டாயப்படுத்த மாட்ட… நீ கட்டாயப்படுத்தாத வரைக்கும் நமக்கு இடையில் எதுவுமே இல்லை.. ” என்று தாலியை எடுத்து வெளியே போட்டு கொண்டு அவனுக்கு முன்பே அறையை விட்டு வெளியேறிவிட்டாள்..
அவனுக்கு என்ன மனநிலை என்றே தெரியவில்லை.. தாலியை அவள் கழட்டவில்லை..
கோவம் போனதும் ஏற்றுக் கொள்வாளோ அல்லது காலப்போக்கில் இது தான் வாழ்க்கை என புரிந்து நடந்து கொள்வாளா?.. இல்லை அவள் சொன்னது போன்று இருவரது வாழ்க்கையும் வீணாகி விடுமா?.. என எதுவும் அவனால் புரிந்து தற்பொழுது ஒரு முடிவுக்கு வர முடியவில்லை..
அவனும் அந்த அறையை விட்டு வெளியேறியதும் வீட்டுக்கு வெளியே அவர்களது தந்தையை அழைக்கும் சத்தம் கேட்டு வெளியேறினான்..
“ கணேஷ் அண்ணே கணேஷ் அண்ணே.. ” என்று ஒருவர் அழைத்தார்..
யசோதா மீராவுடன் இருந்து பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்த கணேசன் முத்துவும் வெளியே வந்தார்கள்..
வந்தவர் கணேசனை பார்த்து “ அண்ணே பஞ்சாயத்து கூட்டி இருக்காங்க.. பஞ்சாயத்து தலைவர் உங்க குடும்பத்தையும் ஐயாவோட குடும்பத்தையும் வரச் சொன்னார்.. ” என்று அங்கேயும் சென்று கூறிவிட்டு சென்றுவிட்டார்..
துர்காவையும் அவள் கணவனையும் வீட்டில் விட்டுவிட்டு அந்த பெரியவரும் பாட்டியும் அங்கிருந்து சென்றார்கள்..
சீதாவின் காரில் மீரா யசோதா விஐபி சீதா போக. அவன் ஆட்டோவில் யமுனாவும் கணேசனும் முத்துவும் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு சென்றார்கள்..
போகும்போதே அவர்ககுளுக்கு இடையான வித்தியாசம் ஆட்டோவில் அவனும் காரில் அவளும் போவதை வைத்து இதுதான் நீ என வித்தியாசத்தை காட்டி விட்டு சென்றாள்..
அழகிய இளமாலைப் பொழுது..
ஊர் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி இருந்தார்கள்..
பஞ்சாயத்து தலைவரும் இரு குடும்பத்தாரும் வந்ததும் பஞ்சாயத்து ஆரம்பித்தது..
முதலில் கணேசன் தான் பேசினார்.
“ ஐயா என்ன பஞ்சாயத்துன்னு தெரிஞ்சுக்கலாமா யார் எங்க மேல புகார் கொடுத்தது.. “
“ யாரும் புகார் கொடுக்கல கணேஷா இது ஊர் பொது பஞ்சாயத்து.. “
“ பொதுப்பஞ்சாயத்தா என்னன்னே புரியலையே.. ” என்றார் கணேசன்..
“ அது என்னன்னா நம்ம ஊரு பொண்ணு யசோதா பல வருஷம் கழிச்சு பெரியவர் வீட்டு கல்யாணத்துக்கு அதோட பொண்ண அனுப்பி வச்சிருக்கு.. ஊரே கூடி இருந்த கல்யாணத்துல திடீர்னு எதிர்பாராதவிதமா உன் மகன் முத்து அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டான்.. இப்ப பெரியவர் யசோதா குடும்பத்தையும் அழைச்சிருக்கார்..
ஊரே முத்து மாதிரி ஒரு புள்ள இருக்கான்னு பேசுற இடத்துல அவன் திடீர்னு இப்படி ஒரு கல்யாணம் பண்ணினது நாளைக்கு வெட்டியா சுத்துற இளவட்ட பசங்களுக்கு ஒரு தப்பான உதாரணமா ஆயிடக்கூடாது..
அதுதான் இந்த கல்யாணத்துக்கு என்ன காரணம் இந்த கல்யாணம் ரெண்டு குடும்பம் மற்றும் பொண்ணு மாப்பிள்ளைக்கும் புடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்க இந்த பஞ்சாயத்து..
நாளை பின்ன நம்ம ஊரையும் முத்துவையும் அந்த பொண்ணையும் யாரும் தப்பா பேசிட கூடாது இல்ல..” என்று திடீர் பஞ்சாயத்து கூடிய காரணத்தை பஞ்சாயத்து தலைவர் கூறினார்..
அவரை அடுத்து பக்கத்தில் இருந்த மற்றொரு பெரியவர் பேசினார்..
“ ஏம்மா பொண்ணு இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதமா?..” என்றார் அந்த பெரியவர்..
“ அவர் என்கிட்ட கேட்டு நான் சம்மதம் சொன்ன பிறகு தான் ஐயா தாலி கட்டினார்.. ” என்றாள் சீதா..
அவனை ஏன் அவள் விட்டு கொடுக்கவில்லை..
விருப்பம் இல்லாமல் தாலி கட்டிவிட்டான் என உண்மை சொல்லி இருக்கலாமே..
இருவருக்கும் இடையில் காதல் புகுந்து விட்டதோ..
“ அப்போ திடீர்னு இப்படி பெத்தவங்க சம்மதம் இல்லாம ஒரு ஏற்பாடும் பண்ணாம நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு காரணம் என்னன்னு நீங்க சொல்லித்தான் ஆகணும்.. நாளைக்கு வேற ஒருத்தன் இன்னொரு பொண்ண கல்யாணம் கட்டிக்கிட்டு வருவான்..
அப்ப நாங்க கேள்வி கேட்டா முத்து அந்த பொண்ண கட்டினான்.. யாரும் கேட்டீங்களான்னு எந்த காளி பயலுகளும் எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது பாருங்க.. ” என்றார்..
“ நடந்தது என்னன்னு நானே பொதுவா சொல்றேன்.. நேத்து தாத்தா வீட்டு கல்யாணத்துக்கு பொருட்களும் காய்கறி வாங்குறதுக்கு நான் மதுரை வரைக்கும் போயிட்டு வர தாமதம் ஆயிடுச்சு.. வந்து என்னோட ரூம்ல கட்டில்ல நான் படுத்துட்டேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு யாரோ அழுகிற சத்தம் கேட்டுச்சுன்னு நான் திடீர்னு எழும்பி பார்த்தேன்.. இந்த பொண்ணு கட்டிலுக்கு கீழ குனிஞ்சு அழுதுகிட்டே இருந்துச்சு.. பயந்துட்டேன் யார் இந்த பொண்ணு எதுக்காக அழுகுதுன்னு.. இவங்க கிட்ட விவரம் கேட்க இவங்க சொன்னாங்க.. புது இடம் தூக்கம் வராததால் கொஞ்சம் நடக்கலாம்னு வீட்டை விட்டு வெளியே வரும்போது நாய் தூரத்தி வர அவங்க பயந்து இந்த வீட்டுக்குள் வந்துவிட்டதாகவும் திரும்ப இங்கிருந்து வெளிய போக நாய்க்கு பயம் அவங்க கைல செல்போனும் கொண்டு வரல.. அதனால பயத்துல அழுதாங்க.. அப்போ நான் அவங்கள பத்திரமா தாத்தா வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு வீட்டை விட்டு வெளியில் வரும்போது இந்த கவினும் அவன் கூட்டாளி பயலுகளும் எங்க வீட்டை கடந்து வந்தாங்க ஐயா.. அப்ப இந்த பொண்ணு அழுதுட்டு எங்க வீட்டிலிருந்து வெளியே வர்றதை பார்த்துட்டு ஊருக்குள்ள கதையை தவறாக பரப்பிட்டாங்க..
இந்த ஊருக்கு நம்பி வந்த பொண்ணு பழியோட போகக்கூடாதுனு சொல்லி இந்த பொண்ணு கிட்ட கேட்டு நானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. சொல்லி செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் இல்ல.. ஊருக்குள்ள விஷயம் பரவ முன்னாடி கல்யாணம் நடக்கணும்னு நினைச்சேன்.. அதான் உடனே கல்யாணம் பண்ணிட்டேன்.. தாத்தாவும் அத்தையை வரவழைச்சிட்டாங்க.. இதுதான் திடீர் கல்யாணம் நடக்க காரணம்.. ” உண்மையை அப்படியே புதைத்து விட்டு உருட்டாக உருட்டி தள்ளினான் முத்து..
கவினுக்கும் அவன் நண்பர்களுக்கும் பஞ்சாயத்து தலைவரால் திட்டும் வார்னிங்கும் கொடுக்கப்பட்டது.. இவ்வாறு உண்மை தெரியாமல் பேசி பல பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது என்று அவர் எச்சரிக்கை செய்தார்..
“ நீங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் ஒருவரை ஒருவர் முன்ன பின்ன பார்த்ததில்லை.. ஏதோ தவறுதலா நடந்துடுச்சு.. ஆனாலும் நீங்க சம்மதத்தோடு தான் கல்யாணம் பண்ணிட்டீங்க சரி.. உங்க பெத்தவங்களுக்கு சம்மதமானும் கேக்கணும்..” என்றார் தலைவர்..
அதன்பின் யசோதாவிடமும் கணேசனிடமும் கேட்கப்பட்டது அவர்களும் இருவருக்கும் சம்மதம் எனக் கூறியதும்..
அடுத்து பேச வேண்டியதை பஞ்சாயத்து தலைவர் பேசினார்..
“ சரிப்பா முத்து ஊரே அழைத்து பெரியவர் ஏற்பாடு பண்ணின கல்யாணத்துல நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட.. ஆனா நீ கல்யாண விருந்து போடணுமே.. ஊர் மக்கள் எல்லாம் கூடி இருக்காங்க.. நீ ஊர் மக்களை இங்க வச்சு அழைச்சு எப்ப உனக்கு வசதியோ அப்ப கல்யாணத்துக்கு கறி விருந்து போட்டே ஆகணும்.. ” என்றார்..
சோத்துக்கு செத்த பயலா இருக்கான்டா..
அவரை அடுத்து இன்னொரு பெரியவர் பேசினார்..
“ கல்யாணம் பண்றது லேசு பட்ட வேலை இல்ல.. முத்து இனி மறு வீட்டு அழைப்பு இருக்கு.. இனி மெட்ராஸ்ல பொண்ணு வீட்ல விருந்து வைக்கணும்.. எவ்வளவு வேலை இருக்கு.. சீக்கிரம் எல்லாத்தையும் ஆரம்பிங்க.. உங்களைப் பார்த்தால் உண்மையான சீதாராமன் மாதிரி ஜோடி பொருத்தம் அற்புதமா இருக்கு..நல்லா சந்தோசமா வாழுங்க.. ” என்றார்..
“ பொது இடத்தில் வைத்து பேசுவது சரி இல்லைங்க ஐயா.. எப்ப கல்யாண விருந்து வைக்கலாம்னு நான் வீட்டில கலந்து பேசிட்டு எல்லாருக்கும் தனி தனியா அழைக்கிறேன்.. ” என்றான்..
“ ஐயா நான் கொஞ்சம் பேசலாமா என்றாள் சீதா..”
“ சொல்லும்மா.. ” என்றார் தலைவர்..
“ ஊர் கூடி இருக்கும்போது நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன்.. நாங்க போனதுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரியாம யாரும் தவறாக பேசக்கூடாது.. எனக்கு இன்னும் படிப்பு முடியல..
நான் திடீர்னு இங்க கல்யாணத்துக்கு வந்த இடத்துல கல்யாணம் நடந்ததால அங்க போட்டது போட்டபடி அப்படியே இருக்கு.. என்னோட நிலைமை எல்லாம் சொன்னேன்.. அவரும் சம்மதிச்சு இப்ப கல்யாணம் பண்ணிட்டு உங்க படிப்பு முடிஞ்சதுக்கு பிறகு வாழ்கை ஆரம்பிக்கலாம் என்று சொல்லி பேசித்தான் இந்த கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. எனக்கு நாளைக்கு முக்கியமான பரிட்சை இருக்கு.. இப்ப இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க சென்னை கிளம்ப போறோம்.. என்னோட படிப்பு முடிஞ்சதுக்கு பிறகு எல்லாம் முறைப்படி நடக்கும்.. அவரும் சம்மதம் சொல்லிட்டார்.. ” என்றாள்..
கணவனை இழந்த பிறகு மகளே தன் வாழ்க்கை என வாழ்த்த யசோதாவுக்கு அவளின் இந்த திருமணம் யசோதாவுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்ததை மீரா கண்கூடாக பார்த்தார்..
யசோத சந்தோஷத்தை சிதைக்கும் படியாக சீதா உடனே சென்னைக்கு தங்களுடன் வருவதாக கூறியதை கேட்டு சற்று வருத்தமாக இருந்தது அவருக்கு..
அவளின் வாழ்க்கைக்கும் இந்த சூழ்நிலைக்கும் பொருந்துவது கடினம் தான்.. ஆனால் பெண்ணாக பிறந்தவள் வந்த வாழ்க்கையை ஏற்று சந்தோசமாக வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும்..
அதனால் சீதாவிடம் பேசி இங்கே இருக்க வைக்க நினைத்தார்..
“ சீதம்மா உன்னோட கொஞ்சம் பேசணும்.. ” என்றார் மீரா
“ தனியாக பேச என்ன அத்தை இருக்கு.. எதுவா இருந்தாலும் இங்க வச்சு சொல்லுங்க..” என்றாள்..
“ இன்னைக்கு தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு.. மாப்பிள்ளை வீட்டில் இருந்து உடனே வெளிய வரக்கூடாது.. முறைபடி நாள் பார்த்து தான் மறுவீட்டு அழைப்பு வைக்கணும்.. நிறைய சம்பிரதாயம் இருக்கு.. உனக்கு இன்னும் மூணு மாத படிப்பு தானே இருக்கு.. லாஸ்ட் பைனல் எக்ஸாம் நீ எழுதலாம் தானே.. அவசரமா போகணும்.. அதனால நானும் விஜய்யும் இன்னைக்கு பிளைட்ல போகலாம்னு இருந்தோம்.. உங்க அம்மாவும் இங்க இருப்பாங்க.. அங்க செய்ய வேண்டிய ஏற்பாடு எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.. ” என்றார் மீரா..
விருப்பம் இல்லாதவளை பிடித்து வைக்க விரும்பாமல்
“ மீரா மா.. அவங்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம்.. இந்த கல்யாணம் அவங்க படிப்புக்கு தடையாக இருக்கக்கூடாது.. அதை பேசி நான் சம்மதிச்சதுக்கு பிறகு தான் அவங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாங்க.. தாராளமா அவங்க போய் படிக்கட்டும். படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் என்ன பண்ணணுமோ அதை பார்க்கலாம்.. ” என்றான் முத்து..
சம்மந்த பட்ட அவனே அப்படி கூறியதன் பின் வேறு யார் தான் என்ன பண்ணி விட முடியும்..
அதன் பின் பேச வேண்டியது அனைத்தையும் பேசி பஞ்சாயத்து கலைந்தது..
அனைவரும் வீட்டுக்கு வந்ததும் சீதாவிடம் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை..
விஐபியும் யசோதாவும் மீராவும் பிளைட்டில் செல்வதற்காக அவர்கள் முன்பே பதிவு செய்து வைத்திருந்த நேரத்திற்கு மதுரை செல்ல கிளம்பி விட்டார்கள்..
அவர்கள் வாடகை காரில் கிளம்பியதும்..
முத்து அவன் அறைக்கு வந்தான்..
ஒரு சிறிய அளவு உடை பெட்டி மட்டும் கொண்டு வந்தாள் சீதா..
முன்பே முடிவு செய்து வைத்திருந்ததால் அதையும் தயாராகவே வைத்திருந்தாள்..
கணேசன் யமுனா மற்றும் அங்கே சென்று தாத்தா பாட்டி மற்றும் துர்கா என அனைவரிடமும் கூறிவிட்டு மீண்டும் அறைக்குள் வந்தாள்..
அப்போது முத்துவும் பயணத்திற்கான உடையை மாற்றி தயாராக இருந்தான்..
‘ இவனும் எங்கயோ போறதுக்கு ரெடி ஆயிட்டான் போல..’ என்று அவள் நினைத்து விட்டு பெட்டியில் கை வைக்க அவள் கையை தட்டி விட்டு பெட்டியை அவன் எடுத்துக் கொண்டான்..
“கார்ல தானே போறோம்.. என்னத்துக்கு இந்த புடவை இன்னும் கட்டி இருக்க.. போ போய் வலி தெரியாத அளவு இலகுவான உடை போட்டுட்டு வா.. ” என்றான்..
“ அதெல்லாம் எனக்கு தெரியும்.. நீ எங்க போறதுக்கு வார.. போற வழியில் எங்கேயாவது உன்னை இறக்கி விடணுமா என்ன?..” என்றாள் நக்கல் குரலில்..
“ இதுக்கு முன்ன எப்படியோ.. இப்ப நீ என்னோட பொண்டாட்டி.. அவ்வளவு தூரம் இந்த நட்ட நடு ராத்திரில உன்ன தனியா அனுப்பி விட்டு இங்கே இருக்கிற அளவுக்கு நான் மனசாட்சி இல்லாதவன் இல்லை.. நான் கூட்டிட்டு வந்து விடுறேன்னு சொன்ன தைரியத்துல தான் அத்தையும் மீரா மாவும் கிளம்பி போயிட்டாங்க.. ” என்றவன்..
அதன் பின் “ இந்தா பிடி.. ” என அவள் நேற்று கொடுத்த வளையலை அவளிடம் திருப்பிக் கொடுத்தான்..
“ வளையல அடகு வைக்காம ஆட்டோ திருத்திற அளவுக்கு ஐயா கிட்ட காசு இருக்கோ.. இருக்கட்டும் இருக்கட்டும்.. நான் தானே இடிச்சேன்.. என் மேல தானே தவறு.. அதனால இது எனக்கு தேவையில்லை நான் தந்தது தந்ததாகவே இருக்கட்டும்.. கொடுத்ததை திருப்பி வாங்குற பழக்கம் எனக்கு இல்லை.. ” என்றாள் சீதா..
அவள் பேசியதை கேட்டதும் வளையலை எடுத்து மீண்டும் வைக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டு எதுவும் பேசிக்கொள்ளாமல் அவள் புடவை மாற்றி விட்டு வரட்டும் என வெளியேறி சென்று விட்டான்..
அவன் சொன்னது போன்று இலகுவான ஒரு உடையை அணிந்து கொண்டு சீதா வரவும் அவளது காரில் இருவரது நீண்ட பயணமும் ஆரம்பித்தது..
இந்த பயணம் போன்று அவர்களது வாழ்க்கையும் நீளுமா இல்லை இத்துடன் முடிந்து விடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
+1