Loading

வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள  போகலாம் ………..

 

தொலைந்தேனடி -1……

 

                   உருண்டு பிரண்டு சிரிச்சுட்டு இருக்கா அபி , ” அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்குற ” , அபியோட அம்மா கேட்க , ” நீ சொன்னதுக்கு சிரிக்கல மா நாங்க வரப்போ ஒரு ரோமியோ என்ன இம்ப்ரெஸ் பண்றன்ற பேருல பைக்ல ஏதோ சாகசம் பண்ணி கீழ விழுந்து மூக்கை உடைச்சுகிட்டான் ” , அபி  சிரிச்சிட்டே சொல்ல , ” அடியே பாவம் அந்த பையன் இதுக்கு சிரிக்குற ” , அவங்க அம்மா லதா பாவப்பட்ட கேட்க ,” மா அவன் ஓவரா பண்ணான் மா அதான் ” , அபி  அவங்க அம்மாட்ட எகிற ,” இப்படி சிரிக்காத டி பாஞ்சாலி சிரிச்சனால  தான் அவங்க பதினாலு வருஷம் காட்டுக்கே போனாங்க ” .

                                     அவங்க அம்மா சொன்னதை கேட்டு கடுப்பு ஆனா அபி  ” எப்படி எப்படி அவ தான் தர்மரை சூதாட சொன்னாலா இல்லைல  அவங்க சூது ஆடி தோத்து போய் போனாங்க பத்தாததுக்கு பாஞ்சாலியை சூதுல வெச்சு ஆடுனார் தர்மர் அது தப்புனு யாருமே சொல்லமாற்றிங்க ” , மூச்சு வாங்க பேசுனா , ” சரி தான் உனக்கு ஒரு கால் கட்டு போட்டா தான் சரி ஆகும் ” , லதா சொல்ல இதுவரை சந்தோசமா பேசிட்டு இருந்தவ அமைதி ஆகிட்டா ……..இதை அவங்க அம்மா கவனிச்சாங்க .

                                        கல கல இருக்கிறவ கல்யாணம் சொன்னாலே முகம் மாறும் இது இப்போ இல்லை இரண்டு வருஷமாவே இப்படி தான் பண்றா என்ன ஆச்சுன்னு தெரில ……….அவகிட்ட இதை பத்தி கேட்கலாம்னு வாய் திறந்தா அப்டியே பேச்ச மாத்திடுவா கள்ளி ………….

                                        கல்யாணம் ஆகி கோவில் கோவில ஏறி பொறந்த பிள்ளை ……….அதுனாலயே அவ மேல தனி பாசம் இருக்கு அவங்க அப்பாகும் அம்மாக்கும் ……..துரு துரு பேச்சு அந்த கோலிக்குண்டு கண்ணு யார் பாத்தாலும் திரும்பி இன்னோரு தரம் பார்க்க சொல்ற அளவுக்கு அழகு அந்த கண்ணனே பொண்ணா பிறந்த மாறி அவ்ளோ அழகு …….

                              பி .இ படிக்கணும்னு ஆசை பட்டா நல்ல மார்க்கோட அவளே பிரீ சீட்ல படுச்சா ……….அடுத்து mba படிக்கணும்னு ஆசை பட்டா அதும் நல்ல மார்க்கோட படுச்சா ……….வாழ்க்கைல அடுத்த கட்டம் கல்யாணம் ஆனா அவ அதுக்கு ஓத்தே வரமாற்ற ……..ஒவ்வோர் தடவை வரன் வரும்போதுலாம் ஏதாது காரணம் சொல்லி தட்டிகளுச்சுட்டே இருந்தா ………..இதை பார்த்த லதா மனசு கஷ்டம் ஆச்சு …….அபியோட நண்பர்கள் வெச்சு அவ யாரையாது விரும்புரளான்னு கேட்டும் பார்த்துட்டாங்க …….ஆனா அதுக்கான பதிலும் பூஜ்யம் தான் ………

                     நல்ல வரன் ஒன்னு வந்துருக்கு அதை லதா அபி அப்பா (ராஜா) அவர்கூட பேசிட்டு அபிக்கிட சொன்னாங்க ………..அதை கேட்ட அபியோட மனசு அப்டியே ரேஸ் குதிரை மாறி வேகமா ஓடுச்சு அவளோட பழைய நினைவுகள் அவளுக்கு வந்துச்சு , ” அம்மா அப்பா நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன் “,அவங்க பேச்சுக்கு முற்றுப்புள்ளி வெக்குற போல சொன்னா , ” ஏன் திடிர்னு இந்த முடிவு ” , லதா சந்தேகம கேட்க , ” அப்படிலாம் இல்லை அம்மா எனக்கு இப்போ கல்யாணத்துல ஆசை இல்லை ” , ஒரு வித பதட்டத்தோடேயே சொன்னா .

                                ” எங்களுக்கு நெஞ்சு முட்ட முட்ட ஆசை இருக்கு அதில உனக்கு என்ன பிரச்சனை ” , லதா ஆதங்கமா கேட்க , ” அம்மா புருஞ்சுக்கோங்க எனக்கு இப்போ கல்யாணம் வேணாம் நான் வேலைக்கு போகணும்னு ஆசை படுறேன் ” , கெஞ்சலா சொன்னா , ” சரி அபி உனக்கு யார் இப்போ வேலை தரா நீ வீட்டுல தான் இருக்க ” , லதா இவளை கல்யாணத்துக்கு ஒதுக்க வெக்கணும்னு எப்படிலாமோ பேசி பாக்குறாங்க.

                                 ” எனக்கு வேந்தர் இண்டஸ்ட்ரில இருந்து இன்டெர்வியூ லெட்டர் வந்துருக்கு மா நான் அதா அட்டென்ட் பண்ண போறேன் ” , இவளும் பிடிவாதமா இருக்க , ” சரி அபி இந்த இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணு நீ இதுல செலக்ட் ஆகிட்டா நீ வேலைக்கு போ ஒரு வேல ” , அவ முகத்தை பார்த்தபடியே சொன்னாங்க , ” ஒரு  வேல ” , அபி பதட்டமா கேட்டா , ” செலக்ட் ஆகலேனா நாங்க சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கணும் சரியாய் ” அவளை சரியாய் மடக்கிட்டாங்க.

                           ” சரி மா கல்யாணம் பண்ணிக்கிறேன் ” , மனசுல பதட்டம் இருந்தாலும் வெளில காட்டிக்காம பேசுனா , ” சரி ” , அவங்க அம்மா அவளை சரி பண்ணிடலாம்னு நம்பிக்கைல ஒத்துக்கிட்டாங்க .

                           அபி கண்டிப்பா நமக்கு இந்த வேலை கிடைக்கும்னு நம்பிக்கையா  இருந்தா அது அவ பார்வையிலேயே அவங்க அம்மா லதாக்கு தெரிஞ்சுது அவளை முறைச்சாங்க , ” ஏன் மா மொத்தம் எத்தனை ரவுண்டு ” , அபி அப்பா ஆர்வமா கேட்டார் .

” மொத்தம் அஞ்சு பா இது பெரிய கம்பெனி மொத்தம் 500   பேரு கலந்துக்கறாங்க ” , அபி ஒரு ஆள் கெடைச்சாங்கன்னு எல்லாத்தியும் ஆர்வமா சொன்னா , ” ரொம்ப சந்தோசம் மா நல்லபடியா செய் மா ” , அபி அப்பா அவ தலையை நீவிட்டே சொன்னார் , ” சரி அப்பா ” , சந்தோசமா சொன்னா , ” எப்போ மா இன்டெர்வியூ ” ,லதா கேட்டாங்க .

                    ” நாளை மறுநாள் மா ” அபி சந்தோசமா சொன்னா , ” சரி மா படி ஆனா நான் சொன்னதும் மனசுல வெச்சுக்கோ ” கொஞ்சம் மிரட்டுற போல சொன்னாங்க , ” கண்டிப்பா எனக்கு வேலை கிடைக்கும் மா ” , நம்பிக்கையா சொன்னா , ” பார்க்கலாம் ” அம்மாவும் ஒரு நம்பிக்கைல சொன்னாங்க , ” போதும் லதா பிள்ளையை வம்பு இழுக்காத ” , ராஜா அபிக்கு வக்காலத்து வாங்க , ” என்ன அப்பாவும் பொண்ணும்  சேர்ந்துட்டீங்களா ” , லதா நக்கலா கேட்க , ” ஆமா என் அப்பா எனக்கு சப்போர்ட் பன்றார் உனக்கு ஏன் பொறாமை “.

                          அபி அப்பாக்கு சப்போர்ட் பண்ண , ” போங்க டி சரி  தான் ” , லதா முகத்தை திருப்பிகிட்டு போய்ட்டாங்க , ” என்ன மா உன் அம்மாக்காரி இப்படி பேசுறா செலக்ட் ஆகிடுவியா ” , ராஜா சந்தேகமா கேட்க , ” அப்பா ” , அபி சிணுங்குனா , ” சரி சரி என் பொண்ணு செலக்ட் ஆகிடுவா சரியா நல்லா படி ” , அப்பா அபிக்கு  சப்போர்ட்டா பேச  , ” தேங்க்ஸ் பா “.

                           அபி அவங்க அப்பாவை கட்டிபிடுச்சுக்கிட்டா ………..இதுலாம் சமையல் அறைல இருந்து அவங்க அம்மா பாத்துட்டு தான் இருந்தாங்க , ” நல்ல பொண்ணு நல்ல அப்பா ” தலைல அடுச்சுக்கிட்டாங்க அவங்க வேலையை பார்க்க ஆரமிச்சுட்டாங்க .

                          திவ்வியா அப்போ தான் உள்ள வந்தா , ” எங்க டி போன ” , லதா கேட்க , ” இங்க தான் மா கிரௌண்ட்க்கு “, மெதுவா சொன்னா , ” அது சரி பரீட்சை வருது ஒழுங்கா உக்காந்து படி விளையாட்டுலாம் அப்புறமா வெச்சுக்கலாம் ” .

                               லதா கொஞ்சம் கண்டிப்பா சொன்னாங்க , ” சரி சரி மா நான் நல்ல மார்க் வாங்குவேன் சரியா நீங்க கவலை படாதீங்க ” , திவ்வியா அம்மாவை சமாதானம் பண்ணா , ” சரி டி போய் கை கால் கழுவிட்டு வா சாப்பிடுவ ” , லதா இப்போ பாசமா கூப்பிட்டாங்க , ” சரி மா “, திவ்வியா சமத்தா சொல்லிட்டு ரூம்க்கு போன.

அபி இன்டெர்வியூல செலக்ட் ஆகுவாலா பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில்  💖💖💖💖

 

 

மீண்டும் அன்போடு ……………….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்