Loading

இருவருக்கும் அந்த இரவு ஒருவித உணர்வை ஏற்படுத்தி உறங்க வைத்து இருந்தது. புரிதல் என்ற ஒன்று இருந்தால் போதும் பூகம்பமே வந்தாலும் பிரிக்க முடியாது. தன்னவனின் நினைவில் சுகமாய் துயில் கொண்டு இருந்தாள் உதிரனின் உமையாள்.

         இருவருக்கும் இரவு நீண்டு இருக்க ஒருவழியாக இரவின் முடிவு பகலின் தொடக்கம் ஆனது. இரயில் பயணம் ஒருவழியாக முடிந்தது. இரயில் கடைசி ஸ்டேசனில் நிறுத்தம் கொண்டு ஓய்வு எடுக்க , தன்னுடைய பையை எல்லாம் எடுத்துக்கொண்டு இரயில்வே ஸ்டேசனை விட்டு வெளியே சென்று அங்கு இருந்து ஸ்ரீநகருக்கு ஆட்டோவில் சென்றான். அந்த காலை வேளையில் பணியின் ருத்ர தாண்டவம் அதிகமாகவே இருந்தது ஜம்மு காஷ்மீரில். தங்களின் இரகசிய பயிற்சி மையத்திற்கு சென்றான் . அந்த பயிற்சி மையம் வெளியே இருந்து பார்க்க ஒரு பெரிய வீட்டின் அமைப்பைக் கொண்டு இருந்தது பார்ப்பவரின் பார்வை அது ஒரு அழகிய வீடு என்றே அவர்களின் மூளையில் பதிந்து விடும் . ஆட்டோவிற்கு காசு குடுத்து விட்டு தன்னுடைய பயிற்சி மையத்தின் உள்ளே செல்ல ,காவலாளி இவரைப் பார்த்ததும் எழுந்து சல்யுட் அடித்து விட்டு விசில் ஊதினார். அவருக்கு தலை அசைத்து விட்டு” எதுக்கு இவர் இப்படி விசில் சத்தம் கொடுக்கிறார் என்று யோசித்துக்கொண்டு இருக்க” அவனின் யோசனைக்கு பலனாக அந்த பயிற்சி மையத்தில் இருந்து பல போர் ஓடிவந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் இவனின் பையை வாங்கிகொண்டு ஓடிவிட்டனர் கடைசியாக இவளின் தோளில் மாட்டி இருந்த பையை மட்டும் விட்டு வைத்து இருந்தனர். 

      உதி, அந்த காவலாளியை திரும்பி பார்க்க அவரோ அசடு வழிந்த படி சிரித்துக்கொண்டு இருந்தார். இவன் எப்பொழுது எல்லாம் ஊருக்கு சென்று வருகின்றானோ அப்பொழுது எல்லாம் அவனின் துணியை தவிர உணவு பொருட்கள் அனைத்தும் அவர்களின் வசமே இருக்கும். உதிரனுக்கு சிறிது கொடுக்காமல் அவர்களே சிறிது நேரத்தில் காலி செய்துவிட்டு ” மச்சா சூப்பரா இருந்தது டா’ தமிழ்நாட்டு உணவே தனி சுவைதான் டா ! நாக்கை விட்டு ருசி போகவே போகாது”. வனஜா ஆசையாக தயாரித்து தரும் திண்பண்டங்கள் எல்லாம் இவர்களின் கையில் தான் இருக்கும். சிறிது நேரம் கழித்து மீண்டும் அனைவரும் ஓடிவந்து இவனை சுற்றி நின்றுக்கொண்டு ” ஹாப்பி மேரிட் லைப் நண்பா ” என்று அணைத்து ஒவ்வொருவராக வாழ்த்துக் கூறினார்கள். அடுத்ததாக கட்டிகையை கொண்டு வந்து உதியை கட் பண்ண சொல்லி அனைவரும் மாறி … மாறி ஊட்டி மகிழ்ச்சி அடைந்தனர் . அந்த மகிழ்ச்சியை தன்னுடைய போனில் பதிவு செய்துக் கொண்டான் உதிரன். இதுவே இவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்க மறுபடியும் அவனை அதிர்ச்சியாக்கும் விதமாக ஒரு பரிசினை கொடுக்க அதை பிரித்து பார்த்தவனின் கண்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது. அவர்கள் அவனுக்கு கொடுத்தது ஒரு தங்க செயின் .அந்த தங்க செயினில் ஒரு டாலரும் இருந்தது, அதை ஓபன் செய்ய உதிரனின் புகைப்படமும் நுவலியின் புகைப்படமும் இருந்தது. அந்த புகைப்படத்தை தொட்டால் ஜி.பி.எஸ் போனில் இணைக்கும் ஆப்சன் இருந்தது. இன்னும் என்னென்னவோ ஆப்சன்கள் இருந்தது. 

         வா தல நீ இல்லாம இந்த பதினைந்து நாட்களும் ரொம்ப போரா இருந்தது டா! நீ இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது டா. ஆனா என்னுடைய நண்பன் கல்யாணம் ஆகி குடும்பஸ்தன் ஆகிவிட்டான் என நினைக்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்குடா. இப்பதான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு டா என் நண்பா என்று உதிரனை அணைத்துக் கொண்டான் மன்வேந்திர சிங். 

     உதி, என்னடா உன்னுடைய முகமும் உன்னுடைய குரலும் சரியில்லை, என்ன ஆச்சு டா? எதாவது பிராபளமா ? சிங்கின் அம்மாவின் பூர்வீகம் தந்தை பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர். இவர்கள் இவரின் குடும்பத்தை சேர்த்து மன்வேந்திர சிங் என்று பெயர் வைத்துவிட்டனர். ஊரில் ராம் எப்படி நண்பனோ அதே போல சிங்கும் உதிரனுக்கு நண்பன். 

      சிங், அ…. து வா மச்சா ? அது வந்து ,

அதற்குள் இன்னொரு நண்பன் வந்து நீ ஊருக்கு போனதால் உன்னுடைய இடத்துக்கு இன்னொரு கர்னல் வந்தாரு டா . அவரு பேரு கூட மேத்தா உனக்கும் தெரியுமே! அந்த தாத்தா தான் டா எல்லோரிடமும் ரொம்ப கடுமையாக நடந்து கொண்டார் . எப்ப பாரு எங்களை திட்டிக்கொண்டே இருந்தாரு டா ,ஒருநாள் எங்களை ஒருத்தர் வீட்டுக்கு பாதுகாப்புக்கு போக சொன்னார் நாங்க எல்லோரும் அமைதியா போய்விட்டோம் “நம்ம சிங் தான் யார் சார் அவரு? அவருக்கு எதுக்கு நாங்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும் னு கேள்வி கேட்டான் ” அப்ப இருந்து இவனை எதாவது சின்ன சின்ன விசயத்திற்கு கூட திட்டிக்கொண்டே இருந்தாரு டா .அதனால் தான் இவன் சோகமாக இருக்கான்.

     உதி, ஏன்டா ஒரு கர்னல் சொன்னா அதை செய்ய வேண்டிய கடமை உங்களுடையது . அவரு சொன்ன வேலையை நீங்க ஏன் செய்யாம விட்டீங்க? அவரு பாதுகாப்பு குடுக்க சொன்னா போய் குடுக்க வேண்டியது தானே!

        “மச்சான் ” அந்தாளு பாதுகாப்பு குடுக்க சொன்னது ஒரு தலைவனுக்கோ இல்ல ஒரு நல்ல மனிதனுக்கோ இல்லை டா. அவன் யாரோ ஒரு பணக்காரன் அவனை யாரோ கொலை மிரட்டல் செய்தாங்க என்று இவரு பணம் வாங்கிக்கொண்டு எங்களை போய் காவல் காக்க சொன்னாரு , உடனே நம்ம சிங்குக்கு கோவம் வந்துவிட்டது கேள்வி கேட்டு விட்டான் . உடனே அந்த ஆளு என்னையே நீ கேள்வி கேட்கிறாயானு? இவனை திட்ட ஆரம்பித்துவிட்டார்.  

    உதி, சரிடா இதுக்கு போய் ஏன் முகத்தை இப்படி வச்சி இருக்க ? நான் இன்னைக்கே டியுட்டில ஜாயின் பண்றேன் டா சரியா. அப்பறம் மேத்தா சாரும் அவருடைய இடத்திற்கு போய்விடுவாரு “அவனை சமாதானம் படுத்தும் விதமாக கூற “. சிங்கின் முகம் அப்பொழுதும் சோகமாகவே இருந்தது. சிங்கிடம் தனியாக பேசிக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு அந்த விசயத்தை விட்டுவிட்டான். உதிரன் மீண்டும் வந்து விட்டான் என்ற சந்தோசத்தில் அனைத்து வீரர்களும் இருக்க , உதிரன் குளித்துவிட்டு ரெடியாகி நேராக ஆபிஸ் சென்று ” டியுட்டியில் ஜாயின் செய்து விட்டு அப்படியே மேத்தாவைப் பார்த்து “இத்தனை நாட்கள் என்னுடைய டீம் வீரர்களை பத்திரமாக பார்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி சார் ” இது என்னுடைய கடமை உதிரன் சார் ஒரு வலிய வரவழைக்கப்பட்ட புன்னகையை உதட்டில் இருந்து உதிர்த்து விட்டு மேத்தா சென்றுவிட்டார். ஆபிசில் இருந்த சக கர்னல் எல்லோரும் உதிரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சில பரிசு பொருட்களை வழங்கினார்கள். இதில் மேத்தா மட்டும் வித்தியாசமாக உதிரனின் கண்களுக்கு தெரிந்தார். சரி அவரை அப்புறமாக பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து அங்கிருந்து தன்னுடைய அறைக்கு வந்தான் . தன்னுடைய டீம் வீரர்கள் அனைவருக்கும் இன்று ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு தானும் உறங்கலாம் என்று நினைத்தான் . அவனுடைய மனமோ நுவலிக்கு போனில் அழைப்பு விடுக்கும் மாறு கட்டளை இட்டது. தன்னுடைய போனை எடுத்தவன் நுவலிக்கு அழைப்பு விடுக்க, ஒரே ரிங்கிலே போனை அட்டன் செய்தாள்.

          ஹாய் பொண்டாட்டி என்ன பண்ற ? இந்த மாமாவை மிஸ் பண்ணியா?

நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.

         நுவலி, நான் எல்லாம் உன்னை மிஸ் பண்ணவில்லை. நீயா எதாவது நினைத்துக்கொண்டு இருந்தா? அதற்கு நான் எதுவும் பண்ண முடியாது . நான் நல்லா சாப்பிட்டு உன்னுடைய தொந்தரவே இல்லாம அத்தை மாமா பாட்டினு ஜாலியா இருக்கேன். உன்னை நினைப்பது தான் எனக்கு வேலையா? போயா போய் வேலை இருந்தால் பாரு. 

அவனை வெறுப்பேற்றும் வேலையை காலையிலேயே ஆரம்பித்து இருந்தாள். இவள் கூறுவதில் அவன் கடுப்பாவான் என்டு என்று நினைத்து அவள் கூற,

        உதி, சிரித்துக்கொண்டே “என்னடி பொண்டாட்டி நீ எவ்வளவு தான் என்னை வெறுப்பேத்தினாலும் நான் எல்லாம் வருத்தப்பட மாட்டேன்”. நீ என்னப் பண்ணி இருப்பேன் என்று எனக்கு தெரியும் டி கேடி. நீ என்னையே நினைத்துக்கொண்டு தான் இருப்பாய்னு எனக்கு தெரியும் . உன்னுடைய வாய் மட்டும் தான் இப்படி பொய் பேசுது ஆனால் உன்னுடைய கண்கள் கலங்கிக் கொண்டு தான் இருக்குனு எனக்கு தெரியும்.

        “அச்சச்சோ” இவன் என்னுடைய எண்ணத்தையும் மனதையும் படித்த மாதிரியே சொல்றானே!  

          என்ன கருவாச்சி சத்தத்தையே காணோம் . என்ன இவன் நம்ம நினைத்ததை அப்படியே சொல்லி விட்டானே எப்படினு தானே யோசித்துக்கொண்டு இருக்க?

          நுவலி, ” டேய் நிறுத்து டா ” என்ன நீ நேர்ல இருந்து பார்த்து சொல்ற மாதிரியே சொல்ற .அப்பறம் நான் ஒன்றும் கருவாச்சி இல்ல நீ தான் டா கருவாயன். என்னைய வா கருவாச்சினு கூப்பிடுற நேர்ல மட்டும் மாட்டுன அப்படியே கைமா தான்டா. 

          போதும் நீ என்னை திட்டியது . நீ இப்ப என்ன பண்ற ? உண்மையை சொல்லு ? 

            நான் உன்னுடைய அறையை இல்ல… இல்ல நம்ம அறையை சுத்தம் செய்துக்கொண்டு இருக்கேன். ஏன் மாமா உன்னுடைய அறையில் ஒரு லவ் லட்டர் கூட கிடைக்கல? நீ என்ன சாம்பார் சாதம் மாதிரி சைவ பிள்ளையா?

          நான் சாம்பார் மாதிரி சைவ பிள்ளையா இருந்து இருந்தால் உன்னை ஏன்டி கல்யாணம் பண்ணப் போறேன்? தனியாகவே வாழ்ந்து இருக்க மாட்டேனா? என்னைப் பார்த்தால் உனக்கு என்ன சாமியார் போல தோன்றுகிறதா? எனக்கும் லவ்வுக்கும் ரொம்ப தூரம். நான் காலேஜ் படிக்கிற வரைக்கும் லவ் என்ற வார்த்தையே ஒரு தவறான வார்த்தை என்று தான் எல்லோரும் சொல்லுவாங்க. யாராவது எங்கையாவது “லவ் பண்றாங்க இவங்க” அப்படி சொன்னால் போதும் அந்த ஜோடியை ஏதோ தப்பான செயல் செய்யும் மனிதர்களைப் பார்ப்பது போல பாப்பாங்க. இதுல சில பேர் இன்னும் ஒருபடி மேல போய் “இவங்க எல்லாம் தீண்ட தகாத வர்கள்” என்று முத்திரையை யே குத்திவிடு வாங்க. எனக்கு அந்த வயசுல காதலை பத்தி பெருசா எதுவும் தெரியாது? தெரியாத விசயத்தில் எதுக்கு மூக்கை நுழைக்க வேண்டும்னு நினைத்து நான் அந்த பக்கம் போனதே இல்லை. காலேஜ் முடித்தபிறகு இராணுவத்தில் சேரவேண்டும் என தோன்றியது உடனே கல்லூரியில் பி.ஜி படித்தேன். படிக்கும் போதே இராணுவத்திற்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன் . என்னுடைய பி.ஜி கல்லூரி வாழ்க்கை முடியவும் இராணுவ வாழ்க்கை தொடங்கவும் சரியாக இருந்தது. அப்படியே இராணுவத்தில் சேர்ந்து சில வருடங்கள் கழித்து கர்னல் ஆகி இன்று உனக்கு புருசனாகி இப்பொழுது உன்கிட்ட பேசிக்கொண்டு இருக்கின்றேன் .  

            “சூப்பர் மாமா நீ ” அப்போ உன்னுடைய வாழ்க்கையில் வந்த முதல் காதலும் நான் தான் முதல் பெண்ணும் நான்தான் கடைசி பெண்ணும் நான் தான். அவள் மகிழ்ச்சியாக சொல்லிக்கொண்டே போக, அவளுக்கு அப்பொழுது தான் தோன்றியது “உதி இன்னும் பயண களைப்பில் தான் இருப்பான் அவன்கிட்ட போய் கதை பேசிக்கொண்டு இருக்கோமே என்று ” . சாரி மாமா நீயே சோர்வாக இருப்ப உன்கிட்ட போய் நானும் கதை அளந்து கொண்டு இருக்கேன் . நீ இப்ப சமத்தா தூங்கி எழுந்து எனக்கு போன் பண்ணு “லவ் யு மாமா “.  

        லவ் யு டூ டி பொண்டாட்டி. போன் கட் ஆனதும் அவன் அப்படியே கட்டிலில் படுத்து உறங்க ஆரம்பித்தான். 

       நுவலி , தன்னுடைய துணி பையை எடுத்து, அதில் வைத்து இருந்த விவாகரத்து கவரை எடுத்து அதில் இருந்த பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பித்து இருந்தாள். 

        ” ஹாய் மை டியர் பொண்டாட்டி” இந்த பேப்பரை நீ படிக்கிறாய் என்றால் நீ என்னுடைய மனைவி இப்பொழுது. இதில் எழுதி வைத்து இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மை. இந்த பேப்பரில் இருக்கும் வரிகள் கவிதையா? இல்ல கதையானு நீ தான் முடிவு பண்ணனும் . நான் உன்னை முதன்முதலில் பார்க்கும் போதே எனக்கு ரொம்ப …. ரொம்ப பிடித்து விட்டது. என்னுடைய எண்ணங்களும் மனதும் தான் உன்னை முதன் முதலில் காட்டிக் கொடுத்தது. உன்னை பார்த்த அந்த நொடியே என்னுடைய மனது உன்னுடைய பின்னாடியே வந்து விட்டது நானும் எவ்வளவோ சொல்லியும் என்னுடைய மனம் கேட்கவே இல்லை கடைசி வரைக்கும். கேட்டு இருந்து இருந்தால் உன்னை ஏன் நான் கல்யாணம் பண்ணப் போறேன் ? உன்னைவிட அழகான பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி இருப்பேன். “அடிங்க நேர்ல நீ வா மாமா உன்னை என்னப் பண்றேன் பாரு ? என்னை விட அழகான பொண்ணு கேட்கிறதா உனக்கு ?”. நீ இப்ப என்னை திட்டுகின்றாய் என்று தெரியும் ஆனா அப்படி எல்லாம் இந்த மாமாவை திட்டக்கூடாது. எனக்கு உன்மேல கொஞ்சம் இஷ்டம் இல்லை கொள்ளை இஷ்டம் .காதல் ஒரு முறை தான் வரும் அது உன்னுடன் உன் மேல எனக்கு வந்து விட்டது. காதலும் எச்.ஐ.வி யும் ஒன்றுதான் இரண்டிற்கும் இன்னும் மருந்தே கண்டுபிடிக்கவில்லை . இதில் இரண்டிலுமே தோற்றவர்கள் நேராக மரணத்தை தான் பரிசாக பெறுவார்கள். நான் கொஞ்சம் வித்தியாசம்னு நினைக்கின்றேன் ஏன்னா ? மரணத்தின் கூடவே தினமும் போராடி விட்டு உன்னையும் காதலிக்கின்றேன் பாரு அப்ப நான் கொஞ்சம் வித்தியாசம் தானே!. நான் இதுவரைக்கும் என்னுடைய வேலைக்கு சமமாக எதையும் நினைத்தது இல்லை ஆனால் உன்னைப் பார்த்த பிறகு அந்த எண்ணம் எல்லாம் தவிடுபொடியாகி என்னுடைய வேலையும் நீயும் ஒன்றென ஆகிவிட்டீர்கள். காலம் எப்படி எல்லாம் யார் யார்கூடவோ முடிச்சி போடுகிறது நாமும் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றோம்.  

         ஏம்மா’ நுவலி இங்க வா மா என பாட்டி அழைக்க. “இதோ வந்துவிட்டேன் பாட்டி என்று அந்த பேப்பரை மடித்து வைத்துவிட்டு சென்றுவிட்டாள்”.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்