Loading

நாட்கள் வேகமாகக் கடக்க சஜீவும் நித்யாவும் தத்தம் வேலையில் பிஸியாக இருந்தனர்.

 

ஒரு மாதம் சென்றதும் விளங்கவில்லை.

 

அன்று ஆஃபீஸில் சஜீவ் வேலை பார்த்துக் கொண்டிருக்க யாரோ கதவைத் தட்ட, “யேஸ் கம் இன்…” என்கவும் அங்கு வேலை செய்யும் பணியாளி ஒருவர் கையில் பொக்கேயுடன் நுழைந்தார்.

 

பணியாளி, “சார்.. யூ ஹவ் அ பொக்கே என்ட் அ கார்ட்…” என்று கூறி அதை அவன் மேசையில் வைத்து விட்டு சென்றார்.

 

தனக்கு மிகவும் பிடித்த இளஞ்சிவப்பு நிற பட்டர்கப் பூக்களைக் கொண்ட பொக்கேயும் கூடவே ஒரு க்ரீட்டிங் கார்டும் இருந்தது.

 

முகத்தில் புன்னகையுடன் பொக்கேயைக் கையில் எடுத்தவன் கண்களை மூடி அப் பூக்களின் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தான்.

 

க்ரீட்டிங் கார்டை திறந்து பார்க்க அதில்,

 

” For my dearest Sarva

 

Sending lots of love to you with your favourite flowers

 

Always ❤️ SS ❤️ “

 

என்றிருந்தது.

 

பொதுவாக யாரோ ஒருவர் தனக்கு மிகவும் பிடித்தவற்றை செய்யும் போது அவர் யாரென அறியும் ஆவல் ஏற்படும்.

 

அதே ஆர்வம் சஜீவ்விற்கும் ஏற்பட்டது.

 

சற்று நேரம் அந்த கார்டையே பார்த்திருந்தவன் மனதில்,

 

“யாரு நமக்கு இந்த பொக்கே அனுப்பி இருப்பாங்க… நிச்சயம் ஒரு பொண்ணு தான்… பட் யாரா இருக்கும்… அதுவும் இங்க அனுப்பி இருக்காங்க…” எனக் கேள்வி எழுந்தது.

 

சரியாக வேறு வேலை வர அதைப் பற்றி மறந்தான்.

 

மாலை ஆஃபீஸ் முடிந்து கிளம்ப ஆயத்தமானவனின் பார்வையில் பட்டது மேசை மீதிருந்த பொக்கே.

 

சற்று நேரம் யோசித்தவன் அதையும் எடுத்துக் கொண்டே புறப்பட்டான்.

 

இங்கோ நித்யா யுவனி ஒரு மாதமாக சஜீவ்வுடன் எந்தத் தொடர்பும் இருக்காததால் ஏதோ ஒன்றை இழந்தது போல் உணர்ந்தாள்.

 

கட்டிலில் விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்தவள் மனதில் அவனுடன் உரையாடிய பொழுதுகள் நினைவில் வந்து வாட்டியது.

 

அப்போது தான் அவள் உணர்ந்தாள் தான் அவன் மீது காதல் வயப்பட்டிருக்கிறோம் என்று.

 

கட்டிலிலிருந்து துள்ளி எழுந்தவள் வேகமாக கண்ணாடி முன் சென்று தன்னை மேலிருந்து கீழ் வரை பார்த்தாள்.

 

பின் அவள் கண்ணாடியில் தெரியும் தன் விம்பத்துடனே பேசிக் கொண்டாள்.

 

கண்ணாடியைப் பார்த்து, “நீ சர்வேஷ லவ் பண்ணுறியா நித்து…” என்று விட்டு அவளே ஆம் என தலையசைத்தாள்.

 

பின் இரு கைகளாலும் முகத்தை மறைத்து அழகாக வெட்கப்பட்டாள்.

 

நித்யா, “நீ மட்டும் லவ் பண்ணினா போதுமா… அவனும் உன்ன லவ் பண்ணணுமே…”

 

“ஏன் பண்ண மாட்டான்… ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துலயும் அவன் என் மேல எவ்வளவு கேரிங்கா இருக்கான்… எனக்கு ஒரு சின்ன அடி பட்டா கூட அவன் துடிக்கிறான்… நிச்சயம் சர்வேஷும் என்ன லவ் பண்ணுவான்..”

 

“பட் உனக்கு இன்னும் எய்டீன் கூட ஆகலயே…. “

 

“ஹ்ம்ம்ம்….” என யோசித்தவள்,

 

“அதுக்கென்ன… இந்த காலத்துல பத்து வருஷம் கேப் இருக்குறவங்களே கல்யாணம் பண்ணிக்குறாங்க… எங்க ரெண்டு பேருக்கும் ஜஸ்ட் ஃபைவ் யேர்ஸ் தானே டிஃபரன்ட்… என்ட் ஏஜ் இஸ் ஜஸ்ட் அ நம்பர் இன் லவ்…”

 

“எல்லாம் சரி தான்… பட் நீ நெனக்கிற போல எதுவும் இல்லாம நீ லவ்வ சொல்லி சர்வேஷ் உன்ன பத்தி தப்பா நெனச்சிட்டான்னா…”

 

“இல்ல… அப்படி எதுவும் ஆகாது… என் லவ்வ அவன் எக்சப்ட் பண்ணிப்பான்… அவன் என்னோட சர்வேஷ்… இல்ல யாருமே அவன இதுவரைக்கும் கூப்பிடாதது போல நான் கூப்பிடனும்… பட் என்ன நேம் வெக்கலாம்…” என சிறிது நேரம் யோசித்தவள்,

 

“சஜு…. ஆமா சஜு நல்லா இருக்கு… அவன் இனி இந்த நித்துவோட சஜு… இல்ல இல்ல… அவன் யுவியோட சஜு….” எனக் கூறி புன்னகைத்தாள்.

 

கண்களை மூடி சஜீவ்வையும் தன்னையும் சேர்த்து கற்பனை செய்தவள் பட்டென கண்களைத் திறந்து, 

 

“ஃபர்ஸ்ட் நம்ம லவ்வ சஜு கிட்ட சொல்லி அவனோட ரியாக்ஷன பாக்கலாம்…” எனக் கூறி மொபைலைக் கையில் எடுத்தாள்.

 

அப்போது அவளுக்கு ஜனனி கூறிய அனைத்தும் நினைவில் வர தொப்பென கட்டிலில் அமர்ந்தாள்.

 

“என்னால ஜெனிய ஏமாத்த முடியாது… அவள் அவ்வளவு சொன்னத்துக்கு அப்புறமும் நான் எப்படி சஜு கூட பேசுவேன்… என் நல்லதுக்கு தானே ஜெனி சொன்னாள்…”

 

“நான் சஜுவ லவ் பண்றது தெரிஞ்சாலே ஜெனி ரொம்ப ஹர்ட் ஆகிடுவாள்… இல்ல… என் லவ்வ நான் யாருக்கிட்டயுமே சொல்ல முடியாது… முக்கியமா சஜு கிட்ட…” என சொல்லும் போதே அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.

 

“எனக்குன்னு இருந்தா அது நிச்சயம் என்ன வந்து சேரும்… கடவுள் என்ன கை விட மாட்டாரு…” 

 

என நினைத்துக் கொண்டவள் அழுதழுதே உறக்கத்தைத் தழுவினாள்.

 

அன்று பொக்கே வந்த பின் தொடர்ந்து வந்த நாட்களும் அதே போல் ஒவ்வொரு மெஸேஜ்ஜுடன் வித விதமாக பொக்கே வந்தன.

 

ஒவ்வொரு முறையும் பொக்கே வர சஜீவ்விற்கு அந்தப் பெண்ணை பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது.

 

சொல்லப்போனால் அவன் நித்யா என்ற ஒருத்தியையே மறந்திருந்தான்.

 

தான் நித்ய யுவனியின் பக்கம் அதிகம் ஈர்க்கப்படுவதை அறிந்தவன் தன் எண்ணம் தவறெனவும் ஒரு சிறு பிள்ளையின் மனதைக் கலைக்கக் கூடாது என முடிவெடுத்துத் தான் அவளிடம் இனி பேச‌ முடியாது என கூற அன்று அழைத்தான்.

 

ஆனால் அவளின் அழுகையைக் கேட்டதும் தான் கூற வந்ததை மறந்து அவளை சமாதானப்படுத்த ஆரம்பித்தான்.

 

அவ்வாறிருக்க அன்று ஞாயிற்றுக்கிழமை ஆஃபீஸ் லீவ் என்பதால் சஜீவ் அந்த வாரம் முழுவதும் துவைக்க வேண்டிய துணிகளைத் துவைத்து விட்டு சோஃபாவில் சாய்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான்.

 

அப்போது காலிங்பெல் சத்தம் கேட்க, சென்று யாரென்று பார்க்க வாசலில் யாருமே இருக்கவில்லை.

 

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கதவை அடைக்க சென்றவன் கண்ணில் பட்டது கதவின் கீழே இருந்த பொக்கே.

 

முகத்தில் புன்னகையைத் தவழ விட்டவன் அதனைக் கையில் எடுத்துப் பார்த்தான்.

 

சிவப்பு நிற ரோஜாக்களிடையே சிறிய கார்ட் ஒன்று இருந்தது. அதில்,

 

” I’ll waiting for you at evening 5 pm in Echo Park Lake 

 

❤️ SS ❤️ “

 

என்றிருந்தது.

 

விசில் அடித்தபடி அறைக்குள் நுழைந்தவன் மணியைப் பார்க்க ஐந்து மணிக்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் இருந்தன.

 

அவசரமாக குளியலறைக்குள் புகுந்தவன் குளித்து தயாராகி வர மணி நான்கைத் தொட்டிருந்தது.

 

Echo Park Lake

 

 

ஐந்து மணிக்கு முன்னரே அவ்விடத்தை அடைந்த சஜீவ்விற்கு அப் பெண்ணைப் பார்க்க கிஞ்சித்தும் பொறுமை இல்லை.

 

அங்கிருந்த கல் பெஞ்ச்சில் அமர்ந்து அவளுக்காக காத்திருந்தான்.

 

 

மணி ஐந்தை நெருங்க நெருங்க அவன் இதயக் கூட்டின் வேகம் அதிகரித்தது.

 

அப்போது அவன் பின்னே வந்து நின்று மெதுவாக அவன் தோள் தொட்டான் அவள். சுசித்ரா

 

 

பார்ப்போரை மயக்கும் அழகில் ஸ்லீவ்லஸ் சாரி அணிந்து விரித்து விட்ட கூந்தலை ஒரு‌ பக்கமாக முன்னால் போட்டு புன்னகையுடன் நின்றவளைக் கண்டு ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான் சஜீவ்.

 

சுசித்ரா மீண்டும் அவனைத் தொட்டு, “ஹலோ… சர்வா…” என்றதும்,

 

சஜீவ், “நீ….. சுச்சி தானே…” என அதிர்ச்சியில் வினவ,

 

“ஒரு வழியா கண்டுப் பிடிச்சிட்டீங்களே…” என சுசித்ரா கூற,

 

“அப்போ அந்த பொக்கேஸ் என்ட் க்ரீட்டிங் கார்ட் அனுப்பினது நீயா….” என வினவ,

 

புன்னகைத்தவாறு கீழே குனிந்து கொண்டவள் ஆம் என தலையாட்டினாள்.

 

ஈஷ்வரியின் அண்ணன் ரகுவரனின் மகள் தான் சுசித்ரா.

 

சஜீவ் ஏதோ கேட்க வர அவனைத் தடுத்த சுசித்ரா,

 

“ப்ளீஸ் சர்வா… நீங்க இப்போவே எதுவும் சொல்லிடாதீங்க… முதல்ல நான் சொல்ல வந்தத சொல்லிட்றேன்…” என்க சஜீவ் அமைதியாகக் கேட்டான்.

 

சுசித்ரா, “ஃபர்ஸ்ட் ஒரு பொண்ணே வந்து இப்படி சொல்றாளேன்னு நீங்க என்ன தப்பா நெனச்சிட வேணாம்… சின்ன வயசுல இருந்தே அப்பா சர்வா தான் உன்ன கட்டிக்க போறவரு… சர்வா தான் உனக்காக பொறந்த ராஜ குமாரன்னு சொல்லியே வளத்துட்டாரு… அத்தை வேற என்ன காணுறப்போ எல்லாம் வாய் நெறய மருமகளே மருமகளேன்னு கூப்பிட்டு சின்ன வயசுல இருந்தே நீங்க தான் எனக்கானவன்னு என் மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சி போய்டுச்சி… அப்புறம் மாமாக்கு ட்ரான்சர் ஆகி நீங்க குடும்பத்தோட வேற ஊருக்கு போய்ட்டீங்க… அதுக்கப்புறம் நமக்கு சந்திக்க வாய்ப்பு ரொம்ப கம்மி ஆகிடுச்சி… நானும் ஸ்டடீஸ்க்கு இங்க வந்துட்டேன்… பட் நான் உங்கள மறக்கல… இப்போ என்னோட ஸ்டடீஸும் கம்ப்ளீட் ஆகிடுச்சு… அத்த வேற உங்களுக்கு இங்க தான் வேலை கெடச்சிருக்குறதா சொன்னாங்க… அதான் உங்கள பாத்து என் மனசுல உள்ளதெல்லாம் சொல்லலாம்னு நீங்க போற இடமெல்லாம் உங்கள ஃபளோ பண்ணேன்… ” எனக் கூறி சற்று இடைவெளி விட்டவள்,

 

“எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு சர்வா… ஐ லவ் யூ… நீங்க இப்போவே பதில் சொல்லனும்னு அவசியமில்ல… டைம் எடுங்க… பட் ரொம்ப நாள் வேணாம்… ஆல்ரெடி உங்களுக்காக ரொம்ப காலம் காத்திருந்துட்டேன்…” என முடித்தாள்.

 

தன்னை ஒரு பெண் இவ்வளவு தீவிரமாக காதலிக்கிறாள் என அறிந்த சஜீவ்வுக்கு கர்வமாக இருந்தது.

 

அவளைப் பார்த்து, “அப்போ எனக்கு பிடிச்ச, பிடிக்காத விஷயங்கள பத்தி அம்மா கிட்ட இருந்து டீடைல்ஸ் கலக்ட் பண்ணி இருக்காய்..” என்க, 

 

“ஆமா.. கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களப் பத்தி தெரிஞ்சிக்கலாம்னு தான்…” என சுசித்ரா கூற அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

 

“சரி இப்போ ரொம்ப லேட் ஆகிடுச்சு… நாம நாளைக்கு மீட் பண்ணலாம்… போய் கால் பண்ணு… என்னோட நம்பர்..” என சஜீவ் கூற வர, 

 

“என் கிட்ட இருக்கு… நாளைக்கு மீட் பண்ணலாம்… பாய்..” எனக் கூறி அவனைப் பார்த்து புன்னகைத்தவள் அங்கிருந்து கிளம்பினாள்.

 

அவள் செல்லும் வரை பார்த்த சஜீவ் அவள் மறைந்ததும் அவனும் புறப்பட்டான்.

 

வீட்டுக்கு வந்து சேர்ந்தவனுக்கு சுசித்ராவிடமிருந்து மெசேஜ் வந்தது.

 

மொபைலைப் பார்த்து புன்னகைத்தவன் அவளுக்கு பதில் அனுப்ப என ஆரம்பித்து பின் காலில் அழைத்து இருவரும் வெகுநேரம் பேசினர்.

 

இங்கு நித்ய யுவனியோ சஜீவ்வின் நினைவில் வாடிக் காணப்பட்டாள்.

 

தன் காதலை வெளியே சொல்லவும் முடியாமல் மனதில் பூட்டி வைக்கவும் முடியாமல் தவித்தாள்.

 

❤️❤️❤️❤️❤️

 

– Nuha Maryam –

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்