ராம் பேசிய வார்த்தைகளை திரும்ப …. திரும்ப தன்னுடைய மனதிற்குள் போட்டு குழப்பிக் கொண்டு இருந்தாள்…..
அவருக்கு மறுபடியும் கல்யாணம் ஆச்சா….? ஒருவேளை நாமதான் தப்பா புரிந்துக் கொண்டோமோ…? அவனுக்கு உண்மையிலே என்னை பிடிக்கவில்லையா….? அதனால் தானோ இன்னைக்கு என்கிட்ட சரியா கூட பேசாமல் விவாகரத்து பத்திரத்தை டேபிளில் வைத்துவிட்டு போயிட்டாரோ….! அவங்க இருவரும் காதலித்து கல்யாணம் செய்துக்கொண்டு இருக்காங்க , நாம தான் அவங்களுக்கு இடையில் வந்து விட்டோமோ …! இந்த காரணத்தினால் தான் விவாகரத்து பத்திரத்தை கூட என்கிட்ட குடுக்க முடியாமல் டேபிளில் வைத்துவிட்டு போயிட்டாரோ……! அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் எதற்காக என்னை திருமணம் செய்துக்கொண்டார்…. அவங்க வீட்டில் சொல்லி கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாமே, என்னுடைய வாழ்க்கையை எதற்காக பணயம் வைத்து ” என்னுடைய மனதிற்குள் ஆசை வளர்த்து இப்படி என் இதயத்தை ஒரே அடியாக குத்தி கிழித்து விட்டானே…!” அவன் என்கிட்ட பேசியது எல்லாம் பொய்யா ….? அவருக்கு கத்தி குத்துனு சொன்னாங்களே….! இப்ப எப்படி இருக்காரோ …? தெரியவில்லையே….? அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்ட காரணத்தால் தான் யாராவது அவரை கத்தியால் குத்தி இருப்பாங்களோ…..! அவனுக்கு தான் என்னைப் பிடிக்கவில்லையே , அப்புறம் எதுக்கு என்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வருகிறது…. தன் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு தனக்கு தானே கேள்வியும் கேட்டுக்கொண்டாள் நுவலி…
நான் அவனை காதலித்து விட்டேன் போல , அதனால்தான் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வருகிறது….
நான் நினைத்த மாதிரி கல்யாணமும் நடக்கவில்லை…. வாழ்க்கையும் எனக்கு அமையவில்லை… கடவுள் எனக்கு மட்டும் சதி செய்துவிட்டாரா….?
சில நொடிகளில் ஏதோ சிந்தித்துக் கொண்டே , அவன் தான் அன்னைக்கு சொன்னானே என்னை பிடித்து இருக்குனு …. அப்பறம் இன்னைக்கு வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி இருக்கான்…. “அப்போ …..அப்போ அவன் என்கிட்ட சும்மா நேரம் போகாமல் தான் என்னிடம் பேசினானோ ….!” இப்படி சிந்தித்துக் கொண்டே மனதை குழப்பிக் கொண்டு இருக்க , ஆட்டோக்காரர் வண்டியை நிறுத்திவிட்டு , ” நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.. நீங்க சொன்ன மருத்துவமனை இதுதானே மா …..!”
தன்னுடைய சிந்தனையில் இருந்து வெளியே வந்தவள் , ஆட்டோக்காரரைப் பார்த்து “ஆமாம் அண்ணா ” இந்தாங்க காசு….. அவரிடம் காசு குடுத்து விட்டு வேக வேகமாக மருத்துவமனைக்கு உள்ளே சென்றவள் , அங்கு ரிசப்சனில் இருந்த பெண்ணிடம் உதிரன் எந்த அறையில் உள்ளார் என கேட்டுக் கொண்டு , உதிரன் இருக்கும் அறையின் அருகில் செல்லும்போதே கண்களில் கண்ணீர் அருவியாக வந்துக் கொண்டு இருந்தது…..
உதிரனின் அறையின் வெளியே நின்று இருந்த ராமு…. , ‘நுவலியைப் பார்த்ததும் ‘ அவளின் அருகில் ஓடி வந்தவன் “தங்கச்சி நீ எதுவும் கவலைப்படாதே …!” மாப்பிள்ளைக்கு எதுவும் இல்லை…. நீ எதற்கும் பயப்பிடாதே மா …..! அவன் நல்லாதான் இருக்கான் , நீ உள்ள போய் பாரு மா ….
அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவள் ,…. அங்கே பெட்டில் வயிற்றில் கட்டு போடப்பட்டு அமைதியாக படுத்துக்கொண்டு இருக்கும் உதிரனை பார்க்க …..பார்க்க கண்கள் இரண்டும் கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு…. அவனைத் தொட்டு பார்க்க அவனின் அருகில் சென்றவள் , அவனின் கையை பிடிக்க போக , தீடீரென அவளின் மனதில் ஓர் எண்ணம் தோன்றி “அவளின் கைகள் இரண்டும் அந்தரத்திலே நின்றது….. நான் இதை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லையே …..! “இவன்தான் என்னை ஏமாற்றிவிட்டு இன்னைக்கு வேற ஒரு பெண்ணுக்கு தாலி கட்டி இருக்கானே ” மனதிற்குள் புலம்புகின்றேன் என்ற பெயரில் வாய்விட்டு வெளியே புலம்ப, அவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவனின் கை மீது பட்டு தெறிக்க ….
மெதுவாக கண்களைத் திறந்தவன் , அவளைப் பார்த்து “நான் எப்படி உன்னை ஏமாற்றி வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணேன்” என்று அதிர்ச்சியாக கேட்க…
நுவலியோ அவனை முறைத்து விட்டு, ராம் அண்ணா தான் என்கிட்ட போன்ல உனக்கு கல்யாணம் ஆகிடுச்சினு சொன்னாரு…..
அவளைப் பார்த்து முறைத்து விட்டு…. அவன் பதட்டத்தில் எது சொன்னாலும் அப்படியே நம்பி விட்டு வந்து என்னையே சந்தேகம் படுற…. என்ன …? ஏதுனு…? எதுவும் யோசிக்காத….? உன்னை கல்யாணம் பண்ணி ‘உன்னயே என்னால சமாளிக்க முடியல …?’ இதுல இன்னொரு கல்யாணம் வேற வா…. அவளின் கையை பிடித்து இழுத்து அவளின் அருகில் பெட்டில் உட்கார வைத்தவன் , அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருக்க….
அவளோ கடுப்பாகி, அப்ப எப்படி உனக்கு வயிற்றில் அடிப்பட்டது…..?
சாப்பிட்டு நான் வெளியே வரும் போதுதான் எனக்கு சுமதி கால் செய்து “அண்ணா இங்க இருக்கிற சில பேர் என்கிட்ட தப்பா நடந்துக்க நினைக்கிறாங்க , எனக்கு பயமா இருக்குனு அழ ஆரம்பித்துவிட்டாள் “…. நான் அவளுக்கு சமாதானம் செய்து விட்டு உடனடியாக அந்த இடத்துக்கு போனேன்…. அந்த அவசரத்துல உன்கிட்ட கூட ஒரு வார்த்தைக் கூட சொல்லமுடியாமல் போய்விட்டது…..
நுவலி, பதறிப்போய் அவளுக்கு என்னாச்சு….? இப்ப பத்திரமா இருக்காளா….? ஒரு பிரச்சனையும் இல்லையே….?
நீ பதட்டம் படாதே….! நான் அங்க போனபோது , சுமதியை சுத்தி நான்கு ஐந்து பேர் இருந்தாங்க… அதில் இருந்த ஒருத்தன் கையில் தாலியோட ரெடியா இருந்தான்… நான் போக கொஞ்ச நேரம் லேட் ஆயிருந்தாலும் அவன் சுமதியோட கழுத்துல தாலி கட்டி இருப்பான்….. அந்த நேரத்துல அவங்ககிட்ட பேசும் போது …,. சண்டையில வந்து முடிந்துவிட்டது…. அந்த சண்டையில் தான் ஒருத்தன் கத்தி எடுத்து குத்தி விட்டான்…. வேற ஒன்னும் இல்லை டி……
அவனுங்களை சும்மா விடக்கூடாது…. போலிஸ்கிட்ட சொல்லி ஜெயில்ல தூக்கி போடனும்… வாழ்க்கை முழுவதும் வெளிய வே வரகூடாது..ஒரு பொண்ணோட வாழ்க்கையோடு விளையாட நினைத்து இருக்காங்க படும் பாவிகள் …. அவனின் வயிற்றில் இருந்த கட்டை பார்த்துக்கொண்டே ,”உங்களுக்கு வலிக்கிறதா….? உங்கள குத்தனவ கை கருகி போக…. அவள் திட்டிக்கொண்டே இருக்க, அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது…..
அவளின் கண்ணீரை பார்க்க முடியாமல் “பச்” இங்க பாரு டி …. இப்படி அழுதா எனக்கும் கஷ்டமா இருக்கு …. அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன், “அவளைப் பார்த்து நீ யாரையும் திட்ட வேண்டாம் டி”… நானே அவங்களை நல்லா அடிச்சி தான் போட்டுவிட்டு வந்தேன்…. இன்னேரம் அவங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பாங்க… எனக்கு தெரிந்து அவங்க பெட்டை விட்டு எழுந்திரிக்க வே எப்படியும் ஒரு மூன்று மாதமாவது ஆகும்….. அவங்க இன்னொரு பெண்ணின் மீது தவறான பார்வை செலுத்தினாலே என்னுடைய அடி அவங்களுக்கு நியாபகத்திற்கு வரும்….
இவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்காங்களே …! எப்படி உனக்கு வலிக்கும் . அதை நினைக்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது…..
இங்க பாரு டி, அந்த கட்டு தான் பெரியது. ஆனா உள்ள இருக்கிற அடி சிறியது….. அடி பெரியதாக இருந்திருந்தால் எனக்கு சுயநினைவு இல்லாமல் இருந்து இருப்பேன்…. எனக்கு அடிப்பட்ட இடத்தில் ஒரு தையல் கூட போடவில்லை டி…. நீ இப்படி கவலைப்பட்டு அழ வேண்டிய அவசியம் இல்லை, புரிந்ததா…!
இப்பொழுது சற்று தன்னை நிதானித்து கொண்டு அவனைப் பார்த்து,” உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதுனு எதற்கு ராம் சொன்னாரு…?”
அடியேய்..! மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காதே…! அந்த நேரம் பார்த்து ராம் கதவை திறந்து கொண்டு உள்ளே வர…… அடேய் ராம் நீ எதுக்கு டா எனக்கு கல்யாணம் ஆனதுனு சொன்ன….? முதல்ல இவளுக்கு எதுக்கு போன் பண்ணி எனக்கு அடி பட்டதை சொன்ன….?
நுவலி , உதிரனைப் பார்த்து முறைக்க…..
ராம், தங்கச்சி மா ….! நான் பதட்டத்தில் கொஞ்சம் உளறி விட்டேன்.
நான் உன்கிட்ட போன்ல என்ன சொல்ல வந்தேன் என்றால் ….? கல்யாணம் ஆன மறுநாளே இப்படி கத்தி குத்து ஆகிவிட்டதேனு சொல்ல வந்தேன் …. அவன் காப்பாற்றி பெண் யாரு தெரியுமா….? அவனுடைய தூரத்து தங்கச்சி… என்னுடைய வருங்கால மனைவி .உனக்கும் வருங்கால அண்ணி ., அவ பெயர் சுமதி… அவ எனக்கு தான் முதல்ல போன் பண்ணி இருக்கா. என்னுடைய நம்பருக்கு ரீச் ஆகவில்லை என்பதால் உதிரனுக்கு போன் பண்ணி இருக்கா…. நீ வருவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி வரைக்கும் இங்கதான் இருந்தா… உதிரன் தான் அவளை வீட்டுக்கு போக சொல்லிவிட்டான்….. இவன் மருத்துவமனையில் இருக்கான் தெரிந்ததும் எனக்கு யாருக்கு என்ன சொல்றதுனு தெரியில …? அதனாலதான் உனக்கு போன் பண்ணேன்…. நீ அவனுடைய பக்கத்துல இருந்தா , ‘அவனுக்கும் ஆறுதலாக இருக்கும்னு நினைத்தேன் ‘……
சரிங்க அண்ணா, நான்தான் இப்ப வந்து விட்டேனே..! நீங்க வீட்டுக்கு போங்க. அண்ணி எப்படி இருக்காங்கன்னு பாருங்க…..
நீ சொல்வதும் சரிதான் மா…. அவ ஒரு பயந்தாங்கொல்லி … எதாவது வேணும்னா உடனே எனக்கு கால் பண்ணுமா….
சரிங்க அண்ணா…..
ராமு, இருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்…
ராமு அங்கிருந்து சென்றதும் …, உதிரனின் தலையிலே நுவலி ஒரு கொட்டு வைத்தால்…
“ஆ” கையால் தலையை தேய்த்துக்கொண்டே ,எதுக்கு டி என்னுடைய தலையில் கொட்டினாய் ….?
எதுக்கு டா என்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்ற…?
நீ இப்படி ஃபீல் பண்றது எனக்கு வருத்தமா இருக்குடி …. சரி அதை விடு, என்ன எதுக்கு டி “டா” போட்டு பேசின…?
நீ மட்டும் எதுக்கு டா என்னை “டி” போட்டு பேசின…?
அடியேய்…..! நீ என்னுடைய பொண்டாட்டி … உன்னை” டி “போட்டு கூப்பிட எனக்கு மட்டுமே முழு உரிமையும் உண்டு….
அதே போல எனக்கும் உன்னை “டா” போட்டு கூப்பிட உரிமை உண்டு…
அந்த உரிமை நேற்று எங்க போயிருந்ததாம்…. ? என்கிட்ட முறுக்கி கொண்டு இருந்தியே , இப்ப மட்டும் என்ன டி உனக்கு….
அவள் அமைதியாக முகத்தை திருப்பிக் கொள்ள….
இப்படி முகத்தை திருப்பிக் கொள்ளாத டி….. அவளின் கையை பிடித்து இழுக்க, அவளோ அவனின் நெஞ்சின் மீது விழ….. அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தவன் , அவளின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு ….., தன்னுடனே உறங்க வைத்தான்….. இருவரும் சிறிது நேரத்தில் உறங்கி விட்டிருந்தனர்….
Ennama posukunu aven mela sanjutta … Divorce pathi ethuvum kekala… Nee kepannu Nan wait pannittu Vera irunthen…venba ma nee ipdi panra…
Thank you sago 🥰