Loading

“என்னடா சொல்ற” கல்யாணம் வேண்டாமா…..?…. இங்க பாருடா மா இப்படி எல்லாம் விளையாடாதே ….! அப்பாவுக்கு ஏற்கனவே டென்சன் அதிகமா இருக்குடா….. நீ என்கிட்ட சும்மாதானே சொன்ன “கல்யாணம் வேண்டாம்னு “….. நீ போய் சீக்கிரமா ரெடியா அப்பா உனக்கு பிடிச்ச சாக்லேட் வாங்கி வெச்சிருக்கேன் . அதைப்போய் கொண்டு வரேன்… நீ அதுக்குள்ள ரெடியா இருப்பியாம்….”என்னோட செல்ல மகள் தானே”…..போய் ரெடியாகு ….

“அப்பா” நான்தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்றேனே …,நீங்க எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துறீங்க… ஏம்பா…ஏன்…?  

இந்த அப்பா உன்னை எதுக்காவது கட்டாயப்படுத்தி இருக்கேனே சொல்லு டா… எதுக்காக இந்த கல்யாணத்தை பண்ணச் சொல்றேன் ,அது உன்னுடைய வாழ்க்கைக்கு நல்லதுக்கு தான் மா…

நான் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கனும் அதுக்கு பதில் சொல்லுங்க….. 

“நீ இப்படி பொறந்து வந்து இந்த கேள்வியை கேட்ப என்று தான்” …. 

நுவாலி, “அம்மா” நீ ஏன் இங்க வந்த….?

நீ இப்படி என்னைப் பார்த்து கேள்வி கேட்பாய் என்று தான்…. 

ரத்னவேல், நீ வேற ஏன்டி இப்படி வந்து குறுக்க பேசுற .அதான் நான் பேசிக்கொண்டு இருக்கேன்னு தெரியுதுல…..  

இங்க பாருங்க என்னால சபையில இருக்கவங்க முன்னாடி எல்லாம் அசிங்கப்பட முடியாது…. அந்த மாப்பிள்ளை வீட்டுகாரங்களுக்கு யார் பதில் சொல்றது….. இங்க பாரு நுவாலி “நீயாச்சு உங்க அப்பாவாச்சு ” சீக்கிரமா பேசிமுடிச்சிட்டு மணமேடையில வந்து உட்காரு…..

ரத்னம், குழந்தை வருவா நீ போ வசு…. நான் குழந்தையை கூப்பிட்டு வறேன்…. 

வசு, என்னது குழந்தையா….! ஏழு கழுதை வயசாச்சு .இன்னும் குழந்தையா…..! இவளை கெடுக்கிறதே நீங்கதான்…. இப்பவும் சாக்லெட் வாங்கி வந்து குடுத்துக் கொண்டு இருங்க. அவ வளர்ந்துட்டா என்ற நெனப்பே இல்லாம இன்னுமும் அடம் பிடிக்கட்டும்…. “அடியேய் சீதா” நீ என்ன வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க ,…. “அப்பாவும் பொண்ணும் பேசி முடிச்சிட்டாங்கனா , அவளை சீக்கிரமா ரெடி பண்ணி அனுப்பு”…. “சரிக்கா”….

ரத்னம், நீ போடி நான் பார்த்துக்கொள்கிறேன்…. இங்க பாரு நுவாலி “ஏதாவது கேள்வி கேட்க இதுதான் நேரமா …?…. அப்பாவும் சரி, அம்மாவும் சரி உனக்கு நல்லதையே தான் செய்வாங்க…. நான் இப்ப வெளியே போய் மத்தவங்களை வரவேற்கனும் ….. ஐயர் “பொண்ணை கூட்டி வாங்கனு ” சொல்லும் போது நான் மறுபடியும் வருவேன் அதுக்குள்ள ரெடியா இருக்கனும் …சரியா டா என்று நுவாலியின் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்….

சீதா, ஏன் நுவாலி இப்ப போய் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற….?…

நுவாலி, அவங்க ரெண்டுபேரும் கல்யாணத்தை நினைச்சி ரொம்ப டென்சனா இருந்தாங்க அதான் கொஞ்சம் விளையாடிப் பார்த்தேன்…. 

சீதா, ஏன் ….? எதுக்கு….? 

நுவாலி, உனக்கு தெரியாது எங்க அப்பா பத்தி… அவரு இன்னேரம் அழ ஆரம்பித்து இருப்பாரு…. நான் இப்படி எதாவது பண்ணி அவருடைய நினைப்பை திசை திருப்பி விட்டாதான் நான் வேற ஒரு வீட்டுக்கு கல்யாணம் ஆகி போக போறேன் என்பதை நினைச்சி கவலைப்படமாட்டாரு இல்லைனா அவருக்கு நெஞ்சுவலி வந்தா கூட சொல்வதற்கு ஒன்னுமில்லை….. அவரு எம் மேல எம்புட்டு பாசம் வெச்சிருக்காரு எனக்குதான் தெரியும்…. என்னுடைய விசயத்துல சீக்கிரமா உடைஞ்சிபோயிடுவாரு…. எங்க அம்மா வெளியில என்ன நடந்தாலும் எனக்கு எதுவுமில்லை என்பது போல காட்டிக்கும் . ஆனால் உள்ளுக்குள்ள எப்ப இருந்தோ கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கோம்…. எங்க அம்மாவும் அப்பாவும் மாறி … மாறி கெத்தா இருக்கிறதா காட்டுவாங்க…. என்னோட விசயத்துல ரெண்டு பேரும் டம்மி பீசுங்க…. நீங்க பார்த்துக்கொண்டே இருங்க எனக்கு கல்யாணம் ஆகும்போது அவங்களை பாருங்க , நான் அழுகிறனோ இல்லையோ அவங்க ரெண்டுபேரும் அழ ஆரம்பிச்சிடுவாங்க….

சீதா, சரி… சரி நீ வந்து ரெடியாகு “உனக்கு டைம் இல்லை”…..  

“அடேய் மாமா நீ ஏன் டென்சனா இருக்க…?

என்னது அடேய் மாமா வா….! இன்னொருமுறை” டேய்” போட்டு கூப்பிட்ட உன்னை தூக்கிக்கொண்டு போய் கடையில வித்துவிடுவேன்…. 

“போடா “லூசு மாமா …என்று கூறிவிட்டு அந்த வாண்டு ஓடியது…

  சரி அதையெல்லாம் விடுடா மாப்பிள்ளை…. நீ ஏன் இப்ப இப்படி இருக்க…? ஏதோ உன் பொண்டாட்டி பிரசவ அறையில இருக்க மாதிரியும் , நீ அவங்களுக்கு என்ன ஆகும் என்ற பதட்டத்தில் இருக்கிற மாதிரியும் ல இப்பவே இருக்க….. கல்யாணத்தை நினைத்து பொண்ணுங்க தான் பதட்டமா இருப்பாங்க …. நீ என்னடானா இப்பவே பதட்டமா இருக்க….!…அங்க என்னோட தங்கச்சி யாருக்கு என்ன நடந்தா நமக்கு என்ன என்ற ரீதியில சாக்லேட் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கு…. 

 என்னது சாக்லேட் சாப்பிட்டு கொண்டு இருக்காலா….?…

 ஏன்டா மாப்பிள்ளை…! ஒரு குழந்தையை கல்யாணம் பண்ணிக்கப்போறோம்னு ஃபீல் வருதா….?….

 முகத்தில் புன்னகையுடன், அப்படியெல்லாம் இல்லடா….. அவ சாக்லேட் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்ல இப்ப போய் பார்த்துட்டு வந்துவிடுறேன்…. 

 அடேய் உனக்கு மண்டை குழம்பி போச்சா என்ன…?…கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளையும் பொண்ணும் பாக்க கூடாதுனு தெரியாதா உதிரன் உனக்கு…?..

உதிரன், இந்த வெங்காய கதையெல்லாம் பேசுறையே…. நேத்து எதுக்கு ரிசப்சன் வெச்சி எங்க ரெண்டு பேரையும் மாறி மாறி ஒன்னா போட்டோ எடுத்தீங்க…?… அப்பவும் எங்களுக்கு கல்யாணம் ஆகல தானே….!… சொல்லுங்க சார் ….சொல்லுங்க…

 அதெல்லாம் எனக்கு தெரியாது…. உங்க பாட்டிதான் சொல்லுச்சி , நீ பொண்ணுகிட்ட பேச கூடாதுனு, அதுக்குதான் என்னை உங்கூடவே இருக்க சொல்லி இருக்கு …இல்லனா நான் ஏன் கூட இருக்க போறேன், என்னோட அத்த பொண்ணு வந்து இருக்கா அவளை எப்படி கரைக்ட் பண்றதுனு பார்ப்பேன்…..

உதிரன், எது உன்னோட அத்த பொண்ணு அருக்காணி தானே…!

அவ திருகாணியவே இருந்தாலும் , அவ என்னோட அத்த பொண்ணு…. அப்பறம் அவ பேரு அருக்காணி இல்ல சுமதி… –

உதிரன், நீ போய் உங்க அத்த பொண்ணை பாரு… நான் போய் என்னோட அத்த பொண்ணப்பாக்குறேன் …

டேய் நில்லுடா …. போகாத டா…. அச்சச்சோ போயிட்டானே…நான் என்ன பண்றது…? அவங்க பாட்டி வந்து கேட்டா என்ன சொல்றது …அவன் திரும்பி வர வரைக்கும் யாரும் வரகூடாது கடவுளே…! “டேய் ராமு உனக்கு போய் இப்படி ஒரு நிலமையா”….?… 

சீதா, நீ ரெடியான பிறகு எவ்வளவு அழகா இருக்க… அப்படியே தேவதை மாறி இருக்க….. நான் வெளியே போயிட்டு வந்துவிடுகிறேன் கொஞ்ச நேரத்துல அதுவரைக்கும் நீ இங்கேயே இரு…எங்கும் போககூடாது…

நுவாலி, …ம்…ம்… போகமாட்டேன் என்று சாக்லேட் சாப்பிடுவதிலேயே மும்முரமாக இருந்தாள்…. உதிரன் மெதுவாக யாருக்கும் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து வந்தான்…. ஒரு வழியாக நுவாலியின் அறை கதவை மெதுவாக திறந்து உள்ளே எட்டிப்பாக்க” அவளோ யார் வந்தா எனக்கென்ன ரீதியில் சாக்லேட் சாப்பிடுவதிலேயே ” கண்ணாக இருந்தாள்…. உதிரனோ மெதுவாக கதவை சாத்திவிட்டு கதவின் மீது சாய்ந்து நின்றுக்கொண்டு அவளை இரசித்துக்கொண்டு இருந்தான்…. கொஞ்ச நேரத்தில் அவள் சாப்பிட்டு கொண்டு இருந்த சாக்லேட் தீர்ந்துவிட , வேற சாக்லேட் இருக்கானு தேட , அங்கே இன்னொரு சாக்லேட் இருந்தது… அதை எடுத்துக்கொண்டு திரும்ப அப்பொழுதுதான் உதிரனைப் பார்த்து “இங்க என்ன பண்றீங்க…..?

உதிரன், இந்த சாக்லேட் இவ்வளவு சாப்பிடுறீயே உனக்கு அவ்வளவு காதலா சாக்லேட் மேல….

நுவாலி, ஆமாம்…. உங்களை விட சாக்லேட் மேலதான் காதல் அதிகம்… கல்யாணத்துக்கு அப்பறம் நீங்க என்னோட சாக்லேட்ல பங்கு எல்லாம் கேட்க கூடாது புரிஞ்சுதா…?.. 

உதிரன், “அடியேய்” ஒரு பேச்சுக்காவது சாக்லேட் ஒரு பீஸ் சாப்பிடுறீயானு கேட்பனு பார்த்தா அதுவும் இல்ல….. என்னைவிட உனக்கு சாக்லேட் தான் முக்கியமா போச்சுல …. உன்னை என்னப் பண்றது இனிமே சாக்லேட் சாப்பிடும் போதெல்லாம் இதை நியாபகம் வெச்சியிருக்கனும் என்று கூறிவிட்டு அவளின் கண்ணத்தை நறுக்கென்று கடித்து விட்டான்….”ஆ” என்று அவள் கத்தும் போது சாக்லேட்டை எடுத்து அவளின் வாயில் வைத்து விட்டு, அவளின் நெற்றியில் முத்தம் குடுக்க போக , அவனின் போன் ஒலித்தது…. போனை எடுத்து “என்னடா “….

ராமு…. டேய் மாப்பிள்ளை உங்க பாட்டி வந்துட்டாங்க டா …. நான் வேற கதவை லாக் பண்ணி வெச்சிருக்கேன் டா… அவங்க போக மாட்றாங்கடா…. கதவை தட்டிக் கொண்டே இருக்காங்க டா …. சீக்கிரம் வாடா …எனக்கு பயமா இருக்கு டா என்று அழும் நிலைக்கே போயிட்டான் ராமு…

உதிரன்… சரி … சரி…. அழுவாத நான் வரேன்…. நான் வர வரைக்கும் நீ கதவை திறக்காதே….! போனை கட் செய்து விட்டு, நுவாலியைப் பார்த்து மீதி தண்டனையை கல்யாணத்துக்கு அப்பறமா கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றான்…. மங்கையவள் போகும் அவனைப் பார்த்து செங்கொழுந்தாக சிவந்து நின்றாள்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Janu Croos

      அங்க கல்யாணம் வேணாம்னு அவங்கள பதட்டப்படுத்திட்டு விளையாடிட்டு இருக்கியா ராஸ்கல்…எல்லாரையும் ரணகளப்படுத்திட்டு உனக்கு கிலுகிலுப்பு கேக்குதா…..

    2. அடங்கப்பா ரத்னம் கல்யாணம் ஆகப்போற பொண்ணுக்கு சாக்கி கொடுத்து இன்னும் குழந்தையாகவே பார்த்தா எப்படிபா 🙂🙂🙂😂…ஆனாலும் நுவாலி நீனு குழந்தையா இருந்தாலும் பாசக்கார பாப்பானு ஒத்துக்கறேன்….ராமு பிரண்டா இருந்தாலே நிலைமை இப்படிதான் பா🤣🤣🤣🤣🤣…‌

    3. Sangusakkara vedi

      1. கல்யாண வயசுலயும் ஐஞ்சு வயசு பாப்பாவை கொஞ்சும் மாதிரி கொஞ்சுற அப்பா. அப்பாவை சமாதானப்படுத்த கல்யாணம் வேணாம்னு சீன் போடுற பொண்ணு காம்பினேஷன் சூப்பர்.

      2. ஹீரோ , ஹீரோயின் பெயர் தேர்வு சூப்பர்.

      3. எழுத்து நடை சூப்பர்

      குறை ன்னு சொன்னா

      1. ஸ்பெல்லிங் எரர்ஸ்

      2. பாதி இடங்கள் ல மேற்கோள் இருக்கு. பாதி இடங்கள் ல இல்லை.

      3. யூடியே போடுறதில்லை.‌