Loading

அந்த மண்டபமே விழாக்கோலமாய் காட்சியளித்தது.. அந்த மண்டபத்தின் முன்னே வாசலின் இருபுறமும் வாழைமரங்கள் கட்டப்பட்டு , வருவோரையெல்லாம் வாங்க … வாங்க என்று அழைப்பதுபோல இருந்தது….

   ஏலே…! மாரியப்பா அங்க என்ன பண்ணிட்டு இருக்க….?… போயி மாப்பிள்ளை வீட்டுகாரங்களை நல்லா கவனி….

சரிங்கய்யா….. 

 என்னடா மணி , உள்ளே மாப்பிள்ளை வீட்டுகாரங்க எல்லோரும் சாப்பிட சாப்பாடு ரெடியா இருக்கா….?… இந்த ரத்னவேல் வீட்டு கல்யாணத்துல சாப்பாடு குறையாயிடுச்சுனு நாளபின்ன பேச்சு வரகூடாது …. கல்யாணத்துக்கு வரவங்க எல்லோரும் வயிறு புள்ளா சாப்பிட்டுதான் போகனம், அப்படி இருக்கனும் சாப்பாடு” போய் அந்த சமையற்காரங்ககிட்ட சொல்லு”….

அப்படியே செஞ்சிடலாம் ஐயா….

 சரிடா போய் வேலையைப் பாரு, இன்னும் எதுக்கு இங்கையே மசமசனு நிக்கிறடா…டேய் மணி உன்னதான்டா….

ஐயா ….அது வந்துங்க ,அம்மா உங்களை கூப்பிடுறாங்க….

என்னைய எதுக்குடா அவ கூப்பிடுறா…?… மனுசனை நிம்மதியா ஒரு ஸ்வீட்டு சாப்பிட விடுறாளா….. எப்பபாரு உங்களுக்கு வயசாயிடுச்சி நீங்க இனிமே ஸ்வீட்டு சாப்பிடக்கூடாதுனு சொல்லிக்கிட்டே இருக்கா…. போற போக்க பார்த்தா இவளை , அது என்னவோ சொல்லுவாங்களே ….’ டை ….. டைவ…. டைவஸ் பண்ணிட போறேன்….. 

 ஐயா ….’அம்மா உங்க பின்னாடிதான் நிக்குறாங்க…

  இதை மொதல்லையே சொல்ல என்னவாம்… இப்ப இவளை வேற சமாளிக்கனும்மா… என்ன மா இங்க பன்ற…..?…உள்ள அம்பூட்டு வேலை தலைக்கு மேல இருக்கு….?…

எனக்கு இருக்கிறது வேலையிலே மிகப்பெரிய வேலை , உங்களை கண்காணிக்கிறது தான்….. உள்ளே போய் உங்க பொண்ணு ரெடியாயிட்டாளானு பாருங்க…. அவளுக்கு இன்னும் சின்ன குழந்தையின் நெனப்பு…. எப்பபாரு எதுக்கு எடுத்தாலும் அடம் …. அடம் …. இந்த அடம்பிடிக்கிறதை எப்பதான் விட போறாளோ….!  

  சரி… சரி புலம்பாத டி .என்னையும் எம்பொண்ணையும் உனக்கு திட்டவில்லை என்றால் ….?…உனக்கு பொழுதும் விடியாது, பொழுதும் போகாது….  

“ஆமா”… நான் அப்படியே திட்டிவிட்டாலும், நீங்க கேட்டு கிட்டு நடந்துட்டாலும் ,”பூமி பொலந்து ரெண்டா போயிடும்”…. இங்க நின்றுக்கொண்டு எம் மூஞ்சியைப் பார்க்காம அங்க போய் அவளை என்னனு கேளுங்க…. “டேய் ” மணி …நீ எதுக்கு டா இப்படி வாய பொளந்து பாக்குற, வேற வேலை எதுவும் இல்லையா….?…. எவ்வளவு வேலை இருக்கு போய் அதையெல்லாம் கவனி டா…. 

 “அம்மா” அதெல்லாம் நல்லபடியா நடந்துகொண்டு இருக்குமா… நம்ம “பாப்பா” கல்யாணத்துல எந்த குறையும் வராதுமா….. நீங்க ஏங்கமா ஐயா – வை இப்படி துரத்தி விடுறிங்க… “ஐயா “ஒரே ஒரு இனிப்பு பலகாரத்தை ஆசையா சாப்பிட போனப்போ “, இப்படி வந்து சாப்பிட விடாம பண்ணிட்டிங்களே மா” ….

 “ஏன்டா ,நீ இதையும் சொல்லுவ, இதுக்கு மேலையும் சொல்லுவ”…! உங்க ஐயாவுக்கு இப்பதான் இருபது வயசு ஆகுதா….?…. வயசாகுற காலத்துல “இனிப்பு” ,” புளிப்பு” னு எதாவது சாப்பிடட்டும்னு நான் இருந்தா, அவருடைய உடம்பு சும்மா இருக்காது…. நீ உங்க ஐயாவுக்கு வக்காலத்து வாங்க வந்த , உனக்கும் இனிமே பலகாரத்தை குடுக்க வேண்டாம்னு உம்பொஞ்சாதிகிட்ட சொல்லிபுடுவேன் பார்த்துக்கோ ….. 

 நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம்… நான் இனிமே எதுவும் கேட்கல…. நீங்க ஐயாவுக்கு பலகாரம் குடுத்தா குடுங்க…? இல்லனா போங்க…. நான் சாப்பிடுற பலகாரத்துல கைய வெச்சிடாதிங்க…..

  ஏம்மா நுவலி ….! ஏன்டா என்ன பண்றடா மா…?… உங்க அம்மா வந்து நீ சொன்ன பேச்சே கேட்க மாட்றனு சொல்றா”….!

“அப்பா” எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் பா… நீ போய் மாப்பிள்ளை வீட்டுகாரங்கிட்ட கல்யாணம் நிறுத்திடலாம்னு சொல்லுங்க பா….

என்னது கல்யாணத்தை நிறுத்திடனுமா…? …. இன்னும் கொஞ்ச நேரத்துல ஐயர் பொண்ணை கூட்டி வாங்கனு சொல்லுவாரு , இப்ப போய் கல்யாணத்தை நிறுத்தனுமா….?…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. இப்டி புருஷன ஒரு ஸ்வீட் கூட சாப்பிட விடாம கொடுமை படுத்துறிங்களேம்மா

    2. Viji Ramachandran

      arambame kalyanamaa appo sappadulam avaru sonna mathiri nalla rusiya pottuduvingalaaa

      Enna intha ponnu eppo vanthu kalyanam vendanu solluthu..

    3. Sangusakkara vedi

      Nuvali character kaga aavala irunthen…. Last min la minnal mathiri vanthathum mudujutinga sis….. Enna emathitinga…. Athuku pathila seekaram adutha ud pottu nuvali ya katirunga .. ila memes pottu niyayam kepen….. Starting super…. All the best….

    4. Janu Croos

      இந்தாமா நுவலி….என்ன நினைச்சிட்டு இருக்க நீயி….இன்னும் கொஞ்ச நேரத்துல மணமேடைக்கு கூப்பிடப்போறாங்க நீ என்னடானா கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்க….
      என்னம்மா நீ இப்படி பண்றியே மா….