மண்டப வாயிலில் கரு நீல நிற Audi Car ஒன்று வேகமாக வந்து நின்றது.
காரின் இடப்பக்க கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள் நித்ய யுவனி.
இளம் மகப்பேற்று வைத்தியர். வட்ட முகம்.. மை தீட்டப்பட்ட கெண்டை விழிகள்.. வில் போன்ற புருவங்கள்.. கூர் நாசி.. பஞ்சு போன்ற மென்மையான இதழ்கள் என நீல நிற லெஹேங்காவில், விரித்து விட்ட கூந்தலில் சிறிது அலங்கரித்து,பிறை நெற்றியின் இடது புறமாய் சுருள் சுருளாய் நீண்டு ஆடிக்கொண்டு இருந்த கற்றை முடியை ஒதுக்கியவளாய், மிதமான ஒப்பனையில் வதனத்தில் சிறிய புன்னகையுடன் வானிலிருந்து இறங்கிய அப்சரஸாய் வந்தவள் மீதே அங்கிருந்த அநேகமானோரின் பார்வை பதிந்திருந்தது.
தோழிகள் அனைவரும் ஒரு நிமிடம் அவளின் அழகில் லயித்திருக்க நம் நாயகனோ அவளை இமைக்க மறந்து இரசித்துக் கொண்டிருந்தான்.
இடையில் நடந்த சம்பவங்கள் எதுவுமே அவன் நினைவில் வரவில்லை.
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு காண்கிறான்.
தன்னவளைக் கண்டதில் மெய் மறந்து நின்றவனை ஹரிஷின், “வாவ்… வாட் அ பியுட்டி..?” என்ற குரல் இவ்வுலகுக்கு மீட்டெடுத்தது.
அனைவரது பார்வையும் அவன் மீது திரும்ப, தன்னையே முறைத்துக் கொண்டிருந்தவர்களை கண்டு அவர்களை சுற்றி தன் பார்வையை சுழல விட்ட ஹரிஷ் மனதில்,
“எதுக்கு இப்போ எல்லோரும் நம்மல முறைக்கிறாங்க? அப்படி நாம என்ன தப்பா சொல்லிட்டோம்.. அச்சச்சோ திவி கூட பயங்கரமா முறைக்கிறாளே.. அதுலயும் இந்த சர்வேஷ் கண்ணாலயே பொசுக்கி விட்டுருவான் போலயே… டேய் ஹரி… இன்னெக்கி உனக்கு டைம்மிங் சரி இல்லடா..” என நினைக்க,
நிலைமையை சகஜமாக்கும் பொருட்டு ப்ரேம், “ஜானு..அது நம்ம யுவனி தானே..எத்தனை வருஷம் கழிச்சி பாக்குறோம்.. ரொம்ப மாறிட்டால்ல…” என கூற,
அப்போதே தம் தோழியின் நினைவு திரும்ப அனைவரும் பல வருடம் கழித்து காணும் மகிழ்ச்சியில் அவளை நோக்கி ஓடினர்.
பல வருடங்கள் கழித்து தன் தோழிகளை காணும் நித்ய யுவனிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
யாரோ ஒருவர் செய்த தவறுக்கு இத்தனை வருடமும் தன் குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் விட்டு தூரமாகி இருந்தாள்.
இன்று மீண்டும் அவர்களை காண்பவளின் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டோ?
ஓடி வந்த தோழிகள் அனைவரும் நித்யாவை ஆரத்தழுவிக்கொண்டனர்.
அஞ்சலி, “ஏன்டி உனக்கு இத்தனை வருஷம் கழிச்சி இன்னெக்கி தான் எங்களை பார்க்கனும்னு தோணிச்சா?” என்க,
“நீ சும்மா இரு அஞ்சலி.. மேடம் இப்போ கூட கடமைக்கு தான் வந்திருப்பாங்க.. காலேஜ் டேய்ஸ்ல நாம எல்லோரும் நம்ம மேரேஜ்ல எப்படி எல்லாம் இருக்கலாம்னு ப்ளேன் போட்டோம்… இவளோட பெஸ்டீ நான்.. என்னோட மேரேஜ்க்கு ஜஸ்ட் ஒரு வாரம் முன்னாடியாச்சி வரலாம் தானே.. யாரோ மூனாவது மனுஷி மாதிரி இப்படி ரெண்டு நாள் முன்னாடி வந்து நிற்கிறாள்..” என முகத்தை சுழித்தவாறு ஜனனி பொய்யாக கோபித்துக்கொள்ள,
நித்யாவின் “ஜெனி…” என்ற ஒற்றை அழைப்பில் அனைத்து கோபமும் காற்றில் கரைய,
“நித்து… ஐ மிஸ்ட் யூ அ லாட் டி…” என கண்ணீருடன் அவளை கட்டிக்கொண்டாள் ஜனனி.
“மிஸ்ட் யூ ஆல் டூ டி… சாரி டி ஜெனி.. அப்போ இருந்த சிச்சுவேஷன் எனக்கு வேற வழி தெரியல டி.. உனக்கு புரிஞ்சிருக்கும் தானே..” என பாவமாய் நித்யா வினவ,
திவ்யா,”சரி சரி..பீலிங்ஸ் இந்தியா.. போதும் போதும் உங்க கொஞ்சல் எல்லாம்.. எல்லாத்தையும் மறந்துட்டு இப்போல இருந்து செம்மயா என்ஜோய் பண்ணலாம்..” என கூற புன்னகைத்த நித்யா,
“திவி.. அஞ்சு.. ரியாக்கா.. எப்படி இருக்கீங்க எல்லாரும்.. என் மேல செம்ம காண்டுல இருக்கீங்கன்னு புரியிது.. பட் சாரி எவ்ரியோன்..” என்க,
“எங்களுக்கென்ன சூப்பரா இருக்கோம்.. நம்ம திவ்யா கூட கொமிட் ஆக போறாங்க..” என ப்ரியா கண்ணடிக்க,
திவ்யா, “ஹா..என்ன கலாய்ச்சது போதும்.. வாங்க உள்ள போலாம்..”
தோழிகள் இங்கு நித்யாவை நலம் விசாரிக்க, இவர்களை கவனித்தவாறு ஆண்கள் நால்வரும் இருக்க, இப்படி அமைதியாக இருக்க பிடிக்காத ஹரிஷ்,
“யாரு மச்சி அந்த பொண்ணு.. எல்லாரும் ஒரே கண்ணீரும் கொஞ்சலுமா இருக்காங்க..” என ஆரவ்வைப் பார்த்து கேட்க,
நித்யாவையே பார்த்துக்கொண்டு இருந்த சஜீவ்வின் உதடுகள் தானாய்,“யுவி…” என்றது.
“என்னது யுவியா…” என ஹரிஷ் கேட்ட போதே தான் உலறியது புரிந்த சஜீவ் முழிக்க,
“யுவி இல்லடா ஹரி..யுவனி..ஜானுவோட பெஸ்டீ.. ஷீ இஸ் அ டாக்டர்..” என ப்ரேம் பேச்சை மாற்றினான்.
“ஓஓ..அப்படியா.. ஹ்ம்ம்… டேய் ஆரவ் யாருடா அவன்.. யுவனியோட ஆளா இருக்குமோ…?” என வாயிலைப் பார்த்தவாறு ஹரிஷ் வினவ,
அனைவரும் வாயிலின் பக்கம் பார்வையைப் பதித்தனர்.
அங்கு நித்யா வந்த காரிலிருந்து கோட் சூட் அணிந்து, ஆறடி உயரம், மிடுக்கான தோற்றம், கண்களில் கூலிங் க்ளாஸுடன் பார்ப்பவர் கண்களை ஈர்க்கும் ஆணழகனாய் இறங்கி வந்தான் இளம் நரம்பியல் நிபுணர் சித்தார்த்.
தங்களை நோக்கி வந்து கொண்டிருந்தவனைக் கண்ட அஞ்சலி நித்யாவிடம்,
“ஹேய் நித்தி.. யாரு டி இந்த ஹேன்ட்ஸம் மேன்?” என்க,
“நித்து அது சித்தார்த் அண்ணா தானே..” என ஜனனி வினவும் போதே சித்தார்த் அவர்கள் இருந்த இடத்தை அடைந்திருந்தான்.
“ஹாய் ஜனனி… என்ன இவ்ளோ ஷாக்கா பார்க்குறாய்.. ஞாபகம் இருக்கா என்ன?” என சித்தார்த் கேட்க,
“என்ன சித்தார்த் அண்ணா இப்படி கேக்குறீங்க.. நம்ம காலேஜ்ல நீங்க ரொம்ப ஃபேமஸ் ஆன ஆளாச்சே.. காலேஜ்ல உள்ள மொத்த கேர்ள்ஸும் உங்கள தானே சைட் அடிப்பாங்க..” என ஜனனி கூறியதற்கு சித்தார்த் சிரிக்க,
அஞ்சலியோ மனதில்,”சரியான டிமாண்ட் ஆன பார்ட்டி தான் போல..” என நினைத்துக்கொண்டாள்.
நித்யா, “சித்.. இது திவ்யா.. இது அஞ்சலி & இது ப்ரியா அக்கா.. நான், ஜெனி, திவி, அஞ்சு எல்லாரும் ஒன்னா தான் ஸ்கூல்ல படிச்சோம்.. ரியாக்கா எங்க செட் கூட ஜாய்ன் பண்ணது வேற கதை.. சோ அது அப்புறம் சொல்லுறேன்.. திவி, அஞ்சு, ரியாக்கா இவரு சித்தார்த்.. நியுரொலோஜிஸ்ட்.. என்னோட கொலிக் ஓல்சோ.. என்ட் நானும் ஜெனியும் படிச்ச மெடிகல் காலேஜ்ல தான் இவரும் படிச்சாரு.. எங்க சீனியர்..” என அவர்களுக்குள் அறிமுகப்படுத்தி வைக்க,
சித்தார்த், “என்னை இன்ட்ரு பண்ணது போதும் நிது.. ஆமா ஜனனி எங்க உன்ன கட்டிக்க போறவரு? அந்த அப்பாவி ஜீவன இன்ட்ரு பண்ணி வை மா..” என கூற அனைவரும் நகைத்தனர்.
நித்யாவும், “ஆமா ஜெனி எங்க என்னோட அண்ணா?” என்க,
“அதோ அங்க தான் எல்லோரும் இருக்காங்க.. வாங்க போலாம்..” என அவர்களை அழைத்துக்கொண்டு முன்னேறினாள் ஜனனி
.நித்யாவின் இதயமோ ஒவ்வொரு அடிக்கும் இரு மடங்கு வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
சஜீவ்வின் மனமோ நித்யாவை வேறு ஆணுடன் சேர்த்துக் கண்டதும் பல கோணத்தில் சிந்தித்தது.
அதை மேலும் அதிகரிக்கும் விதமாக, “ப்ரேம்..அந்தப் பையனும் யுவனியும் ரொம்ப க்ளோஸ் போல.. ஒரு வேளை ரெண்டு பேரும் லவ் பண்ணுறாங்களோ..” என ஹரிஷ் கூறக் கேட்டதும் சஜீவ்வின் முகத்தில் வேதனை குடி கொண்டது.
இதை கவனித்த ப்ரேம் இது பற்றி பிறகு அவனுடன் பேச வேண்டும் என நினைத்தவனாய்,
“எதை பத்தியும் தெரியாம பேசாதே ஹரி… அவங்க நம்ம பக்கம் தான் வராங்க.. எதையாச்சும் கண்ட மாதிரி சொல்லி குட்டையை கிளப்பி விட்டுறாதே..” என்றான்.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஜனனி அனைவரையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் வந்து சேர்ந்தாள்.
அந் நிமிடம் சஜீவ் மற்றும் நித்யாவின் பார்வை ஒரே நேர்க் கோட்டில் சந்தித்தது.
❤️❤️❤️❤️❤️
ரெண்டாவது அத்தியாயம் பதிவிட்டுட்டேன்.. கதை பத்தின உங்க கருத்த சொல்லுங்க மக்களே… நன்றி…
– Nuha Maryam –
சித்தார்த் எப்படி நித்தியோட ஜாயின் பண்ணான் 🤔🤔 இந்த ஹரி வேற எதையாவது உளறிட்டு😆😆😆😆 மொத்தமா சஜீவ் கிட்ட வாங்க போறான்.
போக போக புரிஞ்சிரும் சிஸ்.. ஸ்டோரிக்கு அடி தாங்கி ஒன்னு வேணும்ல சிஸ் அதான்.. 🙊🙊🙊
நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்
Thanks ☺️