Loading

 

நிம்மதியாய் படுத்துக் கிடந்தவனை பார்த்து, வெறி வந்தது அவளுக்கு.

 

“ஏய்.. ஹேய்.. உன்னை தான்” என்று அழைக்க, அவன் கண்ணைத்திறந்தால் தானே?

 

“கூப்பிடுறேன்ல? என்ன திமிரா?” என்று மகாலட்சுமி குரலை உயர்த்த, “ப்ச்” என்ற சிறு சத்தத்தோடு கண்ணை திறந்து பார்த்தான்.

 

“என்ன வேணும் உனக்கு?”

 

“டைவர்ஸ் வேணும்”

 

“மிட்டாய் கேட்குற மாதிரி காலையில இருந்து இதையே கேட்டுட்டு இருக்க. வேற வேலை இல்லையா உனக்கு?”

 

“பேசுவ ஏன் பேச மாட்ட? உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கலனு தெரிஞ்சும் எல்லாரும் சொன்னாங்கனு தாலி கட்டி கூட்டிட்டு வந்துட்டு இதுவும் பேசுவ. இன்னமும் பேசுவ”

 

அவனுக்கு இதைக்கேட்டு கேட்டு சலித்து விட்டது. காலையிலிருந்து ஒரே பல்லவியை திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருக்கிறாளே.

 

“தாலி கட்டும் போது எனக்கு பிடிக்கலனு சொல்லியிருக்க வேண்டியது தான? அப்ப அழுதுட்டே சும்மா இருந்துட்டு, இங்க வந்து என்னை போட்டு டார்ச்சர் பண்ணிட்டு இருக்க? நான் ஒன்னும் உன் மேல ஆசைப்பட்டு தாலி கட்டல. என் விதி. உன் கிட்ட கோர்த்து விட்டுருச்சு.”

 

“அப்ப டைவர்ஸ் கொடுக்க வேண்டியது தான?”

 

“அய்யோ லூசு மாதிரி பேசுறாளே.. நீ எல்லாம் எப்படி டீச்சர் ஆன? காலையில கல்யாணம் பண்ணிட்டு நைட் டைவர்ஸ் கேட்டா கிடைச்சுடுமா? பைத்தியத்த என் தலையில கட்டி வச்சுருக்கானுங்க. ச்சை.”

 

அவன் தலையில் அடித்துக் கொள்ள மகாலட்சுமிக்கு என்னவோ போலனாது.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்