Loading

எதுக்காக பாட்டி என்னை கூப்பிட்டீங்க? சீக்கிரம் சொல்லுங்க பாட்டி … சீக்கிரம் சொல்லுங்க. அவனின் வார்த்தைகளை படிக்க ஆர்வம் கொண்டு அதை தன்னுடைய பேச்சில் காட்டிக்கொண்டு இருந்தாள் நுவலி.

       மணி, ஏன் இப்படி அவசரம்? எங்கையாவது வெளியே போக போறீயா?

இல்ல உன்னுடைய புருசன் போன்ல காத்து இருக்கானா? 

       அதெல்லாம் இல்ல பாட்டி. என்னை எதுக்கு அழைத்தீங்க? 

           மணி என்ன ஆச்சு பாரு இன்னும் வந்து சாப்பிடாம என்ன பண்ற? “எப்ப பாரு சாப்பிடாம பட்டினியாக இருக்க வேண்டியது அப்பறம் உடம்பு சரியில்லையேனு புலம்ப வேண்டியது “. ஒழுங்கா வந்து சாப்பிடு இல்ல என்ற பேரனுக்கு போன் போட்டு சொல்லிடுவேன் நீ சாப்பிட மாட்றனு புரியுதா?

            நுவலி, பாட்டி நேரம் பார்த்து பழி வாங்குதே! சரி சாப்பிட்டு தான் போய் படிப்போம் என நினைத்தவள் ” சரி பாட்டி நான் சாப்பாடு போட்டுக்கொண்டு போய் ரூம்ல சாப்பிடுறேன்”.

             ஏன் மா ரூம் உள்ள சாப்பாடு கொண்டு போனதும் டேபிளில் வைத்துவிட்டு நீ வேற எதாவது வேலை செய்ய போறீயா? “யாருடா அங்க அந்த போனை எடுத்து என்ற பேரனுக்கு போன் போட்டு குடுடா” . ஒருவர் வந்து இந்தாங்க பாட்டி அம்மா என்று போனில் உதிரனுக்கு அழைப்பு விடுத்தது விட்டு பாட்டியிடம் போனை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். நுவலிக்கு தான் “அய்யோ” என்று இருந்தது.

            “ஹாய் ” டார்லிங் என்ன பண்றீங்க? என்கிட்ட பேசாமல் இருக்க முடியவில்லையோ? இதற்கு தான் நான் அப்பவே சொன்னேன் ” என் கூடவே வந்துவிடு டார்லிங்னு ” நீ தான் வரமாட்டேன்னு சொல்லிவிட்டு இப்ப மட்டும் எதுக்கு போன் பண்ண ? நான் டிக்கெட் புக் பண்ணவா ? சொல்லு டார்லிங்?.

          அட போடா பொசகட்ட பயலே! இங்க பாருடி உன்ற புருசனுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னைய போய் “டார்… லு …. அது என்னவோ சொல்லி கூப்பிட்டானே!

         டார்லிங் ஆ பாட்டி .

         ஆமாம் அதே தான் டி . என்னைய போய் அப்படி கூப்பிடுறான். இதுல நான் அவன்கிட்ட பேசாம ஏங்கி போய் இருக்க மாதிரி எனக்கு டிக்கெட் புக் பண்றானாம் அங்க வந்து எனக்கு குளிரில் சீக் வரட்டும்னு பிளான் பண்ணை கூப்பிடுறான். இவனை என்ன பண்ணலாம்? சரியான ஏடா கூடத்தை என்னுடைய பேரனா வந்து பிறந்து இருக்கு நான் என்னப் பண்ண? . “அடேய் உனக்கு ரொம்ப தான் டா ஆசை. நான் எதுக்கு உனக்கு போன் பண்ணேன் என்றால் உன்ற பொண்டாட்டி சாப்பிடாம சுவற்றையே வெறித்து பார்த்துக்கொண்டு இருக்காள் . அவளுக்கு எதாவது ஆகிவிடுவதற்கு முன்னாடி அவளை சாப்பிட சொல்லுடா! பாட்டி எஸ்ட்ரா பிட்டாக இன்னும் சிலவற்றை பொய்யாக அவனிடம் கூறிவிட்டு , போனை உன்னுடைய பொண்டாட்டிகிட்ட கொடுக்கின்றேன் நீயே சொல்லு டா என்று போனை நுவலியிடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். 

            அந்த போனை கையில் வைத்துக்கொண்டு போனையே குறுகுறுவென பார்த்துக்கொண்டு இருந்தாள். இந்த பாட்டி இப்படி நம்மளை கோர்த்து விட்டுட்டு வெளியே போயிட்டாங்களே என்று நினைத்தவள் போனை எடுத்து காதில் வைத்தாள், அந்த பக்கம் உதிரன் ” லைனில் இருக்கியா இல்லையா டி? எவ்வளவு நேரம் தான் நான் கூப்பிட்டுக் கொண்டே இருப்பது? 

            மிகவும் மெதுவாக நான் லைன்ல தான் இருக்கேன் மாமா. நீ என்னை திட்ட போறியா? சற்று சோகமாக அவள் கேட்க.

            அவளின் சோகமான பேச்சு அவனுக்கு ஏனோ ஒரு மாதிரியாக இருந்தது. ஆனாலும் இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்கா என்பதை நினைக்கும் போது சற்று கோவம் தான் எட்டி பார்த்தது அவனுக்கு. உன்னை எதுக்கு டி இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்க சொன்னது? என்னிடமே நீ பொய் சொல்லி இருக்க “சாப்பிட்டு விட்டேன் ” என்று. உன்னை என்ன பண்ணலாம்? நான் இப்பவே மாமாவுக்கு போன் போட்டு உன்னை வந்து அழைத்துக்கொண்டு போக சொல்றேன் .

              அவளோ கூலாக சொல்லு நான் கூட நீ திட்டுவியோனு நினைத்து கொஞ்சம் பயந்து விட்டேன். நீ எங்க அப்பாக்கு போன் போட்டு சொல்லி அவர் வந்து என்னை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு போய் விட்டாரு என்றால் சேதாரம் உனக்கு தான் எனக்கு இல்லை .

அவன் என்ன சேதாரம் டி ? . அதுவா எங்க வீட்டில் சிக்னல் சரியாகவே கிடைக்காது அப்பறம் உனக்கு என்னாலையும் போன் போட முடியாது , உன்னாலையும் போன் போட முடியாது புரிந்ததா? மாமா. இப்ப போன் போட்டு எங்க அப்பாவுக்கு சொல்றீயா? இல்ல நானே போன் போட்டு கூப்பிடவா? 

           நீ எதையும் பண்ண தேவையில்லை. இப்ப நான் என்ன சொல்றேனோ அதை செய் . எதுக்கு இவ்வளவு நேரம் சாப்பிடாம இருந்த? அதற்கு முதலில் பதில் சொல்லு? 

           நான் சாப்பிடாம இருப்பதற்கு நீதான் காரணம் மாமா. “என்னது நானா ?” அதிர்ச்சியாக அவன் கேட்க. ஆமா நீ தான் காரணம் அசால்டாக பதில் சொன்னாள் நுவலி. நீ எழுதி வைத்து இருந்த கவிதையை படித்துக் கொண்டு இருந்தேன் அதனால் சாப்பிட மறந்து விட்டேன் . நான் படிச்ச வரைக்கும் எங்குமே கவிதை வரவில்லையே மாமா ? அவள் நக்கலாக கேட்க.

       “அடிங் ” இப்ப ஒழுங்கா வீடியோ கால் ஆன் பண்ணு நீ சாப்பிடுவதை நான் பார்க்க வேண்டும். சிறிது நேரத்தில் தட்டில் சாப்பாட்டுடன் வீடியோ காலின் முன் அமர்ந்து இருந்தாள். இவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அவன் அவளிடம் பேசிக்கொண்டே இருந்தான். அவனுக்கு தூக்கம் இல்லாததால் கண்கள் இரண்டும் சிவந்து இருந்தது. அவனின் கண்களைப் பார்த்தவள் வேகமாக சாப்பிட்டு முடித்துவிட்டு ” மாமா நீ போய் தூங்கு ” அப்புறமா எனக்கு கால் பண்ணு என்றவள் போனை கட் செய்துவிட்டு மீண்டும் அந்த பேப்பரை எடுத்து படிக்க தொடங்கினாள்.

        “காதலை துச்சமென எண்ணி இத்தனை நாள் வேஸ்ட் பண்ணிவிட்டேன் போல ” காதலின் அருமை எனக்கு முன்னாடியே தெரிந்து இருந்தால் நானும் காதலித்து இருப்பேன் உன்னை கல்யாணம் செய்யாமல் நான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து ஜம்முனு வாழ்ந்து இருப்பேன். இதை படிக்கும் போது அவளுக்குள் ஒரு சிறு பொறாமை எட்டி பார்த்தது , அதை நினைத்து அவளே சிரித்துக் கொண்டாள். உன்னை நான் முதல் முதலில் பார்த்தது “புனே நகரில் தான் “. நீ அங்க ஒரு ஆராய்ச்சிக்காக உன்னுடைய கல்லூரியில் இருந்து வந்து இருந்த அப்போ நானும் அங்குதான் ஒரு மிஷின் ஓர்க் காரணமாக இருந்தேன். முதல் முறை பார்த்ததும் உன்னுடைய கண்ணு எனக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது அதை அப்படியே என்னுடைய இதயத்திற்குள் புகைப்படமாக எடுத்து வைத்துக்கொண்டேன். நீ அங்கு இருந்த ஒரு வாரமும் நானும் அங்கு தான் இருந்தேன் .உன்னை பார்த்தாலே போதும் அப்படியே உன்னுடைய கண்ணு என்னை கட்டிப்போட்டு விடும் தெரியுமா உனக்கு? . ஆனால் நீ ஒரு முறைக் கூட என்னை பார்க்கவில்லை .என்னை மட்டுமல்ல எந்த ஆணையும் திரும்பி பார்க்காமல் இருந்த ” அப்ப எனக்கு ஒன்று தோன்றியது ஒரு வேளை இவள் சாமியாரா? இவங்க வீட்டில் இந்த பெண்ணை கல்யாணம் செய்யாமல் கோவிலுக்காக அர்பணித்து விட்டார்களா? என்றெல்லாம் நினைத்து இருக்கேன். நீ அங்கு இருக்கும் போது உன்கிட்ட பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்ற வில்லை. நீ அங்கு இருந்து சென்றதும் எப்பவாவது என்னுடைய ஞாபகத்திற்கு நீ வருவாய் அப்படியே இரண்டு வருடம் போனது. நான் ஒருமுறை வீட்டிற்கு வரும்போது தீடீரென்று தான் வீட்டில் எல்லோரும் சேர்ந்து உனக்கு பொண்ணு ஒன்று பார்த்து வைத்து இருக்கோம் நீ வந்து பார்த்துவிட்டு உன்னுடைய பதிலை சொல் என்று கூட்டி வந்தாங்க. வந்த இடத்தில் நீ தான் அந்த பெண் என்று நினைக்கும் போதே கொஞ்சம் சந்தோசம் கலந்த அதிர்ச்சியாக தான் இருந்தது ஆனாலும் உனக்கு என்னை பிடிக்கு இருக்கு என்பதை சொல்லும் வரை என்னுடைய மனதை கட்டுபடுத்தி தான் வைத்து இருந்தேன் தெரியுமா உனக்கு ?. அந்த அவஸ்தை இருக்கே அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது . அப்பறம் நடந்தது எல்லாம் உனக்கே தான் தெரியுமே என்னவென்று இதை எல்லாம் நான் சொல்ல வேண்டுமா என்ன? 

         “காதலை துச்சமென எண்ணினேன்

             பெண்ணே உன் பூமுகத்தை

             பார்க்கும் வரை ….!

               பூவாய் என் முன் தோன்றியவள்

             பூகம்பமாய் என் இதயத்தை

              ஆட்சி செய்கிறாய்….!”

        அவனின் வரிகளை படித்து அவளின் இதயத்தில் ஒரு வித இனம் புரியாத எண்ணங்கள் தோன்ற ” அந்த எண்ணத் தோன்றலில் அப்படியே உறங்கி விட்டாள் நுவலி”.

             நுவலியுடன் பேசிவிட்டு தன்னுடைய மெத்தையில் நன்றாக உறங்கி கொண்டு இருந்தான் உதிரன். தீடீரென யாரோ அறைக்குள் அழும் சத்தம் கேட்டு கண்களை திறந்து பார்க்க ,

தனக்கு பக்கத்து பெட்டில் உட்கார்ந்துக் கொண்டு சிங் தான் எதையோ டைரியில் எழுதிவிட்டு ” எனக்கு மட்டும் எதுக்கு இப்படி நடக்கிறது ? நானா ஆசைப்பட்டேன் ? அதுவா கிடைத்தது அதனால் தானே அதன் மீது உரிமை கொண்டாடினேன். ஆனால் இப்பொழுது அதுவே எனக்கு நிரந்தரமாக சொந்தம் இல்லை என்று சொல்லிவிட்டாயே?” யாரோ அவனின் பெயரை வெளியே இருந்து அழைக்க , அவன் சில நிமிடங்கள் அங்கிருந்து கிளம்பி வெளியே சென்று விட்டான். பயிற்சி மையமும் அவர்களின் அறையும் அருகிலே இருந்தது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இரண்டும் ஒரே இடத்தில் தான் இருந்தது.

       உதிரன் , இங்கு வந்த போது காலையிலே அவனின் முகத்தை பார்த்து ஏதோ சரியில்லை என்பதை மட்டும் ஊகித்தான்.அவனிடம் தனியாக பேசலாம் என்று நினைத்தவனுக்கு இப்பொழுது வரை அதற்கான வாய்ப்பே கிடைக்க வில்லை . அவனை மேலும் சிந்திக்க விடாமல் அவனின் மேல் அதிகாரி கால் செய்து உடனே அலுவலகத்திற்கு வரும் படி கட்டளை இட்டார். வேகமாக எழுந்தவன் சீக்கிரமாக ஒரு குளியல் போட்டு விட்டு அலுவலகத்திற்கு சென்றான். அலுவலகத்தில் நேராக தன்னுடைய மேல் அதிகாரியின் அறைக்கு சென்று அவரைப் பார்த்து சல்யுட் அடித்துவிட்டு நின்றான்.

          என்னடா! உன்னுடைய முகத்தில் சோகம் தாண்டவம் ஆடுகிறது. என் மேல கோவமாக இருக்கியா என்ன? உன்னுடைய விடுமுறையை கேன்சல் பண்ணை சீக்கிரமாக உன்னை திரும்பவும் வர சொன்னதற்கு ? சொல்லு டா எதாவது வாய் திறந்து சொல்லு டா?

           உதி, இப்ப என்ன ? சொன்னால் மட்டும் என்னை அப்படியே வீட்டுக்கு திரும்பி போடானு வழி அனுப்பி வைப்பீங்களா? பண்றது எல்லாத்தையும் பண்ணிவிட்டு எதுவுமே தெரியாத மாதிரி எப்படி தான் உங்களால் பேசமுடிகிறதோ! ஒரு சின்ன பையனை அதுவும் இப்பதான் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகவில்லை , என்னை என்னுடைய பொண்டாட்டிகிட்ட இருந்து பிரித்து கூட்டி வந்து விட்டீங்க உங்களுக்கு என்னுடைய வயித்து எரிச்சல் சும்மாவே விடாது ” அடுத்து எத்தனை பிறவி நீங்க எடுத்தாலும் உங்களுக்கு கல்யாணமே ஆகாமல் தனியாத்தான் வாழ்க்கையை வாழுவீங்க “.  

                போதும் டா உன்னுடைய சாபம் எல்லாம். கொஞ்சம் இந்த தண்ணீரை குடித்து விட்டு ரிலாக்ஸ் ஆகு. உதி தண்ணீரை வாங்கி குடித்து விட்டு அவரை முறைத்து பார்க்க. 

  அவரோ என்னை ஏன்டா இப்படி முறைத்து பார்த்துக்கொண்டு இருக்க? நீ இல்லாத இத்தனை நாளும் உன்னுடைய டீம் வீரர்கள் ரொம்ப சோகமாக இருந்தாங்க டா.

          உதி, அவங்க சோகமாக இருந்தாங்க என்றா என்னை மறுபடியும் வர சொன்னீங்க? உங்களுக்கு எல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கா ?

      சர்மா , உதிரனின் மேல் அதிகாரி. அவனுக்கு மட்டும் மேல் அதிகாரி இல்லை. அந்த இராணுவத்திற்கு மேல் அதிகாரி தான். சுருக்கமாக சொன்னால் அவர் தான் இராணுவத்தின் படை தளபதி . அவருக்கு உதிரனின் மேல் ஒரு தனிபிரியம் , அவனின் விடா முயற்ச்சியும் கட்டு கடங்காத கோபமும் அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. எதையும் சீக்கிரமாக கற்றுக் கொள்ளும் அவனின் திறன் தான் இவரை அவன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. உயர் அதிகாரி என்றும் பாராமல் தவறாக நடந்தால் தட்டிக் கேட்கும் அவனின் குணம் அவரை இன்னும் அவனோடு சேர்த்தது. பல முறை தன்னுடைய உயர் அதிகாரிகளிடம் சண்டைப் போட்டுக்கொண்டு தண்டனை வாங்குவான். அவர் இருக்கும் பொழுது எல்லாம் அவனை காப்பாற்றி விடுவார். வஞ்சகர்கள் அவர் இல்லாத சமயம் பார்த்து அவனை வம்பு இழுத்து தண்டனை தருவார்கள். அந்த அகடாமியில் இவனின் மீது அனைவருக்கும் தனி மரியாதை உண்டு அதையும் தாண்டி ஒரு சிறு பயம் உண்டு எனலாம். அவனின் இளமைக்கான வேகம் இன்று சர்மாவின் நண்பனாக சேர்த்து இருந்தது அவருடன்.

       சர்மா, நான் என்ன பண்றது நீயே சொல்லு ? உன்னை யார் கர்னல் ஆக சொன்னது? சாதாரண ஒரு இராணுவ வீரனாகவே இருந்து இருந்தால் இந்த பிரச்சனை எல்லாம் வந்து இருக்குமா என்ன? இங்க உன்னை விட வயதான எத்தனை பேர் இருக்காங்க அவங்களை மாதிரி நீயும் இருந்து இருக்கலாம் பிரச்சனை எதுவும் இருந்து இருக்காது. அவன் அவரை முறைக்க, “சரி சரி முறைக்காதே!” நீயும் ஒரு வீரனாக மட்டும் இருந்து இருந்தால் உனக்கு வயது ஆக ஆக தன்னால் கர்னல் பதவி கிடைத்து இருக்கும்.

         உதி, இப்பவும் எனக்கு தன்னாலே தான கர்னல் பதவி கிடைத்தது. நான் யாரிடமும் கெஞ்சியும் பணம் குடுத்தும் இந்த பதவியை வாங்கவில்லையே?என்னுடைய திறமையால் தானே கிடைத்தது.

            அந்த திறமை தான் டா பல பேருக்கு உன் மேல ஒரு கண்ணாக இருக்கு. எதுவும் பண்ணாமல் ஒருத்தர் கர்னல் பதவிக்கு வராரு என்றால் அவருக்கு வயது நாற்பதுக்கு மேல் ஆகிவிடும் அது தெரியும் தானே உனக்கு ?. உன்னுடைய வயது முப்பது அப்ப வயிற்று எரிச்சல் இருக்க தானே செய்யும் மற்றவர்களுக்கு . நீயும் சும்மா இல்லாமல் இந்த தீவிரவாதியை பிடிக்கின்றேன் அந்த தீவிரவாதியை பிடிக்கின்றேன் என்று சில பேரை பிடித்தாய் பல பேரை கொன்றாய் . இந்த அரசாங்கமும் சும்மா இல்லாமல் உனக்கு இப்பவே பாரத் ரத்னா விருது வழங்கி விட்டது. விருது வழங்கியதோடு இல்லாமல் உன்னை கர்னல்களுக்கு மேல் அதிகாரியாகவும் நியாயமானது செய்து விட்டது. அப்ப அவங்களுக்கு வயிறு மட்டும் அல்ல நெஞ்சும் சேர்ந்தே எரியும் தானே? அந்த எரிச்சல் தான் உன்னுடைய கல்யாண வாழ்க்கையில் இருந்து இப்ப தனித்து இங்க மறுபடியும் கூட்டி வந்து விட்டது. 

       உதி, ஏன் நாட்டுக்காக போராடுவது தப்பா? என்னுடைய கடமையை தானே நான் சரியாக செய்தேன் இதில் என்ன குற்றம்.

           இங்க மட்டுமல்ல , இந்த நாட்டில் உள்ள பல பேர்களுக்கு மற்றவர்கள் தங்களின் கடமையை சரியாக செய்தால் பிடிக்காது. அவர்களும் அவர்களின் கடமையை சரியாக செய்ய மாட்டார்கள் மற்றவர்கள் செய்வதையும் விரும்ப மாட்டார்கள் இதுதான் உலக வழக்கம் என்பதை விட மனிதர்களின் வழக்கமாக இருக்கிறது. சரி அதை எல்லாம் உன்னுடைய கல்யாணத்திற்கு என்னுடைய பரிசு இந்தா டா ” அவனை கட்டி அணைத்துவிட்டு அவனின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவனிடம் ஒரு பரிசை வழங்கினார்”. உனக்கு கல்யாண பரிசாக இதை நான் குடுத்தேன் .அரசு உனக்கு கல்யாண பரிசாக ஒன்றை கொடுத்து உள்ளது முதலில் என்னுடைய பரிசு எப்படி இருக்கிறது என்று பார் டா.

             உதி, பரிசை ஆவலாக பிரித்து பார்த்தான் அதில் சர்மாவும் உதியும் தேசிய கொடியை ஒன்றாக பிடித்துக்கொண்டு இருப்பது போல தங்கத்தால் குட்டி குட்டி சிலையாக இருந்தது. தேங்கியு சோ மச் பா . அவரை எப்போதும் தனியாக இருக்கும் போது “அப்பா” என்றே அழைப்பான் . 

         இன்னொரு பரிசு என்னனு நீ கேட்க மாட்டியா டா ?

        அதையும் நீங்களே சொல்லுங்க .

அவர் கூறிய மற்றொரு கல்யாண பரிசை கேட்டு அதிர்ச்சியாகி அவரை விழிகள் இரண்டும் விரித்து பார்த்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்