Loading

“சொல்லு டி… உன் கிட்ட தான் கேட்குறேன்.” என்ற ரன்வீரின் குரல் கோபத்தில் தடித்தது.

 

அவனின் பேச்சு மீராவுக்குப் பயத்தை ஏற்படுத்தினாலும் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.

 

மீராவின் அமைதி ரன்வீரை சீண்ட, அவளின் தாடையை அழுந்தப் பற்றியவன், “எல்லாம் உன்னால தான் டி. நீ என் வாழ்க்கைல என்னைக்கு வந்தியோ அன்னைக்கு போச்சு என்னோட நிம்மதி. இப்போ என்னவாம்? நான் உனக்கு பொண்டாட்டிங்குற உரிமைய தரணும். அவ்வளவு தானே. சரி. ஆனா அது எல்லாம் இந்த வீட்டுக்குள்ள மட்டும் தான். நம்ம கல்யாண விஷயம் இந்த வீட்டைத் தாண்டி வெளிய போகக் கூடாது. ஏன்னு யோசிக்குறியா? வேற ஒன்னும் இல்ல. ஒரு பட்டிக்காட, அதுவும் கொஞ்சம் கூட எனக்குப் பொருத்தமே இல்லாத உன்ன என் மனைவின்னு வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்த எனக்கு அசிங்கமா இருக்கு. சரி நாம இப்போ விஷயத்துக்கு வருவோம். எங்க அம்மா கேட்டாங்கன்னு உன்ன கல்யாணமே பண்ணிக்கிட்டேன். இதெல்லாம் ஒரு விஷயமா?” என ஆக்ரோஷமாக ஆரம்பித்து கேலியாக முடித்தவன் மீராவின் தாடையைப் பற்றி இருந்த தன் பிடியை விலக்கி விட்டு அவளை மேலிருந்து கீழாக ஆராய்ந்தான்.

 

“ம்ம்ம்… பொண்டாட்டி. இந்த RV யோட பொண்டாட்டி நீ. ஒரு பொண்டாட்டிக்கான கடமைய புருஷனா நான் செய்யணும்னா அதுல எல்லாம் தானே அடங்கும்.” என ஒருவித விஷமக் குரலில் கூறிய ரன்வீரின் பார்வை மீராவின் கழுத்தை விட்டுக் கீழிறங்க, அவனின் விழிகள் கூறிய செய்தியில் அதிர்ந்தாள் மீரா.

 

ரன்வீரின் பார்வை இப்போது மீராவின் கண்களை சந்திக்க, அதில் தெரிந்த பயமும் பதட்டமும் அவனுக்கு திருப்தியை ஏற்படுத்தியது.

 

“இ…இது வேணா…ம்.” என மீரா திக்கித் திணறிக் கூற, “அது எப்படிம்மா வேணாம்னு சொல்வ? உனக்கு என் பொண்டாட்டிங்குற உரிமைய நான் தரணும்னா நீயும் ஒரு நல்ல குடும்பக் குத்துவிளக்கா புருஷன் எனக்குத் தர வேண்டியது எல்லாம் தரத் தானே வேணும். இங்க எல்லாமே கிவ் என்ட் டேக் பாலிஸி தானே. என்ன? நான் சொல்றது சரி தானே.” என்றான் ரன்வீர் விஷமமாக.

 

“வேணாம்… ப்ளீஸ்…” என்றாள் மீரா கெஞ்சலாக.

 

“நான் வேணாமா அப்போ உனக்கு?” என ரன்வீர் ஒரு மாதிரி குரலில் கேட்க, இதற்கு மீரா என்ன பதில் சொல்வாள்?

 

அவளுக்கு அவன் வேண்டுமே. அவளவனாக மட்டும் வேண்டுமே.

 

ஆனால் அவன் கேட்கும் அர்த்தமே வேறு அல்லவா.

 

இப்போது தான் என்ன பதில் கூறினாலும் அது தனக்கே வினையாக அமையும் என்பதால் மீரா பதில் கூறாது அமைதி காக்க, “நான் வேணாமா அப்போ? சரி அப்போ டிவோர்ஸ் கொடுத்துட்டு கிளம்பு.” என இடியை இறக்கினான் ரன்வீர்.

 

ஒரு நொடி அதிர்ந்து விழித்த மீரா, “அப்படி இல்ல…” என அவசரமாகப் பார்க்க, “அப்போ நான் வேணுமா?” எனக் கேட்டான் ரன்வீர் விஷமத்துடன்.

 

மீரா மேலும் கீழுமாகத் தலையசைக்கவும் இளக்காரமாக நகைத்த ரன்வீர், “அதானே… இவ்வளவு பெரிய வீடு, சொத்து, வசதி வாய்ப்பு எல்லாம் அவ்வளவு சீக்கிரம் விட்டுட்டுப் போக முடியுமா?” எனக் கேட்டான் நக்கலாக.

 

அதனைக் கேட்டு மீராவின் இதயம் சுக்குநூறாக உடைந்தது.

 

இதற்காகத் தானே அவள் அமைதி காத்தாள்.

 

விழியோரம் ஈரம் படர, கணவனின் முகத்தை வெறித்துப் பார்த்தாள் மீரா.

 

ஆனால் அவளின் கண்ணீர் போதையில் இருந்தவனைத் துளியும் பாதிக்கவில்லை.

 

மீராவை உச்சி முதல் பாதம் வரை விழிகளால் அளவெடுத்தவனின் பார்வை மீராவின் உதட்டில் இருந்த சிறு மச்சத்தில் பதிந்தது.

 

அப்போது கூட அந்த முகம் அறியாப் பெண்ணின் நினைவு வந்ததே ஒழிய, அது மீராவாக இருப்பாள் என அவன் எண்ணவில்லை.

 

அவனைப் பொறுத்தவரை மீரா படிக்காத பட்டிக்காடு.

 

மும்பை போன்ற ஒரு பெரிய நகரில் மீராவைப் போல் கிராமத்தில் வளர்ந்தவள் அதுவும் ஒரு பெரிய பாரில் அவனுடன் இரவைக் கழிப்பாள் என அவன் என்ன கனவா கண்டான்?

 

ரன்வீரின் வலது கரம் மீராவின் முகத்தை ஏந்த, பயத்தையும் மீறி மனம் கவர்ந்தவனின் இந்த நெருக்கம் அவளின் இதயத்தை இரு மடங்கு வேகத்தில் துடிக்கச் செய்தது.

 

தன் பெருவிரல் கொண்டு மீராவின் இதழ்களை மெதுவாக வருடியவன் சில நொடிகள் அம் மச்சத்திலேயே தேங்கி நிற்க, இமைகள் படபடக்க, இதழ்கள் துடிக்க அவனைப் பார்த்தாள் மீரா.

 

என்ன தான் ரன்வீரின் வார்த்தைகளும் செயல்களும் வலியைக் கொடுத்தாலும் மீராவின் காதல் கொண்ட இதயம் சுயம் தொலைத்து அவனின் தொடுகையில் உருகிக் கரைந்தது.

 

நடுங்கிக் கொண்டிருந்த மீராவின் இதழ்கள் ரன்வீருக்கு அழைப்பு விடுப்பது போல் இருக்க, மெதுவாக அவளின் இதழ் நோக்கிக் குனிந்தான் ரன்வீர்.

 

ரன்வீரின் உஷ்ணமான மூச்சுக் காற்று மீராவின் முகத்தில் மோதவும் ஒரு வித மோன நிலையில் மீராவின் விழிகள் தன்னால் மூடிக்கொள்ள, மறு நொடியே அவளின் இதழ்கள் தம் துணையுடன் சேர்ந்து முத்த யுத்தத்தில் ஈடுபட்டன.

 

தன்னை மொத்தமாக மீராவின் இதழ்களுக்குள் தொலைத்து விடுவது போல் ரன்வீர் ஆழ்ந்து, அனுபவித்து முத்தமிட, மீராவின் கரங்கள் மெதுவாக உயர்ந்து ரன்வீரின் பின்னந்தலைக்குள் நுழைந்து அவனின் சிகையை நெரித்தன.

 

அதில் ரன்வீரின் உணர்வுகள் பேயாட்டம் ஆட, மீராவின் இதழ்களுக்கு விடுதலை கொடுக்காமலேயே அவளைக் கரங்களில் ஏந்திச் சென்று மஞ்சத்தில் கிடத்தி அவள் மீது படர்ந்தான்.

 

போதையின் உச்சத்தில் இருந்த ரன்வீர் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று கூட உணராது அவன் மொத்தமாக வெறுப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அவனது மனைவியுடன் சேர்ந்து தாம்பத்தியத்தில் அடி எடுத்து வைத்திருந்தான்.

 

தன்னவன் என்ற எண்ணத்தில் மீராவும் ரன்வீரின் செயல்களுக்கு வழி விட்டு அமைதி காத்தாள்.

 

அவள் தான் ரன்வீரின் அருகில் நின்றாலே மதி மயங்கி விடுவாளே.

 

மீராவின் இதழ்களில் புதைந்திருந்தவனின் கரங்கள் அவளின் உடலில் உரிமையாக அத்துமீற, மீராவின் பெண்மை முழித்துக் கொண்டு அவனின் கரங்களைப் பிடித்துத் தடுத்தாள்.

 

மென்மையான பெண்ணவளின் தடைகள் எல்லாம் ரன்வீருக்கு எம் மாத்திரம்?

 

அவனின் கரங்கள் செய்த சேட்டையில் மீராவின் கரங்கள் தன்னால் விலக, இருவருக்கும் இடையில் தடையாக இருந்த ஆடைகளுக்கும் விடுதலை கிடைத்தன.

 

அதன் பின் சொல்லவா வேண்டும்? 

 

இவ்வளவு நேரம் ரன்வீரின் கரங்கள் செய்து கொண்டிருந்த மாய வித்தையை அவனின் இதழ்கள் செய்யத் தொடங்கின.

 

விடியும் வரை தொடர்ந்த சங்கமத்தில் மீராவை மொத்தமாகக் களவாடி‌ விட்டே துயில் கொண்டான் ரன்வீர்.

 

அதன் பின்னும் வெகுநேரம் விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்த மீரா ஒரு கட்டத்தில் அசதியில் தன்னை மறந்து உறங்கினாள்.

 

மீரா மீண்டும் துயில் கலைந்து எழுந்த போது ரன்வீர் அவள் அருகில் இருக்கவில்லை.

 

குளியலறைக்குள் ஷவர் திறந்திருந்த சத்தம் கேட்டது.

 

மீராவுக்கோ இரவு இருந்த இதம் நீங்கி போதை தெளிந்த ரன்வீர் என்ன கூறி அவளை வார்த்தைகளால் வதைக்கப் போகிறான் என்ற பயம் ஆட்கொண்டது.

 

மீரா அசையாமல் கட்டிலில் படுத்திருக்க, சற்று நேரத்தில் குளியலறையில் இருந்து வெளியே வந்த ரன்வீர் கட்டிலில் படுத்திருக்க மீராவை அழுத்தமாகப் பார்த்து விட்டு கட்டிலைப் பார்த்தான் அதே அழுத்தத்துடன்.

 

அவனின் விழிகள் சொன்ன செய்தியை புரிந்துகொண்ட மீரா அவசர அவசரமாக போர்வையால் தன்னைப் போர்த்திக்கொண்டு கட்டிலை விட்டு இறங்கி நின்றவள் தன் உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைய முயல, சொடக்கிட்டு அவளை அழைத்தான் ரன்வீர்.

 

மீரா தயக்கமாக ரன்வீரின் முகம் நோக்க, அவளை நெருங்கி நின்று மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்த ரன்வீர், “இதுக்கு தானே ஆசைப்பட்ட. இப்போ சந்தோஷமா?” எனக் கேட்டான் குத்தலாக.

 

அவ்வளவு தான். மொத்தமாக மனதளவில் மரித்து விட்டாள் மீரா.

 

சட்டென அவளின் கண்களும் கலங்கி விட, “இப்போ உனக்கு பொண்டாட்டிங்குற உரிமை கிடைச்சி இருக்குமே. எனிவே தேங்க்ஸ் ஃபார் தி நைட். அப்புறம் இன்னொரு விஷயம். உனக்கு படிப்பு, அழகுன்னு எதுவுமே இல்ல. உன்னால எனக்கு எந்த யூஸும் இல்ல. ஜஸ்ட் என்னோட ஃபிஸிக்கல் நீட்ஸை பூர்த்தி செய்யவாவது உன்ன நான் யூஸ் பண்ணிக்குறேன்.” என நெருப்பாய் வார்த்தைகளை வாரி வீசி விட்டு வெளியேறினான் ரன்வீர்.

 

அவனின் வார்த்தைகளில் திக் பிரமை பிடித்தது போல் நின்றாள்‌ மீரா.

 

அவனின் தொடுகைக்கு உருகி நின்ற தன் மீதே அவளுக்கு கோபமாக வந்தது.

 

ஷவருக்கு அடியில் நின்று வாய் விட்டு கதறி அழுதாள் பெண்ணவள்.

 

ஷூட்டிங் ஸ்பாட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த ரன்வீரும் இரவு நடந்தவற்றைத் தான் அலசிக் கொண்டிருந்தான்.

 

தான் அவ்வளவு வெறுக்கும் ஒருத்தியுடன் போதையில் என்றாலும் இழைந்தது அவனுக்கு தன் மீதே கோபத்தைக் கிளப்பியது.

 

பின் உடல் தேவைக்காக மட்டுமே அவளை நெருங்கியதாக தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்தவனுக்கு என்னவோ வித்தியாசமாகப் பட்டது.

 

அனைவரும் தன்னையே பார்ப்பது போல ஒரு தோற்றம்.

 

குழப்பத்துடனேயே அவர்களைக் கடந்து கேரவனுக்குள் நுழைந்தவனைத் தொடர்ந்து வந்த தேஜோ ரன்வீரின் தோளில் கை போட்டுக்கொண்டு, “என்ன மச்சான்? நைட் ஒரே கொண்டாட்டம் போல.” எனக் கேட்டான் நக்கலாக.

 

அவனை அதிர்ந்து நோக்கிய ரன்வீர் தான் மீராவுடன் இருந்தது இவனுக்கு எப்படித் தெரிய வந்தது என்ற யோசனையில் அன்றொரு நாள் போல் ஏதாவது தடயம் உடலில் இருக்கிறதா என அவசரமாகக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தான்.

 

ரன்வீரின் அதிர்ந்த தோற்றத்தையும் நடவடிக்கையும் கேலிச் சிரிப்புடன் நோக்கிய தேஜ், “டேய் டேய்… அங்க ஒன்னும் இல்லடா. அதான் டீவி பேப்பர்னு எல்லாத்துலயும் ஹெட்லைன்ஸ்ல போட்டு இருக்கே.” என்றான் கேலியாக.

 

“வாட்?” என அதிர்ந்து விழித்த ரன்வீர் அவசரமாகத் தன் கைப்பேசியை எடுத்து செய்திகளைப் பார்த்தான்.

 

அதில் முன் தினம் இரவு சனா ஏற்பாடு செய்த புகைப்படக்காரன் ரன்வீரையும் சனாவையும் சேர்த்து வைத்து விதவிதமாக எடுத்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன.

 

புகைப்படத்தை எடுத்தவன் சரியான கெட்டிக்காரன் போல.

 

சனாவுக்கும் ரன்வீருக்கும் இடையில் எதுவுமே நடக்காத போதிலும் புகைப்படத்தை எடுத்திருந்த கோணம் சரியாக அவர்கள் முத்தமிடுவது போலவும் நெருக்கமாக இருப்பது போலவும் இருந்தது.

 

நிச்சயம் பார்ப்பவர்கள் அப்படித் தான் நினைப்பார்கள்.

 

ரன்வீருக்கு மட்டும் என்ன நடந்தது என்று தெரியாவிட்டால் அவனுமே நம்பியிருப்பான்.

 

போதாக்குறைக்கு புகைப்படங்களுடன் சேர்த்து இஷ்டத்துக்கு கதை கட்டி இருந்தனர்.

 

“பீச் ரிசோர்ட்டில் ஜோடியாக கேண்டில் லைட் டின்னர்.”

 

“Reel to Real”

 

“SaVeer”

 

“வதந்திகள் நிஜமாகியதா?”

 

“ரகசியமாக டேட்டிங் சென்ற பிரபலங்கள்”

 

இவ்வாறு பலவாறு இருவரையும் சேர்த்து வைத்து செய்திகள் வெளியாகி இருந்தன.

 

இருவரின் ஜோடிக்கும் திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்துக்கு இப் புகைப்படங்களைக் கண்டதும் கொண்டாட்டம்.

 

அவர்களே சமூகவலைத்தளங்களில் அனைத்தையும் ட்ரென்ட் ஆக்கினர்.

 

உடனடியாக இச் செய்தியை மறுக்காவிட்டால் தனக்குத் தான் பிரச்சினை என்பதால் அவசரமாக சனாவைத் தேடிச் சென்றான் ரன்வீர்.

 

அவளோ அடுத்த காட்சிக்குத் தயாராகும் நிலையில் இருக்க, அதனைக் கண்டு கொள்ளாத ரன்வீர், “சனா கம் வித் மீ.” என அவளின் கையைப் பிடித்து இழுத்தான்.

 

சனாவுக்கு மேக்கப் செய்து கொண்டிருந்த பெண்ணோ இதனைக் காதலனின் செயல் போல் எண்ணி இருவரையும் பார்த்து குறுஞ் சிரிப்பு சிரிக்க, அவளைப் பார்த்து வெட்கப்பட்டுப் புன்னகைத்த சனா கண்களால் அவளை வெளியேறக் கட்டளை இட்டாள்.

 

அப் பெண் சென்றதும் ரன்வீரின் புறம் திரும்பிய சனா, “வாட் ஹேப்பன்ட் RV?” எனக் கேட்டாள் ஒன்றும் தெரியாத பாவனையில்.

 

“நீ நியூஸ் பார்க்கலயா?” எனக் கேட்ட ரன்வீரிடம், “ஓ… அந்த ரூமர்ஸ் அன்ட் ஃபோட்டோஸ் ரிலீஸ் ஆகி இருந்தத சொல்றியா? மார்னிங்கே பார்த்துட்டேன். சோ வாட்?” எனக் கேட்டாள் கூலாக.

 

“சோ வாட் ஆ?” என அதிர்ந்த ரன்வீர், “சனா உனக்கே தெரியும் அப்படி எதுவுமே நமக்கு நடுவுல நடக்கலன்னு. பட் அந்த ஃபோட்டோகிராஃபர் கண்ட மாதிரிக்கும் ஃபோட்டோ எடுத்து போட்டு இருக்கான். நாம உடனே ப்ரஸ் மீட் வெச்சி க்ளாரிஃபிக்கேஷன் கொடுக்கணும்.” என்றான் எரிச்சலாக.

 

“கூல் ரன்வீர். எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற? அந்த ஃபோட்டோஸ்‌ல உள்ளது போல நமக்குள்ள எதுவுமே நடக்கலன்னாலும் நமக்குள்ள எதுவுமே இல்லங்குறது பொய் தானே.” என சனா கேட்கவும் ரன்வீரிடம் பதில் இல்லை.

 

அவன் தானே அனைத்தையும் ஆரம்பித்து வைத்தான்.

 

சனாவை உயர்ந்த இடத்தில் வைத்திருந்த ரன்வீரோ அவளது தந்திரப் புத்தியை அறியாது எங்கு தான் உண்மையைக் கூறினால் சனா மனம் உடைந்து விடுவாளோ எனப் பதட்டம் அடைந்தான்.

“பட் சனா இந்த ஃபோட்டோஸ்…” என ரன்வீர் இழுக்க, அவனை நெருங்கி நின்ற சனா, “சில் பேபி. இதை நம்ம நியூ மூவிக்கான ப்ரமோஷனா எடுத்துக்கலாம். பாருங்க நம்ம SaVeer ஃபேன்ஸ் எவ்வளவு ஹேப்பியா இருக்காங்கன்னு. இந்த நியூஸுக்காகவே நம்ம மூவி ரிலீஸ் ஆகும் போது நமக்கு ஆடியன்ஸ் இன்க்ரீஸ் ஆகும். சப்போஸ் நாம இப்போ ப்ரஸ் மீட் வெச்சி இந்த ஃபோட்டோஸ் எல்லாம் பொய்னு சொன்னோம்னா நம்ம ஃபேன்ஸ் அப்சட் ஆகிடுவாங்க. எப்பவா இருந்தாலும் எல்லாருக்கும் தெரியப் போறது தானே.” என்றாள் கொஞ்சல் குரலில்.

 

ரன்வீர் ஏதோ யோசனையில் இருக்க, அவ் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட சனா ரன்வீரை மேலும் நெருங்கி அவனின் கன்னத்தை வருட, திடீரென ரன்வீரின் கைப்பேசி ஒலி எழுப்பவும் தன்னிலை அடைந்த ரன்வீர் அவசரமாக சனாவை விட்டு விலகி நின்றான்.

 

அதில் ஏகத்துக்கும் கடுப்பான சனா அதனைக் காட்டிக்கொள்ள வழி இல்லாது போலிப் புன்னகையுடன் நின்றிருக்க, “சா…சாரி சனா. ஐ நீட் டு கோ.” என்று விட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.

 

இதே சமயம் மீராவும் தொலைக்காட்சிச் செய்தியில் அப் புகைப்படங்களைப் பார்த்து விட்டு அதிர்ந்து நின்றிருந்தாள்.

 

ரன்வீரும் ஸ்ரீனிவாஸனும் வேலைக்குக் கிளம்பியதுமே வழமையாக மாமியாரும் மருமகளும் ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது வழக்கம்.

 

இன்றும் அதே போல இருவரும் சிரித்துப் பேசியவாறு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நேரம் தான் இச் செய்தி ஒளிபரப்பாகியது.

 

இதனைக் கண்டதும் காயத்ரி ஒரு பக்கம் மகன் இன்னும் அந்த நடிகையுடன் பழக்கத்தில் இருப்பதை அறிந்து கோபப்பட்டார்.

 

பல வருடங்களாக கணவனும் மகனும் சினிமாத்துறையில் இருப்பதால் முன் அனுபவம் கொண்ட காயத்ரி நன்றாகவே அறிவார் இப் புகைப்படங்கள் நிச்சயம் தவறான கோணத்தில் தான் எடுக்கப்பட்டு இருக்கும் என்று.

 

அதுவும் அவருக்கு தன் வளர்ப்பு மீது அலாதி நம்பிக்கை.

 

நிச்சயம் தன் மகன் என்ன தான் தன் கட்டாயத்துக்கு திருமணம் செய்திருந்தாலும் திருமணம் முடிந்த பின் மனைவிக்கு துரோகம் செய்ய மாட்டான் என அறிவார் அவர்.

 

அவருக்கு இருந்த ஒரே கோபம் சனாவுடன் தனியாக வெளியே சென்றதால் தானே இந்த நிலைமை உருவாகியது என்று.

 

காயத்ரி இவ்வாறு எண்ண, மீராவின் நிலையோ வேறாக இருந்தது.

 

பெற்று வளர்த்த மகனைப் பற்றி காயத்ரி நன்றாக அறிந்து வைத்திருப்பார்.

 

ஆனால் மீராவின் விஷயத்தில் அவ்வாறு இல்லையே.

 

அவளைப் பொறுத்தவரைக்கும் இப் புகைப்படங்களுக்கு பின் இருந்த உண்மை என்று அலசி ஆராயும் அளவுக்கு ரன்வீர் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லையே.

 

இல்லை இல்லை. மீராவுக்கு நம்பிக்கை வரும் அளவுக்கு ரன்வீர் நடந்து கொள்ளவில்லையே.

 

இதுவரை ஒரு தடவை கூட இருவரும் மனம் விட்டுப் பேசி இருக்கவில்லை.

 

போதாக்குறைக்கு மீரா தனக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லை என்று அடிக்கடி சொல்லிக் காட்டி சொல்லிக் காட்டி அவளை வார்த்தைகளாலேயே வதைப்பான் ரன்வீர்.

 

இனி எங்கு மீராவுக்கு கணவனின் மீது நம்பிக்கை வரும்?

 

அன்றொரு நாள் கூட மீராவுடன் போதையில் இரவைக் கழித்த போது சனாவின் பெயரைத் தானே கூறினான்.

 

அதனால் முன் தினம் இரவு கூட சனாவுடன் இருந்து விட்டு வந்து தான் அவள் என எண்ணி தன்னுடன் இழைந்ததாக உறுதியாகவே நம்பினாள் மீரா.

 

தன்னையும் மீறி மீராவின் கன்னம் தாண்டி கண்ணீர் வடிய, மருமகளின் அதிர்ந்த தோற்றத்தையும் கலங்கியிருந்த கண்களையும் அவதானித்த காயத்ரி, “மீராம்மா… இந்த ஃபோட்டோஸ் எல்லாம் பொய் டா. உன் புருஷன் அப்படிப்பட்டவன் இல்ல. இந்த மீடியாக்காரனுங்களே இப்படி தான். இதுக்கு முன்னாடியும் இப்படி நிறைய தடவை ரூமர்ஸ் வந்திருக்கு.” எனச் சமாதானப்படுத்தினார்.

 

மீராவோ அவருக்குப் பதிலளிக்காது வேகமாக மாடி ஏறி தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.

 

அதன் பின் தான் காயத்ரி அவசரமாக ரன்வீரைத் தொடர்பு கொண்டார்.

 

இங்கு ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அனைவரும் ரன்வீரையே குறுகுறு எனப் பார்க்கவும் அங்கு நிற்கவே அசௌகரியமாக உணர்ந்தவன் பாதியிலேயே அங்கிருந்து கிளம்பினான்.

 

காயத்ரியும் ஸ்ரீனிவாஸனும் பல முறை மாறி மாறி அழைத்தும் அவன் யாரின் அழைப்பையும் ஏற்கவில்லை.

 

விரைவில் வீடு திரும்பியவனை காயத்ரி இடைமறித்து கோபமாகக் கேள்விக் கணைகளை வீச, ரன்வீரோ எதற்கும் பதிலளிக்காது தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

அங்கு மீராவோ சோஃபாவில் கண்ணீருடன் அமர்ந்திருக்க, அவளைக் கண்டு கொள்ளவே இல்லை அவன்.

 

அதுவும் சேர்ந்து மீராவின் மனதை மேலும் வதைத்தது.

 

நேராக குளியலறைக்குள் நுழைந்து உடையை மாற்றிக் கொண்டு வந்தவன் தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டான்.

 

அடுத்து என்ன செய்வது என்றே ரன்வீருக்குப் புரியவில்லை.

 

எல்லாப் பக்கங்களில் இருந்தும் அவனுக்கு அழுத்தம் கொடுப்பது போல் உணர்ந்தான்‌.

 

ஒரு பக்கம் தன்னைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த தாய் மீராவுடன் வாழச் சொல்லிக் கட்டாயப்படுத்த, இன்னொரு பக்கம் தான் அறவே வெறுக்கும் மீரா அவனின் மனைவியாக ஒரே அறைக்குள். 

 

அது போதாதென்று சனா வேறு ஒரு பக்கம் அவனை இன்னும் இன்னும் நெருங்கிக் கொண்டிருந்தாள். 

 

அவளை நெருங்கவும் முடியவில்லை. விலக்கவும் முடியவில்லை அவனால்.

 

தன் கவலைகளை எண்ணி தன்னையே வருத்திக் கொண்டிருந்த மீரா ரன்வீரின் முகத்தில் தெரிந்த இறுக்கத்தையும் அவன் தலையைப் பற்றிக் கொண்டிருந்த விதத்தையும் அவதானித்தவள் தான் அங்கு இருந்தால் அவனுக்கு இன்னும் கோபம் தான் வரும் என்பதால் அறையில் இருந்து வெளியேறினாள்.

 

நேராக காயத்ரியைத் தேடிச் சென்றவளிடம் காஃபி கப்பை நீட்டிய காயத்ரி, “மீரா… இதைக் கொண்டு போய் உன் புருஷன் கிட்ட கொடும்மா. அவன் ஏதோ கோவத்துல இருக்கான் போல. முன்னாடியும் இப்படி தான் ஒரு நடிகை கூட அவன சேர்த்து வெச்சி தப்பு தப்பா நியூஸ் வரவும் கடுப்பாகி இப்படி தான் யார் கூடவும் பேசாம இருந்தான். காலைல கூட அவன் சாப்பிடல. அவசரமா வெளிய கிளம்பினான். பசியோட இருந்தா இன்னும் இன்னும் கோவப்பட்டு தலைவலிய தேடிக்குவான்.” என ஒரு தாயாக மகனை எண்ணி வேதனை அடைந்தார்.

 

“அத்தை நானா?” என மீரா தயங்க, “ஆமாம்மா. இதைக் கொண்டு போய் நீயே கொடுத்துடு. எனக்கு வயசாகிடுச்சு. அடிக்கடி மாடி ஏற முடியாது. அதனால தான் உனக்கு சொல்றேன்.” என்ற காயத்ரியிடம் மீராவால் மறுக்கவும் முடியவில்லை.

 

வேறு வழியின்றி காஃபியை எடுத்துக் கொண்டு ரன்வீரை தேடிச் சென்றான்.

 

அறைக்குள் நுழைந்த மீராவை காலி அறையே வரவேற்க, குழப்பமாக சுற்றி நோக்கியவளுக்கு அவ் அறையுடன் ஒட்டியிருந்த ஜிம் அறையில் இருந்து சத்தம் கேட்டது.

 

அங்கு தான் ரன்வீர் ஆக்ரோஷமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

 

என்ன செய்தும் அவன் கோபம் தீரவில்லை.

 

யார் மீது அதனைக் காட்டுவது என்றும் புரியாமல் ஆக்ரோஷமாக இருந்தவனிடம் ஆடு தானே சென்று தலையை நீட்டுவது போல் காஃபியை எடுத்துக் கொண்டு சென்றாள் மீரா.

 

ரன்வீரோ அவளை ஏறிட்டும் பார்க்காது வெய்ட் தூக்கிக் கொண்டிருந்தான்.

 

உடற்பயிற்சி செய்வதற்கு வசதியாக ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருந்தவனின் புஜங்கள் முறுக்கேறி இருக்க, சுற்றம் மறந்து அதனை ரசித்துப் பார்த்தாள் மீரா.

 

முதல் தடவை அவனை இடையில் டவலுடன் மட்டும் பார்த்த போது இருந்த தயக்கம் முந்தைய நாள் நடந்த சங்கமத்துக்குப் பின் அவளுக்கு இருக்கவில்லை.

 

சில நொடிகள் கழித்தே மீராவின் வரவை உணர்ந்த ரன்வீர் அவளின் பார்வை தன் மீது கிறக்கத்துடன் பதிந்திருப்பதைக் கண்டு அவனின் மொத்தக் கோபமும் அவள் பக்கம் திரும்பியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
34
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment