தனியாக அந்த வயல்வெளியில் கத்தி கதறிக் கொண்டு இருந்தாள்….. உதிரனின் தலையை தன்னுடைய மடியின் மீது கிடத்தி அழுது கொண்டு இருந்தாள்…. யாரும் உதவிட அருகில் இல்லாமல் போக , அவனின் வாயில் இருந்து நுரை …. நுரையாக வெளியே வந்துக் கொண்டு இருந்தது …
“உதிரா …! என்னை விட்டு போக போறியா ….? நான் மட்டும் தனியா இந்த உலகத்துல இருக்கனுமா…?” “உதிரா”…. “உதிரா” ……. என்னைவிட்டு போகாதே …!
மெதுவாக அவளின் முதுகை தட்டியவன் , என்னாச்சு மா ….? போகாதே…. போகாதே னு சொல்ற … யாரு உன்னை விட்டு போறா….?
கண்களை மெதுவாக திறந்தவளுக்கு அப்பொழுதுதான் தெரிந்தது இது வரை நாம் கண்டது கனவு என்று….. அவனைப் பார்த்தவள் , அவனிடம் எதுவும் கூறவில்லை ,அவனின் நெற்றியில் கைவைத்து பார்த்துவிட்டு அமைதியாக படுத்துக் கொண்டாள் ……
ஏதோ கெட்ட கனவு கண்டு இருக்கிறாள் என்று உணர்ந்தவன் அவளை இருக்கமா தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்…. அவளும் எதுவும் கூறவில்லை அவனுக்கு உள்ளே புதைந்து விடுபவள் போல அவனுக்கு உள்ளே புதைந்து விட்டாள்…..
ஒரு சிறிய புன்னகை அவனின் உதட்டை தாங்க….. அவள் தூங்கிவிட்டால் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு “அவளின் நெற்றியில் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு , அவளின் கண்ணம் கிள்ளி ,…… என்னுடைய கோவகார பொண்டாட்டி டி நீ “…. என்னமா கோவம் வருது உனக்கு…..! இன்னும் வாழ்க்கை முழுவதும் எப்படிதான் சமாளிக்க போறேனோ தெரியவில்லை ….? அவள் மெதுவாக அசைய …… அவளின் முதுகைத் தட்டிக் கொடுத்தவன் அங்கிருந்து வெளியே சென்றான்…..
உதிரன் வெளியே வந்ததைப் பார்த்து , ” அந்த தெருவில் இருந்த ஒரு பாட்டி வெட்கப்பட்டுக் கொண்டே முகத்தை தன்னுடைய புடவை முந்தானையால் மூடிக்கொள்ள “…… இவனோ அந்த பாட்டியை விசித்திரமாக பார்த்துவிட்டு , மெதுவாக நடந்து தோட்டத்திற்கு சென்று பல்துலக்கி விட்டு வீட்டிற்குள் மறுபடியும் உள்ளே வரும்போது ரத்னவேலும் வந்தார்….
என்ன மாமா காலையில எங்க போயிட்டு வரீங்க ….?
மாப்பிள்ளை நான் வயல் வரை போயிட்டு வரேன்…. நீங்க இப்பதான் எழுந்தீங்களா…?
ஆமாம் மாமா…. இப்பதான்….
என்ன மாப்பிள்ளை உங்க குரல் ஒரு மாதிரியாக இருக்கு…. ரத்னவேலுக்கு சற்று மகளை நினைத்து பயம் வந்துவிட்டது…. நேற்று அவர் தன் மகளை கவனித்துக் கொண்டே தான் இருந்தார்…. அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டும் , அவனிடம் மட்டும் பேசாமல் போக்கு காட்டிக்கொண்டு இருந்ததையும் …. “கிறுக்கு மவ கோவத்துல எதையாவது எடுத்து அடித்துவிட்டாலா…? மாப்பிள்ளையின் குரல் ஒரு மாதிரியாக இருக்கு …. அடித்தாலும் அடித்து இருப்பா….! “அப்பனு பாக்காம என்னுடைய மண்டையில கொழுக்கட்டை வரவச்ச அவ “…. மாப்பிள்ளையை மட்டும் விட்டா வைக்க போறா …..? இல்லவே இல்லை…..
என்ன மாமா …? அமைதியா எதையோ யோசித்துக்கொண்டு இருக்கீங்க….?
“ஆங் ” ஒன்னும் இல்ல மாப்பிள்ளை… தன்னுடைய தலையை ஒருமுறை தொட்டு பார்த்தவர் “மலரும் நினைவுகள் மாப்பிள்ளை “வேற எதுவும் இல்லை… நீங்க ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க என்று அவனின் முகத்தைப் பார்த்தவர் “என்னாச்சு மாப்பிள்ளை ஏன் முகம் எல்லாம் இப்படி கறுத்து இருக்கு ….?”…..
அது ஒன்னும் இல்லை மாமா…. இங்க தண்ணி ஒத்துக்க வில்லை னு நினைக்கிறேன் …. அதனால தான் என்னுடைய குரல் இப்படி இருக்கு ….. அவன் கூறிக்கொண்டே மெதுவாக நடந்து உள்ளே போக, வாசற்படியில் கால் தடுக்கி கீழே விழ சென்றான்….
ஏதோ சரியில்லை என்று நினைத்துக்கொண்டு இருந்த ரத்னம் …. அவன் விழுவதை கண்டு வேகமாக ஓடிச்சென்று பிடித்தவர் ” அவனை நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு ” என்ன மாப்பிள்ளை உடம்பு இப்படி சுடுது ….? நீங்க ஓய்வு எடுக்காம என்னப் பண்றீங்க….? உடம்பு சரியில்லையினு ஒரு வார்த்தைக் கூட சொல்லா மா இருக்கீங்க ….? நீங்க இங்கேயே உட்காருங்க இதோ வந்து விடுகின்றேன் என்று கூறிவிட்டு சமையல் கட்டுக்கு சென்றார்…..
வசுமதி, இப்ப எதுக்காக இங்க வந்து இருக்கீங்க….? சாப்பாடு எடுத்து அங்க வெச்சு இருக்கேன் போய் சாப்பிடுங்க… மாப்பிள்ளை எழுந்திருக்க முன்னாடி நான் சமைத்து முடிக்கனும்….
என்னை தொந்தரவு பண்ணாம போங்க….
அடியேய் ….! மெதுவா பேசுடி…. மாப்பிள்ளையை கூடத்துல தான் உட்கார வைத்துவிட்டு வந்தேன்……
என்னது ….? மாப்பிள்ளையை உட்கார வைத்துவிட்டு வந்தீங்களா….?
ஆமாம் டி… மாப்பிள்ளைக்கு காய்ச்சலா இருக்கு டி…. இரவு எல்லாம் காய்ச்சல் போல, ரொம்ப பலவீனமா இருக்காரு … நடக்க கூட சத்து இல்லாத மாதிரி இருக்காரு…. இப்ப கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி கூட வாசற்படி பட்டு கீழே விழுந்து இருப்பாரு ….
என்னங்க இம்புட்டு பொறுமையா வந்து சொல்றீங்க…. மாப்பிள்ளைக்கு இப்ப எப்படி இருக்கு சொல்லுங்க…..
முதல்ல இப்படி பதட்டப்படாமல் மாப்பிள்ளைக்கு கசாயம் போட்டு கொடு மா….
சரி நான் போட்டு கொண்டு வரேன் நீங்க போய் “மாப்பிள்ளைக்கு எதாவது வேணுமானு கேளுங்க “… அவர் பக்கத்துலே இருங்க….
வேக …. வேகமாக கசாயம் போட்டுக்கொண்டு போய் உதிரனிடம் கொடுத்தவர், என்னங்க தம்பி …? ஒரு வார்த்தைக் கூட சொல்லாம இப்படி இருந்து இருக்கீங்க…? இப்ப உடம்பு எப்படி இருக்கு….? இந்தாங்க இந்த கசாயத்தை குடிங்க ….
கசாயத்தை வாங்கி அவன் குடிக்க…
அருகிலே இருவரும் நின்றுக்கொண்டு இருந்தனர்….
என்னாச்சு ஏன் …? இருவரும் என்னையே பார்த்துக்கொண்டு இருக்கீங்க…? எனக்கு ஒன்னும் இல்ல … இப்ப நான் நல்லாதான் இருக்கேன்… நீங்க கவலைப்படாதீங்க …. இருவரும் போய் சோலி பாருங்க…..
என்னங்க தம்பி , உங்களுக்கு உடம்பு முடியலை னு ,…அந்த கழுதை கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை….. இப்ப என்னப் பண்றா அவ….? பொறுப்பே இல்லாம இருக்கா இன்னும் அவ…. உடம்பு சரியில்லாத நீங்களே எழுந்து விட்டீங்க, அவ இன்னும் எழுந்து வரவில்லை… – இதுக்கு எல்லாம் காரணம் “இதோ நிக்கிறாரு பாரு இந்த பெரிய மனுசன் தான் காரணம் “…. எப்ப பாரு எதுக்கு எடுத்தாலும் செல்லம் குடுத்து இப்படி பொறுப்பே இல்லாம வளர்த்து வச்சி இருக்காரு…..
என்னது நானா ….! என்ற ரீதியில் ரத்னம் தன்னுடைய மனைவியைப் பார்க்க….. வசுமதியோ, என்ன இங்க லுக்கு என்ற ரீதியில் முறைத்துக் கொண்டு இருந்தார்…. “செல்லம் குடுத்தேன்னு ஒன்னா சொல்லுடி நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனா , பொறுப்பு இல்லாமல் வளர்த்து விட்டேன் என்று மட்டும் சொல்லாத டி …!” நான் என்னுடைய பொண்ணை பொறுப்பா தான் வளர்த்து வைத்து இருக்கேன் என்று நுவலிக்கா சப்போட் செய்து பேச ……
ஆமா, நீங்க வளர்த்த பொறுப்பு பொண்ணு தான் இன்னும் தூங்கிக் கொண்டு இருக்கா பாருங்க … மாப்பிள்ளைக்கு உடம்பு சரியில்லையினு ஒரு வார்த்தையாவது நம்மகிட்ட சொன்னாலா இல்லயே….! முதல்ல அவளுக்கு மாப்பிள்ளைக்கு உடம்பு சரியில்லையினு தெரியுமா …? தெரியாதா…? இன்னும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கறாளா….? அவளைப் போய் எழுப்புங்கள் …. போங்க……!
ரத்னம் அமைதியாக பார்த்துக் கொண்டே இருக்க ….
அத்தை கொஞ்ச நேரம் அமைதியா இருங்க…. அவ இப்ப தான் தூங்கவே ஆரம்பித்தாள்…. இரவு முழுவதும் என் பக்கத்துலே இருந்து என்னை பார்த்துக் கொண்டா…. அவளை எழுப்பாதீங்க….. எனக்கு உடம்பு சரியில்லைனு உங்ககிட்ட இரவே சொல்லி இருந்தா , உங்க தூக்கமும் இல்லாம போயிருக்கும் ……. அவ மட்டும் என்னை இரவு பார்த்துக் கொள்ளவில்லை என்றால் எனக்கு இப்ப நடக்க கூட முடியாமல் இருந்து இருக்கும்…..
ரத்னம் , தன்னுடைய மனைவியைப் பார்த்து, “பார்த்தாயா என்னுடைய பொண்ணை ” என்ற ரீதியில் பார்க்க…
வசுமதி, தன்னுடைய கணவரைப் பார்த்து முறைத்து விட்டு …. மாப்பிள்ளை நீங்க போய் ஓய்வு எடுங்க…. சூப் ரெடி பண்ணிட்டு உங்களை கூப்பிடுறேன்…..
“சரிங்க அத்தை ” என்று தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டான் உதிரன்…
வசமதியும் , ரத்னமும் அவரவர் வேலைப் பார்க்க சென்றுவிட்டனர்…..
கண் விழித்தவுடன் தன்னுடைய அருகில் அவன் இல்லாது போகவே சற்று பயந்து வேகமாக எழுந்து உட்கார , அந்நேரம் உதிரன் அறையின் உள்ளே சென்றான்….. அவனைப் பார்த்து எங்க போயிருந்த ……?
அவளின் அருகில் சென்று உட்கார்ந்தவன் , அவளின் தலையை வருடிவிட்டு, உனக்கு இன்னைக்கு ஒரு பரிசு குடுக்க போறேன்…. அந்த பரிசு நீ ஆசைப்பட்டது தான்….உனக்காக என்னுடைய மனதை கல்லாக்கி கொண்டு குடுக்கின்றேன்….. நீயும் என்னப் பண்ணுவ …? உனக்கும் ஆசைகள், கற்பனைகள் நிறைய இருந்து இருக்கும்…. நீ எதிர்பார்த்த மாதிரி நான் இல்லை ….. உனக்கு எப்படி தோணுதோ…! உன்னுடைய ஆசைப்படி உன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எல்லா உரிமையும் உனக்கு உண்டு …. இதற்கு இடையிலோ , வேண்டாம் என சொல்லவும் எனக்கு உரிமை இல்லை…. நான் என் மனதில் கட்டிய வாழ்க்கை கட்டிடம் என்னுள்ளே புதைந்து போகட்டும்… இது தான் என்னுடைய வாழ்க்கை என்று முடிவான பிறகு நான் அதன் பாதையில் பயணிப்பது தானே சரியாக இருக்கும்…. அவன் பேசிக்கொண்டே அவளைப் பார்க்க , “அவளோ , இவன் பேச ஆரம்பிக்கும்போதே மறுபடியும் தூங்க ஆரம்பித்து இருந்தாள்”…. அவன் ஏதோ ஒன்றை நினைத்துக்கொண்டு தன்னுடைய போனை எடுத்து யாருக்கோ கால் செய்து ,”எனக்கு இன்னைக்கு சாயந்திரத்திற்கு கிடைக்கனும் . அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்க”….. அவள் புரண்டு படுக்க … போனை உடனடியாக கட் செய்து விட்டு யோசனையில் மூழ்கி விட்டான்…..
தூக்கம் கலைந்து எழுந்தவள் முதலில் பார்த்தது தன்னுடைய அருகில் கட்டிலில் சாய்ந்துக் கொண்டு ஏதோ சிந்தித்துக் கொண்டு இருக்கும் உதிரனை தான். … அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக எழுந்து சென்றவள் , பல் துலக்கி விட்டு வந்தவள் …., நேராக வசுமதியிடம் சென்று “அம்மா ” பசிக்கிறது … என்ன சமையல்…? வாசனை மூக்கை துளைக்கிறது….
தன்னுடைய மகளைப் பார்த்து சிரித்து விட்டு , போய் மாப்பிள்ளையை கூட்டி வாடி… அவரும் இன்னும் சாப்பிடவில்லை… காலையில சாப்பிட வேண்டிய டிபனையே இன்னும் சாப்பிடல , மத்திய சாப்பாட்டிற்கான மணி ஆகிவிட்டது … போடி போ …. மாப்பிள்ளையை சீக்கிரம் கூட்டி வந்து சாப்பிடு….
நுவலி ,தன்னுடைய தலையை ஆட்டிவிட்டு, “இவன் ஏன் இன்னும் சாப்பிடாம இருக்கான்… எனக்காக சாப்பிடாம இருக்கானா …?” என்று நினைக்கும்போதே உள்ளுக்குள் ஒரு வித மகிழ்ச்சி பரவியது அவளுக்கு … …
அவனிடம் சென்று “அம்மா சாப்பிட வர சொன்னாங்க , சீக்கிரம் வாங்க “….
அவனும் எதுவும் சொல்லாது அவளுடன் சென்று உணவை உண்ண ஆரம்பித்தான்…. மத்திய உணவையும் , ஆட்டுக்கால் சூப்பையும் குடித்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தனர்…. அந்நேரம் அவனுக்கு போன் வர , அதை எடுத்து பேசிக்கொண்டே வெளியே சென்றவன் “வெளியே ஒரு ஆள் கொடுத்த கவரை வாங்கிக்கொண்டு உள்ளே வந்து தன்னுடைய அறையில் இருந்த டேபிளில் வைத்து விட்டு தோட்டத்தில் சென்று இயற்கையுடன் இருந்தான்….
நுவலியும் வசுமதியும் பேசிக்கொண்டே இருக்க… நேரம் போனதே அவர்களுக்கு தெரியவில்லை….
தீடீரென உதிரன் அவர்களிடம் வந்து நான் வெளியே போய்ட்டு வரேன் என்று கூற…..
வசுமதி, என்னங்க மாப்பிள்ளை உடம்பு வேற உங்களுக்கு சரியில்லை…. நீங்க தனியா போகவேண்டாம் … உங்களுக்கு எதாவது வேணுமா சொல்லுங்க….! ஆட்களை அனுப்பி வாங்கி வரசொல்றேன்…..
அதெல்லாம் ஒன்னும் இல்ல அத்தை. பக்கத்துல தான் சீக்கிரமாக நான் வந்து விடுகின்றேன் என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட… நுவலி இதை எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தாள்…..
சிறிது நேரம் கழித்து தன்னுடைய அறைக்கு சென்றவளின் கண்களுக்கு அந்த டேபிளின் மீது இருந்த கவர் தென்பட்டது….. அதை எடுத்து பிரித்தவளுக்கு உள்ள அதிர்ச்சியாய் காத்து இருந்தது “விவாகரத்து பத்திரம் “…..
Kannava? Nan kuda unmaini ninachuten…Ivanga rendu perukum viladurtahe velaya pochu … Iven summa divorce kudukurana ? Serious ah kusukurana nu teriyalaye….
Thank you sago 🥰