Loading

அத்தியாயம் -20

மீனா, அப்பாவித்தனமாக கேள்வி கேட்டதைக் கண்டு,
அர்ச்சனா, முன்னால் நினைறிருந்த தன் மாமியாரைப் பார்த்து,

“அத்த, நீங்க தள்ளுங்க கொஞ்சம். நான் பேசுறேன் இவ கிட்ட” என்று கூறினாள்.

ரேணுகாவும், மருமகள் பேச்சிற்கு செவி சாய்த்துத் தள்ளி அமர்ந்தார்.

இருவரின் செய்கைகளையும் பார்த்து மனதில் கலவரமாக இருந்தது மீனாவுக்கு.

‘புதுசா என்ன பிரச்சினை ஆகியிருக்கும்? அந்தத் திமிர் பிடிச்சவனும் அண்ணனும் வேற தனியா வெளியே போனாங்களே! ஏதாவது வில்லங்கம் இழுத்து விட்டுட்டானோ?’

மனதில் திகில் பரவ, தன் அண்ணியைப் பார்த்தாள்.

அர்ச்சனா, தன் நாத்தனாரின் கையைப் பிடித்துக் கொண்டாள். கனிவுடன் பேச ஆரம்பித்தாள்.

“மீனா, நீ ஏம்மா இப்படி பண்றே? நீ செய்றது உனக்கே நியாயமா தோணுதா?”

அவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மீனா.

“நான் எ.. என்ன பண்ணேன் அண்ணி?”

“உன் கல்யாணம் நின்னு போனவுடனே, அடுத்து என்ன பண்றது, எப்படிப் பண்றதுன்னு அத்தையும் மாமாவும் எவ்வளவு கவலைப்பட்டாங்கன்னு உனக்கே நல்லா தெரியும் தானே!

அந்த நேரத்தில கடவுளா பாத்து அனுப்பி வச்ச மாதிரி மாப்பிள்ளை வந்து, உன்னைக் காதலிக்கிறதா சொல்லி கல்யாணம் பண்ணிகிட்டாரு. அப்ப உன் கிட்டேயும் கேக்கத் தானே செஞ்சாரு மாமா?

நீயும் ஒத்துகிட்டப்புறம் தானே மாமா இந்தக் கல்யாணத்த நடத்தினாரு?”

“ஆமா அண்ணி, அதுக்கென்ன இப்ப?”

“மாப்பிள்ளையும் ரொம்ப நல்லவரா இருக்காரு. அது உனக்கும் நல்லா தெரியும். அப்படி இருக்கிறப்ப அவரோட மனச நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறே? ஏன் அவரத் தவிக்க விட்றே?”

“அண்ணி, நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒன்னுமே புரியல. புரியிற மாதிரி பேசுறீங்களா கொஞ்சம்?”

“உ.. உங்களுக்குள்ள எதுவுமே நடக்கலையாமே! நீ அவரைப் பக்கத்தில கூட வரக்கூடாதுன்னு கோபமா சொன்னியாமில்ல?”

தூக்கிவாரிப்போட்டது மீனாவுக்கு. என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று கூட தெரியவில்லை அவளுக்கு.

“இதை அவரா கூட சொல்லலையாம் மீனா. உன் அண்ணன் தான் சும்மா, நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்களா அப்படின்னு கேட்டாராம். அதுக்குத் தான் சபரி இப்படிச் சொன்னாராம்.

அத்தைக்கும் மாமாக்கும் இது தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்கன்னு அவங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு வேற கெஞ்சிக் கேட்டாராம்.

உன் கிட்டேயும் கேக்க வேண்டாம்னு சொன்னாராம். பாரு, நீ இப்படி எல்லாம் இருந்தும் அவர் உன் மேலே எவ்வளவு பிரியம் வச்சுருக்காரு! ஆனா, நீ ஏன் இப்படி பிஹேவ் பண்றேன்னு தான் எனக்குத் தெரியல.

இத்தனைக்கும் அன்னைக்கு நடந்த பிரச்சினையில உன் மனநிலை எப்படி இருக்கும்னு அவருக்கே புரிஞ்சு தான் இருக்கு.

அவரே அப்ப நீ இருந்த மனநிலைக்கு யாரா இருந்தாலும் அப்படித்தான் இருந்திருப்பாங்க, அதனால அவள எதுவும் சொல்லாதீங்கன்னு சொன்னாராம் உங்க அண்ணன் கிட்ட.

நீ அவர் கிட்ட நல்லபடியா கொஞ்சம் பிரியமா பேசினா கூட போதுமே மீனா! அவர் ஒன்னும் உன்னை வற்புறுத்தி எல்லாம் இருக்க மாட்டார். ஆனா நீ அவர் கிட்ட பேசக் கூட செய்யாம முழுசா ஒதுங்கி இருக்கிறே பாரு, அது தான் மனசுக்கு சங்கடமா இருக்கு.

இதை உன் கிட்ட நாங்க கொஞ்சமும் எதிர் பார்க்கவே இல்ல மீனா. ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு”

நடுவில் நிறுத்தக் கூட செய்யாமல் பேசி முடித்தாள் அர்ச்சனா.

முழுவதுமாக மீனா தான் சரியில்லை, அவள் மீது தான் தவறு இருக்கிறது என்பது போல் அவளைக் குற்றவாளியாக்கி விட்டிருக்கிறான் சபரி என்பது நன்கு புரிந்து போயிற்று மீனாவுக்கு.

தன் குடும்பத்தையே தனக்கு எதிராகத் திருப்பி விட்டவனை எப்படி என்ன செய்து அவனுடைய தவறை நிரூபிப்பது என்பதே புரியாமல் இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள் மீனா.

இவ்வளவு நேரம், மருமகள் மகளிடம் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ரேணுகா, இப்போது மகளைத் திரும்பிப் பார்த்தார்.

“இங்கே பாருடி, உனக்கு கிடைச்சு இருக்கிற மாப்பிள்ள, சுத்த பத்தரை மாத்துத் தங்கமா இருக்காரு. ஆனா நீ அதைப் புரிஞ்சுக்காம, அவர் கூட ஒழுங்கா வாழாம, உன் வாழ்க்கையில நீயே மண்ண அள்ளிப் போட்டுகிட்டேன்னு வையி, பாத்துட்டு நான் சும்மா இருக்க மாட்டேன் பாத்துக்கோ.

ஒருவேளை கல்யாணத்து அன்னைக்கு தாலி கட்ற நேரத்தில, கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம ஓடிப்போனானே ஆகாஷ், அவனை மனசில நினைச்சுத் தான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கியாடி நீ? என்ன, ஒரு ரெண்டு மாசம் அவனோட பழகி இருப்பியா நீ? அதுக்குள்ள மறக்க முடியாத அளவுக்கு ஆயிட்டானோ அவன்?

நீ தான் வேணும்னு இருக்கிற நம்ம மாப்பிள்ளைய விட அந்த சுயநலவாதி ஆகாஷ் தான் உனக்கு முக்கியமா போயிட்டானாடி?

அந்த மாதிரி ஒரு எண்ணம் மனசில இருந்ததுன்னா, இப்பவே அதை அழிச்சிட்டு, ஒழுங்கா மாப்பிள்ளையோட சேந்து வாழற வழியப் பாரு! ஆமா சொல்லிட்டேன்!”

கண்டிப்பும் கறாருமாக மகளிடம் கூறி விட்டு, விருட்டேன அங்கிருந்து எழுந்து சென்று விட்டார் ரேணுகா.

“இங்கே பாரு மீனா, நீ நினைச்சு நினைச்சு உருகுற அளவுக்கு ஆகாஷ் கொஞ்சம் கூட வொர்த் கிடையாது மீனா. சபரி தான் உனக்கு நல்ல சாய்ஸ். உன்னை நல்லாவும் பாத்துப்பாரு. உன் மேலே உயிரா இருக்காரு. அவரோட அந்தக் காதலையும் அன்பையும் இக்னோர் பண்ணாதே மீனா ப்ளீஸ்! உன் நல்லதுக்குத் தான் சொல்றேன்”

கூறிவிட்டு அர்ச்சனாவும் இடத்தைக் காலி செய்தாள். ரெஸ்ட் ரூமுக்குள் புகுந்து கொண்டு வெதும்பி வெதும்பி அழுதாள் மீனா. மனம் தாளவே இல்லை அவளுக்கு.

இப்போது அவள் உண்மையைக் கூறினாலும் அதை அவர்கள் நம்ப மாட்டார்கள் என்று தோன்றியது மீனாவுக்கு.

சபரி, இப்படி எல்லாம் செய்வான் என்று தெரியவில்லை அவளுக்கு. பாவம் பெண்ணவள்!

அவளுடைய தந்தை அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவர் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் என்பது அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

இரவு உணவு நேரத்திலும் மகளிடம் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை அவர். கிளம்பும் நேரத்தில் சொல்லிக் கொள்ளும் போது கூட மகளை நிமிர்ந்து கூட பார்க்காமல் தலையை மட்டும் அசைத்தார்.

நொறுங்கிப் போய் விட்டாள் பெண்ணவள்.

போகும் வழியில் கண் கலங்க அமர்ந்து இருந்தவளை இளக்காரமாகப் பார்த்தான் சபரி.

“வாவ்.. வாவ்.. வாவ் ! வாட் அ பெர்ஃபார்மன்ஸ்! நான் என்ன நினைச்சிட்டு உங்க வீட்டுக்கு வந்தேனோ அதைக் கச்சிதமா செஞ்சு முடிச்சுட்டேன். சபரி இப்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி டார்லிங்!”

கூறியவாறு அவளுடைய கன்னத்தைக் கிள்ளினான். கோபமாக அவனுடைய கையைத் தட்டி விட்டாள் மீனா.

“ச்சே! இப்படி எல்லாம் கூட மனுஷன் இருக்க முடியுமா? உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? ஏன் இப்படி என்னை சித்திரவதை பண்றீங்க?”

தலையைப் பிடித்துக் கொண்டு அழுதாள் மீனா. அவனோ சத்தமாகச் சிரித்தான் சந்தோஷமாக.

மீனாவின் அழுகையைக் கண்டு வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டு இருந்தான் சபரி.

“இத.. இத.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் டார்லிங்! இப்ப தான் எனக்கு நிம்மதியா சந்தோஓஓஓஷமா இருக்கு!”

மீனாவின் அழுகையை இன்னும் தூண்டும் விதமாகப் பேசினான்.

மீனாவுக்குக் கோபத்தில் முகம் சிவந்தது. எரிப்பது போல் முறைத்தாள் அவனை.

“ச்ச்ச்சசச்ச்சோ! கோவத்தில முகமெல்லாம் எப்படி சிவந்து போச்சு பாரு செல்லத்துக்கு!” சீண்டினான் அவளை.

“பாத்துட்டே இருங்க, இதுக்கு எல்லாம் நீங்க மொத்தமா சேத்து வச்சு அனுபவிக்கத் தான் போறீங்க. நானும் அதை பாக்கத் தான் போறேன். எல்லாத்தையும் கடவுள்னு ஒருத்தர் மேலே இருந்து பாத்துட்டுத் தான் இருக்காரு.‌ நீங்க செய்ங்க, இன்னும் நல்லா செய்ங்க!”

அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் உஷ்ணத்துடன் வார்த்தைகளைக் கொட்டினாள் மீனா.

“ஓ! சாபம் விட்றியா டார்லிங்? பாக்கலாமே உன் சாபம் பலிக்குதான்னு”

அவனுடைய அந்த எகத்தாளச் சிரிப்புத் தொடர்ந்தது. அதைக் காது கொடுத்து கேட்க முடியாமல் கைகளால் காதுகளை மூடிக் கொண்டாள் மீனா.

அவர்கள் வீடு போய்ச் சேரும் போது, மாலதியும் சீனிவாசனும் முன் அறையில் அமர்ந்து சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

“சரிங்க, நாளைக்கே லிஸ்ட் போட்றேன்”

பேசிக்கொண்டே திரும்பிய விமலா, மகனும் மருமகளும் உள்ளே நுழைவதைக் கண்டு இன்னும் உற்சாகமாகி விட்டார்.

“வாடா சபரி, வாம்மா மீனா, உங்களுக்காகத் தான் காத்துட்டு இருந்தோம்”

“என்னம்மா, ரெண்டு பேரும் ஜோடியா உக்காந்து சந்தோஷமா பேசிட்டு இருக்கீங்க? நாங்க வீட்டில இல்லாதது ஒரே லவ்ஸ் தான் போல?”

தன் தாய் தந்தையை கிண்டல் அடித்தான் சபரி. அவனுடைய அந்தக் நையாண்டிப் பேச்சைக் கேட்டுச் சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தாள் மீனா.

கொஞ்ச நேரம் முன்னாடி வார்த்தையில விஷத்தைக் கக்கினவன் இவன் தானா என்பது போல் இருந்தான் சபரி. ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.

‘இவன் என்ன நொடிக்கு ஒரு வேஷத்த மாத்திட்டு இருக்கானே!’

யோசிப்புடன் நடப்பதைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

தந்தையின் அருகே அமர்ந்து கொண்டான் சபரி. மகனுடைய பேச்சுக்கு அவனை முறைத்துப் பார்த்தார் சீனிவாசன். அதில் கோபமில்லை. இலேசான சிரிப்பு தான் கலந்து இருந்தது.

சிரித்துக் கொண்டே மகனருகே வந்தார் மாலதி. தலையில் செல்லமாகத் தட்டினார்.

“குறும்பப் பாரு.. அப்பா அம்மா கிட்ட பேசுற பேச்சாடா இது?”

“நீங்க ரெண்டு பேரும் எனக்கு அப்பா அம்மா மட்டும் தானா.. ஃபிரண்ட்சும் தானேம்மா?”

“சரி சரி, எல்லாம் நல்ல விஷயம் தான் பேசிட்டு இருந்தோம். உங்க ரெண்டு பேருக்கும் ரிசப்ஷன் வைக்குறதுக்கு தேதி குறிச்சாச்சுடா சபரி. அடுத்த ஞாயித்துக்கிழமை அன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு அய்யர் குறிச்சுக் குடுத்து இருக்காரு. அது பத்தி தான் பேசிட்டு இருந்தோம்”

“ஓ!”

“என்னடா இது? ஒரே வார்த்தையில முடிச்சிட்டே! சொன்னவுடனே சந்தோஷத்தில துள்ளிக் குதிப்பேன்னுல்லே நினைச்சேன்! நீ என்னன்னா, எனக்கென்னன்னு பதில் சொல்றே?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லேம்மா. நாங்க மீனா வீட்டுக்குப் போனதே ரெண்டே நாள் தான். அந்த ரெண்டு நாள்ல தேதி கூட பாத்து முடிவு பண்ணிட்டீங்களேன்னு நினைச்சேன். அதுவும் அடுத்த வாரம்னு வேற சொன்னீங்களா, ஆச்சரியமா ஆயிடுச்சு எனக்கு! ரொம்ப ஸ்பீடா இருக்கீங்களே! ஏம்மா அவ்வளவு அவசரமா என்ன?”

“ஆமாடா அவசரம் தான். அப்படியே தான் வச்சுக்கோயேன். இப்ப என்ன?” பொய்யான ஒரு முறைப்புடன் கேட்டார் மாலதி.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. ஒருவழியா மீனாவை அழ வச்சுட்டப்பா … சூப்பர் சபரி … மீனா அப்படி என்ன பண்ணியிருப்பா இவ்வளவு பழிவாங்குற அளவு

  2. மீனாவின் குடும்பத்தை அவளுக்கு எதிராக திருப்பியாயிற்று.

    மீனா கவலைப்பட்டுக் கொண்டேயிராமல் எதனால் அவன் இப்படி நடந்துகொள்கின்றான் என கண்டறிய முற்படலாம்.

    அம்மா, அப்பாவிடம் பாசமா நடந்து கொள்பவன், சுற்றி இருப்போரையும் நேசிப்பவன் மீனாவை மட்டும் பழி வாங்க எண்ணி வார்த்தைகளில் வதைகின்றான்.

  3. இவனுடைய டார்ச்சர் தாங்க முடியலை