Loading

மகாலட்சுமியும் அதியனும் சண்டை போட்டுக் கொண்டிருந்த அதே நேரம், நந்தவனத்தில் வேறு ஒன்று அரங்கேறிக் கொண்டிருந்தது.

மாலை நேரம், வெட்டிங் ப்ளானரிடம் கடைசி பணத்தை செட்டில் செய்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த யது, வனிஷா திருதிருவென விழித்துக் கொண்டு ஓரமாக நிற்பதைப் பார்த்து விட்டு புருவம் சுருக்கினான்.

அவள் பக்கத்தில், கிருபாவும் சீதாவும் நின்று எதோ பேசிக் கொண்டிருந்தனர்.

செல்வகுமாரும் கிருபாவின் கணவனும் இரண்டு பைகளோடு யதுவின் அறைபக்கம் நடக்க, பையிலிருந்து வெளியே வந்த பூ மணத்தில், யதுவின் தலையில் பல்ப் எரிந்தது. அர்த்தம் புரிந்ததும் உடனே வனிஷாவை தான் பார்த்தான்.

அவள் அப்படி நிற்பதற்கான அர்த்தம் விளங்கி விட, சிரிப்பு வந்து விட்டது. அடக்கிக் கொண்டு அவளையே பார்க்க, அவள் ஒரு நொடி அவனை பார்த்து விட்டு உடனே பார்வையை திருப்பிக் கொண்டாள்.

திருமணத்தை பற்றி எந்த கூச்சமும் இல்லாமல் நேரடியாக பேசிய தைரியசாலி வனிஷாவை, இந்த நிலையில் பார்க்கவே யதுநந்தனுக்கு சீரிப்பு பீறிட்டது.

திருதிருவென விழித்தபடி அவனை கடந்து வெளியேறிய வனிஷா, அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவளோடு கிருபாவும் சீதாவும் சென்று விட்டனர்.

யதுநந்தனுக்கு அவளது போக்கில் மேலும் சிரிப்பு வர, அதை அடக்கிக் கொண்டவன் தன் அறையை பார்த்தான். அதற்குள் தற்போது தனக்கே அனுமதி இல்லை என்று புரிய, கைபேசியை தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்று விட்டான்.

மாலை நேரம் தான். ஆனால் காற்று வெப்பத்தோடு வீசிக் கொண்டிருந்தது. வெயில் இல்லாத இடமாக பார்த்து நின்றவன், பக்கத்து வீட்டு மாடியை பார்த்தான். எப்போதும் போல் அது காலியாக தான் இருந்தது.

அந்த வீட்டு மாடியில் அவன் அதிகம் பார்ப்பது மலர்வழியை மட்டும் தான். அவர் தான் எதையும் காயப்போடுவதும், எடுப்பதுமாக இருப்பார். பாட்டியை கூட எப்போவாவது பார்க்கலாம். வனிஷா வரவே மாட்டாள்.

இத்தனை நாள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன், இன்று ஏன் அவள் வரவில்லை என்பது போல் நோட்டமிட்டான். உடனே தலையிலும் தட்டிக் கொண்டான்.

‘ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி தான் உன்னை க்ராஸ் பண்ணி போனா. அதுக்குள்ள பல வருசம் பார்க்காத மாதிரி தேடுற? வர வர லூசாகிட்ட யது’ என்று தன்னை தானே திட்டிக் கொண்டான்.

ஆனாலும் பார்வை நொடிக்கு ஒரு முறை அந்த வீட்டின் வாசலை தொட்டு மீண்டது. கைபேசியை எடுத்து பொழுதை போக்கியவன், பிறகு வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான். அவனது அத்தனை ஸ்டோரின் பொறுப்பாளர்களை அழைத்து பேச ஆரம்பிக்க, நேரம் பறந்தது.

அங்கு வனிஷாவிற்கு இரவு உணவு பாட்டி வீட்டிலேயே முடிந்து விட்டது. அடுத்ததாக அலங்காரம் செய்ய அமர வைத்தனர்.

கிருபாவும் சீதாவும் சேலையை வனிஷாவிற்கு சேலை கட்டி முடித்ததும், “இதுக்கு மேல மேக் அப் எல்லாம் எனக்கு தெரியாது. நீயே போட்டுக்கோ” என்று கூறினாள் கிருபா.

“வேணாம். இதுவே நல்லா தான் இருக்கு” என்றவளின் பயந்த முகத்தை பார்த்த கிருபா, அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

“அண்ணி” என்று வனிஷா சினுங்க, “ஓகே ஓகே சிரிக்கல” கட்டுப்படுத்தினாள்.

“கிருபா.. பாவம் அவ. சிரிக்காத. இவள நீ பார்த்துக்கோ. சமீ அழ ஆரம்பிச்சுட்டா. நான் போறேன்” என்று சீதா சென்று விட்டாள்.

“நேத்து எவ்வளவு தைரியமா பேசுன. கல்யாணத்தயே எவ்வளவு போல்டா பேசி ஓகே பண்ண. இன்னைக்கு இதுக்கு போய் இப்படி பயந்துட்டு இருக்க?” என்று கிருபா வனிஷாவின் தலையை கலைத்தபடி பேசினாள்.

“அது வேற…” என்று வேகமாக ஆரம்பித்து முடிக்காமல் நிறுத்தினாள் வனிஷா.

“ம்ம்.. புரியுது. நானும் பயந்தேன் தான். ஆனா எப்ப இருந்தாலும் இது எல்லாம் நடக்க தான செய்யும்? நேத்து அம்மா சொல்லும் போது, வேணாம்னு சொல்லிட்டேன். கொஞ்சமாச்சும் நீ அவன் கூட பழகனும்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கே நாள் நல்லா இருக்குனு ஜோசியர் கிட்ட கேட்டுட்டு வந்துட்டாங்க. தள்ளி போட்டுட்டே போக முடியாதுல? இப்ப உன் மனசுல இந்த கல்யாணம் பதிஞ்சுடுச்சு தான? இயல்பா அக்சப்ட் பண்ணிடு.”

பேசியபடி அவனது முடியை நன்றாக வாரி பின்னல் போட்டாள். வெட்டி விடப்பட்ட முடியை அடக்கி பின்னுவதே அவளுக்கு பெரும்பாடாக தான் இருந்தது. பாட்டி பூவை கொடுத்து விட, அதை வைத்து விட்டு, “வா போகலாம்” என்று கூறி அழைத்துச் சென்றாள்.

அங்கு வந்ததும் சாமி கும்பிட சொல்லி விட்டு, அவளை அறைக்குள் அனுப்பி விட்டு தம்பியை தேடினாள் கிருபா. அவன் மாடியில் இருப்பது தெரிய, குரல் கொடுத்தாள்.

“இல்ல இல்ல. வேணாம்னா வேணாம் தான். இருக்க அரிசியே ஸ்டாக் க்ளியராகல. அவங்க கிட்ட சொல்லிடுங்க. நமக்கு வேணாம்னு. க்வாலிட்டி இல்லாதத வாங்கி நாம என்ன செய்ய?”

பேசிக் கொண்டே வந்த யதுவை இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்தாள். அவளது முறைப்பில் கேள்வியாக புருவம் உயர்த்தியவன், பேச்சை முடித்துக் கொண்டான்.

“அரிசி மூட்டை பருப்பு மூட்டைய பத்தி இப்ப தான் பேசனுமா? எத்தனை தடவ கூப்பிடுறேன்?” என்று கிருபா அதட்ட, அவளை ஒரு நொடி புரியாமல் பார்த்தவன் சட்டென புரிந்து கொண்டான்.

“பின்ன இதுக்கெல்லாம் நாள் நட்சத்திரமா பார்க்க முடியும்?” என்று வேண்டுமென்றே புரியாதது போல் கேட்க, “உன்னை.. போடா.. அத ஆஃப் பண்ணிட்டு ரூமுக்கு போ” என்று கூறினாள்.

“இன்னும் நேரமிருக்கே தூங்க. இப்ப தான் சாப்பிட்டேன்”

யது வீம்புக்கு அசையாமல் நிற்க, “ம்மா.. கை கால் எல்லாம் வலி. வாங்க தூங்குவோம்” என்று தம்பியை சமாளிக்க தெரியாமல், சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த வசந்தாவே கிருபா தேடிப்போய் விட, யது சிரிப்போடு தன் அறைப்பக்கம் சென்றான்.

அங்கு வனிஷா சுவற்றில் சாய்ந்து கண் மூடி நின்று இருந்தாள். அவளது முகம் பதட்டத்தில் இருந்தது. அதை குறைக்க போராடியபடி தான் அப்படி நின்றிருந்தாள்.

உள்ளே வந்து யது கதவைத் தாளிட, கண்ணைத் திறந்து பார்த்தாள். ஆனால் அசையவில்லை.

அவனும் கைபேசியை அணைத்து வைத்து விட்டு, மேசையில் எதையோ தேடினான். பிறகு அறை முழுக்க தேட ஆரம்பித்தான். முதலில் எதையோ தேடுகிறான் என்று நின்றுவிட்டவள், அவன் தேடிக் கொண்டே இருக்கவும் புருவம் சுருக்கினாள்.

“என்ன தேடுறீங்க?”

“ம்ம்?”

“என்ன?”

“இங்க வாயேன்” என்று அழைக்க, அவனருகே சென்று நின்றாள்.

“என்ன தேடுறீங்க?”

“நீ எதாவது மறந்துட்டியா நிஷா?”

“எது?”

“நல்லா யோசிச்சு பாரு?”

“எத கேட்குறீங்க?”

“பால் சொம்புடா… கொண்டு வரலயா நீ?” என்று கேட்டான்.

“ஆன்?” என்று அவள் புரியாமல் பார்த்து விட்டு, விசயம் புரியவும் உதட்டில் மெல்லிய புன்னகை வந்தது.

“ஃபர்ஸ்ட் நைட்னா பால் சொம்பு இருக்கனும்ல? எங்க? கொண்டு வரலயா நீ? மறந்துட்டியா?” என்று வரிசையாக கேள்வியை அடுக்கினான்.

“அதெல்லாம் கொடுத்து விடலயே” என்று கையை விரித்தாள்.

“அது எப்படி கொடுக்காம விடலாம்? சரி நீ போய் எடுத்துட்டு வா போ”

“வாட்?”

“போ.. போய் பால் சூடு பண்ணி எடுத்துட்டு வா” என்று கூற, அவளுக்கு இவன் தெரிந்து பேசுகிறானா என்று புரியவில்லை.

“இப்ப வெளிய போறதா? நோ”

“ஏன்? பால் சொம்பு இல்லாம எப்படி ஃபர்ஸ்ட் நைட்?”

“ஆன்?”

“அது இருந்தா தான் அத உருட்டி விட முடியும். உன் பூவ பிச்சு போட்டுரலாம். பொட்ட அழிச்சுடலாம். நெக்ஸ்ட் சொம்ப உருட்டி விடனும். சோ சொம்பு மஸ்ட்”

“ப்ளடி நையண்டி கிட்.” என்று முணுமுணுத்தவள், “அதெல்லாம் எடுத்துட்டு வர முடியாது” என்று பல்லைக் கடித்தாள்.

“ஏன் ஏன்? எனக்கு பால் வேணும்”

“அய்யோ.. இம்சை பண்ணுறானே” என்று தலையில் அடித்துக் கொண்டு அவள் முணுமுணுக்க “சரி நீ போகலனா என்ன நான் போறேன்” என்று வேகமாக வாசலை நோக்கி நடந்தான்.

“ஏய்.. இருங்க.. இப்ப வெளிய போகக்கூடாது” என்று அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள்.

“நீயும் போகல. என்னையும் தடுத்தா எப்படி? உனக்கு புரியல நிஷா. பால் நாம ரெண்டு பேரும் குடிக்கனும். அப்புறம் தான் தூக்கமே வரும்”

“உங்களுக்கு இப்ப பால் தான வேணும்?” என்று கேட்டவள், மேசைக்குள் வைத்திருந்த இனிப்பு பெட்டி ஒன்றை வெளியே எடுத்தாள்.

“பால் இல்ல. அதுக்கு பதிலா இதுல பால்கோவா இருக்கு. சாப்பிட்டுட்டு இந்த பெட்டிய உருட்டி விட்டு தூங்குங்க”

அவன் கையைப்பிடித்து அதில் வெடுக்கென வைத்து விட்டு, அவனை முறைத்துப்பார்த்தாள்.

“அப்போ பூவ..” என்று யது அப்போதும் விடாமல் ஆரம்பித்தான்.

“காலையில நான் எந்திரிக்கும் போது அதுவே பிஞ்சு போயிருக்கும்” என்றவளின் பற்கள் நொறுங்கத்தயாரானது.

“ப்…”

“பொட்டும் அழிஞ்சுருக்கும். அவ்வளவு தான?” என்று கோபமாக கேட்டாள்.

“அப்ப இதெல்லாம் நான் பண்ண தேவையில்லயா? ஓகே” என்று சந்தோசமாக தோளைக்குலுக்கியவன், பெட்டியை மேசையில் வைத்து திறந்தான்.

அதில் பட்டர் பேப்பரில் அழகாக இருந்தது பால்கோவா. எடுப்பதற்கு வசதியாக சதுரமாக வெட்டி வைக்கப்பட்டு இருந்தது.

“அட இது எனக்கு ரொம்ப பிடிக்குமே” என்றவன் ஒன்றை கையில் எடுத்தான்.

வனிஷா அவனை நன்றாக முறைத்துப்பார்க்க, “உனக்கு பங்கு கொடுக்கனும்” என்று நீட்டினான்.

“ஒன்னும் வேணாம்”

“சம்பிரதாயம்”

வாய்க்குள் அவனை திட்டி விட்டு வாயை திறக்க, அவளுக்கு ஊட்டி விட்டான்.

கடித்ததும் எடுத்து விடுவான் என்று நம்பி வாயைத்திறந்து வாங்க, பாதி பால்கோவா உள்ளே செல்லும் போதே, மீதியை யது அவன் வாய்க்கு கொண்டு வந்தான்.

பட்டும் படாமல் உரசிய இதழில் வனிஷா அதிர்ந்து நின்றாள். வாயிலிருந்ததை மென்றபடி புருவம் உயர்த்தினான். வனிஷாவின் தொண்டைக்குள் இனிப்பு கரைந்து இறங்கியது.

“நாட் பேட். உனக்கு பிடிச்சுருக்கா?” என்று கேட்க, அவள் அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்.

இவ்வளவு நேரமிருந்த சூழ்நிலை மாறி விட்டதே.

“உனக்கு பிடிக்கலயா? அப்படியே நிக்கிற?”

அவளது இடையை வளைத்தவன், அவளிடம் கரையாமல் மிச்சமிருந்ததையும் ருசி பார்த்து நிமிர்ந்தான்.

“நல்லா தான் இருக்கு.” என்று கூறி வைக்க, வனிஷாவின் இதயம் படுவேகமாக துடிக்க ஆரம்பித்து விட்டது.

அவளது படபடடப்பை உணர்ந்தவன், “இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு உன்னை நார்மல் ஆக்குனா.. மறுபடியும் இப்படி டென்சன் ஆகுற? உன்னை நார்மல் பண்ணிட்டே இருந்தா விடிஞ்சுரும் போலயே . நாம நேரடியா ஆக்ஷன்ல இறங்கிடலாமா?” என்று கேட்டவனை பார்த்து விழி விரித்தவள், சட்டென அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டான்.

அவள் காதோரம் குனிந்தவன், “என்ன பேரு யோசிச்ச?” என்று கேட்டான்.

வனிஷா பதில் சொல்லாமல் இன்னும் அவனுக்குள் அதிகமாய் புதைய, “சொல்லு நிஷா” என்று ரகசியமாய் கேட்டு காதில் முத்தமிட்டான்.

ஒரு நொடி சிலிர்த்த அவளது உடலை அவனும் உணர்ந்து கொண்டான்.

அவள் முகத்தை நிமிர்த்தி, “சொல்லு.. என்ன யோசிச்ச?” என்று கேட்டான்.

அவனது வார்த்தைகளுக்கு அசைந்த இதழ்கள் அவளது இதழை பட்டும் படாமல் உரசிக் கொண்டிருக்க, வார்த்தை எங்கிருந்து வரும்?

திணறி விலகியவள், “அம்.. அம்மாவும் பாட்டியும் சொன்னாங்க” என்று திணறினாள்.

“என்னனு?”

“அத்தை பையன அத்… அத்தான்னு கூப்பிடலாம்னு..”

தயக்கமாக சொல்லி விட்டு அவன் முகத்தை பார்க்க, அவன் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் பிடிக்கலயா? பாட்டி தான் சொன்னாங்க.. அம்மா மாமானு கூப்பிடுனு சொல்லுவாங்க. பாட்டி தான் அத்தான்னு சொல்ல சொன்னாங்க. அத நினைச்சப்போ எனக்கே கொஞ்சம்…”

“எப்போ?”

“ஆன்?”

“எப்போ சொன்னாங்க ரெண்டு பேரும்?”

“ரொம்ப வருசத்துக்கு முன்னாடி… நாம அப்ப பேசிக்கலயா.. அதான் நான் கூப்பிடல” என்று இழுத்தாள்.

யது இன்னும் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க, “இல்ல.. உங்களுக்குப் பிடிக்கலனா வேணாம்” என்று வேகமாக பேசினாள்.

“உன்னை நான் என்ன நினைச்சேன்? நீ என்ன இப்படி இருக்க?”

“எப்படி?”

குழப்பத்தோடு பார்த்தாள்.

“நீ ஒரு அல்ட்ரா மார்டன் கேர்ள். செல்லமா பேரு வைக்க சொன்னா.. டார்லிங் டியர் ஹனி பேபினு சொல்லுவனு பார்த்தா… அத்தானா?”

அளவுக்கதிகமாய் அவன் அதிர்ச்சியை காட்ட, “ஏன் அல்ட்ரா மார்டன்னா இங்கிலீஷ்ல தான் பேர் வைக்கனுமா? தமிழ்ல அழகா அத்தான்.. மாமா.. என்னங்க.. ஏங்க..” என்று அடுக்கிக் கொண்டிருந்தாள்.

“பிராணநாதாவ விட்டுட்ட” என்று அவன் எடுத்துக் கொடுக்க, இப்போது முறைத்துப் பார்த்தாள்.

“போங்க ஒரு பேரும் வேணாம். நான் எதுவும் சொல்லல” என்று முகத்தை திருப்ப, இருவிரல்களில் அவளது முகத்தை பற்றித் திருப்பினான்.

“கோபமெல்லாம் வருது? அப்ப நார்மலா தான் இருக்க?” என்றபடி அவளிதழில் ஆழமாக இதழ் பதித்தான். இம்முறை அவளும் அதிர்ச்சியை உடனே உதறி விட்டு, அவனோடு இழைந்தாள்.

நீண்ட முத்தத்தில் அவளுக்கு மூச்சு வாங்க, அவன் அடுத்தடுத்து முன்னேறினான். கழுத்தில் அழுந்த பதிந்து காயப்படுத்திய மீசையில் வனிஷா உதடுகடித்தாள்.

தோளுக்கு இறங்க தடையாக இருந்த நகைகள் ஒவ்வொன்றும் கழண்டு விழ, அதை தரையில் விழாமல் காப்பாற்றுவதே அவளது வேலையானது. விடுதலை நகைகளுக்கடுத்து அடை பக்கம் நழுவ, சட்டென தோன்றிய படபடப்பில் அவன் கையைப் பற்றி நிறுத்தினாள்.

“இது.. இத பத்த..ரமா. வச்சுட்டு வரேன்” என்று வேகமாக திரும்ப, சேலை அவன் கையில் இருந்தது.

இழுத்து பிடித்தவன், பின்னாலிருந்து அவளை அணைத்து கையிலிருந்த நகைகளை வாங்கி மேசைமேல் போட்டு விட்டான்.

“உனக்கு பட்டு சேலை பிடிக்காதுல?” என்று தாபத்தோடு வெளி வந்த குரலோடு சேலைக்கு அவன் விடுதலை அளிக்க, “அத்தான் நோ” என்று வெட்கம் தாங்காமல் அவனை பாய்ந்து அணைத்திருந்தாள்.

“நிஷா..” என்றவனும் அவளை அள்ளிக் கொண்டு மெத்தையை அடைந்திருந்தான்.

அதன் பிறகு அவளது சினுக்கங்களும், “நோ” வும் வரிசையாக அவன் காதை நிறைத்தன.

அவள் பதட்டமடையும் போது, எதையாவது செய்து அவளை சிரிக்க வைத்து விட்டே முன்னேறினான். அந்த முன்னேற்றம் இருவரிமும் சமமாக தோன்றி ஒன்றாய் அடுத்த படியை அடைந்தனர்.

“அத்தான் சொல்லு” என்று கேட்டால், அவள் சொல்லாமல் திணறினாள்.

திணறல்களையும் அவன் ஸ்வீகரிக்க மொத்தமாய் அவனுக்குள் கரைய ஆரம்பித்திருந்தாள்.

“பால்கோவா வேணுமா?” என்று கேட்டவன், அவளை சாப்பிடவும் விடவில்லை.

பதறி தடுக்கும் போதும் அமைதியாக புன்னகைத்தோ, கள்ள சிரிப்பிலோ அவளை முழுமையாக பெற்று விட்டே அமைதியடைந்தான். வனிஷா தடுத்துக்களைத்து, கடைசியாக வெட்கத்தை தான் விரட்டியடிக்க வேண்டியிருந்தது.

மனம் ஒன்ற, அவர்களது வாழ்வின் அழகான நந்தவனத்திற்குள் கைகோர்த்து நுழைந்திருந்தனர் இருவரும்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
49
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்