Loading

“என்னம்மா தேடுறீங்க?” என்று திராட்சை பழத்தை ஒவ்வொன்றாக வாயில் போட்டபடி, தொலைகாட்சியை ஒரு பார்வையும் தாயை ஒரு பார்வையும் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“நேத்து ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கி வச்சேன். இப்ப தேடுனா எங்க இருக்குனே தெரியல?” என்று மலர்விழி தேடிக் கொண்டே பேச, அவளுக்கு உள்ளே போன திராட்சை விக்கிக் கொண்டது.

‘அய்யய்யோ..’ என்று மனதிற்குள் அலறியபடி, அருகே இருந்தவனை திரும்பிப் பார்க்க, அவன் ஒரு மார்கமான பார்வையை அவளிடம் பதித்து இருந்தான்.

‘சொல்லிடாத’ என்று அவள் தலையை வேகமாக அசைக்க, இதழோரத்தை பல்லிடுக்கில் கடித்து சிரிப்பை அடக்கினான்.

“அத்த.. அது பால்கோவா பாக்ஸா?” என்று அவன் கேட்டதும், வேகமாக திரும்பி பார்த்த மலர், மகளின் திருட்டு முழியை கண்டு கொண்டு, முறைத்து வைத்தார்.

“ஹி ஹி ம்மா.. அது பால்கோவா கெட்டு போயிட கூடாதுனு பாட்டி தான்மா கொடுத்தாங்க”

முப்பத்திரண்டு பல்லையும் காட்டிக் கொண்டு அவள் பேச, “வரட்டும் உன் பாட்டி பேசிக்கிறேன்” என்று அவளை முறைத்து விட்டு சென்று விட்டார் மலர்.

கையிலிருந்த பாத்திரத்தை டொம்மென டீபாவில் வைத்து விட்டு, கணவனை முறைத்தாள்.

“இப்ப எதுக்கு போட்டுக் கொடுத்தீங்க?”

“சொல்லலனா தேடிட்டே இருப்பாங்க. பாவம்”

“இப்ப என்னை வச்சு செய்ய போறாங்க. பாட்டி அம்மாவுக்கு தெரியாம கொடுத்தாங்க”

“சொந்த வீட்டுல திருடுறது தப்புடா” என்று அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு பேச, முறைத்து முகத்தை தூக்கிக் கொண்டாள்.

சில நொடிகளில் அவள் முகத்தில் கள்ள சிரிப்பு வர, அவன் காதோரம் குனிந்தாள்.

“பால்கோவா பாக்ஸ் நம்ம ரூம்ல இருந்துச்சுனு சொன்னீங்களே.. அத யாரு முழுசா சாப்பிட்டதுனு சொல்லவே இல்லயே?” என்று கேட்டு வைக்க, இப்போது அவனுக்கு விக்கிக் கொண்டது.

“அடிப்பாவி” என்று சத்தமில்லாமல் பதறியவன், அவசரமாக பார்வையை நாலா பக்கமும் அலசினான்.

யாருமே இல்லை என்றதும், “எங்க உட்கார்ந்துட்டு என்னடி பேசுற?” என்று கேட்டான்.

“இல்ல.. அம்மா பாக்ஸ தான் தேடுனாங்க. பால்கோவா என்ன ஆச்சுனு சொல்லனும்ல? இருங்க. அம்மா கிட்ட சொல்லிட்டு…” என்றவள் உடனே திரும்பி அழைக்கப்போக, அவள் வாயைப்பொத்தி தன் பக்கம் இழுத்தவன், “ஏய்.. லூசா நீ?” என்று பதறி விட்டான்.

அவனது பதட்டத்தில் சிரித்து விட்டு, கையை விலக்கியவள், “ஏன் சொல்ல வேணாமா? அம்மாவும் தெரிஞ்சுக்கட்டும். என்னையா மாட்டி விடுறீங்க.. நீங்க அம்மா முகத்த நிமிர்ந்து பார்க்க கூட முடியாத அளவுக்கு பண்ணிடுவேன். பீ கேர்லஸ் மேன்” என்று பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசினாள்.

“தெரியாம சொல்லிட்டேன். உனக்கு ரெண்டு பாக்ஸ் பால்கோவா வாங்கி தர்ரேன் போதுமா? வாய மட்டும் மூடிட்டு இரு”

“எதுக்கு? அதையும்…” என்றவளின் வாயை அவசரமாக அடைத்தவன், “வாய் வாய்.. அங்க வா உன்னை பேசிக்கிறேன்” என்று வெட்கத்தை மறைத்து மிரட்டினான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
10
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment