கணவன் தன்னை நெருங்கியதைக் கூட உணராது மீராவின் பார்வை ரன்வீரின் முறுக்கேறிய புஜங்களிலும் சிக்ஸ்பேக் வைத்த படிக்கட்டுத் தேகத்திலுமே பதிந்து இருந்தது.
மீராவின் முகத்தை அழுத்தமாக நோக்கியவாறு அவளை நெருங்கி நின்ற ரன்வீர் அவளின் முகத்தின் முன் சொடக்கிடவும் பதறியவாறு தன்னிலை அடைந்த மீரா அவ்வளவு நெருக்கத்தில் ரன்வீரைக் காணவும் காஃபி கோப்பையைத் தவற விடப் பார்த்தாள்.
சட்டென அதனை விழாது பிடித்துக் கொண்ட ரன்வீர் மீராவைக் கேள்வியாக நோக்க, “அ…அது… கா…காஃபி…” என்றாள் பயத்துடன்.
“காஃபி தர வந்த மாதிரி தெரியலயே…” என நக்கலாகக் கூறியவனின் விழிகள் மீராவின் பார்வை இன்னுமே அவனின் உடலில் இருப்பதை சுட்டிக் காட்ட, அதனை உணர்ந்து அவசரமாக திரும்பி நின்ற மீராவோ, “அ..அத்தை தான் கொடுத்துட்டு வர சொன்னாங்க.” எனப் பதட்டமாகக் கூறி விட்டு அங்கிருந்து வெளியேற முயன்றாள்.
சட்டென எட்டி அவளின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக்கொண்ட ரன்வீர், “பேசிட்டு இருக்கும் போதே எங்க போற?” எனக் கேட்டான் உறுமலாக.
ரன்வீரின் பிடி வலியைக் கொடுக்க, அவனைப் பயத்துடன் பார்த்தவளை நெருங்கி நின்றவன், “ஐ நீட் யூ ரைட் நவ்.” என்றான் கிசுகிசுப்பாக.
“என்ன?” என மீரா அவன் கூறியது புரியாது திரு திரு என முழிக்க, “ப்ச்… உனக்கு தான் இங்லீஷ் தெரியாதே. சரியான பட்டிக்காடு.” என எரிச்சலாக முணுமுணுத்த ரன்வீர், “எனக்கு இப்போ நீ வேணும்.” என்றான் கோபமாக.
பாதி புரிந்தும் புரியாமலும் மீரா அதிர்ந்து நின்றிருக்க, ரன்வீரின் பார்வை அவளின் கழுத்தை விட்டுக் கீழிறங்கவும் தான் அவன் கேட்பது என்னவென்று மீராவுக்கு முழுதாகப் புரிந்தது.
மீரா மறுத்துப் பேச வாய் திறக்கும் போதே அவளின் வார்த்தைகளைத் தனக்குள் விழுங்கிக் கொண்டவன் தன் கோபத்தை எல்லாம் அவள் இதழ்களில் வன்மையாகவே காட்டினான்.
மீராவுக்கு வலித்தாலும் கணவனின் நெருக்கமும் தொடுகையும் எப்போதும் போல் அவளை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்துச் செல்ல, கால்கள் துவண்டு ரன்வீர் மீதே சரிந்தாள்.
தன் மீது சரிந்தவளை தன்னோடு அணைத்தவாறே பின்னால் சாய்ந்தான் ரன்வீர்.
முதல் இரண்டு தடவைகள் போல் அல்லாது தனக்குள் அடக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் மீராவிடம் கொட்டி விடுவது போல் அவளை வன்மையாகக் கையாண்டான்.
ஒரு கட்டத்தில் வலியில் மீராவின் கண்கள் கண்ணீரைச் சொரிய, அது புரிந்ததோ என்னவோ தன் வேகத்தைக் கொஞ்சமாகக் குறைத்தான்.
“வலிக்கிதுங்க.” என மீரா வாய் விட்டே கெஞ்ச, “எனக்கும் தான் டி வலிக்கிது.” எனக் கோபமாகக் கூறியவன் மீராவின் இதழ்களுக்கு வன்மையாகத் தண்டனை வழங்கினான்.
அவளை மொத்தமாக ஆட்கொண்டு விட்டு விலகிப் படுத்த ரன்வீர் மூச்சு வாங்கியவாறு விட்டத்தை வெறித்தவன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.
மீராவோ அவசரமாக தன் சேலையைத் தேடி எடுத்து தன்னை மறைத்துக் கொண்டவள் திரும்பி கணவனின் முகத்தைப் பார்த்தாள்.
அவன் ஏதோ யோசனையில் இருக்கவும் எழுந்து நின்றவள் கஷ்டப்பட்டு அங்கிருந்து நடந்து சென்றாள்.
அவளின் உடல் எல்லாம் அடித்துப் போட்டது போல் வலித்தது.
சரியாக நடக்கக் கூட முடியவில்லை.
தட்டுத் தடுமாறி நடந்து சென்றவளை லேசாகத் தலையை உயர்த்திப் பார்த்தவனுக்கு தான் செய்வது அதிகப்படி எனப் புரிந்தாலும் அவனின் கட்டுப்பாட்டையும் மீறி மீராவை வார்த்தைகளாலும் செயலாலும் வதைக்கிறான்.
யோசித்துப் பார்க்கும்போது மீராவின் மீது எந்தத் தவறுமே இல்லை.
அவனைக் கட்டுப்படுத்திய காயத்ரி மீதும் அதற்குக் கட்டுப்பட்ட தன் மீதும் தான் எல்லாத் தவறுமே இருக்க, வீணாக மீராவைக் கஷ்டப்படுத்துகின்றோமோ என இப்போது யோசித்தான்.
அப்போது தான் அவன் ஒன்றை உணர்ந்தான்.
இவ்வளவு நேரமும் அவனுக்கு இருந்த அழுத்தம் மீராவின் அருகில் இருக்கும் போது காணாமல் போயிருந்தது.
இது தான் மஞ்சள் கயிற்றின் மாயமோ என்னவோ?
அன்றைய நாளும் அவ்வாறே கழிந்தது.
அடுத்து வந்த நாட்களில் அவன் படப்பிடிப்புகளில் பிஸியாகி விட, அவனையும் சனாவையும் இணைத்து வைத்து வந்த செய்தி கூட இவர்கள் மறுப்புக் கருத்து தெரிவிக்காதலால் மக்கள் உண்மை என்றே எண்ணிக் கொண்டனர்.
அதுவே சனாவுக்கு சாதகமாக அமைய, பகிரங்கமாகவே ரன்வீரை நெருங்கத் தொடங்கினாள் அவள்.
அதனைக் கண்டும் காணாமல் இருந்தான் ரன்வீர்.
அவனுக்கு எப்போதடா இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடியும் என்று இருந்தது.
ஏனென்றால் படம் வெளியாக முன் அவன் ப்ரஸ் மீட் வைத்து ஏதாவது கருத்துத் தெரிவித்தால் சனா கூறியது போலவே நிச்சயம் அது இப் படம் தோல்வி அடையக் காரணமாகப் போவது மட்டும் இல்லாமல் அவனின் சினிமா வாழ்க்கையும் பெரும் சரிவைச் சந்திக்கும்.
அதனாலேயே அமைதி காத்தான் ரன்வீர்.
இதற்கிடையே இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வைத்து இஷ்டத்துக்கு கதை கட்டி அடிக்கடி கிசுகிசுக்கள் வருவதும் வழக்கமாகிப் போயின.
இவை எல்லாவற்றுக்கும் காரணம் சனா தான் என்பதைத் தான் ரன்வீர் அறியாமல் போனான்.
கணவனை இன்னொரு பெண்ணுடன் சேர்த்து வைத்து வரும் செய்திகள் எந்த மனைவிக்குத் தான் வலியைக் கொடுக்காது?
மீராவுக்கும் வலித்தது. அதிகமாகவே வலித்தது.
ஆனால் அதனை வாய் விட்டு யாரிடமும் கூறத் தான் முடியவில்லை.
எல்லாமே தனக்குள் பூட்டி வைத்து தனியாகக் கண்ணீர் வடித்தாள்.
அன்றைய தினத்துக்குப் பின் ரன்வீருக்கு என்ன ஆனதோ மீராவைக் கண்டாலே வெறுப்பைக் கொட்டுவதைக் குறைத்துக் கொண்டான்.
அதற்காக அவளை முழு மனதுடன் மனைவியாக ஏற்றுக் கொண்டானா எனக் கேட்டால் கேள்விக்குறி தான்.
ஒரு சக மனுஷியாக அவளை நடத்தினான். அவ்வளவு தான்.
ஏதோ காயத்ரியின் தயவால் மீரா முன்பு போல் ரன்வீரைக் கண்டால் அவன் முன்னே செல்லாது ஒளிந்து கொள்வதைத் தவிர்த்தாள்.
அவளே நினைத்தாலும் அப்படி இருக்க முடியவில்லை.
காரணம் ரன்வீர் வீட்டில் இருந்தாலே, “உன் புருஷனுக்கு இதைக் குடு… அதைக் குடு… அவனுக்கு சாப்பாடு எடுத்து வை. அவனுக்கு என்ன வேணும்னு கேளு. காஃபி போட்டுக் குடு. அவன் கூட போய் பேசிட்டு இரு.” என மீராவை விரட்டிக் கொண்டே இருப்பார்.
ரன்வீரின் வேலைகளை மீரா இழுத்துப் போட்டு செய்யும் போது ஆரம்பத்தில் வார்த்தைகளால் சாடியும் கண்களால் உருட்டி மிரட்டியும் பார்த்தவன் அவளுக்கு எவ்வளவு திட்டினாலும் தலையில் ஏறாது என்பதைப் புரிந்து கொண்டு அவளை அவள் போக்கில் விட்டாள்.
ஒரு கட்டத்தில் ரன்வீருக்கும் அதுவே பழகிப் போனது.
கணவன் எதுவும் கூறாததால் மீராவும் அவனின் வேலைகளை விரும்பியே செய்தாள்.
காயத்ரி எதிர்ப்பார்த்தது போலவே எல்லா விதத்திலும் சிறந்த மருமகளாக இருந்தாள் மீரா.
ஆனால் கணவன் மனைவிக்கு இடையில் இருந்த இடைவெளி தான் இன்னும் அப்படியே இருந்தது.
அவர்களது உறவில் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை.
இரவானதும் மீராவைத் தேடி வந்து விடுவான் ரன்வீர்.
வாய் வார்த்தையாகக் கூறாவிடினும் கணவனின் விழி மொழியே அவன் தேவையைக் கூற, அதனைப் புரிந்து அவனுக்கு ஏற்றது போல் நடந்து கொள்வாள் பெண்ணவள்.
சில நேரங்களில் ரன்வீரின் கோபத்தைத் தீர்க்கும் வடிகாலாக வன்மையான சங்கமமாகவோ இல்லையேல் இருவரின் உணர்வுகளை அடக்கும் மென்மையான சங்கமமாகவோ இருக்கும்.
இடைக்கிடையில் காரணமே இல்லாது அந்த முகமறியாப் பெண்ணின் நினைவு ரன்வீருக்கு வந்து சேரும்.
எவ்வளவோ மறக்க முயன்றாலும் அந்த நினைவை மட்டும் அவனால் ஒதுக்கித் தள்ள முடியவில்லை.
மீராவின் உதட்டில் இருந்த மச்சம் வேறு அதற்குக் காரணமாக இருக்கலாம்.
அந் நேரங்களில் எல்லாம் மீராவுடனான அவனின் நெருக்கம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஆத்மார்த்தமாக இருக்கும்.
சில சமயங்களில் திருமணத்துக்குப் பின்னும் வேறு ஒரு பெண்ணை மனதில் நினைத்து மீராவை நெருங்குவது அவனைக் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தும்.
அதனைப் போக்கவும் மீரா தான் அவனுக்கு வடிகால்.
ரன்வீருக்கு இப்போதெல்லாம் மீராவிடம் இருக்கும் குறைகள் கூட கண்களை உறுத்தவில்லை.
இருவருமே இயந்திரமயமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
எது எப்படியோ ரன்வீரைப் பொருத்தவரை மனைவியின் உடல் தேவையைப் பூர்த்தி செய்தாலே அவளுக்கு மனைவி என்ற அங்கீகாரம் கிடைத்து விடும் என்ற அவனின் எண்ணம் மட்டும் அப்படியே இருந்தது.
அதையும் தாண்டி அவளுள் இரத்தமும் சதையுமாக ஒரு இதயம் துடித்துக் கொண்டிருப்பதையும் அதன் எதிர்ப்பார்ப்பையும் உணரத் தவறினான் அவன்.
மீராவுக்கும் அதுவே பழகிப் போயிற்று.
ஆரம்பத்தில் ஒரு சராசரிப் பெண்ணாக கணவனிடத்தில் இருந்த எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் இப்போது அறவே இல்லை அவளிடம்.
எதிலும் பற்று இல்லை அவளுக்கு.
வாழ்க்கை மீதே ஒரு வித விரக்தி தான் எஞ்சியது.
பார்த்த முதல் பார்வையிலேயே ஏற்பட்ட காதல் என்பதாலேயே தன் மனம் கவர்ந்தவனின் அருகாமையே அவளுக்குப் போதுமாக இருந்தது.
மனம் ஒன்று பட்டு கணவன் மனைவி இருவரும் இணையாததாலோ என்னவோ அவள் ஒவ்வொரு மாதமும் ஆசையோடு எதிர்ப்பார்க்கும் கரு கூட அவளின் வயிற்றில் தரிக்காமல் போனது.
காயத்ரி வேறு அடிக்கடி அவர்களுக்குள் எல்லாம் சரியாக இருக்கிறதா எனக் கேட்கும் போது மீராவுக்கு ஒரு தாயாகும் தகுதி கூட தனக்கு இல்லையா எனத் தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும்.
வயதானவர்களின் எதிர்ப்பார்ப்பு அவளுக்குப் புரிந்தாலும் அவள் மட்டும் என்ன செய்வாள்?
அதுவும் சேர்ந்து மீராவின் மன அழுத்தத்தை அதிகரித்தது.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட திகதியில் மனைவியின் முகம் எதையோ எதிர்ப்பார்த்து பளிச்சென இருப்பதும் சற்று நேரத்தில் உலகமே அழிந்து விட்டது போல் ஒளியிழந்து போவதையும் ரன்வீர் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
ஆனால் அதன் காரணம் தான் அவனுக்குப் புரியவில்லை.
அவன் அதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவும் இல்லை.
புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை.
இருவருக்கும் திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்திருக்க, இரண்டு மூன்று தடவை மீராவின் பெற்றோர் அவளை வந்து பார்த்து விட்டு சென்றனர்.
அந் நேரம் எல்லாம் ரன்வீர் வீட்டில் இருப்பதில்லை.
தம் மருமகன் எவ்வளவு பெரிய நடிகன். அதனால் வேலை இருப்பதாக அவர்களும் மனதைத் தேற்றிக்கொள்வர்.
ஆனால் உண்மைக் காரணம் அதுவல்ல.
ரன்வீரால் மீராவிடம் கடுமையாக இருப்பது போல் அவளது பெற்றோரிடம் கடுமையாக இருக்க முடியவில்லை.
அதற்காக அவர்கள் முன் சிறந்த மருமகனாகவும் கணவனாகவும் நடிக்கவும் அவனது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
அதனால் தான் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பங்களை அறவே தவிர்த்தான்.
மருமகளின் முகம் களையிழந்து காணப்படுவதை அவதானித்த ஸ்ரீனிவாஸன் அது பற்றி மகனிடம் பேச வேண்டும் என்று அன்று இரவு ரன்வீர் வரும் வரை அவனுக்காகக் காத்திருந்தான்.
காயத்ரி வேறு தினமும் ரன்வீரிடம் பேசுமாறு அவரைக் குடைந்து கொண்டே இருப்பார்.
அதனால் தான் இம் முடிவு.
இரவு வெகுநேரம் கழித்தே வீட்டுக்கு வந்தான் ரன்வீர்.
அன்று ஒருநாளும் இல்லாமல் விரைவாகத் தூங்கச் சென்றிருந்தாள் மீரா.
“ரன்வீர்… உன் கூட கொஞ்சம் பேசணும்.” என்றார் ஸ்ரீனிவாஸன்.
வழமையாகத் தாய் தான் ஏதாவது அழுத்தம் கொடுப்பார். இன்று தந்தை பேசவும் குழப்பத்தில் புருவங்கள் முடிச்சிட, என்னவோ என வந்து அவர் முன் அமர்ந்தான் ரன்வீர்.
“உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகுது.” என ஸ்ரீனிவாஸன் ஆரம்பிக்க, “ப்ச்… நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? இப்போ அதுக்கு என்ன செய்யணும்?” என அவரின் பேச்சை இடைமறித்த ரன்வீர் எரிச்சலாகக் கேட்டான்.
“ஏன் சார் இது வரைக்கும் என்ன செஞ்சி கிழிச்சீங்க?” என ஸ்ரீனிவாஸன் எள்ளலாகக் கேட்கவும் ரன்வீர் தந்தையை முறைக்க, “முறைக்காத டா. உண்மைய சொன்னா அப்படி தான் இருக்கும். பையனுக்கு விருப்பம் இல்லாம கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வெச்சிட்டோமே. அவனுக்கு இதெல்லாம் ஏத்துக்க கொஞ்சம் டைம் கொடுப்போமேன்னு தான் இவ்வளவு நாள் நான் பேசாம இருந்தேன். ஆனா நீ பண்ணிட்டு இருக்குறத எல்லாம் இதுக்கு மேலேயும் அமைதியா வேடிக்கை பார்த்தா நான்லாம் மனுஷனே இல்ல. நீ தேடிக்கப் பார்த்த வாழ்க்கை உனக்கு எந்த விதத்திலும் பொருத்தமா இல்லன்னு தான் உன் அம்மா உனக்கு தேடிப் பிடிச்சு மகாலட்சுமி கணக்கா ஒரு பொண்ணக் கட்டாயப்படுத்தியாச்சும் கல்யாணம் பண்ணி வெச்சா. இங்க நாங்க சொல்ற பொருத்தம் நீ சொல்ற வெளி அழகோ, படிப்போ, ஸ்டேட்டஸோ, நாகரீகமோ இல்ல. அதையும் தாண்டி கேரெக்டர்னு ஒன்னு இருக்கு. நல்ல குணம்னு ஒன்னு இருக்கு. அதெல்லாம் என் மருமகளுக்கு அளவுக்கு அதிகமாகவே இருக்கு.” என்றார் ஸ்ரீனிவாஸன் கடுமையான குரலில்.
ரன்வீர் பதில் கூறாது அமைதியாக இருக்க, “உன்னையும் அந்த சனாப் பொண்ணையும் வெச்சி பேப்பர், நியூஸ், சோஷியல் மீடியான்னு எல்லாத்துலயும் ஃபோட்டோஸோட தப்பு தப்பா நியூஸ் வந்தப்போ கூட எங்களுக்கு எங்க வளர்ப்பு மேல இருந்த நம்பிக்கைல தான் அமைதியா இருந்தோம். நீ ப்ரஸ் மீட் கொடுக்காததுக்கு சொன்ன காரணமும் வேலிட்டா இருந்ததால தான் அதையும் சும்மா விட்டோம். ஆனா நீ என்ன பண்ணிட்டு இருக்க? தொட்டுத் தாலி கட்டின பொண்டாட்டிய வெளி உலகத்துக்கு தெரியாம வீட்டுல மறைச்சி வெச்சிருக்க. கேட்டா சாரோட ப்ரஸ்டீஜ் போய்டுமாம். கல்யாணம் முடிஞ்சு இத்தனை மாசத்துல ஒரு தடவை கூட அவள வெளிய கூட்டிட்டுப் போனது இல்ல. ஆசையா அவளுக்கு ஏதும் வாங்கிக் கொடுத்ததும் இல்ல. அவ சாப்பிட்டாளா இல்லையான்னு எதுவும் பார்க்க மாட்ட. ஆனா உனக்கு அந்த சனா கூட வெளிய சுத்த மட்டும் நேரம் இருக்கு. அதை எவனாச்சும் ஃபோட்டோ பிடிச்சு மீடியால போட்டாலும் அது மூலம் உன் ப்ரஸ்டீஜ் பாதிக்கப்படாது. அப்படி தானே.” எனக் கேட்டார் ஸ்ரீனிவாஸன் கோபமாக.
“அப்படி இல்லப்பா… அது… நான்…” என ரன்வீர் என்ன கூறுவது என்று தெரியாமல் தடுமாற, “நீ எதுவும் சொல்ல வேண்டாம் ப்பா. வீட்டுக்கு வாழ வந்த மகாலட்சுமிக்கு உரிய மரியாதைய கொடுக்கலன்னா அது அந்த வீட்டுக்கே நல்லது இல்ல. இனிமே நான் சொல்ல எதுவும் இல்ல. பார்த்து நடந்துக்கோ. மூவி ரிலீஸ் வேலை எல்லாம் முடிஞ்சதும் அந்தப் புள்ளைய முதல் வேலையா அவ ஊருக்குக் கூட்டிட்டுப் போ.” என ஸ்ரீனிவாஸன் கட்டளையிடவும் ரன்வீர் சம்மதமாகத் தலையாட்டினான்.
காயத்ரி எதுவுமே பேசவில்லை.
தான் பேசினால் ரன்வீர் இந்தளவு பொறுமையாக இருப்பது சாத்தியம் இல்லை என்பதை அவரும் அறிவார்.
பெற்றோர் இருவரும் உறங்கச் சென்ற பின் தன் அறைக்குள் நுழைந்த ரன்வீர் வழமைக்கு மாறாக தனக்காகக் காத்திராமல் உறங்கும் மனைவியைக் குழப்பமாக நோக்கினான்.
சோஃபாவில் சுருண்டு கொண்டு படுத்திருந்தவளின் தோற்றமே அவள் குளிரில் நடுங்குவதை உணர்த்த, ஏசியைக் குறைத்தவன் போர்வை ஒன்றை எடுத்து வந்து மீராவைப் போர்த்தி விட்டான்.
அப்போது தான் அவளின் கன்னத்தில் இருந்த ஈரம் காய்ந்த கண்ணீர்த் தடங்களைக் கண்டு கொண்டான் அவன்.
ரன்வீருக்குக் குற்றவுணர்வாக இருந்தது.
தந்தை சொல்வது போல் ஏன் தான் யோசிக்காமல் போனோம் எனத் தன்னையே கேட்டுக் கொண்டான்.
உறங்கிக் கொண்டிருந்த மனையாளை உச்சி முதல் பாதம் வரை நோக்கினான்.
நிறம் குறைவாக இருந்தாலும் அளவான உயரம், பருமன் என அழகாகத் தான் இருந்தாள்.
கூடவே அவள் உதட்டில் இருந்த அந்த குட்டி மச்சம் மீராவுக்கு அவ்வளவு எடுப்பாக இருந்தது.
தன்னை மறந்து மீராவை ரசித்துக் கொண்டிருந்தவனுக்குத் திடீரென அந்த முகமறியாப் பெண்ணின் நினைவுகள்.
உடனே இவ்வளவு நேரமும் இருந்த இதம் மறைந்து மீராவை வெறித்துப் பார்த்தான்.
உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு லேசாக விழிப்புத் தட்டி மெதுவாகக் கண் விழிக்க, ரன்வீரின் பார்வையைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள்.
ரன்வீர் இன்னுமே சொல்லொணா உணர்வில் மீராவை வெறித்துக் கொண்டிருக்க, எங்கு அவனின் உடல் தேவையை நிறைவேற்றாது தான் உறங்கி விட்டதால் தான் அவன் கோபமாக இருக்கிறான் என்று நினைத்த மீரா, “சாரிங்க… இ…இன்னைக்கு முடியாது. அந்த மூ…ணு நாள். அதான் டயர்டா இருக்கவும் அசந்து தூங்கிட்டேன்.” என்றாள் பதட்டமாக.
மீராவின் பேச்சில் அதிர்ச்சியில் உறைந்து போனான் ரன்வீர்.
தன் உடல் தேவைக்காகத் தான் அவளை நெருங்கி இருக்கிறோம் என நினைத்து விட்டாளே என மீரா மீது கோபப்பட்டவன் அதன் பின் தான் அவளது எண்ணத்தில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டான்.
அவன் அதற்காக மட்டும் தானே தினமும் மீராவை நெருங்குவான்.
மீரா அவனின் பதிலுக்காகக் காத்திருக்க, “இல்ல நீ தூங்கு. நா…நான்…” என இழுத்தவனுக்கு என்ன கூறுவது எனத் தெரியாது அறையை விட்டு வெளியேறினான்.
மறுநாள் காலை நேரம் சென்று கண் விழித்த மீராவுக்கு எப்போதும் இல்லாமல் வயிற்று வலி படுத்தி எடுத்தது.
எங்கோ செல்லத் தயாராகி கிளம்பிக் கொண்டிருந்த ரன்வீர் மீரா வயிற்றைப் பிடித்துக் கொண்டு தடுமாறுவதைக் கண்டு, “என்னாச்சு?” எனக் கேட்டான் கண்ணாடியில் அவள் விம்பத்தைப் பார்த்தவாறு.
திட்டுவதை விடுத்து அவனாக மீராவிடம் பேசுவது இதுவே முதல் தடவை.
முதலில் அவன் தன்னிடம் தான் பேசுகிறான் என்று உணராத மீரா இன்னும் வயிற்றைப் பிடித்தபடி இருக்க, “உன்ன தான் கேட்குறேன் மீரா.” என்ற ரன்வீரின் அழுத்தமான குரலில் பதட்டமாக எழுந்து நின்றாள்.
“எ…என்னாச்சு?” என அவனது கேள்வி புரியாது மீரா பயத்தோடு கேட்கவும், அவளின் முகத்தில் இருந்த பயத்தைக் கண்டு ரன்வீருக்கு தன்னை நினைத்தே அசிங்கமாக உணர்ந்தான்.
ஒரு பெண்ணை எந்தளவுக்குப் போட்டுப் படுத்தி எடுத்திருந்தால் தன் குரலுக்கே இப்படிப் பயந்து நடுங்குவாள்?
“சி..சில் மீரா… எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற? கூல்… ஒரு மாதிரி அன்கம்ஃபர்டபிளா இருக்கியே. அது தான் என்னாச்சுன்னு கேட்டேன்.” என ரன்வீர் மீராவை நெருங்கிப் பரிவாகக் கேட்கவும் இம்முறை விழியெடுக்காமல் அவனை வியப்பாக நோக்கினாள் பெண்ணவள்.
எப்போதும் பட்டிக்காடு எனத் திட்டுபவன் முதல் தடவை அவள் பெயர் சொல்லி அழைத்ததும் இல்லாமல் இவ்வளவு நீளமாக, கரிசனமாகப் பேசுகின்றானே.
அவளால் வியக்காமல் இருக்க முடியுமா?
“மீரா…” என இம்முறை ரன்வீர் அவளது தோள் தொட்டு உலுக்கவும், “ஆங்…” என விழித்தவள், “அது… பீரியட் பெய்ன். வேற ஒன்னும் இல்ல. கொஞ்சம் நேரத்துல சரி ஆகிடும்.” என்றாள் தயக்கமாக.
என்ன தான் இருவரின் மெய்களும் இணைந்திருந்தாலும் இன்னும் மனங்கள் இணையவில்லையே.
அதனாலேயே மீராவுக்கு கணவனுடன் இது பற்றிப் பேசவே தயக்கமாக இருந்தது.
“ஏன்? இதுக்கு முன்னாடி எல்லாம் நீ இப்படி இருந்தது இல்லையே.” என ரன்வீர் குழப்பமாகக் கேட்கவும் தான் அவன் தன்னை அவதானித்து இருக்கிறான் என சிறு கீற்றாக பெண்ணவளின் முகத்தில் புன்னகை வந்து போனது.
“தெரியல. எப்போவும் நார்மலா தான் இருக்கும். இந்தத் தடவை தான் இப்படி…” என மீரா இழுக்க, “ஓக்கே நீ போய் ரெடி ஆகிட்டு வா. நாம ஹாஸ்பிட்டல் போகலாம்.” என்றான் ரன்வீர்.
இப்படி ஒரே நாளில் திருந்தினால் பாவம் பெண்ணவளும் என்ன தான் செய்வாள்?
மீரா ரன்வீரைக் குழப்பமாக நோக்க, “தமிழால தானே சொல்றேன். போய் ரெடி ஆகிட்டு வா.” என்றான் ரன்வீர் அழுத்தமாக.
“இல்ல பரவால்லங்க. டேப்லெட் போட்டா வலி குறைஞ்சிடும். இதுக்கு எதுக்கு ஹாஸ்பிட்டல் எல்லாம்? நீங்க வேற எங்கேயோ கிளம்பிட்டு இருந்தீங்க?” என்றாள் மீரா மறுப்பாக.
“நீ என்ன டாக்டரா?” என இடுப்பில் கை வைத்து முறைப்புடன் ரன்வீர் கேட்கவும், “சரி… இருங்க சீக்கிரம் வரேன்.” என்று விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“ஒன்னும் அவசரம் இல்ல. மெதுவாவே வா.” என்று விட்டு ரன்வீர் அறையில் இருந்து வெளியேற, கணவனின் கரிசனையில் மீராவின் முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்தது.
இதைத் தானே அவள் இத்தனை நாட்களும் எதிர்ப்பார்த்தாள்.
மீரா தயாராகி கீழே வந்த போது ரன்வீர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“மீராம்மா… நீயும் வந்து உட்கார்ந்து சாப்பிடு.” என காயத்ரி அழைக்கவும், “இல்ல அத்தை நான்…” என மீரா மறுக்க முயல, ரன்வீர் தலையை உயர்த்தி ஒரு பார்வை தான் பார்த்தான் அவளை.
கப்சிப் என வாயை மூடிக் கொண்டு உட்கார்ந்து சாப்பிட்டாள்.
இருவரும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பத் தயாராக, தன் கைப்பையை எடுத்து வந்த மீரா, “அத்தை… நான் அவர் கூட கொஞ்சம் ஹாஸ்பிட்டல் வரைக்கும் போய்ட்டு வரேன்.” என்றாள் தயக்கமாக.
ஹாஸ்பிட்டல் என்கவுமே காயத்ரி ஏதேதோ கற்பனை செய்து கொள்ள, “நிஜமாவா மீராம்மா? எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? என் குடும்பத்த தழைக்க வைக்க வந்த மகாலட்சுமி.” என்றவாறு மீராவின் நெற்றியில் முத்தமிட்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.
அதனைக் கேட்டு மீராவுக்குக் குற்றவுணர்வாக இருந்தது.
“அ…அப்படி இல்ல அத்தை. நீங்…க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல.” என்றாள் மீரா உள்ளே சென்ற குரலில்.
உடனே முகம் மாறிய காயத்ரி மீராவிடம் வேறு ஏதோ கேட்க வர, “அம்மா…” என ரன்வீர் அதட்டவும் தான் அதனைப் புரிந்து கொண்ட காயத்ரி, “ஐயோ அதுக்கு என்னம்மா? நான் ஒரு கூறு கெட்டவ. கண்டதையும் உளறிட்டு இருப்பேன். உங்களுக்கு என்ன அப்படி பெரிய வயசாச்சு. கடவுள் தர வேண்டிய நேரத்துல கரெக்டா தருவான்.” என்றார் சமாதானமாக.
அதன் பின்னும் மீராவின் முகம் விடியவில்லை.
அதிலேயே இவ்வளவு நாளும் ரன்வீரின் மனதை உறுத்திய கேள்விக்கு விடை கிடைத்தது.
ஆனால் இதற்கெல்லாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற எண்ணமும் வராமல் இல்லை.
மற்ற மருத்துவமனைகளுக்குச் சென்றால் பார்ப்பவரின் கவனத்தை ஈர்த்து விடும் என்பதால் அவர்களின் குடும்ப மருத்துவரிடம் தான் மீராவை அழைத்துச் சென்றான் ரன்வீர்.
அப்போது கூட அவனின் அடையாளம் தெரியாதவாறு மாஸ்க் அணிந்திருந்தான்.
Paruda karisanatha
Antha Sana enna ana