Loading

சர்மாவின் இன்னொரு கல்யாண பரிசு இருக்கு என்றதும் ,”அது என்னப் பரிசு என்ற ஆர்வத்தில் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தான் உதி”.

    “என்ன டா ? உன்னுடைய முகத்தில் பெரியதாக ஆர்வம் தெரியவில்லை ? உனக்கு இந்த கவர்மெண்ட் கொடுக்கும் பரிசு வேண்டாமா ?

          பரிசு வேண்டாம் என்றால் அப்படியே அமைதியா விட்டு விடுவீங்களா என்ன? நீங்களும் உங்க கவர்மெண்ட்டும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்க போறீங்க என்பதை மட்டும் நான் உறுதியா சொல்வேன் ஆனா என்ன மாதிரியான ஆப்பு என்பது தான் தெரியவில்லை. 

           ” இது தான் டா எனக்கு உன்கிட்ட ரொம்ப பிடிச்ச விசயம் ” சரியாக கணித்து விட்டாய். கவர்மெண்ட் குடுக்கும் பரிசு உனக்கு ஆப்பு இல்லை அதற்கும் மேல என சிரித்துக்கொண்டே , நீ இன்னும் இருபத்தி ஐந்து நாட்களில் தமிழ்நாட்டிற்கு போக போகிறாய் அதுவும் உங்க ஊருக்கு  

            என்னது என்னுடைய ஊருக்கா? இதுல எந்த இடத்தில் ஆப்பு வைத்து இருக்கீங்கனு சொல்லுங்க? உங்க கவர்மெண்ட் என்னை மறுபடியும் போய் உன்னுடைய கல்யாண வாழ்க்கையை கொஞ்ச நாள் சந்தோசமாக வாழ்ந்துவிட்டு வா என்றெல்லாம் சொல்லமாட்டாங்களே ? 

           நீ சொல்வதும் சரிதான் டா’ சரியான ஊர் பெயர் தெரியவில்லை ஆனாலும் உங்க ஊருக்கு அருகில் என்று தான் நினைக்கின்றேன் ” அந்த ஊரோட பெயர் என்ன என்பதை அவர் யோசித்துக்கொண்டு இருக்க “.

       பொறுமை இல்லாதவனாய் “நீங்க ஊர் பெயரை சொல்லவே வேண்டாம் எப்படியும் அங்க போகும் போது ஊர் பெயர் என்ன என்பது தெரிய தான் போகிறது “. நீங்க விசயம் என்ன என்பது மட்டும் சொல்லுங்க?

            அந்த ஊரில் நம்ம நிதி அமைச்சர் ஒரு தொழிற்சாலையை திறந்து வைக்க போகிறார் அதற்காக நீயும் உன்னுடைய டீம் வீரர்களும் அந்த ஊருக்கு போக போறீங்க! அவருடைய பாதுகாப்பிற்காக.

              அதுக்கு எதுக்கு நாங்க போகனும்? அந்த ஊரில் உள்ள காவல் அதிகாரிகளே போதுமே அவருக்கு பாதுகாப்பு கொடுக்க

நாங்க எதுக்கு? 

          அந்த ஆளை யாரோ கொலை மிரட்டல் விடுத்து இருக்காங்க அதனால் பயந்து இருக்காரு டா. அவருக்கு உயிர் பயம் அதிகம் டா இன்னும் பல பேரின் உயிரை எடுத்து அதில் இருந்து வரும் பணத்தால் இன்னும் கொஞ்ச வருசம் உயிர் வாழவேண்டும்னு ஆசை அவருக்கு அதை ஏன் நாம கெடுக்கிறது . நீ போய் அவருக்கு பாதுகாப்பு கொடுத்து விடு டா.

அந்த ஆளு வேற பாதுகாப்பு கொடுங்க சார்னு கெஞ்சினான் .நம்ம அரசாங்கமும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்கிறது நான் என்ன டா செய்வது?.

           அந்த ஆளுக்கு வேற யாராவது கொலை மிரட்டல் விடுத்து இருப்பாங்களா? அவன் சும்மா கதை அளந்து விடுகின்றான் . நீங்களும் அவனுக்கு போய் பாதுகாப்பு கொடுக்க சொல்றீங்க? எனக்கு வர கோவத்திற்கு அந்த ஆளை நானே தூக்கி போட்டு மிதிப்பேன் .

         ஏன்டா இப்படி கோவம் படுகின்றாய்? அந்த ஆளு உன்னை என்னை பண்றாரு டா ? 

           நீங்களே! சொல்லுங்க பா வாய்க்கு வந்த பழத்தை சாப்பிட முடியாமல் போனது போல இருக்கு. என்னை எங்க ஊருக்கு அனுப்புவீங்க ஆனா என் குடும்பத்தை பார்க்க முடியாத மாதிரி பண்ணுவீங்க இதற்கு நான் அமைதியா இருக்க வேண்டுமா? மக்கள் பணத்தை திருடி சாப்பிடுற அவன் வாழ்ந்தால் எனக்கு என்ன இறந்தால் எனக்கு என்ன ? அந்த அரசியல்வாதி பொறுப்பில் இருக்கும் போதே இறந்துவிட்டார் அவருக்கு ஒரு சிலையை வைத்து பணத்தை கோடி கோடியாய் செலவு பண்ணி நாட்டை கடனாளியாக ஆக்கி விடுவீங்க! அவனுடைய உற்றார் உறவினர்கள் எல்லோருக்கும் ராஜ மரியாதை கொடுத்து கவனிப்பீங்க! அவங்க என்னவோ தேசத்திற்காக பாடுபட்ட மாதிரி , அந்த அரசியல்வாதியும் தேசத்திற்காக உயிர்விட்டவன் மாதிரி அவனை புகழ்ந்து பெரிய ஆளாக்கி விடுவீங்க.இதுல நடுவில் மாட்டிக் கொண்ட மக்கள் தான் “எலி கூண்டில் மாட்டிக்கொண்ட எலியை போல திண்டாடுவார்கள்”. 

         ஏன்டா உனக்கு அந்த அரசியல்வாதி மேல அம்புட்டு காண்டு வைத்துக்கொண்டு இருக்க?

       நீங்களே சொல்லுங்க பா ? அவனால் எத்தனை மக்கள் உயிர் இழந்து போனார்கள் உங்களுக்கும் தெரியும் தானே?. அப்பவும் அவனுடைய பணமனசு அடங்காம நம்ம குடும்பமாக இருக்கும் இராணுவத்தில் இருந்து எத்தனை அப்பாவி வீரர்களை அவனுடைய சுயநலத்திற்காக ஈவு இரக்கமே இல்லாமல் கொன்றான். அப்ப நம்ம நாட்டு அரசாங்க என்ன பண்ணியது அமைதியாக தானே இருந்தது . இதே அரசாங்கம் அந்த நேரத்தில் அந்த அரசியல்வாதிக்கு என்ன பண்ணியது? உங்களுக்கும் தெரியும் தானே? அவனுடைய வீட்டுக்கு மறுபடியும் எங்களையே பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்துவிட்டு பின்னாடியே வந்து அந்த ஆளுக்கு ஆறுதல் வேற சொல்லியது ” இந்த காமெடியை நான் எங்க போய் சொல்வேன்” . எனக்கு வருகின்ற கோவத்திற்கு இந்த அரசியல்வாதிகள் எல்லோரையும் தூக்கி தீயில் போட்டு கொல்லனும். 

            போதும் டா ரொம்ப எமோஸ்னல் ஆகுற. நம்ம வீரர்கள் இறந்ததற்கு அந்த அரசியல்வாதி தான் காரணம் என்று எப்பொழுது கண்டுபிடித்தாயோ அப்பவே ஒரு வழி ஆக்கி விட்டாய் அந்த ஆளை .அந்த ஆளு உன்கிட்ட வாங்கின அடியில் கொஞ்சம் இல்லை ரொம்பவே பயந்து போய் பல மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே இல்லை. நம்ம அரசாங்கம் செய்ய வேண்டியதை நீ ஒருவனாய் தனியாக நின்று அவனுக்கு தண்டனை குடுத்து விட்டாய் தானே! அப்புறம் என்னடா உனக்கு இப்ப கோவம்? அமைதியாய் இருடா.

            நீங்க என்ன சொன்னாலும் என்னுடைய கோவம் அடங்காதுனு சொல்வதை விட மாறாது . அந்த ஆளுக்கு மக்கள் முன்னாடி தண்டனை வாங்கி கொடுத்து அவனின் பொய்யான பெயரையும் புகழையும் சேர்த்து பறிக்கனும் அப்பதான் என்னுடைய மனசு ஆறும். 

            போதும் டா இந்த டாப்பிக்கை இதோட நிறுத்து விட்டால் இன்று முழுவதும் அவனை பற்றியே பேசிக்கொண்டு இருப்பாய். என்னுடைய பொண்ணு போன் நம்பர் கொடு டா நான் அவள் கிட்ட கொஞ்சம் பேசவேண்டும்.

          நீங்க எதுக்கு என் பொண்டாட்டிகிட்ட பேசவேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

            “இங்க ஒருத்தன் உன்னை பற்றி நினைக்காமல் ஒரு அரசியல்வாதி பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கான்” நீ அவனிடம் என்னவென்று கேளு மா கொஞ்சம் . அவன் தான் உன்னுடைய கணவன் உதிரன் என்பேன்.

          ஏன் உங்களுக்கு இந்த வேலை வயதான காலத்தில்? அவளே என் மேல கொஞ்சம் கோவத்தில் இருக்கா “நான் அவளிடம் இராணுவத்தில் பணி புரிகின்றேன் என்பதை மறைத்து கல்யாணம் பண்ணிக் கொண்டேன் ” என்கிறாள். இதில் நீங்க வேற போன் போட்டு அவளுக்கு மட்டும் இப்படி ஒரு விசயத்தை சொன்னீங்க என்றால் என்னோட நிலமை என்ன ஆகும் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் .

            சர்மா சிரித்துக்கொண்டே , யார் மேலயாவது கொஞ்சம் பயம் இருக்க வேண்டும் தானே உனக்கு. அது என்னுடைய பெண்ணாக இருந்தால் நல்லது தானே! 

           ஆமா என்னை விட நேற்று வந்த மகள் தான் உங்களுக்கு முக்கியமா போச்சு . என்னை அவகிட்ட போட்டு குடுக்கின்றேன் என்கிறீர்கள் போங்க நான் போறேன்.

         அவனை தன்னோடு அணைத்துக்கொண்டு சின்னக் குழந்தை மாதிரி ஏன்டா கோபித்துக் கொள்கிறாய்? 

கணவனும் மனைவியும் ஒன்றுதானே! அவன் “ஆமாம் ” என்று தலையை ஆட்ட, அப்ப நீயும் நுவலியும் எனக்கு ஒன்றுதான் போய் உன்னுடைய டீம் வீரர்கள் எல்லோரையும் பயிற்சி செய்ய சொல்லு இன்னும் கொஞ்ச நாட்களில் நீங்க உங்க கடமையை ஒரு துரோகிக்கு செய்யனும் . அவனும் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து மீண்டும் தங்களுடைய பயிற்சி மையத்திற்கு வந்தான். 

        “ஹாய் ” பிரண்ட்ஸ் எல்லோரும் கேளுங்க ” அனைவரும் அவன் என்ன சொல்லப் போகின்றான் என்ற ஆவலில் உதிரனை நோக்கி தன்னுடைய பார்வையை செலுத்த , உதி, நம்ம தேசத்தை உயிராய் நேசித்து காத்து வரும் எனது நண்பர்களே! இதுவரைக்கும் நம்முடைய பங்களிப்பை சரியாக செய்து வந்தோம். நாம் பாதுகாப்பு கொடுக்கும் மனிதர் நல்லவராக இருந்து இருக்கலாம் இல்லை கெட்டவர்களாக இருந்து இருக்கலாம் ஆனால் அவர்களின் பதவி ஒன்றே நம்மை அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான முக்கிய காரணமாக இருந்தது. இப்பவும் நாம ஒரு மனிதருக்கு பாதுகாப்பு தர போகின்றோம் அவர் யார் என்றால் நமது தேசத்திற்காகவே பாடுபடும் நிதி அமைச்சர் அவருக்கு தான். அனைவரும் அவனை கேள்வியாக பார்க்க . உதி, உங்களின் எண்ணங்கள் எமக்கு புரிகின்றது இருந்தும் அவர் வகிக்கும் பதவி தான் நம்முடைய அரசாங்கம் அவருக்கு பாதுகாப்பு அளிக்க முக்கிய காரணம். அந்த கூட்டத்தில் இருந்த ஒரு வீரன் எழுந்து ” கர்னல் நீங்க சொல்ல வேண்டியது தானே! அந்த அயோக்கியனுக்கு எங்களால் எந்த பாதுகாப்பையும் கொடுக்க முடியாது என்று. அவனால் தானே என்னுடைய நண்பனை நான் இழந்தேன் என்னுடைய கண்ணு முன்னாடியே அவனை கொன்றார்கள் ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாத அளவிற்கு கையால் ஆகாதவனாய் இருந்தேன் இப்பொழுதும் இருக்கின்றேன். அவனோ என்னுடைய கண்ணு முன்னாடியே சந்தோசமாக தானே வாழ்ந்துகொண்டு இருக்கின்றான் ” அவனின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கண்ணத்தை நனைக்க ” இன்னொரு வீரர் எழுந்து அவனை அணைத்து கண்ணீரை துடைத்து விட்டார். அன்று நடந்த சம்பவம் அனைவரின் மனதையும் முள்ளால் தைத்த இருந்தது. 

      உதி, இங்க பாரு நண்பா எதையும் கண்ணீரால் சாதிக்க முடியாது? நம்முடைய தைரியத்தினால் மட்டுமே நம்முடைய எண்ணத்தை நிறைவேற்ற முடியும். உன்னுடைய கண்ணீரையும் வலியையும் உனக்குள்ளேயே ஆற்றலாக மாற்றி வை நேரம் வரும் போது அந்த ஆற்றலை வெளிப்படுத்தி எதிரியை அழித்து விடலாம். இப்ப நமக்கு தேவை பொறுமையாக செயல்படுவது தான் புரிகின்றதா? “ஆமாம் ” என்பது போல தலையை ஆட்ட ,”தட்ஸ் மை பாய் ” என்று அவனை ஆதரவாக அணைத்துக் கொண்டான் உதிரன். 

             இன்னொரு வீரர் எழுந்து நாங்க எத்தனை நாள் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் கர்னல் ?

       உதி, சரியாக எத்தனை நாட்கள் என்பது எனக்கும் தெரியவில்லை. அவருக்கு நாம எல்லோரும் சேர்ந்து அவருடைய வீட்டில் பாதுகாப்பு தர போவதில்லை ? அவர் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் தொழிற்சாலை ஒன்றை திறக்க போகிறார் ,அங்குதான் அவருக்கு நாம் பாதுகாப்பு தர போகின்றோம். எனக்கு தெரிந்த வரைக்கும் எப்படியும் ஒரு பத்து நாட்களாவது அங்கு இருக்க வேண்டிய சூழ்நிலை அமையும் என்று நினைக்கின்றேன்.

          ஏன் கர்னல் நாம அங்க போய் அவருக்கு பாதுகாப்பு தர வேண்டும் ? அவரு என்ன அங்க போய் நல்லதா பண்ணப்போறாரு? தொழிற்சாலை தானே திறக்க போகிறாரு அதற்கு அங்கு இருக்கும் காவல்துறையினரே போதுமே!

          உதி, நீ சொல்வது சரிதான் ஆனால் அவருக்கு யாரோ கொலை மிரட்டல் விடுத்து இருக்காங்கனு அரசு அவருக்கு பாதுகாப்பாக நம்மை போக சொல்லுது .

            என்னது! “அந்த ஆளுக்கு கொலை மிரட்டல் வந்ததா? அந்த ஆளு யாரையும் கொல்லாமல் இருந்தால் சரி ” ஒருவர் இதை கூறிவிட்டு சிரிக்க மற்றவர்களும் அதை ஆமோதிப்பதை போல சிரித்தனர். 

       உதி, “ஓகே பிரண்ட்ஸ் ” சிரித்தது போதும். நாம இப்ப நம்மளை எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு ” அந்த ஆளு மறுபடியும் ஏதாவது பிளான் பண்ணி அப்பாவி மக்கள் இல்லைனா நம்மில் சிலரை பிளான் பண்ணி கொல்லவும் திட்டம் போட்டு இருக்கலாம்” ஏன் இந்த சந்தேகம் எனக்கு தோன்றியது என்றால் ? போன முறையும் அவன் பிளான் பண்ணிதான் நம்ம பிரண்ட்ஸ் சிலரை கொன்றான் இப்ப மறுபடியும் எலக்ஸன் வரப்போகிறது “நம்மை கொன்று தீவிரவாதிகள் மேல் பழியை போட்டு மக்களிடையே நல்ல பெயர் வாங்கி மறுபடியும் அமைச்சர் ஆகலாம் என்ற திட்டத்தில் இருக்கலாம் என்பது என்னுடைய கணிப்பு”. இப்ப இருக்கிற அரசியல்வாதிகள் எல்லாம் அவர்கள் பதவியை தக்கவைத்துக்கொள்ள பல பேரின் உயிரை பலியாக கொடுக்கின்றனர். நம்முடைய அரசாங்கமும் அமைதியாக வேடிக்கை தான் பார்த்துக்கொண்டு இருக்கிறது. 

நீங்க எல்லோரும் சாப்பிட்டு இன்று இரவு நன்றாக தூங்கி நாளை காலையில் இருந்து தீவிரமாக பயிற்சி செய்ய வேண்டும் . ஏனென்றால் இந்த கேடு கெட்ட அரசியல்வாதி எப்ப என்ன வேண்டுமானாலும் செய்யலாம் “அவனே தீவிரவாதிகளுக்கு பணத்தை கொடுத்து மக்களை கொலை பண்ணச் சொல்லி அந்த பழியை மீண்டும் அவர்களின் மேலே சுமத்தி அவர்களை பத்திரமாக நாட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவான்”. இல்லை என்றால் அவர்களுக்கு ஒரு புதிய முகவரி கொடுத்து நம் நாட்டிலேயே தங்க வைத்துக் கொள்வான். இது என்னுடைய கணிப்பு தான் அதனால் நாம் அனைவரும் எதற்கும் ரெடியாக இருக்க வேண்டும். “ஓகே பாய்ஸ் இதோட மீட்டிங் முடிந்து விட்டது நீங்க எல்லோரும் போய் ஓய்வு எடுங்க நாளை காலை எல்லோரும் கிரெளண்ட்ல ரெடியா இருக்கனும் . பாய் காய்ஸ்”. 

          உதிரன் மீண்டும் வந்து கட்டிலில் படுத்துக்கொண்டு உறங்க முயல சிங்கின் முகமே அவனின் ஞாபகத்திற்கு வந்து சென்றது. இப்பொழுது மீட்டிங் நடக்கும்போதும் அவன் அமைதியாகவே இருந்தான் எப்பொழுதும் துரு துரு வென்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பவனுக்கு என்ன ஆனது? இந்த கேள்விக்கு அவனிடம் மட்டுமே பதில் உள்ளது இப்பொழுது நாம் உறங்கலாம் காலையில் அவனிடம் பேசிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். இரவு உணவையும் உண்ணாது உறக்கம் தான் முக்கியம் என்றாகிவிட்டது உதிரனுக்கு.

           காலையில் சீக்கிரமாக எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு முதல் ஆளாய் கிரௌண்டில் இருந்தான். சிறிது நேரத்தில் அனைவரும் வந்து விட்டனர் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு பயிற்சி செய்ய சிலர் குழுவாக இணைந்து சில பயிற்சியை செய்துக்கொண்டு இருந்தனர். ஒரு குழுவில் சேர்ந்து பயிற்சி செய்துக்கொண்டு இருந்த சிங்கின் நெற்றியின் மீது பந்து பட்டு இரத்தம் வழிய தொடங்கியது. அனைவரும் பரபரப்பாக இருக்க அடிவாங்கியவனோ அமைதியாகவே இருந்தான். உதிரன் அவனை தனியாக அழைத்துக்கொண்டு போய் என்னடா ஆச்சு உனக்கு எதாவது பிரச்சனையா?

        சிங், அழுது கொண்டே அவனை அணைத்துக்கொண்டு சொல்லி முடித்தான்.

           சிங் சொல்லியதை கேட்டு கோவத்துடன் அங்கு இருந்து புறப்பட்டான் உதிரன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்